Search This Blog

Thursday, 29 November 2018

“மாவீரர் தினம்” தமிழ் தேசியவாதத்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியல்

“Heroes Day” – Pro-imperialist politics of Tamil Nationalism

K.Nesan
28 November 2018
ன்று, இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ்மக்கள் உள்நாட்டுப்போரில் இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமது உறவுகளை பொதுவிடங்களில் ஒன்றுகூடி நினைவுகூருகின்றனர்.
இளம் வயதில் கொல்லப்பட்ட இந்த உறவுகளின் சோகமயமான இழப்புகளை நினைவுகூரும் நிகழ்வுகளின் மத்தியிலும் தமிழ் தேசியவாதம் தொழிலாளர், உழைக்கும் மக்களை இன்று ஒரு முட்டுச்சந்திக்கு கொண்டு சென்றிருப்பதை குறிப்பிடுவது இன்றைய நிலைமைகளில் அவசியமாகின்றது.
இன்றைய சோகமயமான நிகழ்வுகளில் பங்குபற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்களும் இந்த நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியவர்களின் அரசியல் நோக்கங்களும் நேரடியாக முரண்பட்டவை. ஒழுங்கமைப்பளர்கள் அனைவரும், இந்த இளம் மனிதர்களின் மரணங்களை சுரண்டி ஒரு ஏகாதிபத்திய தலையீட்டிற்கு பாதை திறக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போதைய இலங்கை அரசியல் நெருக்கடியில் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கன்னையின் பிரதான பாதுகாவலனாக உருவெடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புக்களில் நேரடி பங்காளியாகியிருக்கின்றது.
கீழே பிரசுரமாகும் கட்டுரை முதலில் டிசம்பர் 122011 இல் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரமாகியது. இதன் ஆய்வுகளின் சரியான தன்மையினை கடந்த ஏழு வருடங்களின் நிகழ்வுகளும் முழுமையாக நிரூபித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------    
மிழீழ விடுதலைப் புலிகளின் மிஞ்சி இருக்கும் குழுக்களினால் "மாவீரர் தினம்" இந்த மாதம் 27 ம் திகதி ஒரு தொடர் மேற்கத்தைய நகரங்களில் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த சில கிழமைகளாக புலிகளின் இரண்டு பிரிவுகளினால் இந்த தினத்தினை கொண்டாடுவதற்கு தனி உரிமை கோரி இணைய தளங்கள் மூலம் போட்டி பிரசாரங்கள் நடத்தப்பட்டது. இந்த பிரசாரங்கள், முரண்பட்ட குழுக்களின் நிகழ்சிக்கான தயாரிப்புக்களை வன்முறையினால் நிறுத்துவதில் தொடங்கி பாரிஸில் ஒரு குழு மோதல் வரை வடிவமெடுத்தது. இலண்டலில் இந்த குழு மோதல்களை நிறுத்தி ஒன்றுபட்ட நிகழ்வினை நடாத்த வேண்டும் என உண்ணாவிரதம் நடாத்தப்பட்டது.
புலிகளின் தோல்வியுடன் முடிவிற்கு வந்த இனவாத யுத்தத்தின் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் புலிகள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். இந்த பிரிவுகளின் பிரதான அரசியல் தளம் தொடர்ந்தும் மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகள். புலிகள் மத்தியில் நிகழ்வுகளின் முன்னர் நடந்த இந்த குழு மோதல்கள் புலிகளின் தோல்வியிலிருந்து ஒரு பாடத்தினையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் புலிகளின் அரசியலில் ஒரு வலதுசாரி திருப்பத்தினையும், அவர்களது அரசியல் முன்னோக்கான தமிழ் தேசிய வாதத்தின் முட்டு சந்தியினையும் முன்னணிக்கு கொண்டு வந்திருக்கின்றது.
இந்த குழுக்களின் முரண்பாடுகள், இனவாத யுத்தத்திற்கு எதிரான போரில் இராணுவத்துடன் போரிட்டு கொல்லப்பட்ட போராளிகளின் தியாகங்களை முன்னிறுத்தி புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் தங்களது அரசியல் இருப்பினை நிறுத்துவதனை மையமாக கொண்டிருக்கின்றது. அனைத்து குழுக்களும் தங்களது அரசியல் நோக்கம் வடக்கு, கிழக்கில் ஒரு தனி முதலாளித்துவ அரசினை நிறுவுவது என பிரகடனப்படுத்துகின்றன. இவர்களது முரண்பாடுகள் எந்த சர்வதேச வல்லரசுகளிடம் இந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு கோரிக்கை விடுவது என்பதிலேயே இருக்கின்றது. அது மேற்கத்தைய நாடுகளுக்கு ஆதரவாக, இந்திய எதிர்ப்பு வாதங்கள் தொடர்பான முரண்பாடுகளை மத்தியில் கொண்டுள்ளது. ஒரு குழு இலங்கை அரசின் முகவராக மாறியுள்ள புலிகளின் முன்னாள் முக்கிய தலைவரான K.P என்னும் பத்மநாதனின் "தற்காலிக" கூட்டிற்கும் ஆதரவு வழங்குகின்றது.
புலிகளின் போராளிகளாக அணிதிரட்டப்பட்ட பெரும்பான்மையான இளைஞர்கள் தொழிலாளர்கள், விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகதட்டுகளின் குடும்பங்களிலில் இருந்து சேர்க்கப்பட்டவர்களாவர். பெரும்பான்மையான குடும்பங்கள் குறைந்தது ஒரு இளம் உறுப்பினரை தன்னும் இனவாத இராணுவத்தினுடனான போரில் இழந்திருக்கின்றன.
"மாவீரர் தினம்" முதல் முறையாக 1989 இன் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு போரின் இறுதிக்காலத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஏனைய போராளிகள் மத்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளினை நினைவு கூர்ந்து நிகழ்த்திய இராணுவ துணிவினை மேம்படுத்தும் ஒரு உரை இந்த நிகழ்வின் ஆரம்பமாகும். இந்திய துருப்புக்கள் 1987 இன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தீவின் வடக்கு, கிழக்குக்கு புலிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அனுப்பப்பட்டிருந்து 1990 இன் மத்தியில் வெளியேறியது. 1990 இல் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒரு வாரம் நீடிக்கும் பொது நிகழ்சியாக அது மாற்றப்பட்டது. பலவிடங்களில் நூற்றுக்கணக்கான கொல்லப்பட்ட போராளிகளின் கல்லறைகளைக் கொண்ட மயானங்கள் தொடர்சியாக நிறுவப்பட்டது. ஒழுங்காக அழகுபடுத்தப்பட்டு நிறுவப்பட்ட இந்த மயானங்கள் ஒரு பொது நிகழ்வுக்கான மண்டபத்தினையும் கொண்டிருந்தன.
மத்திய காலத்து திராவிட கலாச்சாரத்திற்கு சமாந்தரமான கல்லறைகளை வழிபடும் இந்த கலாச்சாரத்தினை புலிகளின் தலைமை அபிவிருத்தி செய்ததன் மூலம் இனவாத ரீதியில் தனது போராளிகளுக்கு உணர்மை ஊட்டியதுடன், புதிய போராளிகளை இயக்கத்திற்கு சேர்த்துக் கொண்டு, சமூகத்தின் மீது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியது. இதற்காக வருடம் தோறும் பொது நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. கொல்லப்பட்ட போராளிகளின் உறவினர்களுக்கு சமூக வாழ்கையில் தனியிடம் வழங்கி பொருளாதார உதவிகள் செய்யப்பட்டதுடன் இந்த நிகழ்வுகளில் விசேட கௌரவமும் வழங்கப்பட்டது. தியாகத்தின் பெயரால் அரசியல் எதிர்ப்பாளர்கள், போட்டி இயக்கங்கள் அவர்களது அங்கத்தவர்கள் அச்சுறுத்தி மௌனமாக்கப்பட்டனர்.
உலகின் பிரதானமான நகரங்களில் புலிகளின் பிரிவுகளினால் ஏட்டிக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முப்பது வருட போரில் கொல்லப்பட்ட இளம் தலைமுறைகளை நினைவுகூரும் சோகம் நிறைந்த ஒரு நாளாக கவனத்தில் எடுத்தனர். ஆனால் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியவர்கள் சொந்த நிகழ்சி நிரலை கொண்டிருந்தனர்.
பிற்போக்கு திராவிட இயக்கத்தின் தலைவர் சுவிஸ்லாந்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். லண்டனில் பிரித்தானிய தொழில் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்கள் உரையாற்றினர். லண்டன் கூட்டத்தில் தமிழ் நாட்டு இனவாத கட்சிகளான மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் தேசிய இயக்கம் என்பவற்றின் தலைவர்களின் செய்திகள் விடியோவில் திரையிடப்பட்டன. இடது, வலது என்ற வித்தியாசமின்றி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வேறு பல நிகழ்வுகளில் உரையாற்றினார்கள். இது புலிகளின் பிரிவுகள், எந்த கன்னையிடம் இருந்து ஆதரவு திரட்ட முடியுமோ அதனை செய்வதற்கு முயலும் விரக்தியான செயல்பாடாக இருந்தது.
தனி நாட்டிற்கு ஆதரவு கேட்கும் ஒரே மாதிரியான அறிக்கைகளை இந்த குழுக்கள் வெளியிட்டிருந்தன.
"தலைமைச் செயலகம்" என்று தங்களை அழைக்கும் புலிகளின் பிரிவினர் இந்த நிகழ்வு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது, "அனைத்துலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது கடந்த ஈராண்டுகளாக பல அழுத்தங்களை மேற்கொண்டுவருவதனை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் அந்த அழுத்தங்களை மேற்கொள்ளும் நாடுகள், நாடுசாரா அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒத்திசைவற்ற தன்மை காணப்படுகின்றது."
"ஆனாலும், எம்மக்கள் மீதான இனவழிப்பினைத் தடுத்து நிறுத்தவேண்டும்; எம் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு நீதி கிடைக்கவேண்டும்; அனைத்துலகத்தின் பாதுகாப்புடன் கூடிய, எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிக்கும் தீர்வு ஒன்றை நோக்கி நகரவேண்டும் என்பதே எமக்கு முன்னுரிமையாக உள்ளது."
புலிகளின் மற்றைய பிரிவான "அனைத்துலக செயலகம்" வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது, "தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்."
"இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்."
"சர்வதேச சமூகம்" என்ற மந்திரத்தின் மூலம் எஞ்சியிருக்கும் புலிகளின் மிச்ச சொச்சங்கள் தொடர்சியாக உலக, பிராந்திய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த நாடுகள் மகிந்த இராஜபக்சவின் அரசாங்கம் நடாத்திய இனவாத யுத்ததிற்கு தங்கு தடையற்ற இராஜதந்திர, இராணுவ ஆதரவுகளை வழங்கியிருந்தன. யுத்தத்தின் இறுதிக்கால கட்டத்தில் நூறாயிரக் கணக்கானோர் லண்டன், பாரிஸ், டொரோண்டோ நகர தெருக்களில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிதிரண்டனர். சண்டையினை நிறுத்துமாறு புலிகளின் ஆதரவளர்கள் பிரித்தானிய, அமெரிக்க, பிரெஞ்சு, ஜேர்மன் அரச தலைவர்களின் படங்களின் பதாதைகளை தாங்கியவாறு விடுத்த பரிதாபகரமான கோரிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போரில் கொன்று குவிக்கப்படுவதை தவிர்க்க முடியவில்லை.
தற்போது இந்த குழுக்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது போர்குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என, இனவாத யுத்ததிற்கு ஆதரவளித்த அதே நாடுகளிடமே வேண்டுகோள் விடுகின்றன. இந்த நாடுகள் இராஜபக்ஷவின் போர்குற்றங்களின் பங்காளிகள் என்பதுடன் ஒருபோதும் போர்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான நோக்கம் கொண்டவை அல்ல. போர் குற்றங்கள், இலங்கை தீவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கினை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பின் மீது அழுத்தம் கொடுக்கும் தெரிவுகளில் ஒன்றாகும். இந்த வழியில் இணைந்தால், மனித உரிமைகள் துரும்பு சீட்டினை கைவிட தயார் என்று வாஷிங்டன் இராஜபக்ஷ அரசிற்கு தெரிவித்திருக்கின்றது.
புலிகளின் "தலைமைச் செயலகம்" அதன் அறிக்கையில், "நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நலன்களைப் பேணும் பூகோள அரசியலை தமிழ் மக்கள் நன்கு அறிவர். இப்பன்னாட்டு நலன்சார் அரசியற்போக்கை புறக்கணிக்கும் நோக்கமோ அல்லது அவற்றுடன் ஒத்திசையாமற் பயணிக்கும் நோக்கமோ எமக்குக் கிடையாது." என்கிறது. இது புலிகளின் வேலைத்திட்டத்தில் இருந்து ஊற்றெடுக்கும் பிற்போக்கு தேசியவாத வழிமுறையாகும். இது மீண்டும் மீண்டும் இந்த குழுக்கள் அனைத்தும், பிரதான வல்லரசுகளிடம் ஒரு சுற்றிவளைக்கப்பட்ட தனி தமிழ் பிரதேசம் உருவாகுவதற்கு உதவிகோருவதுடன் அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு சேவை செய்ய வழங்கும் உத்தரவாதமுமாகும்.
மாறிமாறி வந்த இலங்கை அரசாங்கங்கள், யுத்தத்தினை "புலிப் பயங்கரவாதம்" எனக் காட்டி மோசமான சமூக தாக்குதல்களை தெற்கில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டவிழ்த்து விட்டது. போர் முடிந்த பின்னரும் தொடரும் இந்த தாக்குதல்கள், பரந்துபட்ட மக்கள் மத்தியில் இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் மீது பாரிய வெறுப்பினை உருவாக்கியிருக்கின்றது.
புலிகளின் வரலாறு முழுமையும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான ஆதரவினை சிங்கள, இந்திய உழைக்கும் மக்களிடம் பெறுவதினை நிராகரித்திருந்தது. "சிங்கள தேசம்" என பொதுமைப்படுத்தி, அப்பாவி சிங்கள மக்களை படுகொலை செய்த வலதுசாரி தமிழ் இனவாத அரசியலினூடாக, தெற்கில் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் செல்வாக்கினை மட்டுமே அது பலப்படுத்தியிருந்தது.
சிங்கள மொழி பேசும் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடும் அழைப்பினை விடுவதற்கு இயல்பிலேயே தகமையற்று இருப்பதானது அதனது முதலாளித்துவ வர்க்க குணாம்சத்தில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. அதனது முன்னோக்கு, தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதற்கான ஒரு தனி தமிழ் குட்டியரசினை அமைப்பதாகும். புலிகளும், ஏனைய அனைத்து தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக கடமைகளை எவ்வாறு சாத்தியமாக்கப்பட முடியும் என்பது பற்றி சற்றும் கருத்தில் கொண்டதில்லை. புலிகள் அமெரிக்கா, இந்தியா உட்பட்ட பலம் மிக்க சக்திகளுக்கு அழைப்பு விடுத்தனரே தவிர, அவர்களது வர்க்க நிலைப்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விட இடம் கொடுக்கவில்லை.
புலிகள், புலம் பெயர் நாடுகளில் வளர்ச்சியடைந்ததற்கான அரசியல் பொறுப்பு சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுக்கள், உட்பட்ட ஐரோப்பிய “இடதுகள்” என அழைக்கப்படுபவர்களிடமே உள்ளது. இவர்கள் தலைமையில் இருந்த அல்லது கூட்டணியில் இருந்த அரசாங்கங்கள் அரசியல் அகதிகள் தொடர்பாக நடைமுறைப்படுத்திய சட்டங்கள், அரசியல் அடைக்கலம் கோரியோரை இரண்டாம்தர பிரஜைகளாக்கியது. நாடுகடத்தப்படுவதற்கும், அதிகரித்தவகையில் இனவெறி தாக்குதல்களுக்கும் உட்படுத்தியது. உயர்கல்வி, வேலை வாய்ப்புக்கள், தொழிற் கல்வி கற்கும் படிப்புக்களில் பங்கு கொள்வது போன்றவற்றினை கடினமாக்கியது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்கைத் தரத்தின் மீதும், ஜனநாயக உரிமைகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களோடு இணைந்த இந்த அரசியலால் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேற்கத்தைய அரசியல், சமூக, கலாச்சார வாழ்கையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தமிழ் தேசியவாதத்தின் பிடிக்குள் சிக்கினர்.
தொடர்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசியல் கட்சிகளின் இனவெறி அரசியலினால், முதலாளித்துவ வளர்சியடைந்த நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய ஒரு தமிழ் தலைமுறையை சேர்ந்தவர்கள், அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களின் ஒரு பாகமாக உருவாகியுள்ளனர். அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் வேலையில்லா திண்டாட்டம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவர்கள் வென்றெடுத்த சமூக-நலன்புரி சேவைகள் மீதான தாக்குதல்களின் மத்தியில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு விதிவிலக்கான நிலைமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. உண்மையில் புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முதலாளித்துவத்தின் இனவெறி பிரச்சாரத்தினால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டாவது தலைமுறையினர் தாங்கள் பிறந்த நாடுகளில் இளம் தலைமுறை முகம் கொடுக்கும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் பாகமாக உள்ளனர்.
2008 க்கு பின்னரான உலகப் பொருளாதார நெருக்கடி, சமூக ரீதியாக மிகவும் பேரழிவுகளை உருவாக்க கூடிய ஒரு கட்டத்தினை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடியின் சுமையினை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கு ஆழும் வர்க்கம் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களினதும், இளம் தலைமுறையினரினதும் போராட்டங்கள் வளர்சியடைந்து வருகின்றன.
முப்பது வருட முபாரக் ஆட்சியினை எகிப்தில் முடிவுக்கு கொண்டு வந்த புரட்சி, அமெரிக்க சார்பு இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு புதிய கட்டத்திற்கு அபிவிருத்தி அடைகின்றது. முபாரக்கின் வீழ்ச்சி ஒரு ஆரம்பம், எகிப்திய தொழிலாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்திய உலக சோசலிச வலைத் தளம் எகிப்தின் புரட்சி பற்றி பின்வருமாறு எழுதியது:
“இந்த அசாதாரண நிகழ்வுகள் எகிப்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் திருப்புமுனையானவை ஆகும். இவை தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக சக்தியை எடுத்துக்காட்டியிருப்பதோடு, சோவியத் ஒன்றியத்தின் நிலைகுலைவு “வரலாற்றின் முடிவு'', மனித விவகாரங்களில் வர்க்கப் போராட்டம் ஒரு காரணி என்பதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதான கூற்றுக்களை பதிலளிக்க முடியாத வகையில் மறுத்துரைத்துள்ளன. சித்திரவதை, கைதுகள் மற்றும் அடக்குமுறைக்கு முன்னால் எகிப்தின் பரந்த மக்களின் எதற்கும் அஞ்சாத வீரமானது உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்வேகத்திற்கான முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.”
முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய நாடுகளின் முதலாளி வர்க்கம், தீர்க்கப்படாத ஜனநாயக கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், ஏகாதிபத்தியதிற்கு எதிரான போராட்டத்தினை நடாத்துவதற்கும் இலாயக்கற்றது என்பது இலங்கை மற்றும் எகிப்திய நிகழ்வுகளில் மீண்டுமொருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினை முன்னிறுத்தி தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சி மட்டும்தான் இதை சாத்தியமாக்கும் என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் இலங்கை, எகிப்திய நிகழ்வுகளில் மீண்டும் ஒருமுறை பசுமையாக நிறுவிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ் மொழிபேசும் தொழிலாள வர்க்கத்தின் இணைந்த பாகமாக, தெற்காசியாவிலும் சர்வதேசரீதியாகவும் தனது வர்க்க சகோதரர்களை ஐக்கியப்படுத்தி ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசிற்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகள் நிலை நிறுத்தப்பட முடியும்.
ஏகாதிபத்திய நாடுகளில் வாழும் தமிழ் உழைக்கும் மக்களின் உண்மையான நட்பு சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். அவர்கள் அந்தந்த நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக உள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் இலங்கையில் ஏகாதிபத்திய சார்பு குட்டி தமிழ் அரசு அமைக்கும் முன்னோக்கினை நிராகரிக்க வேண்டும். தாம் வாழும் நாடுகளில் தமது நலன்களோடு இனங்காணக்கூடிய வகையிலான ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்கும் போராட்டத்தோடு தம்மை இணைத்து போராட முன்வரவேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தை உலக சோசலிச புரட்சி முன்னோக்கில் ஐக்கியப்படுத்தும் இந்த முன்னோக்கிற்காக போராடுகின்றது. இலங்கையில், அதனது பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்த போராட்டத்தின் ஒரு நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கிறது.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/hero-n28.shtml

Friday, 23 November 2018

இலங்கை அரசியல் நெருக்கடி தமிழ் தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது

Sri Lankan political crisis exposes bankruptcy of Tamil nationalist parties

By K. Nesan and V. Gnana
22 November 2018
க்டோபர் 26 அன்று இலங்கை அரசாங்கம் நிலைகுலைந்தமை தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்தியிருக்கிறது. 1983-2009 இலங்கை உள்நாட்டுப் போர் குருதிகொட்ட முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது முதலாக தமிழ் தொழிலாளர்களும், பரந்த ஒடுக்கப்பட்ட மக்களும் முகம்கொடுத்து வரும் கொடுமையான நிலைமைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக கொழும்பின் சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்படப்போவதாக அவர்கள் வாக்குறுதியளித்தனர். இது ஒரு மோசடி என நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்க ஆதரவிலான ஒரு “நல்லாட்சி” உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு பின்னரும், இந்தப் பிரச்சினைகளில் ஒன்றும் கூட தீர்க்கப்பட்டிருக்கவில்லை.
2015 ஜனவரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய அமெரிக்க பொறியமைவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. தற்போது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு அவரின் இடத்தில் மகிந்த இராஜபக்ஷவை அமர்த்துவதற்கு சிறிசேன முயன்றதன் பின்னர், இந்த “தேசிய ஐக்கிய” அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது. குண்டர்களுடையதைப் போன்ற இரைச்சல் மிக்க வாய்ச்சண்டைகள் கைகலப்புகளாக நாடாளுமன்றத்தில் வெடித்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இராஜபக்‌ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராய் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் “சம்பந்தன் திரைமறைவிலான இரகசிய உடன்பாடுகளின் மூலமாக இலங்கை ஆட்சியாளர்களின் காவலராக ஆகியிருக்கிறார்” என்று கூட்டமைப்பு ஆதரவு இணைய தினசரி தமிழ்வின் பெருமைபொங்க எழுதியது. சிறிசேன, விக்கிரமசிங்கவை பதவிநீக்கிய பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு “சர்வதேச சமூக”த்துடன் இணைந்து சம்பந்தன் செயற்படுவதாக அது பெருமைப்பட்டது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களுடன் சேர்ந்து மீனவர்கள், பெட்ரோலிய தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பல்கலைக்கழகத்தின் கற்பிப்பு சார்ந்த மற்றும் சாராத தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் வெடித்திருக்கும் நிலையில், கூட்டமைப்பு மேலும் வலதுசாரி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அக்டோபர் 26 ல் தொடங்கிய நிகழ்வுகள் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கையும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் மீண்டுமொரு முறை சக்திவாய்ந்த விதத்தில் நிரூபணம் செய்திருக்கின்றன. தாமதமான அபிவிருத்தி கொண்ட நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் ஒரு தொங்குதசையாக, எந்த ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வக்கில்லாமல் இருக்கிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் மட்டுமே இலங்கையின் உள்நாட்டுப் போரில் இருந்து எழுகின்ற தீர்க்கப்படாத எரியும் பிரச்சினைகளை தீர்க்க இயலும்.
கூட்டமைப்பு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு, தொழிலாள வர்க்கத்தினதும் தமிழ் வெகுஜனங்களினதும் கசப்பான எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதன் மூலமாக பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு தெள்ளத்தெளிவானது.
ஐக்கிய தேசியக் கட்சி 1949 இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் தோட்டத் தொழிலாளர்களது வாக்குரிமைகளை இல்லாமல் செய்தது, 1980ல் பொதுத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தை பெருந்திரளான வேலைநீக்கங்களைக் கொண்டு நசுக்கியது, அத்துடன் 1983 இல் இலங்கை உள்நாட்டுப் போரைத் தூண்டிய தமிழர் விரோதப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டது. 2015 ஜனவரிக்குப் பின்னர் சிறிசேனவின் கூட்டாளியாக, இலங்கையில் “நல்லாட்சி”க்கு வாக்குறுதியளித்த அது, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நிறைவேற்றியதன் மூலம், நாடுதழுவிய சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள், வறிய மக்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது தாக்குதல் நடத்தியது.
2015 தேர்தல் அறிக்கையில் கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகள் பொய்களின் ஒரு மூட்டையாக நிரூபணமாகின. ஒரு “அரசியல் தீர்வு” காண்பதற்கும், “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்காக” போராடுவது, “தமிழ் மக்களின் உடனடியான தேவைகள் குறித்த விடயங்களை” கையாளுவது, மற்றும் “போர் விதவைகள், அனாதைகள், வயோதிபர்கள், ஊனமுற்றோர்களது” நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் அது வாக்குறுதியளித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அக்கறை, தமிழ் தொழிலாளர்கள், வறிய மக்கள் பற்றியதல்ல மாறாக, இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் நாடுகடந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு குறுகிய அடுக்கு, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளில் தொழிலாளர்களையும் ஏழைகளையும் சுரண்டுவதற்கு கொண்டுள்ள வர்க்க நலன்களே ஆகும். அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான அதன் மோதல் மற்றும் போர் மிரட்டல்களுக்கு ஆதரவான ஒரு ஆட்சியை இலங்கையில் உருவாக்குவதற்கு முனைந்த நிலையில், கூட்டமைப்பு இலங்கை அரசுடனான அதன் பேரம்பேசலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை நாடியது. அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் தன்னை அணிநிறுத்திக் கொண்டது. இன்று இந்தக் கொள்கையானது கூட்டமைப்பினை, அது பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்ற தமிழ் உழைக்கும் மக்களின் தீர்க்கமான எதிரிகளுடன் கூட்டணி சேருவதற்கு அதனைக் கொண்டு செல்கிறது.
ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சித் திட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு, இலங்கையில் கூட்டமைப்பின் ஆதரவிலான “நல்லாட்சி” அரசாங்கம் நான்கு வருடங்களாக தமிழ் மக்களுக்கு என்ன பெறுபேறுகளை வழங்கியிருக்கின்றது? என்ற கேள்வியைக் கேட்டாலே போதும்.
தென்னிலங்கையின் சிங்கள மக்களைப் போலவே, பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமைகளும் மோசமடைந்திருக்கின்றன, வறுமை விண்ணைமுட்டியிருக்கிறது. கிளிநொச்சி பகுதியில் 18.2 சதவீதமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது இலங்கையில் மிக உயர்ந்த அளவிலான வறுமை விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன் தேசிய சராசரியை விட நான்கு மடங்குக்கும் அதிகமானதாகும். போரின் முடிவில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வீட்டு மாதாந்திர வருவாய் நாட்டின் மிகக்குறைந்த சராசரியாக 25,526 ரூபாயாக உள்ளது, தேசிய சராசரி 43,511 ரூபாயாகும்.
பெரும்பாலான இளம் தொழிலாளர்கள் மலிவு உழைப்புத் துறைகளில் வேலைசெய்கின்றனர், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். 2015 முதல் 2018 வரையான காலத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 5.7 சதவீதத்தில் இருந்து 10.7 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. 2009க்குப் பின்னரான “போருக்குப் பிந்தைய சகாப்தத்தில்”, வெறும் 8,754 வேலைவாய்ப்புக்கள் மட்டுமே வட மாகாணத்தில் உருவாக்கப்பட்டிருந்ததாக தேசிய முதலீட்டுச் சபை செப்டம்பரில் தெரிவித்தது.
தோல்வியடைந்த தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் படுகொலை செய்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்தபோதும் அதனால் விட்டுச் செல்லப்பட்ட பிரச்சினைகளில் எதுவுமே தீர்க்கப்பட்டிருக்கவில்லை. விசாரணையின்றி பத்தாண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். அத்துடன் வடக்கும் கிழக்கும் இப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்த்தான் உள்ளது.
இந்தப் பிராந்தியங்களில் மட்டும் 90,000 க்கும் அதிகமான போர் விதவைகள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போன அல்லது தொலைந்துபோன ஆயிரக்கணக்கானோரின் மனைவிகளது எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை. வட மாகாணத்தில் சுமார் 58,000 வீடுகள், அல்லது மக்களின் கால்வாசிப் பேருக்கு பெண்களே குடும்ப தலைமையில் உள்ளனர். பாரிய வறுமை, துஷ்பிரயோகம் அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாலியல் அச்சுறுத்தல் என சொல்லணா துயரங்களுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றனர்.
நுண்நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் சிறு கடனுதவிகளை அளிக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலுமான சிறு தொழில்களை தொடங்குவதற்கு அவற்றை பயன்படுத்துகின்றனர். அவர்களது முயற்சிகள் பெரும்ப்பாலும் தோல்வியடைவதால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் கிழக்கு மாகாணத்தில் இத்தகைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் 60க்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலும் இதையொத்த தற்கொலைகள் நடைபெறுகின்றன.
உள்நாட்டுப் போரின் போது வடக்கு, கிழக்கில் 100,000 க்கும் அதிகமான பேர் காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கிறது. தமது குடும்ப அங்கத்தவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரி, காணாமல் போனவர்களது உறவினர்கள், 2017 பிப்ரவரி முதலாக, இரவுபகல் பாராமல் வீதியோரப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தெற்கில் மிகப்பரந்த மக்களின் அனுதாபத்தை அவர்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறது. வடக்கிற்கு பயணம் செய்யும் சிங்கள தொழிலாளர் குழுக்கள் போராட்டக்காரர்களை சந்தித்து தங்களது அனுதாபங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 2018 ஜூலையில், முதன்முறையாக, காணாமல் போனவர்களது உறவினர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டங்களை, தெற்கில் அபிவிருத்தி கண்டுவருகின்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் இணைப்பதற்கு செய்யப்படுகின்ற முயற்சிகளை தமிழ் தேசியவாதிகள் முழுமையாக எதிர்க்கின்றனர். அதற்குப் பதிலாக, போராட்டக்காரர்களில் இருந்து சிறுசிறு பிரதிநிதிக் குழுக்களை சிறிசேனவுடன் சம்பிரதாயமான நேருக்கு நேர் சந்திப்புகளுக்காய் அவர்கள் அனுப்பி வந்துள்ளனர். தமிழ்நெட் வலைத் தளம் எழுதியது, “சிங்கள தேசம் அதன் தலைவிதியை தீர்மானித்துக் கொள்ளட்டும், தமிழர் போராட்டத்தின் மீது தொடர்ந்து கவனம் குவியுங்கள்”.
தமிழ் தேசியவாதிகளின் இந்த நடைமுறைகள், அன்றாடம் அமெரிக்காவுடனும், இலங்கை அரசுடனும் இணைந்து சூழ்ச்சி செய்யும் அதேவேளையில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களை இனரீதியாகப் பிளவுபடுத்தி வைப்பது என்ற அவர்களது திவாலான முன்னோக்கின் மீதான ஒரு குற்றப்பதிவாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக அமெரிக்க ஏற்பாட்டில் கொண்டுவரப்படுகின்ற ஒரு தீர்மானம் உள்நாட்டுப் போர் குற்றங்களுக்கு நீதியைக் கொண்டுவரும் என்று வாக்குறுதியளித்து, தமிழ் மக்களின் நம்பிக்கைகளை அவர்கள் சுரண்டிக் கொண்டனர். ஆனால், சீனாவுக்கு எதிரான அமெரிக்க நலன்களை ஊக்குவிக்கும் ஒரு முதலாளித்துவ ஆட்சியை கொழும்பில் அமர்த்துவது, அத்தோடு தமிழ் தேசியவாதிகளின் இலாபங்கள் ஆகிய அமெரிக்க மற்றும் தமிழ் தேசியவாதிகளின் நோக்கங்கள், இத்தகைய வாக்குறுதிகளுடன் வன்மையான முரண்பாடு கொண்டவையாக இருந்தன.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் உடந்தையாக இருந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் கூட்டமைப்பின் கூட்டாளிகள், 2009 இறுதிப்போரில் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளும் அப்பாவி தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டதை உற்சாகத்துடன் ஆதரித்தவர்கள் என்பது நன்கறியப்பட்டதாகும். கூட்டமைப்பின் சிங்களக் கூட்டாளிகள் அனைவரும் இந்த இரத்தக்களரியில் அரசியல்ரீதியாக சம்பந்தப்பட்டிருந்தவர்களே. இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிக்கு எதிராக 2017 இல் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளுக்கான பதிலிறுப்பில் சிறிசேன அறிவித்தார்: “மிகத் தெளிவாக சொல்கின்றேன், ஜகத் ஜயசூரியாவின் மீதோ அல்லது வேறு எந்த இராணுவத் தலைவரின் மீதோ அல்லது இந்த நாட்டின் வேறெந்த போர் நாயகரின் மீதோ உலகின் எவரொருவரும் கைவைப்பதை நான் அனுமதிக்கப் போவதில்லை.”
எந்த விதமான போர்க்குற்ற விசாரணைகளையும் இப்போது செயலிழந்து கிடக்கும் “நல்லாட்சி” அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து அரசியல் நிறுவனங்களும், தொடர்ச்சியாகவும் ஆவேசமாகவும் எதிர்த்தே வந்திருக்கின்றன.
தமிழ் தொழிலாளர்கள், ஏழை மக்களை பொறுத்தவரை, இது அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் முட்டுச்சந்தை நிராகரித்து, சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும், சோசலிச சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இந்திய மற்றும் சிங்களப் பெரும்பான்மை கொண்ட தெற்கு இலங்கையின் வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களுடன் ஐக்கியம் பேணுவதற்குமான தொழிலாள வர்க்க அரசியலை நோக்கித் திரும்புவதை அவசியமாக்குகின்றது.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/tami-n23.shtml

Saturday, 17 November 2018

தமிழ் நாடு வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் காட்டிக்கொடுப்பு

The kiss of death: Stalinists seek to tie Tamil Nadu auto strikes to right-wing parties

அழிவை ஏற்படுத்தும் செயல்: தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்களை வலதுசாரி கட்சிகளுடன் பிணைக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சி

By Arun Kumar
10 November 2018
மஹா இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்-சைக்கிள் தயாரிப்பு ஆலைகள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு செய்யும் Myoung Shin India Automotive (MSI) ஆகியவற்றை சேர்ந்த மூவாயிரம் தொழிலாளர்கள் ஆறு வாரங்களுக்கு மேல் ஓரகடத்தில் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு தொழிற்துறை மையமாக உள்ளது.
போலீஸின் வன்முறை தாக்குதல்கள், பரந்தளவிலான கைதுகள் மற்றும் நீதிமன்றங்களின் முதலாளிகள் சார்பான தீர்ப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் ஒரு உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள், அதிக ஊதியங்கள் மற்றும் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக யமஹாவால் பழிவாங்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தல் மற்றும் மூன்று ஆலைகளிலும், இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துடன் (CITU) இணைந்த புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அங்கீகாரம் செய்வது ஆகியவற்றிற்காக போராடுகின்றனர்.
சிஐடியு, இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் உடன் இணைந்துள்ளது.
தமிழ்நாடு வாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர்களின் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும். அது, முதலாளிகள், அரசாங்கம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை ஒன்றுபடுத்தும் தொழிலாளி விரோத இணைவுக்கு எதிராக உடனடியாக எழுந்துள்ளது.
வேலைநிறுத்தக்காரர்களை தடைசெய்ய, நீதிமன்றங்கள் மற்றும் போலீசார் ஒன்றாக செயல்படும்போது, ஸ்ராலினிச சிஐடியு தலைவர்கள் ஓரகடத்தில் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்தையும் செய்கின்றனர்.
வேலைநிறுத்தம் செய்யும் யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்களுக்கு ஆதரவாக, வேலைநிறுத்தம் நடைபெறும் ஆலைகளுக்கு எதிரே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்பதை தவிர, ஒரு பெரிய வாகன தயாரிப்பு மையமாக விளங்கும் ஓரகடத்தில் அது பிரதிநிதித்துவம் செய்யும் இதர தொழிலாளர்களை அணிதிரட்ட ஸ்ராலினிச சிஐடியு எதுவுமே செய்யவில்லை, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதுமாக எதுவுமே செய்யவில்லை என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை.
வேலைநிறுத்தத்தின் போது உற்பத்தியை தொடர்ந்து நடத்துவதற்கு நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துகிறது. ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவது ஒரு மூலோபாய விஷயமாக இருந்தபோதிலும், அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சார்பாக அல்லது ஒரு வர்க்கரீதியான ஆதரவு கேட்டு அறைகூவல் விடுப்பதையும் சிஐடியு எதிர்த்தது. பல தசாப்தங்களாக, ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பல அடுக்கு உழைப்பு சக்திகளை (ஒப்பந்த, தற்காலிக, பயிற்சி மற்றும் பகுதி நேரம் போன்ற தொழிலாளர்களை) தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வலிந்த தாக்குதலில் ஒரு முக்கிய ஆயுதமாக இந்திய பெருவணிகம் பயன்படுத்தி வருகிறது.
மாறாக, இந்திய ஆளும் கட்சியான, இந்து மேலாதிக்க பிஜேபி இன் ஒரு நெருங்கிய கூட்டாளியான அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கம், மற்றும் அஇஅதிமுக கட்டுப்பாட்டிலான தொழிலாளர் துறைக்கும் நேரடியாக (தலையீட்டிற்கான) விண்ணப்பங்கள் செய்யும்படி ஸ்ராலினிஸ்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை ஊக்குவித்தனர். அதேபோல், முதலாளித்துவ நீதிமன்றங்களின் மீது அவர்களை நம்பிக்கை வைக்கும்படியும் அவற்றின் கட்டளைகளுக்கு கட்டுப்படும்படியும் கூறினார்கள்.
வேலைநிறுத்தங்களை தடம்புரளச் செய்யவும் மற்றும் அவற்றை முதலாளித்துவ ஆளும் மேல் தட்டுடன் பிணைப்பதற்குமாக மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சியாக, CITU சமீபத்தில் ஒரு "அனைத்துக் கட்சி" கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, அதில் ஸ்ராலினிஸ்டுகள் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களை அணிவகுத்து நிறுத்தி அவர்களை வேலைநிறுத்தம் செய்பவர்களின் கூட்டாளிகளாக புகழ் பாடியது.
யமஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ. வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக சிபிஎம் மற்றும் சிஐடியு தலைவர்களுடன் மேடையில் பின்வருபவர்கள் உட்பட பங்கு பெற்றனர்: தமிழக சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வின் மாவட்ட செயலாளர், கே. சுந்தர், தி.மு.க.வுடன் இணைந்திருக்கும் தொழிலாளர் முன்னேற்ற முன்னணி பொதுச் செயலாளர் எம். சண்முகம்; மற்றும் பெரும் வணிக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (INTUC), மாநில துணை செயலாளர் பி. தாமோதரன். மேலும் MDMK, PMK மற்றும் VCK உட்பட பல தமிழ்நாடு சார்ந்த முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்கள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு வாகனத் தொழிலாளர்களின் ஆதரவாளர்களாக காட்டப்பட்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய சி.பி.எம். தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சவுந்திரராஜன், வாகனத் தொழிலாளர்கள் போராட்டம் "மாற்றப்பட்டுவிட்டது" என்றும், அது இப்போது "அனைத்து (எதிர்க்கட்சி) அரசியல் கட்சிகளுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது" என்றும் கூறினார்.
அவ்வாறான கூற்றுக்கள், யமஹா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் MSI தொழிலாளர்கள் போராட்டத்தின் மீது ஒரு சேதத்தை உண்டு பண்ணும் செயலின்றி வேறில்லை.
மேற்கூறிய அனைத்து கட்சிகளும் கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவின் பில்லியனர் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சிக்கு அதாவது 2 இலிருந்து 130 க்கும் அதிகமானவர்களாக வளர்ச்சி பெற்றதில் முடிவடைந்த தொழிலாள வர்க்க விரோத, முதலீட்டாளர் சார்பு செயல் திட்டத்திற்கு தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்தவர்கள். அதே சமயம் நூறு மில்லியன் (கோடி) கணக்கானவர்கள் நாளொன்றுக்கு 2 டாலர் (சுமார் 150 ரூபா) வருமானத்தில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலம் வரையில் இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, 1991 மற்றும் 1996 க்கு இடையில் இந்தியாவை ஆட்சி செய்தபோது சந்தை-சார்பு சீர்திருத்தங்களைத் தொடங்கி, அவற்றை முடுக்கி விட்டு, 2004 -14 வரையில் UPA அரசாங்கத்திற்கு அது தலைமை தாங்கியபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பூகோள மூலோபாய பங்காளித்துவத்தை உருவாக்கியது.
அதேபோல் தமிழ்நாடு ஆளும் கட்சியாகவும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கங்களில் ஒரு இளைய பங்காளியாகவும் தி.மு.க. இருந்த இரண்டு சமயங்களிலும் அது தொழிலாள வர்க்க விரோதப் பதிவுகளை கொண்டுள்ளது. சிறிய பிராந்தியக் கட்சிகள் பெரு வணிக தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு. வின் கீழ் இயங்கும் கட்சிகளாக மற்றும் அனைத்து இந்திய அரசியல் அரங்கில் முறையே அவர்களின் பங்காளிகளாகவும் உள்ளன.
CPM-CITU இன் "அனைத்து கட்சி" கூட்டம் இரட்டை பிற்போக்குத்தன நோக்கம் கொண்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக தாம் அணிதிரட்டல் செய்வதாக உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீது அரசியல் கட்டுப்பாட்டை வைத்திருக்க ஸ்ராலினிஸ்டுகள் முயற்சிக்கின்றனர், அதே சமயம் அவர்களை மேலும் வர்க்கப் போராட்டத்தில் இருந்து விலகச் செய்கின்றனர். மற்றும் இரண்டாவதாக ஸ்ராலினிஸ்டுகள் அடுத்த வசந்தகால தேசியத் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அவர்களது தேசிய மாநாட்டில், ஸ்ராலினிஸ்டுகள் உடன்பட்டார்கள், அதாவது பி.ஜே.வை தோற்கடிக்கும் பெயரில், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் "புரிதலை" ஏற்படுத்திக் கொள்ள தயாராக உள்ளனர், அதேசமயம் அது ஒரு நவீன தாராளவாத, அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடைய கட்சி என்பதையும் அது பல்வேறு பிராந்தியக் கட்சிகளுடன் நெருக்கமான கூட்டுக்களை உருவாக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். தி.மு.க. அதுவாகவே காங்கிரஸ் இன் ஒரு நெருக்கமான கூட்டாளியாக இருக்கிறது, அது ஸ்ராலினிஸ்டுகளின் மிக முக்கியமான வருங்கால தேர்தல் பங்காளிகளில் ஒன்றாகும்.
அக்டோபர் 6 -8 தேதிகளில் நடைபெற்ற CPM இன் மத்திய குழு கூட்டத்தில் இந்த நோக்குநிலை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இது வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்கு மூன்று பணிகளை அறிவித்தது; "இடது" சக்திகளை பலப்படுத்துவது, பி.ஜே.பி யை தோற்கடிப்பது, மற்றும் "ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம்" அமைவதை உறுதிப்படுத்துவது - அதாவது காங்கிரஸ் கட்சி தலைமையிலான அல்லது இதர வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கம் ஒன்று ”மத்தியில் அமைவது.”
அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற "அனைத்துக் கட்சி" கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் இதர மாநிலங்களில் இதேபோன்ற கட்சிகளுக்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை திசைதிருப்புவதே இப்படியான இலக்குகளின் மையமாக உள்ளது: காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பிற சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு ஆற்றொணா நிலையில் தேவைப்படும் "இடது" சான்றுகளை வழங்கி அவர்கள் ஓட்டுகள் வாங்குவதற்கும் மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளே ஸ்ராலினிஸ்டுகள் தங்களது சொந்த செல்வாக்கை அதிகரிக்கவும் ஆகும்.
முக்கியமாக, வேலைநிறுத்தங்கள் எந்தளவுக்கு நீடித்து செல்கிறதோ அவ்வளவு அதிகமாக CITU, இதர அனைத்துக்கும் மேலாக தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கோரிக்கையை உயர்த்திப் பிடித்தது, அதேசமயம் இந்தியாவின் முதலாளித்துவ சார்பு தொழிலாளர் உறவு முறையை அது கடைப்பிடிப்பதாக வலியுறுத்தியது. இந்த செய்தி தவறின்றி உள்ளது: முதலாளிகள், CITU ஐ அங்கீகரித்தால், சிஐடியு மற்றும் சிபிஎம் தேசிய ரீதியாக செய்வதுபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும்.
இது தொடர்பாக இரண்டு மேலதிக புள்ளிகள் சொல்லப்பட வேண்டும்:
அக்டோபர் 30ம் திகதி "அனைத்து கட்சி" கூட்டத்தில் –தெளிவாகவே வேலைநிறுத்தத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த CITU மறுத்து வருவது தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ்– ஸ்ராலினிச தலைவர் சவுந்திரராஜன் ஆவேஷமாக சாடினார், அவ்வாறு பேசும் போது வேலைநிறுத்தக்காரர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்றவாறாக கூறினார், “ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்வதோ அல்லது அவர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பதோ” என்று கூறிய சவுந்திரராஜன் “அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் அது நிறைய தள்ளு முள்ளுக்கும் இரத்த சிந்தலுக்கும் வழிவகுக்கும். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா” என்றார். சவுந்திரராஜன்
இரண்டாவதாக, ஸ்ராலினிசத் தலைவர்கள், வட இந்தியாவில் ஹரியானாவில் உள்ள மாருதி சுசுகியின் மானேசர் வாகன தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்களுக்கு எதிரான அரசு – முதலாளியின் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பாக தமிழ் நாடு வாகன தொழிலாளர்களை முற்றிலும் அறியாமையில் வைத்திருந்தனர். 2012 ல் மாருதி சுசுகி, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கம் மற்றும் பொலிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட 150 தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினர், 2,400 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தனர். ஏனென்றால், மானேசர் ஆலை தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் வறுமை ஊதியத்திற்கு எதிரான எதிர்ப்பின் ஒரு மையமாக மாறியது. இன்று, மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் அனைத்து 12 நிர்வாக குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 13 தொழிலாளர்கள், ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றவாளிகளாக்கப்பட்ட பின்னர் ஆயுள் சிறை தண்டனையை எதிர் கொண்டுள்ளனர்.
மாருதி சுசுகி சோடிக்கப்பட்டதைப் பற்றி தமிழ் நாடு வேலைநிறுத்தக்கார்கள் அறிந்து கொள்வதை இரண்டு காரணங்களுக்காக ஸ்ராலினிஸ்டுகள் விரும்பவில்லை: முதலாவதாக, பெருவணிக அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக செயல்பட வைக்கமுடியும் என்ற அவர்களின் கூற்றுக்களுக்களை துடைத்துக்கட்டும் வகையில் நிராகரித்துள்ளது. இரண்டாவதாக, மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்புக்கு எதிரான எந்தவொரு பிரச்சார இயக்கமும் அவர்களது காங்கிரஸ் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல் கூட்டாளிகளுக்கு கோபத்தை உருவாக்கும்.
இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சி மற்றும் அதன் ஒரு பகுதியாக தமிழ் நாடு வாகன வேலைநிறுத்தங்கள், ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிஐடியுவை இந்திய முதலாளித்துவத்தின் சமூக முட்டுகளாக அம்பலப்படுத்த வேண்டியதன் அவசரத்தை வெளிச்சத்தில் காண்பிக்கிறது. அத்துடன் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்த வேண்டும். அதாவது, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக திட்டமிட்ட முறையில் அணிதிரட்டுவதும், அதன் பின்னால் இந்திய முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்களையும் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டி தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் போராட வேண்டும்.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/kiss-n15.shtml

சென்னையில் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பொதுக்கூட்டம்

Indian Trotskyists to hold meeting on 80 years of the Fourth International

நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகள் குறித்து இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பொதுக்கூட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சென்னை பொதுக் கூட்டமொன்றுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, விஞ்ஞான மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் முழு பாரம்பரியத்தையும் உள்ளடக்கியுள்ளது. பாசிசம் மற்றும் சர்வாதிகாரம், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் உலக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு போராடும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே.
1917 ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியினால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. அது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாழ்வா, சாவா போராட்டத்தில் ஸ்ராலினிசம் உட்பட அதன் அனைத்து ஏஜன்டுகளுக்கும் எதிராக நிறுவப்பட்டது. ஸ்ராலினிசம், சோவியத் ஒன்றியத்தில், ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை  வன்முறையில் கைப்பற்றியதுடன் உலகப் புரட்சியின் முன்னோக்கை நிராகரித்தது..
1953 இலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழி நடத்தப்படும், நான்காம் அகிலம், எட்டு தசாப்தங்கள் நீடித்த கொள்கைப் பிடிப்பான, புரட்சிகரமான போராட்ட வரலாற்று பதிவை கொண்டுள்ளது.
தெற்காசியாவில் இந்தப் போராட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1968 இல் நிறுவப்பட்டது, அது முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிராக, இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும்,போராடி வரும் ஒரு கறையற்ற சாதனை பதிவை கொண்டுள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்திற்கான இந்த போராட்டம் இப்போது இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியுடன் ஒன்றித்து செல்கிறது. சோசலிசத்தின் பக்கமாக அதிகமாக ஈர்க்கப்பட்டு வரும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் உள்ளடங்கியிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் கல்வியூட்டப்பட வேண்டும்.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினர், சென்னை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள (WSWS) வாசகர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தில் பங்கேற்கும்படியும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
விவரங்கள்:
தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, மாலை 4 மணிக்கு
இடம்: பத்திரிகை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild)
சேப்பாக்கம்சென்னை – 600 005
(சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகில் மற்றும் அரசு விருந்தினர் மாளிகைக்கு பின்னால்)
தொடர்புகளுக்கு: 06379941408
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/meet-n07.shtml

Friday, 16 November 2018

Facebook உலக சோசலிச வலைத் தள பதிவினை அகற்றியுள்ளது

Washington’s censorship regime goes global
Facebook deletes WSWS post on Sri Lanka

வாஷிங்டனின் தணிக்கை ஆளுகை உலகளவில் நீள்கிறது

இலங்கை குறித்த உலக சோசலிச வலைத் தள பதிவினை முகநூல் (Facebook) அகற்றியுள்ளது

Andre Damon
14 November 2018
திங்கள்கிழமை உலக சோசலிச வலைத் தளத்தின் உத்தியோகபூர்வ தமிழ் மொழி  பக்கத்தில் இலங்கை குறித்து இடப்பட்டிருந்த ஒரு பதிவினை முகநூல் (Facebook) அகற்றியது. ஒரு விளக்கமாக கருதப்பட முடியாத விதத்தில், முகநூல் ”சமூகத்தின் வரையறைகளுக்குள்” குறிப்பிடப்படாத கட்டுப்பாடுகளை மீறியதாக இதற்கு காரணம் காட்டப்பட்டது.
74 மில்லியன் மக்களால் பேசப்படும் தமிழ் மொழியானது, இலங்கையில் தமிழ் சிறுபான்மையின மக்களாலும் தென்னிந்தியாவிலும் மற்றும் பரந்த மட்டத்தில் புலம்பெயர்ந்தோராலும் பேசப்படும் மொழியாகும்.
இடதுசாரி, போர்எதிர்ப்பு மற்றும் சோசலிச அமைப்புகளின் மீது கூகுள், முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப ஏகபோகங்களால் நடத்தப்பட்டு வருகின்ற ஒடுக்குமுறையில் இது சமீபத்தியதாகும். இந்த நிறுவனங்கள், முன்னெப்போதினும் நெருக்கமாக அமெரிக்க அரசு எந்திரத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் போது, உலகெங்கிலும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நோக்கங்களை ஊக்குவிப்பதற்கேற்ற ஆயுதங்களாக அவை அதிகமாய் பயன்படுத்தப்படுகின்றன. சோசலிச அரசியல் கண்ணோட்டங்களை ஒடுக்குவதே இதன் மையத்தில் இருக்கும் உந்துசக்தியாகும்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி முகநூல் பக்கம் குறிவைக்கப்படுவது இது முதன்முறையல்ல. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்ட பொதுக் கூட்ட விளம்பரப் பதிவுகளில் “பகிர்வு” தெரிவினை முகநூல் அகற்றியிருந்தது.
உலக சோசலிச வலைத் தளம் இணையத் தணிக்கையின் ஒரு மையமான இலக்காக விரிந்தளவில் இருந்து வந்திருக்கிறது; கூகுள், “மாற்றுக் கண்ணோட்டங்களை” கட்டுப்படுத்துகின்ற நோக்கத்துடன் அதன் தேடல் கணிப்புநெறியில் மாற்றம் செய்வதாக அறிவித்த பின்னர் இத்தளத்திற்கு தேடல் மூலமாக வருவோரின் எண்ணிக்கை 75 சதவீதத்திற்கும் அதிகமாய் வீழ்ச்சி கண்டது.
இலங்கையில் ஒரு அரசியல் நெருக்கடி ஆழமடைந்து செல்வதற்கு மத்தியில், இந்திய துணைக்கண்டத்தின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் இந்த தீவு நாட்டில், சீனாவின் செல்வாக்கை நீக்குவதற்கு அமெரிக்கா முனைந்து கொண்டிருக்கிறது. 21 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாடு உலகின் மிக அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க மேற்கு நோக்கிய வர்த்தகப் பாதையின் வழியில் அமைந்திருப்பதோடு அமெரிக்காவின் எந்தவொரு துறைமுகத்தை விடவும் பரபரப்பாக இயங்கும் ஒரு துறைமுகத்தின் சிறப்பைக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 26 அன்று, இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தார். இராஜபக்‌ஷவின் நியமனம், நியூயோர்க் டைம்ஸ் எழுதியதைப் போல “சீனாவுடன் அதீத நெருக்கமான உறவுகள்” அவர் கொண்டிருக்கும் காரணத்தால், ஏற்கமுடியாதது என்பதை வாஷிங்டன் தெளிவாக்கி விட்டிருக்கிறது.
இலங்கையின் நவீன வரலாறானது, நாட்டின் சிங்கள பெரும்பான்மையினர் மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு இடையில் பிளவுகளை விதைக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை கன்னைகளும் வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்துவதைக் கொண்டு மேலாதிக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. கொழும்பில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்-விரோத பாகுபாடு எரியூட்டிய பதட்டங்கள் ஒரு இரத்தம்தோய்ந்த உள்நாட்டுப்போராக வெடித்து 1983 முதல் 2009 வரை கொழுந்து விட்டு எரிந்ததோடு 100,000 க்கும் அதிகமான உயிர்களை காவு கொண்டது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு இன அடிப்படையிலான கன்னையை தனக்கு அடித்தளமாகக் கொள்ள விழைந்த நேரத்தில், இலங்கையின் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது ஒரு பொதுவான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான பல தசாப்தகால அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறது.
இந்தப் போராட்டமானது இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சிக்கு பரவலான ஆதரவை வென்று தந்திருக்கிறது, அத்துடன் உலக சோசலிச வலைத் தளம் உலகின் வேறெந்த பகுதியை விடவும் அதிகமாக இலங்கையில் அதிகமான சராசரியில் வாசகர் எண்ணிக்கையை பெற்றுள்ளது.
2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கொடூரமாக ஒடுக்கப்பட்டது முதலாக, தமிழ் தேசியவாதக் கட்சிகள் முன்னெப்போதினும் அதிக நேரடியான விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பின்னால் அணிவகுத்து வந்திருக்கின்றன என்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்து வந்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு அனுகூலம் கிடைப்பதற்காகவே இராஜபக்‌ஷவின் நியமனத்தை எதிர்த்திருக்கிறது என்பதை முகநூலினால் தணிக்கை செய்யப்பட்ட அந்தக் கட்டுரை விளக்குகிறது. அது கூறுகிறது:
“விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவிற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மாறாக இந்த அமைப்பு, 2015 இல் சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்தில் அமர்த்திய அமெரிக்க ஏற்பாட்டிலான ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்த அதே ஏகாதிபத்திய ஆதரவு பாதையையே இப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளது அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை கொழும்பில் அமர்த்துவதை நோக்கமாய் கொண்டிருந்தது.”
விக்கிரமசிங்க நீக்கப்பட்டதற்கு முந்தைய நாட்களில், ஆயிரக்கணக்கான தமிழ்-பேசும் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட, “இலங்கையின் அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில்” பெருகிவரும் வேலைநிறுத்த இயக்கத்தை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியது. “முன்னோக்கிய பாதை ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் அத்தனை தேசியங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படுகின்ற போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கிறது” என்று அது வாதிட்டது.
இக் கட்டுரை நீக்கப்பட்டதற்கு முகநூல் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றபோதிலும், அதன் நோக்கங்கள் சுயவிளக்கம் கொண்டவை. இந்த நிறுவனம் அமெரிக்க உளவு நிறுவனங்களுள் கூடியளவில் ஒன்றிணைக்கப்படுவது மட்டுமன்றி அந்த நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி கொண்டிருக்கின்றது. இந்த அரசு நிறுவனங்கள், சர்வதேச சோசலிசத்துக்கு செவிமடுப்போர் எண்ணிக்கை பெருகுவதை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவியரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக வளரும் நாடுகளில் இனப் பிளவுகளை சுரண்டிக் கொள்ள தாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் காண்கின்றன.
சென்ற மாதத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் உரை நிகழ்த்துவதற்காக மேற்கொண்ட இலங்கை விஜயம் அந்நாட்டின் முன்னணி ஊடகங்களில் முக்கியத்துவமிக்க வெளிச்சம் பெற்றதும் அவரது உரைகள் தொழிலாளர்களால் நெருக்கமாக பின்தொடரப்பட்டதும் வாஷிங்டனில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்த சமூக ஊடகப் பெருநிறுவனம் வளரும் நாடுகளில், குறிப்பாக இலங்கையில் அரசியல் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய ஊடகங்களில் கோரிக்கை பெருகிவருவதன் மத்தியில் தான் முகநூலின் இந்த நடவடிக்கை வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்சாரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து வந்திருக்கிறது, இணையத்தில் கருத்து சுதந்திரம் தான் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் வகுப்புவாத வன்முறைக்குக் காரணமாய் இருப்பதாக, அபத்தமாக, கூறுகின்ற வரிசையான கட்டுரைகளை அது வெளியிட்டிருக்கிறது.
“வளரும் நாடுகளில் முகநூல் துரிதமாக விரிவாக்கம்” காண்பதன் மத்தியில் அந்த நிறுவனம், “பாவிப்பவர்களை தளத்தில் நீண்டநேரம் வைத்திருக்கக் கூடிய உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவமளிக்கிறது. இது பலவீனமான நிறுவன அமைப்புகள் கொண்ட நாடுகளில் சேதமிழைக்கும் சாத்தியமுடைய ஒரு நடைமுறையாகும்” என்று ஏப்ரல் 21 அன்று வெளியான ஒரு முதல் பக்க கட்டுரையில் டைம்ஸ் குற்றமுறையீடு செய்தது.
கிட்டத்தட்ட இலங்கையின் மீது பிரத்யேகமாக கவனம் குவிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையில், “பலவீனமான நிறுவன அமைப்புகள் கொண்ட நாடுகள்” என்று மறைமுகமாக குறிப்பிடப்படுவது முன்னாள் காலனிகள் ஆகும். இத்தகைய நாடுகளில் முகநூல் உரைகளை தணிக்கை செய்யவில்லை என்றால், அந்நாடுகளது மக்கள், தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், வகுப்புவாத வன்மத்தால் ஒருவரையொருவர் படுகொலை செய்து கொள்வார்கள் என்பதே டைம்ஸ் கூற விழைவதாகும்.
அமெரிக்க உளவு முகமைகளின் “அமைதியான அமெரிக்கர்கள்” சார்பாக பேசும்டைம்ஸ், வளரும் நாடுகளின் மக்கள் வாயடைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களிடம் என்ன சொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் கருதுகின்றனவோ அவையே சொல்லப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய வாதங்கள் ஒரு வெளிப்படையான இனவெறியின் எல்லையைத் தொடுவதாக, “வெள்ளை மனிதனின் சுமையை” [white man’s burden, காலனி ஆக்கிரமிப்பை காலனித்துவ மக்களை நாகரிகப்படுத்துவதற்கு அவசியமான ஒரு சேவையாக சித்தரித்த ருட்யார்ட் கிப்லிங்கின் ஏகாதிபத்தியவாத கவிதை] இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அழைத்து வருவதாக இருக்கின்றன. இந்த நவகாலனித்துவ குப்பைகளை உற்பத்தி செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் எழுத்துக்களை உதாசீனம் செய்வதே அவற்றுக்கான ஒரே நியாயமான பதிலிறுப்பாக இருக்கும்.
சென்ற மார்ச் மாதத்தில் இலங்கையின் சிறிசேன அரசாங்கம் முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை தற்காலிகமாக மூடியபோது, “முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்தான கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு” அவசியமான நடவடிக்கையாக கூறி டைம்ஸ் அதனைப் பாராட்டியது. தணிக்கைக்கான இலங்கை அரசாங்கத்தின் சுயசேவைக்கான நியாயப்படுத்தல்களை எதிரொலிக்கின்ற இன்னுமொரு பொய்யாக அது இருந்தது.
இன வன்முறையை தடுப்பதல்ல, மாறாக அதனை மூடிமறைப்பதே முகநூலை சிறிசேன மூடியதன் நோக்கமாய் இருந்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க ஆதரவு ஆட்சியின் போலிசும் இராணுவப் படைகளும் சம்பவங்களில் உடந்தையாக இருந்ததை குறித்த செய்திகள் பெரும்பாலும் வெளிவராமல் தடுப்பதற்காகவே, இலங்கையின் ஆட்சி சமூக ஊடகங்களை மூடுவதற்கு விரும்பியது.
பாசிச கலகக்காரர்களுடன் இராணுவமும் போலிசும் நன்கறிந்த விதத்தில் கூடி வேலைசெய்தமை “இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான சிங்கள இனவாத வன்முறையை எதிர்ப்போம்” என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மார்ச் 10 அறிக்கையில் மையமானதொரு புள்ளியாக இருந்தது. அந்த அறிக்கை கூறியது:
“கலகக்கும்பல் ஏனைய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தார்கள் என்பதையும் ஓய்வுபெற்ற மற்றும் பணியிலுள்ள பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்ற ஆதாரங்கள் அங்கே இருந்தன என்பதையும் அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான சரத் அமுனுகம புதனன்று ஒப்புக்கொள்ள தள்ளப்பட்டிருந்தார். கடைகள் மற்றும் வீடுகள் மீது கும்பல்கள் தாக்குதல் நடத்துவதை போலிசின் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதை காட்டுகின்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகப் பதிவுகள் காட்டின.”
வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்கும் அனைத்து தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் திறம்கொண்ட ஒரேயொரு முன்னோக்கு சோசலிச சர்வதேசியவாதம் மட்டுமே ஆகும். ஆனால் வாஷிங்டனின் உலகளாவிய மேலாதிக்கத்தை மேலும் ஆழப்படுத்துவதற்காக வகுப்புவாதப் பிளவுகளை சுரண்டிக் கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்கின்ற முயற்சிகளுக்கு இந்த முன்னோக்கு குறுக்கே நிற்கிறது என்ற துல்லியமான காரணத்தால், முகநூல், கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப பெருநிறுவங்களின் முன்னோக்கு அதனை ஒடுக்குவதில் குறியாக இருக்கிறது.
அரசு தணிக்கைக்கான இந்த முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும்! அமெரிக்காவில், இலங்கையில் மற்றும் உலகெங்கிலும் இணையத் தணிக்கைக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம்அதன் வாசகர்களுக்கு அழைப்புவிடுக்கிறது!
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/face-n16.shtml

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பொதுக்கூட்டம் - சென்னையில்

Indian Trotskyists to hold meeting on 80 years of the Fourth International

நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகள் குறித்து இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பொதுக்கூட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சென்னை பொதுக் கூட்டமொன்றுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, விஞ்ஞான மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் முழு பாரம்பரியத்தையும் உள்ளடக்கியுள்ளது. பாசிசம் மற்றும் சர்வாதிகாரம், சமூக எதிர்ப்புரட்சி மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் உலக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு போராடும் ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே.
1917 ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியினால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. அது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வாழ்வா, சாவா போராட்டத்தில் ஸ்ராலினிசம் உட்பட அதன் அனைத்து ஏஜன்டுகளுக்கும் எதிராக நிறுவப்பட்டது. ஸ்ராலினிசம், சோவியத் ஒன்றியத்தில், ஒரு சலுகை பெற்ற அதிகாரத்துவத்தின் நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை  வன்முறையில் கைப்பற்றியதுடன் உலகப் புரட்சியின் முன்னோக்கை நிராகரித்தது..
1953 இலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழி நடத்தப்படும், நான்காம் அகிலம், எட்டு தசாப்தங்கள் நீடித்த கொள்கைப் பிடிப்பான, புரட்சிகரமான போராட்ட வரலாற்று பதிவை கொண்டுள்ளது.
தெற்காசியாவில் இந்தப் போராட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1968 இல் நிறுவப்பட்டது, அது முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிராக, இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும்,போராடி வரும் ஒரு கறையற்ற சாதனை பதிவை கொண்டுள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்திற்கான இந்த போராட்டம் இப்போது இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியுடன் ஒன்றித்து செல்கிறது. சோசலிசத்தின் பக்கமாக அதிகமாக ஈர்க்கப்பட்டு வரும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் உள்ளடங்கியிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் கல்வியூட்டப்பட வேண்டும்.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினர், சென்னை கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள (WSWS) வாசகர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தில் பங்கேற்கும்படியும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
விவரங்கள்:
தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, மாலை 4 மணிக்கு
இடம்: பத்திரிகை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild)
சேப்பாக்கம்சென்னை – 600 005
(சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகில் மற்றும் அரசு விருந்தினர் மாளிகைக்கு பின்னால்)
தொடர்புகளுக்கு: 06379941408
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/meet-n07.shtml

Wednesday, 14 November 2018

இலங்கை அரசியல் நெருக்கடியில் தமிழ் தேசியவாதிகள்

Tamil nationalists support US-backed factions in Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடியில் தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க ஆதரவு கன்னைகளுக்கு ஆதரவளிக்கின்றனர்

By K. Nesan
10 November 2018
பாராளுமன்றத்தில் மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவிருப்பதாக நவம்பர் 3 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியதும் இராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததும் “பாராளுமன்ற மேலாளுமை”யை மீறிய “சட்ட-விரோதமான”, “அரசியலமைப்பு-விரோதமான” மற்றும் “ஜனநாயக- விரோதமான” செயல் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கை விவரித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் செல்வாக்கான கன்னையாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, நான்கு நாட்களுக்கு முன்னர் கூறும்போது, சூழ்ந்திருக்கும் அரசியல் நெருக்கடியில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை ”சர்வதேச சமுக”த்துடனும் இந்தியாவுடனும் கலந்தாலோசித்த பின்னரே கூட்டணி முடிவுசெய்யும் என்று கூறியிருந்தார்.
விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவிற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மாறாக இந்த அமைப்பு, 2015 இல் சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்தில் அமர்த்திய அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு அது ஆதரவளித்த அதே ஏகாதிபத்திய ஆதரவு பாதையையே இப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளது அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை கொழும்பில் அமர்த்துவதை நோக்கமாய் கொண்டிருந்தது.
தமிழ் தேசியவாதிகளுக்கும் மற்ற நடுத்தரவர்க்க “இடது” அமைப்புகளுக்கும் எதிரான விதத்தில், இந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியை கொண்டுவரும் என்ற மோசடியான கூற்றுகளை நிராகரித்த ஒரேயொரு அரசியல் கட்சி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஒரு போரின் அபாயம் குறித்தும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையிலான சமூக சிக்கன நடவடிக்கைத் தாக்குதல்கள் குறித்தும் எச்சரித்த சோசலிச சமத்துவக் கட்சி, கொழும்பின் ஆட்சிக்கு எதிராய் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்தது. சமீபத்திய நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சி முற்றுமுழுதாக சரி என்பதை நிரூபணமாகியிருக்கின்றன.
சிறிசேனவை தேர்ந்தெடுத்தால் அது ”ஜனநாயகத்தின் ஒரு மறுமலர்ச்சி”யை உருவாக்கும் என வலியுறுத்தி சம்பந்தன் 2015 இல் சிறிசேனவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சிறிசேன இப்போது ஒருதரப்பாக பிரதமரை பதவிநீக்கம் செய்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுபடியும் “ஜனநாயக”த்திற்கான ஒரு புனிதப் போரில் இறங்குகிறது, இம்முறை இலங்கையின் தலைமை “ஜனநாயகவாதி”யாக அது போற்றிய மனிதருக்கு எதிராக. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கோரிக்கைகளுடன் நெருக்கமான அரசியல் அணிவகுப்பை பராமரிக்க தமிழ் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருக்கும் தீர்மானகரமான உறுதியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டு மாற்றத்தின் பின்னணி ஆகும்.
1983-2009 இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், தமிழ் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் மீது நடத்தப்பட்ட நச்சுத்தனமான அரசு ஒடுக்குமுறையை “மனித உரிமைகளை” பாதுகாப்பதான மோசடிப் பதாகையின் கீழ் கொழும்பில் உள்ள ஆட்சிக்கு நெருக்குதலளிப்பதற்கான அரசியல் சாக்காக பயன்படுத்துவதற்கு வாஷிங்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டுமே முனைந்தன.
இராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு இருபத்திநான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு: “மனித உரிமைகள், சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான ஜெனீவா உறுதியளிப்புகளை இலங்கை அரசாங்கம் மீளுறுதிசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அறிவித்தது.
இராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு அவர் சீன ஆதரவு கொள்கை ஒன்றைப் பின்பற்றுவாரேயானால், வாஷிங்டன், 2015 இல் இராஜபக்‌ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அது பயன்படுத்திய 2009 தமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளைக் குறித்த அதே மிரட்டல்களைக் கொண்டு கொழும்பை மீண்டும் மிரட்டக் கூடும் என்று அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியது.
இலங்கையில் ஜனநாயகத்தை “பாதுகாப்பது” குறித்த மேற்கத்திய சக்திகளது அறிக்கைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் அதிக வித்தியாசமின்றி ஒன்றுபோல் இருப்பதென்பது தற்செயலானதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எம்.ஏ. சுமந்திரன் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், 2015 இல் இராஜபக்‌ஷவை தோற்கடிக்க “சக்திகளை” அணிதிரட்டியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணிப் பாத்திரம் வகித்ததை வலியுறுத்தி, “நாம் தீர்மானகரமான காரணியாக இருக்கிறோம்” எனக் கூறினார்.
ஜனநாயகத்திற்காகவும் 2009 க்குப் பின்னர் தமிழ் வெகுஜனங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் போராடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறும் சிடுமூஞ்சித்தனமான வசனங்கள், சிங்கள பேரினவாத ஜேவிபி இன் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான அனுர குமார திசநாயக்க தலைமையிலான அக்கட்சியின் குழு ஒன்றுடன் சம்பந்தன், சுமந்திரனின் சமீபத்திய சந்திப்பு மூலமாக அம்பலப்பட்டிருக்கின்றன.
சிறிசேனவை தாக்கி சுமந்திரன் “கூட்டமைப்பும் ஜேவிபியும் இந்த நடவடிக்கைகளை கூட்டாக எதிர்ப்பதற்கும் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான மற்றும் ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவருடனும் கரம் கோர்ப்பதற்கும் முடிவெடுத்துள்ளன” என அறிவித்தார். திசநாயக்கவும் கைமாறாக, “ஜேவிபி மற்றும் வடக்கிலான மக்கள் இருவருமே ஜனநாயக-விரோத நிலைமைகளின் பின்விளைவுகளுக்கு முகம்கொடுத்து வந்திருக்கின்றனர்” எனக் கூறினார்.
இந்த பகட்டு ஆரவாரங்களை இலங்கை தொழிலாளர்கள் ஒரு பொருட்டாக எடுக்க போவதில்லை. 1966 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதலாக, ஜேவிபி தமிழ் மக்களை குறிவைக்கும் இனவாத அரசியலில் முதன்மையானதாக இருந்து.  ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொழும்பு ஆட்சியின் கரங்களால் இரத்தக்களரியில் கொலை செய்யப்படுவதில் முடிந்த அதனது 1971ன் முதலாவது கிளர்ச்சியின் போது ஜேவிபி, தமிழ் தோட்டத்துறை தொழிலாளர்களை இலங்கையில் இந்திய செல்வாக்கிற்கு ஆதரவான ஐந்தாம் படையினராக கண்டனம் செய்தது. ஜேவிபி, உள்நாட்டுப் போரின் போது தமிழ் தேசியவாத சக்திகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்திற்கு செயலூக்கமான ஆதரவு அளித்ததற்கும் சோசலிச சமத்துவக் கட்சி உள்ளிட்ட அதன் அரசியல் எதிரிகளுக்கு எதிரான அதன் கொலைபாதக அரசியல் வன்முறைக்கும் இழிபுகழ் பெற்றதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் பின்னால் அணிவகுத்து இனவாத ஜேவிபியும் கூட்டமைப்பு தேசியவாதிகளும் கூட்டணி உருவாக்குவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இந்தக் கட்சிகள் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கை ஆளும் வர்க்கத்தின் முனைப்பில் முழுமையாக ஒருங்கிணைப்பு கொண்டவை என்பதுடன் தொழிலாளர்களுக்கு கடும் குரோதம் காட்டுபவையாகும்.
சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய மூன்றாண்டு ஆதரவின் கணக்குவழக்கு என்ன?
தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளை ஒரேயடியாக மோசமடையச் செய்திருக்கின்ற அரசாங்கத்தின், சர்வதேச நிதி நாணய கட்டளையிலான சிக்கன நடவடிக்கை வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தமிழ் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 இல் வாக்குறுதியளித்தது, ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் பின்விளைவுகள் எதுவுமே நிவர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை, போர்க் குற்றங்கள் மீதான எந்த விசாரணையும் நடைபெற்றிருக்கவில்லை, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை, இராணுவ வசமிருக்கும் தனியார் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை. போரினால் அழிக்கப்பட்ட வீடுகள் இதுவரை மறுபடியும் கட்டிக்கொடுக்கப்படவில்லை; போரில் அங்கவீனமாக்கப்பட்டவர்களும் விதவைகளும் இப்போதும் எந்த உதவிகளுமின்றி பாதிக்கப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.
2016 இல், தமிழ் வெகுஜனங்களின் நெருக்கடி நிலை குறித்து பரந்த கோபம் பெருகிச் செல்வதை நிராகரித்த சம்பந்தன், "நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது" என்று கூறினார்.
சென்ற மாதத்தின் அட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உடனடியாக சிறிசேன, தமிழ் மக்களுக்கு அவர் எந்த சலுகைகளும் வழங்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை ஒருபோதும் “இணைப்பதற்கு அனுமதிக்கப் போவதோ அல்லது நாட்டை ஒரு சமஷ்டி அரசாக ஆக்க அனுமதிக்கப் போவதோ” கிடையாது என்று அறிவித்தார். என்னை ”கொன்றால் தான்” அத்தகையதொரு அதிகாரப் பரவலாக்கல் அமல்படுத்தப்பட முடியும் என்று அவர் அறிவித்தார்.
அப்படியிருந்தும், சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒரு குழு, நவம்பர் 7 அன்று சிறிசேனவை சென்று சந்தித்தது. அதன்பின் விடுக்கப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், “அனைத்து அரசியல் கட்சிகளது ஒத்துழைப்புடன் நாட்டின் அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதியால் எடுக்கப்படும் எந்த மேலதிக நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது முழு ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க” சம்பந்தன் உறுதியளித்திருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கும் தமிழ் தேசியவாதிகள் மீதான தமிழ் தேசியவாத விமர்சகர்கள், அதனது பாராளுமன்ற சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர், தமிழ் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கு வாஷிங்டன் மற்றும் பிற சக்திகளிடம் இருந்து கூடுதல் விரிவான வாக்குறுதிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். அரசியல் பகுப்பாய்வாளரான எஸ்.ஏ.ஜோதிலிங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் “மகிந்த இராஜபக்ஷவுக்கு சீனாவின் ஆதரவு இருக்கிறது, மேற்கத்திய நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்றன. இந்த நாடுகளை சாட்சிகளாக வைத்து, இக் கட்சிகளிடம் இருந்து வாக்குறுதிகளை எழுதி வாங்குவதுதான் இந்த நிலைமையில் செய்யப்படக் கூடிய சிறந்த விடயமாய் இருக்கும்.” என தெரிவித்தார்.
இலங்கையின் அனைத்து இனப் பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது இயக்கம் பெருகிச் செல்வதின் எதிர்வினையாக ஆளும் கட்சிகளது வலது நோக்கிய அப்பட்டமான நகர்வு இருக்கின்றது. சிறிசேனாவின் அரசியல் சதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, தோட்டத் தொழிலாளர்களது நாள் ஊதியம் 1,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப்படக் கோரி காலிமுகத் திடலில் 5,000 சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலான பல நகரங்களில், தொழிலாளர்களும் இளைஞர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தன்னியல்பாக வீதி ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொண்டனர்.
இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு எந்த தேசியவாதப் பாதையும் கிடையாது என்பதை கடந்த மூன்று ஆண்டு அனுபவங்களும் மீண்டுமொருமுறை நிரூபணம் செய்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் பின்னால் தமிழ் தேசியவாதிகள் அணிவகுப்பதென்பது, அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றதும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களுக்கு குரோதமானதுமான முதலாளித்துவ வர்க்க நலன்களில் இருந்து பிறக்கிறது.
வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சியின் மத்தியில், முன்னோக்கிய ஒரே பாதை, ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடித்தளத்தில் அத்தனை தேசியங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படும் போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கிறது. கொழும்பிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் தொழிலாளர்கள் காட்டும் ஆதரவும் வடக்கில் காணாமல் போனவர்களது உறவினர்கள் வருடக்கணக்கில் நடத்தி வரும் போராட்டங்களுக்கு சிங்களத் தொழிலாளர்கள் காட்டும் அனுதாபமும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் பெருகுவதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
https://www.wsws.org/tamil/articles/2018/11-Nov/tami-n12.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts