w e l c o m e - ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு (1917-2017) - சர்வதேச இணையவழி தொடர் - மார்ச் 11, மார்ச் 25, ஏப்பிரல் 22 மற்றும் மே 6 - இன்றே பதிவு செய்யுங்கள்

Search This Blog

The Struggle of Maruti Suzuki Auto Workers

The Struggle of Maruti Suzuki Auto Workers
Thirteen sentenced to life imprisonment in India Free the framed-up Maruti Suzuki workers!

Tuesday, 14 March 2017

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு மத்தியில் தெற்கு ஆசிய அணு ஆயுத போட்டி முடுக்கிவிடப்படுகிறது

South Asian nuclear arms race accelerates amid India-Pakistan standoff

சமீபத்திய வாரங்களில், பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளை நடத்திவருவதும், மற்றும் போர் உந்தல்மிக்க அச்சுறுத்தல்களை உருவாக்கிவரும் நிலையில் தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போட்டி இன்னும் தீவிரமடைவதையும் காணக்கூடியதாக உள்ளது.
கடந்த இலையுதிர்காலத்தில், இந்தியா தனது "மூலோபாய கட்டுப்பாட்டு" கொள்கையை நிறுத்திக்கொண்டுவிட்டதாகவும், மற்றும் காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ தளவாட உதவிகளையும் இஸ்லாமாபாத் நிறுத்தும் வரை பாகிஸ்தான் உள்ளே இராணுவ தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடரப்படும் என்றும் பெருமை பேசியதற்கு பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு அளவிலான போரை நோக்கி இன்னும் ஆபத்தான வகையில் நெருங்கிவந்தன.
இரண்டு மாதங்களுக்கு பின்னர், இந்தியாவினாலும் பாகிஸ்தானாலும் கட்டுப்படுத்தப்படும் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி ஊடாக இந்திய மற்றும் பாகிஸ்தானிய இராணுவத்தினர் தினமும், பல சமயங்களில் அபாயகரமான வகையில் பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகள் மூலமாக சரமாரியான குண்டுவீச்சுக்களை பரிமாறினர்.
எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளபோதும், தெற்கு ஆசிய அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான உறவுகள் ஆபத்து நிறைந்ததாக இருப்பதுடன், இரண்டு நாடுகளுமே அவர்களது போர் தயாரிப்புகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தியா செப்டம்பர் மாதம் முதல் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொண்ட அவசரகால ஆயுத கொள்முதலுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கும் (20,000 கோடி ரூபாய்) மேலாக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய செய்தி ஊடக தகவல்களின்படி, இந்த கொள்முதல்களில் வெடிபொருட்கள், ஜெட் போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்களுக்கான இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், போர் டாங்கிகளின் கவசங்களை பிளக்கும் ராக்கெட்டுகள், மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவை அடங்கும். இந்தியா குறைந்தபட்சம் தொடர்ந்து 10 நாட்களுக்கு "தீவிரமான தாக்குதல்களை" நடத்தும் திறன்கொண்டதாக இருக்கிறது என்பதை வெடிபொருட்கள் மற்றும் பாகங்கள் உறுதிசெய்வதாக இருக்கவேண்டும்.
செப்டம்பர் மத்தியில் இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாதிகள் இந்திய இராணுவ தளம் ஊரி மீது நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவின் இந்துமத மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் இஸ்லாமாபாத் உடனான அனைத்து உறவுகளையும் முற்றாக நிறுத்திவைத்திருந்ததுடன், இந்த தாக்குதல் குறித்து பிஜேபி இந்திய அரசியல் அமைப்பின் முழு ஆதரவுடன் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டியது. இந்த மாத தொடக்கத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கு அளித்த ஒரு அறிக்கையில், "சமாதானம் ஏற்படும் வரை எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை" என்பதே இந்தியாவின் கொள்கை, அதாவது காஷ்மீர் கிளர்ச்சியாளர்களுக்கு இஸ்லாமாபாத் அதன் பிராந்தியங்களிலிருந்து வழங்கிவரும் உதவிகளை குறைத்துவிட்டது என்பது நிரூபணமாகும்வரை பாகிஸ்தானுடனான இந்தியாவின் பொதுவாகவே உறைநிலையிலுள்ள உறவுகளை மீண்டும் தொடரப்போவதாக இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இந்தியா அதன் அணுசக்தி வலிமையை எடுத்துக்காட்டுவதற்காக, டிசம்பர் மற்றும் ஜனவரியில் அணு ஆயுத திறன்கொண்ட இரண்டு ஏவுகணைகளை மீண்டும் மீண்டும் சோதனை செய்தது. முதலாவதாக இந்தியாவின் மிகவேகமாக விரிவடைந்துவரும் அணு ஆயுதமான அக்னி-V, மிகுந்த சக்திவாய்ந்ததாகவும், நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பிற்கு ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகவும் உள்ளது. 5,000 கிலோ மீட்டர் (3,100 மைல்கள்) வரையிலுமான தொலைவினை இலக்குவைத்து தாக்கக்கூடிய பல அணு ஆயுதங்களை பொருத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அக்னி-IV இன் மூலமாக, ஜனவரி 2ல் புது தில்லி ஐந்தாவது முறையாக சோதனை செய்தது, இது 4,000 கிலோ மீட்டர் (2,485 மைல்கள்) வரை தொலைவெல்லை கொண்டது என்ற வகையில், பெரும் மக்கள்தொகை கொண்ட அனைத்து பாகிஸ்தானிய மையங்களையும், இராணுவ தளவாட மையங்களையும் தென் இந்தியாவிலிருந்தே தாக்கக்கூடிய திறனை இந்தியா கொண்டிருந்தது.
2016 தொடக்கத்தில், நிலம், வான்வழி மற்றும் நீருக்கடியில் இருந்து அணு ஆயுதங்களை ஏவும் திறன்கொண்ட "அணுஆயுத முக்கூற்றுத்தொகுதி" ஒன்றை அபிவிருத்தி செய்து முடித்துள்ளதாக இந்தியா அறிவித்தது. ஆகஸ்டில், இந்தியா INS Arihant என்ற அணு சக்தியில் இயங்கக்கூடிய தனது முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாங்கும் நீர்மூழ்கி கப்பலை நிறுவியது, மேலும் கடந்த ஆண்டு இறுதியில், அது 3,500 கிலோ மீட்டர் (2,175 மைல்கள்) தொலைவெல்லை கொண்ட K-4 என்ற ஒரு நீர்மூழ்கி கப்பல் மூலம் செலுத்தப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தியா தற்போது இரண்டாவது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் மூலமாக கடலில் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது, மேலும் இரண்டு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இஸ்லாமாபாத், Babur-3 மற்றும் Ababeel ஆகிய அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன்கொண்ட ஏவுகணைகள் மூலம் தனது சொந்த சோதனைகளை நடத்தியதன் மூலமாக இந்தியாவின் சமீபத்திய அக்னி ஏவுகணை சோதனைகளுக்கு விடையிறுத்தது.
ஜனவரி 9 அன்று, வெளியில் பெயர் தெரிவிக்கப்படாத ஒரு இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து Babur-3 இன் வெற்றிகரமான சோதனையை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. நீருக்கடியில் செலுத்தக்கூடிய ஒரு ஏவுகணையாக நிறுவப்பட்டு 450 கிலோ மீட்டர் (280 மைல்கள்) தொலைவெல்லை கொண்டதுமான அது கண்டறிதலில் இருந்து தப்பிக்கும் விதமாக கடலுக்கும் நிலத்துக்கும் மிகஅருகே கட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
"பாகிஸ்தானின் அண்டை நாடுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அணு ஆயுத உத்திகள் மற்றும் இடம்பெறச் செய்யும் முறைகளுக்கு ஏற்ற நிதானமான விடையிறுப்பாக" Babur-3 இன் முதல் சோதனை இருந்தது என்று பாகிஸ்தான் இராணுவம் கூறியதுடன், இது இஸ்லாமாபாத்துக்கு "இரண்டாவது தாக்குதலுக்கான திறனை" அளிக்கிறது என்றும் ஊக்கமளித்தது. பாகிஸ்தானின் நிலம் சார்ந்த அனைத்து அணுசக்தி நிலையங்களும் ஒரு எதிரி நாட்டின் "முதல் தாக்குதலிலேயே" அழிக்கப்பட்டுவிட்டதும், மேலும் பெரும்பாலான மக்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டும் இருந்தாலும், அது ஒரு பேரழிவுள்ள அணு ஆயுத தாக்குதலை உருவாக்கும் திறனுடையது.
இந்தியா போன்று இல்லாமல், பாகிஸ்தான் அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, நீருக்கடியில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவே தங்கியிருக்கும் திறன்கொண்டதும், டீசல்-மின்ஆற்றலில் இயங்கக்கூடியதுமான நீர்மூழ்கி கப்பல் Babur-3 ஐ பயன்படுத்தும் நிலைக்கு அது தள்ளப்பட்டது.
ஜனவரி 24 அன்று, 2,200 கிலோ மீட்டர் (1,370 மைல்கள்) தொலைவெல்லை கொண்ட அணு ஆயுத திறனுடைய ஒரு இடைநிலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான Ababeel இன் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. Ababeel பல அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி வெளியீட்டின்படி, இது "உயர் துல்லியத்துடனான பல இலக்குகளை தாக்ககூடியதும், எதிரியின் ராடார்களை பயனற்றுபோகச்செய்யும்" திறனை கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே, போர் வாய்ப்பினை அதிகரிக்கச்செய்வதும், மற்றும் எந்தவொரு போரும் ஒரு அணு ஆயுத மோதலாக மாறுகின்ற வகையிலுமான தீவிர இராணுவ மூலோபாயங்களுக்கு இணக்கமாகவே அவர்களது செயல்பாடுகள் உள்ளதாக பிரகடனப்படுத்தினர்.
கடந்த மாதம் இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்கவிருந்த நாட்களுக்கு இடையில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக ஒரு "இரு-முனை போர்" நடத்துவதற்கான இந்தியாவின் தயார்நிலை குறித்து அவர் தம்பமடித்துகொண்டதுடன், வெறும் 48 மணி நேரங்களுக்குள் இந்திய இராணுவத்தை அணிதிரட்டவும், பாக்கிஸ்தானுக்குள் ஒரு பெரும் அளவிலான தாக்குதலை நடத்தவும் அழைப்பு விடுக்கின்ற ஒரு போர் திட்டமாக இந்திய இராணுவம் முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டத்தை (Cold Start) பின்பற்றியுள்ளதாகவும் அறிவித்தது.
போர் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டம் இருந்ததை இந்திய இராணுவம் நீண்டகாலமாக மறுத்துவருவது மிகவும் ஆத்திரமூட்டக்கூடியதாக உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் பாரம்பரிய படைகளின் வலிமைக்கு இடையில் காணப்படும் நீண்ட பிளவினை சுரண்டுவதே முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. 2001-02ல் நடந்தது போன்று, பிற சக்திகள் இந்திய பாகிஸ்தான் போர் நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் தலையீடு செய்வதற்கு முன்னால் இந்தியா தாக்குதலை நடத்த முடியும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் அது உள்ளது.
இந்திய இராணுவம் முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டத்தை பின்பற்றுவதை ராவத் உறுதி செய்த பின்னர், விரைவில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் அதன் டாங்கிகளின் நிலைநிறுத்துதல்களை விரிவடைய செய்யும் நோக்கம் கொண்டிருப்பதாக இந்தியா அறிவித்தது. மூத்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் IHS Jane's Defence Weekly பத்திரிகைக்கு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் போன்ற எல்லைப்புற மாநிலங்களில், ஏற்கனவே இந்தியா எங்கு 800 முதல் 1,200 வரையிலான முக்கிய போர் டாங்கிகளை (Main battle tanks-MBTs) கொண்ட ஒரு பாரிய படையை கொண்டுள்ளதோ, அங்கு 460 க்கும் மேற்பட்ட ரஷ்யாவின் புதிய "முக்கிய போர் டாங்கிகளை" இந்தியா நிலைநிறுத்தும் என்று கூறினர்.
முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டத்தை குறித்த ராவத்தின் கூற்றுக்கு இஸ்லாமாபாத் கோபத்துடன் விடையிறுத்தது. பாகிஸ்தான் அதிகாரிகள், "இந்தியா பாகிஸ்தான் மீது படையெடுக்கும் பட்சத்தில் இஸ்லாமாபாத் அதன்மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த நேரிடும்" என்று லண்டனை தளமாக கொண்ட Financial Times பத்திரிகைக்கு தெரிவித்தனர். உண்மையில், முன்தயாரிப்பு எதுவுமின்றி தொடக்கும் திட்டம் போன்ற கடுமையான வியூகங்களை இந்தியா பின்பற்றி வருவது பாகிஸ்தான் நாட்டின் சிறிய வழக்கமான படைகளை மூழ்கடித்துவிடும் என்ற அடிப்படையில் தான், பாகிஸ்தான் அதன் "தந்திரோபாய ரீதியிலான" வளர்ச்சி அல்லது போர்களத்தின் அணு ஆயுதங்கள் என்று சொல்லப்பட்டது குறித்தும் நியாயப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கு எதிரான ஒரு இராணுவ மூலோபாய எதிர் சக்தியாக இந்தியாவை கட்டியெழுப்புவதற்கு ஏற்றதாகவுள்ள வாஷிங்டனின் நீண்டகால பிரச்சாரமானது தெற்கு ஆசிய அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் அதிகார சமநிலையை அகற்றவில்லை என்பதும், மேலும் புது தில்லியை ஒரு அதிகரித்த வகையிலான போர்வெறிகொண்ட நிலைப்பாட்டை அனுமானித்துக்கொள்ள ஊக்குவித்துவருகிறது என்பதே இஸ்லாமாபத்திலிருந்து வருகின்ற தொடர்ச்சியான ஒரு குற்றச்சாட்டாக உள்ளது.
வாஷிங்டன் தனது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்ற சீன எதிர்ப்பு கொள்கைக்கு இந்தியாவை பயன்படுத்தம் வகையில் அதன் மீது மூலோபாய உதவிகளை பொழிந்து வந்தது. இதனால் அமெரிக்காவின் அதிநவீன ஆயுத அமைப்பு முறைகளை கொள்முதல் செய்வதற்கு இது அனுமதிக்கப்படுகிறது, மேலும் உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புக்குள் இந்தியாவிற்கென்று ஒரு சிறப்பு அந்தஸ்த்தை உருவாக்குவதன் மூலமாக, இந்தியா நவீன பொதுஅணு சக்தி உபகரணங்கள் மற்றும் எரிபொருளை வாங்குவதற்கும் அனுமதிப்பதுடன், அதன் மூலமாக ஆயுத வளர்ச்சி குறித்த உள்நாட்டு அணுசக்தி திட்டத்தின் மீதான கவனம்குவிப்புக்கும் ஏதுவாகிறது.
Voice of America உடனான சமீபத்திய நேர்காணலில், பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் முக்கிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ், தெற்கு ஆசியாவின் "மூலோபாய ஸ்திரத்தன்மையை" இன்னும் சீர்குலைப்பதற்கு எதிராக வாஷிங்டனை எச்சரித்தார். "நீங்கள் இதுபோன்றதொரு வழியில் (இந்தியாவுடன்) உங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பினையும், ஆயுத ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள ஆரம்பிப்பதனால், எங்களது மூலோபாய ஸ்திரத்தன்மைக்கு சிக்கல் உருவாகும் நிலையில், நாங்கள் வேறு வழியின்றி பதிலடி கொடுக்கவேண்டியதாக இருக்கும், அது இந்த பிராந்தியத்தின் அல்லது உலகின் அமைதிக்கு நன்மையானதாக இருக்காது" என்று "நாங்கள் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறோம்" என்று அஜீஸ் கூறினார்.
வாஷிங்டனின் ஆதரவினால் தைரியமுற்று இந்தியாவிலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ் பாகிஸ்தான் நடவடிக்கைகளை எடுத்துவருவது அணு ஆயுத இலக்குமட்டத்தை அபாயகரமான வகையில் குறைக்கிறது. புது தில்லி, அதன் பங்கிற்கு, பாகிஸ்தான் உள்ளேயோ அல்லது பாகிஸ்தான் மீது குவிக்கும் படைகளுக்கு எதிராக அதன் மூலோபாய ஆயுதகிடங்கை பாகிஸ்தான் பயன்படுத்துமானால் இது ஒரு அணு ஆயுத போர் நடவடிக்கையாக கருதப்பட்டு, அதாவது பாகிஸ்தான் நாட்டின் பெரும் மக்கள் தொகை கொண்ட மையங்களில் கட்டவிழ்த்து விடுகின்ற அணு ஆயுத தாக்குதலை தான் நியாயப்படுத்தும் என்று சமிக்ஞை செய்துள்ளது.
இந்தியாவின் அணு ஆயுத முக்கூற்றுத்தொகுதியினை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தானின் முன்னெடுப்பாக அதன் சொந்த திறனை வளர்த்துக்கொள்வதன் மூலமாக அதன் டீசல் மின்னாற்றலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து  அணு ஆயுத ஏவுகணைகளை விண்ணில் ஏவுவது என்பதும் ஆபத்தை விளைவிக்கும் மற்றொரு அங்கமாக சேர்கிறது.
அமெரிக்க இராணுவ பாதுகாப்பு அமைப்புடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட Stratfor, என்றவொரு உளவு நிறுவனம் இந்திய நீர்மூழ்கி எதிர்ப்பு படைகள், அவற்றின் மரபுவழி போர்முறை பொறுப்புக்களுக்கான அதன் "அணுசக்தி தடுப்புத்திறனின்" அங்கமாக இருப்பதால் பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கமுடியாத நிலை இருக்குமென்று எச்சரிக்கிறது. அதன் விளைவாக, இதனை பாகிஸ்தானின் தளபதிகள் "இஸ்லாமாபாத்தின் கடல் சார்ந்த அணு ஆயுத சக்தியினை நடுநிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக" தமது நீர்மூழ்கி கப்பல்கள் மீதான இந்திய தாக்குதலாக தவறாக புரிந்துகொள்ளக்கூடும் என்பதுடன், மேலும் "இல்லையெனில் ஒரு மரபுவழி மோதலாக இருக்ககூடிய ஒன்றில் அவர்களது அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தலாம்".
By Sampath Perera
28 February 2017

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts