Search This Blog

Saturday, 29 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-12)

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த இயக்கத்தின் பிடியில் அகப்பட்டிருந்த இந்தியா மீதான அவற்றின் கருத்துக்கள் முக்கியமாக கூர்மை கண்டிருந்தது. 1939 ஜூலையில் ட்ரொட்ஸ்கி இரண்டாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ நாடுகளின் புரட்சிகர இயக்கங்களை பிரமாண்டமான முறையில் தீவிரமடையச் செய்யும் என எதிர்பார்த்து, இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ட்ரொட்ஸ்கி காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை ஸ்ராலினிஸ்டுக்கள் காட்டிக் கொடுத்ததை கண்டனம் செய்ததோடு இந்தியாவில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை அமைக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.
அவர் எழுதியதாவது; இந்திய முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர போராட்டத்தினை வழிநடாத்த இலாயக்கற்றது. அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தயவிலும் இருந்து வருகின்றது. அவர்கள் தமது சொந்த சொத்துக்காக அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் மக்களைக் கண்டு அஞ்சுகின்றனர். என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை நாடுவதோடு, மேலிருந்து சீர்திருத்தங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய வெகுஜனங்களை தூங்க வைக்கின்றனர். காந்தி இந்த முதலாளி வர்க்கத்தின் போலித் தலைவரும், மோசடித் தூதுவனும் ஆவார். (Writings of Leon Trotsky [1939-40], p. 29).
ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு இலங்கையில் பலன் கிடைத்தது. 1935ல் இருந்து தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி அங்கிருந்து வந்தது. இது தொழிலாள வர்க்கத்தினுள் ஆதரவை திரட்டிக் கொண்டதோடு அவ்வாறே சம சமாஜக் கட்சி சீக்கிரம் இடதுநோக்கி பயணம் செய்தது. 1940 தொடக்கத்தில் சம சமாஜக் கட்சியின் அரசியல் வேலைத் திட்டம் பெரிதும் திட்டவட்டமான மார்க்சிச பண்பை பெற்றதோடு, அது ஸ்ராலினிஸ்டுக்களாக இனங்கண்டோரை அங்கத்துவத்திலிருந்தும் நீக்கியது. இந்தப் பரிணாமம் அதன் சர்வதேச பொறுப்புக்கள் பற்றிய விளக்கத்தில் வெளிப்பாடாகியது. அதன் சொந்த ஆரம்பகால வேலைத்திட்டத்தினை விமர்சன ரீதியில் ஆய்வு செய்த சமசமாஜ கட்சித் தலைமை இலங்கையில் ஒரு 'தேசிய' புரட்சி பற்றிய முன்னைய கருத்துப்பாட்டினையிட்டு அதிருப்தி தெரிவித்ததோடு தீவில் புரட்சிகர சோசலிச இயக்கம் ஒரு முழு இந்திய புரட்சிகர இயக்கத்தின் அத்தியாவசியமான அங்கமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனப் பிரகடனம் செய்தது. இந்த அடிப்படையில் சமசமாஜக் கட்சி இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியில் சேர்ந்ததோடு கிட்டத்தட்ட அதேசமயத்தில் நான்காம் அகிலத்துடன் சேரவும் விண்ணப்பித்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து கொண்ட ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக சம சமாஜக் கட்சி இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமை வழங்கியது.
இவ்வாறு ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் உறுதியான போராட்டம் காரணமாக இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் தத்துவார்த்த, அரசியல் சுயாதீனம் நிலைநாட்டப்பட்டது. இது ஸ்ராலினிஸ்டுக்கள் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்காததும் அடைய இலாயக்கற்றவர்களாகவும் இருந்ததுமான ஒரு வெற்றியாகும். அங்கு அவர்கள் காந்தி, நேருவின் முதலாளித்துவ காங்கிரசின் பின்னால் பரிதாபமான முறையில் இழுபட்டனர். எவ்வாறெனினும் இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையை வெற்றி கொண்டனர். மேலும் இந்த வெற்றி, ஒரு வரலாற்று-தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்- அதாவது காலனித்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் கட்டாயமாக ஒரு தேசியப் போராட்டமாகவே இருக்கவேண்டும் என்ற பரந்தளவிலான எண்ணம், யதார்த்தத்தினை திருத்தல் புள்ளிக்கு எளிதாக்குவதை காட்டுவதோடு வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சமூக சக்தியை உண்மையில் குழப்பியடிக்கவும் செய்கின்றது. இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சித் தலையீட்டின் பலம், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமது போராட்டத்தின் அடிப்படையாக கொண்டிருந்தது தேசிய விடுதலையை அன்றி சர்வதேச முன்னோக்கினையே என்ற உண்மையில் இருந்தே பெருக்கெடுத்தது. லங்கா சம சமாஜக் கட்சியின் பிற்கால காட்டிக்கொடுப்புக்கிடையிலும், (1950ல் இந்திய போல்ஷிவிக்- லெனினிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சியுடன் இணைந்து கொண்டது.) இந்த வரலாற்றுப் பங்களிப்பு ஒரு பலம் வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தினை சிருஷ்டித்தது. அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துக்கு ஊக்கமளித்ததோடு கீர்த்தியின் எதிர்கால அரசியல் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டிருக்க ஒரு அத்திவாரத்தினையும் வழங்கியது.
(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6   பகுதி-7    பகுதி-8  

 பகுதி-9    பகுதி-10   பகுதி-11

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-11)

''தனிநாட்டில் சோசலிசத்தின்'' பரந்த முக்கியத்துவம்
''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவமானது மிகவும் நனவான முறையிலும் நேரடியாகவும் சோவியத் யூனியன் மீது ஏகாதிபத்திய நெருக்குவாரத்தினை திணிக்கும் நோக்குடன் பாதுகாப்புக் கூட்டுக்களை உண்டுபண்ணுவதை நோக்கி கம்யூனிச அகிலத்தின் மூலோபாயத்தினை சந்தர்ப்பவாத ரீதியில் மறு அணிதிரளச் செய்ய இட்டுச் சென்றமை தெளிவாகியது. ஸ்ராலினின் அறியாமைமிக்க கணிப்புக்களுக்கு அப்பால் சியாங்கை மகோன்னதமாக காட்டியமை, தேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையாக விளங்கிய தத்துவார்த்த கருத்துப்பாட்டில் இருந்து பெருக்கெடுத்து வந்தது. ஸ்ராலினின் 'தத்துவத்தின்' நடுமையமாக வரலாற்றுச் சகாப்தம் பற்றிய முற்றிலும் வேறுபட்ட வரைவிலக்கணம் விளங்கியது. நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு முரண்பட்ட விதத்தில் சகாப்தம் பற்றிய ஸ்ராலினிச கருத்துப்பாடானது கணிசமான உள்ளார்ந்த சக்திகொண்ட பொருளாதார அமைப்பின் தேசிய அரச வடிவத்தினை குறித்து நின்றது. இதிலிருந்து பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளி வர்க்கம் இன்னமும் ஒரு வரலாற்று ரீதியில் முற்போக்கான பாத்திரத்தினை வகிக்கின்றது என்பது வெளிப்பட்டது மறுபுறத்தில் ட்ரொட்ஸ்கி அத்தகைய ஒரு சாத்தியத்தினை நிராகரித்தார். ஏனெனில் இறுதி ஆய்வுகளின்படி காலனித்துவ முதலாளி வர்க்கம் காலவதியான சொத்து உறவுகளில் தங்கியுள்ளது மட்டுமன்றி அதன் இருப்பும்கூட ஒரு தேசிய அரச வடிவினுள்ளேயே வேரூன்றியுள்ளது அது மனிதனின் உற்பத்திச் சக்திகளின் நியாயமான அபிவிருத்திக்கும் கூட முக்கிய தடையாக உள்ளது.
ட்ரொட்ஸ்கி ஆசியாவில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி பற்றி பெரும் அக்கறை கொண்டிருந்தார். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான காலனித்துவ மக்களின் போராட்டத்தின் முக்கியத்துவத்தையிட்டு அவர் பெரிதும் நனவாக இருந்தார். ஆனால் அவர் முன்னர் போன்று தொடர்ந்தும் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் தேசிய முதலாளி வர்க்கம் மேலாதிக்கம் வகிக்கும் என்ற வாதத்தினை நிராகரித்து வந்தார். இது சம்பந்தமாக ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் பற்றி ஒரு தென்னாபிரிக்க ஆதரவாளர்கள் குழுவுக்கு 1934ல் எழுதியவற்றை நினைவு கூர்வது பொருத்தமானது;
''அதன் குறுகிய சமரசக் கொள்கை காரணமாக இதன் சொந்தக் கோரிக்கைகளை காங்கிரசினால் அடைய முடியாதிருப்பதை போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்கள் சுதேச மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துகின்றனர். காங்கிரசுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்கள் ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்ட வேலைத்திட்டத்தினை அபிவிருத்தி செய்கிறார்கள்'' (Writings of Leon Trotsky [1934-35] [New York: Pathfinder, 1974], p. 252).
முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் இன்னுமோர் மிகவும் ஆழமான அம்சம் ஒன்றுண்டு. பின்தங்கிய நாடுகளில் வளர்ச்சி கண்டுவந்த சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்களுக்கு அவர் பூரண மரியாதை செலுத்திய அதே சமயம் 'தேசிய விடுதலை' முன்னோக்கு —அடிப்படையில் 'தேசியப்' பணியினை சூல்கொண்டிருக்கும்வரை— சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் ஒரு விமர்சன நோக்காக விளங்கியது உதாரணமாக ''யுத்தமும் நான்காம் அகிலமும்'' என்ற தமது விஞ்ஞாபனத்தில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது;
''ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலவதியான புரட்சிகள், தேசிய அரசுக்கு ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்தினை ஆரம்பித்து வைக்க இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்து கொண்டாக வேண்டும். அரைக்காலனித்துவ நாடான ரஷ்யாவில் காலவதியான ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சிக்கு ஒரு முன்னுரையாக மட்டும் விளங்கியது போலவே காலனிகளின் விடுதலை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு இராட்சத நிகழ்வாக மட்டுமே விளங்கும்.

"தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்து கொள்கின்றது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே பூகோளத்தின் சகல தேசியங்களுக்கும் ஒரு நிஜமானதும் நிரந்தரமானதுமான அபிவிருத்திச் சுதந்திரத்தினை உத்தரவாதம் செய்யும்.'' Writings of Leon Trotsky [1933-34], p. 306).

(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6   பகுதி-7    பகுதி-8  

 பகுதி-9    பகுதி-10


Friday, 28 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-10)

1926 மேயில் கோமின்டாங் ஒரு அனுதாபக் கட்சியாக கம்யூனிச அகிலத்தினுள் அனுமதிக்கப்பட்டதோடு சியாங் கேய் சேக் அதன் தலைமைப்பீடத்தின் ''கௌரவ அங்கத்தவர் ஆக்கப்பட்டார்.
தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் புரட்சிகர போராட்டத்தின் ஒரு அலைவீச்சின் பின்னணியிலேயே கோமின்டாங்கும் சியாங் கேய் சேக்கும் மேன்மைப்படுத்தப்பட்டனர். வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சி சீன முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையேயான மோதுதலை உக்கிரமாக்கியதோடு முதலாளி வர்க்கத்தினை ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அப்பட்டமாக தள்ளியது. ஆனால் கம்யூனிச அகிலத்தின் ஸ்ராலினிச தலைமை சீனாவின் தேசிய ஒடுக்குமுறை சகல வர்க்கங்களையும் அடிமைப்படுத்தி, அவற்றினை புரட்சிகரப் போராட்டத்தினுள் தள்ளியுள்ளது என்ற அடிப்படையில் வர்க்க சக்திகளின் வேறுபாட்டினை நிராகரித்தது. இந்த போலிக் கருத்துப்பாட்டிற்கு எதிராக ட்ரொட்ஸ்கி வாதிட்டதாவது:
வெளியிலிருந்து ஏகாதிபத்தியம் பொறிமுறையில் சகல வர்க்கங்களையும் ஒன்றாக ஒட்டுப் போடுகின்றது என நினைப்பது முற்றிலும் தவறானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகர போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளைப் பலவீனப்படுத்துவதற்கு மாறாக பலப்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் சீனாவின் உள்ளார்ந்த உறவுகளில் ஒரு பெரிதும் பலம் வாய்ந்த சக்தி இந்தச் சக்தியின் முக்கிய மூலம் யாங்சியாங் நதியின் நீரில் நிற்கும் யுத்தக் கப்பல்கள் அன்றி —அவை இரண்டாம் பட்சமானவை மட்டுமே— வெளிநாட்டு மூலதனத்துக்கும், தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களே. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் அதன் பொருளாதார, இராணுவ பலம் காரணமாக சீன மக்களின் வெகு ஆழத்தில் இருந்த சக்திகளின் ஒரு பலம்வாய்ந்த உழைப்பை வேண்டி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைப்பாளி மக்களை அவர்களின் காலடிக்கு கொணரும் அனைத்தும் தேசிய முதலாளி வர்க்கத்தினை தவிர்க்கமுடியாத விதத்தில் ஏகாதிபத்தியத்துடன் அப்பட்டமான கூட்டுக்கு தள்ளுகின்றது. முதலாளி வர்க்கத்துக்கும், தொழிலாளர், விவசாயிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் பலவீனப்பட்டுவிடவில்லை. ஆனால் மாறாக ஒவ்வொரு கடும் மோதுதல்களிலும்- இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம்வரை இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் ஆழமாக்கப்பட்டுள்ளது.(Leon Trotsky on China [New York: Anchor, 1976], p.161).
இடது எதிர்ப்பின் எச்சரிக்கைகள் 1927 ஏப்ரல் 12ம் திகதி சியாங் கேய் சேக்கின் படைகளால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் ஷங்காயில் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. சீயாங்கின் சதி, தேசிய முதலாளி வர்க்கத்தின் ''வலதுசாரியினரை'' கொண்ட கோமின்டாங்கின் ஒரு சிறிய பிரிவினரின் காட்டிக்கொடுப்பு மட்டுமே எனக்கூறி கம்யூனிச அகிலம் இந்தப் பேரழிவுமிக்க தோல்விக்கான பொறுப்பினை மறுக்க முயன்றது. ஸ்ராலினிஸ்டுக்கள் சியாங்குக்கு எதிராக கோமின்டாங்கின் ''இடது கன்னையை'' நிறுத்தினர். அது ''நான்கு வர்க்கக் கூட்டின்'' 90 வீதத்தினை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வூகானில் உள்ள 'இடது' கோமின்டாங் அரசாங்கத்தினை மையமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் 1927 ஜுலை யில் வூகான் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக மிலேச்சமானதாக திரும்பியது. கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களையும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களையும் படுகொலை செய்தது. தனது கொள்கைகள் அடியோடு சரிந்து கொட்டியதை எதிர்கொண்ட ஸ்ராலின், பேரழிவில் போய் முடிந்த கன்டோன் கம்யூன் எனப் பேர்பெற்ற கையாலாகாத்தனமான சாகசத்துக்கு அங்கீகாரம் வழங்கினார். 1928ன் ஆரம்பத்தில் — ஓராண்டுக்கு முன்னர்தான் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அடியோடு இல்லாமல் போயிற்று.
இந்த தோல்வியின் வரலாற்று விளைவுகளை உண்மையில் புறக்கணித்துவிட முடியாது இதன் உடனடி பெறுபேறாக இடது எதிர்ப்பு இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு அரசியல் தோல்விக்கு சென்றதற்கு அப்பால் சீனப் புரட்சியின் தோல்வி 'வெறுமனே' 20 ஆண்டுகளால் தாமதப்படுத்தப்படவில்லை. 1949ல் ஆட்சிக்கு வந்த மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உடற்கூறும் சமூகச் சேர்க்கையும் 1927 தோல்வியின் விளைவு காரணமாக- மிகவும் ஆழமான விதத்தில் பரிணாமம் செய்யப்பட்டது. மார்க்சிச அர்த்தத்தில் அது முற்றிலும் ஒரு தொழிலாளர் கட்சியே அல்ல.
(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6   பகுதி-7    பகுதி-8  

 பகுதி-9

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-9)

லெனினுக்கு பின் மூன்றாம் அகிலம்
லெனினின் மரணத்தின் பின்னர் கம்யூனிச அகிலத்தின் தகவமைவு தீவிரமாக மாற்றம் கண்டது. 1926ல் ஸ்ராலின், புக்காரினின் ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற கோட்பாடு அரங்குக்கு வந்தமை சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தினை கைவிடவும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சொந்த சடத்துவ நலன்களுக்கு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினை கீழ்ப்படுத்தவும் சித்தாந்த அடிப்படையை வழங்கியது.
மார்க்சிசத்தின் இந்த அடிப்படை திருத்தலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியும் இடது எதிப்பும் நடாத்திய அரசியல் போராட்டத்தினையும் அல்லது இந்த தத்துவம் சோவியத் யூனியனுக்கும் உண்மையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் ஏற்படுத்திய துக்ககரமான விளைவுகளை விரிவாக ஆராய்வது இந்த விரிவுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நாம் தோழர் கீர்த்தியின் அரசியல் பயிற்சிக்கு அவற்றின் துன்பகரமான படிப்பினைகள் ஒரு அடிப்படையான பாத்திரத்தினை வகித்துள்ளதால் சுருக்கமாகவேனும் சீனச் சம்பவங்களை ஆராய்வோம்.
நடைமுறை அர்த்தத்தில் ஸ்ராலின், சியாங் கேய் சேக்குடனும் முதலாளித்துவ கோமின்டாங் உடனும் கொண்டிருந்த உறவுகள் —இதற்கு சீனத் தொழிலாள வர்க்கம் ஒரு பயங்கரமான விலைகொடுக்க நேரிட்டது— சந்தர்ப்பவாத ஈடுபாட்டில் இருந்தே பெருக்கெடுத்தன. இவை ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவத்தை விபரிக்கத் தூண்டின.
இத் தத்துவத்தின்படி சோவியத் யூனியனில் சோசலிச நிர்மாணம், முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவதில் தங்கியிருக்கவில்லை. மாறாக, சோவியத் யூனியனில் சோசலிசத்தினை அதன் சொந்த உள்ளார்ந்த வளங்களின் அடிப்படையில் யதார்த்தமாக்கிவிட முடியும். எவ்வாறெனினும் ஸ்ராலின் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை யதார்த்தமாக்குவதில் கம்யூனிச அகிலத்தின் முக்கியத்துவத்தினையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அதன் செல்வாக்கினையும் ஒரேயடியாக தட்டிக்கழித்து விடவில்லை. ஏகாதிபத்தியம் ஒரு இராணுவத் தாக்குதலில் ஈடுபடாதிருந்தால் சோவியத் யூனியனில் சோசலிசத்தினை நிர்மாணித்துவிட முடியும் என்பதே கிரெம்ளின் நிலைப்பாடாக விளங்கியது.
இந்த விதத்தில் கம்யூனிச அகிலம் ஒன்றில் முதலாளித்துவ ஆட்சியாளருடன் கூட்டுக்களை விருத்தி செய்வதன் மூலம் அல்லது தேசிய தொழிலாளர் இயக்கங்களின் ஊடாக நெருக்குவாரம் கொடுப்பதன் மூலம் சோவியத் யூனியன் தொடர்பாக முதலாளித்துவ அரசாங்கங்களை ஒரு சாதகமான மனோபாவத்தினை கடைப்பிடிக்க செய்வதன் மூலம் இந்த ஆபத்தினை தவிர்ப்பதில் பயனுள்ளதாக விளங்கமுடியும்.
இங்கிலாந்தில் அத்தகைய ஒரு கொள்கை 1925-26ல் ஆங்கிலோ- ரஷ்யன் கமிட்டியின் ஸ்தாபிதத்தின் ஊடாக அமுல் செய்யப்பட்டது. இக்கமிட்டி பிரித்தானிய பொது வேலைநிறுத்தத்தினை காட்டிக் கொடுத்தது.
சீனாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் கோமின்டாங்குடனும் அதன் தலைவர் சியாங் கேய் சேக்குடனும் உறவினை வளர்த்துக்கொள்ள முயன்றது. ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கின் அரசியல் நெறிமுறைக்கு அடிபணியுப்படி உத்தரவிட்டார். இது ''நான்கு வர்க்கங்களின் கூட்டு'' எனப்பட்டது. அவையாவன; தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவம், தேசிய முதலாளி வர்க்கம் என்பனவாகும்.
(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6   பகுதி-7    பகுதி-8

Thursday, 27 September 2018

அமெரிக்காவின் தொழில்துறை கொலைக்கூடம்

America’s industrial slaughterhouse

Jerry White
25 September 2018
Related image
2008 உலகளாவிய நிதியியல் பொறிவுக்குப் பிந்தைய தசாப்தத்தில் அமெரிக்காவின் வர்க்க உறவுகள் மீளக்கட்டமைக்கப்பட்டு வருவதன் விளைவுகளைக் குறித்து அரிதாகவே ஆய்வு செய்யப்பட்டவைகளில் ஒன்று, வேலையிடங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவதன் அதிகரிப்பாகும். பெருநிறுவன இலாபங்களின் அதிகரிப்பும் சாதனையளவுக்குப் பங்குச் சந்தை உயர்வும் தொழிலாளர்களின் நொருங்கிய எலும்புகளிலும் மற்றும் சடலங்களிலிருந்தும் அடையப்பட்டுள்ளன.
செப்டம்பரில் வெறும் இரண்டு நாட்களில் உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட மரணகதியிலான விபத்துக்கள், பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளின் கொடூரமான நிலையை வெளிச்சமிட்டு காட்டின.
  • செப்டம்பர் 12 இல், 47 வயதான தொழிலாளர் Luis Almonte நியூ யோர்க்கின் புரூக்ளினில் 20 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில் புதையுண்டு மரணமடைந்தார்.
  • அதே நாளில் பெயர் வெளியிடப்படாத ஒரு கனரக இயந்திர ஓட்டுனர் தீக்காயங்களால் இறந்து போனார், அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இண்டியானாவின் Dugger நகருக்கு அருகில் Peabody Energy நிறுவனத்தினது Bear Run நிலக்கரி சுரங்கத்தில் அவர் இருந்த வாகனத்தில் நெருப்பு பற்றிய போது அந்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
  • செப்டம்பர் 13 இல், 29 வயதான கட்டுமான தொழிலாளர் Marcus Dewayne Billingsley அலபாமாவின் பேர்மின்ங்காமில் ஒரு புதிய ஆடம்பர அடுக்குமாடி வீடு கட்டும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கீழே விழுந்து மரணமடைந்தார்.
  • செப்டம்பர் 13 அன்றே, 20 வயதான Tabor Daniel Hayes, ஜோர்ஜியாவின் ஹோலி ஸ்ப்ரிங்கிற்கு அருகே East Gate Pallet வேலைத்தலத்தில், மரம் அறுக்கும் கருவியில் அடிபட்ட தொழிலக விபத்தில் கொல்லப்பட்டார்.
  • அதே நாளில், 24 வயதான ஃபோர்ட் நிறுவன தொழிலாளர் ஒருவரின் உடல், இவரின் பெயர் இதுவரையில் வெளியிடப்படவில்லை, மிச்சிகன் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் இன் ஃபோர்டு ஸ்டெர்லிங் ஆக்செல் ஆலையின் குளியலறைக்குள் கண்டெடுக்கப்பட்டது. இறந்து போன அவர் இரண்டு வயது குழந்தைக்கு தந்தையாவார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியதாக அவரின் சக தொழிலாளர்கள் போலிஸிற்குத் தெரிவித்தனர். குளியலறைக்குள் செல்லும் போது அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தார்கள்.

இப்போதைய மிக சமீபத்திய அரசு புள்ளிவிபரங்களின்படி, 2016 இல் 5,190 தொழிலாளர்கள் வேலையிடத்தில் மரணமடைந்திருந்தார்கள், இது 2015 இன் 4,836 ஐ விட 7 சதவீதம் அதிகம். இதற்கு கூடுதலாக, இன்னும் 50,000 இல் இருந்து 60,000 தொழிலாளர்கள் நிலக்கரி தூசிகளைச் சுவாசித்ததால் ஏற்படும் நுரையீரல் மாசுபாடு (Black Lung), சிலிக்கான் சுவாசித்ததால் ஏற்படும் சிலிகோசிஸ் (silicosis), வேலையிட நச்சுக்களுக்கு உள்ளாவதால் ஏற்படும் பல்வேறு புற்றுநோய்கள் உள்ளடங்கலாக வாழ்க்கைதொழில் நோய்களால் இறந்து போகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 150 தொழிலாளர்களாவது தடுக்கக்கூடிய, மோசமான வேலையிட நிலைமைகளால் உயிரிழக்கிறார்கள்.
இதற்கு கூடுதலாக, 2016 இல் தொழில் வழங்குனர்களால் 2.9 மில்லியன் மரணம்விளைவிக்காத வேலையிட காயங்கள் மற்றும் பாதிப்புகள் அறிவிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, ஒட்டுமொத்த குறைமதிப்பீடு என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் தங்களின் காயங்களைத் தெரியப்படுத்தினால் நிர்வாகத்தால் பழிவாங்கப்படலாம் என்று பல தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர் என்பதுடன் பல நிறுவனங்கள் காயங்கள் மற்றும் பாதிப்புகளைக் குறித்து தெரியப்படுத்துவதே இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிஜமான கூலிகள் வீழ்ச்சி அடைந்து வந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளும். நீண்ட நேரம் வேலை பார்க்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகரித்த வேலைபளு மற்றும் அதிக உற்பத்தி இடைவிடாது கோரப்படுகிறது. UPS மற்றும் ஏனைய பண்டங்கள் வினியோகிக்கும் ஓட்டுனர்கள் எடுத்துச் செல்லும் கையடக்க கணினிகளில் இருந்து, அமேசன் தொழிலாளர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்ற கைப்பட்டைகள் வரையில், அலுவலக பணியாளர்கள் தட்டச்சு பலகையில் என்ன தட்டச்சு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் மென்பொருள் வரையில், பெருநிறுவனங்கள் வேலைகளை வேகப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து இன்னும் அதிக அதிகமாக உற்பத்தியைப் பிழிந்தெடுக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெருநிறுவனங்களுக்கு இலாபங்கள் சம்பாதித்துக் கொடுத்த பிறகும் கூட, காயப்பட்ட தொழிலாளர்கள் பட்டினியில் கிடக்கவோ அல்லது வீடற்று கிடக்கவோ விடப்படுகிறார்கள். உலக சோசலிச வலைத் தளத்தில் பரவலாக பார்க்கப்பட்ட ஒரு காணொளியில், டெக்சாஸின் டல்லாஸ்-ஃபோர்ட் வோர்த் பகுதி அமேசன் தொழிலாளி அஞ்சலா ஷெல்ட்டன் வேலையின் போது அவர் மணிக்கட்டில் காயப்பட்டு வேலை செய்யவியலாது பாதிக்கப்பட்டதும் அந்த மிகப்பெரிய பண்டங்கள் வினியோக நிறுவனம் அவருக்கு எவ்வாறு வரிக்குப் பிந்தைய உதவித்தொகையாக வாரத்திற்கு வெறும் 7.14 டாலர் வழங்குகிறது என்பதை விவரிக்கிறார். டெக்சாஸின் ஹாஸ்லெட் அமசன் ஆலையில் பணியாற்றும் மற்றொரு அமசன் தொழிலாளர் காயங்களுக்குப் பின்னர் அவர் தனது காரில் வாழ நிர்பந்திக்கப்பட்டார்.
2016 இன் 5,190 உயிரிழப்புகளில், 970 —அல்லது ஐந்தில் ஒரு பங்கு—கட்டுமான தொழில்துறையில் நடந்திருந்தன. ஒவ்வொரு மாதமும், 80 கட்டுமான தொழிலாளர்கள் வேலையிட விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் கீழே விழுவதால் ஏற்படுகின்றன.
“அவர்கள் எங்களைக் கழுதைகளைப் போல கையாள்கிறார்கள்; அவர்கள் உங்களைக் கசக்கிப் பிழிந்து, தூக்கி எறிந்துவிடுவார்கள்,” என்று டென்னஸ்ஸியின் நாஸ்வெல் நிலைமைகளை விவரித்து கார்டியனுக்குக் கட்டுமான தொழிலாளர் எர்னெஸ்டோ ரிவேரா தெரிவித்தார், அங்கே 2016-2017 இல் 16 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதையும் அதன் கொடூரத்தையும் கொண்டு பார்த்தால், பிரதான ஊடகங்களுக்கும் மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசியல் கட்சிகள் இரண்டுக்கும் இவை குறித்து சுத்தமாக ஆர்வமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1980 களுக்குப் பின்னர் இருந்து, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினராலும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் இரண்டுமே மோசமாக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அமைப்பின் (OSHA) ஆய்வாளர்களது எண்ணிக்கை அம்முகமையின் வரலாற்றில் அதன் குறைந்தபட்ச மட்டத்திற்கு குறைந்துள்ளதுடன், இப்போது அது 1980 இல் ரோனால்ட் ரீகன் ஜனாதிபதி ஆன போது இருந்ததைக் காட்டிலும் குறைவாக உள்ளது, அப்போது அமெரிக்க பொருளாதாரம் அதன் இப்போதைய அளவை விட பாதியாக இருந்தது. தற்போது 1,821 மத்திய மற்றும் மாநில ஆய்வாளர்கள் 9 மில்லியன் வேலையிடங்கள் மற்றும் 130 மில்லியன் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாக உள்ளனர். அதன் அதிகார எல்லையின் கீழ் ஒவ்வொரு வேலையிடத்தையும் ஒரேயொரு முறை ஆய்வு செய்வதற்கே, அந்த மத்திய ஆணையத்திற்கு சராசரியாக 158 ஆண்டுகள் ஆகும்.
ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகளின் போது, அந்த நிர்வாகம் முன்பினும் அதிகமாக உற்பத்தி அதிகரிப்புகளைத் திணிக்க பிரதானமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சார்ந்திருந்த நிலையில், வேலையிட பாதிப்புகள் ஒரே சீராக அதிகரித்தன.
ட்ரம்ப் நிர்வாகம் அதன் உள்நாட்டு பொருளாதார கொள்கையின் மையத்தில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கான நெறிமுறைகளைத் தளர்த்தி உள்ளது. சுரங்க பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக ஆணையத்தில் (MSHA) நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் எஜமானர் David Zatezaloto ஐ நியமித்திருப்பது உட்பட, நெறிமுறை ஆணையங்களின் தலைவர் பதவிகளில் முன்னாள் பெருநிறுவன நிர்வாகிகளை நியமித்துள்ளது. Zatezaloto இன் நிறுவனமான Rhino Resources, குறைந்தபட்சம் ஒரு மேற்கு வேர்ஜினிய சுரங்க தொழிலாளரின் உயிரிழப்பிற்கு காரணமாகும் விதத்தில் பாதுகாப்பு விதிகளை மீறியிருந்ததாக, இப்போது அவர் தலைமையில் இருக்கும் MSHA ஆணையத்தாலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலையிட உயிரிழப்புகள் மற்றும் காயப்படுதலின் அதிகரிப்புக்கும் தொழிற்சங்கங்கள் நேரடியாக பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் கருவியாக மாறியிருப்பதற்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. இந்த அமைப்புகள், பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளது தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர்கள் எதிர்ப்பைத் திட்டமிட்டு ஒடுக்கி வந்துள்ளன. 1947 இல் அரசு மிகப்பெரும் வேலை நிறுத்தங்களைப் பதிவு செய்து வைக்க தொடங்கியதற்குப் பிந்தைய மிகக் குறைந்த வேலைநிறுத்த மட்டங்களுக்கு கடந்த தசாப்தத்தில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களைக் குறைத்துவிட்டுள்ளன.
தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ-சார்பு தலைமைக்கு மத்தியிலும், அவை, ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் நூற்பாலை தொழிலாளர்களின் மிகவும் உடனடி நலன்களுக்கு ஆதாயமாக சில குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்து வந்த காலமும் இருந்தது. தொழிலாளர்கள் வேலை விதிமுறை மீறல்கள் மற்றும் உற்பத்தி வரிசையின் வேகப்படுத்தல் குறித்து அவர்களின் ஆலை தொழிலாளர் குழு பிரதிநிதியிடம் குறை கூற முடிந்தது. அவர்கள் தங்களின் மனக்குறைகளை அவர்களின் குழு தலைவரிடம் பதிவு செய்ய முடிந்தது, அதன் விளைவாக அவை நிவர்த்தி செய்யப்படலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். உடல்நல மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர் தொழிற்சங்கம் வேலைநிறுத்ததிற்குக் கூட அழைப்புவிட்டிருந்தது.
தொழிற்சங்கங்கள் இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளையும் நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டு விட்டன. இதற்காக சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் பியட் கிறைஸ்லர் தொழிலாளர் எரிக் பார்சன்ஸ் க்கு சமீபத்தில் ஏற்பட்ட வாழ்வை-மாற்றியமைத்த காயமாகும், இவர் செப்டம்பர் 4 இல் இண்டியானாவின் கொகொமொ உருக்கு ஆலையில் அச்சுவார்ப்பு எந்திரத்தில் மாட்டிக் கொண்டார், இதில் அவரின் இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் கடுமையான காயங்களும் அத்துடன் உடலுக்குள் இரத்த கசிவுகளும் ஏற்பட்டன.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் சங்கம் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்புவிடுக்கவில்லை என்பதை விட்டுவிட்டாலும் கூட, இந்த விபத்து குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிட கூட அக்கறை காட்டவில்லை. இது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 200 தீர்க்கப்படாத சுகாதார மற்றும் பாதுகாப்பு குறைப்பாடுகள் மீது கொகொமொ தொழிலாளர்கள் பெருவாரியாக வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்தை அந்த தொழிற்சங்கம் புறக்கணித்திருந்த நிலைமைகளின் கீழ் நிகழ்ந்தது.
வேலை வேகப்படுத்தல், பலவந்தமான மிகைநேர வேலை, பாதுகாப்பு விதிமீறல்கள், பழுதடைந்த உபகரணங்கள், நச்சார்ந்த இரசாயனங்கள் மற்றும் பாலியல் அவமானப்படுத்தல் உட்பட நிறுவனங்களது அன்றாட துஷ்பிரயோகங்களுக்கு எதிராக போராட, தொழிலாளர்களுக்கு புதிய அமைப்புகள் அவசியப்படுகின்றன. தொழிலாளர்கள் ஆலைகளில் சாமானிய குழுக்களைத் தேர்ந்தெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது, இது தான் தொழிலாளர்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் என்பதோடு, அவர்களின் நலன்கள் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்கள் மற்றும் தனியுரிமைகளுக்கு அடிபணிய செய்யப்பட வேண்டுமென்ற வாதத்தை இது ஏற்காது.
இத்தகைய குழுக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பைக் கண்காணித்து, வேலை வேகப்படுத்தல் மற்றும் மிகை சுமையேறிய வேலைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரட்டும் என்பதோடு, நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலையை அமலாக்கும். பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க ஏவலாளிகள் நடைமுறைப்படுத்தும் பணியிட சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்பில், ஆலை குழுக்கள் சாமானிய தொழிலாளர்களின் விருப்பத்தை வலியுறுத்தும் என்பதோடு, உற்பத்தியைத் தொழிலாளர்களே கட்டுப்படுத்துவது உட்பட தொழில்துறை ஜனநாயகத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.
வேலையிட பாதுகாப்பு அழிக்கப்படுவது ஓர் உலகளாவிய பிரச்சினையாகும். இம்மாத தொடக்கத்தில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு விமான நிலைய கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேன் தங்களின் 17 சக தொழிலாளர்களைக் காயப்படுத்திய விபத்தை அடுத்து, வேலையை நிறுத்தினர். தொழிலாளர்களால் அதுவொரு "கல்லறை" என்று குறிப்பிடப்பட்ட அந்த வேலையிடத்தில் நடந்துள்ள பல தொழில்துறை விபத்துக்களில் அந்த வேன் மோதல் சமீபத்தியதாகும்.
ஒவ்வொரு நிலையிலும், கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகளுக்கான உரிமையானது உலகளாவிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களுடன் மோதுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர்களோ முதலாளித்துவ கூலி அடிமைமுறையால் கொடூரமான வேலையிட நிலைமைகளுக்குள் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பகுத்தறிவார்ந்த மற்றும் மனிதாபிமான உற்பத்தி முறையை ஸ்தாபிக்க உற்பத்தி கருவிகளின் தனியுடைமை மீதான ஒரு தாக்குதல் அவசியப்படுகிறது. பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்வதும், அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதும் அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பலமான சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே அதுபோன்றவொரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-8)

நிரந்தரப் புரட்சியும் கம்யூனிச அகிலமும்
அக்டோபர் புரட்சியைப்போல் உலக மக்களின் நனவில் பிரமாண்டமான அதிர்ச்சி மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய வேறு சம்பவம் வரலாற்றில் கிடையாது. உலகின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கினையும் இருபதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களையும் தேசிய இனங்களையும் கொண்ட ஒரு பரந்த நிலப்பரப்பில் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியமையானது ஒன்றில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு வகையான திரைமறைவில் ஏகாதிபத்திய சக்திகளால் ஆளப்பட்ட உலகின் பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த வெகுஜன இயக்கத்துக்கு ஒரு பிரமாண்டமான உத்வேகத்தை வழங்கியது.
அக்டோபர் புரட்சி அறநெறி ஊக்கத்தினை மட்டுமன்றி- ஆபிரிக்கா, மத்திய கிழக்கு சிறப்பாக ஆசியா —அங்கு ஏகாதிபத்திய ஆளுமைக்கு எதிரான ஒரு இராட்சத வடிவம் எடுக்கத் தொடங்கியிருந்தது போன்ற— பின்தங்கிய நாடுகளின் வெகுஜனங்களுக்கு ஆழமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினையையும் வழங்கியது. என்ன விதிமுறைகள் ஊடாக, என்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காலனித்துவ நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவர்? என்ற தீர்க்கமான கேள்விகளுக்கு அக்டோபர் புரட்சி நடைமுறைப் பதில்களை வழங்கியிருந்தது. ரஷ்யாவை போன்று ஆசியாவின் பின்தங்கிய நாடுகளில் மிகவும் முக்கியமானவை பற்றி பேசுமிடத்து சீன- இந்திய வெகுஜனங்கள் எதிர்கொண்ட பணிகள் முக்கியமாக ஒரு ஜனநாயக பண்பை கொண்டிருந்தன; காலனித்துவ அடக்குமுறையில் இருந்து விடுதலை, தேசிய இணைப்பு, விவசாயிகளின் மீதான நிலமானித்துவ உறவுகளின் அடிமைத் தளையை அகற்றுதல். ஒரு வழக்காறான அரசியல் வரைவிலக்கணத்தின் நிலைப்பாட்டின்படி சீனாவும், இந்தியாவும் எதிர்நோக்கும் பணிகள் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டுகளில் மாபெரும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளினால் ''தீர்க்கப்பட்ட'' வையாக விளங்கின. ஆனால் மென்ஷிவிசத்தின் அரசியல் தர்க்கத்தின்படி இந்தியாவிலும் சீனாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் தலைமை தேசிய முதலாளி வர்க்கத்துக்கு உரியதோடு அதன் இலக்குகள் ஒரு சுதந்திர முதலாளித்துவ குடியரசு வடிவிலேயே அடையப்பட முடியும்.
ஆனால் ரஷ்யாவில் மென்ஷிவிசம் தவறானதென நிரூபித்த அதே வரலாற்று முரண்பாடுகள்தான் இந்தியாவிலும் சீனாவிலும் நிலவின. தேசிய இயக்கத்தின் முதலாளித்துவ தலைமைகள் துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் ஒரு தொழிலாளர் இயக்கத்தினை எதிர்நோக்கியது. அதன் சமூகப் போராட்டங்கள் முதலாளித்துவ தலைமையின் முக்கிய பொருளாதார நலன்களை அச்சுறுத்தியது. மேலும் முதலாளி வர்க்கத்தின் தலைமையில் (முதலாளி வர்க்கம் ஒரு புரட்சிகர தலைமையை வழங்க இலாயக்கானது என்பதை ஏற்றுக்கொள்ள ஒருவர் தயாராக இருப்பினும்) ஒரு தேசிய புரட்சியின் அடிப்படையில் இந்த ஒடுக்கப்படும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது முடியாத காரியமாக இருந்தது. ஆதலால் நிரந்தரப் புரட்சி தத்துவம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்துக்கு விளங்கியதை காட்டிலும் எழுச்சி கண்டுவரும் ஆசிய தொழிலாள வர்க்கத்துக்கு பெரிதும் பொருத்தமானதாக விளங்கியது.
1919-1922க்கும் இடையிலான கம்யூனிச அகிலத்தின் பத்திரங்கள் காலனித்துவ பிரச்சினை பற்றியதாய் விளங்கின. குறிப்பாக இரண்டாம், நான்காம் அகல்பேரவைகள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே விவரிக்கப்பட்டன. பின்தங்கிய நாடுகளின் வேறுபட்ட பொருளாதார, தொழிற்துறை அபிவிருத்தியின் அளவுகளையும், தொழிலாள வர்க்கத்தின் தொடர்ந்து வரும் பலத்தினையும் கணக்கில் எடுத்த அதே வேளையில் கம்யூனிச அகிலத்தின் இந்தப் பிரேரணை தொழிலாளர் இயக்கம் கருவடிவில் இருந்தாலும் கூட தேசிய முதலாளி வர்க்கத்தின் கட்சிகள், அமைப்புக்களில் இருந்து அரசியல் சுயாதீனமாக இருப்பதை வலியுறுத்தியது.
(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6   பகுதி-7

Wednesday, 26 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-7)

லக நிலைமைகளால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த ஏகாதிபத்திய பொருளாதாரங்களின் மீது சார்ந்த ஒரு அரைக்காலனித்துவ நிலைமைக்கு தள்ளப்பட்ட ரஷ்ய முதலாளி வர்க்கம் கடந்த காலத்தில் ஜனநாயக புரட்சிகளுடன் தொடர்புபட்டிருந்த எந்தவொரு வரலாற்று பணியினையும் தீர்த்துவைக்க இலாயக்கற்றது என்பதே ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடாக விளங்கியது.
ஜனநாயக புரட்சிக்கு தலைமை தாங்கவும், பூரணப்படுத்தவும் ரஷ்ய முதலாளி வர்க்கத்தினால் முடியாது போனமை, ட்ரொட்ஸ்கி விளக்கியது போன்று ஒரு உலக வரலாற்றுத் தோற்றப்பாட்டின் வெளிப்பாடாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய அடிப்படையில் மனித இனத்தின் எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்துவைக்க இயலாது போனமை, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் தேசிய அரசுக்கே சாவுமணி அடித்தது. உலகப் பொருளாதார சக்திகள், முதலாளித்துவம் வேரூன்றியிருந்த தேசிய அரச அமைப்பின் அரசியல் கட்டுமானத்தையும் தாண்டி வளர்ச்சி கண்டன.
ஒரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கத்துக்கு நிலமானித்துவத்தின் அதிகாரத்துவத்தினை துடைத்துக்கட்டும் அரசியல் போராட்டத்தின் தாக்கமானது இடைவிடாது ஆட்சியை கைப்பற்றுவதையும் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தினையும் நோக்கி இட்டுச் சென்றது. எவ்வாறெனினும் அது தனது சர்வாதிகாரத்தினை ஸ்தாபிதம் செய்ததும் ரஷ்ய தொழிலாள வர்க்கமோ அல்லது எந்தவொரு பின்தங்கிய நாட்டின் தொழிலாள வர்க்கமோ ஒரு புறத்தில் தேசிய பொருளாதாரத்தின் நிலையான வரையரைகளுக்கும் மறுபுறத்தில் சர்வதேச முதலாளி வர்க்கத்தின் மிலேச்சத்தனமான எதிர்ப்புக்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
ரஷ்ய ஆட்சி நீடிப்பு
ஆதலால் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும் இறுதியில் சோசலிசத்தினை நோக்கிய முன்னேற்றமும் முன்னேறிய நாடுகளின் தொழிலாள வர்க்கத்தின் அனுதாபத்தில் மட்டுமன்றி, இறுதி ஆய்வுகளில் அவற்றின் சொந்த தேசிய முதலாளி வர்க்கத்தினை வெற்றி கொள்வதிலும் தங்கியுள்ளது. 1907க்கு முன்னரே ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதுபோல், ''ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் நேரடி அரச ஆதரவு இல்லாமல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் ஆட்சியில் நீடிக்க முடியாதது மட்டுமன்றி அதன் தற்காலிக சர்வாதிகாரத்தினை ஒரு சோசலிச சர்வாதிகாரமாக மாற்றவும் முடியாது.''
முதலாம் உலகயுத்தத்தின் வெடிப்பு, தேசிய காரணிகளுக்கு மேலாக சர்வதேச நிலைமையின் முக்கியத்துவத்தினை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதை நிரூபித்தது. ஏகாதிபத்திய யுத்தம்- சாராம்சத்தில் காலவதியான தேசிய அரசுடன் உலக முதலாளித்துவ உற்பத்தி சக்திகளை சமாதான ரீதியில் இணக்கமுறச் செய்ய முடியாமையை சுட்டிக்காட்டியது. முன்னேறிய, பின்தங்கிய நாடுகள் இரண்டிலும் தொழிலாள வர்க்கம் ஒரு பொது முட்டுக்கட்டை நிலைக்கு முகம்கொடுத்தது. மனித சமுதாயத்தின் சகல அடிப்படைப் பிரச்சனைகளுக்குமான தீர்வினை, உலகப் பொருளாதார அபிவிருத்தியின் மட்டத்திலும் சர்வதேச புரட்சிகர போராட்டங்களின் ஊடாகவும் மட்டுமே காணமுடியும்.
இந்த விஞ்ஞான கருத்துப்பாடு சகல அரசியல் பிரச்சனைகளதும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டின் அடிப்படையாக உள்ளது. லெனினைப் போன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவர் அங்கீகரித்த அதேவேளையில், இந்த ஜனநாயக வேலைத்திட்டத்தின் இம் மூலகத்துக்கான ட்ரொட்ஸ்கியின் ஆதரவு ஆழமான விமர்சன பண்பினை கொண்டிருந்தது. ஒரு பெரிய அரசுடன் சிறிய தேசியங்களை பலாத்காரமாக ஒன்றிணைப்பதை அவர் வன்மையாக எதிர்த்தபோதிலும் ட்ரொட்ஸ்கி- 1915ல் எழுதியது போன்று — சமூகஜனநாயகம், ''வரலாற்றுக்கு மேலாக நின்று தேசியக் கொள்கையை ஏதோ ஒரு வகையான முழுமுதல் கருத்தாக மாற்றிவிடாது'' என வலியுறுத்தினார்.
''தேசியமும் பொருளாதாரமும் அரசுடனும் ஒன்றுடன் மற்றொன்றும் முரண்பட்டுக் கொண்டுள்ளன. அரசு, பொருளாதாரத்துக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. இதை விரிவுபடுத்த முயல்வது தேசியத்தினை நசுக்குகின்றது. ''நிலத்தின் மேற்பரப்பில் பொருளாதாரம் அதன் சக்திகளின் இயற்கையான இயக்கத்தினையும் வளங்களையும் தேசிய இனக்குழுக்களின் பங்கீட்டுக்கு கீழ்ப்படுத்த மறுக்கின்றது.''

(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5   பகுதி-6

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-6)

மிகவும் தீவிரமானதும் உள்ளார்ந்த ரீதியில் பெரிதும் உறுதியானதுமான மூன்றாவது கருத்துப்பாடு ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்டது. உலக வரலாற்றுக் கருத்துப்பாட்டின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி ரஷ்ய முதலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு (காலாவதியான முதலாளித்துவ அபிவிருத்தியைக் கொண்ட அனைத்து நாடுகளையும் போலவே) 1789ம் ஆண்டின் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது என வாதிட்டார். அது இனியும் தனது சொந்த 'முதலாளித்துவ' புரட்சியை செய்யும் நிலையில் இருக்கவில்லை. 1848ன் நிகழ்வுகள், ஜனநாயகப் புரட்சியின் பணி தொடர்பான முதலாளி வர்க்கத்தின் மனோபாவம், எல்லாவற்றிற்கும் மேலாக அது வாழ்ந்த சமுதாயத்தின் வர்க்க சக்தியால் நிர்ணயம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக்காட்டின. தொழிலாள வர்க்கத்தின் பெருக்கம், முதலாளி வர்க்கத்துக்கு ஜார் எதேச்சாதிகாரத்தினை காட்டிலும் பெரும் ஆபத்தை தோற்றுவித்தது. மேலும் விவசாயிகள் சுயாதீனமான அரசியல் பாத்திரத்தினை வகிக்க இலாயக்கற்றவர்களாக விளங்கினர். அதன் அரசியல் பாத்திரம் எவ்வளவுதான் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தபோதிலும் அதனால் இன்னொரு வர்க்கத்தின் முன்னோக்கின் மீது மட்டுமே செயல்பட முடியும். ஆதலால் ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கமான பாத்திரத்தினை தொழிலாள வர்க்கமே வகிக்கவேண்டியதாக இருந்தது. அத்தோடு அதனை தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவில் மட்டுமே சாதிக்கவும் முடியும். மேலும் தொழிலாள வர்க்கம் தன்னை வெறும் ஜனநாயகப் பணியுடன் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போயிற்று. அது முதலாளித்துவ சொத்தினுள் ஊடுருவ கட்டாயப்படுத்தப்படுமாதலால் ஜனநாயகப் புரட்சி மேலும் மேலும் அப்பட்டமான சோசலிச தன்மையை பெற்றுக்கொள்ளும்.
ரஷ்யாவில் தொழிலாள வர்க்க புரட்சி, உலகம் பூராவும் வெடிப்புமிகுந்த அதிர்வினை உருவாக்கும்; ரஷ்யாவில் தொழிலாள வர்க்க ஆட்சியின் உயிர் நீடிப்பும், ஒரு பின்தங்கிய சமுதாயத்தில் சோசலிச நிர்மாணத்தின் சாத்தியமும் புரட்சியை அதன் எல்லைகளுக்கு அப்பால் விஸ்தரிப்பதிலேயே தங்கியுள்ளதாக ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.
உலக சோசலிசப் புரட்சியுடனான ரஷ்ய புரட்சியின் உறவானது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் இன்றியமையாத அத்திவாரத்தினை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. அவரின் சமகாலத்தவர்கள் எவருக்கும் —லெனின் இதற்கு அப்பாற்பட்டவர் அல்ல— ஈடிணையற்ற விதத்தில் உறுதியோடும் தீர்க்க தரிசனத்தோடும் இறுதி ஆய்வுகளில் ரஷ்ய புரட்சியின் பண்பு தேசிய நிலைமைகளால் அன்றி சர்வதேச நிலைமைகளால் நிர்ணயம் செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோசலிச பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இறங்குவதற்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பெரிதும் பின்தங்கியது எனத் தொடர்ந்து வாதிட்ட மென்ஷிவிக் மேதாவிகளுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, ரஷ்ய பொருளாதார சக்தியை அதன் அபிவிருத்தியின் தேசிய மட்டத்தில் இருந்தும் அது கொண்டுள்ள தேசிய வளங்களில் இருந்து மட்டும் ஒழுங்குமுறையாக மதிப்பீடு செய்துவிட முடியாது என்றார். ரஷ்ய அபிவிருத்தியின் நிஜ சக்தியை அது உண்மையில் நிலைகொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தினதும் சர்வதேச அரசியல் உறவுகளினதும் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கும் என்றார்.

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4   பகுதி-5

Tuesday, 25 September 2018

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-5)

ஷ்ய மார்க்சிசத்தின் தந்தையான ஜோர்ஜி வீ. பிளெக்ஹானோவ், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மாபெரும் ஜனநாயகப் புரட்சிகளின் அடிப்படையில், அவை மேற்கு ஐரோப்பாவில் மற்றும் வட அமெரிக்காவில் உருவாக்கிய முன்னோடி முன்மாதிரிகள் போல ரஷ்ய புரட்சியும் ஒரு ஜனநாயகக் குடியரசையேயன்றி அதிலும் அதிகமாக எதையும் உருவாக்க முயல முடியாது என்ற நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து வகித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முக்கியமாக 1789 - 1794ம் ஆண்டுகளினது பிரெஞ்சுப் புரட்சியின் பெறுபேறுகளை ஒத்த விளைபயன்களை ரஷ்யப் புரட்சி உருவாக்கும் என்று அவர் காரணம் கூறி வாதிட்டார். சர்வாதிகாரத்தை, ரஷ்ய புரட்சி தூக்கி வீசும் பொழுது, அது அரசியல் அதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்குச் சேர்க்கும். அதையடுத்து முதலாளித்துவ ஆட்சியின் ஏறத்தாழ நீண்டதாக உள்ள காலப்பகுதி ஒன்று பின்தொடரும். அக்காலப்பகுதியினுள் தொழிலாள வர்க்கமானது எதிர்காலத்தில் சோசலிசத்தை கைகூடச் செய்ய ஒரு தாராண்மை தன்மையிலான ஜனநாயகக் கட்டமைப்பினுள் அது அரசியல் போராட்டத்தில் கல்வியூட்டப்படும். அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையில் பார்க்குமிடத்து, பிளெக்ஹானோவின் போக்குவழியின் (Line) பொருள், தொழிலாள வர்க்கத்தின் கட்சி எதிர்வரும் புரட்சிக்கு தலைமை கொடுக்க முயல முடியாது என்பதாகும். மாறாக அது, புரட்சியின் தலைமைப் பாத்திரத்தை முதலாளித்தவ வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்துக்கான அவர்களது உரிமை கொண்டாடலை ஏற்றுக் கொள்வதோடு, ரஷ்ய சமூக ஜனநாயகமானது முதலாளித்துவ கட்சிகளின் விசுவாசமான நண்பனாகச் செயற்பட வேண்டும்.
இங்குதான் ஒரு காலத்தில் பிளெக்ஹானோவின் விசுவாசமான மாணவனாக விளங்கிய லெனின் தனது குருவிடமிருந்து பிரிந்தார். லெனின், ரஷ்ய புரட்சியானது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்ற வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் வர்க்க இயக்கவியல் (Dynamics) பற்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்துருவை முன்வைத்தார். பிளெக்ஹானோவ் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மேலாண்மையை ஆராயாமலே முன்கூட்டியே ஏற்றுக் கொண்டார். ஆனால் லெனின் இந்த வர்க்கமானது ரஷ்யாவை நிலமானித்துவத்தின் அரசியல் மற்றும் சமூக மிச்ச மீதங்கள் அனைத்தையும் துடைத்துக்கட்ட அவசியப்படும் போராட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்ல இயலாதது, ஏனென்றால் அது அளவுக்கு அதிகமாக பழமையை பாதுகாக்கும், மிக அதிகமாக சமரசம் செய்ய நாட்டம் கொண்டதாக மற்றும் பரந்த மக்களைக் கண்டு அளவுக்கு மிஞ்சி அச்சம் கொண்டுள்ளதாக உள்ளது என்று வாதிட்டார். பிளெக்ஹானோவ் தொழிலாள வர்க்கத்துக்கும் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இதற்கு எதிராக லெனின் பாட்டாளி வர்க்கத்திற்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான கூட்டை முன்வைத்தார். இக்கூட்டின் இலக்கு இவ்விரு வர்க்கங்களினதும் தலைமையின் கீழ் ஒரு "ஜனநாயக சர்வாதிகாரத்தை" அடைவது என்று லெனின் வாதிட்டார்.
லெனினின் சூத்திரம் நிச்சயமாகப் பிளெக்ஹானோவின் சூத்திரத்திலும் பார்க்க அதிகம் தீவிரமானது. மற்றும் அதன் தந்திர உபாயத்தின் போக்குவழி முற்று முழுதாக வேறுபட்டதாக விளங்கியது. பிளெக்ஹானோவ், ஜனநாயகப் புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையை வலியுறுத்தினார். அவர் தொழிலாள வர்க்கம் தாராண்மை முதலாளித்துவ வர்க்கத்துடனான அதன் அரசியல் கூட்டின் நலனுக்காக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பிற்போக்கு முகாமினுள் தள்ளிவிடக் கூடிய எந்த அதிதீவிர நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார். லெனின், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கக் கட்சிகளின் மற்றும் அவற்றின் தவிர்க்கமுடியா ஈடாட்டங்களில் இருந்தும் முற்று முழுதாக சுயாதீனமாக தனது போராட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கம் விவசாயிகளின் அதி தீவிரமான பகுதிகளுடன் கூட்டமைத்து, விவசாயத்தின் பண்டை உறவுகளின் கவிழ்ப்பை எல்லை வரம்புவரை தள்ளுவதோடு, பழைய ஜாரிச அரச இயந்திரத்துடனான கணக்கை தயவு தாட்சணியம் இன்றி முடித்துக் கட்டுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.
இருந்தபொழுதும், லெனனின் அரசியல் முன்னோக்கில் பொருத்தமின்மை ஒன்று இருந்தது. தொழிலாள வர்க்கத்துக்கு எந்ந ஒரு சுயாதீனமான பங்கை மறுத்த பிளெக்ஹானோவின் ஒத்துப் போகும் போக்குவழியில் இருந்து அது துல்லியமாக விலகிச் சென்ற பொழுதும், லெனினின் முன்னோக்கு, முதலாளித்துவ சொத்துடமையினுள் புரட்சி ஊடுருவிச் செல்வதை முன்காணவில்லை. அதோடு இரு வர்க்கங்களின் "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற கருத்துரு, உள்ளியல்பாகவே துல்லியமற்றதாக இருந்தது.

பகுதி-1     பகுதி-2   பகுதி-3    பகுதி-4

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-4)

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மூலம்
மறுபுறம், லெனின், ட்ரொட்ஸ்கி, லுக்செம்பேர்க் ஆகியோர் கற்பித்த புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் பள்ளியின் தலைசிறந்த பிரதிநிதிகளில் ஒருவராக கீர்த்தி நினைவுகூரப்படுவார். அவர் போராடி வெற்றி கொள்ள முயன்ற பிரச்சினைகள் ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சிகர மூலோபாயத்தின் மிகவும் அத்தியாவசியமான பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
கீர்த்தியின் வாழ்வின் தனிச் சிறப்பை மற்றும் அவர் போராடிய மூலக் கோட்பாடுகள் மற்றும் முன்னோக்குகள் என்பன இன்றைய காலப்பகுதியில் கொண்டுள்ள தீர்க்கமான முக்கியத்துவத்தை சரியாக மதிப்பீடு செய்ய, அவரின் சொந்த அரசியல் அபிவிருத்தி வேரூன்றியிருந்த இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் போராட்டங்களை மீளாய்வு செய்தல் அவசியமாகும். எனவே ரஷ்ய மார்க்சிஸ்டுகள் தாம் தயார் செய்துகொண்டிருந்த புரட்சி பற்றிய பல்வேறு கருத்துருக்களை விவாதித்துக்கொண்டிருந்த ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு, இந்நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்கு நாம் பின் செல்லவேண்டும்.
ரஷ்யா இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்றைய முக்கிய முதலாளித்துவ வல்லரசுகளுள் அதி குறைந்த அபிவிருத்தியை அடைந்ததாக இருந்தது. அதன் அமைப்பு, பிற்போக்கு மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிய மன்னரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அதன் அரசியல் அமைப்பு ஒரு அரைநிலமானித்துவ பண்பினைக் கொண்டிருந்தது. மக்கட்தொகையில் மிகப் பெருப்பான்மையினர் விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் வறுமையின் படுபாதாளத்தில் மற்றும் அறியாமையிலும் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்திலேயே புதிய மற்றும் துரித தொழிற்துறை வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு கணிசமான அளவு தொழிலாள வர்க்கம் அங்கு தோன்றியிருந்தது. ஆனால் ரஷ்ய மக்கட்த்தொகையில் அதன் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறிப்பிட்டளவு சிறியதாக மற்றும் ஒரு சில நகர மையங்களில் செறிந்தும் இருந்தது.
இந்நூற்றாண்டின் திருப்பத்தில் எதிர்வரும் புரட்சியின் முக்கிய பணி, ஒரு ஜனநாயக பண்பைக் கொண்டிருக்கும் என்று ரஷ்யாவில் உள்ள மார்க்சிஸ்டுக்கள் உடன்பட்டிருந்தனர். அதாவது அது அரைநிலமானித்துவ அரச அமைப்பை அடித்துச் செல்வதோடு நாட்டுப்புறத்தில் நிலமானித்துவ உறவுகளின் மிச்சமீதங்களாக எஞ்சியிருப்பவை அனைத்தையும் அழித்துவிடும் என்று உடன்பட்டிருந்தனர். ரஷ்ய பிரபுத்துவத்தின் பெரும் நிலச் சொத்துடமைகள் உடைக்கப்பட்டு, நிலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
அதன் வரலாற்றுப் பணியின் நோக்கு நிலையில் இருந்து ஆய்வு செய்யப்படுமிடத்து, ரஷ்ய மார்க்சிஸ்டுக்களால் எதிர்பார்க்கப்பட்ட புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று வரைவிலக்கணம் செய்யப்பட்டது. இருந்தபொழுதும் ஜனநாயகப் புரட்சியை அடைவதில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான அரசியல் உறவு சம்பந்தமாக மற்றும் எந்த அரசியல் மற்றும் அரச வடிவங்களினூடு ஜனநாயகப் புரட்சி அடையப்படும் என்பது பற்றிக் கருத்துவேறுபாடுகள் தோன்றின.

பகுதி-1     பகுதி-2   பகுதி-3

Monday, 24 September 2018

இந்தியா பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இரத்துசெய்வதோடு இராணுவ நடவடிக்கைக்கு மிரட்டுகிறது

India cancels talks with Pakistan, threatens military action

By Keith Jones
24 September 2018
னிக்கிழமையன்று இந்திய இராணுவப் படை தளபதியான பிபின் ராவத், இந்த வாரத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் சமயத்தில் இருநாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பதற்கு பாகிஸ்தான் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு விட்டு பின் இந்திய அரசாங்கம் திடீரென்று செய்த தலைகீழ் மாற்றத்தை பாராட்டிய அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராய் இராணுவ நடவடிக்கைக்கும் மிரட்டல் விடுத்தார்.
“நமது அரசாங்கத்தின் கொள்கை நன்கு தெளிவாகவும் இரத்தினச்சுருக்கமாகவும் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தளபதி ராவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒருசேர நடக்க முடியாது என்ற உண்மையை நாம் ஒளிவுமறைவற்று வெளிப்படுத்தியிருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.”
நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியால் தலைமை கொடுக்கப்படும் இந்திய அரசாங்கம், பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட பிரதமரான இம்ரான் கான் பேச்சுவார்த்தைகளுக்கு வழங்கிய ஆலோசனையை வியாழனன்று ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதன்பின் 24 மணி நேரம் கழிவதற்கு முன்பே, இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜுக்கும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரான ஷா முகமது குரேஷிக்கும் இடையில் நடைபெறவிருந்த கூட்டத்தை புதுடெல்லி இரத்து செய்துவிட்டது.
வியாழனன்று இரவு ஜம்மு-காஷ்மீரில் அவர்களது வீடுகளில் இருந்து இந்திய-விரோத காஷ்மீர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டிருந்ததையும், முன்னதாய் அந்த வாரத்தில் இந்தியாவையும் பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமிருந்துமான துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்த இந்திய சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டதாக சொல்லப்படுவதையும், இந்தியா காரணமாகக் கூறியது. புர்ஹான் வானி —இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாத குழுவின் 21 வயது தளபதியான இவர் 2016 ஜூலையில் கொல்லப்பட்டமை இந்திய வசமிருக்கும் காஷ்மீரில் பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது— நினைவாக பாகிஸ்தான் தபால் அலுவலகம் தபால்தலைகளின் ஒரு வரிசையை வெளியிட்டதும் மூன்றாவது காரணமாய் இந்தியாவால் கூறப்பட்டது.
இந்தியாவின் அணு ஆயுத வல்லமையுடைய எதிரிக்கு எதிராய் ஒரு மூர்க்கமான கொள்கையைப் பின்பற்றுவதற்கு தயாராயிருந்த காரணத்தால் கூடுதல் மூத்த அதிகாரிகளையும் தாண்டி பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜெனரல் ராவத், சனிக்கிழமையன்று கூறிய கருத்துக்களில், அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டை ஆதரிப்பதையும் தாண்டிச் சென்றார், இந்தியா பாகிஸ்தானுக்கு “வலி”யை உண்டாக்கியாக வேண்டும் என்று அறிவித்தார். “பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் இராணுவமும் நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு பழிதீர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுப்பது அவசியம். ஆம், அவர்கள் கொடுப்பதை நாம் திருப்பிக் கொடுப்பதற்கான நேரமிது, அதே வகையான காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவது மூலமாக இல்லாவிட்டாலும் கூட. ஆனால் எதிர்ப்பக்கமும் இதே வலியை உணர்ந்தாக வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.”
தெற்கு ஆசியாவின் 1947 வகுப்புவாதப் பிரிவினையில் இருந்து பிறந்த பரம-வைரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாய் முடங்கிப் போய் இருந்து வந்திருக்கின்றன.
2016 செப்டம்பர் பிற்பகுதி தொடங்கி, இந்தியாவும் பாகிஸ்தானும், முழுமூச்சிலான போருக்கான இரத்தக்கொதிப்பேற்றும் மிரட்டல்களையும் அத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியெங்கிலும் (LoC) இருதரப்பிலும் ஏராளமான இராணுவத்தினர் மற்றும் அப்பாவி மனிதர்களின் சேதாரங்களுக்கு காரணமாகின்ற கனரக ஆட்டிலறி மற்றும் துப்பாக்கிச் சூடுகளையும் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாய் நடத்திக் கொண்டு வந்திருக்கின்றன.
இருப்பினும், சென்ற மாதத்தில் பாகிஸ்தானில் ஒரு புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தமையானது பதட்டங்களைத் தணிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதாக புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டுமே கூறின.
புது டெல்லியிடம் இருந்து வெள்ளியன்று வந்த அறிவிப்புக்கும் மற்றும் ராவத்தின் மிரட்டல்களுக்கும் பாகிஸ்தான், பேச்சுவார்த்தைகளுக்கான தனது ஆலோசனையை மீண்டும் முன்வைப்பதன் மூலமும் போருக்கு தான் ஆயத்தமாக இருப்பதை அறிவிப்பதன் மூலமும் பதிலிறுப்பு செய்திருக்கிறது. “நட்பு”க்கு பாகிஸ்தான் முன்வருவதை அதன் “பலவீனமாக” இந்தியா புரிந்துகொள்ளக் கூடாது என்று எச்சரித்த பிரதமர் இம்ரான் கான் கூறினார், “எங்கள் மக்கள் தயாராய் இருக்கிறார்கள், எங்களது பீரங்கிகளும் கூட தயாராகவே இருக்கின்றன.”
இந்தியா செய்த தலைகீழ் மாற்றம் ஒரு மோசடி என்றும், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு முன்செல்வதற்கு அது ஒரு போதும் விரும்பியதில்லை என்றும் இஸ்லாமாபாத் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த வாரத்தில் ஐ.நா பொது சபைக் கூட்டத்தை ஒட்டி இராஜதந்திர நடவடிக்கைகள் நிறைய நடக்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடும் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகத் தான், முதலில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்பதாக காட்டி விட்டு ஒருநாள் தள்ளி பின்வாங்குவதற்கு அது முடிவுசெய்திருந்தது.
இந்திய உயரடுக்கினர், தெற்கு ஆசியாவில் வாஷிங்டனின் பிரதான கூட்டாளியாக இந்தியா எழுந்து வருவதில் துணிச்சலடைந்து, புது டெல்லியின் மேலோங்கிய நிலையை விளக்கமான விதத்தில் ஏற்றுக்கொள்வதற்கு பாகிஸ்தானை அச்சுறுத்தி பணியவைக்க தீர்மானத்துடன் இருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, காஷ்மீரில் இந்திய-விரோத கிளர்ச்சிக்கு எந்த தடவாள உதவியும் வழங்குவதில்லை என்பதை இஸ்லாமாபாத் உறுதிசெய்ய வேண்டும் என்று அது கோருகிறது. இந்தியாவின் ஒரேயொரு முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலத்தின் மக்களது அந்நியப்படலை பாகிஸ்தானின் சூழ்ச்சி வேலைகளாகக் குறைத்துக் காட்டுகின்ற ஒரு விவரிப்பும் இதனுடன் கரம்கோர்த்து நடத்தப்படுகிறது.
உண்மையில், இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் அரசியல்சட்டரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சுயாட்சியை மீறி வந்திருப்பதோடு அதன் தேர்தல்களிலும் முறைமீறல்கள் செய்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாய், இந்திய பாதுகாப்புப் படைகள் ஜம்மு காஷ்மீரில் ஒரு “அழுக்கான” கிளர்ச்சி-எதிர்ப்புப் போரை நடத்தி வந்திருக்கின்றன, மாநிலத்தின் மக்களை ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கும், சித்தரவதைக்கும், காணாமல் போதல்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்தமான தண்டனைகளுக்கும் ஆட்படுத்தி வந்திருக்கின்றன.
காஷ்மீரின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளது ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளுக்கு பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருக்கும் குரோதமும் சளைத்ததல்ல. தனது சொந்த பிற்போக்கான புவி-மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பிற்போக்கான இஸ்லாமிய சக்திகளை ஊக்குவித்து, கிளர்ச்சியை அது கைப்புரட்டு செய்து வந்திருக்கிறது.
வெளியுறவு அமைச்சர்களது பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக (BJP) அரசாங்கத்தின் அரசியல் கணக்குகளுடன் நன்கு பொருந்திப் போவதாய் இருக்கிறது. 2016 செப்டம்பர் 28-29 அன்று பாகிஸ்தானுக்குள் சென்று இந்தியப் படைகள் நடத்திய ஆத்திரமூட்டலான தாக்குதலின் இரண்டாவது ஆண்டுதினத்தைக் குறிக்கின்ற விதமாய் செப்டம்பர் 29 தினத்தை “குறிவைத்த தாக்குதல்கள்” (Surgical Strikes) தினமாக அது பிரகடனம் செய்திருக்கிறது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் உரையாற்றுகிறதாகவும், இராணுவப் படைகளுக்கு ஆதரவைக் கூறுகின்ற கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் எழுதுவதற்கு மாணவர்களை கவர்வதற்குமாய் நாட்டின் பல்கலைக்கழகங்கள் அணிவகுப்புகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அது “ஆலோசனை” அளித்திருக்கிறது.
ஆயினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மோதல்போக்கில் பணியவைக்கும் நிலைப்பாட்டுக்கு இந்திய அரசியல் ஸ்தாபகமெங்கிலும் வலுவான ஆதரவு இருக்கிறது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பேச்சுவார்த்தைகளுக்கான பாகிஸ்தானின் ஆலோசனைக்கு பாஜக அரசாங்கம் அதன் சொற்ப ஆயுள் கொண்ட ஏற்பை அளித்ததை அது கண்டனம் செய்தது, அது இரத்து செய்யப்பட்டபோது, பாஜக அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கே ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்கக் கூடாது என்று அது புகாரிட்டது.
வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு புதுடெல்லி ஏற்பளித்து பின் இரத்து செய்ததற்கு இடையிலான மிகக்குறைந்த காலத்தில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இந்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் “மகத்தான செய்தி” என்று அறிவித்தது.
கடந்த தசாப்த காலத்தில், சீனாவுக்கு எதிரான தனது இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை உருமாற்றும் நோக்கத்துடன் அதன் மீது மூலோபாய அனுகூலங்களைப் பொழிந்து வரும் வாஷிங்டன், அதேநேரத்தில் பாகிஸ்தானுடனான உறவுகளை ஒரேயடியாக கீழிறக்கி விட்டிருந்தது. ஒரு முக்கிய நேட்டோவில்-இல்லாத கூட்டாளியாக இஸ்லாமாபாத்திற்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்கா மறுக்க முடியும் என்றும், அத்துடன் இஸ்லாமாபாத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அவசரக் கடன் ஒன்றை தடுப்பதற்கும் ட்ரம்ப்பும் அவரது தலைமை உதவியாளர்களும் விடுத்த வெளிப்படையான மிரட்டல்களும் இதில் அடங்கும். ஆயினும் நாட்டின் பெரும்பகுதியை ஆப்கான் போருக்கான ஆதரவில் ஒரு கொலை மண்டலமாக உருவாக்கி விட்டிருக்கும் பாகிஸ்தானை நெருக்கிப் பணியவைக்க அமெரிக்கா இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறது, புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையில் பதட்டங்கள் குறைவது உதவிகரமாக இருக்கும் என்று அது கணக்குப் போடுகிறது.
இந்தியா, நான்கு ஆண்டு கால பாஜக அரசாங்கத்தின்கீழ், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் முனைப்பில் அதன் இணைப்பை ஒரேயடியாக அதிகரித்திருக்கிறது, பென்டகனின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் வேண்டியபோது பயன்படுத்திக் கொள்வதற்கு தனது வான்தளங்களையும் துறைமுகங்களையும் முழுக்கத் திறந்து விட்டிருப்பது, மற்றும் ஆசிய-பசிபிக்கில் வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வது ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை மிகப்பெருமளவில் சார்ந்திருக்கிறது, அதற்கு மிகப்பெருமளவில் விநியோகிக்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது என்ற நிலையிலும் கூட, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளுக்கு, தயக்கத்துடன் தான் என்றாலும், இணங்கிச் செல்வதற்கும் இந்தியா தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது.
ஆயினும், பாகிஸ்தான் விடயமென்று வரும்போது, வாஷிங்டனை உதாசீனம் செய்யவும் இந்தியா தயாராக இருக்கிறது, அதன் மையமான மூலோபாய நலன்களாக அது கருதுவனவற்றை தாட்சண்யம் பார்க்காமல் பின்தொடர்வதற்குத் தேவையான மிகப்பெரும் இடத்தையும் நெம்புநிலையையும் அது எதிர்பார்க்கிறது என்பதே அதன் காரணமாகும்.
இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கு இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் அளித்த பதிலிறுப்பில், அடுத்த ஆண்டு மே மாதம் வரவிருக்கும் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடந்து முடிகின்ற வரையில் “திறம்பட்ட சமாதான முன்னேற்றம்” எனச் சொல்லப்படுவதை புதுப்பிப்பதற்கான எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் இருக்கப் போவதில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று அவை கூறின.
இத்தகைய கூற்றுக்கள், இந்திய-பாகிஸ்தான் மோதலின் எரிதன்மையையும், எந்த அளவுக்கு அது உலக புவியரசியலின் எல்லாவற்றையும் விட அமெரிக்கா-சீனா மோதலின் சூறாவளிப்புயலுடன் பின்னிப்பிணைந்ததாக ஆகியிருக்கிறது என்பதையும் மிகப்பெருமளவுக்கு குறைமதிப்பீடு செய்வதாக இருக்கின்றன. இந்தியாவை தனது வேட்டையாடும் மூலோபாய அபிலாசைகளுக்கேற்ப கூர்தீட்டுவதற்கான அமெரிக்காவின் முனைப்பு, பிராந்தியத்தில் அதிகார சமநிலையை புரட்டிப் போட்டிருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. தெற்கு ஆசியா போட்டிக் கூட்டணிகளாக —அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராய் சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டணி— ஸ்தூலப்படுவதற்கு இட்டுச்செல்கின்ற விதத்தில், பெய்ஜிங் உடன் தனது நீண்டகால மூலோபாய கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் தந்திரோபாய, அதாவது யுத்தக்கள, அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது ஆகிய இரண்டுக்கும் இது இஸ்லாமாபாத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது.

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-3)

1987 டிசம்பர் 23ல் நடைபெற்ற தோழர் கீர்த்தியின் மரணச்சடங்கில், நான் புரட்சிகரத் தொழிலாளர்களது மற்றும் இளைஞர்களது வரும் தலைமுறையினர், மாவோ சேதுங்கிடமிருந்தோ அல்லது ஹோ சி மின்ஸிடம் இருந்தோ அல்லது ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்தோ, அல்லது தாம் மார்க்சிஸ்டுக்கள் என்று வேடம் போட்டு உலா வரும் முதலாளித்துவ தேசியவாதத்தின் மற்றும் குட்டி முதலாளித்துவ மிதவாதத்தின் எந்த ஒரு பிரதிநிதியிடம் இருந்தோ தமது உள் ஊக்கத்தை பெறப்போவதில்லை எனக் கூறினேன். இதற்கு மாறாக எதிர்காலத்தின் புரட்சிகரப் போராளிகள், கீர்த்தி பாலசூரியாவின் அரசியல் முன் உதாரணத்தில் இருந்தே கற்றுக்கொள்ளவார்கள் என்றேன். கடந்த ஐந்தாண்டுகளின் நிகழ்வுகள், இப்புகழுரையில் மிகைப்படுத்தலின் அறிகுறிகூட அடியோடு இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. அரசியல் ஏய்ப்பு மற்றும் தத்துவார்த்த பாசங்கை தமது அரசயல் வாழ்வின் அடித்தளமாக கொண்டிருந்த ஸ்ராலினிசத்தின் புகழ்மிக்க மாபெரும் மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் புகழ்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் ஈவிரக்கமற்று அடி கொடுத்துள்ளன. ஆனால் இந்நிகழ்வுகள் மார்க்சிசத்தின் வரலாற்று முன்னோக்கின் மற்றும் அது அதன் அடிப்படையாக கொண்டிருக்கும் விஞ்ஞானபூர்வ வழிமுறையின் சக்தியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.
கீர்த்தியின் அரசியல் வாழ்வின் வீச்சளவு ஏறக்குறைய இருபது வருடங்களிலும் அதிகமாக இருந்தது. இந்த வருடங்கள் அனைத்தும் புரட்சிகர மார்க்சிசத்தின் நிஜ மரபுகளைக் கட்டிக் காப்பதற்காக அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. இருந்தபொழுதும், மார்க்சிசத்தை பாதுகாக்கும் இப் போராட்டத்தை, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வாழ்வு, அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மிகவும் கோர வடிவங்களின் மேலாண்மைக்கு உள்ளாக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் அவர் நடத்த வேண்டி இருந்தமை, அவரது விதியாக இருந்தது. இச்சந்தர்ப்பவாதம் மிகப் பிரமாண்டமான சடத்துவ ரீதியான வளங்களை தன்வசம் வைத்திருந்தது. ஆனால் இந்த வளங்களால், அதனை அதன் சொந்த அரசியல், சித்தாந்த மற்றும் ஒழுக்ககியல் திவாலின் தவிர்க்க முடியா விளைவுகளில் இருந்து என்றென்றைக்குமாக பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த காலத்திய பாசாங்குப் புனைக்கதைகள் யாவும் அம்பலமாக்கப்பட்டு வருகின்றன. மாவோக்கள், ஹொக்ஸ்ஸாக்கள், டீட்டோக்கள், காஸ்ட்ரோக்கள் மற்றும் இரண்டாம் உலகயுத்தத்தின் பிந்தைய சகாப்தத்தில் புரட்சியாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள் அனைவரும் அரசியல் மோசடிக்காரர்கள் மற்றும் தத்துவார்த்த போலிகள் என்றே நினைவு கூரப்படுவர். அவர்களின் சாதனைகள் எனக் கூறப்படுபவை அனைத்தும் இற்றுப் போன அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டவையாகும். அவர்கள் உருவாக்கிய அரசியல் கொலைக்களங்கள், ஒன்றில் அவை இடிந்து வீழ்ந்துவிட்டன அல்லது இழிவுற்ற நிலையில இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவர்களில் அநேகரைப் பொறுத்தவரை மரணம் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களின் அழிவுகரமான விளைபயன்களில் இருந்து அவர்கள் தப்பிச் செல்ல அவர்களுக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. இவற்றிற்கான விலையை செலுத்த தொழிலாள வர்க்கமே விடப்பட்டுள்ளது. ஸ்ராலினிசத்துடனான அவரது சிடுமூஞ்சித்தனமான பேரம் பேசல்களின் பெறுபேறுகளை நேரடியாக காண, காஸ்ட்ரோ மட்டுமே போதுமான அளவு நீண்டகாலத்திற்கு உயிர் வாழ்ந்துள்ளதாக தோன்றுகின்றது. அவர்களின் தனிப்பட்ட ரீதியான கதிகள் எப்படியாக இருந்த பொழுதும், இந்தப் போலி கதாநாயகர்கள் —இவர்களுடன் மேலும் அநேகரைச் சேர்க்க முடியும்— இவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றைப் பொதுவாகக் கொண்டிருந்தனர். அதுதான், இவர்களில் ஒருவர்கூட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மேம்பாட்டிற்கு அரசியல் ரீதியில் நிலையான பெறுமதியுள்ள பங்களிப்பு ஒன்றைக் கூட செய்திருக்கவில்லை. மாறாக இவர்கள் அதை சுரண்டினர், தவறான வழியில் அதை வழிநடத்தினர் மற்றும் அதைக் காட்டிக் கொடுத்தனர்.
(தொடரும்...)

பகுதி-1     பகுதி-2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts