Search This Blog

Tuesday, 21 August 2018

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய எழுபத்தியெட்டு ஆண்டுகள்

Seventy-eight years since the assassination of Leon Trotsky

Eric London
21 August 2018
எழுபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1940 ஆகஸ்டு 21 அன்று, சோவியத் ஸ்ராலினிச இரகசிய போலிஸ் GPU வின் ஒரு முகவரான ரமோன் மெர்க்கடேர் டெல் ரியோவினால் முந்தைய நாளில் படுகாயமடையச் செய்யப்பட்டிருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிகோ நகரில் மரணமடைந்தார்.
ரஷ்யப் புரட்சியில் லெனினுக்கு இணைத்தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை ஒரு பிரம்மாண்டமான அரசியல் குற்றமாகும். 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்திற்கு வந்தமை, 1936-39 ஸ்பானியப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை, மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவை உள்ளிட்ட வன்முறையான எதிர்ப்புரட்சி அலை ஒன்றின் உச்சப்புள்ளியாக இது அமைந்திருந்தது.
சோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, கிட்டத்தட்ட ரஷ்யப் புரட்சியின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் உட்பட, மார்க்சிச பாரம்பரியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிரான ஒரு அரசியல் படுகொலைப் பிரச்சாரம் ஸ்ராலினிச ஆட்சியால் நடத்தப்பட்டது. 1936-39 பாரிய பயங்கரத்தில் 800,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ”ஸ்ராலினிசமும் போல்ஷிவிசமும்” என்ற 1937 கட்டுரையில்: “இப்போதைய அழித்தொழிப்பானது, போல்ஷிவிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான பிளவு என்பது ஒரு இரத்தக் கோடு அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆறாகும்” என ட்ரொட்ஸ்கி எழுதினார்.
ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ மற்றும் தேசியவாதச் சீரழிவை எதிர்த்த அரசியல் இயக்கத்திற்கு தலைமை கொடுத்தார். ஸ்ராலினுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது, எண்ணற்ற வரலாற்றாசிரியர்கள் பொய்யாக வாதிட்டு வந்திருப்பதைப் போல, தனிப்பட்ட அதிகாரத்துக்கான அகநிலை ஆசையினால் உந்தப்பட்டிருந்ததல்ல. மாறாக, இந்தப் போராட்டம் இரண்டு நேரெதிரான அரசியல் முன்னோக்குகளைப் பிரதிபலித்தது.
சோவியத் ஒன்றியத்தில் 1924 இல் லெனினின் மரணத்தால் எளிதாக்கப் பெற்ற, ஸ்ராலினின் அதிகாரம் வலுப்பெறலானது, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியதும் சர்வதேசரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதுமான ஒரு தொழிலாளர்’ அரசின் கட்டமைப்புக்குள்ளாக எழுந்திருந்த ஒரு தேசியவாத மற்றும் பழமைவாத அதிகாரத்துவ சாதியால் அதிகாரம் தட்டிப்பறிக்கப்பட்டதாக இருந்தது. முதன்முதலாக 1924 இல் முன்மொழியப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச தத்துவமானது, ரஷ்யப் புரட்சியின் சர்வதேச முன்னோக்கினை மறுதலித்து, உலகப் புரட்சியை சோவியத் ஒன்றியத்திலான அதிகாரத்துவ எந்திரத்தின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதை நியாயப்படுத்தியது.
1923 இல் ட்ரொட்ஸ்கி முன்முயற்சியளித்த இடது எதிர்ப்பாளர்கள் அணியும், 1938 இல் அவர் ஸ்தாபித்த நான்காம் அகிலமும், ரஷ்யப் புரட்சிக்குமே கூட தத்துவார்த்த அடிப்படையாகத் திகழ்ந்திருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டன. முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது ஒரு நாட்டிற்குள்ளானதாக சாத்தியமில்லை என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு உலக சோசலிசப் புரட்சியின் ஊடாகவே தாண்டிச் செல்லப்பட கூடியதாகும்.
நாடுகடத்தப்பட்டு மெக்சிகோ நகரில் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி, அவரது வாழ்க்கை தொடர்ச்சியான அச்சுறுத்தலில் இருப்பதைப் புரிந்துகொண்டார். 1927 நவம்பரில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றம், 1928 ஜனவரியில் அல்மா அட்டாவுக்கு நாடுகடத்தப்பட்டமை, 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம், அதன்பின் துருக்கியில் இருந்து பிரான்சுக்கும் நோர்வேக்குமாய் அவர் விரட்டப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து அதன்பின் இறுதியாக 1937 இல் மெக்சிகோவில் அவரது இறுதி வீட்டுக்கு என இந்த வட அமெரிக்க நாட்டில் அவர் தஞ்சமடைந்திருந்தார்.
1940க்குள்ளாக, ஸ்ராலின் நான்காம் அகிலத்தின் பல முன்னணிப் பிரதிநிதிகளை படுகொலை செய்து முடித்திருந்தார், இதில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலரான எர்வின் வொல்ஃப் 1937 ஜூலையிலும், GPU இல் இருந்து விலகி நான்காம் அகிலத்திற்கு ஆதரவாளரான இக்னஸ் ரீய்ஸ் 1937 செப்டம்பரிலும், ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் 1938 பிப்ரவரியிலும், நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமெண்ட் 1938 ஜூலையில் ஸ்தாபக காங்கிரஸை ஒட்டியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 
1940 மே 24 அன்று, தீவிர-ஸ்ராலினிச ஓவியரான டாவிட் சிக்கேய்ரோஸ் தலைமையிலான ஒரு படுகொலைப் படை ட்ரொட்ஸ்கியின் வீட்டின் மீது ஒரு தாக்குதல் தொடுத்தது, ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தலியா செடோவாவும் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் எந்திரத் துப்பாக்கிகள் புல்லட்டுகளால் துளைத்தன. இருவரும் உயிர் தப்பினர் என்றாலும், இது கடைசி முயற்சியாக இருக்கப்போவதில்லை என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். அந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் எழுதினார்: “நான் இந்த பூமியில் விதிக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, மாறாய் விதிவிலக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை போன்றதொரு ஒரு பிற்போக்கான சகாப்தத்தில், ஒரு புரட்சியாளன் எதிர்நீச்சல் போட தள்ளப்படுகிறான்.”
அதன்பின், ஆகஸ்டு 20 அன்று, உலகின் கவனம் இரண்டாம் உலகப் போரின் மீது குவிந்திருந்த நிலையில், ஸ்ராலின் ஏவிய படுகொலையாளன், உயிர்வாழும் மாபெரும் மார்க்சிசவாதியும் உலகப் புரட்சியின் மூலோபாயவாதியையும் வீழ்த்திய அந்த இறுதி அடியைக் கொடுத்தான்.
ட்ரொட்ஸ்கியின் படுகொலையானது துயரகரமானதும் தொலைகாலத்திற்கானதுமான விளைவுகளைக் கொண்டிருந்த நிலையிலும், இந்தக் குற்றமானது, 1975 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும்விசாரணையைத் தொடக்கும் வரையில் தீவிர புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களது படுகொலையானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவியிருந்த உளவாளிகள் மற்றும் படுகொலையாளர்களின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டதாய் இருந்தது என்பதை நிரூபிக்கின்ற ஏராளமான வெளிக்கொணர்வுகளை பாதுகாப்பும் நான்காம்அகிலமும் விசாரணை முன்வைத்தது. மார்க் ஸ்பரோவ்ஸ்கி, ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட், ஃபிளாயிட் கிளீவ்லேண்ட் மில்லர், சில்வியா காலன் மற்றும் ஜோசப் ஹான்சன் ஆகியோரும் இந்த வலைப்பின்னலில் இடம்பெற்றிருந்தனர்.
காலென், சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி.கனனுக்கு தனிப்பட்ட காரியதரிசியாக இருந்தார், ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக GPUவுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கு அவர் இந்த அந்தஸ்தை பயன்படுத்தினார். (காணவும்: “ஒரு ‘உதாரணகரமான தோழர்’: ஸ்ராலினிச உளவாளியான சில்வியா காலென் குறித்த சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் 40 ஆண்டுகால மூடிமறைப்பு”.) ஹான்சன் மெக்சிகோ நகரில் ட்ரொட்ஸ்கியின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தார், ட்ரொட்ஸ்கியை கொலை செய்ய வழிதருகின்ற மிக முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பதற்கு இந்த அந்தஸ்து அவரை அனுமதித்தது.
இந்தக் குற்றத்தை விசாரணை செய்யத் தவறியமையானது, அதன் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை மூடிமறைக்கின்ற பாதிப்பை மட்டுமன்றி, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகரத் தன்மையை புரிந்து கொள்வதை பலவீனப்படுத்துகின்ற பாதிப்பையும் சேர்த்துக் கொண்டிருந்தது. இந்த மூடிமறைப்பு எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நலன்களால் உந்தப்பட்டதாக இருந்தது. 1953 இல் நான்காம் அகிலமானது, மிஷேல் பப்லோ மற்றும் எர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு ஸ்ராலினிச-ஆதரவு கன்னையால் உடைக்கப்பட்டது. பப்லோவாதிகள் அப்போதும் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகவே காட்டிக்கொள்ள முனைந்தார்கள் என்றபோதும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் புரட்சிகரக் கொள்கைகளை நடத்துவதற்கு நெருக்குதலளிக்கப்பட முடியும் என்பதான திருத்தல்வாதக் கொள்கையை ஊக்குவித்தனர்.
ஸ்ராலினிசத்தை நோக்கிய இந்த அரசியல் நோக்குநிலையானது அதன் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான எந்த முயற்சிக்கும் எதிரான வெறித்தனமான குரோதத்துடன் கைகோர்த்ததாய் இருந்தது. ICFI இன் விசாரணையானது நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியிருந்த GPU முகவர்களின் வலைப்பின்னலை அம்பலப்படுத்தியது, GPU மற்றும் FBI இரண்டுடனும் ஹான்சன் பராமரித்து வந்திருந்த முன்னர் தெரிந்திராத உறவுகளுக்கான ஆதாரத்தை வெளிக்கொணர்ந்தது என்ற நிலையில், பப்லோவாதிகள் ஒரு சர்வதேச அவதூறுப் பிரச்சாரத்தைக் கொண்டு இதற்கு பதிலிறுத்தனர். அனைத்துலகக் குழுவால் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்வதற்கு, ICFI மற்றும் சர்வதேச பப்லோவாத அமைப்பு இரண்டில் இருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கொண்ட ஒரு இணை-நிலை ஆணையத்தை உருவாக்குவதற்கு ICFI விடுத்த அழைப்பை எடுத்தஎடுப்பிலேயே அவர்கள் நிராகரித்தனர். 
1977 ஜனவரி 14 அன்று, பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தையும் அச்சமயத்தில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் தலைவராக இருந்த ஜெரி ஹீலியையும் கண்டனம் செய்வதற்காக பப்லோவாத சர்வதேச செயலகம் ஒரு பொது ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது. எர்னெஸ்ட் மண்டேல், ஜோர்ஜ் நோவாக், பியர் லம்பேர் மற்றும் தாரிக் அலி உள்ளிட முன்னிலை பப்லோவாதிகளும் அவர்களது கூட்டாளிகளும் மேடையில் இருந்தபடி இரண்டு மணி நேரங்களாக அவமதிப்புகளையும் வசைகளையும் கத்தித் தீர்த்தனர். ஆனால் அவர்களில் எவரொருவரும் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்டிருந்த ஆதாரங்களைக் குறித்துக் குறிப்பிடவேயில்லை.
இந்த வசைமழைகளது பிரதான இலக்காக இருந்த ஜெரி ஹீலி, இந்த கண்டனங்களுக்கு பதிலளிப்பதற்காகவும் இணை-நிலை கமிட்டி ஒன்றுக்கான ICFI இன் அழைப்பை மீண்டும் எழுப்புவதற்காகவும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து எழுந்தபோது, அங்கே நிகழ்ச்சி ஏற்பாடுகளது தலைவராக இருந்த தாரிக் அலி, முறையற்று நடந்து கொள்வதாகக் கூறி அவரை பேச அனுமதிக்க மறுத்தார். மிகையில் கோர்பசேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சினின் ஒரு தீவிர ஆதரவாளராக அலி ஆகவிருந்தார் என்பதும், பல தசாப்தங்களுக்கு முன்பாக ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்த தொடர்பையும் அவர் மறுதலித்தார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.
ாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்கள் முழுமையாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், அனைத்துலகக் குழுவின் மீதான தாக்குதல் அபாண்டமானது என்பதை பப்லோவாதக் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களது எச்சசொச்சங்கள் ஒருபோதும் ஒப்புக்கொண்டது கிடையாது.
ICFI ஐப் பொறுத்தவரையில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையானது வெறுமனே அரசு முகவர்களை அம்பலப்படுத்துவது குறித்த ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மற்றும் முதலாளித்துவ அரசின் எதிர்ப்புரட்சிகர தன்மை தொடர்பான அடிப்படையான அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்துவதற்கு அவசியமானதாக அது இருந்தது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களை மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் அது பிரிக்கவியலாமல் தொடர்புபட்டிருந்தது.
ஸ்ராலினிச சதியின் பொறிமுறைகள் மற்றும் வீச்சு குறித்த முன்னர் அறிந்திராத உண்மைகளை வெளிக்கொணர்ந்ததும், ட்ரொட்ஸ்கிசக் காரியாளர்களுக்கு இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள், ஸ்ராலினிசத்தின் தன்மை, மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பாத்திரம் ஆகியவற்றில் கல்வியூட்டியதும் அதன் மாபெரும் சாதனையாக இருந்தது.
பாரிய அரசுக் கண்காணிப்பு மற்றும் போலிஸ் ஒடுக்குமுறையின் ஒரு சகாப்தத்தில் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறைக்கு, அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொழிலாளர் இயக்கத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதென்பது வாழ்வா சாவா பிரச்சினையாகும். முதலாளித்துவ அரசின் முகமைகளுக்கு எதிராக தொழிலாளர்களது மற்றும் சோசலிச இயக்கத்தை பாதுகாப்பதற்கான இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் அவர்கள் காண்பார்கள்.
ாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை அனைத்துலகக் குழுவின் புரட்சிகரப் பாரம்பரியத்தில் ஒரு இன்றியமையாத பகுதியாகும். ஸ்ராலினிச ஆட்சிகள் அப்போதும் அரசு அதிகாரத்தைக் கொண்டிருந்ததும் தீவிரமான அரசியல் செல்வாக்கை கொண்டிருந்ததுமான ஒரு சமயத்தில் GPU இன் குற்றங்களை அம்பலப்படுத்த ஒரு போராட்டம் நடத்துவதற்குத் தயாரிப்புடன் இருந்த ஒரே அமைப்பாக அது மட்டுமே இருந்தது. ICFI ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி நடப்பது என்பதையும் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அத்தனை அரசியல் முகமைகளுக்கும் எதிரான போராட்டத்தில் சமரசமற்றது என்பதையும் நடைமுறையில் அது நிரூபித்தது.
ட்ரொட்ஸ்கியின் மரணத்தின் எழுபத்தியெட்டாவது நினைவுதினமான இந்தநாளில், ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த உலக சோசலிசத்தின் கோட்பாடுகளுக்கும் வேலைத்திட்டத்திற்குமான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற அனைத்துலகக் குழு, இந்த அசாதாரண புரட்சியாளருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறது.
http://www.wsws.org/tamil/articles/2018/08-Aug/leon-a22.shtml

துருக்கிய லீரா நெருக்கடியின் உலகளாவிய தாக்கங்கள்

The global implications of the Turkish lira crisis

Nick Beams
16 August 2018
2008 உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதன் பத்தாவது ஆண்டுதினம் நெருங்குகையில், துருக்கிய செலாவணியான லீராவைச் சுற்றி நிகழ்ந்து வரும் கொந்தளிப்பானது அந்த முறிவை உண்டாக்கிய அனைத்து நிலைமைகளும் இன்னும் நீடிக்கின்றன என்பதற்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
உண்மையில், அந்த நிதியஉருகுதலுக்கு விடையிறுப்பாக, பிரதான முதலாளித்துவ நாடுகளது அரசுகளும் மத்திய வங்கிகளும் எடுத்த நடவடிக்கைகளே அவற்றைத் தீவிரப்படுத்தி உள்ளன. இது மற்றொரு நிதிய பேரழிவு வெடிப்பதற்கு களம் அமைத்துள்ளது, அனேகமாக இது பத்தாண்டுகளுக்கு முன்னர் வெடித்ததை விட இன்னும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம்.
உலகளாவிய நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியமை, அத்துடன் அந்த பொறிவை ஏற்படுத்துவதற்குக் காரணமான ஊகவணிக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதே நிதியியல் அமைப்புகளுக்கு ஒரு பிரமாண்ட வெகுமதியை உருவாக்கிய அதி-மலிவு வட்டி விகித முறையை வழங்கியமை என இவையொரு புதிய நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையை உருவாக்கியுள்ளது.
ஆனால் 2008 இல் கற்பனை செய்யவியலாத ஒரு அளவிற்கு உலகின் அனைத்து முன்னணி பொருளாதாரங்களும், தொடர்ந்து தீவிரமடைந்து வரும் பொருளாதார மோதல் சுழற்சியில் சிக்கியுள்ளன. இந்த உலகளாவிய வர்த்தக போரில் ட்ரம்ப் வெள்ளை மாளிகை முன்னிலையில் உள்ளது, அது அதன் நண்பர்கள் மற்றும் எதிரிகளை ஒருபோல விலையாக கொடுத்து அமெரிக்காவின் புவிசார்அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான அதன் முனைவில், துருக்கிக்கு எதிராக தொடங்கிய தாக்குதலைப் போன்ற வர்த்தக தடையாணைகள் மற்றும் இறக்குமதி தீர்வை உயர்வுகள் போன்றவற்றை ஓர் உள்ளார்ந்த அம்சமாக காண்கிறது.
கடந்த பத்தாண்டில் உலக பொருளாதாரத்தின் தன்மை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்குள் சென்றுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியானது, அது நிகழ்ந்து வரும் அளவைக்கொண்டு பார்க்கையில், அது உற்பத்தி வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளின் மூலமாக உந்தப்படவில்லை, மாறாக பணமானது ஊகவணிகத்தினதும் ஒட்டுண்ணித்தனத்தினதும் நடவடிக்கை மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாய்ந்ததன் மூலமாக உந்தப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, பணமானது துருக்கி போன்ற எழுச்சிபெற்று வரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதற்கு உள்ளே பாய்ந்துள்ளது, அந்த அரசுகளும் பெருநிறுவனங்களும் டாலர்-அடிப்படையிலான கடன்கள் மற்றும் பிற வெளிநாட்டு செலாவணி கடன்களை மிகவும் மலிவான விகிதங்களில் பெற்றுக்கொள்வதிலிருந்து விளைந்த, அதிக வட்டிவிகித இலாபத்திற்கான சாத்தியக்கூறும் வேகமான வளர்ச்சி விகிதமும் விரைவான இலாபங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
வெள்ளமென பாய்ந்த இந்த பணத்தின் அளவு சர்வதேச நிதியியல் அமைப்பு தொகுத்தளித்த புள்ளிவிபரங்களால் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதன் புள்ளிவிபரங்களின்படி, 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலை (indebtedness) 2011 இன் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதத்தில் இருந்ததில் இருந்து இந்தாண்டின் முதல் காலாண்டில் 211 சதவீதமாக உயர்ந்தது. பணத்தின் அடிப்படையில் இது, எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கடன்களில் 40 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.
வட்டிவிகிதங்களும் அமெரிக்க டாலர் மதிப்பும் குறைவாக இருக்கும் வரையில், இந்த நடைமுறை தொடரும். ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கும் "பணத்தைப் பாய்ச்சும்" அதன் திட்டத்தை நிறுத்துவதற்கும் நகர்கையில், அதன் விளைவாக டாலர் மேல் நோக்கி நகருகையில், டாலர் மதிப்பிலான கடன் சுமை வேகமாக உயரும் என்பதே இதன் அர்த்தம். இது அனைத்து வழிகளிலும் வெளியேறுவதற்கான நெருக்குதலை உருவாக்கி உள்ளது, இதை துருக்கி லீரா மதிப்பு இந்தாண்டு ஏறத்தாழ 40 சதவீதம் சரிந்திருப்பதில் பார்க்கலாம்.
ஆனால், இது வரையில் நடந்துள்ள இன்னும் நிறைய பரந்த நிகழ்வுகளில், துருக்கிய நெருக்கடியானது மிகவும் வெளிப்படையான வெளிப்பாடு மட்டுந்தான். தென் ஆபிரிக்க ரான்ட் (rand) கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது, பிரேசிலின் ரியல் (real) இந்தாண்டு முழுவதும் கீழ்நோக்கிய அழுத்தத்தின் கீழ் உள்ளதுடன், இவ்வாரம் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டத்திற்கு வீழ்ந்தது. துருக்கிய நெருக்கடி வெடித்துள்ள நிலையில், அர்ஜென்டினா செலாவணி பெசோவின் (peso) வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஜூனில் அவசர உதவி கோரியிருந்த அந்நாடு, நிதி வெளியேறுவதைத் தடுப்பதற்காக அதன் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீத புள்ளிகள் உயர்த்தி 45 சதவீதத்திற்குக் கொண்டு சென்றது.
எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கொந்தளிப்பானது, 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடியுடன் மலைப்பூட்டும் அளவிற்கு ஒத்ததன்மையைக் கொண்டுள்ளது, அப்போது தாய்லாந்து செலாவணி பஹ்த் (baht) பொறிந்த போது அப்பிராந்தியம் எங்கிலும் செலாவணிகளின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தது. பூகோளமயமாக்கல் பாதையில் வெறுமனே ஒரு "சிறிய தவறு" என்று அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால் விவரிக்கப்பட்ட ஆசிய நெருக்கடி அப்பிராந்தியம் எங்கிலும் ஓர் ஆழ்ந்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதையொட்டி அது ரஷ்ய செலாவணி ரூபிள் (rouble) நெருக்கடிக்கு இட்டுச் சென்றது, அது அமெரிக்க நீண்டகால முதலீட்டு நிதி நிறுவனம் Long Term Capital Management இன் பொறிவில் ஒரு மத்திய பாத்திரம் வகித்த நிலையில், அதன் தோல்வி ஒட்டுமொத்த அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடலாம் என்று அஞ்சி நியூயோர்க் பெடரல் ரிசர்வ் ஆல் அதற்குப் பிணை வழங்கப்பட்டது.
இதேபோல, துருக்கி மற்றும் பிற எழுச்சி பெற்று வரும் சந்தைகளில் இருந்து "தொற்றுதலைப்" பரப்பும் அனைத்து அம்சங்களும் இப்போதைய இந்த நிலைமையிலும் உள்ளதுடன், நூறு பில்லியன் கணக்கான டாலர்களை பிரதான ஐரோப்பிய வங்கிகளில் கடன்களுக்காக வழங்கியுள்ள நிலையில் அவை மிகவும் முன்னேறிய மட்டத்தில் உள்ளன.
ஆனால் முந்தைய நெருக்கடிகளுடன் ஒத்தத்தன்மைகள் இருந்தாலும் கூட, முக்கிய வித்தியாசங்களும் உள்ளன. இவை புவிசார் அரசியல் சூழலுடன் சம்பந்தப்பட்டுள்ளன, இவை, அனைத்திற்கும் மேலாக, பிரதான சக்திகள் அவை தலைமை தாங்கிய இந்த பொருளாதார அமைப்புமுறையின் முரண்பாடுகளை ஒருங்கிணைந்து எதைக் கொண்டு நெறிமுறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முயன்றனவோ அந்த போருக்குப் பிந்தைய அனைத்து ஏற்பாடுகளும் இயங்குமுறைகளும் இன்று சிதைந்துள்ளதால் குணாம்சப்பட்டுள்ளது.
பெருமந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற கொள்கைகளான அண்டை நாடுகளைப் பலிக்கொடுத்து தான் செழிக்கும் கொள்கைகளுக்கு ஒருபோதும் மீண்டும் திரும்புவதில்லை என்று 2008 இல் இருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்த சூளுரைகள் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தொடங்கி வைத்த இறக்குமதி தீர்வை மற்றும் வர்த்தக போர் முறைமைகள் மீதான கசப்புணர்வால் கடந்த ஜூன் மாதம் பிரதான சக்திகளின் ஜி7 குழுக் கூட்டம் முறிந்து போனது.
மூன்று மாதங்களுக்கும் குறைவான நாளில், இந்த உடைவின் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன. மத்தியக் கிழக்கில் அதன் வெளிநாட்டு கொள்கை மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு ஏற்ப துருக்கியை அடிபணிய செய்வதற்கான முயற்சியில் அதன் மீது திணிக்கப்பட்ட உருக்கு இறக்குமதி தீர்வை வரிகளை இரட்டிப்பாக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவு தான், லீரா நெருக்கடிக்கான உடனடி தூண்டுதல் என்பது மிகவும் முக்கியமானது. முந்தைய நெருக்கடிகளில் போல , அமெரிக்கா ஏனைய பிரதான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து, நிலைமையைத் தணிக்க முயல தலையீடு செய்யலாமென பரவலாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலின் கீழ் அக்கொள்கை கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துருக்கிய தலையீட்டால், அந்நாட்டில் பலமாக முதலீடு செய்துள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு என்ன விளைவுகள் கிடைக்குமென அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஆனால் பொருளாதார உறவுகளைப் பொறுத்த வரையில் ட்ரம்ப் ஐரோப்பாவை ஒரு "எதிரி" என்று பண்புமயப்படுத்தி உள்ள நிலைமைகளின் கீழ், அது தனக்கு ஒரு கூடுதல் ஆதாயமாக மாறிவிடுமென்றே வாஷிங்டன் கருதுகிறது.
வர்த்தக போரின் வளர்ச்சி அமெரிக்காவோடு நின்றுவிடவில்லை. போருக்குப் பிந்தைய பொருளாதார இயங்குமுறைகள் மற்றும் நிதியியல் நெறிமுறைகளின் முறிவால், ஒவ்வொரு பிரதான சக்தியும் அதன் சொந்த நலன்களைப் பார்த்து வருகின்றன, இது பொருளாதார போர்முறை தீவிரமடைவதற்கும் இறுதியாக இராணுவ மோதலுக்கும் இட்டுச் செல்கிறது. உலகளாவிய பொருளாதாரத்திற்கும் உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக மற்றும் வல்லரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு முன்பினும் அதிகமாக தெளிவான புலப்பாட்டு வடிவங்களைப் பெற்று வருகின்றன.
ஆனால் அவை அவற்றின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களில் ஆழமாக பிளவுபட்டிருந்தாலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் ஓர் இன்றியமையா பிரச்சினையில் ஒற்றுமையாக உள்ளன. உலக முதலாளித்துவ நடைமுறைகளில் நிகழ்ந்து வரும் உடைவின் அடுத்த கட்டம் என்னவாக இருந்தாலும், அதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்வதற்கு அவசியமான என்னென்ன வழிவகைகள் உள்ளதோ அவை அவற்றை பரிசீலிக்க முனையும்.
இது தான் கடந்த தசாப்தத்தின் படிப்பினையாகும், இது, ஒவ்வொரு நாட்டிலும், கூலிகள், சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஆழ்ந்த தாக்குதலைக் கண்டுள்ளது, அதேவேளையில் செல்வவளம் உயர் வருவாய் மட்டத்தில் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளதால், சமூக சமத்துவமின்மை முன்பில்லாத உயரங்களுக்கு அதிகரித்துள்ளது.
2008 இல், உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசுகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபக கட்சிகள் மூலமாக பல தசாப்தங்களாக வர்க்க போராட்டம் ஒடுக்கப்பட்டதில் இருந்து மிகப்பெரும் ஆதாயமடைந்திருந்தன. இந்த ஒட்டுண்ணித்தனமான மற்றும் குற்றகரமான நிதியியல் மூலதனத்தின் சார்பாக அவை செய்திருந்த மீட்பு நடவடிக்கைகள், இவை எல்லாம் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.
ஆனால் நிலைமைகள் இப்போது மாறி வருகின்றன. 2018 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சியைக் கண்டுள்ளது. 2008 க்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அந்த பொறிவை உண்டாக்கிய நிலைமைகளைச் சீராக்க ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதும், விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ மற்றொரு நெருக்கடி வெடிக்கும் என்பதும் அரசுகள், அரசு எந்திரங்கள் மற்றும் நிதியியலின் உயரடுக்கிற்கு நன்கு தெரியும். அதனால் தான், இராணுவ-போலிஸ் வன்முறை மற்றும் தணிக்கையின் அடிப்படையில் முன்பினும் அதிக சர்வாதிபத்திய வடிவங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமாக இதுபோன்றவொரு நிலைமைக்கு அவர்கள் தயாரிப்புகளைச் செய்து வருகின்றனர்.
சர்வதேச தொழிலாள வர்க்கம் அது தள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்களுக்கு அதன் தயாரிப்புகளைத் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். அதன் போராட்டத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு, பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே மிகவும் அடிப்படை மட்டத்தில் சுயாதீனமான அமைப்பு வடிவங்களை அபிவிருத்தி செய்வதும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் சோசலிச புரட்சிக்கான உலக கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதையும் இது உள்ளடக்கி உள்ளது.
http://www.wsws.org/tamil/articles/2018/08-Aug/lira-a21.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts