Search This Blog

Monday, 31 July 2017

உலக சோசலிச வலைத் தள அணுகுதலைத் தடுக்க, கூகுள் அதன் தேடுபொறி முடிவுகளில் மோசடி செய்கிறது

Google rigs searches to block access to World Socialist Web Site

இணைய பெருநிறுவனமான கூகுள், உலக சோசலிச வலைத் தள (WSWS) அணுகுதலை தடுப்பதற்காக, அதன் தேடல் விடைகளில் மோசடி செய்துள்ளதை இத்தளத்தை அணுகிய தரவுகள் மீதான ஓர் ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
“போலி செய்திகளுக்கு" எதிரான போராட்டம் என்ற போர்வையில், ஏப்ரல் மாதம், கூகுள் புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியது, இவை வலைப் பக்கங்கள் மற்றும் வலைத் தளங்களை தரவரிசையில் பின்னுக்கு தள்ளுவதற்காக பெயர் வெளியிடாத "மதிப்பீட்டாளர்களுக்கு" அசாதாரண அதிகாரத்தை வழங்குகிறது. இந்த நெறிமுறைகள், WSWS மற்றும் ஏனைய போர்-எதிர்ப்பு வலைத் தளங்களையும் மற்றும் பிற எதிர்ப்பு தளங்களையும் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
கடந்த மூன்று மாதங்களாக, கூகுள் வழியாக WSWS க்கு வரும் பயனர் எண்ணிக்கை ஏறக்குறைய 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், போர் அச்சுறுத்தல், சமூக நிலைமைகள், சமத்துவமின்மை ஆகியவை உள்ளடங்கலாக மற்றும் சோசலிசம் குறித்தும் கூட WSWS வழமையாக எழுதும் பரந்துபட்ட தலைப்புகள் சம்பந்தமான முக்கிய தேடல்களில், உலக சோசலிச வலைத் தளத்திற்கு  இட்டுச் செல்லும் வலைப் பக்க லிங்க்குகளின் (impressions) எண்ணிக்கை செங்குத்தாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு "வலைப் பக்க லிங்க்" (impression) என்பது தேடல் முடிவுகளில் கூகுள் காட்டும் ஒரு லிங்க்கை குறிக்கும் ஒரு தொழில்நுட்ப சொல்லாகும். “சோசலிசம்" என்ற ஒரு வார்த்தை தேடல், பயனரை WSWS இன் வலைத் தளத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு லிங்க்கைக் காட்டினால், அது ஒரு impression என்று கணக்காகும்.
"தேடல் தரவரிசையில்" WSWS பக்கங்களுக்கு ஒதுக்கப்படும் இடத்தில் மோசடி செய்வதன் மூலம், தேடல் முடிவுகளில் (results) கூகுளால் WSWS இன் தகவல்களை பின்னுக்குத் தள்ள முடியும். இது WSWS வலைப் பக்க லிங்க்குகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பதால், இதன் காரணமாக, இது, அத்தளத்தை பார்வையிடுபவர்கள் அல்லது "சொடுக்குபவர்களின்" எண்ணிக்கையை மிகவும் குறைக்கிறது.
கூகுளின் வெப்மாஸ்டர் கருவிகள் சேவையின் தகவல்படி, தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தள  லிங்க்குகளின் நாளாந்த எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் 467,890 இல் இருந்து 138,275 ஆக குறைந்துள்ளது.
கூகுள் அதன் புதிய வலைத் தள தவிர்ப்பு கொள்கைகளை (website exclusion policies) நடைமுறைப்படுத்திய காலகட்டமான, மே மற்றும் ஜூலைக்கு இடையே குறிப்பிட்ட சொற்களின் தேடல் முடிவுகள் சார்ந்த தரவுகளை WSWS ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
கூகுள் தேடுபொறியில் “போர்" என்பதை உள்ளடக்கிய வார்த்தை தேடல், மே மாதத்தின் போது, WSWS இன் 61,795 வலைப்பக்க லிங்க்குகளைக் (impressions) கொண்டு வந்தன. இதுவே ஜூலையில் WSWS இன் பக்கங்கள் 6,613 ஆக, ஏறத்தாழ 90 சதவீதம், குறைந்தது.
“கொரிய போர்" என்ற வார்த்தையின் தேடல்கள் மே மாதம் 20,392 WSWS பக்கங்களை கொண்டு வந்தன. ஜூலையில் இதே வார்த்தைகளை கொண்ட தேடல்கள் பூஜ்ஜிய WSWS பக்கங்களை கொண்டு வந்தது. “வட கொரிய போர்" என்பதன் தேடல்கள் மே மாதம் 4,626 பக்கங்களை கொண்டு வந்தது. ஜூலையில் அதுவே பூஜ்ஜிய WSWS பக்கமாக உள்ளது. “இந்தியா பாகிஸ்தான் போர்" என்ற வார்த்தை மே மாதம் 4,394 WSWS பக்கங்களை கொண்டு வந்தது. ஜூலையில், இதன் விடைகள், மீண்டும், பூஜ்ஜியமாக இருந்தது. “அணுஆயுத போர் 2017” என்பது மே மாதம் 2,319 பக்கங்களைக் கொண்டு வந்தது, ஜூலையில் இது பூஜ்ஜியமாக உள்ளது. 
ஏனைய சில தேடல்களை மேற்கோளிடுவதானால்: “விக்கிலீக்ஸ்" (WikiLeaks) என்பது 6,576 பக்கங்களில் இருந்து பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியடைந்தது, “ஜூலியன் அசான்ஜ்" (Julian Assange) என்பது 3,701 பக்கங்களில் இருந்து பூஜ்ஜியத்திற்கு சரிந்தது, மற்றும் "Laura Poitras” என்ற வார்த்தை தேடல் 4,499 இல் இருந்து பூஜ்ஜியமாக குறைந்தது. சந்தேகத்திற்கிடமான முறையில் 2013 இல் உயிரிழந்த செய்தியாளர், "மைக்கல் ஹாஸ்டிங்ஸ்" (Michael Hastings) என்ற வார்த்தை தேடல் மே மாதம் 33,464 பக்கங்களை உருவாக்கியது, ஆனால் ஜூலையில் அது வெறும் 5,227 பக்கங்களை மட்டுமே கொண்டு வந்தது.
புவிசார் அரசியலுடன் இணைந்தவகையில்,  உலக  சோசலிச  வலைத் தளம் பரந்துபட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் எழுதுகிறது, அவற்றில் பலவும் தேடல் முடிவுகளில் கடும் சரிவைக் கண்டுள்ளன. மே மாதம் 5,000 க்கு அதிகமான பக்கங்களைக் கொண்டு வந்த “உணவுப்பொருள் முத்திரைகள்” (food stamps), “ஃபோர்ட் வேலைநீக்கங்கள்” (Ford layoffs), “அமேசன் பண்டகசாலை” (Amazon warehouse) மற்றும் "கல்வித்துறை செயலாளர்” (secretary of education) ஆகிய வார்த்தை தேடல்களும் ஜூலையில் பூஜ்ஜிய பக்கங்களையே கொண்டு வந்தன.
“வேலைநிறுத்தம்" (strike) என்ற வார்த்தையை உள்ளடக்கிய தேடல்களில் கிடைக்கும் WSWS கட்டுரை பக்கங்களின் எண்ணிக்கை, மே மற்றும் ஜூலைக்கு இடையே, 19,395 இல் இருந்து 2,964 ஆக சரிந்தது.
கூகுள் தேடுபொறியில் இந்த வார்த்தைகளை தேடும் பலர், ஸ்தாபக அரசியல் மீது விமர்சனபூர்வமாக இருப்பவர்கள் என்பதாலும், சோசலிசவாதிகள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்பதற்கு ஆர்வம் இருப்பதாலுமே அவ்வார்த்தைகளை தேடுகிறார்கள். இருப்பினும் கூகுள் நடவடிக்கைகளின் விளைவாக, அவர்களால்  உலக  சோசலிச  வலைத்  தளத்தில் வெளியான ஆவணங்களைப் பெற முடியாமல் போகும்.
ஆனால் சோசலிச அரசியலை நேரடியாக எதிர்நோக்குபவர்களின் நிலை என்ன? மே மாதம், “சோசலிசம்" (socialism) என்ற வார்த்தை தேடல் 31,696 பக்கங்களைக் கொண்டு வந்ததுடன், அந்த அந்த முடிவுகளின் வரிசையில் WSWS 5 வது மற்றும் 6 வது இடத்தில் இருந்தது. ஜூனில், அந்த வார்த்தையானது முதல் 100 தேடல் முடிவுகளில் இருந்தே நீக்கப்பட்டிருந்தது. இவ்விதத்தில் "சோசலிசம்" என்ற வார்த்தை தேடல்கள், மிகப் பரந்தளவில் வாசிக்கப்படும் இணைய வழி சோசலிச பத்திரிகையான  உலகசோசலிச  வலைத்  தளத்தின் ஒரு பக்கத்தையும் கொண்டு வரவில்லை.
சோசலிசவாதிகளாக ஏற்கனவே பொறுப்பேற்றுள்ளவர்கள், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர்களின் நிலை என்ன? இங்கேயும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பிரசுரிக்கப்படும் WSWS, முடக்கப்பட்டுள்ளது. “லியோன் ட்ரொட்ஸ்கி" (Leon Trotsky) என்ற ஒரு வார்த்தை தேடல் மே மாதம் 5,893 பக்கங்களைக் கொண்டு வந்தது, ஜூலையில் அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகசரிந்தது.
நமது புள்ளிவிபரங்களுடன், பிரபல உளவியல்வாதியும் கூகுள் விமர்சகருமான ரோபர்ட் எப்ஸ்ரைனை WSWS தொடர்பு கொண்ட போது, “கூகுள் உங்களை தரவரிசையில் பின்னுக்குத் தள்ளியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்று தீர்மானமாக தெரிவித்தார். “கூகுள் தேடல் முடிவுகள் மூலமாக மக்களுக்கு மோசடி செய்கிறது" என்பதற்கு “உறுதியான ஆதாரம் இருப்பதாக" அவரும் மற்றும் அவர் சக பணியாளர்களும் நடத்திய ஆய்வு எடுத்துக்காட்டுவதாக எப்ஸ்ரைன் தெரிவித்தார்.
பொறியியல் துறைக்கான கூகுளின் துணை தலைவர் பென் கோமெஸ் (Ben Gomes) இன் ஏப்ரல் 25, 2017 வலைப் பதிவு பக்கமும் மற்றும் அதேநேரத்தில் பிரசுரிக்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட “தேடல் தரவரிசைக்கான வழிகாட்டு நெறிகள்” என்பதும், இந்நடவடிக்கைகளை வழிநடத்தும் கொள்கையை முழுமையாக தெளிவுபடுத்துகின்றன. “எதிர்பார்த்திராத அத்துமீறிய தேடல் முடிவுகள், கட்டுக்கதைகள் மற்றும் சூழ்ச்சி தத்துவங்களை" (இது எந்தவொரு எதிர்ப்பு கருத்தையும் தவிர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் பரந்த தெளிவற்ற மொழியாகும்) தரவரிசையில் கீழிறக்குவது மற்றும் தவிர்ப்பதற்கான அவசியத்தைக் குறித்து அந்த வலைப்பதிவு பக்கம் குறிப்பிடுகிறது.
இந்த மதிப்பீட்டாளரின் வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் அதிக விளக்கமாக உள்ளன. “ஒரு தனிநபர், வணிகம், அரசாங்கம், அல்லது அரசியல் ரீதியிலும், நிதி சார்ந்தும் அல்லது வேறுவிதத்தில் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்பிற்கும் ஆதாயமாக பயனர்களை ஏமாற்றுவதற்காக உண்மையில் துல்லியமற்ற தகவல்களைக்" கொண்டு, தரவரிசையில் "மிகக் கீழே" இருக்கும் தளங்களை நீக்குவதற்கு, பெயர் வெளியிடாத "மதிப்பீட்டாளர்களுக்கு" அறிவுறுத்தப்பட்டுள்ளது. “உண்மையான தகவல் போல, ஆதாரமற்ற சூழ்ச்சி தத்துவங்கள் அல்லது கட்டுக்கதைகளை முன்வைக்கும்" ஒரு வலைத் தளம், தரவரிசையில் "மிகக் கீழான" இடத்திற்கு தள்ளப்படுகிறது.
இதைவிட வெளிப்படையாக பேச்சு சுதந்திரத்தை ஒடுக்கும் ஒரு கொள்கையை நெறிப்படுத்துவது சாத்தியமில்லை. அரசாங்கத்திற்கு விமர்சனபூர்வமாக இருக்கும் மற்றும் அதன் பொய்களை அம்பலப்படுத்தும் பல முக்கிய வலைத் தளங்களை முடக்குவதற்கும் அல்லது பட்டியலில் பின்னுக்குத் தள்ளுவதற்கும் கூகுளை அனுமதிக்கும் விதத்தில் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் எழுதப்பட்டுள்ளன.
எது “உண்மையில் துல்லியமற்ற தகவல்" என்று சரியாக யார் தீர்மானிக்க வேண்டும் அல்லது "ஆதாரமற்ற சூழ்ச்சி தத்துவத்தை" உள்ளடக்கி இருப்பது எது? இது நடைமுறையளவில், கூகுள் மற்றும் அரசில் உள்ள அதன் கூட்டாளிகள், குறிப்பாக ஜனநாயகக் கட்சி, ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களைத் தவிர, ஏனைய சகல கருத்து வெளிப்பாடுகளையும் தடுக்கிறது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளில் சிக்காத, வாசிப்பிற்கு உகந்த ஒரு பிரசுரமோ அல்லது ஆய்விதழோ இருக்க முடியாது.
தேடல் முடிவுகளில் மோசடி செய்து அரசியல் வேட்பாளர்களை, குறிப்பாக ஹிலாரி கிளிண்டனை ஆதரிப்பதில் கூகுள் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளது என்று பல ஆதாரங்கள் ஆவணப்படுத்தி உள்ளன என்ற உண்மையும் இந்த புதிய வழிமுறைகளின் விமர்சனங்களுடன் சேர்ந்துள்ளன.  வேகமாக  நகர்ந்து, விடயங்களை உடையுங்கள்:  பேஸ்புக்,  கூகுள்  மற்றும்  அமேசன் ஆகியவை எவ்வாறு கலாச்சாரத்தை  ஓரங்கட்டி,  ஜனநாயகத்தைப்  பலவீனப்படுத்தின  என்று தலைப்பிட்டு சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட ஜொனாதன் டாப்லினின் (Jonathan Taplin) சமீபத்திய நூலில், அவர், கிளிண்டன் பிரச்சாரத்திற்கு நேரடியாக உதவுவதற்காக The Groundwork என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதில், கூகுளின் தாய் நிறுவனம் Alphabet இன் தலைமை செயலதிகாரி Eric Schmidt இன் பாத்திரத்தை ஆவணப்படுத்தி உள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, கூகுளின் போட்டியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்த அதன் சொந்த பொருள் விற்பனைக்கான ஒப்பீட்டு சேவையை ஊக்குவிப்பதற்காக அதன் தேடல் முடிவுகளில் அது பரந்தவிதத்தில், திட்டமிட்டு மற்றும் குற்றகரமாக மோசடி செய்திருப்பதை இந்தாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய ஆணைக்குழு அம்பலப்படுத்தியது.
“போலி செய்திகளை” எதிர்க்கிறோம் என்ற பெயரில், கூகுள் போலி தேடல் முடிவுகளை வழங்கி கொண்டிருக்கிறது. அது ஒரு தேடுபொறி என்பதில் இருந்து தணிக்கைக்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள் மீது கூகுளின் அரசியலமைப்பிற்குப் புறம்பான தாக்குதலை உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து அம்பலப்படுத்தும். கூகுள் அதன் நெறிமுறைகளைக் குறித்த முழு விபரங்களை வழங்க வேண்டும் மற்றும் வலைத் தளங்களை "மதிப்பிடுவதற்கு" அதற்கு யார் அதிகாரமளித்தது என்பதை அது கூற வேண்டுமென்றும் நாங்கள் கோருகிறோம். கூகுளின் தேடல்முறை அல்காரிதங்கள் (algorithms) அனைத்தும் பொது களத்தில் வைக்கப்பட வேண்டும். 
முடிவாக கூகுளின் நடவடிக்கையானது, தனியார் கட்டுப்பாட்டில் இருந்து தகவல் பரவுவதல் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதை மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது. சக்தி வாய்ந்த தேடுபொறிகள் கோடீஸ்வர செல்வந்த தன்னலக்குழுக்களின் கட்டுப்பாட்டில் ஏகபோகமாக நடத்தப்படக்கூடாது. அவை உலக உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும்.
கூகுளின் நடவடிக்கையானது வழமையாக WSWS ஐ அணுகுவதிலிருந்து பத்தாயிரக் கணக்கானவர்களை தடுத்துள்ளது என்பதில் எந்த கேள்வியும் இல்லை. இதுதான் அதன் நோக்கமும் கூட. ஆனால், WSWS வாசகர்களில் மிகவும் கணிசமானவர்கள் தளத்தை நேரடியாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது கூகுள் அளவிற்கு இது வரையில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாத ஏனைய தேடுபொறிகள் மூலமாகவோ அணுகுகிறார்கள்.
விசுவாசமான மற்றும் மிகப்பெரியளவில் வாசகர் அடித்தளத்தைக் கொண்டுள்ள WSWSஐ மாதத்திற்கு நூறாயிரக் கணக்கானவர்கள் பார்வையிடுகின்றனர். நாம் கூகுளின் அரசியல் தணிக்கையை எதிர்ப்போம், இதில் உங்களின் ஆதரவு எமக்கு வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளத்திற்காக போராடுவதில் செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு நாம் நமது வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். WSWS கட்டுரைகளை வினியோகிக்க உதவுங்கள். நமது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சக-தொழிலாளர்களுக்கும் நமது கட்டுரைகளை மின்னஞ்சல் செய்யுங்கள். கூகுளின் நடவடிக்கைகளை எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு பரந்தளவில் கொண்டு செல்லுங்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நாளாந்த கட்டுரைகளைப் பெற நீங்கள், உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள். இதில் கூகுள் நடவடிக்கைகளை எதிர்த்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள். இறுதியாக, நாம் அரசாங்கத்துடனும் பரந்த ஆதாரவளங்களுடன் மிக நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள மிக சக்தி வாய்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். தணிக்கைக்கு எதிராகவும் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நமது எதிர்தாக்குதலை தொடர்ந்து விரிவாக்க நமக்கு நிதி உதவிகளும் அவசியப்படுகின்றன.
WSWS Editorial Board
28 July 2017
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/goog-j31.shtml

Thursday, 20 July 2017

அமெரிக்கர்களில் 76 சதவீதத்தினர் ஒரு பெரும் போர் அச்சத்தில் இருப்பதை கருத்துக்கணிப்பு காட்டுகின்றது

Amid escalating militarism

Poll shows 76 percent of Americans fear a major war

தீவிரப்பட்டு வரும் இராணுவவாதத்தின் மத்தியில் அமெரிக்கர்களில் 76 சதவீதத்தினர் ஒரு பெரும் போர் அச்சத்தில் இருப்பதை கருத்துக்கணிப்பு காட்டுகின்றது

Image source from Internet
அதன் இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் உள்ளடங்கலாக அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தை, பெரும்திரளான அமெரிக்க உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் பரந்த இடைவெளியானது, குறிப்பாக போர் அச்சுறுத்தல் மீது கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டு வருகிறது.
அமெரிக்க மக்களில் முழுவதுமாக 76 சதவீதத்தினர், அடுத்த நான்காண்டுகளுக்குள் அந்நாடு ஒரு மிகப்பெரும் போருக்குள் இழுக்கப்படுமென அஞ்சுவதாக செவ்வாயன்று வெளியான NBC கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்திருந்தது. அதிகரித்து வரும் போர் அபாயம் குறித்து கவலைக் கொண்டுள்ள அமெரிக்கர்களின் பங்கு இந்த பெப்ரவரிக்கு பின்னர் இருந்து 10 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதாக அத்தகவல் சுட்டிக்காட்டியது.
இந்த அச்சங்களுக்கு ஆழ்ந்த காரணங்கள் உள்ளன. அமெரிக்க தேர்தல்களில் மாஸ்கோ குறுக்கிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களோடு, ட்ரம்ப் முகாமின் கூட்டமென கருதப்படுவதை மையப்படுத்தி, பெப்ரவரிக்குப் பின்னர் இருந்து அமெரிக்க மக்கள் சளைக்காத ரஷ்ய-விரோத விஷமப்பிரச்சாரம் ஒன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணு சக்தியான ரஷ்யாவுடன் அமெரிக்க இராணுவ மோதலைத் தொடரவும் மற்றும் தீவிரப்படுத்தவும் தீர்மானகரமாக இருப்பதே, இந்த அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்திற்கு உந்துசக்தியாக உள்ளது. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அதன் முயற்சிக்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதாக பென்டகன் மற்றும் சிஐஏ காண்கின்றன.
இதேபோல பென்டகன் சீனாவிற்கு எதிராகவும் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனா உரிமைகோரும் எல்லையில் அமெரிக்க போர்க்கப்பல்களின் அத்துமீறல்கள், இந்திய-சீன எல்லை பிரச்சினையை ஊக்குவிப்பது, ஜப்பான் மற்றும் தாய்வான் இரண்டின் இராணுவ ஆயத்தப்படுத்தலை ஆதரிப்பது ஆகியவை இதில் உள்ளடங்கும்.
இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் இராணுவ நடவடிக்கையைக் கொண்டு வட கொரியாவையும் அச்சுறுத்துகிறது, மிக சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் தொலைதூர ஏவுகணை என்று கூறப்படுவதை அது சோதனை செய்ததற்கு விடையிறுப்பாகவும் இது நடந்தது.
ஒரு மிகப்பெரும் போர் வெடிக்குமென அஞ்சுபவர்களின் எண்ணிக்கை பெப்ரவரிக்குப் பின்னர் இருந்து கூர்மையாக அதிகரித்திருப்பதானது, ஐயத்திற்கிடமின்றி, இன்னும் பல சம்பவங்களாலும் தூண்டிவிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் சிரியா மீது அமெரிக்க கப்பற்படையின் ஏவுகணை தாக்குதலும், அதன் பின்னர் ஒரு சிரிய போர்விமானத்தை அமெரிக்க போர்விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தியமையும் மற்றும் 1945 இல் ஹிரோஷிமா-நாகசாகி மீதான குண்டுவீச்சுக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆயுதமான MOAB என்றழைக்கப்படும் ஒரு குண்டை ஆப்கானிஸ்தானில் வீசியமையும் இவற்றில் உள்ளடங்கும்.
கோழைத்தனமான பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், இப்புவியில் அமெரிக்காதான் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க தலைமையிலான மொசூல் முற்றுகையில், கடந்த வாரத்திற்குள், குறைந்தபட்சம் 7,000 பேர் இடிபாடுகளில் புதையுண்டு உயிரிழந்ததுடன் சேர்ந்து, கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில், 2017 இன் முதல் பாதியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை வெறும் ஆறு மாதங்களில், 1,662 பேரின் படுகொலைகளுடன் சேர்ந்து, 16 ஆண்டுகால அமெரிக்க போரிலேயே ஒரு சாதனை உயரத்தை எட்டியுள்ளது. அமெரிக்க விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கை, ஒபாமா "கொதித்தெழுந்து" அந்நாட்டிற்குள் 100,000 க்கும் அதிகமான துருப்புகளை அனுப்பியபோது இருந்த மட்டத்தை மீண்டும் எட்டிய நிலையில், கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கொல்லப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதமும், கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் சவூதி தலைமையில் யேமனுக்கு எதிராக அண்மித்து இனப்படுகொலை மாதிரியான ஆக்ரோஷ போருக்கான அதன் ஆதரவையும் வாஷிங்டன் அதிகரித்துள்ளது. அங்கே யேமனில் பாரிய குண்டுவீச்சுக்கள் 12,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்று, அடிப்படை உள்கட்டமைப்பைச் சிதைத்து, பஞ்சம் மற்றும் பாரியளவில் காலரா தொற்றுநோய்க்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.
புதிதாக வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு, அமெரிக்காவிற்குள் கட்டவிழ்ந்து வரும் இரண்டு எதிரெதிர் நிகழ்வுபோக்குகளை அம்பலப்படுத்துகிறது. ஒருபுறம், பாரிய பெரும்பான்மை அமெரிக்க மக்களிடையே அதிகரித்தளவில் போர் குறித்த பீதி அதிகரித்து வருவதுடன், அவர்கள் அதை எதிர்க்கின்றனர். மறுபுறம், அமெரிக்க அரசாங்கமும் அதை பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் செல்வந்த தன்னலக் குழுக்களும் ஒரு மிகப்பெரும் இராணுவ மோதலைத் தூண்டுவதற்கு முன்பினும் அதிகமாக உறுதி பூண்டுள்ளன.
நடத்தப்பட்டு வரும் அமெரிக்க போர்களுக்கும் மற்றும் புதிய போர்களுக்கான தயாரிப்புக்கும் நிதி ஒதுக்க, NBC கருத்துக்கணிப்பு வெளியாவதற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்னதாக, இருகட்சிகளது அதிகரித்த பெரும்பான்மையோடு அண்மித்து 700 பில்லியன் டாலர் பென்டகன் வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது, இது ட்ரம்ப் வெள்ளை மாளிகை கோரிய தொகையை விட அதிகமாகும்.
“உலக தலைமைக்குப் பிந்தைய உலகின் இடர் மதிப்பீடு" மீது அமெரிக்க இராணுவ போர் கல்லூரியின் மூலோபாய ஆய்வு பயிலகம் தயாரித்து வெளியிட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, தீவிரப்படுத்தப்பட்டு வரும் போர் ஆயத்தப்படல்கள் குறித்து சிந்திப்பவர்களின் கருத்துக்களை வெளிச்சமிடுகிறது. அது "அமெரிக்கா" மற்றும் அதன் இராணுவம் "எதிர்க்கொண்டு வரும்" இரண்டு "பாதகமான யதார்த்தங்களை" மேற்கோளிடுகிறது: “முதலாவதாக, அதிகரித்து வரும் பாதிப்பேற்படுத்தும் மற்றும் அழிவுகரமான நிலைமைகள், சில விடயங்களில், அமெரிக்க இராணுவத்திற்கு அனுகூலமாக கருதப்படுவதன் இழப்பு, இதனால் அதன் பல கடுமையான விளைவாக பாதுகாப்பு சம்பந்தமான சவால்கள். இரண்டாவது, சவாலுக்கிடமற்ற அமெரிக்க தலைமைக்கு அதிகரித்த எதிர்ப்பாக தெரியும் விதத்தில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் கொந்தளிப்பான மற்றும் நிச்சயமற்ற மாற்றங்கள் குறித்த கவலைகள்.”
"மூலோபாய பிராந்தியங்கள், சந்தைகள் மற்றும் ஆதாரவளங்கள்" மீதான அமெரிக்க அணுகுதலைப் பாதுகாத்து கொள்வதையும், மற்றும் "அமெரிக்க இராணுவ அனுகூலங்கள் மற்றும் வாய்ப்புகளை" விரிவாக்குவதையும், “அமெரிக்க தலைமைக்குப் பிந்தைய” காலகட்டத்தில் வாஷிங்டனின் மூலோபாய நோக்கங்களில் உள்ளடக்குமாறு அமெரிக்க இராணுவ ஆய்வு வரையறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தில் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியை இராணுவ பலத்தின் வழிவகைகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இந்த மூலோபாயம் அமெரிக்க இராணுவ தகைமையை, "ஒன்று தோல்வி அடையக்கூடிய அல்லது கணிசமான இழப்புகளோ அல்லது விலை கொடுக்கும் விளைவுகளுடனோ" பிணைந்த தொடர்ச்சியான 'ஆற்றல் சோதனைகளுக்கு" போதுமான அளவுக்கு உட்படுத்தும் என்று அது குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தயாரிக்கப்படும் போர்கள், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து பார்த்திராத அளவிற்கு அமெரிக்க இறப்புக்களை ஏற்படுத்தும்.
அந்த ஆவணம், போருக்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை எதிர்கொள்வதற்கான தேவையையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது. அது குறிப்பிடுகிறது, “அதேவேளையில், அமெரிக்க தேசமும், தனிப்பட்ட அமெரிக்க பிரஜைகளும், அமெரிக்க பொது கருத்தும் மற்றும் கருதுகோள்களும் அதிகரித்தளவில் போர்க்களமாக மாறும்.”
இதுவரையில், இந்த சண்டை பெரிதும் ஒருதரப்பிலேயே இருந்துள்ளது. போர் உந்துதல், அதிகரித்தளவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டு கட்சிகளிடம் இருந்தும் ஆதரவைப் பெறுகிறது. மக்களுக்கான ஊடகங்களோ, பென்டகன் மற்றும் சிஐஏ இன் ஒரு பிரச்சார அங்கமாக சுருங்கி போயுள்ளன.
மேலும் ஏகாதிபத்திய போருக்கான ஒரு புதிய அதரவுத்தளம், அதாவது இதற்கு முன்னர் போர்-எதிர்ப்புணர்வை ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிட செயல்பட்ட பெயரளவிலான "இடது" அரசியல் அமைப்புகள் மற்றும் பதிப்பகங்களின் ஒரு அடுக்கு, இந்த சண்டையில் அரசியல்ரீதியில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இன்று இந்த கூறுபாடுகள், அமெரிக்க இராணுவத்தின் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு போராட்ட வடிவத்திற்கும் விரோதமாக உள்ளன என்பதோடு, இவை லிபியாவில் இருந்து சிரியா மற்றும் உக்ரேன் வரையில், இவற்றைக் கடந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு வாய்சவடால் பேசி வக்காலத்துவாங்குபவர்களாக மாறியுள்ளன.
அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி போன்ற இந்த குழுக்கள், கொள்கைபிடிப்போடு ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை "ஏகாதிபத்தியமாக" குற்றஞ்சாட்டுவதற்கு திரும்பி, வரவிருக்கும் இன்னும் இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு வழி வகுக்க உதவி வருகின்றன, அதேவேளையில் அவை "மனிதாபிமான உரிமைகள்" என்ற மதிப்பிழந்த பதாகையின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை நியாயப்படுத்துவதுடன், சிரியாவிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் சிஐஏ இன் ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கைகளை "புரட்சிகளாக" கூறி ஆதரிக்கின்றன.
இவற்றின் அரசியல், செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க பிரிவுகளின் நலன்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த பிரிவுகளது தனிப்பட்ட செல்வவளம், பங்குகள் மற்றும் நிலம்-மனை விலைகளோடு சேர்ந்து உயர்ந்துள்ளதுடன், உலகளவில் அமெரிக்க இராணுவவாதம் மேலெழுந்திருப்பதை அடித்தளத்தில் கொண்டுள்ளன.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மக்களிடையே போருக்கு எதிராக பரந்தளவில் ஆழமாக வேரூன்றி உள்ள கோபம், இப்போதைய அரசியல் அமைப்புக்குள் வெளிப்பாட்டைக் காண முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் (ICFI), தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் சர்வதேச சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படும் ஒரு பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக, இந்த உணர்வுக்கு ஒரு நனவுபூர்வமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை வழங்க போராடி வருகின்றன.
Bill Van Auken
19 July 2017
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/amid-j20.shtml

Wednesday, 19 July 2017

இந்தியாவிற்கும், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Mounting tensions between India and its nuclear-armed neighbors, China and Pakistan

இந்தியாவிற்கும், அணுஆயுதங்களை கொண்ட அதன் அண்டை நாடுகளான சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Map source from Internet
சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா தன்னை மேலும் முழுமையாக ஒருங்கிணைத்து கொண்டுள்ள நிலையில், புது தில்லிக்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளும், மற்றும் இந்தியாவுக்கும், அதன் மற்றைய அணுஆயுதம் தாங்கிய அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளும் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன.
கடந்த மாதம், இமையத்தின் உச்சியில், சீனா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் டோக்ளாம் அல்லது டோங்க்லாங் பீடபூமி பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் ஒருவருக்கொருவர் எதிராக அணிவகுத்து நின்றனர்.
1962 இல் இந்தியாவும் சீனாவும் ஒரு மாத காலம் நீடித்த எல்லைப் போரை நடத்தியதில் இருந்து, இந்த மோதல் மிகவும் அபாயகரமானதாக பரவலாக விவரிக்கப்பட்டு வருகின்றது. இந்திய மற்றும் சீன அதிகாரிகள் இருவருமே வரவிருக்கும் இராணுவ மோதலுக்கான மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தல்களை பலமுறை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவும், பாகிஸ்தானும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (Line of Control-LoC) ஊடாக பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. எதிரிப் படையினரை கொல்வது பற்றி பெருமையாக பேசுகின்ற போதும், கடந்த வாரம், ஏழை கிராமவாசிகளை அழிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஊடாக கண்மூடித்தனமாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவதாக புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத் இருவருமே ஒருவரையொருவர் கண்டனம் செய்துள்ளனர்.
மேலும் நிலைமையை எரியூட்டுவதாக, இஸ்லாமிய இந்திய எதிர்ப்பு காஷ்மீர் கிளர்ச்சியாளர்கள் திங்களன்று இரவு நெடுந்தொலைவிலுள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு பேருந்து நிறைந்த இந்து யாத்திரிகர்களை தாக்கியதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலில் ஏழு பேர் இறந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.
கடந்த வருடம், நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாகாணமான ஜம்மு-காஷ்மீரை கொந்தளிப்பிற்குள்ளாக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மீதான அடக்குமுறையை தீவிரப்படுத்த திங்கட் கிழமை இரவில் நடந்த அராஜகத்தை இந்திய அரசாங்கம் உடனடியாக பயன்படுத்திக்கொண்டது.
தெற்காசியாவின் 1947 ஆம் வருட இரத்தகளரியான வகுப்புவாத பிரிவினை, வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு பிரதான இந்து இந்தியா என்ற பிளவை உருவாக்கியதன் ஆரம்பத்திலிருந்து, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பிற்போக்குத்தனமான மூலோபாய போட்டியின் மையமாக காஷ்மீர் உள்ளது. அடுத்தடுத்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் காஷ்மீர் மக்களை வெட்கமின்றி தவறாகவும், மோசடியாகவும் கையாண்டது. பிற்போக்குத்தன, இனவாத வழிநடத்துதலில் உள்ள இந்திய அரசை எதிர்ப்பதற்கு இஸ்லாமியவாத அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த கூலிப்படை நலன்களை முன்னெடுக்க முயல்கின்ற நிலையில், இன்று இந்தியா இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்காவிலிருந்து பெற்ற மூலோபாய ஆதரவு மற்றும் புதிய ஆயுதங்களால் வலுவூட்டப்பட்ட இந்தியாவின் பி.ஜே.பி. அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகரித்தளவில் கடுமையான கொள்கையையே பின்பற்றியுள்ளது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலும், காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்காக பாகிஸ்தானிய எல்லைப்பகுதியிலிருந்து வழங்கப்படும் அனைத்து தளவாட உதவிகளையும் இஸ்லாமாபாத் வெளிப்படையாக நிறுத்துகின்ற வரையிலும் பாகிஸ்தானுடனான மிக அடிப்படையான உறவுகளை கூட ஆழ்ந்த முடக்கத்தில் வைத்திருக்குமென இது வலியுறுத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்குள் சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை அதிகரிக்குமாறு இந்திய சிறப்புப் படையினருக்கு கட்டளையிட்டதோடு, இந்தியா பாகிஸ்தானுடனான அதன் உறவுகளில் “மூலோபாய கட்டுப்பாட்டை” நீண்ட காலம் கடைப்பிடிக்காது என்றும் அப்பொழுது பிரகடனப்படுத்தினார்.
தொடர்ச்சியான மாதங்கள் நீடிக்கும் போர் நெருக்கடியின் போது, சீனா பாகிஸ்தானின் ஆதரவுக்குள் வந்தது.
பெய்ஜிங்கும், இஸ்லாமாபாத்தும் ஒரு தசாப்த காலம் நீண்ட “அனைத்து காலத்திற்குமான” இராணுவ மூலோபாய பங்காண்மையை கொண்டுள்ளன. ஆனால், இந்திய அமெரிக்க “பூகோளமய மூலோபாய பங்காண்மை” கடந்த தசாப்தத்தில் வலுவாகிவிட்ட நிலையில், மேலும் குறிப்பாக 2015 இல் இருந்து, சீனாவும், பாகிஸ்தானும் இன்னும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலம் விடையிறுத்தன.
இந்திய இராணுவ மூலோபாயம் நீண்டகாலமாக பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் ஒரே நேரத்தில் போராடுவதற்கான சாத்தியங்களை எதிர்நோக்குகின்ற வேளையில், இந்தியாவின் புதிய இராணுவத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், ஒரு “இரு முனை யுத்தத்தை” எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக பெருமையடிப்பதன் மூலம் மீண்டும் ஒரு நேரடி அச்சுறுத்தலாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அவர்களது நீண்ட சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதி மீதான பதட்டங்கள் புதியதல்ல. இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள், தற்போதைய இந்திய மற்றும் சீன கட்டுப்பாட்டிற்குரிய பிராந்தியத்தை வரையறுக்கும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஊடான சீன ஊடுருவல்களை சாட்டியுரைத்து ஆத்திரமூட்டும் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுகின்றன.
தற்போதைய சர்ச்சையில் உள்ள வித்தியாசமாக உள்ளது என்னவெனில்  பெய்ஜிங் எடுத்துள்ள ஆக்கிரோஷமான நிலைப்பாடாகும். இது குறித்து சீன அரசு நடத்தும் பத்திரிகைகள் கவனம் செலுத்துகின்றன. மேலும், டோக்லாம் பீடபூமி மீதான கட்டுப்பாடு பற்றிய புது தில்லியின் வலியுறுத்தல் சீனாவின் முக்கிய மூலோபாய நலன்களை பாதிப்பதாக உள்ளது.
இரு நாடுகளும் கடந்த காலத்தில் தங்கள் எல்லை வேறுபாடுகளை நிர்வகித்தது போல, தற்போதைய நிலைப்பாடும் மாதங்கள், பல ஆண்டுகள், நீடித்தாலும் கூட “கையாளப்படக்” கூடியதே என்று இந்திய வெளியுறவு செயலர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த கோரிக்கையை, புதனன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் நிராகரித்தார்.
எல்லைப் பிரச்சனையை ஒரு “வேறுபாடு” என்று கூறிய ஜெய்சங்கரின் விளக்கத்துடன் ஜெங் இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டதுடன், இது ஒரு தீர்க்கமான “சர்ச்சை” என்று கூறுகிறார். மேலும், இது முந்தைய எல்லைப்புற மோதல்களை ஒத்ததாக பெய்ஜிங் இதைக் கருதவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். “சீனா,” “சீன பிராந்தியத்திற்குள் இந்திய எல்லை துருப்புகளின் சட்டவிரோத அத்துமீறல் சீன இந்திய எல்லையாக வரையறுக்கப்பட்ட சிக்கிம் பிரிவில் இந்த முறை நிகழ்ந்தமையானது, சீன இந்திய எல்லையின் வரையறுக்கப்படாத பிரிவுகளில் இரு பக்கங்களுக்கு இடையேயான முந்தைய முரண்பாடுகளிலிருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளதாக” அவர் கூறினார்.
எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் முன்னிபந்தனையாக இந்தியா ஒருதலைப்பட்சமாக டோக்லாம் பீடபூமியில் இருந்து தனது துருப்புக்களை மீளப்பெறவேண்டும் என்ற பெய்ஜிங்கின் கோரிக்கையை சீன வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்த முனைந்தார்.
இந்தியா, எனினும், பிடிவாதமாக உள்ளது; இதுவும், சீனாவுடன் இராஜதந்திர உறவு எதையும் கொண்டிராத சிறிய இராஜ்ஜியமான பூட்டானும், டோக்லாமில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க பெய்ஜிங்கை அனுமதிக்காது. அவ்வாறு செய்ய, சீனாவை ஒரு போரை எதிர்நோக்க செய்வதன் மூலம் மூலோபாயமான சிலிகுரி வழித்தடத்தை கைப்பற்றும் என்று இந்தியா கூறுகிறது. டோக்லாம் பீடபூமியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிராந்தியத்தின் ஒரு குறுகிய பகுதியான சிலிகுரி வழித்தடம் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாகாணங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கிறது.
மிக சமீபகாலம் வரை, விரோதமாக அல்லது அச்சுறுத்தலாக கருதப்பட்ட இந்திய நடவடிக்கைகளுக்கு, பெய்ஜிங் பொதுவாக “மறு கன்னத்தை காட்டியது”. ஏனெனில், ஒரு முக்கிய அமெரிக்க மூலோபாய நோக்கம் அதன் சீன எதிர்ப்பு தாக்குதலுக்கு இந்தியாவைக் கட்டுப்படுத்துவதாகும், என்பதோடு இந்தியா மீதான ஆக்கிரோஷமான விடையிறுப்பு புது தில்லியை வாஷிங்டனின் ஆதரவை நாடி செல்ல வழிவகுக்கும் என்ற பயத்தினாலும் இது வருத்தத்துடன் விழிப்புடன் இருந்தது.
எனினும், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவை அச்சுறுத்துவது உட்பட, இந்தியாவிற்கு தீவிரமாக அழுத்தம் கொடுக்க தற்போது சீனா முற்றிலும் தயாராக உள்ளது.
பெய்ஜிங் அதன் முந்தைய கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்பதை தெளிவாக முடிவு செய்தது. மோடியின் கீழ், சீனாவின் எழுச்சியைத் தடுக்கவும், ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்தவொரு சவாலையும் நிராகரிக்க முனையும் அமெரிக்க உந்துதலில் ஒரு உண்மையான முன்னணி நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழமையான பயன்பாட்டிற்கு இந்தியா தனது இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் திறந்துவைத்துள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இராணுவ மூலோபாய நட்பு நாடுகளான ஆசியா-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ மூலோபாய உறவுகளை உருவாக்கியுள்ளது; மேலும், தென் சீனக் கடல் பிரச்சனையில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை வழமையாக பின்பற்றிவருகிறது.   
மேலும், பல முனைகளில் இந்தியா சீனாவிற்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறது. பெய்ஜிங் அதிருப்தியுறும் அளவிற்கு, இந்தியாவில் எந்தவொரு பகுதியிலிருந்தும், சீனாவின் எந்தவொரு பெரும் மக்கள் நெருக்கம் மிக்க மையத்தின் மீதும் பல்வேறு அணுஆயுதங்களை பொழிய செய்யும் திறன்வாய்ந்ததான Agni V என்ற பெருந்தொலைவு பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை சமீபத்தில் இது நடத்தியது. திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்திற்கு புது தில்லி தனது ஆதரவை தீவிரப்படுத்தியுள்ளதுடன், தெற்கு திபெத் என்று பெய்ஜிங் அழைக்கின்ற மற்றும் நியாயமாக சீனாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்ற ஒரு வடகிழக்கு இந்திய மாகாணமான அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவின் விஜயத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
பல்வேறு இந்திய பெருங்கடல் துறைமுக கட்டமைவுகளை சீனாவின் கடற்படை தளங்களாக மாற்றுவதற்கு பெய்ஜிங் திட்டமிட்டு, ஏராளமான சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இந்திய பெருங்கடலில் இறக்கி வருவது குறித்து தெரிவிப்பது உட்பட, சீனாவில் இருந்துவரும் இராணுவ மூலோபாய அச்சுறுத்தலை பற்றி எச்சரிக்கையூட்டும் கட்டுரைகளால் இந்திய பத்திரிகை நிறைந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தற்போது நடத்தப்பட்டுவருகின்ற மிகப் பெரிய இந்திய-அமெரிக்க-ஜப்பானிய கூட்டு கடற்படை பயிற்சியையும், இந்தியாவிற்கு கடற்படை கண்காணிப்பு ட்ரோன்களை விற்பதற்கான சமீபத்திய அமெரிக்க ஒப்பந்தத்தையும் சுட்டிக்காட்டி, இவைகள் சீனாவைச் சுற்றிவளைத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக சீன செய்தி ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. “அதன் வர்த்தகம் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்காக இந்திய பெருங்கடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது,” என்று திங்களன்று சீன தினசரியில் ஒரு தலையங்கம் அறிவித்ததோடு, மேலும் இது, “சீனா ‘பாதுகாப்பு கவலைகளை’ உணரவேண்டும்” என்றும் தெரிவித்தது.
தற்போதைய இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு மத்தியில், புது தில்லி வாஷிங்டன் உடனான அதன் இராணுவ பாதுகாப்பு கூட்டணியை இன்னும் விரிவுபடுத்தவும், முறைப்படுத்தவும், இந்திய ஊடகங்கள் மற்றும் பல்வேறு இராணுவ பாதுகாப்பு சிந்தனையாளர்களிடம் இருந்து அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
நேற்று Indian Express பத்திரிகை, தற்போதைய வங்காள விரிகுடா போர் பயிற்சிகளின் மத்தியில் “இந்திய-ஜப்பானிய-அமெரிக்க முத்தொகுப்பு,” “மூலோபாய நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும்” என்று காட்சிப்படுத்த அதற்கு அழைப்பு விடுக்கக்கூடிய, முன்னாள் இந்திய கடற்படைத் தலைவர் அருண் பிரகாஷ் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. “நமது நில எல்லைகள் மற்றும் கடல் இரண்டின் மீதான…… சீனாவின் விரோதப் போக்கினையும், ஆக்கிரோஷமான தோற்றமைவையும்” சுட்டிக்காட்டி, பிரகாஷ், “ஒத்துழைப்பு மற்றும் பங்காண்மை மூலம் ஒரு சாதகமான பிராந்திய சக்தி சமநிலைக்கும்; தேவைப்பட்டால் குறுகிய கால கூட்டணிகளை உருவாக்கவும்” “இந்திய யதார்த்த அரசியல் கோரிக்கைகள்” உறுதியளிப்பதாக தெரிவித்தார்.
இதுவரை, டோக்லாம் பீடபூமி நிலைப்பாடு பற்றி வாஷிங்டன் எதுவும் கூறவில்லை. ஆனால் கடந்த மாதம் மோடி வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான “மூலோபாய கூட்டிணைவு” குறித்து ட்ரம்ப் வலியுறுத்தியதோடு, இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை “விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும்” உறுதி பூண்டார்.
சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற முனைவுடனான மோதலில் இந்தியாவை ஒரு பொன்மகுடம் தாங்கிய சிற்றரசராக பயன்படுத்த முனைவதானது, இந்த பிராந்தியத்தையும் மற்றும் உலகையே பேரழிவுகரமான மோதலுக்குள் இட்டுச்செல்கின்ற அச்சுறுத்தும் வகையில் ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவையும் ஒரு பூகோள அரசியல் வெடிமருந்து கிட்டங்கியாக மாற்றியுள்ளதையே சமீபத்திய நிகழ்வுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
By Wasantha Rupasinghe and Keith Jones
14 July 2017
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/inde-j19.shtml

Tuesday, 18 July 2017

வட இலங்கையில் இளம் தொழிலாளியை பொலிஸ் கொன்றது

Police kill young worker in northern Sri Lanka

பருத்தித்துறைக்கு அருகில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் திங்கட்கிழமையும் செவ்வாயன்றும் ஒரு இளம் தொழிலாளி பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். யாழ்ப்பாண குடாநாட்டின் வட முனையில் அமைந்துள்ள இந்த நகரத்தில், தமிழ் பிரதேசவாசிகள் 1984ல் இனவாத பொலிஸ் வன்முறை மற்றும் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.
துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான யோகராஜா தினேஷ், ஒரு லொரிக்கு பின்னால் பயணித்த போது சனிக்கிழமை மாலை கொல்லப்பட்டார். லொரியில் ஏற்றப்பட்டிருந்த மணல் மீது அவர் உட்கார்ந்து இருந்தார். தகவல்களின்படி, பொலிஸ் T-56 ரக துப்பாக்கியால் சுட்டதில் அவர் மார்பு மற்றும் இடுப்பில் காயமடைந்தார்.
யோகராஜா. தினேஷ்
லொரியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்செல்லப்பட்டது என்றும், சாரதி உத்தரவுகளுக்கு பணியத் தவறிவிட்டதால் தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் கூறிக்கொண்டது. பொலிஸ் காவல் நிலையத்திலிருந்து இரண்டு அதிகாரிகள் வாகனத்தை மோட்டார் சைக்கிளால் துரத்தி அதன் மீது சுட்டனர் என்று போலீசார் ஒப்புக் கொண்டனர்.
சாரதியும் மற்றொருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அவர்களை கண்டு பிடிக்க பொலிசார் தேடுதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சாதாரண பொலிஸ் நடைமுறைகளின் கீழ், அதிகாரிகள் சந்தேக நபர்களை நிறுத்தி கைது செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் வேண்டுமென்றே தினேஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.
செய்திகளின் படி, கோபமும் மனக்கலக்கமும் கொண்ட துன்னாலை கிராமத்தினரும் அருகிலுள்ள பிரதேசவாசிகளும் இப்பகுதியின் காவல் நிலையத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு பொலிஸ் ஜீப்பும் சேதமடைந்துள்ளது. கனரக ஆயுதமேந்திய விசேட அதிரடி படை (STF) உறுப்பினர்களும் ஒரு கவச வாகனமும் கிராம மக்களை அச்சுறுத்துவதற்கும் எதிர்ப்புக்களை முறியடிக்கவும் திரட்டப்பட்டனர்.
மெய்சிலிர்க்கும் படுகொலைகளை மூடிமறைக்கும் மற்றும் பிரதேசவாசிகளின் சீற்றத்தை தணிக்கும் முயற்சியில், பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர, “சம்பவத்தை விசாரிக்க” யாழ்ப்பாணத்திற்கு விசேட பொலிஸ் பிரிவை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு பொலிஸார் இடைநிறுத்தப்பட்டு ஜூலை 29 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர, அதிகாரிகள் "அதிகமான அதிகாரத்தை பயன்படுத்தினர்" என்று ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
யோகராஜா தினேஷின் மரணம் ஒரு விபத்து அல்ல, மாறாக வறுமை பீடித்துள்ள மற்றும் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட பிராந்தியத்தில் தற்போது நிலவும் பொலிஸ் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவே ஆகும்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டு இனவாத போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண மக்கள் இன்னும் ஏறத்தாழ இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், தொடர்ந்து போலீஸ் மற்றும் இராணுவ புலனாய்வு கண்காணிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) மௌன ஆதரவைக் கொண்ட கொழும்பு அரசாங்கம், மோதலின் போது நடந்த இராணுவத்தின் பல யுத்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை நசுக்கிவந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் பல வறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் துன்னாலையும் ஒன்றாகும். பிரதேசவாசிகளுக்கு நிரந்தர வேலை இல்லை அதனால் அவர்கள் அனைத்து விதமான தற்காலிக வேலைகளையும் செய்வதன் மூலம் உயிர் வாழ முயற்சிக்கின்றனர். சில இளைஞர்கள் மணல் அகலும் தொழிலில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். லொரி உரிமையாளர்கள் அவர்களுக்கு ஒரு சுமைக்கு 300 ரூபாய் வரை செலுத்துகின்றனர். மற்றவர்கள் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான சதுப்பு நிலங்களில் விறகு சேகரிக்கவும், வீட்டுப் பயன்பாட்டிற்கு அவற்றை விற்கவும் செல்கின்றனர். அவர்கள் காடுகளை அழிப்பதாக குற்றம்சாட்டி பொலிஸ் அடிக்கடி இளைஞர்களை கைதுசெய்து வருகின்றது.
இந்த பகுதியில் இது போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களில் தினேஷின் குடும்பமும் ஒன்று. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தனது கல்வி கைவிட்டுவிட்ட இந்த இளைஞன், ஒரு அமைதியான மற்றும் அன்பான மனிதர், எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவர் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறினர்.
"நாங்கள் ஒரு ஏழை குடும்பம்," என்று தினேஷின் சகோதரி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். "எங்கள் அப்பா குழந்தை பருவத்திலேயே எங்களை விட்டுவிட்டு சென்றதால் நாம் தாயுடன் வாழ வேண்டியிருந்தது. அவர் பல்வேறு வேலைகளை செய்திருந்தாலும், அவருக்கு சரியான ஜீவனோபாயம் கிடைக்கவில்லை. எங்கள் மாமன்மார்கள் நமக்கு உதவினர். எங்கள் சிறுவர் பருவம் மிகவும் சோகமாக இருந்தது.
"எனது சகோதரர் தினேஷ் சவுதி அரேபியாவுக்குச் சென்றார், அங்கு அவர் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தார். அந்த வேலைக்கு அவரை அனுப்ப பணத்தை முழுமையாக கொடுக்க முடியவில்லை. அதனால் நாங்கள் கடன் வாங்கினோம். சவுதி அரேபியில் அவர் விபத்துக்குள்ளாகி மூன்று மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றார். அவர் விடுமுறைக்காக இங்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் திரும்பப் போகிவிருந்தார். இப்போது அவர் பொலிஸால் கொல்லப்பட்டார்."
தினேஷின் மாமா ஒருவர் கூறியதாவது: "[முடிந்த] போரைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள், ஆனால் படுகொலைகள் இன்னும் நடக்கின்றன. நாம் [ஜனாதிபதி] மைத்திரிபால சிறிசேன மற்றும் [பிரதமர்] ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தோம், ஆனால் எங்களது வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை.
"தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறது; அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன, எமது மக்களுக்கு சரியான தொழில்கள் இல்லை. [வட மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தலைவர்] சி.வி. விக்னேஸ்வரன், எமக்கு தமிழ் பொலிஸ் தேவை எனக் கூறியிருக்கின்றார். ஆனால், தமிழ் பொலிஸ் தமிழ் மக்களைக் கொல்வதையே நாங்கள் பார்த்தோம்."
தினேஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பொலிஸ் நடவடிக்கைகளை கண்டனம் செய்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "பொலிஸ் ஒரு வாகனத்தை நிறுத்த முடியும், ஆனால் எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் மக்களை சுட முடியும்? இப்போது போர் நடக்கவில்லை, ஆனால், ஏன் பொலிசார் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள்? போலீஸ் அடக்குமுறை எங்கள் பகுதியில் தொடர்கிறது, நாங்கள் அதை எதிர்க்கிறோம். இங்கு சரியான தொழில் இல்லை, அதுதான் முக்கிய பிரச்சினை."
தற்போதைய போலீஸ் மற்றும் இராணுவ அடக்குமுறைகள் மாகாணத்தில் வெடிநிலையில் உள்ள சமூக மற்றும் அரசியல் நிலைமையை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த அக்டோபரில் பொலிசார் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர். புவுன்ராஜ் சுலக்ஷன், நடராசா கஜன் ஆகிய மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது சுடப்பட்டனர். வாகனத்தை நிறுத்துவதற்கு மாணவர்கள் மறுத்துவிட்டதாக பொலிசார் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு இன்னும் இழுபட்டு வருகிறது.
தினேஷ் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழ் தலைவர்கள் என கூறிக்கொள்பவர்கள் முதலைக் கண்ணீர் வடித்தனர். தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவர் எம்.ஏ. சுமந்திரன் "பொலிஸ் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது. சட்டவிரோத மணல் அகல்வில் தனிநபர்கள் ஈடுபட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்கள் உயிர்களை பறிக்க முடியாது," என்றார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், "ஒரு தமிழ் இளைஞனை தமிழ் பொலிஸ் சுட்டுக் கொன்றதால் இந்த சம்பவத்தை நாம் சகித்துக் கொள்ள முடியாது,” எனத் தெரிவித்தார்.
அதிகளவில் தமிழ் பொலிசாரை நியமிக்க பிரச்சாரம் செய்யும் விக்னேஸ்வரன், அவர்கள் தமிழ் மக்களுக்கு “சேவை” செய்வர் என கூறிக்கொள்கின்றார். ஆனால் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் அடக்குமுறை இயல்பும் நடவடிக்கைகளும் வேறுபட்டவை அல்ல. அது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தால் அல்லது பிற ஆளும் செல்வந்த தட்டினரால் நிர்வகிக்கப்படுகின்றதா என்பது பிரச்சினை அல்ல.
அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழர்கள் வாழும், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயக-விரோத அடக்குமுறையை பராமரிக்க உதவுகின்ற முக்கிய கருவியாகும்.
By WSWS correspondents
14 July 2017
ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/yoga-j15.shtml

Sunday, 16 July 2017

மொசூல் "விடுதலை": மத்திய கிழக்கில் வாஷிங்டனின் சமீபத்திய போர் குற்றம்

The “liberation” of Mosul: Washington’s latest war crime in the Middle East

Image source from Internet
மொசூல் "விடுதலையை, "எல்லா நாகரீக மக்களுக்கும் எதிரிகளாக உள்ள பயங்கரவாதிகள் மீதான வெற்றியாக" கொண்டாடி, ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் திங்களன்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய அந்த நகரத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்நாட்டின் கதியானது, மனிதயினத்தின் எதிரிகள் என்று கருதுகையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் ISIS மிகச் சிறிய பங்களிப்பாளராகவே இருக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் அண்ணளவாக இரண்டு மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அந்நகரம், அண்மைய ஒன்பது மாதங்களாக மரணகதியிலான முற்றுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மொசூலின் சீரழிந்த காட்சிகளை, இரண்டாம் உலக போரில் ஐரோப்பிய நகரங்களுக்கு நேர்ந்த அதே மாதிரியான சீரழிவுடன் மட்டுமே ஒப்பிட முடியும். ஒரேயொரு வீடோ அல்லது வர்த்தக கட்டிடமோ கூட முழுமையாக விட்டுவைக்கப்படாமல், அமெரிக்க ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் மேற்கு மொசூலின் இந்த பண்டைய சிற்றூர், இந்த பண்டைய நகரத்தின் இதயதானம், பெரிதும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த குற்றங்கள், ஹிட்லரால் செய்யப்பட்ட அளவிற்கு உள்ளன. சுமார் ஒரு மில்லியன் ஜனங்கள் அவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். இந்நகரில் சிக்கியவர்கள் அமெரிக்க போர் விமானங்களில் இருந்தும், தாக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக பீரங்களில் இருந்தும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுவீச்சுக்கு ஆளானார்கள். இந்த முற்றுகையின் ஆரம்பத்தில், அடிப்படை உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு சகல வினியோக பாதைகளும் மூடப்பட்டதால், நூறாயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் மின்சாரம், சுத்தமான குடிநீர், போதிய உணவு மற்றும் மருத்துவ கவனிப்பைப் பெற முடியாமல் போனது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அடையாளம்தெரியாத அழுகிய சடலங்களின் நாற்றங்களுக்கு இடையே அமெரிக்க-ஆதரவிலான ஈராக்கிய படைகள் இடிபாடுகளின் மேல் கூத்தாடி கொண்டிருந்தனர் என்ற கொடூர உண்மை, அவர்களது வெற்றி கொண்டாட்டங்களைக் குறிப்பிடும் செய்திகளில் மறைக்கப்படுகின்றன.
அமெரிக்க தலைமையிலான "கூட்டணி" பெப்ரவரி மற்றும் ஜூன் 2017 க்கு இடையே தொடங்கிய தாக்குதல்களின் விளைவாக 5,805 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏர்வார்ஸ் கண்காணிப்பு குழு ஆவணப்படுத்தி உள்ளது. அந்த முற்றுகையின் முதல் நான்கு மாதங்களில் காயமடைந்தவர்களையும் அத்துடன் கடந்த மூன்று வாரங்கள் நடந்த பயங்கர குண்டுவீச்சுக்களில் காயமடைந்தவர்களையும் உள்ளடக்காத இந்த புள்ளிவிபரம், மிகப்பெரிய குறைமதிப்பீடாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு அதிகமானவர்கள் காயமடைந்திருக்கலாம்.
சுற்றிவளைக்கப்பட்ட அந்நகரில் இருந்து தப்பித்த சிறுவர்களும் ஆண்களும் ISIS நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கையாளப்பட்டனர், பலர் கடும் விசாரணைக்கும், கொடூரமான சித்திரவதை மற்றும் நீதிவிசாரணையற்ற படுகொலைக்கும் உட்படுத்தப்பட்டனர், இவை அனைத்தும் அமெரிக்க சிறப்புப்படை "ஆலோசகர்களின்" கண்களுக்கு முன்னாலேயே நடந்துள்ளது.
“என்ன விலை கொடுத்தாவது: மேற்கு மொசூலில் அப்பாவி மக்களின் பாரிய படுகொலை,” என்று தலைப்பிட்டு சர்வஜன பொதுமன்னிப்பு சபை (Amnesty International) செவ்வாயன்று ஓர் அறிக்கை வெளியிட்டது, "மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பயன்படுத்தக்கூடாத ஆயுதகளைக் கொண்டு கொடூரமான குண்டுவீச்சு தாக்குதலுக்கு" அப்பாவி மக்கள் உள்ளாக்கப்பட்டதை அது நினைவூட்டியது.
அமெரிக்க அரசாங்கத்தை ஏறத்தாழ கவனமாக கையாளும் அதன் பாணியில், சர்வஜன பொதுமன்னிப்பு சபை அறிக்கை குறிப்பிட்டது, “அமெரிக்க தலைமையிலான கூட்டணி படைகள் சர்வதேச சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியுள்ளதாக தெரிகிறது, அவற்றில் சில போர் குற்றங்களுக்கு நிகரானதாகும்.” “போர் குற்றங்களுக்கு பொறுப்பாக சரியான காரணங்களுடன் சந்தேகிக்கப்படுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்காக", “சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறிப்பட்டிருப்பதைக் காட்டும் நம்பகமான தகவல் மீது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்" நடத்த அந்த அமைப்பு அழைப்புவிடுத்தது.
சர்வஜன பொதுமன்னிப்பு சபை அமெரிக்க இராணுவத்தைக் காட்டிலும் ISIS ஐ அதிகமாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், முதலில் ISIS உருவாவதற்கு யார் பொறுப்பு என்பதன் மீதோ, மொசூல் மீது நடத்தப்பட்ட இந்த மனித பேரழிவின் வரலாற்று வேர்களைக் குறித்தோ அது குறைந்தளவிலும் கூட எந்த கேள்விகளும் எழுப்புவதில்லை.
ஏறத்தாழ ஈராக் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியான மொசூலை சுற்றி வளைத்து, அமெரிக்கா பயிற்சியளித்த ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் அழுகிய அடித்தளங்களை அம்பலப்படுத்தி, ISIS மூன்றாண்டுகளுக்கு முன்னர் அந்நாடு எங்கிலும் வேகமாக பரவிய போது, சிஐஏ மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகளால் முதலில் லிபியாவிலும் பின்னர் சிரியாவிலும் முடுக்கிவிடப்பட்ட ஆட்சி மாற்ற போர்களில் ஒரு பினாமி படையாக பயன்படுத்துவதற்காக அது நன்கு பயிற்றுவிக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டு, நவீன ஆயுதங்களை பெற்றிருந்தது.
எவ்வாறிருப்பினும் ஈராக்கில் அல் கொய்தா தொடர்பு கொண்ட சுன்னி போராளிகள் குழுக்களது வளர்ச்சியின் வேர்கள், எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த கால் நூற்றாண்டு போர், தடையாணைகள், படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பில் தங்கியுள்ளன, இது இறுதியில் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை, மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக மாற்றப்பட்டதில் போய் முடிந்துள்ளது.
பிரித்தாளும் மூலோபாயத்தை பின்பற்றுவதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஒன்றோடொன்று பரந்தரீதியில் கலந்திருந்த இன மற்றும் மத குழுக்களைக் கொண்டிருந்த ஈராக்கில், குறிப்பாக இரத்தந்தோய்ந்த விளைவுகளோடு மொசூலில், வகுப்புவாத பிரிவுகளை உருவாக்கியது. அதற்கடுத்து பாக்தாத்தில் நிறுவப்பட்ட ஷியா-மேலாதிக்க அரசாங்கம் சுன்னி பெரும்பான்மையினரை கொண்ட மொசூல் மற்றும் அன்பார் மாகாணங்களை பாரபட்டமாக கையாண்டமை, இது ISIS க்கு வளர்ச்சியடைவதற்கான அடித்தளத்தை வழங்கியது.
2003 இல் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் அமெரிக்கா தொடங்கிய தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரே, மொசூல், ஈராக் மற்றும் பரந்த மத்தியக் கிழக்கு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பேரழிவுகளுக்கு மேலோங்கிய மூலக்காரணமாகும். அந்நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள், “சதாம் ஹூசைன் அவர் சொந்த மக்களைக் கொல்வதாக" குற்றஞ்சாட்டி போரை ஆதரித்தனர். ஆனால் கடந்த 14 ஆண்டுகளின் போக்கில் அந்நாட்டின் மீது வாஷிங்டன் நடத்தியுள்ள கொலைகள் மற்றும் சீரழிவுகளின் அளவைக் குறித்து மறைந்த அந்த ஈராக்கிய ஆட்சியாளரே கூட திகைத்து போவார்.
நூரெம்பேர்க் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட சட்ட கோட்பாடுகள் மற்றும் வகைமுறைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டால், வாஷிங்டனில் பலர் தூக்கு தண்டனை இல்லையென்றாலும், ஆயுள் தண்டனையாவது முகங்கொடுப்பார்கள். வழக்கிற்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாம் குடியரசின் உயிர்பிழைத்திருக்கும் தலைவர்கள் மீதுள்ள பிரதான குற்றச்சாட்டான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரைத் தொடங்கினார் என்ற அதே குற்றச்சாட்டிற்கு, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், டிக் சீனெ, டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் ஏனையவர்களும் உள்ளடங்குவார்கள்.
இத்துடன் சேர்ந்து, அங்கே பராக் ஒபாமா மற்றும் அவர் நிர்வாகத்தின் முன்னணி பிரமுகர்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் உள்ளது. அமெரிக்க போர்களை அவர் முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் தவறான நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அவற்றை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு இடங்களிலும் தொடர்ந்ததுடன், லிபியா மற்றும் சிரியாவிற்குள்ளும் அமெரிக்க தலையீடுகளை விரிவாக்கிறார். அவர் நிர்வாகத்தின் கீழ் தான் மொசூல் முற்றுகை தொடங்கப்பட்டது.
இறுதியில் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள், ஜனாதிபதியில் இருந்து தொடங்கி ஈராக் மற்றும் சிரியாவில் "நிர்மூலமாக்கும்" கொள்கையைப் பிரகடனப்படுத்திய அவர் பாதுகாப்புத்துறை செயலர் "போர் வெறியர்" ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் வரையில், மற்றும் அந்த பாரிய படுகொலை கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ள தளபதிகள் மற்றும் சிஐஏ தலைவர்கள் வரையில், குற்றவாளிகளாக உள்ளனர்.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், போர் பிரச்சாரத்தின் வெட்கம் கெட்ட கருவியாக மாறியுள்ள ஊடகம், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை இராணுவவாதம் மற்றும் போர் வழிவகைகளைக் கொண்டு ஈடுசெய்ய கோரி வருகின்றன, மொசூல் போர் குற்றங்களுக்கும் மற்றும் கடந்த ஒன்றரை தசாப்தமாக ஈராக் எங்கிலும் மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கும் ஏனைய ஒவ்வொரு பிரதான அமெரிக்க அமைப்புமே பொறுப்பாகின்றன.
இத்துடன் அமெரிக்க கல்வியாளர்களும் உடந்தையாய் உள்ளனர், இவர்கள் அமெரிக்க கொள்கையில் மேலோங்கிய குற்றங்கள் மற்றும் பொய்கள் குறித்து காலமறிந்து மவுனமாகி உள்ளனர், பல்வேறு போலி-இடது அமைப்புகளைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை, இவை "மனித உரிமைகள்" என்ற மதிப்பிழந்த பதாகையின் கீழ் ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதில் தங்களைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளன.
“போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களென உரிய காரணத்துடன் சந்தேகத்திற்குரியவர்களை வழக்கில் இழுப்பதற்கான" சர்வஜன பொதுமன்னிப்பு சபையின் முன்மொழிவின்படி நடவடிக்கை எடுத்தால், உண்மையில் வாஷிங்டனில் பிரதிவாதிகளது கூண்டு நிரம்பி வழியும். ஆனால் இந்த குற்றங்களுக்காக யாரும் கணக்கில் கொண்டு வரப்படமாட்டார்கள்.
ஈராக், மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த உலகின் உழைக்கும் மக்களது போராட்டத்தின் ஐக்கியத்துடன், வாஷிங்டனின் போர் குற்றங்களுக்கு கணக்கு தீர்க்கும் வேலையானது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வேலையாகும். மத்திய கிழக்கிலும் மற்றும் உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் இராணுவவாதம் மற்றொரு உலக போராக ஒன்றுதிரள அச்சுறுத்துகின்ற நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான போராட்டம் முன்பினும் அதிக அவசரமானதாக மாறியுள்ளது.
Bill Van Auken
12 July 2017
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/mosu-j14.shtml

Thursday, 13 July 2017

பெட்ரோகிராட் சோவியத்துகளின் “ஆணை எண்1”

From the archives of the Revolution

The Petrograd Soviet’s “Order No. 1”

புரட்சியின் ஆவணக்காப்பகத்திலிருந்து

பெட்ரோகிராட் சோவியத்துகளின் “ஆணை எண்1”

தொழிலாளரினதும் படையினரினதும் பிரிதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தால் வழங்கப்பட்டது
13 March 2017
மார்ச் 14 (March 1, O.S.) அன்று படையினரினது கோரிக்கையின் பேரில், பெட்ரோகிராட் சோவியத்தானது “ஆணை எண் 1” ஐ வழங்கியது, அதனை ட்ரொட்ஸ்கி “பிப்ரவரி புரட்சியின் மதிப்புவாய்ந்த தனியொரு ஆவணம்” என விவரித்தார்.
பெட்ரோகிராட் பிராந்திய படைக் கொத்தளத்திற்கு, காவலர், இராணுவம், பீரங்கிப்படை மற்றும் கடற்படையின் அனைத்துப் படையினரே, உங்களது உடனடியான மற்றும் துல்லியமான நிறைவேற்றுதலுக்காக; பெட்ரோகிராட் தொழிலாளர்களே உங்கள் அறிதலுக்காக.
தொழிலாளர் படைவீரர் சோவியத்தின் முக்கிய பணியாளர்கள் இதன் மூலம் ஆணையிடுவதாவது:
1) அனைத்து படைப்பிரிவுகளும், பட்டாலியன்களும், ரெஜிமென்ட்டுகளும் பீரங்கிப் படைப்பிரிவும் குழுக்கள், ஸ்குவாட்ரன்கள் மற்றும் பல்வேறு இராணுவ சேவைகளுக்கான படைப்பிரிவுகளும், கடற்படைக் கப்பல்களில் உள்ளோரும் படைப்பிரிவுகளின் கீழ் அணிகளில் இருந்து உடனடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட குழுக்களை தேர்வு செய்க.
2) தொழிலாளர்களின் முக்கிய பணியாளர் சோவியத்திற்கு தங்களது பிரதிநிதிகளை இன்னும் தேர்வு செய்திராத இரணுவப் படை அலகுகள் அனைத்தும் ஒவ்வொரு படைப்பிரிவுகளிலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தேர்வு செய்ய வேண்டும் – அவர் தகுந்த நற்சான்றுகளுடன் மார்ச் 2 ஆம் தேதி, காலை 10 மணி அளவில் அரசு டூமா கட்டிடத்திற்கு வரவேண்டும்.
3) ஒவ்வொரு இராணுவ அலகும் அதன் அரசியல் நடவடிக்கையில் தொழிலாளர் படையினரின் சோவியத்துக்கும் அதன் குழுக்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
4) அரசு டூமாவின் இராணுவ ஆணைக் குழுவிலிருந்து (அதாவது தற்காலிக அரசாங்கம்) வரும் ஆணைகளானவை, தொழிலாளர் படையினர் முக்கிய பணியாளர் சோவியத்தின் ஆணைகளுக்கும் முடிவுகளுக்கும் முரண்படாது இருந்தால் மட்டுமே அவை நிறைவேற்றப்படும்.
5) துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள், கவச வாகனங்கள் போன்ற அனைத்து வகையான ஆயுதங்களும் படைப்பிரிவுகள் மற்றும் பட்டாலியன் குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும்; ஒப்படைக்கப்படல் வேண்டும், அதிகாரிகளுக்கு, அவர்கள் கேட்டால் கூட எந்த வகையிலும் அவை வழங்கப்படக் கூடாது.
6) படையினர் கடமையில் இருக்கும் போதும் தங்களது தொழில்முறை ரீதியான கடப்பாடுகளை ஆற்றுகையிலும் கடும் இராணுவ ஒழுங்கைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால் அதேவேளை தாங்கள் பணியில் இல்லாத பொழுது, தங்களின் அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வில், அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள உரிமைகளை எந்த வகையிலும் மறுக்கக் கூடாது.
குறிப்பாக, பணியில் இல்லாத வேளையில் அசையாது நிற்பது, மரியாதை செலுத்துவது (அட்டென்சனில் நிற்பது, சல்யூட் அடிப்பது), ஒழிக்கப்படுகின்றன.
7) அதேபோல அதிகாரிகளின் பட்டங்களாகிய மேதகு, மாண்புமிகு முதலியன இல்லாமல் செய்யப்பட்டு திரு. தளபதி, திரு. கர்னல் என்றவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றன.
அனைத்து இராணுவ அணிகளிலும் உள்ள படையினர் முரட்டுத்தனமாக நடத்தல், குறிப்பாக, அவர்களுக்கு கூறும்பொழுது (நட்பார்ந்த, பழகிய சூழ்நிலைக்குரிய முன்னிலைப் பெயருரிச் சொல்லை) “ஏய்” எனும் சொல்லைப் பயன்படுத்தல் தடைசெய்யப்படுகிறது மற்றும் இது தொடர்பான எந்த மீறலும், அதேபோல அதிகாரிகளுக்கும் படையினருக்கும் இடையிலான அனைத்துவிதமான தவறானபுரிதல்களும் படைப்பிரிவின் குழுக்களுக்கு கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
பெட்ரோகிராட் தொழிலாளர்படையினரது சோவியத்தின் பிரதிநிகளின் பேரில்
http://www.wsws.org/tamil/articles/2017/3-mar/orde-m27.shtml

Wednesday, 12 July 2017

ஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது

After Hamburg protests, German government plans crackdown on left-wing views

Andre Damon
11 July 2017
வாரயிறுதியில் ஹம்பேர்க் நகரில் பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றகரமாக்கவும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் அதன் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கை ஒன்றில், பெரிதும் அமைதியாக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சுமார் 20,000 பொலிஸார் அணிதிரட்டப்பட்டனர். ஹம்பேர்க் நகரம் மீது ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் பறந்த நிலையில், கனரக ஆயுதமேந்திய பொலிஸ், பயமுறுத்தும் ரீதியிலான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறியவகை தானியங்கி துப்பாக்கிகளுடன், நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்தனர், குறுந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததுடன், நீர் பீய்ச்சிகளைக் கொண்டு அவர்கள் மீது நீரைப் பாய்ச்சி, கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் மிளகுப்பொடி தெளிப்பான்களையும் பிரயோகித்தனர்.
இந்த பாரிய பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஒரு பலவீனமான சாக்குபோக்காக, குட்டி-முதலாளித்துவ அராஜகவாதிகளின் ஒரு சிறிய குழுவால் நடத்தப்பட்ட நாசவேலை சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜேர்மன் பொலிஸால் அராஜகவாத குழுக்கள் பரந்தளவில் உள்நுழைக்கப்பட்டதற்கு இடையே, அதற்கு முன்னரே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பொலிஸ் முகமை தூண்டுதல்தாரிகளதுநடவடிக்கைகளும் இந்த குழப்பங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நிறைவடைந்தவுடன், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்கான அதன் நடவடிக்கையை அதிகரித்துள்ளது. Bild பத்திரிகை உடனான ஒரு பேட்டியில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், போராட்டக்காரர்களை "கடுமையான சமூக-எதிர்ப்பு குற்றவாளிகள்" என்றும், அவர்கள் "ஹம்பேர்க்கில் கொலை முயற்சி உட்பட தீவிர குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டு, ஐரோப்பா எங்கிலும் "இடதுசாரி தீவிரவாதிகளை" குறித்த ஒரு தகவல் களஞ்சித்தை உருவாக்க அழைப்புவிடுத்தார்.
“முட்டாள்தனமான வன்முறையை, கொலை முயற்சியையும் கூட, ஊக்குவிக்கின்ற அரசியல் தீவிரவாதத்தின் எந்தவொரு வடிவமும் ஒரு சமூக பிற்போக்குத்தனம் இல்லாமல் நீடித்திருக்காது என்று நான் நம்புவேன்,” என்று அறிவித்து, இடதுசாரி "தீவிரவாதிகளை" இலக்கில் வைக்க மாஸ் "இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி" (Rock Against the Left) ஒன்றுக்கு அழைப்புவிடுக்குமளவிற்கு சென்றார்.
“இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி" எனும் இந்த முழக்கம், முன்னதாக “Freikorps” மற்றும் "Sturmfront” போன்ற நவ-நாஜி ராக் பாடல் குழுவுடன் தொடர்புடையதாகும். ஜேர்மனியின் அந்த தீவிர வலது பத்திரிகை, மாஸ் இன் இந்த முன்மொழிவை மனதார வரவேற்றது. ஹம்பேர்க் சம்பவங்களுக்கு விடையிறுப்பதில், இடதுகளுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வலதுசாரி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவிடுத்த நாஜி-தொடர்புடைய ஜேர்மன்-இத்தாலிய ராக் பாடல் குழுவான Frei Wild இன் அறிக்கை ஒன்றை “புதிய வலது" Junge Freiheit பத்திரிகை மேற்கோளிட்டது.
சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) நாடாளுமன்றவாதி Armin Schuster, இடதுசாரி அரசியல் குழுக்கள் பயன்படுத்தும் சமூக இடங்களை அடைக்குமாறு அழைப்புவிடுத்தார். “இடதுசாரிகள் மையமாக கொண்டுள்ள ஹம்பேர்க்கில் உள்ள ரோட் ஃபுளோரா (Rote Flora) மற்றும் பேர்லினில் உள்ள ரிகெர் ஸ்ராஸ் (Rigaer Strasse) போன்ற இடங்களைப் படிப்படியாக அடைக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். “அரபு சிறுகுழுக்களுக்கு ஆகட்டும், இஸ்லாமியர்கள் அல்லது நவ-நாஜிக்களுக்கு ஆகட்டும், இடதுசாரி தீவிர போக்குடையோர்களுக்கும் சரி, சட்டதிட்டமில்லா இடங்கள் கிடையாது" என்பதில் ஜேர்மனி சகிப்புத்தன்மை கொண்டிருக்கக்கூடாது என்றவர் தெரிவித்தார்.
CDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் அவர் பங்கிற்கு அறிவிக்கையில், “வன்முறையைப் பிரயோகிப்பதற்கு இடதுசாரி காட்சிகளின் தயார்நிலையை நமக்கு எடுத்துக்காட்டியதில் ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த சம்பவங்கள் ஒரு திருப்புமுனையாகும்,” என்றார்.
ஜி20 க்கு முன்னதாக கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, இடதுசாரி அரசியல் கண்ணோட்டம் கொண்ட "நூற்றுக் கணக்கானவர்கள்" ஜேர்மனி எல்லைகளில் இருந்து சமீபத்திய நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் பெருமை பீற்றி கொண்டார். எல்லைக் கட்டுப்பாடுகள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதாக கூறி, CDU இன் ஏனைய அங்கத்தவர்கள், இந்த தற்காலிக நடவடிக்கைகளை நிரந்தரமாக்க அழைப்புவிடுத்தனர்.
பொலிஸ் நடவடிக்கைகளுக்கு "விமர்சனங்களை அல்ல, பாராட்டு பத்திரங்களை" வழங்க வேண்டுமென கூறி, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் உடன் ஐரோப்பிய அதிகாரிகளும் போராட்டக்காரர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை ஆதரித்தனர். பொலிஸ் விடையிறுப்பு "ஹம்பேர்கில் அதன் சிறப்பை" பிரதிநிதித்துவம் செய்தது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
அரசியல் எதிர்ப்பு மீதான பரந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கவுள்ள கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நடந்துள்ளது, இதில் இரண்டு முன்னணி கட்சிகள், CDU மற்றும் SPD, சட்டம்-ஒழுங்கு விஷமப்பிரச்சாரம், வெளிநாட்டவர் மீதான வெறுப்பு மற்றும் அகதிகள் மீது துவேசத்தைத் தூண்டிவிட்டு வலதிலிருந்து ஒன்றையொன்று விஞ்சி நிற்க முயன்று வருகின்றன.
வேறொன்றும் இருக்கிறதென்றால், அது பெயரளவிற்கு "இடது" சமூக ஜனநாயகவாதிகள் எடுத்துள்ள மிகவும் தீவிர நிலைப்பாடாகும். பல தொடர்ச்சியான கடும் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர், பரந்தளவில் வெறுக்கப்படும் இந்த அமைப்பு சமூக சீர்திருத்த கட்சியாக அதன் நம்பகத்தன்மை இழப்பை பிரதிபலிக்கும் வகையில், SPD, முன்னதாக தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த பாசிசவாத கூறுபாடுகளுக்கு அழைப்புவிடுக்க முனைந்து வருகிறது.
ஊடகங்களின் ஆதரவுடன், இவ்விரு கட்சிகளும் வல்லரசு ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஜேர்மனி புத்துயிரூட்டுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள செய்வதற்காக அவர்களை அச்சுறுத்த, கடந்த 2013 பெடரல் தேர்தலுக்குப் பின்னர் இருந்து சூழ்ச்சி செய்து வந்துள்ளன. இது ஒரு பாரிய மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் அந்நாட்டின் இராணுவ மற்றும் உளவுத்துறை சக்திகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ஜேர்மன் ஏகாதிபத்திய குற்றங்களைப் பூசிமொழுகும் முயற்சியின் பாகமாக "ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை" என்று இழிவாக அறிவித்த ஹம்போல்ட் பல்கலைக்கழக கல்வியாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற பாசிசவாத புத்திஜீவிய பிரமுகர்களை ஊக்குவித்தமையையும் உள்ளடக்கி உள்ளது.
ஜேர்மனியில் இடதுசாரி அரசியல் கண்ணோட்டங்கள் மீதான தாக்குதல், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் பாகமாக நடக்கிறது. நவம்பர் 2015 க்குப் பின்னர் இருந்து, பிரான்ஸ் அவசரகால நிலையின் கீழ் இருந்து வருகிறது, இது, ஹோலாண்ட் அரசாங்கத்தின் கீழ், கடுமையான எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தின் எதிர்ப்பாளர்களை எதேச்சதிகாரமாக காலவரம்பின்றி வீட்டுக்காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது.
இடதுசாரி அரசியல் அமைப்புகளுக்கு எதிரான நகர்வுகள், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான பரந்த மக்கள் எதிர்ப்பை முன்னதாகவே முறியடிக்கும் மற்றும் மிரட்டும் ஒரு முயற்சியை உள்ளடக்கி உள்ளது. “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது” என்றும், “வங்கிகளும் பணமும் உலகை ஆள்கிறது" என்றும் பெரும் பெரும்பான்மை இளைஞர்கள் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்த மக்கள் எதிர்ப்பை எடுத்துக்காட்டி இருந்தது. கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஒரு "மிகப் பெரியளவிலான எழுச்சியில்" இணைவோம் என்று கூறியிருந்தனர்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மட்டுமே போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சியாகும். அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்துக்களைக் குறித்து அதற்கு எச்சரித்து, வரவிருக்கும் போராட்டங்களுக்கு அதை தயாரிப்பு செய்கிறது.
http://www.wsws.org/tamil/articles/2017/7-July/hamb-j12.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts