Search This Blog

Monday, 28 August 2017

அமெரிக்க அரசியல் போர்முறைகளுக்குப் பின்னால்: நிதியியல் பொறிவு, சமூக கிளர்ச்சி மீது அதிகரித்துவரும் அச்சங்கள்

Behind the political warfare in the US: Rising fears of financial collapse, social unrest

டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதுடன் முடுக்கிவிடப்பட்ட அமெரிக்க பங்குச்சந்தையின் உயர்வு ஒரு மிகப்பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதென அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியியல் வட்டாரங்களில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த கவலைகள், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் நடைமுறையளவிலான உள்நாட்டு போரை உந்திக் கொண்டிருப்பதில் அடியிலிருக்கும் சில சக்திகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
டோவ் ஜோன்ஸ் மற்றும் பிற சந்தை குறியீடுகளைச் சாதனையளவிற்கு உயர்த்திய "ட்ரம்ப் வர்த்தகம்" முடிந்துவிட்டது, அதிகரித்தளவில் ஜனாதிபதியே ஒரு பொருளாதார சுமையாக மாறியுள்ளார் என்ற கண்ணோட்டம் வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் மற்றும் பெருநிறுவன செயலதிகாரிகளிடையே அதிகரித்து வருகிறது. சார்லட்வில் நாஜி அட்டூழியம் மீதான மோதலை அடுத்து வணிக மனோபாவம் உச்சநிலைக்கு வந்தது. நவ-நாஜிக்களைப் பாதுகாக்கும் ட்ரம்ப் கருத்துக்கள் சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு குழிபறிப்பதாக மற்றும் உள்நாட்டில் சமூக, அரசியல் ஸ்திரமின்மையை கட்டவிழ்த்து விட அச்சுறுத்துவதாக பார்க்கப்பட்டன.
ஆனால் ட்ரம்ப் உருவாக்கிய ஸ்திரமின்மை மீதான கவலைகள் ஆழ்ந்த அச்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கம், தற்போது வெள்ளை மாளிகையை ஆக்கிரமித்திருப்பவருக்கும் அப்பாற்பட்டு வெகுதூரம் நீண்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
நேற்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனமான பிரிட்ஜ்வாட்டர் நிறுவனத்தின் தலைவர் Ray Dalio குறிப்பிடுகையில், அரசியல் “இதற்கு முன்னர் நாம் பரந்தளவில் 1937 க்கு ஒத்த விதத்தில் கண்டு வந்ததை விட அனேகமாக இன்னும் பிரமாண்டமான பாத்திரம்" இப்போது வகிக்க உள்ளது என்றார். அரசியல் மோதல்களை அமெரிக்காவினால் கடந்து வர முடிந்தாலும் சரி, அது “முந்தைய செலாவணி கொள்கைகள் மற்றும் நிதிக் கொள்கைகளை" விட அதிக பாதிப்புகளைக் கொண்டிருக்கும் என்றார்.
1937 குறித்த மேற்கோள் குறிப்பிடத்தக்கதாகும். அந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சி இருந்தது—அந்த வீழ்ச்சி பெருமந்த நிலைமைக்கு இடையே 1932 இல் நடந்ததை விடவும் மிக வேகமாக இருந்தது. அதே ஆண்டுதான் வாகனத்துறை மற்றும் எஃகுத் தொழில்துறையில் வர்க்க போராட்டம் வெடித்தது.
அமெரிக்காவில் பொருளாதார மற்றும் சமூக பிளவுகள் இந்த முந்தைய புரட்சிகர மேலெழுச்சி காலகட்டத்தை ஒத்திருப்பதாக Dalio எழுதினார். “அதுபோன்ற காலங்களில் (உள்ளேயும் வெளியேயும்) மோதல்கள் அதிகரிக்கின்றன, ஜனரஞ்சகவாதம் மேலெழுகிறது, ஜனநாயகங்கள் அச்சுறுத்தப்பட்டு, போர்கள் ஏற்படக்கூடும்.” அது எந்தளவுக்கு மோசமடையும் என்பதை அவரால் கூற முடியாது என்றும், அதில் அவருக்கு விருப்பமும் இல்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “நல்லிணக்கத்தை விட அனேகமாக மரணம் வரை போராட்டமே இருக்கக்கூடும் என்ற புள்ளிக்கு மோதல்கள் இப்போது தீவிரமடைந்துள்ளன.”
ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்சில் வர்க்க போராட்டங்கள் என்ற படைப்பில், மார்க்ஸ் குறிப்பிடுகையில், வர்க்க போராட்டத்தின் வெடிப்பானது நிதி அமைப்புமுறை மீது கடுமையான பாதிப்பைக் கொண்டுள்ளது ஏனெனில் ஆளும் வர்க்கம் எதற்கு தலைமை தாங்குகிறதோ அந்த பொருளாதார அமைப்புமுறையின் நிலைக்கும் தன்மை மீதான நம்பிக்கையையே அது கேள்விக்குட்படுத்துகிறது என்றார்.
Dalio அவர் கருத்துரையில் எழுதினார், ஒருவர் சராசரி புள்ளிவிபரங்களை பார்க்கையில், “அமெரிக்க பொருளாதாரம் அருமையாக இருப்பதாக தீர்மானிக்கக்கூடும், ஆனால் அந்த சராசரிகளில் உள்ளடங்கி உள்ள எண்களை அவர் நோக்கினால், செல்வவளத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி 1930 களுக்குப் பின்னர் மிகப்பெரியளவில் இருப்பதையும், அத்துடன் சிலவை அசாதாரணமாக இருப்பதும் ஏனைய சில படுமோசமாக இருப்பதும் தெளிவாக தெரியும்.”
Dalio மற்றும் ஏனையவர்கள் அதிகரித்துவரும் சமூக, அரசியல் பிளவை "ஜனரஞ்சகவாத" வார்த்தைகளில் மிருதுவாக மேற்கோளிடுகின்றனர், ஆனால் பகிரங்கமான வர்க்க மோதலின் எழுச்சியே அவர்களது நிஜமான பயமாக உள்ளது. அவர் எழுதினார், “அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர்,” “நமது தலைமை குறித்தும் மற்றும் நம் நாடு செல்லும் திசை குறித்தும் பலமாக மற்றும் சமரசத்திற்கு இடமின்றி கருத்து வேறுபட்டிருப்பதாக தெரிகிறது, மேலும் "தங்களின் கருத்து வேறுபாடுகளை கடந்து எவ்வாறு கொள்கை பகிர்வுகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமாக இணைந்து இயங்குவதென கண்டறிய முயற்சிப்பதை விட, அவர்கள் நம்புவதை நோக்கி போராட அதிக நாட்டம்" கொண்டிருப்பதாக தெரிகிறது.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “அமெரிக்க கனவின்" உதிரிதிட்டங்களும் மற்றும் "பொருளாதார வாய்ப்புக்கான தேசமாக" வரலாற்றுரீதியில் ஒருவித அரசியல் பசையாக செயல்பட்டுள்ள அமெரிக்காவும் உருக்குலைந்துள்ளன. எல்லா அறிகுறிகளும், 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலகின் மத்திய வங்கிகளால் உருவாக்கப்பட்ட நிதியியல் குமிழியின் ஒரு பொறிவைச் சுட்டிக்காட்டுகின்ற நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் தலையிடும் என்பதே ஆளும் வர்க்கத்தை பீதியூட்டிக் கொண்டிருக்கிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிதியியல் சந்தைகளின் முழுமையான உருக்குலைவானது, உலகளாவிய நிதியியல் அமைப்புக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தியதன் மூலமாக மட்டுமே தடுக்கப்பட்டது —அமெரிக்க பெடரல் மட்டுமே 4 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலர்களைப் பாய்ச்சியது. ஆனால் இந்த நடவடிக்கைகளின் தலையாய விளைவு— அமெரிக்காவில் மற்றும் ஏனைய பிரதான பொருளாதாரங்களிலும் முதலீட்டு வட்டிவிகிதங்கள் வரலாற்றுரீதியில் மிகக் குறைந்த மட்டங்களில் உள்ள நிலையில்—“நிஜ" பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியை கொண்டு வரவில்லை, மாறாக நிதியியல் சந்தைகளது உயர்வுக்கே உதவின.
இரகசிய குறியீட்டு நாணயம் பிட்காயனின் (crypto currency Bitcoin) வளர்ச்சியே ஊகவணிக வெறித்தனத்தின் சமீபத்திய வெளிப்பாடாக உள்ளது. 3,000 க்கும் அதிக நாட்களில் 2,000 டாலர் மட்டங்களை எட்டிய இணைய வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற இந்த செலாவணி, பின்னர் வெறும் 85 நாட்களில் 2,000 டாலரில் இருந்து 4,000 டாலரை அடைந்தது. கோல்ட்மன் சாச்ஸ் உட்பட பெரும் முதலீட்டாளர்கள் இதில் இறங்கிய நிலையில், பிட்காயன்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 140 பில்லியன் டாலராக விரிவடைந்தது.
நடைமுறையளவில் ஒவ்வொரு நிதியியல் சொத்துக்களிலும் அபிவிருத்தி அடைந்துள்ள குமிழிகளில் இது ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமேயாகும்.
பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் அதிமலிவு பணத்தைப் பாய்ச்சிய நிலையில், நிறுவனங்கள் எதைக் கொண்டு பங்கு மதிப்புகளை பேணியதோ அத்தகைய முக்கிய இயங்குமுறைகளில் ஒன்றுதான், பங்குகளை வாங்கிவிற்பதை ஒழுங்கமைப்பதற்கு கடன் வாங்கிய நிதிகளையே பயன்படுத்திய இயங்குமுறையாகும். ஆனால் ஏற்கனவே இதை அதிகமாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் தங்களின் பங்கு மதிப்புகளை பேணுவதற்காக இன்னும் வாங்க முடியாத நிலையில் இருப்பதால், இந்த நிகழ்வுபோக்கும் அதன் எல்லையை எட்டிவருகிறது.
நீண்டகால வரலாற்று மதிப்பீடுகளின் அடிப்படையில், பைனான்சியல் டைம்ஸ்நேற்று ஒரு கருத்துரையில் குறிப்பிட்டவாறு, அமெரிக்க பங்குகள் "1929 பெரும் முறிவு மற்றும் 2000 இல் டாட்காம் குமிழி வெடிப்புக்கு முந்தைய மாதங்களைப் போல, வேறெந்த காலத்தையும் விட அதிக விலையுயர்ந்து காணப்படுகிறது.”
ஒருசமயம் “வழமையானதாக" கருதப்பட்ட சூழலில், அதிக வட்டிவிகித இலாபங்களின் ஆதாயத்தைப் பெற பணம் பத்திரச் சந்தைகளுக்குள் நகரும். ஆனால் சமீபத்திய சந்தைகளும் சாதனையளவிற்குக் குறைந்த வட்டிவிகிதங்களுடன், வரலாற்றுரீதியிலான உயர்வில் வியாபாரமாகி, (இது விலையுடன் எதிர்விதமான உறவில் நகரும்) ஒரு குமிழியில் உள்ளன.
2008 இல், அமெரிக்க ஆளும் வர்க்கம் நிதியியல் பொறிவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார இயங்குமுறைகளைக் கொண்டு விடையிறுத்தது. ஒருபுறம் அவை, ஒபாமா தேர்வாவது ஒரு "மாற்றத்திற்கான" தருணம் என்று புகழ்ந்து கொண்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தனிச்சலுகை கொண்ட பல்வேறு நடுத்தர வர்க்க அமைப்புகளின் ஆதரவுடன், “துணிந்து நம்பலாம்" என்றும், "மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்றும் பிரகடனப்படுத்தி, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமாவை நியமித்தன.
மறுபுறம், அவை ஊகவணிகத்திற்கு நிதி விரயம் செய்ய பொருளாதார வரலாற்றிலேயே பார்த்திராத அளவில் நிதியியல் அமைப்புமுறைக்குள் மிகப்பெரியளவில் பணத்தை பாய்ச்சி, செல்வவளத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெரும் பணக்காரர்களுக்கு பாரியளவில் கைமாற்றுவதை ஒழுங்கமைத்தனர். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த நடவடிக்கைகள் அவற்றை இன்னும் உயர்ந்த மட்டங்களுக்கு மறுஉற்பத்தி செய்தன.
ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் வர்க்க மோதலின் வளர்ச்சி குறித்து பீதியூற்று இருந்தாலும், தவிர்க்க முடியாமல் சமூக வெடிப்புகளை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கும் நிலைமைகளைச் சரி செய்ய அவர்களால் எந்த நடவடிக்கைகளையும் முன்மொழிய முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே அதீத வலது இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு கொள்கையை ட்ரம்ப் பின்தொடர்கின்ற அதேவேளையில், ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள அவரது விமர்சகர்கள் இராணுவ மற்றும் நிதியியல் உயரடுக்கின் வழிகாட்டலின் கீழ் அவர் நிர்வாகத்தை முன்பினும் அதிக உறுதியாக நிலைநிறுத்த அதை மறுஒழுங்கமைப்பதற்காக செயற்பட்டு செய்து வருகின்றனர்.
பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பின் ஒரு புதிய காலகட்டம் உருவெடுத்து வருகிறது, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்கு ஏற்ப முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியைத் தீர்க்க, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாக அத்தகைய காலகட்டத்திற்கு அது தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.
Nick Beams
22 August 2017
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/fina-a24.shtml

பெருவணிகங்களும், இராணுவமும் வாஷிங்டன் மீது அவற்றின் பிடியை இறுக்குகின்றன

One week after Charlottesville

Big business, military tighten their grip on Washington

சார்லட்வில் சம்பவங்களுக்கு ஒருவாரத்திற்குப் பின்னர்

பெருவணிகங்களும், இராணுவமும் வாஷிங்டன் மீது அவற்றின் பிடியை இறுக்குகின்றன

ல சமயங்களில், சம்பவங்களின் விளைவே அரசியல் நிகழ்வுகளின் அடித்தளத்தில் இருக்கும் இன்றியமையா பிரச்சினைகளை அம்பலப்படுத்திவிடும். சார்லட்வில் நாஜி அட்டூழியம் மீது ஆளும் வர்க்கத்தினுள் வெடித்த மோதல்களில், இது உண்மையாகி உள்ளது. இது ட்ரம்பின் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானனை வெள்ளியன்று பதவிநீக்குவதில் போய் முடிந்தது.
பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள், சம்பவங்களின் தொடர்ச்சியை முற்றிலுமாக இனரீதியிலான வார்த்தைகளில் சித்தரிக்க முனைந்துள்ளன, பானனும் மற்றும் "வெள்ளையின தேசியவாதத்தின்" ஏனைய ஆலோசகர்களும் இப்போது நீக்கப்பட்டு, வெள்ளை மாளிகை மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் கட்டுப்பாடு ஒரேசீரான அதிக "மிதவாத" அரசியல் கரங்களிடம் விடப்பட்டுள்ளது: அதாவது, வெள்ளை மாளிகை முப்படைகளின் தலைமை தளபதி ஜோன் கெல்லி தலைமையில் தளபதிகள் மற்றும் முன்னாள்-தளபதிகளின் ஒரு குழு, அத்துடன் ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கேரி கோஹ்ன், மற்றும் நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் போன்ற வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதாக குறிப்பிடுகின்றன.
நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று ஒரு தலையங்கத்தில், “அரசியலமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் படைத்துறைசாராத தலைமையைக் காணப் பழகிய அமெரிக்கர்கள், திரு. ட்ரம்ப் முற்றிலுமாக தடம் விலகாமல் இருப்பதைத் தடுப்பதற்கு, இப்போது மூன்று நடப்பு மற்றும் முன்னாள் தளபதிகளான வெள்ளை மாளிகையின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி ஜோன் கெல்லி; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர்; பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டிஸ் ஆகியோரை சார்ந்திருக்க வேண்டியவர்களாக தங்களைக் காண்கிறார்கள். அனுபவம் மிக்கவர்கள் மற்றும் படித்தவர்கள், உலகளாவிய மோதலில் விலைகொடுக்க வேண்டிய கொடூரங்களை நன்குணர்ந்தவர்கள், திரு.ட்ரம்பிடம் இல்லாத பொதுமக்களுக்கான சேவையை நோக்கி ஒரு தூண்டலால் உந்தப்பட்டவர்கள். இம்மூன்று நபர்களும் அவரது மோசமான உள்ளுணர்வுகளை அடக்கிவைப்பார்கள் என்று நம்பப்படுகிறது,” என்று குறிப்பிட்டு வழி காட்டுகிறது.    
டைம்ஸின் அதே பதிப்பில், ஒரு செய்தி பகுப்பாய்வு எதை “பெருநிறுவன அமெரிக்காவின் தார்மீக குரல்" என்று தலைப்பிட்டு அழைக்கிறதோ அதை கொண்டாடுகிறது. இவ்விடயத்தில், “வெறுப்பு குழுக்களை கண்டிக்கவும், சகிப்புத்தன்மையையும் அரவணைப்பையும் அடையாளம் காட்ட கடந்த வாரம் பெருவணிக தலைவர்களிடம் இருந்து ஓர் ஒருமித்த குரல் எழுந்தது” என குறிப்பிட்டது. 
இந்த "தார்மீக" தலைவர்களின் "ஒருமித்த குரலின்" பாகமாக இருந்தவர்களின் பெயர்களில், 2008 நிதியியல் பொறிவுக்கு பொறுப்பானவைகளில் ஒன்றான JPMorgan Chase இன் ஜேமி டெமன் (Jamie Dimon); நூறாயிரக் கணக்கானவர்களைக் பலி கொண்ட இயக்கும் ஆளியின் (ignition switch) கோளாறை மூடிமறைப்பதை மேற்பார்வையிட்ட ஜெனரல் மோட்டார்ஸின் மேரி பர்ரா (Mary Barra); மற்றும் குறைந்த-கூலி சுரண்டலுக்கு ஒரு சம அர்த்தமாக விளங்கும் நிறுவனம் வால்மார்ட் இன் தலைமை செயலதிகாரி டொக் மெக்மில்லன் (Doug McMillon) போன்ற பெருநிறுவன குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடங்கி இருந்தன.
சார்லட்வில்லில் கலகம் செய்த நவ-நாஜிக்களைப் பாதுகாக்கும் ட்ரம்பின் அஜாக்கிரதையான கருத்துக்களை ஆளும் உயரடுக்கு, வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் உள்நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கும் ஒரு அச்சுறுத்தலாக பார்த்தது. பெருநிறுவன வரி வெட்டுக்கள், பெருவணிக நெறிமுறை தளர்த்தல், உள்கட்டமைப்பு சீர்திருத்தம் என்ற போர்வையில் இலாப கொழிப்பு, மருத்துவ சிகிச்சை மானியம் (Medicaid) மற்றும் ஏனைய சமூக திட்டங்களின் வெட்டுக்கள் கொண்ட ட்ரம்ப் திட்டநிரலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து சக்தி வாய்ந்த பெருநிறுவன நலன்கள் அஞ்சின.   
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பாசிசவாத அடித்தளத்தைக் கட்டமைக்கும் அவரது முயற்சியை ட்ரம்ப் தாமாகவே அம்பலப்படுத்தியமை, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் கட்டமைந்துள்ள, ஓர் ஊகவணிக குமிழி பொறிவின் அபாயம் குறித்து நிதியியில் வட்டாரங்களில் பதட்டங்களை அதிகரித்தது.
அமெரிக்க வரலாற்றில் முன்பில்லாத அளவில் அரசு மீது இராணுவம் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் பிடியை அதிகரிக்க வேண்டுமென்பதே தெளிவாக டைம்ஸ் முன்வைக்கும் விடையிறுப்பாகும். 1961 இல் ஜனாதிபதி ட்வைட் டி. ஐசனோவரின் விடைபெறும் உரையில், “இராணுவ-தொழில்துறை கூட்டு" அதிகரிப்பதால் ஜனநாயகம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து அவர் எச்சரித்து 56 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய இந்த பரந்த இராணுவம்/உளவுத்துறை/பெருநிறுவன கூட்டு தற்போது அனுபவிக்கும் செல்வாக்கின் அளவு, பலம் மற்றும் விதம் குறித்து அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்.      
இந்த ஒன்றுதிரள்வின் முதல் விளைவு தான், ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டு, ட்ரம்ப் இன்றிரவு நாடுதழுவிய ஓர் உரை வழங்குவார் என்ற அறிவிப்பு.  
அனைத்திற்கும் மேலாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்து ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது. இதனால் தான், மக்கள்தொகையில் மிக வறிய அரைவாசி மக்களின் செல்வவளம் அளவுக்கு 20 தனிநபர்கள் செல்வவளத்தைக் குவித்துக் கொண்டுள்ள ஒரு நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கை யதார்த்தம் குறித்தும், அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான திட்டநிரல் குறித்தும் கூட, ஊடகங்கள் முன்வைக்கும் உத்தியோகபூர்வ சொல்லாடலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. ஈராக்கின் ஃபல்லூஜா நகரை அழிப்பதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக "Mad Dog" என்ற அடைமொழி பெற்ற மாட்டிஸ் போன்ற "பொறுப்பான" தலைவர்கள் செய்யும் குற்றங்கள் குறித்தோ மற்றும் போர் மீதோ கூட அங்கே எந்த விவாதமும் இருப்பதில்லை.  
அமெரிக்கா இனவாத சகிப்புத்தன்மையின்றி கொந்தளித்து கொண்டிருக்கும் ஒரு நாடாக, நவ-நாஜி மற்றும் இனவாத சக்திகளின் பலம் மற்றும் செல்வாக்கு குறித்த மிகைப்படுத்தப்பட்ட சித்திரத்துடன் முற்றிலும் திரிக்கப்பட்ட ஒரு முன்நிறுத்தலை மையப்படுத்தி, தொடர்ச்சியாக ஒரு வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டு இது பிரதியீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாய் எங்கும் பரவியுள்ள ஜனநாயகக் கட்சியுடன் அணி சேர்ந்த ஊடகங்களில், வெளிப்படையாகவே முரண்பாடான ஆனால் உண்மையில் ஒன்றோடொன்று பொருந்திய போக்குகள் தோன்றுகின்றன. அதாவது அடையாள அரசியலின் ஊக்குவிப்புடன் சேர்ந்து சார்லட்வில்லில் ஆர்ப்பாட்டம் செய்த வெள்ளையின மேலாதிக்கவாத குண்டர்களை மதிப்புடனும் மற்றும் ஆச்சரியத்துடனும் அவை சித்தரித்து காட்டுகின்றன.
“அமெரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கம்,” என்று தலைப்பிட்டு நியூ யோர்க்கரில்ஞாயிறன்று வெளியான ஒரு செய்தியிதழ் இதற்கு சரியான உதாரணமாக இருந்தது. ஒபாமாவின் மிகைமதிப்பிட்ட வாழ்க்கை சரிதமான The Bridge எனும் நூலின் ஆசிரியர் டேவிட் ரெம்நிக்கின் ஓர் அறிமுகத்தில், “தவறிழைக்காதீர்: நவ-நாஜிக்களும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளும் இப்போது அமெரிக்க அரசியல் முன்முகப்பில் உள்ளனர்" என்று அறிவித்தார்.
“ஐரோப்பாவின் எந்தவொரு தேசத்தையும் போலன்றி, ஐக்கியப்படுத்தும் சக்தியாக அமெரிக்கா வெள்ளையினத்தைப் பற்றியுள்ளது,” என்று வலியுறுத்துகின்ற, “அமெரிக்காவை மீண்டும் வெள்ளை இனத்தவருக்காக மாற்றுவோம்" என்று தலைப்பிட்ட டோனி மொரிசனின் கட்டுரை, முக்கிய கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது. ஜனநாயக கட்சியினது மற்றும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகளில் உள்ள அதன் பல்வேறு அடிவருடிகளது அதே போக்கில், மொரிசனும், ட்ரம்ப் தேர்வானதை "வெள்ளையின அமெரிக்காவின்" இனவாதத்தின் விளைவாக விளக்குகிறார்:
தேர்தல் நாளன்று, ஏன் இந்தளவு ஆர்வத்துடன் பல வெள்ளையின வாக்காளர்கள், குறைவாக படித்தவர்களும் சரி நன்கு படித்தவர்களும் சரி, டொனால்ட் ட்ரம்ப் விதைத்த வெட்கக்கேட்டை மற்றும் அச்சத்தை தழுவினர். கருப்பினத்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுக்காததற்காக நீதித்துறை அந்த வேட்பாளரின் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தது. பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்று வினவிய அந்த வேட்பாளர், ஒரு பிரச்சார பேரணியில் Black Lives Matter போராட்டக்காரர் ஒருவரை அடித்த பின்னரும் மன்னித்துவிட்டதாக தெரிந்தது. அவரது காசினோ இடங்களில் இருந்து கருப்பின தொழிலாளர்களை அந்த வேட்பாளர் விலக்கி வைத்திருந்தார். டேவிட் டூக் ஆல் நேசிக்கப்படும் அந்த வேட்பாளர், Ku Klux Klan ஆல் ஆமோதித்து ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
வெள்ளையினத்தவர்கள் அனைவரையும், குறிப்பாக வெள்ளையின ஆண்களை, KKK இன் இரகசிய ஆதரவாளர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சி ஓர் அரசியல் மோசடியாகும். இனவாதம் இருக்கிறது தான். ஆனால், சார்லட்வில்லில் அணிவகுத்த வெள்ளையின மேலாதிக்கவாதிகள் மற்றும் நவ-நாஜிக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர், அவர்கள் பரந்த பெரும்பான்மை உழைக்கும் மக்களால் ஆழ்ந்த மனக்குமுறலுடன் பார்க்கப்படுகிறார்கள். ஒரு நாடுதழுவிய அணிதிரட்டல் இந்த காட்டுமிராண்டித்தனமான சித்தாந்தத்தின் ஒரு சில நூறு ஆதரவாளர்களை மட்டுமே ஈர்த்திருந்தது. இதற்கிடையே, ட்ரம்ப் மற்றும் அவர் பாதுகாக்கும் பாசிசவாதிகள் இருவரையும் கண்டிக்க எல்லா இனத்தையும் சேர்ந்த பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்து வந்தனர்.
ட்ரம்ப் இன்று ஜனாதிபதியாக இருக்கிறார் என்றால், அது இனவாதத்திற்கு வழங்கப்பட்ட பாரிய வாக்குகளின் காரணமாக அல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் க்கும் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கும் இடையிலான கூட்டணியின் ஆளுருவாக உள்ளவரும், உயிர்பிழைக்கவே போராடிவரும் பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் அவலநிலையைக் குறித்து தமது மெத்தனமான அவமதிப்பை மூடிமறைக்க கூட முயலாதவருமான ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியை விட ட்ரம்ப் வெற்றிகரமாக அதிகளவில் சமூக அதிருப்திக்கு முறையிட்டார் என்பதனாலேயே ஆகும்.
மக்களின் பெரும் பிரிவுகளுக்கு பூதாகரமாக காட்டுவதற்கும், தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலுக்கு முட்டுக்கொடுக்கவும், பாரிய செல்வவளத்தை பணக்காரர்களுக்கு கைமாற்றியதற்கு அரசியல் மூடுமறைப்பை வழங்குவதற்கும், நடைமுறையளவில் தளபதிகள் மற்றும் பெருநிறுவன பில்லியனர்களின் அரண்மனை ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவை அணிதிரட்டவும், மற்றும், அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை ஒடுக்கவுமே இனவாத சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  
ஜனநாயக உரிமைகளுக்கு மேலோங்கிய அச்சுறுத்தல்கள், விரல்விட்டு எண்ணக்கூடிய பாசிசவாத குண்டர்களிடம் இருந்தல்ல, மாறாக வீதிகளில் இறங்கியுள்ள இனவாதிகளுக்கு மாற்று மருந்தாக கொண்டு வரப்படும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனின் கூட்டணியிடம் இருந்து வருகிறது.
டைம்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு துணை அமைப்புகளை பொறுத்த வரையில், நிஜமான அச்சுறுத்தல் நவ-நாஜிக்களிடம் இருந்து அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திலிருந்து வருவதாக அவர்கள் காண்கிறார்கள்.
இனவாத அரசியலை ஊக்குவிப்பதும் மற்றும் அரசு மீதான இராணுவ-பெருநிறுவன கட்டுப்பாட்டை இறுக்குவதும், எதிர்ப்பு கண்ணோட்டங்களை, அனைத்திற்கும் மேலாக உலக சோசலிச வலைத் தளத்தை ஒடுக்குவதுடன் கைகோர்த்து செல்கிறது. தேடல் முடிவுகளில் மோசடி செய்வதன் மூலமாக WSWS ஐ தணிக்கை செய்ய மற்றும் இருட்டடிப்பு செய்ய, அரசுடன் நெருக்கமாக இணைந்து, இதற்காக தான் கூகுளால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. இது பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை இலக்கில் வைத்த இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு வெள்ளோட்டமாகும்.
கட்டுரையாளர்கள் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:
Patrick Martin and Joseph Kishore
21 August 2017
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/grip-a23.shtml

Saturday, 26 August 2017

சென்னை, பொதுக் கூட்டம்: அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்போம்!

Public meeting in Chennai, India: Oppose the US-led imperialist war drive!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், ஆகஸ்ட் 27 ம் தேதி சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கின்றனர், இதில் சீனாவிற்கு எதிராக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சியடையும் போர் அபாயம் பற்றியும்  இந்த  பேரழிவை தடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட  தேவையான  அரசியல் மூலோபாயம் பற்றியும் விவாதிக்கப்படும்.
சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ கட்டியெழுப்புதலில் இந்தியாவின் அதிகரித்துவரும் ஈடுபாடு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் நிகழ்கிறது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட இந்தியாவில் "இடது" என்று அழைக்கப்படுபவர்கள், வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்திற்கான பொறுப்பற்ற உந்துதலினால் எழும் பிரமாண்டமான ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கின்றனர்.
2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதம மந்திரி நரேந்திர மோடி சீனாவிற்கு எதிரான ஒரு "முன்னிலை" நாடாக இந்தியாவை மாற்றியமைத்துள்ளார், மேலும் நாட்டின் இராணுவத்தை வாஷிங்டனின் திட்டங்களுக்குள் ஒருங்கிணைத்துள்ளார்.
அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் இந்தியாவின் இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன மற்றும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு  மோடி அரசாங்கம் ஆதரவளிக்கிறது. ஆசியா பசிபிக்கில்  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுடனும் இந்தியா அதன் உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது.
இரு அணு ஆயுத சக்திகளான  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே  பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடையில் ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாக இருக்கும் டோக்லாம் பீடபூமியில் சீனத் தொழிலாளர்களின் சாலை விரிவாக்கப் பணியை நிறுத்துவதற்கு சமீபத்தில்  இந்தியத் துருப்புகள் மேற்கொண்ட தலையீடு இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் அனைத்து பிரிவுகளும் ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பூகோளரீதியான போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் படி தொழிலாள வர்க்கத்திற்கு  அழைப்பு விடுத்தன. ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு மற்றும் ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதற்கு இந்திய தொழிலாளர்களை ஆசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் முயற்சி செய்கின்றனர்.
சென்னையில் எங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, இந்த முக்கியமான விவாதத்தில் கலந்துகொள்ளும்படியும்  தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையுள்ள அறிவுஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
தேதி: ஆகஸ்ட் 27
நேரம்: காலை 10 மணி
இடம்: 
முதல் மாடி, பெரியார் ஈ.வி. ராமசாமி-நாகம்மை கல்வி 
மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை 
277/2 சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை,  
அம்பத்தூர், சென்னை - 600 098
(HPM பாரடைஸ் கல்யாண மஹால் எதிரில்)
பேருந்து நிறுத்தம்: அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ் 
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/meet-a08.shtml

Friday, 25 August 2017

யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம்

SEP meeting in Jaffna: Reject Tamil bourgeois nationalism. Build the Socialist Equality Party!

தமிழ் முதலாளித்துவ தேசியவாதத்தை நிராகரி. சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்பு!

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளின் சீரழிவு மற்றும் நெருக்கடியை பற்றியும் சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றியும் கலந்துரையாடுவதற்கு, ஆகஸ்ட் 26 அன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் உழைக்கும் மக்களிடையே மதிப்பிழந்து போயுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது அமெரிக்க-சார்பு இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை பங்காளியாக செயல்பட்டு, அமெரிக்காவின் மற்றும் இந்தியாவின் பூகோள-அரசியல் நலன்களை ஆதரிக்கிறது. ஏனைய அரசியல் கட்சிகளும் இதையே பின்பற்றுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு தொழிலாள வர்க்கத்தின் அமைதியின்மைக்கு அஞ்சி, வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவ-பொலிஸ் அடக்குமுறையை பயன்படுத்தி வரும் கொழும்புடன் ஐக்கியப்பட்டுள்ளது. இது சமீபத்திய பெட்ரோலிய தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது வெளிச்சத்துக்கு வந்தது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவ ஆக்கிரமிப்பையும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறது.
இது தமிழ் தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையிட்டு விழிப்படைந்துள்ள இந்த கட்சிகளின் சில தலைவர்கள் மற்றும் ஊடகங்களும் "புதிய தமிழ் அரசியல் தலைமையின் தேவை" பற்றி ஒரு "விவாதத்தை" தொடங்கியுள்ளன. இது தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புதிய அரசியல் பொறியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தமிழ் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தூர விலக வேண்டும், தமிழ் தேசியவாதத்தை நிராகரிப்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சோ.ச.க.யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், தமிழர் விரோத பாகுபாடு மற்றும் கொழும்பு அரசாங்கத்தின் போர்களுக்கு எதிராக போராடுவதில் நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள தொழிலாளர்களின் இன பாகுபாட்டைக் கடந்து ஐக்கியப்பட்ட மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்க முடியும்.
லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியை அடித்தளமாகக் கொண்ட சோ.ச.க., தெற்காசியாவிலும், சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக போராடுகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளை கூட்டத்தில் கலந்துகொள்ளவும், இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்கவும் அழைக்கிறோம்.
கூட்டம் நடக்கும் இடம்: 
வீரசிங்கம் மண்டபம், 
2 வது மாடி, யாழ்ப்பாணம்.
திகதி மற்றும் நேரம்: 
சனிக்கிழமை 
ஆகஸ்ட் 26, 3 மணி.
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/jaff-a21.shtml

Thursday, 24 August 2017

சென்னை, பொதுக் கூட்டம்: அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்போம்!

Public meeting in Chennai, India: Oppose the US-led imperialist war drive!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள், ஆகஸ்ட் 27 ம் தேதி சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கின்றனர், இதில் சீனாவிற்கு எதிராக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சியடையும் போர் அபாயம் பற்றியும்  இந்த  பேரழிவை தடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட  தேவையான  அரசியல் மூலோபாயம் பற்றியும் விவாதிக்கப்படும்.
சீனாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ கட்டியெழுப்புதலில் இந்தியாவின் அதிகரித்துவரும் ஈடுபாடு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் நிகழ்கிறது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட இந்தியாவில் "இடது" என்று அழைக்கப்படுபவர்கள், வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்திற்கான பொறுப்பற்ற உந்துதலினால் எழும் பிரமாண்டமான ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கின்றனர்.
2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதம மந்திரி நரேந்திர மோடி சீனாவிற்கு எதிரான ஒரு "முன்னிலை" நாடாக இந்தியாவை மாற்றியமைத்துள்ளார், மேலும் நாட்டின் இராணுவத்தை வாஷிங்டனின் திட்டங்களுக்குள் ஒருங்கிணைத்துள்ளார்.
அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் இந்தியாவின் இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன மற்றும் தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு  மோடி அரசாங்கம் ஆதரவளிக்கிறது. ஆசியா பசிபிக்கில்  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுடனும் இந்தியா அதன் உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது.
இரு அணு ஆயுத சக்திகளான  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே  பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடையில் ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியாக இருக்கும் டோக்லாம் பீடபூமியில் சீனத் தொழிலாளர்களின் சாலை விரிவாக்கப் பணியை நிறுத்துவதற்கு சமீபத்தில்  இந்தியத் துருப்புகள் மேற்கொண்ட தலையீடு இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் அனைத்து பிரிவுகளும் ஏகாதிபத்திய போர் உந்துதலை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு பூகோளரீதியான போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பும் படி தொழிலாள வர்க்கத்திற்கு  அழைப்பு விடுத்தன. ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு மற்றும் ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதற்கு இந்திய தொழிலாளர்களை ஆசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் முயற்சி செய்கின்றனர்.
சென்னையில் எங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, இந்த முக்கியமான விவாதத்தில் கலந்துகொள்ளும்படியும்  தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையுள்ள அறிவுஜீவிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
தேதி: ஆகஸ்ட் 27
நேரம்: காலை 10 மணி
இடம்: 
முதல் மாடி, பெரியார் ஈ.வி. ராமசாமி-நாகம்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை 
277/2 சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலை,  அம்பத்தூர், சென்னை - 600 098
(HPM பாரடைஸ் கல்யாண மஹால் எதிரில்)
பேருந்து நிறுத்தம்: அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ் 
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/meet-a08.shtml

Tuesday, 22 August 2017

இந்தியா-சீனா போர் நெருக்கடிக்கு இடையே, வாஷிங்டன் நியூ டெல்லி உடனான மூலோபாய உறவுகளை அதிகரிக்கிறது

Amid India-China war crisis, Washington boosts strategic ties with New Delhi

ந்தியாவுடனான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய கூட்டணியை பலப்படுத்த சமீபத்திய நாட்களில் ட்ரம்ப் நிர்வாகமும் பென்கடனும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
வெளிப்படையாகவே இந்நகர்வுகள் டோக்லம் பீடபூமி கட்டுப்பாடு மீது சீனாவுடனான தற்போதைய மோதலில் புதுடெல்லி அதன் கடுமையான நிலைப்பாட்டை விடாப்பிடியாக வைத்திருக்க, இந்தியாவை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. டோக்லாம் பீடபூமி என்பது, இமாலய மலைப்பகுதியில் புதுடெல்லி ஒரு காபந்து அரசாக கையாளும் ஒரு சிறிய மன்னராட்சியான பூட்டானும் சீனாவும் தமது இறையாண்மை எல்லைப்பகுதியாக உரிமைகோருகின்றதும், இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ளதுமான ஒரு மலைஉச்சிப்பகுதியாகும்.
டோக்லம் பீடபூமியில் கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் "நேருக்கு நேர்" ஒன்றுக்கொன்று எதிரெதிராக அணிவகுத்து நிற்கின்ற அதேவேளையில், புது டெல்லியும் பெய்ஜிங்கும் ஒன்றின் மீது ஒன்று போர்நாடும் அச்சுறுத்தல்கள் மற்றும் குறைகூறல்களை விடுத்துள்ளதுடன் அவற்றின் இராணுவங்களை போருக்கு தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளன.
இந்தியா சீனாவை ஒட்டிய அதன் வடகிழக்கு எல்லையின் முன்னரங்கு நிலைகளுக்கு ஆயிரக் கணக்கான துருப்புகளை நகர்த்தி, அவற்றை "போர் இல்லையெனில், சமாதானம் இல்லை" என்ற உயர் எச்சரிக்கை நிலையில் நிலைநிறுத்தி உள்ளதுடன், வெடிகுண்டுகள், உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய போர் தளவாடங்களை அவசரகதியில் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.
சீனா தீபெத்திற்கு போர்விமானங்களை நகர்த்தியிருப்பதாகவும், இந்திய மாநிலம் அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய அதன் எல்லைக்கு அருகே தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்தி இருப்பதாகவும் மற்றும் காயப்படுபவர்களைக் கருத்திக் கொண்டு திபெத்திற்கு கூடுதல் இரத்த கையிருப்புகளை அனுப்பி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் வாஷிங்டனின் தலையீடு, இப்போதைக்கு அது மறைமுகமாக இருந்தாலும் கூட, அணுஆயுத சக்திகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஒரு எல்லை மோதல் அபாயத்தை மிகப்பெரியளவில் அதிகரிக்கின்றது என்பதோடு, வேகமாக தீவிரமடைந்து, ஆசியா மற்றும் மொத்த மனிதயினத்திற்குமே பேரழிவுகரமான விளைவுகளோடு அமெரிக்க மற்றும் ஏனைய பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய சக்திகளையும் உள்ளிழுக்கும்.
இந்திய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு இடையிலான ஓர் உரையாடலின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் "இந்தோ-பசிபிக் பிராந்தியம் எங்கிலும்" அவற்றின் இராணுவ-பாதுகாப்பு கூட்டுறவை விரிவாக்க ஒப்புக் கொண்டதாக செவ்வாயன்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
முதல் படியாக, அவ்விரு நாடுகளும் அவற்றின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களை உள்ளடக்கிய "மந்திரிகள் அளவிலான இருவருக்கு-இருவர் (2-by-2) பேச்சுவார்த்தையை" தொடங்கி, "அவற்றின் மூலோபாய ஆலோசனைகளை அதிகரிக்கும்.”
அதற்கடுத்த நாள் வாஷிங்டன் அறிவிக்கையில், சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் ஒரு இஸ்லாமிய போராளிகள் குழுவான ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை ஒரு "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக" பட்டியலிட்டிருப்பதாக அறிவித்தது. ஆச்சரியத்திற்கிடமின்றி, இந்நகர்வு இந்தியாவால் மனமுவந்து வரவேற்கப்பட்டது. முஸ்லீம் பெரும்பான்மை காஷ்மீர் பகுதியில் புது டெல்லி மீதான எதிர்ப்புக்கும் மற்றும் பாரிய அன்னியப்படலுக்கும் பாகிஸ்தான் அரசு-ஆதரவிலான பயங்கரவாதமே, முழுமையாக இல்லையென்றாலும், பிரதானமாக உள்ளதென புது டெல்லி வாதிடுகிறது. இதை இஸ்லாமாபாத் கடுமையாக கண்டனம் செய்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன், பாதுகாப்பு துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் ஜப்பானிய அமைச்சர்களான Taro Kono மற்றும் Itsunori Onodera ஆகியோருக்கு இடையிலான நேற்றைய "இருவருக்கு-இருவர்" சந்திப்பானது, அமெரிக்காவும் ஜப்பானும் "அப்பிராந்தியத்தின் ஏனைய பங்காளிகளுடன் சேர்ந்து, குறிப்பாக கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா (மற்றும்) இந்தியாவுடன் சேர்ந்து, முத்தரப்பு மற்றும் பல்தரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டுறவை முன்னெடுக்க" கூட்டாக பணியாற்றுவதென முடிவெடுத்தனர்.
இது, வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் தொலைதூர ஏவுகணை பரிசோதனைகளை ஒருதலைபட்சமாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது தலைவணங்க மறுத்ததற்கு ஒரு விடையிறுப்பாக காட்டப்பட்டது. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் எட்டு மாதங்களுக்கு முன்னர் பதவிக்கு வந்த பின்னர் இருந்து திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ள வட கொரிய நெருக்கடி, அனைத்திற்கும் மேலாக பியொங்யாங்கின் அண்டை நாடும் பிரதான கூட்டாளியுமான சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் பீதியூட்டுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முனைவால் ஏற்பட்டதாகும்.
கடந்த கால்-நூற்றாண்டு காலமாக வாஷிங்டன் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டின் மீது சட்டவிரோதமாக படையெடுத்துள்ளது என்கின்ற போதினும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் இந்தியா முன்பினும் ஆழமாக ஒருங்கிணையும் பாகமாக, சிறிய, வறுமைப்பட்ட ஒரு நாடான வட கொரியாவை உலக அமைதிக்கு ஒரு பிரத்தியேக அச்சுறுத்தலாக சித்தரிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை திரும்பத்திரும்ப கூறுகின்றது.
முன்பில்லாத வகையில் வட கொரியா மீது "ஆத்திரம் மற்றும் சீற்றத்தை" மழையென பொழியவதற்கான ட்ரம்ப்பின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்களுடன், மோடி இந்தியாவையும் அச்சுறுத்தும் வகையில் அணி சேர்த்துள்ளார். அவர்களது ஆகஸ்ட் 15 உரையாடலின் உரை வடிவத்தின்படி, “வட கொரிய ஆபத்திற்கு எதிராக உலகை ஒருங்கிணைப்பதில், ட்ரம்பின் பலமான தலைமைக்காக பிரதம மந்திரி மோடி ஜனாதிபதி ட்ரம்புக்கு நன்றி தெரிவித்தார்.”
கடந்த ஒன்றரை தசாப்தங்களைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் கீழ் ஆகட்டும், இந்தியாவை சீனாவுக்கு எதிர்பலமாக கட்டமைப்பதும் மற்றும் அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்களுடன் அதை பிணைப்பதுமே வாஷிங்டனின் ஒரு மத்திய மூலோபாய குறிக்கோளாக இருந்துள்ளது. இந்தியா, சீனாவை ஒட்டி சுமார் 3,500 கிலோமீட்டர் நீள எல்லையைக் கொண்டுள்ளதும், உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றை கொண்டுள்ளதும் என்பது மட்டுமல்ல. அது புவியியல்ரீதியில் இந்திய பெருங்கடலிலும் அதிகாரம் செலுத்துகிறது, இந்த கடல்-எல்லைகள் வழியாகத்தான் சீனாவிற்கான பெரும்பான்மை எண்ணெய் மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு தேவையான ஏனைய ஆதாரவளங்களும் செல்கின்றன.
மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூன்றாண்டுகால ஆட்சியில், இந்தியா கண்கூடாக சீனாவுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் ஒரு முன்னணி நாடாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியா அதன் இராணுவ தளங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் வழமையாக பயன்படுத்துவதற்கு இப்போது அனுமதிக்கிறது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளைக் குறித்த உளவுதகவல்களைப் பென்டகனுடன் பகிர்ந்து கொள்கிறது, மேலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளையும் மிக வேகமாக விரிவாக்கியுள்ளது.
கடந்த வாரயிறுதியில் பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவுடனான ஒரு பேட்டியில், அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் ஹாரி ஹாரீஸ் கூறுகையில், அமெரிக்கா "இந்தியாவின் இராணுவத்தை நவீனமாக்க அதற்கு உதவ தயாராக இருப்பதாக" அறிவித்து, இந்தியாவுடன் பென்டகன் இயைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வங்காள விரிகுடாவில் சமீபத்திய அமெரிக்க-இந்திய-ஜப்பானிய கூட்டு கடற்படை ஒத்திகையைப் புகழ்ந்துரைத்த அட்மிரல், அதை அமெரிக்காவின் நாற்கர ஒத்திகையாக மாற்றும் வகையில் ஆஸ்திரேலியாவையும் மற்றும் சீனாவை இராணுவரீதியில் எதிர்கொள்ள மற்றும் தோற்கடிக்க பென்டகனின் மூலோபாய முன்னெடுப்பில் உள்ள நாடுகளையும், வருடாந்தர மலபார் ஒத்திகையில் இணைத்து கொண்டால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
டோக்லம் பீடபூமிக்கு உரிமையுள்ள சொந்தக்காரர் யார் என்பதில் அமெரிக்கா நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதை பகிரங்கமாக அது தொடர்ந்து பேணி வருவதற்கு இராஜாங்கரீதியிலான காரணங்கள் இருந்தாலும் கூட, சீனாவுடனான இந்தியாவின் தற்போதைய எல்லை நெருக்கடியில் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுடன் நிற்கிறது என்பதை தெளிவுபடுத்துமாறு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல மூலோபாயவாதிகளிடம் இருந்து வந்த அழைப்பை அடுத்து, இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வாஷிங்டனின் நகர்வுகள் வந்துள்ளன.
“JFK ஒரு சீன-இந்திய போரைத் தடுத்தார். ட்ரம்பால் முடியுமா? அணுஆயுத பணயங்கள் இப்போதும் பெரிதும் அதிகரித்துள்ளன,” என்று தலைப்பிட்டு நீண்டகால சிஐஏ நடவடிக்கையாளரும் ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரியுமான Bruce Reidel எழுதியிருந்த ஒரு கட்டுரை இவ்விடயத்தில் குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதி ஜோன் கென்னடி "இந்திய விமானப்படைகளுக்கு சரக்குகளை மீள்நிரப்ப அமெரிக்க விமானப்படையை" அனுப்பினார் மற்றும் ஒரு விமானந்தாங்கி "போர்க்கப்பல் படைப்பிரிவை வங்காள விரிகுடாவிற்கும்" அனுப்பினார், இது தான் 1962 சீன-இந்திய எல்லை போரை சீனா ஒருதலைபட்சமாக முடித்துக் கொள்ளவும் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதன் "கைப்பற்றல்களில்" இருந்து பின்வாங்கவும் செய்தது என்று அக்கட்டுரை வாதிடுகிறது.
“உலகிற்கே மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடியதான" ஒரு மோதல் வெடிப்பதைத் தடுக்க ட்ரம்ப் நிர்வாகம் இராஜாங்க நடவடிக்கைகளைத் தொடங்க தயாராக வேண்டுமென Reidel வலியுறுத்துகின்ற அதேவேளையில், இந்திய இராணுவம் பெய்ஜிங்கிடம் தலைகுனியாமல் இருக்க உதவுவதில் வாஷிங்டன் அதற்கு உதவ முன்வர வேண்டுமென்றும், அவசியமானால் போர்களத்தில் அதை இரத்தம்தோய்ந்ததாக்க வேண்டுமென்றும் அவர் மறைமுகமாக வாதிடுகிறார்.
ஒரு முன்னணி அமெரிக்க சிந்தனை குழாமான, மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் Richard M. Rossow, அவர் பங்கிற்கு, “சீனாவை எதிர்த்து நிற்க வெளிநாட்டு எல்லைகளுக்குள் அதன் துருப்புகளை அனுப்புவதை" ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டுமென்று வாதிடுகிறார், அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் நீண்டகாலமாகவே இக்கருத்தில் நிலைத்திருக்கிறனர் என்பதை புது டெல்லி உணர்ந்துள்ளது.
போர் விரும்பத்தக்கதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அமெரிக்க தலைமையிலான "உலகளாவிய ஒழுங்கமைப்புக்கு" பங்களிப்பளிக்க முக்கிய படிகளை எடுக்க இந்தியா தயாராக உள்ளது என்பதற்கும், “நமது அதிகரித்துவரும் பாதுகாப்புத்துறை பங்காண்மையை இன்னும் ஆழப்படுத்தும் நமது தீர்மானத்தை அது பலப்படுத்தும் என்பதற்கும்" பலமான, தெளிவான ஒரு சமிக்ஞையை நாம் பெற்றுவிட்டோம் என்பதை Rossow ஒப்புக் கொள்கிறார். 
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கிய ஆசிய கூட்டாளியான ஜப்பான், டோக்லம் பீடபூமி பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் அமெரிக்காவை விட இன்னும் கூடுதலாக முன் சென்றுள்ளது. வியாழனன்று, இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் Kenji Hiramatsu கூறுகையில், இந்தியா "பூட்டானுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை" ஒன்றை கொண்டிருப்பதாக கூறி, அதற்கு சட்டபூர்வ உரிமையில்லாத பகுதியில் இந்திய துருப்புகள் தலையிட்டிருப்பதை நியாயப்படுத்தினார். பெய்ஜிங் பெயரைக் குறிப்பிடாமல், அவர் அறிவுறுத்துகையில், அந்த சர்ச்சைக்குரிய பீடபூமியில் ஒரு சாலையை விரிவாக்கும் முயற்சியானது "இருக்கும் நிலைமையை பலத்தினால் ஒருதலைப்பட்சமாக மாற்ற" முயற்சிப்பதாகும் என்றார்.
மேற்கத்திய மூலதனத்திற்கு பிரதான மலிவு-உழைப்பு வினியோக-சங்கிலி மையத்திலிருந்து சீனாவைப் புறந்தள்ளும் நம்பிக்கையில் மற்றும் அதன் சொந்த வல்லரசு அபிலாஷைகளை முன்னெடுப்பதற்காக, ஊழல் நிறைந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம், சீனாவை மீண்டும் அடிபணிய வைக்கும் அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்திய உந்துதலில் அவற்றின் ஒரு சேவகராக சேவையாற்றி வருகிறது.
சீன மக்கள் குடியரசில் முதலாளித்துவத்தை மீட்டமைத்ததில் இருந்து எழுந்த செல்வந்த தன்னலக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சீன ஆட்சியிடம், அதற்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் இடைவிடாத தாக்குதலுக்கு எந்த முற்போக்கான பதிலும் கிடையாது.
ஆசிய மற்றும் உலக மக்களின் போர்-எதிர்ப்புணர்வுக்கு எந்தவொரு முறையீடும் செய்ய அமைப்புரீதியிலேயே இலாயகற்று, அது, வாஷிங்டன் உடன் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளும் முயற்சிக்கும், போர்நாடும் தேசியவாதத்தை முடுக்கிவிட்டு அதன் சொந்த இராணுவவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலும் போர் ஏற்பட சாத்தியமுள்ளது, ஆனால் அந்த மோதலை இந்தோ-சீனா எல்லையின் கிழக்கு பகுதியோடு மட்டுப்படுத்த முடியும் என்றும், அது ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரத்திற்கு மிகாமல் நீடிக்கும் என்றும் சீன இராணுவம் நம்புவதாக கூறிய மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆதாரநபர்களை, South China Morning Post இன் ஒரு சமீபத்திய கட்டுரை மேற்கோளிட்டது.
ஆனால் ஒரு எல்லை போரானது அமெரிக்காவில் தொடங்கி ஏனைய சக்திகளையும் வேகமாக உள்ளிழுக்கும் என்பதையே சமீபத்திய நாட்களின் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. அதுபோன்றவொரு பேரழிவு தடுக்கப்பட்டாலும் கூட, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒரு மோதல் ஒரு எல்லை போராக மட்டுப்பட்டு இருந்தாலும் கூட, அது உலகெங்கிலும் உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.
அதன் விளைவு என்னவாக இருந்தாலும், அதுபோன்றவொரு போர் ஏகாதிபத்தியத்தை மட்டுமே பலப்படுத்தும்.
ஒரு சீன "வெற்றியானது", இந்திய முதலாளித்துவ வர்க்கம் சீனாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான நேட்டோ வகைப்பட்ட ஒரு கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள மட்டுமே காரணமாக அமையும். அதற்கும் கூடுதலாக, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் மீள்ஆயுதமயப்படுத்தல் போருக்கான திட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு இமாலய பகுதி சம்பவங்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தும்.
சீனா தோல்வியடையும் ஒரு சம்பவத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலைத் தீவிரப்படுத்த அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ளும். இதற்கிடையே, மோடி அரசாங்கம், 1962 “அவமதிப்பை" துடைத்துவிட்ட பெருமிதத்துடன், தெற்காசியாவின் மேலாதிக்க சக்தியாக அதை அங்கீகரிப்பதற்காக அதன் அண்டைநாடுகளை மிரட்டுவதற்கான அதன் முயற்சிகளை அதிகரித்து, தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த போர்நாடும் உணர்ச்சிகரமான தேசியவாத சூழலை முடுக்கிவிட்டு, இந்திய அரசியலை இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்த்தும்.
ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் முனைவுக்கு ஒரு எதிர்விசை உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் சமீபத்திய தசாப்தங்கள் ஒரு பாரிய தொழிலாள வர்க்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதுவொரு பலமான சமூக சக்தியாகும், இலாபங்கள், ஆதாரவளங்கள் மற்றும் மூலோபாய அனுகூலங்களுக்கான முதலாளித்துவ போட்டாபோட்டியில் இதற்கு எந்த ஆர்வமும் கிடையாது, போருக்கு மூலக்காரணமான முதலாளித்துவம் மற்றும் அது வரலாற்றுரீதியில் வேரூன்றியுள்ள காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை தூக்கியெறியும் நோக்கில், ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் சேர்ந்து இந்த பலமான சமூக சக்தி அணிதிரட்டப்பட வேண்டும்.
By Deepal Jayasekera and Keith Jones
19 August 2017
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/usin-a22.shtml

Friday, 18 August 2017

உலகம் முடிவின் விளிம்பில் உள்ளது

The world on the brink

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுக்கு எதிராக, தொடர்ந்து அசாதாரண ஆத்திரமூட்டல் மற்றும் பொறுப்பற்ற அச்சுறுத்தலை இடைவிடாது பேணிவரும் நிலையில், உலகம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும் அணுஆயுத போரின் விளிம்பை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்புவியில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ பலத்திற்கு பொறுப்பான ஒரு மனிதரிடம் இருந்து இதுபோன்ற போர்நாடும் வசனங்கள் வருவது, எத்தருணத்திலும் அணுஆயுத போர் வெடிக்கலாம் என அதிகரித்த அதிர்ச்சியையும் மற்றும் பயத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
B-1 ரக மூலோபாய குண்டுவீசிகளின் புகைப்படங்களுடன், கொரியாவில் அவற்றின் "இன்றிரவு போரை" நடத்த இந்த மூலோபாய குண்டுவீசிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகம் வெளியிட்ட ஒரு சேதியை பின்தொடர்ந்து, ட்ரம்ப் நேற்று காலை அவரது ட்வீட் சேதியில், “வடகொரியா முட்டாள்தனமாக நடந்து கொண்டால்,” இராணுவ நடவடிக்கை இப்போது "தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக"  குறிப்பிட்டார்.
அதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு பின்னர், “வாய்வீச்சை தீவிரப்படுத்துவதாக" ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்த விமர்சனத்தைக் கண்டிக்கும் வகையில், “நான் என்ன கூறினேனோ அந்நிலைமையின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், நான் என்ன நினைத்தேனோ அதையே நான் கூறினேன்,” என்று அறிவித்தார். வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் இன்னும் ஒரேயொரு அச்சுறுத்தல் விடுத்தாலும் சரி, “அதற்காக அவர் உண்மையிலேயே வருத்தப்படவேண்டியிருக்கும்” என்று எச்சரித்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை மீண்டும் அச்சுறுத்தினார்.
உலக மக்கள் மீது முன்பினும் அதிக அச்சுறுத்தலுடன் போர் அபாயம் அதிகரித்து வந்தாலும், இது வெறுமனே ஒரு அறிக்கை போர் தான், ஏதோவொரு விதத்தில் இது இந்த வீழ்ச்சியிலிருந்து பின்னுக்கு வந்துவிடும் என்று கருதுவதும், அல்லது குறைந்தபட்சம் நம்புவதும், இயல்பானதே. ஆனால் முகத்திற்கு முன்னுள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
இப்போதைய நிலைமை உலகம் அணுஆயுத போருக்கு மிக நெருக்கத்தில் வந்திருந்த 1962 கியூப ஏவுகணை நெருக்கடியுடன், ஒப்பிடப்பட்டு வருகின்றது. ஆனால் அமெரிக்க தலைவரும் சரி ரஷ்ய தலைவரும் சரி அப்போது ஒரு அணுஆயுத தாக்குதலை கட்டவிழ்த்துவிட விரும்பவில்லை என்பதால் அந்த பதட்டமும் அபாயகரமான மோதலும் இறுதியில் தீர்க்கப்பட்டு, அணுஆயுத தளவாடங்கள் திரும்ப பெறப்பட்டன.
இதையே இன்றைக்கும் கூற முடியாது. குறைந்தபட்சம் ஒருபுறம், ட்ரம்ப் நிர்வாகம், “உலகம் ஒருபோதும் பார்த்திராததைப் போன்ற ஆத்திரம் மற்றும் சீற்றத்துடன்" மற்றொரு தரப்பை சுற்றி வளைக்க ஆயத்தமாகி தயாராக நிற்கிறது. அனைத்திற்கும் மேலாக, விரும்பியோ அல்லது விருப்பமில்லாமலோ, ட்ரம்ப் பொறுப்பற்ற விதத்தில் வட கொரியாவை ஒரு மூர்க்கமான இராணுவ நகர்வுக்குள் சீண்டிவிட்டு கொண்டிருக்கிறார்.
அமெரிக்கா பேரம்பேசிய ஒரு தீர்வை அல்லது ஏதோவொரு விதமான முழுமையான வெட்கக்கேடான அடிபணிவை அது விரும்புகிறது என்று கூறுவதைதவிர, ட்ரம்ப் இதுவரையில் வட கொரிய தலைவர் கிம் இற்கு வேறொரு நம்பிக்கையும் உறுதியளிக்கவில்லை. அதிகரித்தளவில் மோதலுக்கான சாத்தியக்கூறு தவிர்க்கவியலாததாக தெரிகின்ற நிலையில், இராணுவ தர்க்கமே அதிகரித்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பெரிதும் ஸ்திரமற்ற பியொங்யாங் ஆட்சி, ஒரு பாரிய அமெரிக்க தாக்குதல் உடனடியாக நிகழக்கூடுமென நம்புகின்றபட்சத்தில், பதிலடி கொடுப்பதற்கான அதன் தகைமை முழுமையாக அழிக்கப்படாமல் இருக்க அதன் சொந்த முன்கூட்டிய தாக்குதலைத் தொடங்க முடிவெடுக்கலாம்.
ட்ரம்ப் நிர்வாகம் அதன் பொறுப்பற்றத்தன்மையோடு, வட கொரியாவுக்கு எதிராக ஒரு போரைக் கட்டவிழ்த்து விடக்கூடிய அலட்சியத்துடன் மற்றும் அவமரியாதையுடன் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு-தெற்கு எல்லையின் இருதரப்பிலும் மில்லியன் கணக்கான உயிர்களை விலை கொடுத்த, 1950-1953 கொரிய போரைப் போலில்லாமல், ஒரு புதிய மோதலானது கொரிய தீபகற்பத்திற்குள்ளேயே மட்டுப்பட்டு இருக்குமென கருதவியலாது.
அணுஆயுத போர் அச்சுறுத்தல் வெறுமனே வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு பாசிசவாத பைத்தியக்காரரின் விளைவல்ல, மாறாக இது அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியால் எரியூட்டப்பட்ட அளப்பரிய புவி-அரசியல் பதட்டங்களில் இருந்து எழுகின்றது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான தடையாக கருதப்படும் சீனாவுக்கு சவால் விடுக்க, அவசியமானால் அதனுடன் போருக்குள் செல்ல, அமெரிக்காவிற்கு அழுத்தமளித்து வரும் வாஷிங்டனில் உள்ள இராணுவ மற்றும் அரசியல் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளால் ட்ரம்ப் ஆதரிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் அதன் வரலாற்று பொருளாதார வீழ்ச்சியைக் கடந்து வருவதற்கு அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க முனைந்த நிலையில், மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கால் நூற்றாண்டு கால தொடர்ச்சியான போர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் சூழலின் விளைவே, இப்போதைய இந்த நெருக்கடியாகும். அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச அரங்கில் இராணுவ நடவடிக்கை மூலமாக தீர்க்க முடியும் என்பது, அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் நடைமுறையளவிலான நம்பிக்கை சாசனமாக மாறியுள்ளது.
வட கொரியாவுக்கு எதிரான போருக்கு அடித்தளம் ஒபாமா நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது, அது சீனாவுக்கு எதிராக அதன் "ஆசிய முன்னிலையின்" பாகமாக இந்தோ-பசிபிக் எங்கிலும் மிகப்பெரியளவில் இராணுவ ஆயத்தப்படுத்தலை அங்கீகரித்தது. அமெரிக்க இராணுவம், அதன் விமானப்படை மற்றும் கப்பற்படையின் 60 சதவீதத்துடன், ஆசியாவில் இப்போது அதன் அதிநவீன ஆயுதங்களை நிலைநிறுத்தி உள்ளது மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் புதிய இராணுவ தளங்களுக்கான உடன்படிக்கைகளைப் பெற்றுள்ளது.
தென் கொரியாவில் இருந்தும் அத்துடன் அதன் ஜப்பான் மற்றும் குவாம் இராணுவத்தளங்களின் பல படைப்பிரிவுகளில் இருந்தும் 28,000 க்கும் அதிகமான விமானப்படை, கடற்படை, கப்பற்படை மற்றும் சிறப்பு நடவடிக்கை படையினரை பென்டகனால் உடனடியாக அழைத்துக் கொள்ள முடியும். அனைத்திற்கும் மேலாக, வட கொரியாவுடனான ஒரு போர் சம்பவத்தில், அமெரிக்கா அதன் 625,000 சிப்பாய்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 3,100,000 பேர் ஆகியோருடன் சேர்ந்து, தென் கொரிய இராணுவம் மீது செயல்படுத்தும் கட்டுப்பாட்டையும் ஏற்கக்கூடும்.
கொரிய தீபகற்பம் மீதான எந்தவொரு போரும் பெரும் அபாயங்களைச் சீனாவிற்கு மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கும் நிலைநிறுத்துகிறது, ஏனெனில் இவ்விரு நாடுகளுமே வட கொரியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றகரமான தான்தோன்றித்தனம், கடந்த நூற்றாண்டு முழுவதிலும் ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக இருந்துள்ள ஒரு இடத்தில், போரைத் தொடங்குவதற்கு அது தயாராக உள்ளது என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது.
சீனா மற்றும் ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்தும் வகையில் அவற்றின் பின்புறத்தில் அமெரிக்கா ஒரு போர் வெடிப்பை தொடங்குகையில் அவை வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருக்கும் என்று கருத முடியாது. வட கொரியா மீது கடுமையான புதிய தடையாணைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பெய்ஜிங்கும் மாஸ்கோவும் சமீபத்தில் தான் வாக்களித்திருந்தன என்ற நிலையில், இந்த வாரம் ட்ரம்பின் போர்நாடும் வேட்கையை அவை ஒரு காட்டிக்கொடுப்பாக மட்டுமே கருதும்.
முதல் கொரிய போரில் அமெரிக்க துருப்புகள் சீனாவின் எல்லையை நெருங்கிய போது, அது அப்போரில் தலையீடு செய்தது, ஆகவே மீண்டும் அது அதையே செய்யக்கூடும். அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு தலையங்கம், சீன ஆட்சியின் மிகவும் இராணுவவாத பிரிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பெய்ஜிங் அதன் நலன்களைப் பாதுகாக்க "உறுதியான கரத்துடன் விடையிறுக்க" வேண்டியிருப்பதாக வலியுறுத்தியது. முதல் தாக்குதலை வட கொரியா தொடங்கினால் சீனா நடுநிலையோடு இருக்க வேண்டுமென அது வலியுறுத்திய போதினும், “அமெரிக்காவும் தென் கொரியாவும் தாக்குதல்களை நடத்தி, வட கொரிய ஆட்சியைத் தூக்கியெறிய முயன்றால்… அவர்கள் அவ்வாறு செய்வதை சீன தடுக்கும்,” என்று எச்சரித்தது.
கொரிய தீபகற்பத்தின் இந்த உடனடி நெருக்கடியை, குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது தணிப்பதற்கான ஒரு வழியும் பரிசீலிக்கப்படும் என்பதை ஒதுக்கிவிட முடியாது. அணுஆயுத பயன்பாடு மீதான முந்தைய புரிந்துணர்வுகளுக்கு அமெரிக்கா இனியும் கட்டுப்படாது என்பதையும், அது அணுஆயுத போர் தொடுக்க விரும்புகிறது என்பதையும் அது தெளிவுபடுத்திவிட்டது—இந்த விடயத்தில் ஒரு வறிய, பின்தங்கிய மற்றும் பலவீனமான ஒரு இராணுவ எதிரிக்கு எதிராக நடக்கும். உலகெங்கிலும், போட்டியாளர்களும் கூட்டாளிகளும் அவர்களின் அத்தியாவசிய நலன்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கேற்ப, அவர்கள் தமது மூலோபாய மற்றும் இராணுவ திட்டமிடலை மாற்ற நிர்பந்திக்கப்படுவார்கள்.
இச்சூழலில், மனிதயினம் இப்போது முகங்கொடுக்கும் இந்த நெருக்கடிக்கு, அமெரிக்காவிலும், ஆசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக அரசியல் புரிதலும் தயாரிப்பும் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய அபாயமாகும். ட்ரம்பிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருக்கும் கொடூரமான அச்சுறுத்தல்கள் பெரும் மனக்கவலையை, அச்சம் மற்றும் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளன என்றாலும், இந்த போர் அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வர, தொழிலாளர்களிடம் அவர்களது சொந்த அரசியல் மூலோபாயம் மற்றும் கட்சி இல்லை. சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு அவசியமான பாரிய புரட்சிகர கட்சிகளாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே இப்போது அவசியமாகும்.
The World Socialist Web Site Editorial Board
12 August 2017
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/wsws-a16.shtml

Tuesday, 15 August 2017

சீனாவுடனான மோடி அரசாங்கத்தின் இக்கட்டான இராணுவ நிலைக்கு இந்திய ஸ்ராலினிஸ்டுகள் ஆதரிக்கின்றனர்

Indian Stalinists support Modi government in military standoff with China

மெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு “கீழ்படிந்த” கூட்டணி நாடாக இந்தியா தோன்றியிருப்பதனால் தான் நெருக்கடி தூண்டப்பட்டுள்ளது என்று அது ஒப்புக் கொண்ட போதிலும் மற்றும் இந்தியாவின் போர்குணமிக்க அச்சுறுத்தல்கள்  சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் யுத்தத்தைத் தூண்டும் வகையில் இருந்தபோதிலும் கூட தற்போதைய இந்திய-சீன எல்லை நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் பிரதான ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆறு வாரங்களுக்கு முன்பு, இமயமலை அடிவாரத்திலுள்ள ஒரு மலைமுகட்டு பகுதியான டோக்லாம் அல்லது டோங்க்லாங் பீடபூமியில், அதாவது, சீனா மற்றும் இந்திய மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ராஜ்யமான பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோருகின்ற பிராந்தியத்தில் சீன கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு சாலையினை விரிவாக்கம் செய்வதை தடுப்பதற்காக இந்திய துருப்புக்கள் குறுக்கீடு செய்தன. அப்போதிருந்து, நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்கள் பதட்டம் நிரம்பிய ஒரு “நேருக்கு நேரான” நிலையில் ஈடுபடுத்தப்பட்டனர், இவர்களை நூறு மீட்டருக்கு சற்று அதிகமான தொலைதூர இடைவெளி தான் பிரித்துவைத்துள்ளது. புது தில்லி மற்றும் பெய்ஜிங் இரண்டுமே தொலைதூர பிராந்தியத்திற்கு ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை விரைந்து அனுப்பியதோடல்லாமல், பல வாரங்களாக இந்திய மற்றும் சீன தலைவர்கள் ஒரு இராணுவ மோதலுக்கான அச்சுறுத்தல்களை பரிமாற்றம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.      
இந்த எல்லை நெருக்கடி, சீன இந்திய உறவுகள் விரைவாக சீர்கெட்டு வரும் நிலையில் ஒரு புதிய கட்டத்தை நன்கு எடுத்துக்காட்டுவதுடன் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு அசலான முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளதன் தவிர்க்க முடியாத விளைவாக இந்த சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆசியா மற்றும்  உலக மக்களுக்கு, இந்திய-அமெரிக்க கூட்டணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்துக்கள் குறித்து இந்திய தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் எச்சரிப்பதற்கு பதிலாக, டோக்லாம் எல்லையிலுள்ள இக்கட்டான நிலையை ஸ்ராலினிஸ்டுகள் சற்று அதிகமான ஒரு இராஜதந்திர கொந்தளிப்பு நிலையாகவே கருதுகின்றனர்.
இன்னும் மோசமாக அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் மீது அழிவுகரமான பிரமைகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர், அவற்றின் சமாதானம் நாடும்  பாத்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர், சூறையாடும் தன்மையிலான அவற்றின் வல்லரசாகும் அபிலாஷைகளுக்கும் ஆதரவளிக்கின்றனர்.
அனைத்திற்கும் மேலாக, மூல வளங்கள், சந்தைகள் மற்றும் மூலோபாய சாதக நலன்களுக்காக, இந்திய குடியரசு உள்ளிட்ட, அனைத்து போட்டி முதலாளித்துவ சக்திகளும் எடுக்கும் முயற்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத  எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பூகோள தொழிலாள வர்க்க தலைமையிலான இயக்கத்தின் வளர்ச்சியை அவர்கள் எதிர்க்கின்றனர்.
சீனாவுடனான எல்லைப்பிரச்சனை பற்றி “ஒருமித்த கருத்து ஒன்றை உருவாக்க,” ஜூலை 14 அன்று, பி.ஜே.பி. அரசாங்கம் அழைப்புவிடுத்த ஒரு “அனைத்து கட்சி” கூட்டத்தில் சிபிஎம் இன் பொது செயலர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டார். வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளரான கோபால் பாக்லேயின் கருத்துப்படி, “அனைத்து பங்கேற்பாளர்களும், இந்தியாவின் அணுகுமுறைக்கும், அத்துடன் தேசிய ஒருமைப்பாட்டின் தேவை குறித்தும் தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்” என்று கூறினார்.  
யெச்சூரியும் சரி அல்லது சிபிஎம் மும் சரி பாக்லேயின் கருத்துக்களோடு முரண்படவும் இல்லை, கேள்விக்கு உட்படுத்தவும் இல்லை. உண்மையில், இந்திய முதலாளித்துவக் கட்சிகளிடையே ஒரு ஒருமித்த கருத்து இருப்பதாக காட்டும் நோக்கத்துடன் அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் யெச்சூரி பங்கேற்றது என்பதே அதுவாக பேசுகிறது. இந்திய முதலாளித்துவத்தின் வெளியுறவுக் கொள்கைத் தந்திரங்களை – அந்த தந்திரங்கள் அவர்களது சூறையாடும், வல்லரசாகும் இலட்சியங்களை அடையும்  நோக்கம் கொண்டவை – அவற்றை அம்பலப்படுத்தி அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு மாறாக, “தேசிய,” மற்றும் வர்க்கங்களுக்கு மேம்பட்ட வண்ணங்களில் அவற்றை மூடி மறைப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகளின் உதவியை அவர்களுக்கு வழங்குவதற்கு யெச்சூரி விரைந்தார்.
அனைத்து கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து, யெச்சூரி தனது முகநூல் பக்கத்தில் “இராஜதந்திர வழிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக (சீனாவுடனான இக்கட்டான நிலையை)” தீர்ப்பதற்கு “அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை சிபிஎம்  முழுமையாக ஆதரிக்கும்” என்று அறிவித்தார். இதனுடன் சேர்த்து அவர் சிபிஎம் இன் தலைவர் மோடி மற்றும் பி.ஜே.பி க்கு விடுத்த அழைப்பில் “இந்த பிராந்தியத்தில் வெளிநாட்டு உறவுகள் திடீரென்று ஏன் மோசமடைந்து வருகின்றன என்பது பற்றி ஆழமாக சிந்தித்து விடையிறுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
யெச்சூரியின் கருத்துக்கள், பி.ஜே.பி. அரசாங்கத்தின் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் சமாதான நோக்கங்கள் மீதான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஒப்பானதாக . இருக்கின்றன. அவர்கள் யாரை கிண்டல் செய்ய முயற்சிக்கிறார்கள்?
மோடியின் சமீபத்திய வெள்ளை மாளிகை விஜயம் தொடர்பான சிபிஎம்  அரசியல் குழுவின் சொந்த அறிக்கையின்படி, பெருநிறுவன செய்தி ஊடகம், பெருவணிகம் மற்றும் நாட்டின் இராணுவ-மூலோபாய நடைமுறை ஆகியவற்றின் உற்சாகமிக்க ஆதரவுடன், பி.ஜே.பி. அரசாங்கம், “இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த இளைய கூட்டாளி நாடாக உறுதிப்படுத்தியுள்ளது.” இவ்வாறு செய்கின்ற சமயத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இழந்த பொருளாதார மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில் மத்திய கிழக்கு முழுவதும் கால் நூற்றாண்டு காலப் போர்களை நடத்தியது, அது அணு ஆயுதம் தாங்கிய சீனா மற்றும் ரஷ்யாவுடன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய மோதல்களை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.  
• வாஷிங்டனின் முக்கிய தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் கூட்டாளியாக அதன் அரவணைப்பினால் தைரியம் பெற்று, பி.ஜே.பி. அரசாங்கம் தன்னை ஒரு பிராந்திய மேலாதிக்கவாதியாக அமைத்துக்கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த செப்டம்பரில், அது பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது, பின்னர் இஸ்லாமாபாத் உடனான நேருக்குநேரான “மூலோபாய கட்டுப்பாட்டு” தளைகளை இந்தியா கைவிட்டு விட்டதாக பெருமையடித்தது. பத்து மாதங்களுக்கு பின்னர், “பாகிஸ்தானிய பயங்கரவாதம்” தான் காஷ்மீர் பகுதியில் இந்திய ஆட்சி மீதான வெகுஜன அதிருப்திக்கு மூலகாரணமாக இருப்பது என்று இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி. பிடிவாதமாக வலியுறுத்துகின்றது, இந்நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவத்தினர் வாள்களை ஏந்திய வண்ணம் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர்.
• மேலும் மோடி அரசாங்கம், அதன் முன்னோடிகளின் முயற்சிகளை தொடர்கையில், ஒவ்வொரு பிரதான சீன மக்கள்தொகை மையத்தினையும் அணுஆயுதங்களைக் கொண்டு தாக்கும் திறன் வாய்ந்த அக்னி V ஏவுகணை உட்பட, ஒரு மும்முனை அணுசக்தி வளர்ச்சியை விடாப்பிடியாக பின்தொடர்ந்து வருகின்றது.
மோடி மற்றும் அவரது பி.ஜே.பி. யை பொறுத்தவரை “கடந்த காலத்தை சுய ஆய்வு செய்வது” மற்றும் ஒரு மிகுந்த “அண்டை நாட்டு” கொள்கையை பின்பற்றுவது என்பது அப்பட்டமாக அபத்தமானது. அது (ஸ்ராலினிஸ்டுகள் அடிக்கடி செய்வதைப் போன்று) “மக்கள் சார்பு” கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அல்லது வகுப்புவாதத்தைப் கைவிட வேண்டும் என்று அவர்களிடம் விண்ணப்பம் செய்வதற்கு ஒப்பானது.
முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட  பூகோள மூலோபாய இந்திய-அமெரிக்க பங்காண்மை மீது கட்டியெழுப்பி  பி.ஜே.பி. அதன் பூகோள மூலோபாயத்தின் அடித்தளமாக  இந்திய-அமெரிக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. இன்னும் அடிப்படையாக, இந்திய முதலாளித்துவம், உலகம் சுற்றிலும் உள்ள அதன் போட்டியாளர்களைப் போல, பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் பிற்போக்குத்தனத்தை தழுவியதன் மூலம் விடையிறுத்தது. அது, சந்தை சார்பு “சீர்திருத்தத்தை” தீவிரப்படுத்தவும், உலக அரங்கில் தனது நலன்களை இன்னும் ஆக்கிரோஷமாக நிலைநாட்டவும் ஏதுவாக மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பி.ஜே.பி. ஐ  ஆட்சிக்கு கொண்டு வந்தது.
இந்தியாவின் பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கத்திற்கு அத்தகைய முட்டாள்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான வேண்டுகோள்களை யெச்சூரி வைக்கிறார் என்பது நிச்சயமாக தற்செயலானது இல்லை. பல தசாப்தங்களுக்கு முன்னரே, சிபிஎம் மும் அதன் சகோதரக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI), முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவது, மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு ஆலோசனை வழங்கி அவர்களை உஷார் படுத்துவது போன்றவையே அவர்களது செயல்பாடுகளாக உள்ளது.   
CPM இன் People’s Democracy வலைத் தளத்தின் சமீபத்திய இடுகையில் இது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 அன்று, “இந்தியா-சீனா: பேச்சுவார்த்தைகளை தவிர  வேறு வழி இல்லை” என்ற தலைப்பில் People’s Democracy ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அதற்குள்ளாக, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக, தென் சீன கடலில் சீனாவின் செயல்நோக்கம் கொண்ட “ஆக்கிரோஷமான” நடவடிக்கைகளுடன்  டோக்லாம் சர்ச்சையை சமமானதாக்கி, பூட்டானின் இறையாண்மை உரிமையை மீறுபவராக சீனாவை வடிவமைக்கும் அரசாங்க மற்றும் செய்தி ஊடக அறிக்கைகளினால் இந்திய மக்கள் மூழ்கடிக்கப்பட்டனர், தேவைப்பட்டால், 1962 சீன-இந்திய எல்லைப் போரில் அதன் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்தியாவின் திறனை அவை பாராட்டின.
எவ்வாறாயினும், People’s Democracy அல்லது CPM கட்சியின் வலைத் தளத்தில் இந்த  இக்கட்டான எல்லைப்பகுதி பிரச்சனை பற்றி முதல் தடவையாக இந்த தலையங்கத்தில் தான் பிரசுரமானது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் “வேறுபாடு” குறித்து “பிரதான காரணியாக பங்களிப்பு செய்வது,” “அமெரிக்காவுடனான இந்திய மூலோபாய கூட்டணி தான்” என்று இந்த தலையங்கம் குறிப்பிடுகின்றது. மேலும் இந்தியா, “ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவை அடக்கும் நோக்கத்துடன் தனது மூலோபாய திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்காவுடன்’   இணைந்துள்ளது ” எனத் தொடர்கின்றது.
ஆனால் அதனை, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள இயக்கத்தைக் கட்டமைப்பதில், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைவதற்கு இந்திய தொழிலாள வர்க்கத்தை அழைக்கும்  நிலைப்பாட்டில் இருந்து செய்யவில்லை.
இல்லை, அதன் விவாதம் –மற்ற இடங்களில் அதனை மிக விரிவாக வெளிப்படுத்தியுள்ளது– இந்திய முதலாளித்துவத்தின் “தேசிய நலன்களுக்கு” இந்திய-அமெரிக்க கூட்டணி சேவை செய்யவில்லை என்பதை மோடி அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட ஒரு வேண்டுகோளாகவே உள்ளது. இந்தியா அதன் “மூலோபாய சுயாட்சியை” அதாவது, அமெரிக்கா, ஏனைய மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் வளைந்து நெளிந்து செல்வதற்கான வாய்ப்பை – பேணுமாயின் அது  இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சிபிஎம் வாதிடுகிறது.
“இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு காரணியின் முக்கியத்துவம் இந்தியாவை மேலும் மேலும் அமெரிக்காவை சார்ந்திருக்க செய்கின்றது, மேலும் அவர்களது பாதுகாப்புக் குடையின் கீழ் இதைக் கொண்டு வருகிறது” என்று ஜூலை 16 People’s Democracyபதிப்பில் ஒரு நீண்ட கட்டுரை குறை கூறியது. வாஷிங்கடனுக்கு கீழ்படிவதன் காரணமாக, இந்திய முதலாளித்துவம், தனது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, போர் தொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் தனது இராணுவத்தை பயன்படுத்தும் திறனை இழந்து வருவதாக இந்த கட்டுரை புலம்பத் தொடங்குகின்றது: “நாம்……. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக நமது இராணுவத்தை அடகு வைக்கின்ற நிலையில்……….. அதன் போர் மற்றும் சமாதானத்தைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு மிகச் சிறிய தன்னாட்சி உரிமையை தான் வழங்குகிறோம்.”
எப்போதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றாரவார வேடம் ஏற்கின்றபோதும், இந்திய-அமெரிக்க கூட்டணி குறித்த ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்பானது  ஏகாதிபத்திய போருக்கு எதிரான உண்மையான எதிர்ப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாதது, அது அனைத்து போட்டி முதலாளித்துவ வர்க்கங்களுக்கும், வலுவற்ற முதலாளித்துவ ஒழுங்கிற்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதை  அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
CPM, இந்திய இராணுவத்தின் விரைவான விரிவாக்கம் உட்பட, இந்திய ஆளும் வர்க்கத்தின் மாபெரும் இலட்சியங்களை வெட்கமின்றி ஆதரிக்கின்றது. இந்தியாவின் இராணுவ வரவு செலவுத் திட்டம் 2001 ல் 11.8 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்தது ஐந்து மடங்கு உயர்ந்து, இன்று கிட்டத்தட்ட 56 பில்லியன் டாலர் மதிப்பாக உயர்ந்துள்ளது பற்றி அது எந்தவொரு விமர்சனமும் செய்யவில்லை.
டோக்லாம் எல்லைப் பிரச்சனை தொடர்பாக, அதனை போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே சாதகமான மூலோபாய நலன்களுக்கான ஒரு பிற்போக்குத்தனமான போராட்டம் என்று கண்டனம் செய்யவில்லை. அதற்கு மாறாக, இராஜதந்திர பேரம்பேசல்கள் மூலமாகவும், மேலும், “சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பூட்டான் முன் முயற்சி எடுக்க” அனுமதியளிப்பதன் மூலமாகவும் “இந்தியாவின் நலன்களை” முன்னெடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி. அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகின்றது.
பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக, சீனாவுடனான தற்போதைய எல்லைப் பிரச்சனையில் “கட்டுப்பாட்டுடன்” இருக்க சிபிஎம் ஆலோசனை கூறுவதைப் போலவே கூறுகிறது. ஆனால் அது கடந்த செப்டம்பரில், மோடி உத்தரவின்படி பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத மற்றும் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இந்திய இராணுவம் நடத்திய சிறப்புப் படைகளின் தாக்குதல்களை பாராட்டுவதில், சிபிஎம் ஏனைய இந்திய ஸ்தாபகத்துடன் இணைந்துகொள்வதை தடுக்கவில்லை. கேரள முதலமைச்சர் மற்றும் சிபிஎம் அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் முன்முயற்சியில் இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஒன்றை மாநில சட்டமன்றம் இயற்றியது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய-அமெரிக்க கூட்டணியை எதிர்ப்பதாக கூறுவது, இந்திய ஸ்ராலினிஸ்டுகளை பி.ஜே.பி. ஐ எதிர்க்கும் பேரில் காங்கிரஸ் கட்சி மற்றும் பெரும்திரளான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை தடுக்கவில்லை, அவை அனைத்தும் அமெரிக்காவின் மூலோபாய செயற்பட்டியலில் இந்தியாவின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கின்றன.
தெற்காசியாவும், இந்திய பெருங்கடல் பகுதியும், பெரும் வல்லரசு மோதல் சூழலுக்குள் வருகின்றன என்பதற்கான சமீபத்திய எச்சரிக்கையாக மட்டுமே, இந்த சீன-இந்திய எல்லைப்பிரச்சனை உள்ளது. தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக மூச்சுத்திணறடிக்க போலியான சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சை பயன்படுத்தும் இந்திய முதலாளித்துவத்தின் ஒரு அரசியல் முகவராக சிபிஎம் ஐ அம்பலப்படுத்துவது போருக்கு எதிராக தெற்காசிய மக்களை அணிதிரட்டுவதற்கு  அவசியமானது.
By Wasantha Rupasinghe and Keith Jones
29 July 2017
http://www.wsws.org/tamil/articles/2017/8-August/inst-a08.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts