Search This Blog

Thursday, 31 May 2018

ஜூலியான் அசான்ஜைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நடவடிக்கைக்காக!

For international action to defend Julian Assange!

The ICFI and WSWS international editorial board
28 May 2018
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவும், விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியான் அசான்ஜைப் பாதுகாக்க உலகெங்கிலும் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கிறது. அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் அண்மித்து எட்டாண்டுகளாக ஓயாது இன்னல்படுத்தி வந்ததற்கு எதிராகப் போராடிய பின்னர், ஆஸ்திரேலியாவில் பிறந்த அந்த பத்திரிகையாளர் இப்போது அவர்களின் பிடியில் விழும் பயங்கர ஆபத்தில் உள்ளார்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மற்றும் சர்வதேச அளவில் அதன் சமபலங்களின் போர் குற்றங்களையும், ஜனநாயக-விரோத சதித்திட்டங்கள் மற்றும் ஊழல்களையும் உலகின் முன் அம்பலப்படுத்திய, கசியவிடப்பட்ட தகவல்களை அவர் பிரசுரித்தார் என்பதற்காக, அவர்கள் விக்கிலீக்ஸ் மற்றும் அதன் பதிப்பாசிரியர் மீது கடும் விரோதம் கொண்டுள்ளனர். அமெரிக்க அரசு அசான்ஜை மவுனமாக்கவும், மற்றும் அவரை ஒரு கண்துடைப்பு வழக்கு விசாரணையில் இழுத்து, அவர் மீது மோசடியான “தேசத் துரோக" குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலமாக கொள்கைரீதியில் செயல்படும் அனைத்து பத்திரிகையாளர்களையும் மற்றும் இரகசியங்கள் வெளியிடுவோரையும் பீதியூட்டவும் தீர்மானமாக உள்ளது. உண்மையை வெளியிட்டதற்காக நீண்டகால சிறைவாசம், அல்லது மரண தண்டனையையே கூட, அசான்ஜ் இப்போது முகங்கொடுக்கிறார்.
2010 இல், பிரிட்டனில் இருந்த போது, அசான்ஜ் அமெரிக்காவின் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அதற்கு பின்னர் விரைவிலேயே, ஒரு சுவீடன் வழக்கறிஞர் அவர் பாலியல் அத்துமீறல்கள் செய்திருக்கலாம் என்று அவருக்கு எதிராக கீழ்தரமான குற்றச்சாட்டுக்களை தொடுத்தார். அந்த குற்றச்சாட்டுக்கள் அவரை மவுனமாக்கவும், கணிசமானளவுக்கு விக்கிலீக்ஸிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவைப் பலவீனப்படுத்தவும் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியின் பாகமாக இருந்தது. அவரை சுவீடனிடம் ஒப்படைத்து, அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட செய்யப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக அவர் போராட நிர்பந்திக்கப்பட்டார். ஜூன் 2012 இல், அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு எதிரான அவரது சட்டபூர்வ இறுதி முறையீடு அரசியல்ரீதியில் உந்தப்பட்டு ஒரு பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட போது, அவர் இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டார்.
2016 இறுதியில், சுவீடன் அதிகாரிகள் இலண்டனில் வைத்தே அசான்ஜை விசாரிக்க உடன்பட்டனர், பின்னர் கடந்த ஆண்டு, அவர்கள் ஒரேயொரு குற்றச்சாட்டைக் கூட கைவிடாமல் அவர்கள் தங்களின் கண்துடைப்பு விசாரணையைக் கைவிட்டனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம், வாஷிங்டனுடன் சேர்ந்து, அரசியல் தஞ்சம் கோரிக் கொண்டே பிணையில் தலைமறைவாக இருப்பதற்காக அசான்ஜ் மீது வழக்கு தொடுத்து, சிறையில் அடைக்கும் அதன் நோக்கத்தைக் கைவிட மறுத்துள்ளது.
இந்நிலைமை இப்போது ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. 2012 இல் அசான்ஜிற்கு மிகவும் தைரியமாக அரசியல் தஞ்சம் வழங்கிய ஈக்வடோரிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷின் ஆழமான அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டது. ஒன்பது வாரங்களுக்கு முன்னர், மார்ச் 28 இல், அது அசான்ஜிற்கான அனைத்து தகவல் தொடர்புகளையும், மற்றும் பார்வையாளர்களைப் பார்ப்பதற்கான அவர் வசதிகளையும் முற்றிலுமாக வெட்டியது.
ஈக்வடோரிய அரசாங்கம் அதன் தூதரகத்திலிருந்து அவரே "முன்வந்து தானாக" வெளியேற செய்ய அசான்ஜ் மீது பெரும் அழுத்தமளிப்பதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர் ஏறத்தாழ முழுமையாக தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பே கூட, அசான்ஜின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவர் அண்மித்து ஆறு ஆண்டுகளாக, சூரிய ஒளியைக் காணாமல் ஒரு மிகச் சிறிய அறையில், நடைமுறையளவில் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவர் வெளியே வர மறுத்தால், அவருக்கு தஞ்சம் அளித்திருப்பதைக் கைவிட்டு, பிணையில் தலைமறைவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களுக்காக அவரை பிரிட்டிஷ் போலிஸிடம் ஒப்படைக்கவும் ஈக்வடோரிய அதிகாரிகள் கோழைத்தனமாக பிரிட்டனுடன் விவாதித்து வருவதாக அவர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
அமெரிக்க சிஐஏ மற்றும் மற்ற போலிஸ்-உளவுத்துறை முகமைகளும் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு வருவதற்கான அவர்களது உத்தரவாணைகளுடன் இறக்கைக்கட்டி பறக்க காத்துக் கொண்டிருக்கின்றன. இரகசியங்களை வெளியிடுவோரை இல்லாமல் ஆக்கவும் மற்றும் உலகிலிருந்து அதன் குற்றங்களை மறைக்கவும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தீர்மானமாக இருப்பதை அடிக்கோடிடும் வகையில், சிஐஏ விக்கிலீக்ஸை "அரசு-சாரா விரோத உளவுத்துறை முகமை" என்று முத்திரை குத்தியது, அதேவேளையில் அமெரிக்க அரசோ அசான்ஜைக் கைது செய்வது "முன்னுரிமையில்" இருப்பதாக அறிவித்துள்ளது.
ஜூலியன் அசான்ஜைப் பாதுகாக்க உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், விவரிப்புகளும் பிற பொது நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
ஈக்வடோரிய தூதரக கட்டிடத்தில் அவர் நுழைந்த தேதியின் ஆறாம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில், ஜூன் 19 இல் இலண்டனில் அக்கட்டிடத்திற்கு வெளியே விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வரும் விழிப்புணர்வு போராட்டத்தை ICFI மற்றும் WSWS ஆதரிக்கிறது.
தொடர்புகொள்வதற்கும் பார்வையாளர்களைப் பார்ப்பதற்குமான அசான்ஜின் உரிமைகளை ஈக்வடோரிய அரசாங்கம் மீண்டும் வழங்க வேண்டும். அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியிருப்பதால், அவரை அவருக்குத் தொல்லை கொடுப்பவர்களிடன் ஒப்படைக்க அதற்கு உரிமையில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், அதன் பங்கிற்கு, அவரது பிணையிலிருந்து அவர் நழுவியதாக அசான்ஜ் மீதான குற்றச்சாட்டுக்களைக் கைவிட வேண்டும், தாம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற நியாயமான கவலையினால் மட்டுமே அவசிய நடவடிக்கையாக அவர் பிணை எடுத்திருந்தார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, ஜூன் 17 ஞாயிறன்று மதியம் 1.00 மணிக்கு சிட்னியின் மத்திய டவுன் ஹால் சதுக்கத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர் மற்றும் பிற கொள்கைரீதியிலான விக்கிலீக்ஸ் பாதுகாப்பாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை அங்கீகரித்துள்ளனர். அசான்ஜின் நிபந்தனையற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப அழைத்து கொள்ளவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த ஆர்ப்பாட்டம் கோரும். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான எந்த முயற்சியிலிருந்தும் அவரைப் பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி மல்க்கம் டர்ன்புல்லின் அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அது கோரும்.
அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஓர் ஆஸ்திரேலிய பிரஜையாக ஜூலியன் அசான்ஜின் உரிமைகளைத் தாங்கிபிடித்து பாதுகாத்திருக்க கடமைப்பட்டவை என்றபோதும், அவை அதை முற்றிலும் அவமரியாதையுடன் கையாண்டுள்ளன. அதன் போர் குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களை அவர் அம்பலப்படுத்தினார் என்பதற்காக அமெரிக்க அரசால் தொந்தரவு படுத்தப்படுவதிலிருந்து அசான்ஜை, ஓர் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரைப் பாதுகாக்க ஆரம்பத்திலிருந்தே கான்பெர்ரா கடமைப்பட்டிருந்தது.
அதற்கு பதிலாக, பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கத்தில் இருந்து தொடங்கி, கான்பெர்ரா அசான்ஜை ஓநாய்களிடம் வீசியுள்ளது.
விக்கிலீக்ஸை வேட்டையாடுவதிலும், இன்னல்களுக்கு உள்ளாக்குவதிலும் கில்லார்ட் பகிரங்கமாக ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துழைத்தார். அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தி, கசியவிட்ட தகவல்களை அது பிரசுரித்ததை "சட்டவிரோதமானது" என்று தொழிற் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கா அசான்ஜை எந்தவொரு குற்ற வழக்கில் இழுத்தாலும் அதற்கு உதவுமென்று அது அறிவித்தது.
அதன் பங்கிற்கு, இந்த கூட்டணி, எதிர் கட்சியாக இருக்கையில், விக்கிலீக்ஸ் ஆசிரியரை ஈவிரக்கமின்றி தொழிற் கட்சி கையாள்வதன் மீது அடையாள விமர்சனங்களை வைத்திருந்தது. ஆனால் அது அரசாங்க பதவியேறியதும், விக்கிலீக்ஸிற்கு எதிராக அமெரிக்காவுடன் முந்தைய அரசாங்கத்தினது கூட்டுறவையே இதுவும் தொடர்ந்தது.
இதற்கான காரணம் மிகவும் எளிதானது. ஆஸ்திரேலிய ஆளும் ஸ்தாபகமும், தங்களின் அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து மிகப்பெரும் பணக்காரர்களும், ஜனநாயக உரிமைகளை விட, அல்லது ஆஸ்திரேலிய பிரஜைகளின் உயிர்களை விட ஆஸ்திரேலிய-அமெரிக்க இராணுவ கூட்டணியை மிக முக்கியமானதாக கருதுகின்றன. அனைத்திற்கும் மேலாக, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இதர இடங்களிலும் அமெரிக்க தலைமையிலான ஒவ்வொரு போர் குற்றங்களையும் ஆதரித்தன அல்லது பங்கெடுத்துள்ளன, மேலும் விக்கிலீக்ஸ் போன்ற ஊடக அமைப்புகளை ஒடுக்குவதற்கு பேரார்வத்துடன் இருப்பதில் அவை ஒன்றும் குறைந்தவை இல்லை.
தொழிலாள வர்க்கமும், மாணவர்களும், மற்றும் பேச்சு சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கின்ற ஒவ்வொரு அமைப்பும் இந்நிலைமையை இனியும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் மீதான தாக்குதல், குறிப்பாக ஆளும் உயரடுக்கிற்கு எதிரான எதிர்ப்பை மவுனமாக்கி, சமத்துவமின்மை மற்றும் போருக்கான அவர்களின் கொள்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் தணிக்கை செய்வதற்கான மற்றும் ஒடுக்குவதற்கான பரந்த பிரச்சாரத்தின் ஒரு கூர்மையான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.
சிட்னியில் ஜூன் 17 ஆர்ப்பாட்டமானது ஜூலியன் அசான்ஜைப் பாதுகாப்பதற்கான ஒரு பாரிய அரசியல் பிரச்சாரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.
இதில் தலையிட கான்பெர்ராவுக்கு அதிகாரமில்லை என்ற எந்தவொரு கூற்றும் ஒரு பொய்யாகும். அசான்ஜிற்கு உடனடியாக ஆஸ்திரேலிய தூதரக அந்தஸ்து வழங்கி, ஒரு தூதரக கடவுச்சீட்டை அளித்து, ஆஸ்திரேலிய தூதரக வாகனங்களில் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து வெளியில் கொண்டு வந்து, தூதரக விதிவிலக்கு உரிமைகளால் பாதுகாக்கப்பட்ட பிரிட்டிஷ் புலம்பெயர்வு மூலமாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வர முடியும்.
ஜூன் 17 ஆர்ப்பாட்டத்தைக் குறித்து எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு இத்தகவலைப் பரவலாக கொண்டு செல்லுமாறு நாம் விக்கிலீக்ஸ் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாவலர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம். இந்த ஆர்ப்பாடத்தில் பங்கெடுக்க உத்தேசமுள்ள, இதை அங்கீகரிக்கும் அமைப்புகள், sep@sep.org.au என்ற மின்னஞ்சலில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சிக்குத் தகவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை ஆமோதிக்கும் கருத்துக்கள் நாளையிலிருந்து WSWS இல் பிரசுரிக்கப்படும்.
ஜூலியன் அசான்ஜை விடுவி! அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப அனுப்ப கோரு!
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/assa-m30.shtml

Wednesday, 30 May 2018

மக்கள் முன்னணி வேண்டாம் - நடவடிக்கை குழுக்களுக்காக போராடுவோம்

For Committees of Action - Not the People’s Front

November 26, 1935
By Leon Trotsky
“மக்கள் முன்னணி” (People's Front) என்பது, ரடிக்கல் கட்சி மற்றும் அதேவகையிலான சிறிய பயனற்ற கட்சிகளின் வடிவத்தில், ஏகாதிபத்திய முதலாளித்துவத்துடன் பாட்டாளி வர்க்கம் கூட்டணி சேர்வதைக் குறித்து நிற்கிறது. இந்தக் கூட்டணி நாடாளுமன்ற வட்டங்களுக்கும் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலான வட்டங்களுக்கும் இரண்டுக்குமாய் விரிவு காண்கிறது. இரண்டு வட்டங்களிலுமே ரடிக்கல் கட்சியானது தனக்கு மட்டும் முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை பாதுகாத்து வைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாட்டு சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை முரட்டுத்தனமாய் திணிக்கிறது.
ரடிக்கல் கட்சியே கூட சிதைவுக்கு ஆட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் ஆதரவாளர்கள் அதிலிருந்து விலகி வலதுக்கும் இடதுக்கும் சாரிசாரியாய் செல்வதற்கான கூடுதல் சான்றினை ஒவ்வொரு புதிய தேர்தலும் வழங்குகின்றது. இன்னொரு பக்கத்திலோ, ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி இல்லாததால் சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வலிமையாக வளர்ந்து வருகின்றன. குட்டிமுதலாளி வர்க்கம் உட்பட உழைக்கும் மக்களின் பொதுவான போக்கு, இடது நோக்கி இருப்பது மிகத் தெளிவாய் இருக்கிறது. அதேபோல் தொழிலாளர்களது கட்சிகளின் தலைவர்களது நோக்குநிலையும் வலது நோக்கி என்பதை, பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது. வெகுஜனங்கள் தங்களது வாக்குகளின் மூலமும், போராட்டத்தின் மூலமும், ரடிக்கல் கட்சியை விரட்டியடிக்கத் தலைப்படும் சமயத்தில், ஐக்கிய முன்னணியின் (United Front) தலைவர்களோ, அதற்கு நேரெதிராய், அதனைக் காப்பாற்ற பிரயத்தனப்படுகின்றனர். ஒரு “சோசலிச” வேலைத்திட்ட அடிப்படையின் மீது பரந்துபட்ட தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அந்த நம்பிக்கையின் பெருவாரியான பகுதியினை, அந்த பரந்துபட்ட தொழிலாளர்கள் முற்றுமுதலாய் கொஞ்சம் கூட நம்பிக்கை வைக்காத ரடிக்கல் கட்சியிடம் மனமுவந்து ஒப்படைக்க இந்த தொழிலாளர் கட்சிகளின் தலைவர்கள் சென்றார்கள்.
“மக்கள் முன்னணி” அதன் இப்போதைய வேடத்தில் தொழிலாளர் ஜனநாயகத்தை மட்டுமல்லாது உத்தியோகபூர்வ அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தையும் கூட வெட்கமின்றி காலால் மிதித்துக் கொண்டிருக்கிறது. ரடிக்கல் கட்சி வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களின் போராட்டத்தில், எனவே மக்கள் முன்னணியில், பங்கேற்பதில்லை. அப்படியிருந்தும் ரடிக்கல் கட்சியானது இந்த முன்னணியில் சமமான இடத்தை மட்டுமன்றி சிறப்புரிமையான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறது; தொழிலாளர்களது கட்சிகள் தங்களது செயல்பாட்டை, ரடிக்கல் கட்சியின் வேலைத்திட்ட மட்டத்திற்கு கட்டுப்படுத்திக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த சிந்தனை l’Humanité சிடுமூஞ்சிகளால் மிகவும் உரத்த குரலில் முன்னெடுக்கப்படுகிறது.
மக்கள் முன்னணியில் ரடிக்கல் கட்சியினர் பெற்றிருக்கும் சிறப்புரிமையான இடத்தை சமீபத்திய செனட் தேர்தல்கள் சிறப்பான தெளிவுடன் வெளிச்சமிட்டுள்ளன. தொழிலாளர்களின் வசத்தில் இருந்த பல தொகுதிகளையும் பாட்டாளி-வர்க்கமல்லாத கட்சிகளுக்கு சாதகமாக தாங்கள் விட்டுக் கொடுத்ததான உண்மையை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பகிரங்கமாய் பெருமையடித்துக் கொண்டனர். சொத்துக்கான தகுதியை முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாக, ஐக்கிய முன்னணி பகுதியாக மறுஸ்தாபகம் செய்தது என்பதுதான் இதன் எளிமையான அர்த்தம் ஆகும்.
நேரடியான மற்றும் உடனடியான போராட்டத்திற்கான ஒரு அமைப்பாகத்தான் “முன்னணி” என்பது அது சிந்திக்கப்பட்டபோது இருந்தது. போராட்டப் பிரச்சினை என வருகையில், ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளித்துவ வர்க்கத்தின் பத்து பேருக்கு, அவர்கள் மக்கள் முன்னணியுடன் ஒட்டியிருப்பவர்களாயிருந்தாலும், சமம். முன்னணியின் புரட்சிகரப் போராட்ட வலிமையின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், தேர்தல் ரீதியான சிறப்புரிமைகள் எல்லாம் தொழிலாளர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே அன்றி ரடிக்கல் கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு அல்ல. ஆனால் சாரத்தில், சிறப்புரிமைகள் என்பதற்கே இங்கு இடமில்லை. மக்கள் முன்னணி ”ஜனநாயக”த்தைப் பாதுகாப்பதற்கு நோக்கம் கொண்டிருக்கிறதா? அப்படியானால் அது தன் சொந்த படிநிலைகளில் அதனை செயலுறுத்துவதில் இருந்து தொடங்கட்டும். அதன் அர்த்தம் என்னவெனில், மக்கள் முன்னணியின் தலைமையானது போராடும் வெகுஜனங்களின் விருப்பத்தின் நேரடியான மற்றும் உடனடியான பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.
எவ்வாறு? வெகு எளிது: தேர்தல்கள் மூலமாக. பாசிசத்திற்கு, லவாலின் போனபார்டிச ஆட்சிக்கு, ஏகாதிபத்தியவாதிகளின் போர் சதிக்கு, மற்றும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறையின் அனைத்து பிற வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் உடன்நின்று போராடுவதற்கான உரிமையை பாட்டாளி வர்க்கம் யாருக்கும் மறுக்கவில்லை. வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் தமது கூட்டாளிகளாக இருப்பவர்களிடம் அல்லது இருக்கத்தக்கவர்களிடம் வைக்கின்ற ஒரே கோரிக்கை என்னவென்றால் அவர்கள் செயலில் இறங்கிப் போராட வேண்டும் என்பதுதான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் போராட்டத்தில் உண்மையாக பங்கேற்றிருக்கின்ற அத்துடன் பொதுப்பட்ட ஒழுங்கிற்கு ஆட்பட தயாராய் இருக்கின்ற மக்களின் ஒவ்வொரு குழுவும் மக்கள் முன்னணியின் தலைமையில் செல்வாக்கு செலுத்துவதற்கு சம உரிமை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படைவீடு மற்றும் கிராமத்தில் ஒரு சமயத்தில் மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருப்பவர்களில் இருந்து ஒவ்வொரு இருநூறு, ஐநூறு அல்லது ஆயிரம் பேரும் போராட்ட நடவடிக்கைகளின் சமயத்தில் பிராந்திய நடவடிக்கைக் குழுவிற்கான தங்களது பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் அதன் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டவர்களாவர். கம்யூனிச அகிலத்தின் கடைசி காங்கிரஸ், டிமிட்ரோவ் அறிக்கை மீதான தனது தீர்மானத்தில், தேர்ந்தெடுக்கப்படுகின்ற நடவடிக்கை குழுக்கள் மக்கள் முன்னணிக்கான வெகுஜன ஆதரவைக் காட்டுகின்றன என்று கூறி, அந்தக் குழுக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது. உண்மையில் அந்த மொத்த தீர்மானத்திலும் இருந்த ஒரே முற்போக்கான சிந்தனை இது மட்டும் தான். ஆனால் துல்லியமாக அக்காரணத்தினாலேயே ஸ்ராலினிஸ்டுகள் அதனை நடைமுறைப்படுத்த எதனையும் செய்வதில்லை. முதலாளித்துவத்துடன் கூட்டு முறிந்து போகும் அச்சத்தில் எதனையும் அவர்கள் செய்வதற்குத் துணியவில்லை.
நிச்சயமாக, குழுக்களின் தேர்தல்களில் தொழிலாளர்கள் மட்டுமன்றி அரசு ஊழியர்கள், நிர்வாகிகள், முன்னாள் படைவீரர்கள், கலைஞர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளும் கூட பங்கேற்க இயலும். இவ்வாறாக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளுடன் நெருக்கமான இசைவில் நடவடிக்கை குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால் அவை தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலிருக்கும் கூட்டை சிக்கலின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன. இதனிடையே, மக்கள் முன்னணி அதன் இப்போதைய வடிவத்தில், பாட்டாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (ரடிக்கல் கட்சியினர்) இடையேயான வர்க்க ஒத்துழைப்புக்கான அமைப்பாக இருக்கிறதே அன்றி அதைத் தாண்டி எதுவுமில்லை. நடவடிக்கைக் குழுக்கள் உண்மையான வெகுஜன தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுவதானது முதலாளித்துவ இடைத்தரகர்களை (ரடிக்கல் கட்சியினர்) மக்கள் முன்னணியின் பொறுப்புகளில் இருந்து தானாகவே வெளியேற்றி விடும், இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து உத்தரவிடப்படும் கிரிமினல் கொள்கை சுக்குநூறாய் நொருக்கப்பட்டு விடும்.
ஆயினும், ஒரு நிர்ணயித்த தினத்தில் நேரத்தில் அனைத்து பாட்டாளி வர்க்க மற்றும் குட்டிமுதலாளித்துவ வெகுஜனங்களையும் அழைத்து, கொடுக்கப்பட்ட ஒரு சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கைக் குழுக்களைத் தேர்வு செய்வது சாத்தியம் என்று நினைத்தால் அது பிழையாகி விடும். இத்தகையதொரு அணுகுமுறை முழுக்க அதிகாரத்துவவயப்பட்டதாய் இருக்கும் என்பதோடு அதனாலேயே எவ்வித பலனுமற்றதாகிப் போய்விடும். தொழிலாளர்கள் தாங்களே நடவடிக்கைகளின் ஒரு பகுதியில் பங்கேற்று புரட்சிகரத் தலைமையின் அவசியத்தை உணரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களால் நடவடிக்கை குழுவினைத் தேர்வு செய்ய முடியும். இங்கே முன்நிற்கும் பிரச்சினை, அனைத்து மற்றும் ஒவ்வொரு மக்களது உத்தியோகபூர்வ ஜனநாயக பிரதிநிதித்துவமும் இருக்கிறதா என்பதல்ல மாறாக போராடும் வெகுஜனங்களின் புரட்சிகரப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதுதான். நடவடிக்கை குழு என்பது போராட்டத்திற்கான ஒரு எந்திரம். நடவடிக்கை குழு உருவாக்கத்தை நோக்கி உழைப்பவர்களின் எந்த அடுக்கு ஈர்க்கப்படும் என்பதை முன்னரே ஊகித்துக் கொண்டிருப்பது அர்த்தமில்லாதது: போராடும் வெகுஜனங்களிலான பிரிப்புக் கோடுகள் போராட்டத்தின் போக்கிலேயே ஸ்தாபிக்கப் பெறும்.
பிரான்சில் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், வெகுஜனங்களின் புரட்சிகர ஆற்றல் எல்லாம், துலோன், பிரெஸ்ட், மற்றும் லிமோஜ் போன்ற தனிமைப்பட்ட வெடிப்புகளாக விரயப்படுத்தப்பட்டு, உத்வேகம்குறைகின்ற நிலைக்கு பாதை வகுத்து விடும். இப்போதைய சூழ்நிலையில் மக்கள் முன்னணி அரசாங்கத்திடம் இருந்து மேலிருந்தான ஆசி தங்களுக்குக் கிட்டும்வரை வெகுஜனங்களை அணிதிரட்டாமலே வைத்திருப்பது என்பது சாத்தியமே என்று சிந்திப்பது நனவுடன் துரோகம் செய்பவர்களாலோ அல்லது மண்டையில் களிமண் கொண்ட நம்பிக்கையற்றவர்களாலோ தான் இயலும். இப்போதைய சூழ்நிலையில் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மோதல்கள், நேரடிக் கிளர்ச்சிகள் ஆகியவை முழுக்க முழுக்க தவிர்க்கவியலாதவை ஆகும். பாட்டாளி வர்க்கக் கட்சியின் பணி இந்த இயக்கங்களை தடுப்பதோ அல்லது முடக்குவதோ அல்ல மாறாக அவற்றை ஒன்றிணைப்பதும் சாத்தியமான மிகப்பெரும் சக்தியை அவற்றில் உள்ளிடுவதுமே ஆகும்.
எல்லாவற்றுக்கும் மேல் சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் ரடிக்கல் கட்சியினரை பயமுறுத்தக் கூடாது என்று அஞ்சுகின்றனர். ஐக்கிய முன்னணி எந்திரம் வெகுஜனங்களின் ஆங்காங்கான இயக்கங்களின் விடயத்தில் ஒழுங்கமைவுக் குலைப்பாளரின் பாத்திரத்தை நன்கு நனவுடனே ஆற்றுகிறது. இந்த எந்திரத்தின் மீது வெகுஜனங்கள் காறி உமிழாமல் காப்பதற்கே மார்சோ பிவேர் வகை “இடதுகள்” சேவை செய்கின்றனர். போராடும் வெகுஜனங்களுக்கு, இத்தருணத்திற்குரிய அவசியப்பாடுகளை பூர்த்தி செய்கின்ற ஒரு எந்திரத்தை போராட்ட நிகழ்ச்சிப்போக்கிலேயே உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் மட்டுமே இந்த சூழ்நிலை காப்பாற்றப்பட முடியும். சரியாக இந்த தேவையையே நடவடிக்கை குழுக்கள் நோக்கமாக கொண்டுள்ளன. துலோன் மற்றும் பிரெஸ்ட் போராட்ட சமயத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு பிராந்திய போராடும் அமைப்பை உருவாக்குவதற்கு அழைப்பு விடப்பட்டிருந்தால் அவர்கள் எந்த தயக்கமும் இன்றி அதனை உருவாக்கியிருப்பார்கள். லிமோஜில் குருதிகொட்டும் தாக்குதல் நடந்த அடுத்த நாளிலேயே, தொழிலாளர்களும் குட்டிமுதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பகுதியும் இந்த குருதி கொட்டிய நிகழ்வுகளை விசாரணை செய்யவும் வருங்காலத்தில் அவை நடைபெறாமல் தடுக்கவும் ஒரு தேர்ந்தெடுத்த குழுவை உருவாக்குவதற்கு தாங்கள் தயாராய் இருப்பதை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த ஆண்டு கோடையில் இராணுவத்தினர் வசிப்பிடங்களில் இராணுவ சேவைக்கால நீட்டிப்பை எதிர்த்து நடந்த இயக்கத்தின் போது இத்தகையதொரு பாதை ஆலோசிக்கப்பட்டிருந்தால் இராணுவத்தினர் எந்த இழுபறியும் இன்றி பட்டாலியன், ரெஜிமெண்ட், மற்றும் காரிசன் நடவடிக்கைக் குழுக்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள். அநேக சந்தர்ப்பங்களில் பிராந்திய அளவிலும் சில சமயங்களில் தேசிய அளவிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் ஒவ்வொரு படியிலும் எழுகின்றன, தொடர்ந்து எழும். இந்த வகையான சந்தர்ப்பம் ஒன்றினைக் கூட தவற விடுவதை தவிர்ப்பதுதான் நமது பணியாகும். கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரங்களின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே சாதனமாக நடவடிக்கை குழுவின் முக்கியத்துவத்தை தெளிவாய் புரிந்து வைத்திருப்பதுதான் இதற்கான முதல் நிபந்தனை ஆகும்.
அப்படியானால் நடவடிக்கை குழுக்கள் என்பவை கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான பிரதியீடுகள் என்று கூறுவதுதான் இதன் அர்த்தமா? இந்த வகையில் கேள்வியை வைப்பதே மடத்தனமானது. வெகுஜனங்கள் தங்கள் அனைத்து சிந்தனைகள், பாரம்பரியங்கள், குழுவாக்கங்கள் மற்றும் அமைப்புகளுடனும் தான் போராட்டத்திற்குள் நுழைகிறார்கள். கட்சிகள் தொடர்ந்து இருக்கும் போராடும். நடவடிக்கை குழுக்களின் தேர்தல்களின் போது ஒவ்வொரு கட்சியும் இயல்பாகவே தங்களது சொந்த ஆதரவாளர்களை தேர்வு செய்யவே தலைப்படும். ஒரு பெரும்பான்மையின் மூலமாக நடவடிக்கை குழுக்கள் முடிவுகளை எடுக்கும் (கட்சி மற்றும் கன்னை குழுவாக்கங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில்). கட்சிகளைப் பொறுத்தவரை, நடவடிக்கை குழுக்களை ஒரு புரட்சிகரப் பாராளுமன்றம் என்று அழைக்கலாம்: கட்சிகள் விலக்கி வைக்கப்படுவதில்லை -அதற்கு நேரெதிராய் அவை அவசியமான வகையில் முன்னெதிர்பார்க்கப்படுகின்றன- அதேசமயத்தில் அவை நடவடிக்கைகளில் சோதிக்கப்படுகின்றன, அத்துடன் வெகுஜனங்கள் இற்றுப் போன கட்சிகளின் செல்வாக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கற்றுக் கொள்கிறார்கள்.
அப்படியானால், நடவடிக்கைக் குழுக்கள் என்பவை வெறுமனே சோவியத்துகள் தான் என்று அர்த்தமா? குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் நடவடிக்கைக் குழுக்கள் தங்களை சோவியத்துகளாக உருமாற்றிக் கொள்ள முடியும். ஆயினும், நடவடிக்கைக் குழுக்களை இந்தப் பெயரில் அழைப்பது பிழையாகி விடும். இன்று, 1935ல், சோவியத்துக்கள் என்ற வார்த்தையுடன் ஏற்கனவே கைப்பற்றியிருக்கும் அதிகாரம் குறித்த கருத்தாக்கத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவே வெகுஜனங்கள் பழக்கப்பட்டுள்ளனர்; ஆனால் இன்றைய பிரான்ஸ் இதிலிருந்து கணிசமாய் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. ரஷ்ய சோவியத்துகள் தங்களது ஆரம்ப கட்டங்களில் அவை பின்னாளில் ஆனதில் சிறிதளவும் கூட இருக்கவில்லை, அந்த நாட்களில் அவை பெரும்பாலும் தொழிலாளர்கள் குழுக்கள் அல்லது வேலைநிறுத்தக் குழுக்கள் என்ற மத்தியமான பெயரில் தான் அழைக்கப்பட்டன. பிரான்சின் உழைக்கும் மக்களை ஒரு தற்காப்பு போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதும் இதன்மூலம் எதிர்வரும் தாக்குதல்களில் தங்களது சொந்த ஆற்றல் குறித்த நனவை அவர்களுக்கு புகட்டுவதும் இப்போதைய கட்டத்தில் நடவடிக்கை குழுக்கள் கொண்டுள்ள கடமைகளாகும். உண்மையான சோவியத்துகளின் புள்ளி வரை விடயங்கள் செல்லுமா என்பது, பிரான்சில் நிலவும் தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலை, இறுதியான புரட்சிகர முடிவுகளாய் கட்டவிழுமா என்பதைப் பொறுத்தது. இது நிச்சயமாக புரட்சிகர முன்னணிப்படையின் விருப்பத்தை மட்டும் சார்ந்ததல்ல மாறாக ஏராளமான புற நிலைமைகளையும் சார்ந்தது; எப்படியாயினும், இன்று மக்கள்’ முன்னணி என்ற முட்டுக்கட்டைக்கு முகம்கொடுத்து நிற்கின்ற வெகுஜன இயக்கமானது நடவடிக்கைக் குழுக்கள் இன்றி முன்னால் செல்ல முடியாது.
தொழிலாளர் போர்ப்படையை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வது ஆகிய பணிகள் எல்லாம், போராடும் வெகுஜனங்கள் தமது அதிகாரம் படைத்த அங்கங்களின் மூலம் தாங்களாகவே இந்த வேலைகளை எடுத்துச் செய்யவில்லை என்றால் வெறும் காகிதத்தில் மட்டும் தான் இருந்து கொண்டிருக்கும். போராட்டத்தில் பிறக்கின்ற நடவடிக்கை குழுக்கள் மட்டுமே போராளிகளை ஆயிரக்கணக்கில் இன்றி பத்தாயிரக்கணக்கில் கொண்ட ஒரு உண்மையான போர்ப்படையை  உறுதியளிக்க முடியும். நாட்டின் மிக முக்கியமான மையங்களைத் தழுவி அமைந்திருக்கும் நடவடிக்கைக் குழுக்கள் மட்டுமே போராட்டத்தின் இன்னும் தீர்மானகரமான வழிமுறைகளுக்கு உருமாறுவதற்கான தருணத்தை தெரிவுசெய்ய முடியும், அப்போராட்டத்தின் தலைமை நியாயமான வகையில் அவற்றினுடையதாக அமைந்திருக்கும்.
மேலே வரையப்பட்ட முன்மொழிவுகளில் இருந்து, பிரான்சில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கான ஏராளமான முடிவுகள் பிறக்கின்றன. முதன்மையான முடிவு Gauche Révolutionnaire [புரட்சிகர இடது] என்று அழைக்கப்படும் ஒன்றின் விடயத்தையும் தொடுகிறது. இந்தக் குழுவாக்கம், புரட்சிகர வெகுஜனங்களின் இயக்கத்தை ஆளும் நியதிகளை கொஞ்சம் கூட புரிந்துகொண்டிராத தன்மையை குணாதிசயமாகக் கொண்டது. மத்தியவாதிகள் எவ்வளவு தான் “வெகுஜனங்கள்” குறித்துப் பிதற்றினாலும், அவர்கள் எப்போதும் சீர்திருத்த எந்திரத்தை நோக்கியே தங்களை நோக்குநிலை அமைத்துக் கொள்கின்றனர். மார்சோ பிவேர் ஏதேனும் ஒரு புரட்சிகர முழக்கத்தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு, அதனை “அமைப்பு ஒற்றுமை” என்னும் அருவமான கோட்பாட்டிற்கு அடிபணியச் செய்கிறார், அது நடைமுறையில் புரட்சிகரவாதிகளுக்கு எதிராக தேசப்பற்றுவாதிகளுடன் ஒற்றுமை என்பதாகத் திரும்புகிறது. ஒன்றுபட்ட சமூக-தேசப்பற்று எந்திரங்களின் எதிர்ப்பை நொருக்குவதென்பது வெகுஜனங்களுக்கு வாழ்வா சாவா என்ற கேள்வியாக வந்து நிற்கின்ற அந்த சரியான தருணத்தில், இடது மத்தியவாதிகளோ, புரட்சிகரப் போராட்டத்தின் நலன்களுக்கும் மேலான முற்றுமுதலான ஒரு “நன்மை”யாக இந்த எந்திரங்களின் ”ஒற்றுமை”யைக் கருதுகின்றனர்.
சமூக தேசப்பற்றுவாதிகளின் துரோகத் தலைமையில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்கும் அவசியத்தை முற்றுமுழுதாக புரிந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே நடவடிக்கை குழுக்கள் கட்டப்படுவதாக இருக்கும். அவ்வாறிருக்க, பிவேர் சிரோம்ஸ்கியை பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் புளூமைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவரோ தோரஸுடன் சேர்த்து ஏரியோவை பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் லவாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். பிவேர், மக்கள் முன்னணியின் அமைப்புமுறைக்குள் நுழைகிறார் (சென்ற தேசியக் குழு கூட்டத்தில் புளூமின் அவமானகரமான தீர்மானத்திற்கு ஆதரவாய் அவர் வாக்களித்தார் என்றால் காரணமில்லாமல் இல்லை), மக்கள் முன்னணி லவாலின் போனபார்டிச ஆட்சிக்குள் ஒரு பிரிவாய் நுழைகிறது. போனபார்டிச ஆட்சியின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. எதிர்வரும் தீர்மானகரமான காலகட்டம் மொத்தத்தின் பாதையிலும் மக்கள் முன்னணியின் தலைமையானது (ஏரியோ- புளூம் - கஷான் – தோரஸ் – சிரோம்ஸ்கி - பிவேர்) தனது பாதத்தை ஊன்றி தொடர்ந்து நிற்பதில் வெற்றிபெறுமானால், அப்போது போனபார்டிச ஆட்சியானது தவிர்க்கவியலாமல் பாசிச ஆட்சிக்கு வழிவிடும். நடப்பில் உள்ள தலைமையின் கலைப்புத்தான், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிபந்தனையாகும். இந்த நிலைமைகளில் “ஐக்கியம்” என்ற முழக்கம் முட்டாள்தனம் மட்டுமல்ல ஒரு குற்றமும் கூட. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச சங்கத்தின் முகவர்களுடன் எந்த ஐக்கியமும் கிடையாது. திட்டமிட்டு துரோகமிழைக்கும் அவர்களது தலைமைக்கு எதிராக புரட்சிகரமான நடவடிக்கை குழுக்களை முன்நிறுத்துவது அவசியமாகும். மார்சோ பிவேர் ஐ தலைமையில் கொண்டு Gauche Révolutionnaire என்று அழைக்கப்படுவதானதின் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை தாட்சண்யமின்றி அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் இந்த குழுக்களை கட்டுவது சாத்தியமாக முடியும். இந்த விடயத்தில் நம்முடைய பொறுப்பாளர்களிடையே பிரமைகள் அல்லது சந்தேகங்களுக்கு நிச்சயமாக எந்த இடமும் இல்லை.
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/acti-m30.shtml

Sunday, 27 May 2018

தூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும்

The Tuticorin massacre and Modi’s India

Keith Jones
26 May 2018
னிக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மற்ற தலைவர்களும் இந்தியாவின் "வளர்ச்சியைக்" குறித்த புகழுரைகளோடு, அவர்கள் பதவியேற்று நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
வளர்ச்சி யாருக்கு? சமகாலத்திய இந்தியாவின் சமூக வாழ்க்கை மற்றும் வர்க்க உறவுகளின் காட்டுமிராண்டித்தனம், ஒரு தாமிர உருக்காலையை மூட வேண்டுமென கோரிய உழைக்கும் மக்களை செவ்வாயன்று பொலிஸ் படுகொலை செய்ததில் முழுவதுமாக அம்பலமானது, அந்த ஆலை தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரின் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், நச்சார்ந்த இரசாயனங்களைச் சுற்றுச்சூழலுக்குள் கலந்து விட்டும், நீண்டகாலமாக அந்நகரை மாசுப்படுத்தி வந்துள்ளது.
அந்த படுகொலையில் 12 பேர் கொல்லப்பட்டு, 60 க்கும் அதிகமானவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஓர் அரசு ஆத்திரமூட்டலின் அனைத்து முத்திரைகளையும் தாங்கியுள்ளது. தமிழ்நாடு மாநில அதிகாரிகள் "பொது ஒழுங்குக்கு" அது அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி, முன்கூட்டியே அந்த போராட்ட நாட்களை குற்றகரமாக்கி இருந்தனர்.
அவர்கள் 1,500 போலிஸ் அதிகாரிகளை அனுப்பினர், அந்த "சட்டவிரோத" ஆர்ப்பாட்டத்தின் மீது அவர்கள் உடனடியாக தாக்குதல் நடத்தினர், பின்னர் அவர்கள் எதிர்பார்க்கப்பட்டதையும் விட 20,000 பேர் கொண்ட மிகப்பெரிய கூட்டம் போராட முன்வந்ததும் கொலைகாரப் படையை நாடினர். அவர்களின் சொந்த வழிமுறைகளையே மீறிய விதத்தில், போலிஸ் எந்தவித எச்சரிக்கை சமிக்ஞையும் வழங்காமல், போராட்டத்தின் முன்னணியில் இருந்தவர்களைக் கொல்ல இலக்கு வைத்தது. காணொளிகளும் நேரில் பார்த்தவர்களின் ஆதாரங்களும் எடுத்துக்காட்டுவதைப் போல, மிகவும் திட்டவட்டமாக, பலியானவர்களின் உடல்களே சான்றளிக்கின்ற நிலையில், குறிபார்த்து சுடும் போலிஸ்காரர்கள் போராட்டக்காரர்களின் கால்களை அல்ல, அவர்களின் தலைகளையும், உடல்களையும் குறி வைத்திருந்தனர்.
தமிழ்நாடு மற்றும் இந்தியா எங்கிலுமான மக்கள் இந்த போலிஸ் நடவடிக்கை மீது சீற்றத்துடன் குரல் கொடுத்த அதேவேளையில், மோடி ஆட்சியும், பிஜேபி இன் நெருங்கிய கூட்டாளியுமான தமிழ்நாட்டின் அஇஅதிமுக மாநில அரசாங்கமும், தூத்துக்குடி கலவரத்தில் படைகள் அவசியமானரீதியிலும் உரிய முறையிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உடனடியாக அறிவித்ததுடன், அடுத்தடுத்தும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறைக்குச் சதி செய்தன. இதில் உள்ளடங்குபவை: அம்மாநிலத்தின் மூன்று தென்கீழ் மாவட்டங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய அணுகுதலை ஐந்து நாட்களுக்கு முழுமையாக துண்டிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் நிலைநிறுத்த வேண்டியிருக்கலாம் என்று துணை இராணுவ மத்திய ரிசர்வ் போலிஸ் படையைத் தயாராக வைக்கப்பட்டது, தூத்துக்குடி சம்பவங்கள் மீது மக்களின் ஆவேச எதிர்ப்பைப் பயன்படுத்தி "இடதுசாரி தீவிரவாதிகள்" வன்முறையைத் தூண்ட திட்டமிடுவதாக உளவுத்துறை முகமை அச்சுறுத்தும் விதத்தில் எச்சரிக்கைகளை விடுத்தது.
1996 இல் வேதாந்தா ரிசோர்சர்ஸின் அந்த உருக்கு ஆலை திறக்கப்பட்டதிலிருந்தே அதிலிருந்து வெளியேற்றப்பட்ட சல்பர் டைஆக்சைடு, ஈயம், ஆர்சனிக் மற்றும் இதர நச்சு இரசாயனங்களது ஆபத்துக்களுக்கு எதிராக தூத்துக்குடி மக்களும் தென்கிழக்கு தமிழ்நாட்டு மீனவர்களும் போராடி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களின் புகார்களை அதிகாரிகள் முற்றிலும் அலட்சியப்படுத்தி உள்ளனர்.
வேதாந்தா நிறுவனத்திற்கும் அதன் பல கோடி பில்லியனரும் தொழிலதிபருமான அனில் அகர்வாலுக்கும் இந்த மாசுக்களைக் கலப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது, இது உள்ளூர் ஜனங்களை நோய்வாய்படுத்தி உயிரிழக்க செய்துள்ளதுடன், தென்கிழக்கு தமிழ்நாட்டின் கடற்பகுதி தொழில்களான முத்துக் குளித்தல் மற்றும் மீன்பிடி தொழில்களை நாசப்படுத்தி உள்ளது. தூத்துக்குடி உருக்காலையை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலையாக ஆக்கும் வகையில் அதன் ஆண்டு உற்பத்தித்திறனை ஆண்டுக்கு 800,000 டன்களாக இரட்டிப்பாக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியதே, அந்த உருக்காலையை மூட வேண்டுமென்ற இந்த மிகச் சமீபத்திய ஆவேசமான எதிர்ப்பிற்குத் தூண்டுதலாக இருந்தது.
செவ்வாய்கிழமை படுகொலை மீதான மக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு முயற்சியில், தமிழ்நாடு அரசும் நீதிமன்றங்களும் அந்த உருக்காலையைக் காலவரையின்றி மூடுமாறு உத்தரவிட்டுள்ளன, அத்துடன் அது செயல்படுத்தப்பட்டுள்ளதாக காட்டுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த உருக்காலையின் மின் வினியோகத்தைத் துண்டித்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால் இந்திய அரசும் மற்றும் அரசியல் உயரடுக்கும், அகர்வால் மற்றும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கின் கட்டளைக்கு அவர்கள் அடிபணிந்தவர்கள் என்பதையும், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் சமூக அவலத்தை அவர்கள் "வளர்ச்சிக்கான விலையாக" பார்க்கிறார்கள் என்பதையும் சந்தர்ப்பத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன. வேதாந்தா ஆகக்குறைந்த சுற்றுச்சூழல் தரமுறைகளைக் கூட கடைபிடிக்கவில்லை என்பதால் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட அவர்கள் நிர்பந்திக்கப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே, தொலைவில் என்பதை விட விரைவிலேயே, அவர்கள் அந்த உருக்காலையை மீண்டும் திறக்க பச்சைக்கொடி காட்டுவார்கள்.
இதுபோன்ற சமூக குற்றங்கள் இந்தியா எங்கிலும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன. இந்தியாவை பூகோளரீதியில் ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான அதன் உந்துதலில், இந்திய முதலாளித்துவம், தனியார்மயமாக்கல், நெறிமுறைகளைத் தளர்த்துதல் மற்றும் பெருநிறுவன வரி வெட்டுகள் என சமூகரீதியில் நாசகரமான திட்டநிரலை நடைமுறைப்படுத்தி உள்ளது, அதேவேளையில் மருத்துவ நலன், கல்வி மற்றும் விவசாயத்திற்கான உதவிகளில் இருந்து பறித்த ஆதாரவளங்களை, பெருநிறுவன உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவது மற்றும் அணுஆயுதமயப்படுத்துவது ஆகியவற்றிற்குத் திருப்பி விட்டு வருகிறது.
இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களிடையே அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பானது, அரசு ஒடுக்குமுறை மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் கேடுகெட்ட ஜாதி அரசியலைத் தூண்டுவதுடன் எதிர்க்கொள்ளப்படுகிறது.
பூகோளரீதியில் இணைக்கப்பட்ட இந்தியாவின் புதிய தொழில்துறையில் மேலோங்கியுள்ள கொடூர மலிவு-உழைப்பு ஆட்சியைச் சவால் விடுக்க துணிந்ததற்காக, 13 மாருதி-சுசூகி வாகனத்துறை தொழிலாளர்கள் ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டில் உற்பத்தியை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் மோடியினது "இந்தியாவில் உற்பத்தி செய்க" பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மறுஉத்தரவாதம் வழங்கவும், அத்தொழிலாளர்கள் மீதான தண்டனையை முன்மாதிரியாக்கும் அடித்தளத்தில் வாதி தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் வழங்கப்பட்ட அந்த கொடுமையான வர்க்க நீதியைப் பகிரங்கமாக நியாயப்படுத்தினர்.
ஒரு கால்-நூற்றாண்டு நவ-தாராளவாத "சீர்திருத்தம்" இந்தியாவை உலகில் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மொத்த இந்தியர்களில் முக்கால்வாசிப் பேர் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையில் வாழவிடப்பட்டுள்ள அதேவேளையில், உயர்மட்ட 1 சதவீதத்தினர் மொத்த வருவாயில் 23 சதவீதத்தை, நாட்டின் மொத்த செல்வவளத்தில் 60 சதவீதத்தை விழுங்கி உள்ளார்கள்.
இந்த சமூக துருவமுனைப்பாடு இந்திய பில்லியனர்களின் அதிவேக வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1990 களின் மத்தியில் வெறும் இரண்டு இந்திய பில்லியனர்களே இருந்தனர், இப்போது, ஃபோர்ப்ஸ் தகவல்களின்படி, 131 பேர் இருக்கிறார்கள். இதன் அர்த்தம், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ரஷ்யாவைக் கடந்து, இந்தியா, அதாவது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சற்று அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ள இது, உலக பில்லியனர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர்களை கொண்டுள்ளது.
மோடி ஆட்சி —முதலாளித்துவ சந்தையின் மீது பெருமதிப்பு மற்றும் வெறித்தனமான வகுப்புவாதத்துடன் தனிநபர் செல்வவளம் என இவ்விரண்டும் ஒன்றிணைந்த ஓர் அரசாங்கமான இது— சமூக சூறையாடல் நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டமாகும்.
இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கு, வேறு யாருமல்ல அதன் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி தலைமையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தவும் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்தவும் மே 2014 இல் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. நான்காண்டு கால பிஜேபி அரசாங்கம் முதலீட்டாளர்-சார்பு "சீர்திருத்தத்தை" தீவிரப்படுத்தியதுடன், ஏற்கனவே கேலிக்கூத்தாக இருக்கும் இந்தியாவின் சமூக செலவினங்களை வெட்டியது, மேலும் இந்தியாவை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய அத்துமீறல்களுடன் ஒருங்கிணைத்தது.
பரந்த பெருந்திரளான இந்திய மக்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கில் இந்திய முதலாளித்துவ வளர்ச்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், இது அதிகரித்தளவில் ஒரு புதிய கிளர்ச்சிகரமான தொழிலாள வர்க்கத்தை மேலுயர்த்தி உள்ளது.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு, கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவின் மிகவும் வேகமான நகர்மயமாக்கலை அனுபவித்துள்ளதுடன், சமூக எதிர்ப்பின் ஒரு மையமாக எழுச்சி கண்டிருப்பது தற்செயலானதல்ல. தேசிய போலிஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணைய தகவல்களின்படி, வழங்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களின் கடைசி ஆண்டான 2016 இல், வேறெந்த மாநிலத்தையும் விட தமிழ்நாடு தான் போராட்டங்களில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டிருந்தது, அது வேலைநிறுத்தம் ஆகட்டும், ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும் அல்லது அரசாங்க-எதிர்ப்பு கூட்டங்கள் ஆகட்டும், நாளொன்றுக்கு சராசரி 47 ஆக இருந்தது.
பாரதிய ஜனதா கட்சியும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கும் இந்தியாவின் "வளர்ச்சியை" கொண்டாடுகின்ற அதேவேளையில், நாடோ ஒரு சமூக வெடி உலையாக உள்ளது என்பதே யதார்த்தம்—இது உலக முதலாளித்துவத்தின் உடைவால் ஏற்படுத்தப்பட்ட, அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அதிர்ச்சிகளால் எரியூட்டப்பட்டு வருகிறது.
அதாவது இந்த பாரிய பெருந்திரளான சமூக கோபம், ஒட்டுமொத்தமாக மோடி ஆட்சிக்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் இதுவரையில் ஒரு நனவுபூர்வமான தொழிலாள வர்க்க அரசியல் சவாலை மேலுயர்த்தவில்லை என்பது பிரதானமாக ஸ்ராலினிச கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் அதன் பழைய, சிறிய கூட்டாளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் அவற்றின் தொழிற்சங்க இணைப்புகளான CITU மற்றும் AITUC ஆகியவற்றின் அரசியல் துரோகத்தினால் ஆகும்.
பல பத்தாண்டுகளாக, ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஓர் உள்ளார்ந்த பாகமாக மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் மிக முக்கிய சமூக முண்டுகோலாக செயல்பட்டு வந்துள்ளனர். பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் நீடித்த வறுமை மீதான மக்கள் கோபத்தைச் சுரண்டியே பிஜேபி அதிகாரத்திற்கு மேலுயர்ந்தது. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் அடுத்தடுத்து வந்த, அவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கங்களை, நவ-தாராளவாத "சீர்திருத்ததைப்" பின்பற்றியதும் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை மேற்கொண்டதுமான இதை ஆதரித்ததன் மூலமாக இதற்கு வழி வகுத்திருந்தனர், மேலும் அவர்கள் அதிகாரத்தில் இருந்த மாநிலங்களிலும், அவர்களே எதை "முதலீட்டாளர்கள்-சார்பு" கொள்கைகள் என்று வரையறுத்தார்களோ அதையே நடைமுறைப்படுத்தினார்கள்.
வர்க்க போராட்டத்தின் தீவிரப்படலுக்கு அவர்கள் மேற்கொண்டும் வலதுக்கு சாய்ந்ததன் மூலமாக விடையிறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், அவர்கள் அழுகிப்போன இந்திய அரசின் "ஜனநாயக" அமைப்புகளில் —இதே அமைப்புகள் தான் செவ்வாய்கிழமை படுகொலைக்கும் மற்றும் மாருதி சுசூகி தொழிலாளர்களைப் பலிகொடுப்பதற்கும் பொறுப்பாகின்றன என்ற நிலையில்— இவற்றின் மீது நம்பிக்கை வைக்குமாறும், சமீபத்தில் வரையில் இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்க கட்சியாக இருந்ததும், பல வலதுசாரி பிராந்தியவாத மற்றும் ஜாதிய கட்சிகளின் குடையாக விளங்குவதுமான காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் தொழிலாள வர்க்கத்திடம் வலியுறுத்துகின்றனர்.
தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஸ்ராலினிஸ்டுகளின் மனோபாவம், ஜோடிப்பு வழங்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி-சுசூகி தொழிலாளர்களுக்கு அவர்கள் காட்டும் விரோதத்தால் பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளிமார்கள் "மாருதி சுசூகி செய்வதை" போல என்று தொழிலாளர்களை வழமையாக அச்சுறுத்துகின்ற போதும், ஸ்ராலினிஸ்டுகள், அவர்களை விடுவிப்பதற்காக போராட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் வழக்கை பிரபல்யப்படுத்த கூட மறுத்து, இந்த வர்க்க-போர் கைதிகளை 19 ஆம் நூற்றாண்டு தென்னிந்தியாவின் அனாதைகளைப் போல கையாண்டு வருகின்றனர். இது ஏனென்றால் மாருதி சுசூகி தொழிலாளர்களின் பாதுகாப்பையும் வறிய கூலிகள் மற்றும் அபாயகரமான வேலைவாய்ப்புக்கு எதிரான போராட்டத்தையும் இணைக்கும் ஒரு பிரச்சாரமானது, காங்கிரஸ் கட்சியுடனான அவர்களின் கூட்டணியையும், பெருவணிகங்கள் உடனான அவர்களது தொழிற்சங்கங்களின் சௌகரியமான, பெருநிறுவன உறவுகளையும் முறித்துவிடும் என்பதால் ஆகும்.
உலகெங்கிலும் போலவே, இந்தியாவிலும் சமூக சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மிக அவசரமான பணி, தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட அதன் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமாகும். இந்த முன்னோக்கை செயல்படுத்துவதற்கான மத்திய பணி, இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) ஒரு பிரிவைக் கட்டமைப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டமைப்பதாகும்.
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/kudi-m28.shtml

இந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்

Fearful of widening mass anger over police shootings

Indian authorities shut down polluting copper plant in Tuticorin

போலிஸ் துப்பாக்கிச்சூடு மீது பரவிவரும் பாரிய கோபத்திற்கு அஞ்சி,இந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்

By Deepal Jayasekera
25 May 2018
தூத்துக்குடியில் வேதாந்தா ரிசோர்சஸ் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் குறைந்தபட்சம் 13 பேரைக் கொன்று, 100 க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்திய, செவ்வாய்கிழமை போலிஸ் படுகொலை மீதான மக்கள் கோபத்தை முகங்கொடுத்து, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அந்த மாசுபடுத்தும் ஆலையை மூடியுள்ளனர். அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி அளவான ஆண்டுக்கு 40,000 டன்களை இரட்டிப்பாக்கும் அதன் திட்டங்களுக்கும் மெட்ராஸ் நீதிமன்றம் ஒன்று தடைவிதித்தது.
புதன்கிழமை மாலை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அந்த உருக்காலைக்கான மின் வினியோகத்தைத் துண்டிக்குமாறும், அதை மூடுமாறும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு வியாழனன்று அதிகாலை நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒரு சுற்றுச்சூழல் பொறியாளரைக் கொண்டு மே 18-19 இல் நடத்திய அதன் பரிசோதனையை அதன் தீர்மானத்திற்கான உத்தியோகப்பூர்வ காரணமாக எடுத்துக்காட்டியது. சுற்றுச்சூழல் அனுமதி நிலுவையில் இருப்பதால் உற்பத்தியை நிறுத்துவதற்கான அந்த ஆணையத்தின் ஏப்ரல் மாத முந்தைய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க தயாராகி வருவதாக அப்பொறியாளர் அறிக்கை அளித்திருந்தார். ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு, தெளிவாக, போலிஸ் தாக்குதல் மீதான மக்களின் சீற்றத்தைக் குறைப்பதற்கு அரசு அதிகாரிகளது ஒரு முயற்சியாகும்.
முந்தைய நாள் நடந்த போலிஸ் படுகொலைகள் மீது புதனன்றும் தூத்துக்குடியில் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. போலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மீது மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். வியாழனன்று, போராட்டங்கள் அண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு பரவியது, நூற்றுக்கணக்கானவர்கள் அந்த போலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஸ்டெர்லைட் உருக்காலை 1996 இல் தொடங்கப்பட்டதிலிருந்தே தூத்துக்குடிவாசிகள் அதை எதிர்த்து வந்துள்ளனர். இந்திய அதிகாரிகள் இக்கவலைகளைப் புறக்கணித்து விட்டு, அந்த ஆலை சுற்றுச்சூழலை விஷமாக்கி வருகிறது என்பதற்கு மறுக்கவியலாத ஆதாரங்கள் இருந்த போதும், அதை தொடர்ந்து செயல்பட அனுமதித்தன. நச்சுக்கழிவுகளைக் காட்டி அதிகாரிகள் அதை மூட உத்தரவிட்ட போதெல்லாம், அரசாங்கம் அதை விரைவிலேயே மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.
சமீபத்திய இந்த போராட்டங்களின் அலை பெப்ரவரியில் தொடங்கியது. அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆர்சனிக் இரசாயனம், ஈயம் மற்றும் சல்பர் ஆக்சைடு உட்பட நச்சுக்கழிவுகள் நிலத்தடி நீரை விஷமாக்கி, உயிருக்கு ஆபத்தான உடல்நல கேடுகளைத் தோற்றுவித்த நிலையில், அவற்றை கருத்தில் கொண்டு அதை நிரந்தரமாக மூடுமாறு அங்கே வசித்தோர் கோரினர்.
மாநில அஇஅதிமுக கட்சியின் (அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்), தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதனன்று எரிச்சலூட்டும் வகையில், அரசாங்கம் "ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக" தெரிவித்தார். இருப்பினும், போராட்டக்காரர்கள் மீதான போலிஸ் படுகொலையைத் தொடர்ந்து பாதுகாத்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கட்சிகட்சிகளால் தூண்டிவிடப்பட்டதாக வாதிட்டார்.
“அந்த தூண்டுதலால் தான் இத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த உயிரிழப்புகளுக்காக உண்மையிலேயே நாங்கள் வேதனை அடைகிறோம்,” என்றார். ஒரு நாளுக்கு முன்னர் தான், ஊடகங்களுக்கு கூறுகையில், “மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்க" இந்த போலிஸ் காட்டுமிராண்டித்தனம் "தவிர்க்க முடியாததாய்" இருந்ததாக தெரிவித்திருந்தார்.
வேதாந்தா ரிசோர்சர்ஸ் இல் 71 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள இந்திய பில்லியனர் அனில் அகர்வால் அந்த உருக்காலையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக இந்திய தேசியவாதத்தை முடுக்கி விட முனைந்தார். அவர் அறிவித்தார், இந்த பிரச்சாரமானது இந்தியா இறக்குமதிகளைச் சார்ந்திருக்குமாறு செய்வதற்கான ஒரு "வெளிநாட்டு சதி" என்றார்.
இந்த உருக்காலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பானது, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராகவும் மற்றும் வேலைகள், வேலையிட நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான நிறுவனங்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பாட்டாளிகளிடையே இந்தியா எங்கிலும் அதிகரித்து வரும் சமூக போராட்டங்களின் பாகமாகும்.
தூத்துக்குடியில் வன்முறையான அரசு ஒடுக்குமுறை, ஏற்கனவே கொந்தளித்து போயுள்ள சமூக பதட்டங்களைக் கட்டுப்படுத்தவியலா மட்டங்களுக்கு தீவிரப்படுத்துமென இந்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் அஞ்சுகின்றன.
மே 23 இல் வெளியான Hindustan Times தலையங்கம் எச்சரித்தது: “இந்நிலைமையை தமிழ்நாடு கையாண்ட விதம், மக்களின் மனநிலையை அளவிட முடியாத அதன் திராணியற்றத்தன்மை மற்றும் அவர்களின் கவலைகளுக்கு அது மதிப்பளிக்காததும் கவலையளிக்கிறது … இப்போதும் கூட அரசாங்கம் நிலைமையின் தீவிரமத்தன்மையைக் குறைத்துக் காட்டவும், போராட்டங்கள் வன்முறையாக திரும்பியது தான் காரணம் என்பதைப் போல போலிஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தவும் முயன்று வருகிறது.”
இதே கவலைகள் நேற்று The Hindu பத்திரிகை தலையங்கத்திலும் உயர்த்தப்பட்டது. “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முற்றிலும் தடுக்கத்திருக்கக்கூடியதே,” என்று தலைப்பிட்ட அந்த ஆங்கில-மொழி பத்திரிகை அறிவித்தது: “தமிழ்நாடு அரசாங்கம், ஏற்படவிருந்த தீவிரத்தை அளவிட தவறியது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அந்த ஆலையை செயல்படுத்துவதற்கான அதன் ஒப்புதலைப் புதுப்பிக்க மறுத்த பின்னர், ஆலை செயல்படாத ஒரு நேரத்தில் இதுபோன்றவொரு கோபமும் வன்முறையான ஆர்ப்பாட்டமும் நடந்திருப்பது துயரகரமாக முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.”
இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி போன்ற உத்தியோகப்பூர்வ நாடாளுமன்ற கட்சிகளும், தமிழ்நாட்டின் மாநில எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) போலிஸ் தாக்குதல்கள் மீதான பொதுமக்கள் மனக்குமுறலைச் சுரண்ட முயன்று வருகின்றன. அவர்களின் முயற்சிகளுக்கும், அங்கே வசிப்போரின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் ஆளும் அஇஅதிமுக மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும், அடுத்த ஆண்டு தேசிய தேர்தல்களை முகங்கொடுக்கும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் தங்களது எதிர்கால தேர்தல் வாக்குகளைப் பெருக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர்.
நேற்று, திமுக தலைவர் எம். கே. ஸ்டாலின் தமிழ்நாட்டு தலைநகரான சென்னையில் தலைமை செயலகத்திற்கு வெளியே பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் இணைந்து போராடினார், அவரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் போலிஸால் காவலில் எடுக்கப்பட்டனர்.
திமுக மற்றும் பிற கட்சிகளும் போலிஸ் படுகொலை மீது இன்று ஒரு பந்த் (பொது அடைப்பு) க்கு அழைப்புவிடுத்தன. தமிழ்நாடு எங்கிலுமான தொழிலாளர்களும், இளைஞர்களும், கிராமப்புற பாட்டாளிகளும் இன்றைய ஆர்ப்பாட்டங்களிலும், மாநிலந்தழுவிய வேலைநிறுத்தத்திலும் இணைவார்கள் என்பதால், திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் ஏனைய எதிர்கட்சிகளும் மக்களின் கோபத்தைப் பாதிப்பில்லாத அரசியல் வழித்தடங்களுக்குள் திருப்ப முயன்று வருகின்றன.
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/kudi-m26.shtml

Wednesday, 23 May 2018

2017 இல் பில்லியனர்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் குவித்ததை Wealth-X அறிக்கை காட்டுகிறது

Wealth-X report shows billionaires gained $1.8 trillion in 2017

Eric London
21 May 2018
ந்த வார இறுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரிக்கும் அமெரிக்க மணமகள் மெகான் மார்க்கெல் க்கும் இடையிலான இராஜபோகத் திருமணம் குறித்த பதாகைத் தலைப்புகள் மற்றும் இடைவிடாத செய்தியளிப்புகளால் அமெரிக்க தொலைக்காட்சிப் பார்வையாளர்களும் செய்தித்தாள் வாசகர்களும் மூழ்கடிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கல்யாணத்தை ஒரு வரலாற்று நிகழ்வு போல் காட்டுவதற்காக பெரும் செய்தி நிறுவனங்கள் செய்தியாளர்களின் ஒரு படையையே அங்கு நிறுத்தியிருந்தன. “நினைவில் நீண்ட காலம் வாழவிருக்கும் ஒரு சுவாரஸ்யமான விடயம்” என்று சிஎன்என் இதனை அழைத்தது. ABC இந்த திருமணத்தை “ஒரு காதல் வாகனம்” என்று அழைத்தது, “ஒரு நவீன கனவுலகக்கதை” என்ற சொற்றொடர் திரையில் பதாகையாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிரான ஒரு வன்முறையான போராட்டத்தில் இருந்து, பிரபுத்துவ பதவிகளைத் தடைசெய்கின்ற ஒரு அரசியல்சட்டத்தை உருவாக்கிய ஒரு புரட்சியில் இருந்துதான் அமெரிக்கா பிறந்தது என்ற எந்தக் குறிப்பையும் இந்த செய்தியளிப்புகள் வழங்கவில்லை.
அமெரிக்க ஊடக ஸ்தாபகங்களால் பிரபுத்துவத்திற்கு வாலாட்டும் இந்த புகழ்ச்சியை எவ்வாறு விளக்க முடியும்?
உலகெங்கிலும் வெகுசிலராட்சியை செலுத்துகின்ற நவீன-கால நிதிப் பிரபுத்துவத்தை தொடர்ந்து வளப்படுத்தி வருகின்ற சமூக சமத்துவமின்மையின் ஒரு மலைக்க வைக்கின்ற வளர்ச்சியில் அது வேர்கொண்டிருக்கிறது. சமூகத்தின் மிக உச்சத்தில் வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்கு செல்வம் குவியச் செய்யப்பட்டிருப்பதானது, அமெரிக்க “குடியரசின்” ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் நன்கு-ஊதியமளிக்கப்படுகின்ற வக்காலத்துவாதிகளுக்குள்ளாக பிரிட்டிஷ் பிரபுத்துவத்தின் மீது தவிர்க்கவியலாமல் பொறாமையை வளர்த்தெடுக்கிறது.
பில்லியனர்களுக்குள்ளான சொத்து அடுக்குகள் 2017, உபயம்: Wealth-X
அரச குடும்பத்தின் மீதான இந்த ஏக்கத்திற்கான பொருள்ரீதியான மற்றும் சமூகரீதியான அடிப்படை என்பது சென்ற வாரம் வெளியான Wealth-X “பில்லியனர் கணக்கெடுப்பு” இல் புதிய ஆவணப்படுத்தலைக் காண்கிறது. பில்லியனர்களது ஒரு சிறிய எண்ணிக்கையிலான குழுவானது உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் இழப்பில் அது குவித்திருக்கின்ற செல்வங்களின் செறிந்த அளவினை, தொடர்ந்து அதிகரித்துச் சென்றிருப்பதைக் காட்டுகிறது.
2016 முதலாக உலக பில்லியனர்களின் எண்ணிக்கைத்தொகை 15 சதவீதம் வளர்ந்து, 2,754 பேராக ஆகியிருப்பதையும், இந்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு “24 சதவீதம் அதிகரித்து 9.2 டிரில்லியன் டாலர் என்ற இதுவரையில்லாத அளவுக்கு” –—ஒட்டுமொத்த பூகோளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்திற்கு நிகரானது— அதிகரித்திருப்பதையும் Wealth-X அறிக்கை காட்டுகிறது.
உலகெங்கும் பில்லியனர்கள் தமது செல்வத்தை அதிகரித்து விட்டிருக்கின்றனர், என்றாலும் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் போல வேறெங்கிலும் அவர்கள் பணத்தை இந்தளவுக்கு வாரிக்குவித்திருக்கவில்லை. வட அமெரிக்காவில் 727 பில்லியனர்களின் சொத்து 22.8 சதவீதம் அதிகரித்து 3.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது, இந்த விகிதத்தை விஞ்சியது ஆசியாவின் 784 பில்லியனர்கள் —இவர்கள் 2018 இல் கூட்டாக 2.4 டிரில்லியன் அளவுக்கான செல்வம் கொண்டிருந்தனர்— மத்தியிலான 49.4 சதவீத சொத்து அதிகரிப்பு மட்டுமே.
பெரும்-செல்வந்தர்கள் பெரும்பாலும் ஊகவணிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிற்கு பங்களிப்பு செய்வதன் மூலமாக வருவாய் ஈட்டவில்லை, மாறாக சூதாட்டத்தின் மூலமாக, திருடுவதன் மூலமாக, மற்றும் ஏமாற்றுவதன் மூலமாக சம்பாதிக்கின்றனர். அனைத்து பில்லியனர்களது மத்தியில், சந்தைப்பங்குகள் மூலமாக வந்த மொத்த செல்வத்தின் பகுதி 2016 இல் 32.9 சதவீதமாக இருந்ததில் இருந்து 2017 இல் 41.5 சதவீதமாக அதிகரித்தது.
செல்வப் பிரமிடின் உச்சியில், மிகப் பணம்படைத்த 10 பில்லியனர்கள் மொத்தமாக 663 பில்லியன் டாலர் சொத்தை கொண்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் “சராசரியான பில்லியனர்” கொண்டிருப்பதை விட 20 மடங்கு அதிகமாய் சொத்து கொண்டிருக்கின்றனர். பில்லியனர்களின் பெரும்பகுதியினர் (413) தமது செல்வத்தை நிதி, வங்கித் துறை அல்லது முதலீடு ஆகியவற்றில் இருந்து பெறுகின்றனர், தொழிற்துறை கூட்டுக்கள் (380), ரியல் எஸ்டேட் (173), உற்பத்தித் துறை (167) மற்றும் தொழில்நுட்பம் (143) ஆகியவை அதன்பின் வருகின்றன.
பில்லியனர்களின் சொத்து அதிகரிப்பு உலகெங்கிலும் அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் கொள்கைகளது விளைவாக இருக்கிறது. அமெரிக்காவில் போல வேறெங்கிலும் பெரும்-செல்வந்தர்கள் இத்தனை அப்பட்டமாக அரசியல் அமைப்புமுறையைக் கட்டுப்படுத்தவில்லை, அங்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வோல் ஸ்ட்ரீட்டின் குற்றவியல் தன்மைக்கு சிகரம் வைத்தது போலிருக்கிறார்.
“உற்சாகமான பங்குச் சந்தைகள் மற்றும் சுறுசுறுப்பான பெருநிறுவன வருவாய்களின்” காரணத்தால் அமெரிக்காவில் “அதீத செல்வ உருவாக்கத்தில் ஒரேயடியான முன்னேற்றம்” இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “ஆண்டின் பின்பகுதியில் முக்கியமான அமெரிக்க வரிச் சீர்திருத்த தொகுப்பு நிறைவேற்றப்பட்டதன் மூலமாக”, அதாவது ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த உருப்படியான எதிர்ப்பும் இல்லாத நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட செல்வந்தர்களுக்கான மலைபோன்ற வரிவிலக்கு மூலமாக, அமெரிக்க பில்லியனர்கள் ஆதாயமடைந்தனர்.
2021 வரைக்கான உலகளாவிய சொத்து நிலவர மதிப்பீடுகள்உபயம்: Wealth-X அறிக்கை
உலகின் எந்த நாட்டிலும் விட அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது, உலகெங்கிலுமான பில்லியனர் சொத்துமதிப்பில் 34 சதவீதத்தை இது கொண்டிருக்கிறது. நியூ யோர்க் தலைமையான பில்லியனர் நகரமாக தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது, இங்கு 103 பில்லியனர்கள் இருக்கின்றனர். 2017 இல், நிகர சொத்துமதிப்பு 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் கொண்ட தனிமனிதர்களையும் உள்ளடக்கிய, உலகின் “அதி உயர் சொத்துமதிப்பு” எண்ணிக்கைத்தொகை குறித்த ஒரு அறிக்கையை Wealth-X வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் “அதி செல்வந்தர்கள்” —உலகெங்கிலும் சுமார் 250,000 பேர்— மொத்தமாய் 25 டிரில்லியன் டாலர் செல்வம் கொண்டிருந்தனர், இதில் 9.6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ரொக்கப் பணமும் அடங்கும்.
அதி செல்வந்தர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமது செல்வத்தை இன்னுமொரு 8.5 டிரில்லியன் டாலர் அதிகரித்து 35 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாய் —Credit Suisse Bank இன் 2017 புள்ளிவிவரத்தின்படி இது உலகின் மக்கள்தொகையில் கீழிருக்கும் 90 சதவீதத்தினரின் மொத்த நிகர செல்வத்திற்கு இணையானதாகும்— செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர்.
இந்த விண்ணைமுட்டும் தொகைவிவரங்களும் கூட பில்லியனர்கள் மற்றும் பெரும்செல்வந்தர்களது உண்மையான சக்திக்கு —இவர்களது செல்வமானது உலகின் அரசாங்கங்கள் மீது, ஊடகப் பெருநிறுவனங்கள் மீது, தொழிற்சங்கங்கள் மீது, அரசியல் கட்சிகள் மீது, பல்கலைக்கழகங்கள் மீது, நீதிமன்றங்கள் மீது, இராணுவங்கள் மீது மற்றும் உளவு முகமைகள் மீதான கட்டுப்பாடாக மொழிமாற்றம் பெறுகிறது— முகமூடியிடுவதாகவே இருக்கின்றன.
தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் மூலமாக பில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் ஈட்டிவிட்டதன் பின்னர், பெரும் சக்திகளது ஆளும் வர்க்கங்கள், பெருநிறுவன ஊடகங்களால் வடிகட்டப்படாத செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த பில்லியன் கணக்கானோருக்கு அணுகல் கிடைக்க செல்போன்களும் இணையமும் உதவுகின்றன எனும் அச்சத்தில், இடது-சாரி கண்ணோட்டங்களைத் தணிக்கை செய்வதற்கு, இப்போது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றன.
மூலதனம் முதல் தொகுதியில் காரல் மார்க்ஸ் எழுதினார்: “ஒரு துருவத்தில் செல்வப் பெருக்கமானது, அதேசமயத்தில் மறுதுருவத்தில், அதாவது தனது சொந்த உற்பத்திப்பொருளை மூலதனத்தின் வடிவில் உற்பத்தி செய்கின்ற வர்க்கத்தின் பக்கத்தில், துன்பம், உழைப்பின் வேதனை, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனச் சிதைவு ஆகியவற்றின் பெருக்கமாக இருக்கிறது.” இன்றைய உலக நிலைமையை சாலப் பொருத்தமான விதத்தில் குணாம்சப்படுத்துவதாக இது இருக்கிறது.
வயதுவந்தோர் பிரிவு கொண்டிருக்கும் மொத்த நிகர சொத்து குறித்த Credit Suisse இன் தரவு
உலகெங்கிலும், அது வளர்ச்சியடைந்த நாடானாலும், வளர்ச்சி குன்றிய நாடானாலும், பாதி-வளர்ச்சியடைந்த நாடானாலும், தொழிலாள வர்க்கமானது அரசாங்கத்தின் முடிவெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்து முழுமையாக வெளித்தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறது. அரசாங்கங்கள் பில்லியனர்களது சொத்துக்களை அதிகரிக்கின்றதான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற நிலையில், சுத்தமான நீருக்கும், போதுமான மருத்துவப் பராமரிப்புக்கும், கட்டுபடியாகும் ஆரோக்கியப் பராமரிப்பு, கல்வி, உணவு, வீட்டுவசதி, பொதுப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்குமான பில்லியன் கணக்கான மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதில்லை. உலகின் 10 பெரும் செல்வந்தர்களது மொத்த செல்வத்தில் வெறும் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டு, பின்வரும் சமூகத் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட முடியும்:
  • அமெரிக்காவில் இருக்கும் 634,000 வீடற்ற மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி வழங்குவது: 20 பில்லியன் டாலர் 
  • உலகெங்கிலும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட 862 மில்லியன் மக்களுக்கு உணவளிப்பது: 30 பில்லியன் டாலர் 
  • சுத்தமான நீருக்கு அணுகல் இல்லாமல் இருக்கும் மொத்த எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது: 11 பில்லியன் டாலர் 
  • கல்விக்கு அணுகல் இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி: 26 பில்லியன் டாலர் 
  • வளரும் நாடுகளில் ஒவ்வொரு தாய்க்கும் மகப்பேறு கால பாரமரிப்பு: 13 பில்லியன் டாலர் 
  • 4 மில்லியன் மலேரியா மரணங்களைத் தடுப்பதற்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி: 6 பில்லியன் டாலர் 
  • மிச்சிகன் மாநிலத்தின் நச்சு நீர் உள்கட்டமைப்பை ஒரு பாதுகாப்பான மற்றும் சுத்தமான அமைப்பைக் கொண்டு இடம்பெயர்த்துவது: 1.5 பில்லியன் டாலர் 
  • அமெரிக்காவில் உள்ள 3.1 மில்லியன் ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக 20,000 டாலர்கள் ஊக்கத்தொகை வழங்குவது: 62 பில்லியன் டாலர் 
  • மொத்தச்செலவு: 169 பில்லியன் டாலர்
சொத்துக் குவிப்பும் சமத்துவமின்மையும் இத்தகைய மட்டங்களில் நிலவுகின்ற நிலைமைகளின் கீழ் எந்த சமூகமும் ஜனநாயக ஆட்சி வடிவங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற உண்மையையே அரச குடும்பத்தின் மீதான போற்றிப்புகழ்தல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல, தொழிலாள வர்க்கத்தாலும் உலகின் இயற்கை வளங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வமானது பெரும்-செல்வந்தர்களது தணியாத பெருவேட்கையைத் திருப்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற போது எந்த சமூக பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படவும் முடியாது.
முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு வெளியில் இன்று உண்மையான எந்த ஜனநாயகமும் கிடையாது.
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/hari-m23.shtml

இந்தியா: வாரணாசி மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி

India: Varanasi flyover bridge collapse kills 18

செவ்வாயன்று, வட இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பரபரப்பு மிகுந்த சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 18 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் படுகாயமுற்றனர்.
அரசாங்க அதிகாரிகளும் இலாப நோக்கம் கொண்ட கட்டுமான நிறுவனங்களும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கின்றனர் என்பதாகவே இந்த சோக நிகழ்வின் கூடுதல் அறிகுறி உள்ளது.
மாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், வாரணாசி கான்ட் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தின் இரு தூண்கள் இடிந்து நொறுங்கி, மேம்பாலத்தின் ஒரு பெரிய அடுக்கு கீழே சரிந்து விழுந்ததில், ஒரு சிறு பேருந்து, ஆறு கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் உட்பட குறைந்தபட்சம் 20 வாகனங்கள் நசுங்கிப் போயின. மாநிலத்தின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஓ.பி.சிங் இன் அறிவிப்பின்படி, இந்த இடிபாடுகளில் பெரும்பாலும் கட்டுமானத் தொழிலாளர்கள் தான் சிக்கியிருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது.
விபத்து நடந்து முடிந்து 30 நிமிடங்களில் பொலிஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை சென்றடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்ற போதிலும், Telegraph பத்திரிகை, இந்த துயரமான விபத்து நிகழ்ந்து அநேகமாக இரண்டு மணி நேரங்களுக்கு பின்னர் தான் இடிபாடுகளை அகற்றும் மற்றும் பிற கனரக உபகரணங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டன என்று தெரிவித்தது. மேலும், மீட்பு நடவடிக்கைளை அரசாங்கம் மந்தமாக மேற்கொண்டதாகக் கருதி கோபமடைந்த மக்கள் கண்டனம் தெரிவித்ததாகவும் இப்பத்திரிகை குறிப்பிட்டது.
First Post செய்தி ஊடகத்தின் காணொளி, இந்த பேரழிவில் தனது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை பலி கொடுத்த பாஜிபூரைச் சேர்ந்த கைலாஷ் ராம் என்பவர், கட்டுமானப் பகுதியைச் சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாததை உறுதிசெய்யத் தவறிய அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் என காண்பித்தது.
Hindustan Times தினசரி நாளிதழ், உத்தர பிரதேச மாநில பொறியாளர்கள் சங்கத்தின் (UP Engineers Association) பொதுச் செயலாளர் சுர்ஜித் சிங் நிரஞ்சன், மாவட்ட நிர்வாகமும் கட்டுமான நிறுவனமும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டது. மேலும், “கட்டுமானப் பணி நடைபெறும் பாலத்தின் கீழ் போக்குவரத்துக்கு அனுமதியளித்திருக்கக் கூடாது என்பதோடு, கட்டுமானத் தளத்தை சுற்றிலும் சரியான பாதுகாப்பு வலையம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்ததையும் குறிப்பிட்டது.
உத்யோகபூர்வமாக பொறுப்பைத் தட்டிக்கழிப்பது உடனடியாக தொடங்கியது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்த அலட்சியத்தை சுட்டிக்காட்டி மாநில அரசாங்க ஆதாரங்கள் NDTV க்கு தெரிவித்தன.
மாநில பொலிஸ் ஆதாரங்களை மேற்கோளிட்டு, Indian Express பத்திரிகை வியாழனன்று, போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் குறித்து கடந்த நவம்பர் மாதம் முதல், பிப்ரவரியில் பொலிசாரால் முதல் தகவல் அறிக்கை (First Information Report-FIR) பதிவு செய்யப்பட்டது வரையிலான காலத்தில், இந்த மேம்பால கட்டுமானத்திற்கு பொறுப்பிலுள்ள நிறுவனமான அரசு நடத்தும் உத்தர பிரதேச மாநில பால கட்டுமானக் கழகத்திற்கு (Uttar Pradesh State Bridge Corporation-UPSBC) குறைந்தபட்சம் ஐந்து கடிதங்களை பொலிசார் அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தது.
இருப்பினும், UPSBC இன் நிர்வாக இயக்குநர் ராஜன் மிட்டல், கட்டுமானத்தின் போது போக்குவரத்தை பராமரிக்க மாவட்ட அதிகாரிகளையும் பொலிசையும் கழகம் கேட்டுக் கொண்டிருந்ததாக Express பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும், “குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டுமானத்தை முடிப்பதற்காக மட்டும் அழுத்தம் கொடுக்கப்பட்டதேயன்றி, வேலையின் தரம் பற்றி எந்தவித சமரசமும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டு, இது விசாரணையின் போது தெளிவாகத் தெரியவரும்,” என்றும் மிட்டல் கூறினார்.
மாவட்ட நீதிபதி யோகேஷ்வர் ராம் மிஷ்ரா இந்த கூற்றை நிராகரித்தார். “எங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்ததாகக் குறிப்பிடுவது தவறானது” என்று அவர் Expressபத்திரிகைக்கு தெரிவித்தார். UPSBC க்கு ஐந்து கடிதங்கள் அனுப்பியதாக பொலிசார் கூறிய கதையையே அவர் மீண்டும் தெரிவித்தார். “ஆனால் அவர்கள் (அதன்படி செயல்படவில்லை) என்பதால் தான் அவர்களுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டது” என்றும் தெரிவித்தார்.
வியாழனன்று Hindustan Times தினசரி நாளிதழின் தலையங்கம், இடிந்து விழுந்த மேம்பாலப் பகுதி பிப்ரவரியில் தான் கட்டிமுடிக்கப்பட்டது என்று தெரிவித்தது. மேலும், “தரம் குறைந்த கட்டுமானம் மற்றும் தரம்குறைந்த கட்டுமானப் பொருட்கள் உபயோகம் ஏதேனும் ஒன்று இந்தியாவில் பல கட்டுமானத் திட்டங்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்பதை இது அறிவுறுத்துகிறது” என்றும் இப்பத்திரிகை தெரிவித்தது.
“பொதுவாகவே திட்டங்கள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன, அதிலும் பெரும்பாலும் தேர்தல்களுக்கு முந்தைய திட்டங்கள் சிறிதளவு திட்டமிடலுடனும், பொறியியல் விதிமுறைகளில் மிகக்குறைந்த கவனம் செலுத்துதலுடனும் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பாலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெரும் தாமதங்களினால் பாதிக்கப்படுவது, செலவுகள் அதிகரிப்புக்கு அழுத்தம் கொடுப்பதுடன், ஒப்பந்தக்காரர்கள் சில வெட்டுக்களை ஏற்படுத்தவும் ஊக்கமளிக்கிறது. இந்நிலையில், வாரணாசி வழக்கு மற்றும் பிற திட்டங்களில் காணப்படும் விபரீத கட்டுமானத் தோல்விகளையே இவை ஏற்படுத்துகின்றன.”
புதனன்று, பொதுமக்கள் கோபத்தை தணிக்க, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத், தலைமை திட்ட மேலாளர் கே.ஆர்.சுதன் உட்பட நான்கு UPSBC அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்தார். இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் 48 மணி நேரங்களுக்குள், “அதிகபட்ச தண்டனைக்குரிய நடவடிக்கை” எடுப்பதற்கு உறுதியளித்தார். மேலும் அவர், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சொற்ப இழப்பீடாக 500,000 ரூபாய் ($US 7,369) வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 200,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பிஜேபி பிரதம மந்திரி நரேந்திர மோடி, இத்தகைய பேரழிவுகளின் போது அவரது வழமையான நடைமுறையாக முதலைக் கண்ணீர் வடிக்க தனது ட்விட்டர் பதிவை இடுவதற்கு விரைந்தார். அதில், “உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு அவர் மிகவும் வருந்துவதாக” தெரிவித்தார். மேலும், “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து மோடிக்கு எந்தவித உண்மையான அக்கறையும் இல்லை. கடந்த காலத்தில், சிற்சில மாற்றங்களுடன், இதேபோன்று பலமுறை “இரங்கல்” ட்வீட்டுகளை அவர் பதிவு செய்துள்ளார் என்றாலும், இத்தகைய பேரழிவுகள் மட்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
மார்ச் 2016 இல், மேற்கு வங்க தலை நகரம் கொல்கத்தாவில் பாதியளவு கட்டுமானம் முடிவடைந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 25 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த துயரமான சம்பவத்தை குறிப்பிட்டு, வியாழனன்று Times of India பத்திரிகை தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: “[ஒரு] நிபுணர் குழு, தவறான வடிவமைப்பு, தரம் குறைந்த மூலப் பொருட்கள் உபயோகம் மற்றும் சரியான மேற்பார்வை இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளால் இந்த இடிபாடுகள் ஏற்படுவதாக கண்டறிந்தது. அதற்குப் பின்னர் மேம்பாலம் இடிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறிய இந்த கட்டமைப்புக்குள் தான் உள்ளூர் கடைக்காரர்களும் குடியிருப்பாளர்களும் தொடர்ந்து வசித்து வருகின்றனர். தவறான நடத்தைகள், அக்கறையின்மை மற்றும் அவசர பாதுகாப்பு பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்ள தாமதிப்பு ஆகியவை பற்றிய இந்த கதை, ஆறுதலுக்காக பெரும்பாலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகிறது.”
இந்நிலையில் UPSBC வலைத் தளம், “தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ச்சியான மேம்பாட்டுடன் பராமரிக்கப்படும் அதன் தரம், பொருளாதார மற்றும் நேர மேலாண்மை” குறித்து தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் பல விருதுகளை அது வென்றுள்ளது என்றும், அதன் செலுத்தப்பட்ட முதலீடு 150 மில்லியன் ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது. இது, பல இந்திய நகரங்களிலும், ஈராக், ஏமன் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் கூட பாலங்களையும் மேம்பாலங்களையும் கட்டமைத்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.
இருப்பினும், புதனன்று வெளிவந்த Hindustan Times பத்திரிகை கட்டுரையின்படி, UPSBC ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 2010 இல், 6.5 மில்லியன் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட 1086-மீட்டர் நீளம் கொண்ட சில்லாஹத் பாலம் (Chillgahat Bridge) திறந்துவைக்கப்பட்டு 13 நாட்களில் தகர்ந்து போனதாக பெயர் குறிப்பிடப்படாத பொதுத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாக இப்பத்திரிகை குறிப்பிட்டது. இது பற்றி உத்தர பிரதேச மாநில அரசாங்கம் ஒரு விசாரணைக்கு ஆணையிட்டிருந்தது, ஆனால் உயர்மட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பொறியாளர் தெரிவித்ததாகவும் இது குறிப்பிட்டது.
இதேபோல் 2016 இல், லக்னோவில் லோஹியா பாலத்தின் மேல் ஒரு குழி உருவாகியது. இது பற்றி விசாரிக்க உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு விசாரணை குழு, தரம் குறைந்த பணிக்காக பொறியாளர்களை குற்றம் சாட்டியது, ஆனால் அந்த அறிக்கையோ “குளிர்பதன சேமிப்பில்” வைக்கப்பட்டுவிட்டதாக ஒரு மூத்த UPSBC பொறியாளர் Times பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அவ்வறிக்கையை போன்றே, தற்போதைய அரசாங்க விசாரணைகளும் பெரும்பாலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த போவதில்லை. முதலாளித்துவ அமைப்புமுறையும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் மனித உயிர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, வெறும் இலாபங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். இதற்காக, நாடெங்கிலும், வேலை செய்யும் இடங்களில் ஒவ்வொரு நாளும் டசின் கணக்கான தொழிலாளர்களும் ஏழை எளியவர்களும் இறக்கிறார்கள்.
மேலும், UPSBC வலைத் தளம் இவ்வாறு பெருமையடித்துக் கொண்டது: “இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உலகளாவிய போட்டியை எதிர்கொள்வதில், பலமுறை அது விருதுக்கு தகுதியான வேலையை நிறைவேற்றியதன் மூலம் UPSBC மீதான நம்பிக்கைக்கு பல வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர் என்பதில் வியப்பு எதுவுமில்லை.” இந்த “உலகளாவிய போட்டியால்” உந்தப்பட்டு, பெருநிறுவனங்கள், செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அடிப்படை பாதுகாப்பு விதிகளை ஒதுக்கித் தள்ளுவதையும், மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் உயிர்களை விலை கொடுப்பதையும் நாடியுள்ளன என்பதை ஆதாரங்கள் ஏற்கனவே குறிக்கின்றன.
By Wasantha Rupasinghe
18 May 2018
http://www.wsws.org/tamil/articles/2018/05-Mai/vara-m22.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts