Search This Blog

Monday, 24 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-2)

னால் இப் பத்திரங்கள் பண்டாவுக்கு எவ்வித முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவை அவருக்கு உடனடியாகத் தரக்கூடிய பயன்பாடு மற்றும் அவரின் உட்கட்சி கோஷ்டியின் கோஷ்டிப் போராட்ட தேவைகளுக்கான பயன்பாடுகள் என்பனவற்றைத் தாண்டி அவற்றின் பெறுமதி செல்லவில்லை. ஆனால் கீர்த்திக்கோ அவை இன்றியமையா முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஏனென்றால், உண்மையில் ஒரு தசாப்த காலத்துக்கு அதிகமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவினுள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தினுள் / தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் வளர்ச்சியுற்று வந்த சந்தர்ப்பவாதம் பற்றிப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1972ம் ஆண்டு முன்வைத்த விமர்சனங்களை, அப்பொழுது அனைத்துலகக் குழுவின் உள்ளே எவரும் அறிந்திருக்கவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அன்று ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோரின் நேர்மையற்ற மற்றும் சீர்குலைக்கும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்தது. அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளின் கண்களின் முன், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை அபகீர்த்தியடையச் செய்யும் நோக்குடன் தொழிலாளர் புரட்சிக் கட்சி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆற்றிவந்த பணிகளைப் பற்றி பொய்யான அறிக்கைகளை புனைந்து வந்தது. இத்தாக்குதல்களின் நோக்கம் கீர்த்தியும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை சேர்ந்த அவரது தோழர்களும், நான்காம் அகிலத்தினால் வரலாற்று ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்காக உணர்வுபூர்வமாக தம்மை அர்ப்பணித்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினூடு தொடுத்து வந்த போராட்டத்தை கீழறுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. கீர்த்தி, நான்காம் அகிலத்தின் முழு வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கட்சியின் தலைவராகவும் அதன் மிகப்பெரிய பாரம்பரியங்களின் பெருமைமிக்க பிரதிநிதியாகவும் விளங்கினார்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் கீர்த்திக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சி உருவாக்கிய பயங்கரமான அனைத்துக் கஷ்டங்கள் மத்தியிலும், 1985ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் வெடித்த அரசியல் நெருக்கடிக்கு கீர்த்தியின் பிரதிபலிப்புகளில் அகநிலைவாதத்தின் அல்லது மனக் கசப்பின் அறிகுறி கூடத் தென்படவில்லை. மாறாக அவர், இந் நெருக்கடியில் அனைத்துலகக் குழுவினை ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் கொண்டு மீண்டும் ஆயுதபாணியாக்க ஒரு சந்தர்ப்பத்தை கண்டதோடு, பல வருடங்களாக நான்காம் அகிலத்தை பலவீனமடையச் செய்துவந்த சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக உலகம் பரந்த அளவில் ஒரு எதிர் தாக்குதலை தொடுப்பதற்கான ஒரு வாய்ப்பையும் கண்டார்.
1985 அக்டோபர் மற்றும் 1987 டிசம்பர் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதி, அரசியல் ரீதியில் கீர்த்தியின் வாழ்க்கையில் மிகவும் பலன் தந்த மற்றும் மிகவும் மகிழ்ச்சிமிக்க காலப் பகுதியாக அமைந்தது என்று என்னால் துணிவுடன் கூறமுடியும். அவர் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மறுமலர்ச்சியில் ஈடுசெய்ய முடியாத மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார்.
(தொடரும்...)

பகுதி-1

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts