Search This Blog

Monday, 30 January 2017

இங்கிலாந்தின் தெரேசா மே உடனான ட்ரம்பின் சந்திப்பும், அமெரிக்க ஐரோப்பிய மோதலும்

Trump’s meeting with the UK’s Theresa May and the US/European conflict

Image source from internet
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மே இன் எதிர்பார்க்கப்படும் இன்றைய சந்திப்பு ஓர் அரசியல் மோசடியாகும். இது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தொடர்வதில் பிரிட்டன் ஒரு சக்தி வாய்ந்த கூட்டாளியைக் கொண்டிருக்கிறது என்பதையும் மற்றும் ஐரோப்பாவின் ஒரே சந்தை அணுகுதலை இழக்க வேண்டியிருந்தால் அதை ஈடுகட்டுவதற்கு அது அமெரிக்க வணிக உடன்படிக்கை ஒன்றை பெறக்கூடும் என்பதையும் காட்டுவதற்காக ஆகும். ட்ரம்பின் ஆதரவானது, அனேகமாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உடனான பேரம்பேசல்களில் மே இன் கரங்களையும் பலப்படுத்தக் கூடும்.
இது அமெரிக்காவிற்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் வேகமான சீரழிவுக்குரிய ஒரு நடவடிக்கையாகும், அத்துடன் மே இன் விஜயம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி குரல்களிடம் இருந்து கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைக் குறித்த இரண்டாண்டு கால பேரம்பேசல்களை தொடங்கி வைக்கும் 50ஆவது ஷரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, மே வாஷிங்டனுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டின் வெகுஜன வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றிய அணுகுதலை இழந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செல்வாக்கான அடுக்குகள் அதிலேயே தங்கியிருப்பதை ஆதரித்திருந்த நிலையில், பிரிட்டன் வெளியேறுவது மீது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஆழமாக பிளவுபட்டுள்ளது. இந்த பிளவை இன்னும் அதிகரிக்கும் விதத்தில், மே கூறுகையில், பிரிட்டன் வெளியேற்றத்தை "ஐரோப்பிய ஒன்றிய உடைவு சம்பந்தமான ஒரு முடிவாக" பார்க்கவில்லை என்று ட்ரம்பிடம் அவர் தெரிவிக்க இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இதுபோன்ற வாக்குறுதிகளுக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருப்பதாக யாரும் நம்ப முடியாது. ட்ரம்ப் அவரது பதவியேற்பு விழா உரையில் “முதலிடத்தில் அமெரிக்கா" பாதுகாப்புவாத கொள்கையைச் சூளுரைத்து பேசுகையில், அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்திலிருந்து உடைத்துக் கொண்டு தண்டிக்கும் விதமான வரிவிதிப்புகளுக்கு ஆதரவளிப்பது என்பது, “அதனால் பாதிக்கப்படுபவர்களும், குறிப்பாக சீனாவும், அனேகமாக பதிலடி நடவடிக்கை எடுக்கலாம் என்பதே அர்த்தப்படுத்துகிறது… திரு ஜி இன் சீனா, ஐரோப்பியர்களுடன் மற்றும் ஏனைய ஆசிய சக்திகளுடன் கூட்டுறவாக விளங்கும் அமெரிக்காவுக்கு பிரதியீடு ஆகாது. அனைவருக்குமான சுதந்திர வர்த்தக கொள்கை பொறிந்து போவதே பெரும்பாலும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பாக இருக்கும்,” என்று மார்டின் வொல்ஃப் பைனான்சியல் டைம்ஸ் இல் எச்சரித்தார்.
சக கட்டுரையாளர் பிலிப் ஸ்டீபன்ஸ் ட்ரம்ப் குறித்து அறிவிக்கையில், “ஐரோப்பிய திட்டத்தை மிகப்பெரியளவில் சிதறிடப்பதற்கான" அவர் ஆதரவு உட்பட “சுதந்திர வர்த்தகம், சுற்றுச்சூழல் மாற்றம், நேட்டோ, ரஷ்யா, ஈரான் என ஒவ்வொரு நடவடிக்கை மீதான அவரது கண்ணோட்டங்கள்,” "பிரிட்டனின் தேசிய நலன்களுடன் முரண்படுகிறது,” என்றார்.
கார்டியனின் மார்ட்டி கெட்லே இன் கருத்துக்கள் அனேகமாக மிகவும் அசாதாரணமானதாக இருக்கலாம், நாஜி ஜேர்மனி தொடர்பான சமாதானப்படுத்தும் கொள்கையை சாடையாக குறிப்பிட்டு அவர் எழுதினார், “அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை வழங்கும் ட்ரம்ப் கையெழுத்திட்ட ஒரு காகிதத்தை காட்டினால் அது ஒரு வெற்றியாக பார்க்கப்படுமென மே கருதினால், அவர் தவறாக இருக்கிறார். அது அவரை புதிய மார்கரெட் தாட்சராக ஆக்காது மாறாக புதிய நெவில் சேம்பர்லினாகவே ஆக்கும்.”
நேட்டோ மூலமாக ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு நங்கூரமாக மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு உத்தரவாதமளிப்பவராக, அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய பாத்திரத்தின் முழுமையான முடிவையே, ட்ரம்பின் ஏறுமுக நிலை குறிப்பதாக இப்போது பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்குள் பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவிற்கான ஒரு பொருளாதார எதிர்விரோதியாக, ஜேர்மன் கருவியாக வர்ணித்துள்ளதுடன், அதிலிருந்து வெளியேறுவதற்கு ஏனைய நாடுகளும் இங்கிலாந்தை முன்னுதாரணமாக பின்பற்றும் என்று அனுமானித்துள்ளார்.
இது ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களை ஓர் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ விடையிறுப்பை நெறிப்படுத்த தாவுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.
ஜேர்மனியில், தன்னைத்தானே எதிர்கால வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் வைத்துக்காட்டும் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல் அறிவிக்கையில், “இதுதான் ஐரோப்பாவை பலப்படுத்துவதற்குரிய நேரம்… ஆசியா மற்றும் தென் அமெரிக்காவுடன் ட்ரம்ப் ஒரு வர்த்தக போர் தொடங்கினால், அது நமக்கு வாய்ப்புகளை திறந்துவிடும்,” என்றார்.
பிரான்சில் இந்த வசந்தகால ஜனாதிபதி தேர்தலுக்கான மத்திய-வலது வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன், “டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா, விளாடிமீர் புட்டினின் ரஷ்யா மற்றும் ஜி ஜின்பிங்கின் சீனாவிற்கு இடையே" ஐரோப்பாவின் இடத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதன் மீது கொன்ராட் அடினோவர் (Konrad Adenauer) அமைப்பிற்கு ஒரு உரை வழங்க திங்களன்று பேர்லின் விஜயம் செய்தார். மிகவும் முரண்பாடாக, ரஷ்யாவை ஐரோப்பாவின் "ஒரு பிரதான பங்காளியாக" ஏற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு இராணுவ பயன்படுத்தல்களுக்கான ஒரு கூட்டு வரவு-செலவு திட்டக்கணக்குடன் ஓர் ஐரோப்பிய இராணுவ சமூகம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழ்ந்த ஒருங்கிணைவை அவர் வலியுறுத்தினார். அவர் போட்டியாளரான, முன்னாள் சமூக ஜனநாயக கட்சியாளரும், இப்போது சுயேட்சையுமான இமானுவெல் மாக்ரோன் பைனான்சியல் டைம்ஸில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து இதே சேதியை வழங்கினார், மாஸ்கோ உடனான ஒரு நல்லிணக்கம் மீதான எந்தவொரு அறிவுறுத்தலை மட்டும் தவிர்த்துக் கொண்டார்.
சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவிற்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள், பொதுவாக முதலாளித்துவ வர்க்க விமர்சகர்களால், அவருக்கு முன்பிருந்தவர்கள் பின்பற்றிய கொள்கைகளில் இருந்து விளக்கமுடியாத ஒரு உடைவாக கையாளப்படுகிறது. இது அமெரிக்காவில் அவர் எவ்வாறு தலைமைக்கு வந்தார் என்பதை விளங்கப்படுத்துவதை மட்டும் விட்டுவிடவில்லை, மாறாக இதுபோன்ற தீவிர-வலது இயக்கங்கள் ஐரோப்பா எங்கிலும் எழுந்துள்ளன என்பதையும் தவிர்த்துவிடுகிறது. பிரான்சில், ஜனாதிபதி தேர்தலின் முன்னணி இடத்தில் மரீன் லு பென்னின் தேசிய முன்னணி உள்ளது மற்றும் நெதர்லாந்தில் மார்ச்சில் பொது தேர்தல் வரவிருக்கின்ற நிலையில் சுதந்திர டச் கட்சியின் கிரீட் வில்டர்ஸ் (Geert Wilders) முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
அதீத தேசியவாதம், அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை பயன்படுத்த ஆரம்பிப்பது என்பது, 2008 பொறிவு அறிகுறி காட்டிய ஒரு பொதுவான உலக முதலாளித்துவ உடைவின் நிலைமைகளின் கீழ், தவிர்க்கவியலாமல் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய நிலைப்பாட்டிலிருந்து வீழ்ச்சி அடைந்து வருவதிலிருந்து பெருக்கெடுக்கிறது. சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர், அமெரிக்கா இராணுவ பலத்தை வலியுறுத்துவதன் மூலமாக அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிர்நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், வாஷிங்டன் தொடுத்த போர்கள் பேரழிவுகரமானவையாக நிரூபணமாகி உள்ளன, அதேவேளையில் அனைத்திற்கும் மேலாக ஒரு போட்டி சக்தியாக சீனாவின் வளர்ச்சியில் எடுத்துக்காட்டுகின்றவாறு, அதன் பொருளாதார இடம் தொடர்ந்து சீரழிந்து வந்துள்ளது.
இது, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பொருளாதார மற்றும் அரசியல் இயங்குமுறைகளது வலையமைப்பின் மையத்தில் அமெரிக்கா இனியும் தன்னைத்தானே நிறுத்தி கொள்ள இயலாமல், அதற்கு விருப்பமுற செய்யவிடாமல் வைத்துள்ளது, இவை சவாலுக்கிடமற்ற உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் உந்துதல் மீது தடைகளைத் திணிப்பதாக பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ மேலாத்திக்க வலியுறுத்தல், அமெரிக்காவின் பிரதான ஐரோப்பிய விரோதியாக ஜேர்மனி மீது விரோதம் அதிகரித்து வருவதுடன் சேர்ந்து, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டிற்கும் எதிராக போர் அச்சுறுத்தல்களாக உருப்பெற்று வருகிறது. அதிகரித்தளவில், அமெரிக்கா அக்கண்டம் முழுவதிலும் பிரித்து ஆளும் ஒரு கொள்கையைப் பின்பற்றி வருகிறது.
உலக மேலாதிக்க சக்தியாக அதன் இடத்தை காப்பாற்றுவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளால் ஏற்பட்டுவரும் உலக அரசியல் நிலைகுலைவு, ஐரோப்பிய அதிகாரங்களை அமெரிக்காவுடன் மோதலுக்குள் உந்துகிறது. இது வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதலுக்கான பாதையாக உள்ளது.
ட்ரம்பை நோக்கிய மே இன் பயணத்திற்கும், இத்தகைய ஆழ்ந்த மற்றும் தீவிரமடைந்து வரும் மோதல்கள் தீர்க்கப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில்—அதாவது பூகோளரீதியில் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதாரத்திற்கும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளிலும், மற்றும் உலகளாவிய உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும், உற்பத்தி கருவிகளின் தனிச்சொத்துடைமை மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனிப்பட்ட இலாப திரட்சிக்கு அதை அடிபணிய வைப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளன.
இதே முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குள் உந்தி வருகிறது. ஒவ்வொரு இடத்திலும், வேலைகள், கூலிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அழிக்கப்படுவதானது வர்த்தக போர் மற்றும் இராணுவ ஆக்ரோஷத்துடன் கை கோர்க்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்படுவதன் மூலமாக மட்டுமே, சிக்கன திட்டம், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் போரை முடிவுக் கொண்டு வர முடியும்.
Chris Marsden
27 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/tmay-j30.shtml

Saturday, 28 January 2017

தென் சீனக் கடல் குறித்த ட்ரம்ப்பின் மிரட்டல்கள் அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரிக்கின்றன

Trump threats on South China Sea heighten risk of nuclear war

பதவியேற்று சில நாட்களில், ட்ரம்ப் நிர்வாகமானது இராணுவ மோதல்கள் மற்றும் போருக்கு அச்சுறுத்துகின்ற வகையில் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான ஒரு மோதலுக்கு பாதை அமைத்திருக்கிறது.
வெளியுறவுச் செயலர் பதவிக்கு நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் எக்ஸான் மொபில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான றெக்ஸ் ரில்லர்சன், தென் சீனக் கடலில் சீனாவால் கட்டப்பட்டு வருகின்ற குறுந்தீவுகளுக்கு, சீனாவின் அணுகலை அமெரிக்கா தடை செய்யும் என முன்னர் விடுத்திருந்த திட்டவட்டங்களை, செவ்வாயன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஊடகச் செயலரான சீன் ஸ்பைசர் ஆதரித்துப் பேசினார்.
தனது முதல் முழு ஊடகச் சந்திப்பில், ஸ்பைசர் இவ்வாறாய் வெளிப்படையாய் அறிவித்தார்: “நமது நலன்கள் அங்கே பாதுகாக்கப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யவிருக்கிறது.” சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளைக் குறிப்பிட்டு அவர் தொடர்ந்து கூறினார்: “அத்தீவுகள் முறையாக சீனாவின் பகுதியா உண்மையில் சர்வதேச நீர்ப்பரப்பின் பகுதியா என்பது குறித்த கேள்வி அது, அவ்வாறாயின், சர்வதேசப் பிராந்தியங்கள் ஒரு நாட்டினால் கைப்பற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்யவிருக்கிறோம்.”
ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களது பொறுப்பற்ற தன்மையானது வாஷிங்டன் போஸ்டின் செய்தித்தலைப்பின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டதாக இருந்தது: “ட்ரம்ப் தென் சீனக் கடலில் போருக்கு தயாராய் இருக்கிறாரா, அல்லது அவரது அணி தெளிவற்றுப் பேசுகிறதா?” தெளிவற்ற அல்லது தவறாகக் கூறிய கருத்துகள் தான் பிரச்சினை என்பதாக வாஷிங்டன் போஸ்ட் கூறிய வேளையில், ஸ்பைசரின் கருத்துகள் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பாக ரில்லர்சன் கூறிய கருத்துக்களுடன் முழுமையாக ஒரேவரிசையில் இருந்தன.
அவரது நாடாளுமன்ற ஊர்ஜிதப்படுத்தல் அமர்வின் போது, ரில்லர்சன், சீனாவின் மீது கடுமையாக தாக்கினார், தென் சீனக் கடலில் அதன் நில மறுஉரிமை நடவடிக்கைகள் “ரஷ்யா கிரீமியாவை எடுத்துக் கொண்டதைப் போன்றது” என்று அறிவித்தார். சீனாவின் தீவுக் கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்த அவர், “அந்தத் தீவுகளுக்கான அணுகல் அனுமதிக்கப்படப் போவதில்லை” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.
ஓரளவுக்கு குறைந்தபட்சம், பிராந்திய உரிமைகோரல் மோதல்களில் எந்த நிலைப்பாடும் எடுக்காமல், ஆனால் தென் சீனக் கடலில் “தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திர”த்தை உறுதி செய்வதில் தனது “தேசிய நலன்” இருந்ததாக அறிவித்திருந்த, வாஷிங்டனின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஒரு தீர்மானகரமான மாற்றத்தைக் குறிப்பதாக இந்த கருத்துக்கள் இருக்கின்றன. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், மூன்று சந்தர்ப்பங்களின் போது, சீனத் தீவுகளைச் சுற்றி 12 கடல் மைல் பிராந்திய சுற்றுவரம்புகளுக்குள்ளாக ஆத்திரமூட்டும் வகையில் ஏவுகணை அழிப்புக் கப்பல்களை அமெரிக்க கடற்படை அனுப்பியிருந்தது.
இத்தீவுகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை ட்ரம்ப்பின் நிர்வாகம் நேரடியாக சவால் செய்கிறது. அமெரிக்கா சீன அணுகலை தடை செய்யும் அதன் அச்சுறுத்தலை எவ்வாறு முன்னெடுக்க இருக்கிறது என்று கேட்டபோது, சூழ்நிலை அபிவிருத்தி காணும்போது “அது விடயமான கூடுதல் தகவல்கள் எங்களிடம் இருக்கும்” என்று ஸ்பைசர் தெரிவித்தார்.
பல்வேறு ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தென் சீனக் கடலில் கடல் வழி மற்றும் வான்வழித் தடைகளை ஏற்படுத்துவது தான் சீனாவைத் தடை செய்வதற்கான ஒரே வழியாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் ஒரு தெளிந்த மீறலாக இருக்கக் கூடிய அத்தகையதொரு நடவடிக்கை, ஒரு போர் நடவடிக்கையாகவே கருதப்படும்.
தென் சீனக் கடலில் இருக்கும் தீவுகள் “சர்வதேசப் பிராந்தியங்கள்” அல்ல, மாறாக பல்வேறு நாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு நீண்டகாலமாக உரிமைகோரல் சண்டைகளுக்கு ஆட்பட்டு வந்திருப்பவை ஆகும். வாஷிங்டனின் சிடுமூஞ்சித்தனமும் கபடவேடமும் திகைப்பூட்டுகின்றன. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தாய்வான் போன்ற உரிமைகோரும் போட்டி நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தீவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அது எந்த ஆலோசனையும் முன்வைக்கவில்லை.
இத்தீவுகள் விடயத்தில் சீனா “சவால் செய்ய முடியாத இறையாண்மை” கொண்டிருப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் நேற்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தது, அத்துடன் “எமது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் எச்சரித்தது. தென் சீனக் கடலில் அமெரிக்காவுக்கு எந்த நேரடியான உரிமைகோரலும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங் “இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க, எச்சரிக்கையுடன் பேசவும் செயல்படவும் வேண்டும்” என்று அமெரிக்காவை வலியுறுத்தினார்.
முன்னதாக சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கம், சீனாவை அதன் தீவுகளை அணுக விடாமல் தடுக்கும் எந்த முயற்சியும் “பெரிய அளவிலான போர்” சம்பந்தப்பட்டதாய் இருக்கும் என்று அறிவித்ததோடு, ரில்லர்சன் “ஒரு பெரும் அணு ஆயுத சக்தியை அதன் சொந்த பிராந்தியங்களில் இருந்து பின்வாங்க வைக்க விரும்புகிறாராயின், அவர் அணுசக்தி மூலோபாயங்கள் குறித்து விடயத் தேர்ச்சி பெறட்டும்” என்றும் ஆலோசனை கூறியது.
ஒரு அணு ஆயுத சக்தியை அச்சுறுத்துவதற்கும் ஒரு அணு ஆயுத மோதல் பற்றவைப்பு அபாயத்தில் இறங்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விருப்பத்துடன் இருப்பதற்கு வெறுமனே வலது-சாரி வாய்வீச்சாளர் டொனால்ட் ட்ரம்ப் அல்லது அவரது நிர்வாகத்தில் இருக்கும் இராணுவவாத மற்றும் பாசிச தனிநபர்களின் கண்ணோட்டம் அல்லது உளவியல்நிலை தான் காரணம் என்று கூறிவிட முடியாது. ட்ரம்ப் அதிகாரத்திற்கு எழுந்தமையானது உலக அரசியலில் பண்புரீதியான ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது என்ற அதேவேளையில், சீனாவுடன் விஸ்வரூபமெடுக்கும் மோதலுக்கான அடிப்படையை ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யே அமைத்துத் தந்திருந்தது. இந்த “முன்னிலை” மூலோபாயத்தின் தலைமை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருப்பாரேயானால், அவரது நிர்வாகமும், பாணியிலும் காலத்திலும் மற்றும் தந்திரோபாயத்திலும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்ற போதிலும், அதே போர்க் கூச்சல் பாதையையே அடிப்படையாகப் பின்பற்றியிருக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதும் அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற “சர்வதேச விதிகளின் அடிப்படையிலான முறை”க்கு சீனாவை கீழ்ப்படியச் செய்ய வைப்பதும் தான் ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யின் நோக்கமாக இருந்தது. ட்ரம்ப்பின் ஆலோசகர்கள் இந்த நோக்கத்தில் உடன்பாடின்மையை வெளிப்படுத்தவில்லை, மாறாக அந்த நோக்கங்களை சாதிப்பதில் “முன்னிலை” மூலோபாயம் தோல்வி கண்டதையே கடுமையாக கண்டனம் செய்து வந்திருக்கின்றனர்.
வர்த்தக மற்றும் நாணயமதிப்பு பிரச்சினைகள், இணைய-வேவு நடவடிக்கைகளாக சொல்லப்படுபவை, மற்றும் வடகொரியா மற்றும் தாய்வான் ஆகிய உலகின் மிக ஆபத்தான தீப்பற்றும் புள்ளிகளில் சில மற்றும் தென் சீனக் கடல் ஆகிய சகல விவகாரங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் மோதும் நோக்கம் கொண்டிருப்பதை ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெளிவாக்கியிருந்தார். போர் அச்சுறுத்தலுடனான தனது கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவத்தை, அதன் அணுசக்தித் திறன் உள்ளிட, பரந்த அளவில் விரிவாக்குவதற்கு அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு அடிப்படையான முக்கிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப்பின் தேர்வானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கு இறுதியாக முறிந்திருப்பதை மற்றும் பொறிந்திருப்பதைக் குறிக்கிறது. ஒபாமாவின் “முன்னிலை”யின் பொருளாதார மூலபாகமாய் இருந்த பசிபிக் கடந்த கூட்டை (TPP) கிழித்தெறியும் ட்ரம்ப்பின் முடிவானது, ”சுதந்திர வர்த்தகம்” மற்றும் பன்முகத்தன்மையின் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கிறது. ட்ரம்பின் “முதலில் அமெரிக்கா” கொள்கையின் அர்த்தம், தண்டனை வர்த்தக நடவடிக்கைகளுக்கு, முதல் நேர்வாய் சீனாவுக்கு எதிராக, திரும்புவதும், இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற 1930களின் “உனது-அண்டைநாட்டை-பிச்சைக்காரனாக்கு” கொள்கைகளுக்கு திரும்புவதும் ஆகும்.
ட்ரம்ப் பதவியில் அமர்ந்து விட்ட பின்னர் அவரது கண்ணோட்டங்களில் கண்ணியம் தோன்றி விடும் என்பதாக உலகெங்கிலும் ஊடகங்களாலும் அரசாங்கங்களாலும் கருதப்பட்டு வந்த ஊகம் திகைப்பாகவும் அச்சமாகவும் துரிதகதியில் மாறிக் கொண்டிருக்கிறது. முக்கிய தலைநகரங்களில், தேசிய நலனை சிறந்த வகையில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கணக்குகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பா அதன் சொந்த நலன்களை வரையறை செய்ய வேண்டும் என ஜேர்மனியின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரான சிக்மார் காப்ரியல் அறிவித்தார், அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தகப் போரை தொடங்குமாயின் ஐரோப்பா சீனாவை நோக்கித் திரும்ப வேண்டும் என்று அவர் சூசகம் செய்தார். சீனாவை நோக்கிய எந்த திருப்பமும், குறிப்பாக ஐரோப்பிய சக்திகளது எந்த திருப்பமும், அமெரிக்காவின் முரட்டுத்தனமான வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தும், அது தன் புவி-அரசியல் வலுநிலை நழுவிக் கொண்டிருப்பதாக உணர்ந்து எண்ணியதை விடவும் விரைவாக செயலில் இறங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும்.
இந்த மாதத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அமெரிக்காவின் பாரம்பரியமான கூட்டாளிகளிடையே சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு முயற்சியில், அமெரிக்காவிற்கு நேர்மாறாய் “தாராளவாத” முதலாளித்துவ வர்த்தக மற்றும் பொருளாதார ஒழுங்கின் பாதுகாவலராக தனது ஆட்சியை முன்வைத்தார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் CSBA (மூலோபாய மற்றும் நிதிநிலை மதிப்பீடுகளுக்கான மையம்) சென்ற வாரத்தில் “சமநிலையைப் பாதுகாத்தல்: அமெரிக்காவின் ஒரு யூரோஆசிய பாதுகாப்பு மூலோபாயம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. யூரோஆசிய நிலப்பரப்பு ஒரு போட்டி சக்தி அல்லது சக்திகளால் மேலாதிக்கம் செய்ய்யப்படுவதை அமெரிக்கா தடுத்தாக வேண்டும் என்று அது அறிவிக்கிறது. “ஐரோப்பாவை அல்லது ஆசியாவை ஒரு ஒற்றை சக்தி மேலாதிக்கம் செய்யும் நிலைக்கு வருமானால், அது அமெரிக்காவை விடவும் கணிசமான அளவில் அதிகமான மனிதவளத்தையும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப செயல்திறனையும் - ஆகவே அதிகமான இராணுவ செயல்திறனையும் - கொண்டதாக ஆகிவிடும். ஆகவே, சாத்தியமானால், அத்தகையதொரு சக்தி எழுவது தடுக்கப்பட்டாக வேண்டும்” என்று அது தெரிவிக்கிறது.
அமெரிக்க நோக்கங்களை சாதிப்பதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட எதுவொன்றையும் அந்த அறிக்கை நிராகரிக்கவில்லை. ”வரம்புபட்ட அணு ஆயுதப் போர் பிரச்சினை குறித்து மறுசிந்தனைக்கு அவசியம் இருக்கிறது” என்று அறிவித்த பின் அது தொடர்ந்து கூறுகிறது: “யூரோஆசிய சுற்றுவட்டமெங்கிலும் பலவிதமான மூலோபாயப் போர் அவசரங்களுக்கும் பதிலிறுப்பு செய்யத்தக்க வண்ணம் அமெரிக்கப் படைகள் தயாரிப்புடன் இருந்தாக வேண்டும். அத்தகையதொரு மோதலை உடனடியாகவும் சாதகமான விதத்திலும் அத்துடன் வருங்காலத்தில் அணு ஆயுதப் பயன்பாட்டை ஊக்கம்குன்றச் செய்யும் வகையிலும் முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமெரிக்க இராணுவம் திறம் படைத்ததாயிருப்பது அமெரிக்காவின் நீண்ட-காலப் பாதுகாப்பிற்கு மிக இன்றியமையாததாக இருக்கக் கூடும்.”
தென் சீனக் கடல் தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலான மிரட்டல்கள், உலகம் ஒரு அணுப் பேரழிவை நோக்கி வேகமெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் கூரிய எச்சரிக்கைகள் ஆகும். ஆயினும் உலக முதலாளித்துவத்தை உலகப் போரின் பாதையில் செலுத்துகின்ற அதே நெருக்கடி தான் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சிக்கான பாதையில் செலுத்துவதாகவும் இருக்கிறது.
இறுதியில் இந்தப் பிரச்சினை, அரசியல் நனவு, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் ஒழுங்கமைப்பு ஆகியவற்றின் மட்டத்தினாலேயே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும், இவை தொழிலாள வர்க்கத்தில் புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதை சார்ந்தவையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே அந்தத் தலைமையாகும், அது மட்டுமே ஏகாதிபத்தியப் போரின் மூலமான முதாலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான ஒர் சர்வதேச இயக்கத்தினைக் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிறது. ICFI மற்றும் அதன் தேசியப் பிரிவுகளில் இணைந்து அவற்றைக் கட்டியெழுப்ப உதவுவதே அவசரஅவசியமான பணியாகும்.
By Peter Symonds
25 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/chin-j28.shtml

Friday, 27 January 2017

ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” பொருளாதார தேசியவாதத்திற்கு சாண்டர்ஸ் ஆதரவளிக்கிறார்

Sanders backs Trump’s “America First” economic nationalism

Image source from internet
“முதலில் அமெரிக்கா” தேசியவாதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனநாயக-விரோத மற்றும் இராணுவாதக் கொள்கைகளுக்கான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பேரணிகள் நடத்திய —ஒரு புதிய அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்புக்கு கிட்டிய பதிலிறுப்பில் அளவிலும் சர்வதேசத் தன்மையிலும் இது முன்கண்டிராத ஒன்றாக இருந்தது— இரண்டு நாட்களின் பின்னர், வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸ் புதிய ஜனாதிபதி மற்றும் அவரது நச்சுத்தனமான பொருளாதார தேசியவாதத்தின் பின்னால் தன்னை ஐக்கியப்படுத்தி நிறுத்திக் கொண்டார்.
திங்களன்று காலை, 12 நாடுகள் பசிபிக் கடந்த உடன்பாட்டு வணிக ஒப்பந்தத்தில் (TPP) இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவு ஒன்றில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதேவேளையில், மெக்சிகோ மற்றும் கனடா உடனான NAFTA (வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துகின்ற தனது சூளுரையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் “அமெரிக்க தொழிலாளிக்கு மிக மகிழ்ச்சிதருவதாக இருக்கும்” என்று அறிவித்த ட்ரம்ப் மற்ற நாடுகளது தொழிலாளர்களுக்கு ஆதாயமளிப்பதாக இருக்கின்ற “அநீதியான வர்த்தகம்” தான் தொழிற்சாலைகளது மூடலுக்கும் அமெரிக்க தொழிலாளர்களது ஊதியங்களின் வீழ்ச்சிக்கும் காரணம் —முதலாளித்துவமும் பெருநிறுவனங்களின் இலாபத்திற்கான இடைவிடாத துரத்தலும் இல்லையாம்— என்பதான கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.
சாண்டர்ஸ் ட்ரம்ப்பை விரைந்து பாராட்டினார், பின்வருமாறு கூறினார், “கடந்த 30 ஆண்டுகளாய், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், சீனா மற்றும் பிற நாடுகளுடன் நிரந்தரமாய் இயல்பான வர்த்தக உறவுகள் ஆகியவை உள்ளிட தொடர்ச்சியான பல வர்த்தக ஒப்பந்ந்தங்களில் நாம் பங்குபெற்று வந்திருக்கிறோம்; இவை கண்ணியமான ஊதியங்களை வழங்கக் கூடிய மில்லியன்கணக்கான வேலைகளை நமக்கு விலையாக வைத்ததோடு ‘கீழ்நோக்கிய ஒரு ஓட்ட”த்திற்கும் காரணமாகின, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கான ஊதியங்களை கீழிறக்கியிருக்கின்றன....
 “அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு உதவக் கூடிய ஒரு  புதிய கொள்கையை கொண்டுவருவதில் ஜனாதிபதி ட்ரம்ப் முழுமூச்சாக செயல்படவிருக்கிறார் என்றால், அவருடன் சேர்ந்து வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியான விடயமே.”
அமெரிக்கத் தொழிலாளியின் ஒரு நண்பராக தன்னைக் காட்டிக் கொள்ளுகின்ற பில்லியனர் வாய்வீச்சாளரின் முயற்சிகளை சாண்டர்ஸ் வழிமொழிவதானது, “அமெரிக்கா எல்லாவற்றுக்கும் மேல்” (“America Über Alles”) என்று சுருக்கமாய் விவரிக்கத்தக்க அடிப்படைக் கருப்பொருளைக் கொண்ட ஒரு பதவியேற்பு உரையை ட்ரம்ப் வழங்கியதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறது. “நமது நடுத்தர வர்க்கத்தின் செல்வம் அவர்களின் வீடுகளில் இருந்து பறிக்கப்பட்டு உலகெங்கிலும் மறுவிநியோகம் செய்யப்பட்ட” நிலையில் “மற்ற நாடுகளை செல்வ வளமாக்கிய” அரசியல்வாதிகளுக்கு எதிராக ட்ரம்ப் கோபம் கக்கினார். இப்போது முதல் “அமெரிக்காவுக்கான முழு விசுவாசம் என்பது தான் நமது அரசியலின் அடித்தளமாக இருக்கும்” என்று அவர் வலியுறுத்தினார்.
பரஸ்பர குரோத நலன்கள் கொண்ட சமூக வர்க்கங்கள் இல்லாத ஒரு ஐக்கியப்பட்ட தேசம் என்கிற கட்டுக்கதையானது, தொழிலாளர்களை தேசப் பதாகையின் கீழ் அவர்களது “சொந்த” முதலாளிகளுடன் கட்டிப் போடுவதன் மூலம், தொழிலாள வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்காய் எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் போலவே, இன்றும், தேசிய ஐக்கியத்திற்கான கோரிக்கைகளும் அந்நியரச்சத்தின் ஊக்குவிப்பும் போர் மற்றும் சர்வாதிகாரத்தின் முன்நிகழ்வுகளாய் இருக்கின்றன.
பெருநிறுவனங்களுக்கு ஆதரவான வர்த்தக ஒப்பந்தங்களை ட்ரம்ப் விமர்சனம் செய்வதற்கும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்கள் முன்னெடுக்கப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நேரெதிராய், இது அமெரிக்கத் தொழிலாளர்களை அவர்களது இயல்பான சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு, அதாவது மெக்சிகோ, சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு, எதிராக நிறுத்துவதற்கான ஒரு பொறியாகும். உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவமானது ஒரு பொதுவான உற்பத்தி நிகழ்முறையில் உலகின் அத்தனை பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களையும் புறவயமாக ஒன்றுபடுத்தி -இதில் அவர்கள் ஒரே நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்- இருக்கிறது. எந்தவொரு நாட்டிலும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தான எந்த ஒரு போராட்டமும், முதலாளித்துவத்திற்கு எதிராய் அனைத்து நாட்டின் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தின் மூலமாக அது வழிநடத்தப்படவில்லை என்றால், வெற்றிகாண இயலாது.
ட்ரம்ப்பின் பில்லியனர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் மிகவும் பிற்போக்குவாதிகள் கொண்ட அமைச்சரவையானது அவரது ஜனரஞ்சக தோற்றத்தின் பின்னால் இருக்கிற எதிர்ப்புரட்சிகர யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தொடங்கி, மெடிக்கேர், மெடிக்கேய்ட் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரையிலும் கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு சமூக ஈட்டத்தையும் அழிப்பதை நோக்கி வெளிப்படையாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு சாண்டர்ஸ் நம்பகத்தன்மையை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர் மற்றும் தாயகப் பாதுகாப்புச் செயலர் பதவிகளுக்கான ட்ரம்ப்பின் தேர்வுகளை ஏற்று சாண்டர்ஸ் வாக்களித்திருக்கிறார். ஓய்வுபெற்ற மரைன் தளபதி ஜேம்ஸ் “முறைத்த பார்வை” மாட்டிஸ் (பாதுகாப்புத் துறை) 2004 ஃபலூஜா முற்றுகையை வழிநடத்திய ஒரு போர்க் குற்றவாளி ஆவார். படுபயங்கர குவாண்டானாமோ விரிகுடா சிறை வளாகத்தை மேற்பார்வை செய்த ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜோன் கெல்லி, மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சுற்றிவளைத்து அவர்களை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புகிற பாதுகாப்புப் படைகளை மேற்பார்வை செய்ய இருக்கிறார்.
சென்ற ஜூலையில், சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் முதனிலைப் போட்டியில் இருந்து விலகி ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவை அறிவித்த சமயத்தில், டொனால்டு ட்ரம்ப் தேர்வாகக் கூடியதைக் காட்டிலும் பயங்கரமான வேறொன்று இருக்க முடியாது என்றார். “பில்லியனர் வர்க்க”த்திற்கு எதிரான ஒரு “அரசியல் புரட்சி”யின் தலைவராகக் கூறிக் கொண்ட இவர், முதனிலைத் தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்த மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், ட்ரம்ப்பைத் தேர்ந்தெடுப்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்குமென்பதால் வோல் ஸ்ட்ரீட்டின் மனதிற்குகந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு தெரிவில்லை என்று கூறியிருந்தார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு சாண்டர்ஸ் ஆதரவளித்தமையானது ட்ரம்ப் “ஸ்தாபகத்திற்கு விரோதமான” ஒரேயொரு வேட்பாளராக தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்கும் இரண்டு பெரு வணிகக் கட்சிகளாலும் மேற்பார்வை செய்யப்பட்டு ஒபாமாவின் கீழ் வேகம் பெற்றிருந்த சமூக அசமத்துவத்தின் வளர்ச்சி தொடர்பான மக்களின் கோபத்தை சுரண்டிக் கொள்வதற்கும் களத்தைத் திறந்து விட்டது.
சாண்டர்ஸின் சரணாகதியென்பது அவரது சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத அரசியலின் தர்க்கரீதியான விளைபயனாகும். அவரது வேலைத்திட்டம், சோசலிசத்தன்மை கூட வேண்டாம், ஒரு உண்மையான இடது-சாரி தன்மையைக் கூட ஒருபோதும் கொண்டிருந்தது கிடையாது. வோல் ஸ்டீரிட் மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சிக்கான ஒரு பாதுகாப்பு வால்வாகவே அவர் பல தசாப்தங்களாய் செயல்பட்டு வந்திருந்தார்.
தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான இயக்கத்திற்கு எதிரான வகையிலும் அதனால் மிரட்சியடைந்தும், சாண்டர்ஸ், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் தொழிலாளர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பெருநிறுவன-அரசாங்கத் தாக்குதலிலான தனது உடந்தையை நியாயப்படுத்துவதற்கும் பொருளாதார தேசியவாதத்தைப் பயன்படுத்துகின்ற, தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தன்னை கூட்டுச் சேர்த்துக் கொண்டுள்ளார். ட்ரம்ப்பின் தேர்வுக்கு தொழிற்சங்கங்கள் அளித்த பதிலிறுப்பின் சிகரமாய், ஐக்கிய எஃகுத்தொழிலாளர் சங்க தலைவரான லியோ ஜெரார்டு TPP குறித்த ட்ரம்ப்பின் நடவடிக்கையைப் பாராட்டினார், ”உற்பத்தித் துறைக்கு புத்துயிரூட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கின்ற வாக்குறுதியளிக்கப்பட்ட, தொழிலாளர்-ஆதரவு, வருவாய்-வளர்ச்சி-ஆதரவு திட்டநிரலின்” தொடக்கமாக இது இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். “நடப்பு நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்வதை” தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கியிருப்பதாக அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
ஹிலாரி கிளிண்டன் தோற்றுவிட்ட உடனேயே, சாண்டர்ஸ், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் எலிசபத் வாரென் போன்ற “முற்போக்கு” ஜனநாயகக் கட்சியினர் ஒரு ஊழிக்காலம் குறித்த தங்களது முன்கணிப்புகளில் இருந்து பின்வாங்கி ட்ரம்ப்புடன் குலாவத் தொடங்கி விட்டனர்.
சாண்டர்ஸின் உதாரணம் அமெரிக்காவில் நடுத்தர வர்க்க “இடது” அரசியலின் தன்மை குறித்த ஒரு படிப்பினை ஆகும். இத்தகைய அரசியல் சந்தர்ப்பவாதம் அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் அமைப்புக்கு வெளியில் சிந்திக்கும் திறனற்றதாகும். ஒரு “கூட்டணி” குறித்து கோடுகாட்டும்போதே கோட்பாடான அரசியல் குறித்த எந்த நடிப்பும் கைவிடப்படுகிறது. அவர்களுக்கு ஒரேயொரு கண்டிப்பான விதி மட்டும் தான்: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான மார்க்சிஸ்டுகளின் போராட்டத்திற்கும் தொழிலாளர்களை சமூகத்தை புரட்சிகரமாக உருமாற்றுவதிலான அவர்களது முன்னிலைப் பாத்திரம் குறித்து நனவுடையவர்களாக்குவதற்கான போராட்டத்திற்கும் முழுமுதலான எதிர்ப்பு இருக்க வேண்டும்.
அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ட்ரம்ப்புக்கு எழுந்திருக்கக் கூடிய பாரிய எதிர்ப்பானது சமூக அசமத்துவம் மற்றும், பாசிசம் மற்றும் போர் அபாயம் ஆகியவை குறித்து எல்லைகள் கடந்த பொதுவான கவலைகளின் ஒரு வெளிப்பாடே ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி காண்பதன் ஏககாலத்தில் இது நிகழ்கிறது, ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் போருக்கான மறுஆயுதபாணியாகல் ஆகியவற்றின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளுக்கு மாற்ற முனைகின்ற நிலையில் இந்த வர்க்கப் போராட்டம் இன்னும் தீவிரம் அடையவிருக்கிறது.
இந்த எதிர்ப்பை, ட்ரம்புக்கு எதிராக மட்டுமல்லாமல் அவரை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவுமான, ஒரு நனவான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்வதற்கு சந்தர்ப்பவாத அரசியலின் அத்தனை வடிவங்களுடனும் ஒரு தீர்மானகரமான முறிவு அவசியமாக இருக்கிறது.
தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கிய பாதை ஜனநாயகக் கட்சியை இடது நோக்கித் தள்ளுகிற அல்லது ஏதோ வகையான “இடது” தேசியவாத அரசியலை உருவாக்குவதற்கான நம்பிக்கையற்ற முயற்சியில் இல்லை. தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் அத்தனை வடிவங்களும் நிராகரிக்கப்பட வேண்டும், முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளில் இருந்தும் அரசியலில் இருந்தும் முற்றிலும் சுயாதீனப்பட்டும் அவற்றுக்கு எதிரான வகையிலும், ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
By Jerry White
24 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/sand-j26.shtml

Wednesday, 25 January 2017

ட்ரம்ப்பின் பாசிச வசைமாரி: மூன்றாம் உலகப் போருக்கான பாதை

Trump’s fascistic diatribe: On the road to World War III

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியாக பதவியேற்கும் சமயத்தில் வழங்கிய உரைக்கு இழிவில் இணையானதாக அமெரிக்க வரலாற்றில் ஏதுமில்லை. அது ஒரு வன்மையான, தேசியவாத சொற்பொழிவாக, தெளிவான பாசிச அர்த்தங்களை கொண்டிருந்தது. “முதலில் அமெரிக்கா” என்பதே தனது வேலைத்திட்டமாக பிரகடனம் செய்த ட்ரம்ப், உலகத்தின் மற்றைய ஏனைய பகுதிகள் பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தனது கோரிக்கைகளுக்கு கீழ்ப்படியாத பட்சத்தில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அச்சுறுத்தினார்.
ஒரு நிர்வாகம் ஆரம்பிக்கின்றபோது அந்த முயற்சி எத்தனை வெறுமையாக, குழப்பமானதாக அல்லது கபடவேடமாக இருந்தபோதிலும் அது எந்த பொதுவான இலட்சியங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதும், அவற்றுக்கு சற்று சகலவியாபக முக்கியத்துவத்தை கொடுக்க முயலுவதும் தான் பொதுவாக “பதவியேற்பு உரை”யாக இருக்கும் என்ற அர்த்தத்தில் இந்த உரை முற்றிலும் அப்படியான ஒன்றாக இருக்கவில்லை.
ஒரு சில விடயங்களில், மிகப் பிரபலமாக ஆபிரகாம் லிங்கனின் பதவியேற்பு உரை காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றதோடு ஒரு அரசியல் மைல்கல்லாகவும் ஆனது. நவீன சகாப்தத்தில், பிராங்ளின் ரூஸ்வெல்ட், பெருமந்தநிலையின் மத்தியில், அமெரிக்க மக்கள் “தம்மை தவிர வேறொன்றையும் பற்றி அச்சப்பட ஒன்றுமில்லை” என்று அறிவித்தார்.
ட்ரம்ப்பின் செய்தியோ அதற்கு நேரெதிராய் இருக்கிறது: ”நாம் உலகத்தைக் கண்டு அஞ்சுகிறோம், ஆனால் ஒட்டுமொத்த உலகமும் நம்மைக் கண்டு அஞ்சும்படி செய்யப்பட்டாக வேண்டும்.”
ஒரு “ஜனாதிபதி பதவி”க்கான ட்ரம்ப்பாக அவர் உண்மையில் பதவியேற்று விட்டார் என்றால் அவரின் குறிப்புகளின்  உள்ளடக்கம் மாற்றமடைந்து விடும் என்ற கருத்து வெகுவிரைவில் துரத்தியடிக்கப்பட்டு விட்டது. அவர் ஆவேசமாகத் தோன்றினார், முழங்கினார். அவரது குரல் தொனியில் இருந்தது கோபமான கூச்சல் மட்டுமே. இந்த உரை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுப்பாட்டில்-இல்லாத முன்கோபக்காரர் என்பதை சமிக்கையளித்து உலகுக்கு அதிர்ச்சியளித்தது.
”சுதந்திர உலக”த்தின் தலைவர்களாக காட்டிக் கொண்ட அல்லது உலக அபிவிருத்தியில் அமெரிக்காவுக்கு ஒரு பங்கு இருந்ததாகக் காட்டிக் கொண்ட கடந்த நூற்றாண்டின் அமெரிக்க ஜனாதிபதிகளை போலல்லாமல், ட்ரம்ப், அத்தனை வெளிநாடுகளையும் பொருளாதார எதிரிகளாக சித்தரித்ததோடு அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கும் அந்நாடுகளின் மீது குற்றம் சுமத்தினார். ”நமது பொருட்களைத் தயாரிப்பது, நமது நிறுவனங்களை திருடுவது மற்றும் நமது வேலைகளை அழிப்பது என பிற நாடுகளின் அழிவுகரமான நடவடிக்கைகளில் இருந்து நமது எல்லைகளை நாம் பாதுகாத்தாக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
பென்சில்வேனியா, ஓஹியோ, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற பொருளாதாரரீதியாக சீரழிக்கப்பட்டிருந்த தொழிற்துறை மாநிலங்களில், தொழிற்சாலை நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமூக அழிவை சிடுமூஞ்சித்தனத்துடன் சுரண்டிக் கொண்டும், இந்த நெருக்கடிக்கு பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் மோசடியான தீர்வை முன்வைத்தும் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி கண்டிருந்தார்.
இதுதான் அவரது பதவியேற்பு உரையின் பிரதான கருப்பொருளாய் இருந்தது, அவர் கூறினார், “அமெரிக்க தொழிற்துறையை பலிகொடுத்து வெளிநாட்டு தொழிற்துறைகளை நாம் வளப்படுத்தி வந்திருக்கிறோம்... அமெரிக்காவின் உள்கட்டமைப்பு சீர்செய்யமுடியாத நிலைக்குள்ளும் சிதைவுக்குள்ளும் விழுந்திருந்த சமயத்தில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நாம் வெளிநாடுகளில் செலவிட்டு வந்திருக்கிறோம். மற்ற நாடுகளை நாம் செல்வந்த நாடுகளாக்கியிருக்கும் அதேநேரம் நமது நாட்டின் செல்வமும், வலிமையும், நம்பிக்கையும் கரைந்து காணாமல் போயிருக்கிறது.”
ட்ரம்ப் தனது பேரினவாத முன்னோக்கை இந்த வாக்கியத்தைக் கொண்டு சுருங்கக் கூறினார்: “நமது நடுத்தர வர்க்கத்தின் செல்வம் அவர்களது வீடுகளில் இருந்து பறிக்கப்பட்டு உலகெங்கிலும் மறுவிநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.” இது உண்மையல்ல! உண்மையில், உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட செல்வம்தான் திருடப்பட்டு “மறுவிநியோகம் செய்யப்பட்டிருக்கிறது”. ஆனால் இது வெளிநாடுகளுக்கு அல்ல. ட்ரம்ப் மற்றும் அவரது அமைச்சரவையில் பெரும்பான்மையாக இருக்கும் பில்லியனர்கள் மற்றும் பல-மில்லியனர்கள் உள்பட நிதிப் பிரபுக்களது ஒரு சொற்ப எண்ணிக்கையிலான உயரடுக்கை கொண்ட அமெரிக்க முதலாளிகளால் தான் அது கைப்பற்றப்பட்டிருக்கிறது.
1930களில் பெருமந்தநிலையை உருவாக்கிய இலாப அமைப்புமுறை நெருக்கடியின் நாசகரமான பின்விளைவுகளுக்கு, முதலாளிகள் மீதல்லாமல், யூதர்கள் மீது பழிபோட்டதுதான் ஹிட்லரின் “பெரும் பொய்” ஆக இருந்தது. ட்ரம்ப்பின் “பெரும் பொய்” 2008 இல் வெடித்த பொருளாதார நெருக்கடி தொடர்பான வெகுஜன கோபத்தைத் திசைதிருப்புவதற்கு ஒரு மாறுபட்ட பலியாட்டை முன்வைக்கிறது, ஆயினும் இதுவும் அதே அளவுக்கு மோசடியானதும் பிற்போக்குத்தனமானதுமே ஆகும்.
1930களில் ஜேர்மனியில் போலவே, பொருளாதார தன்னிறைவு மற்றும் இராணுவ விரிவாக்கம் ஆகியவற்றின் மூலமாக தேசிய மகத்துவத்தை மீட்கும் முன்னோக்கு தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் பெருக்கமானது அமெரிக்காவின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு வன்முறையான தீர்வைக் காண்பதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு செய்துவருகின்ற முயற்சியில் இருந்தே எழுகின்றது என்ற சோசலிச சமத்துவக் கட்சியால் முன்வைக்கப்படும் முன்னோக்கிற்கான ஒரு நேரடியான ஊர்ஜிதப்படுத்தலாக ட்ரம்ப்பின் உரை அமைந்திருக்கிறது.
ட்ரம்ப்பின் உரையானது முழுக்க முழுக்க பாசிச வார்த்தைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்த ஒரு மொழியாக இருந்தது. அவரின் தலைமை அரசியல் உதவியாளரும் “வெள்ளை தேசியவாதிகள்”, அதாவது வெள்ளை மேலாதிக்கவாதிகள், யூத-எதிர்ப்பாளர்கள் மற்றும் நவ-நாஜிக்களது ஒரு புகலிடமாய்த் திகழ்ந்த Breitbart News இன் முன்னாள் தலைவருமான ஸ்டீபன் கே.பனானின் உதவி இதில் அவருக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
”நாம் ஒரே இதயத்தை, ஒரே தாயகத்தை, மற்றும் ஒரே மகத்தான தலைவிதியை பகிர்ந்து கொள்கிறோம்” என்று புதிய ஜனாதிபதி அறிவித்தார். ”அமெரிக்காவிற்கு ஒரு முழுமையான விசுவாசத்தை” கோரிய அவர் “நமது இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்கப் பிரிவுகளின் மகத்தான ஆண்கள் மற்றும் பெண்களை” பாராட்டினார், “ஒரு புதிய தேசியப் பெருமித”த்திற்கு அழைப்பு விடுத்தார், அத்துடன் “நாம் அனைவர் சிந்தும் இரத்தமும் தேசபக்தர்களது ஒரே சிவப்பு இரத்தம்” என்று கூறி முடித்தார்.
”இந்த பூமியின் முகத்தில் இருந்து நாம் அகற்றவிருக்கின்ற தீவிரப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத”த்தை அழிப்பதற்கு அவர் அழைப்புவிட்ட இரத்தம் சூடேறச் செய்யும் சூளுரையானது, மத்திய கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த முஸ்லீம் உலகின் பரந்த மக்களால், சுமார் 1.6 பில்லியன் மக்களால், நியாயமான வகையில், ஒரு அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதில் இருந்து தடை செய்யப்படவிருக்கிறார்கள் என்பதை ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
ட்ரம்ப்பின் உரையானது பெய்ஜிங், மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் மட்டுமல்லாது பேர்லின், பாரிஸ், லண்டன் மற்றும் டோக்கியோவிலும் கூட ஒரு போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. “அனைத்து தேசங்களுக்குமே தமது நலன்களை முதன்மையாக நிறுத்தும் உரிமை இருக்கிறது” என்று அவர் கூறிய போதே, சந்தைகளுக்காகவும், கச்சாப் பொருட்கள் மற்றும் மலிவு உழைப்பு வளங்களுக்காகவும் மற்றும் முக்கியமான மூலோபாய நிலைகளுக்காகவும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளுடையே ஒன்றையொன்று கடித்துத் தின்னும் ஒரு நாய்ச்சண்டையின் தொடக்கத்தை அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். இந்த சண்டையின் தடுத்து நிறுத்த முடியாத தர்க்கம் உலகப்போருக்கு இட்டுச் செல்வதாகும்.
இராணுவ விரிவாக்கம் மற்றும் அதீத தேசியவாதம் ஆகியவை கொண்ட ட்ரம்ப்பின் கொள்கையானது அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மிக அபாயம் அறிவிக்கும் தாக்கங்களை கொண்டதாகும். வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ எந்தவித எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ள தயாரில்லாத ஒரு இரக்கமற்ற நிதி வெகுசிலரணிக்காக அவர் பேசுகிறார். உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிராக அணிதிரட்டப்படுகின்ற ஒரு அமெரிக்கக் கோட்டைக்கான அவரது அழைப்பு அத்தனை உள்நாட்டு எதிர்ப்பையும் ஒடுக்குவது என்ற அர்த்தமுடையதாகும்.
பதவியேற்புரைகளில் மரபாக இருக்கக் கூடிய ஜனநாயக வார்த்தையாடல்கள் எதுவும் ட்ரம்ப்பின் உரையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் நடைமுறைக்கான எந்த பாராட்டு மொழிகளும் இல்லை, தனக்கு வாக்களிக்காத பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கு எந்த அழைப்பும் இல்லை, தன்னை எதிர்த்தவர்களுக்கு அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்பதற்கான எந்த மறுஉறுதியளிப்பும் இல்லை, “அனைத்து மக்களின்” ஜனாதிபதியாக இருப்பதற்கான எந்த உறுதிமொழியும் இல்லை. ஜனநாயகக் கட்சியின் போட்டி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விட சுமார் மூன்று மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்று, மொத்தத்தில் வெறும் 44 சதவீதம் வாக்குகள் மட்டுமே தான் பெற்றிருந்ததை ஒப்புக் கொள்ளும் ஒரு வசனமும் கூட அங்கு இல்லை.
அதற்கு நேர்மாறாக, “அரசியல்வாதிகள்” என்றும் “ஸ்தாபகம்” என்றும் அடையாளம் காட்டப்படுகிற “நமது தேசத்தின் தலைநகரில் இருக்கக் கூடிய ஒரு சிறிய குழு”வை, வேறு வார்த்தைகளில் சொன்னால், கேபிடல் கட்டிடத்தின் மேற்கு முனையில் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கக் கூடிய நாடாளுமன்றவாதிகள், செனட்டர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட ஒவ்வொருவரையும், அவர் கண்டனம் செய்தார். அவர்களிடம் இருந்து அதிகாரம் பறிக்கப்படும் ஏனென்றால் “வாஷிங்டன் டிசியில் இருந்து அதிகாரத்தை நாங்கள் இடமாற்றம் செய்து மீண்டும் மக்களாகிய உங்களுக்கே அளிக்கிறோம்” என்று அவர் அறிவித்தார், இங்கே ட்ரம்ப் “மக்கள்” என்ற இடத்தில் தன்னையே நிறுத்திக் கொண்டிருந்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் இருந்து அரசியல்ரீதியாக ஒரேயொரு முக்கிய முடிவுக்கே வர முடியும்: ட்ரம்ப் ஒரு அமெரிக்க பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய முனைந்து கொண்டிருக்கிறார்; முதலாளித்துவத்தின் குற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் ஒரு போலியான எதிரியை பொறுப்பாகக் காட்டி விட்டு, தனது கொள்கைகளை எதிர்க்கின்ற எவரொருவரையும் துரோகிகளாக சித்தரித்து விட்டு, மக்கள் விருப்பத்தின் உருவடிவாகவும் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடிய ஒரேயொரு மனிதராகவும் தன்னை முன்நிறுத்துவதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்.
ட்ரம்ப் பில்லியனர்கள், வலது-சாரி சித்தாந்தவாதிகள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதிகள் கொண்ட ஒரு மந்திரிசபையை ஒன்றுகூட்டியிருக்கிறார். போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுதல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் எவரொருவர் கற்பனை செய்வதைக் காட்டிலும் அதிகமாக ட்ரம்ப் அதிகமாக முன்செல்ல இருக்கிறார்.
ஜனநாயகக் கட்சி ட்ரம்ப்பை எதிர்த்து நிற்பதற்கு எதுவொன்றும் செய்யப் போவதில்லை. ஒபாமா தொடங்கி கீழுள்ள தலைவர்கள் வரையிலும் ஜனநாயகக் கட்சியின் தலைமையானது, ட்ரம்ப்பின் இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத வசைமாரியை ஏதோ “இயல்பான” ஒரு அரசியல் உரைக்கு செவிமடுப்பது போல உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. இடைமருவல் காலகட்டத்தை உள்வரும் நிர்வாகம் குறித்த மெத்தனப் போக்கை பரப்புவதில் ஒபாமா செலவிட்டிருந்தார் என்றால், நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினரோ ட்ரம்ப்புடன் இணைந்து வேலைசெய்வதற்கும் அவரது நச்சுத்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாதத்தை தழுவிக்கொள்ளவும்  உறுதியெடுக்கின்றனர்.
உழைக்கும் மக்கள் கடும் அதிர்ச்சிகளுக்கு முகம்கொடுக்கவிருக்கிறார்கள். அவர்களது ஆரம்பக் குழப்பம் என்னவாயிருந்தாலும் சரி, அவர்கள் கிளிண்டனுக்கு வாக்களித்திருந்தாலும் சரி, ட்ரம்ப்புக்கு வாக்களித்திருந்தாலும் சரி, அல்லது இருவருக்கும் இடையில் தேர்வு செய்வதற்கு மறுத்திருந்தாலும் சரி, இந்த அரசாங்கம் அவர்களது எதிரி என்பதை அவர்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க முதலாளித்துவம் அழிவின் பாதையில் இறங்கி விட்டிருக்கிறது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தவிர வேறு எவராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.
By Patrick Martin
21 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/fasc-j23.shtml

ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும்

The Trump presidency and the coming conflict between Europe and America

source from internet
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும்.
ஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் மற்றும் ஜேர்மனியின் பில்ட் (Bild) பத்திரிகைகளில் ட்ரம்ப் உடனான ஒரு பேட்டி வந்தது. அவரது கருத்துக்கள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒழுங்கமைப்பிற்கான அடித்தளமாக இருந்த அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலாக இருந்தன.
ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான ஒரு வாகனம் என்று வர்ணித்தும், அத்தோடு "ஏனையவர்களும் வெளியேறுவார்கள்" என்ற அனுமானிப்பை வெளிப்படுத்தியும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தை ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார். “பாருங்கள், வர்த்தகத்தில் அமெரிக்காவை, பகுதியாகவாவது, தோற்கடிக்கவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது, சரியா? ஆகவே அது பிரிந்திருக்கிறதா அல்லது ஒன்றுசேர்ந்திருக்கிறதா என்பதெல்லாம் உண்மையில் எனக்கு அக்கறை இல்லை, எனக்கு அது எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றி அக்கறையில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஜேர்மனியின் வாகன தொழில்துறையை தடையாணைகளைக் கொண்டு அச்சுறுத்திய ட்ரம்ப், சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அகதிகள் கொள்கையே ஐரோப்பாவை நிலைகுலைத்ததாக குற்றஞ்சாட்டி, அவரை தாக்கினார். ரஷ்யாவிற்கு எதிரான தடையாணைகளை எதிர்த்த அதேவேளையில், அவர், நேட்டோ கூட்டணி "பயனற்று போய்விட்டதாக" அவர் நம்புவதாக அறிவித்தார்.
இதற்குமுன்னர் ஒருபோதும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை தனது வெளிப்படையான இலக்காக அமைத்துக் கொண்டதில்லை. அவர் இங்கிலாந்தை ஜேர்மனிக்கு எதிராக நிறுத்த விரும்புவதையும், அவர் இங்கிலாந்தின் சுதந்திர கட்சியுடனும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய விரோத வலதுசாரி கட்சிகளுடனனும் தன்னைத்தானே ஒன்றிணைத்துக் கொண்டிருப்பதையும் ட்ரம்ப் நேர்காணலில் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பாவின் அரசியல் உயரடுக்கின் விடையிறுப்பும் அதேயளவிற்கு விரோதமாக இருந்தது. ஜேர்மனியில், மேர்க்கெல் பதிலளிக்கையில், “ஐரோப்பியர்களாகிய நமது தலைவிதி நம் கரங்களில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்,” என்றார். மேர்க்கெலின் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் சிக்மார் காப்ரியேல் வலியுறுத்துகையில், “நாம் இப்போது ஒரு அடிமைத்தனமான மனோபாவத்தை ஏற்க வேண்டியதில்லை… ட்ரம்ப் ஐ கையாள்வதில், நமக்கு ஜேர்மன் தன்னம்பிக்கை மற்றும் ஒரு தெளிவான நிலைப்பாடு அவசியப்படுகிறது,” என்றார்.
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறுகையில், “அட்லாண்டிக் இடையிலான கூட்டுறவு" இப்போதிருந்து ஐரோப்பாவின் சொந்த "நலன்கள் மற்றும் மதிப்புகளின்" அடிப்படையில் இருக்கும் என்றார்.
ஐரோப்பிய சிந்தனைக் குழாம்கள் மற்றும் ஊடகங்கள் இராணுவவாதம் தீவிரமடைவதையும் மற்றும் தேசிய பதட்டங்களின் ஒரு வெடிப்படையும் அனுமானித்தன. “ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலமாக அதிகரித்த மூலோபாய தன்னாட்சியை பெற ஆலோசிக்க வேண்டியிருக்கும்,” என்று மாட்ரிட் இல் Elcano Royal அமைப்பின் பீலிக்ஸ் அர்டேகா தெரிவித்தார்.
"ஜேர்மனிக்கு எதிரான குழுவாக்கத்தை" ஊக்குவிப்பதன் மூலமாக, ட்ரம்ப், “ஜேர்மன் சுற்றி வளைப்பின் பழைய அச்சங்களுக்கு நெருப்பூட்டக்கூடும்" என்று Carnegie Europe அமைப்பின் யூடி டெம்சே எழுதினார். “அதுவொரு புதிய அரசியல் கண்ணோட்டம் என்றாலும் கூட, ஐரோப்பாவும் ஜேர்மனியும் அதற்கு விடையிறுக்க வேண்டியிருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
கார்டியனில், நத்தலி நொவ்கரேடே அறிவுறுத்துகையில், “செல்வாக்கின் பரப்பெல்லையின் ஒரு திருப்பத்தை ஐரோப்பா காணக்கூடும்… அத்துடன் அரசாங்கங்கள் அவற்றின் அண்டைநாடுகளை மற்றும் அக்கண்டத்தின் எதிர்காலத்தை விலையாக கொடுத்து தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்க விரையக்கூடும்,” என்றார்.
ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" நிலைப்பாடுகள், ஐரோப்பா உடனான அமெரிக்க அரசியல் உறவுகளில் ஒரு மிரட்சியூட்டும் மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. Christian Science Monitor, அட்லாண்டிக் இடையிலான விவகாரங்களுக்கான நிபுணர் ஜோன் ஹல்ஸ்மன் கூறியதை மேற்கோளிட்டு, “போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்புமுறையில் அமெரிக்காவின் தலைமையை விட்டுக்கொடுத்த 'வில்சனிய' அமெரிக்க தலைவர்களுக்கு இயைந்துபோகும்வகையில்  வளர்ந்துள்ளதற்காகவும்" மற்றும் "ஒரு 'ஜாக்சனியவாத' மற்றும் ட்ரம்ப் ஆல் ஊக்குவிக்கப்பட்ட இன்னும் அதிக தேசியவாத அமெரிக்க உலக கண்ணோட்டத்திற்கு மிக விரைவிலேயே போதுமானளவிற்கு ஒத்துப்போக முடியாத நிலையிலுள்ள “ஐரோப்பிய உயரடுக்குகளைக்" கண்டித்தார்.
எவ்வாறிருப்பினும் இப்போது வரையில், பொதுவாக அதுபோன்ற ஒருதலைபட்சமான போக்குகள் தடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம், நடைமுறையளவில் உலகளாவிய மேலாதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கான அதன் தகைமையை, அதன் தடையற்ற கோரிக்கை பலவீனப்படுத்தும் என்பதை அது ஒப்புக் கொள்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான அவரது உறவுகள் சம்பந்தமாக அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்குள் ட்ரம்பை நோக்கிய விரோதத்தை உயிரூட்டி வரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக நீண்டகாலமாக ஐரோப்பாவிற்குள் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உகந்த கட்டமைப்பை பேணுவதற்கு ஒரு ரஷ்ய "அரக்கன்" இன்றியமையாத விதத்தில் அவசியப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கையாகும்.
கடந்த முறை, 2003 இல், ஈராக் போருக்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கூர்மையாக பதட்டங்கள் எழுந்தன. அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைக் கண்டித்தார். ரம்ஸ்ஃபெல்ட் அவ்விரு நாடுகளையும் "பழைய ஐரோப்பா” என்று குறிப்பிட்டதோடு, அவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக நிறுத்தினார்.
அதே ஆண்டு ஜனவரி 26 இல், உலக சோசலிச வலைத் தளம் "அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை" என்று தலைப்பிட்டு டேவிட் நோர்த் ஒரு முன்னோக்கு கருத்தை பிரசுரித்தார், அது அந்த மோதலின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரித்தது.
1945 மற்றும் 1991 க்கு இடையே ஐரோப்பா உடனான அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய உறவு, "அடிப்படையில் பனிப்போரின் குறிப்பிட்ட சூழலுக்குள் அதன் சொந்த இன்றியமையாத பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைக் குறித்த அதன் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்பட்டது" என்பதை நோர்த் விளங்கப்படுத்தினார். “ஐரோப்பாவை நோக்கிய அமெரிக்காவின் மனோபாவமானது, (1) சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படுத்தலை வலுப்படுத்துவது மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கைக் குறைப்பது (“கட்டுப்படுத்துவது”) மற்றும் (2) ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தீவிரமான போர்குணத்தோடு மற்றும் உயர்ந்தமட்டத்தில் அரசியல்மயப்பட்டிருந்த அந்நேரத்தில் சமூகப் புரட்சியை தடுப்பது ஆகிய மோலோங்கிய இந்த தேவைகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது,” என்று அவர் தொடர்ந்து விளங்கப்படுத்தினார்.
“மேற்கு ஐரோப்பாவுடனான அதன் கூட்டணி இருந்த அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் வலியுறுத்தலானது, உண்மையில், வரலாற்று விதிமுறைகளில் இருந்து விலகுவதாக இருந்தது. ஏதோவிதத்தில் ஒரு பிரதான ஏகாதிபத்திய சக்தியாக காலங்கடந்து எழுந்திருந்ததில் வேரூன்றிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக அடிப்படையான போக்கு, ஐரோப்பாவை விலையாக கொடுத்து உலகில் அதன் இடத்தை வைத்துக் கொள்வதாக இருந்தது.” 
பின்னர் நோர்த் எழுதினார்: “சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, போருக்குப் பிந்தைய இராஜாங்க உறவுகள் அடிப்படையாக கொண்டிருந்த சர்வதேச கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு கோடாக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை முன்னிறுத்துதற்கான எவ்வித தேவையும் இனிமேல் அமெரிக்காவுக்கு இல்லை. அனைத்திற்கும் மேலாக, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமை உருவாக்கிய அதிகார வெற்றிடத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது சொந்த வசதிவாய்ப்புக்காக சுரண்டிக் கொள்ள உறுதியாக இருந்தது.”
இந்த உள்ளடக்கத்தில், அவர் 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த தீர்க்கதரிசனமான எச்சரிக்கையை மேற்கோளிட்டார்:
வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான்அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும்இன்னும்பகிரங்கமாகவும்இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் சீரழிவில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”
2003 இல் எதிர்நோக்கப்பட்ட இந்த குழப்பநிலை இப்போது அதன் முழு முக்கியத்துவத்தை பெறுகிறது. வெளியேறவிருக்கும் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, மேர்க்கெலை "தைரியமானவர்" என்றும், ட்ரம்பின் கருத்துக்கள் "பொருத்தமற்றவை" என்றும் வர்ணிக்கின்ற நிலையில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆழ்ந்த விரோதமாக உள்ளன. ஆனால் இதுபோன்ற உடன்பாடின்மைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சி, சீனா மற்றும் ஏனைய எதிர்விரோத சக்திகளின் வளர்ச்சியால் முன்வரும் சவால், மற்றும் 2003 இல் இருந்து ஏற்பட்ட தொடர்ச்சியான பல இராணுவ தோல்விகளின் காரணமாக, அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அது புறநிலைரீதியில் வர்த்தக போர் மற்றும் பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு கூர்மையான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர்க்கவியலாமல் ஐரோப்பாவுடன் மோதலைத் தூண்டும்.
ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே தவிர்க்கவியலாமல் என்ன மாதிரியான கூட்டணி ஏற்படும் என்பது உட்பட அமெரிக்காவின் இந்த புவிசார் மூலோபாய மாற்றத்தின் விளைவுகளை யாராலும் விளக்கமாக அனுமானிக்க முடியாது. அமெரிக்காவிற்கான ஒரு முக்கிய எதிர்பலமாக சீனா வகிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வாறிருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அடியே தேசிய விரோதங்கள் வெடிக்கும், அதில் ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" திட்டநிரலின் சுழல், “முதலிடத்தில் ஜேர்மனி,” “முதலிடத்தில் பிரிட்டன்" மற்றும் "முதலிடத்தில் பிரான்ஸ்" ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான கோரிக்கைகளைக் கொண்டு வரும், இது போட்டியிடும் சக்திகளின் அணிகளாக ஐரோப்பா உடைவதற்கு மட்டுமே இட்டுச் செல்லும்.
முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் திட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதுடன், கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததாக அர்த்தப்படுத்தப்பட்ட அரசியல் பூதங்கள் அனைத்தையும் கட்டவிழ்த்துவிடும்.
நெருக்கமான அரசியல் ஐக்கியம் மற்றும் ஒரே சந்தை ஆகியவை செல்வவளத்தையும் சமாதானத்தையும் கொண்டு வரும் என்ற வெறும் வாக்குறுதியை தவிர அங்கே வேறொன்றுமில்லை. அதற்கு மாறாக, வலதுசாரி பிற்போக்குத்தனம் மற்றும் பாசிச கட்சிகளது வளர்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறி வருகிறது. நேட்டோ துருப்புகள் பெருந்திரளாக ரஷ்ய எல்லைகளை நோக்கி நகர்கின்ற நிலையிலும் கூட, இராணுவமயமாக்குவதற்கான தேவை குறித்து ஐரோப்பிய சக்திகள் நிரந்தரமாக பேசி வருகின்றன, அதேவேளையில் சிக்கனத் திட்டம் ஒன்றில் மட்டும் அவை அனைத்தும் உடன்பட்டுள்ளன.
பேர்லின், பாரீஸ் மற்றும் இலண்டன் ஆகியவை அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிட இன்னும் அதிக "தேசிய தியாகங்களைக்" கோரி, அக்கண்டத்தை மறுஆயுதபாணிக்க பெரும் தொகைகளை செலுத்துமாறு கோருகையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் இன்னும் மோசமடையும்.
உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த குணாம்சம் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளைக் கடந்து வருவதற்கு முதலாளித்துவ வர்க்கம் இலாயகற்றது என்பதை நிரூபித்துள்ளது.
ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம், 1945 இல் இருந்து, பல தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த போருக்குப் பிந்தைய காலக்கட்டம் முடிந்துவிட்டது, ஒரு புதிய போருக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி உள்ளது என்ற ஒரு புரிதலில் இருந்து முன்நகர வேண்டும். அது சகல ஏகாதிபத்திய சக்திகளது சிக்கனத் திட்டம், இராணுவவாதம் மற்றும் போருக்கான உந்துதலை எதிர்க்க பொறுப்பேற்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, அது அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் போராட்டங்களில் நனவூபூர்வமாக ஐக்கியமாக முனைய வேண்டும். செல்வந்த தட்டுக்கள் மற்றும் போர்வெறியர்களது ட்ரம்ப் அரசாங்கம் தவிர்க்கவியலாமல் தூண்டிவிடும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெடிப்பானது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த தூண்டுதலை வழங்கும்.
Chris Marsden
19 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/useu-j24.shtml

Tuesday, 24 January 2017

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு: இழிபுகழில் என்றும் நிலைக்கவிருக்கும் ஒரு நிகழ்வு

The inauguration of Donald Trump: An event that will live in infamy

image source from internet
45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவிருக்கும் நிகழ்வு அமெரிக்க வரலாற்றின் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வுகளில் ஒன்றாகும். புதிய ஜனாதிபதியின் பதவியேற்புக் கொண்டாட்டங்களுக்காக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் செலவிடப்படுகிறது. அத்தனையும் வீண்! எத்தனை பணம் செலவழித்தாலும் இந்த பதவியேற்பின் ஒவ்வொரு அம்சத்திலும் விரவியிருக்கும் குமட்டலான நாற்றத்தை அது அகற்றி விட முடியாது. அதைப் போலவே, பொதுக் கொண்டாட்டங்களுக்கு மோசடியான விதத்தின் மூலமாக ஏற்பாடு செய்வதன் மூலமாக, நாடு புதிய நிர்வாகம் அமர்த்தப்பட்ட நொடி தொடங்கி கற்பனை செய்யமுடியாத பரிமாணங்கள் கொண்ட ஒரு பேரழிவுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு பாதையில் நடக்கத் தொடங்கியிருக்கிறது என்ற ஒரு பரவலான உணர்வை மறைத்து விடவும் முடியாது.
அமெரிக்க முதலாளித்துவத்தை வரலாறு சிறை செய்திருக்கிறது. பொருளாதார மற்றும் சமூகச் சிதைவின் நீண்ட நிகழ்வுப்போக்கானது உத்தியோகபூர்வ அரசியல் கட்டுக்கதைகளுக்கும் கீழமைந்த யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை மறைப்பதற்கு சேவை செய்த ஜனநாயக வார்த்தைஜாலங்களை கொண்டு பல தசாப்தங்களாக மூடிமறைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால் இப்போது அந்த முகமூடி கழன்று விட்டது. அமெரிக்காவை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கக் கூடிய முதலாளித்துவ வெகுசிலரணியின் ஊழல், மனச்சாட்சியின்மை, ஒட்டுண்ணித்தனம், மற்றும் அத்தியாவசியமாய் பாசிச மனப்போக்கு ஆகியவற்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் உருவடிவம் கொடுத்திருக்கிறார்.
செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களைக் கொண்டு நடத்தப்படுகின்ற ஒரு செல்வந்தர்களின் அரசாங்கத்திற்கு ட்ரம்ப் தலைமை கொடுக்கவிருக்கிறார். அமைச்சரவை மற்றும் வெள்ளை மாளிகைப் பணியாளர்களாக அமர்த்தப்பட்டிருக்கும் பில்லியனர்களுடன், முக்கியமான தேசிய பாதுகாப்பு பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளும், எந்த வேலைத்திட்டங்களையும் சமூக உதவிகளையும் அழிப்பதற்கு தங்கள் அரசியல் முயற்சிகளை அர்ப்பணித்திருந்தனரோ அவற்றை மேற்பார்வை செய்வதற்காய் அதி-வலது சித்தாந்தவாதிகளும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெரும்-செல்வந்தர்களுக்கு மிகப்பெரும் வரிவெட்டுகளுக்காகவும் ஒரு பாரிய இராணுவப் பெருக்கத்திற்காகவும் பொதுக் கல்வி, மருத்துவ உதவி, மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போன்ற சமூக வேலைத்திட்டங்கள் வெட்டப்படுவதன் மூலமும், வேலைகளின் மீதான மிருகத்தனமான சுரண்டலின் மூலமும், அடிப்படை ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருக்கும் எதுவும் அரிக்கப்படுவதன் மூலமும் தொழிலாள வர்க்கம் விலைசெலுத்த இருக்கிறது.
சர்வதேச அளவில், ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” என்ற பேரினவாதமானது பொருளாதார மற்றும் புவியரசியல் மோதல்களின் அதிகரிப்புக்கு மேடையமைக்கிறது. போர்கள் நிறைந்த கடந்த கால் நூற்றாண்டு காலமானது —1991 இல் ஈராக் படையெடுப்பு தொடங்கி முடிவில்லாத “பயங்கரவாதத்தின் மீதான போராக” தொடர்ந்து நடைபெற்றுச் செல்வது— அதனினும் குருதிகொட்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு முகவுரை மட்டுமே என்பதாக நிரூபணமாகவிருக்கிறது. அமெரிக்கா தனது நீண்டகால ஐரோப்பிய கூட்டாளிகளைக் கூட போட்டியாளர்களாகவே கருதுகிறது, அமெரிக்க நலன்களுக்கு குறுக்கே வருகின்ற மட்டத்திற்கு அவை எதிரிகளாகவே கருதப்படும் என்பதை பதவிக்கு வரும் முன்னதாகவே ட்ரம்ப் தெளிவாக்கி விட்டிருக்கிறார்.
ஆளும் உயரடுக்கிற்குள்ளாக, தந்திரோபாயம் தொடர்பாக கூர்மையான பிளவுகள் இருக்கின்றன என்பது, தேர்தலுக்குப் பின்னர் வெடித்த முன்கண்டிராத அரசியல் மோதல்களில் வெளிப்பட்டது. ஆயினும், தலைமை ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து ட்ரம்ப் மீது வருகின்ற தாக்குதல்கள் அவர் அதி-வலது கொள்கையை முன்னெடுக்க உறுதி பூண்டதை மையமாகக் கொண்டவையாக இல்லை, மாறாக அமெரிக்க போர் திட்டமிடலின் திசை குறித்ததாகவே இருக்கின்றன. கிளிண்டனை ஆதரித்த பெருநிறுவன உயரடுக்கு மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் கன்னைகள் ரஷ்யாவை நோக்கிய மூர்க்கமான நிலைப்பாட்டில் இருந்து எந்த பின்வாங்கலும் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்பின என்றால், ட்ரம்ப், இப்போதைக்கு, தனது வாய்வீச்சுத் தாக்குதல்களை சீனாவுக்கு எதிராகவும், மிக சமீபத்தில், ஜேர்மனிக்கு எதிராகவும், செலுத்தியிருக்கிறார்.
இந்த மோதல்கள் எத்தனை கடுமையாக இருந்தபோதும் கூட, ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுமே பின்வரும் உறுதிப்பாடுகளில் ஒன்றுபட்டு நிற்கின்றன: 1) அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் அபாயம் ஏற்படினும் கூட தனது உலகளாவிய நலன்களைப் பின்தொடர வேண்டும்;  2) தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ட்ரம்ப் பேசுவதும் ட்வீட் செய்வதும் தனக்காக மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சார்பாகத்தான் என்பது பில்லியனர்களையும் இராணுவத் தளபதிகளையும் கொண்ட அவரது அமைச்சரவை தேர்வுகள் சொற்பமான எதிர்ப்புடன் செனட் ஊர்ஜிதப்படுத்தல் நடைமுறைகளைக் கடந்து செல்கின்றன என்ற உண்மையின் மூலமாக நிரூபணமாகிறது. ஒபாமாவை பொறுத்தவரை, உள்வரும் நிர்வாகத்தின் அரசியல் அங்கீகாரத்தை திட்டவட்டம் செய்வதற்கென்றே புதனன்று நடந்த தனது இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை அர்ப்பணித்திருந்தார், வெற்றி பெற்றிருக்கும் நிலையில், “அவரது சிந்தனைகளையும் அவரது விழுமியங்களையும் கொண்டு முன்செல்வதே [ட்ரம்புக்கு] முறையானதாயிருக்கும்” என்று அறிவித்தார்.
ட்ரம்ப் பதவிக்கு அமர்த்தப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கமானது ஒரு கட்டுக்கதைமயமான அமெரிக்க கடந்த காலத்தின் —அந்நிலத்தில் முதலாளித்துவ வெகுசிலராட்சி மக்களைச் சுரண்டும் சுதந்திரம் கொண்டிருக்கும் அத்துடன் மனம் விரும்பும் மட்டத்திற்கு சூழலை அசுத்தப்படுத்த முடியும்; அங்கு தொழிலாள வர்க்கம் அரசுக் கல்வி, மருத்துவப் பராமரிப்பு மற்றும்  ஓய்வுக்கால பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமை உள்ளிட எந்த முக்கியமான சமூக உரிமைகளும் அற்றதாய் இருக்கும்; அங்கு போலிஸ் கேள்வி கேட்பாரின்றி மனிதர்களை முடமாக்கலாம் கொல்லலாம்; அங்கே பெருநிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிமாட்டுஊதியம் வழங்கலாம், விருப்பம்போல் அவர்களை வேலையை விட்டு நீக்கலாம், குழந்தைத் தொழிலாளர்களையும் கூட பயன்படுத்தலாம்; அங்கே அடிமட்ட தப்பெண்ணங்கள் சிடுமூஞ்சித்தனத்துடன் ஊக்குவிக்கப்படும் அத்துடன் அத்தியாவசியமான ஜனநாயக உரிமைகள் கழுத்து நெரிக்கப்படும்— புத்துயிர்ப்பை எதிர்பார்க்கிறது.
ஆனால், 1930களின் மாபெரும் தொழிற்துறைப் போராட்டங்களை சிறிதாக்கும் அளவுக்கான ஒரு வீச்சில் சமூக மோதல் கட்டவிழ்த்து விடப்படாமல் ஒரு முதலாளித்துவ நரகம் பற்றிய இந்த கொடுங்கனவான மற்றும் திகிலூட்டும் சிந்தனையானது அடையப்பட முடியாது. வரவிருக்கும்  அரசியல் மற்றும் சமூக அதிர்ச்சிகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நடவடிக்கைக்குள் தள்ளும். ஐயுறவுவாதிகள் —பல்கலைக்கழக கல்வியறிஞர்கள் மற்றும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் மார்க்சிச-விரோத போலி-இடது அரசியல் அமைப்புகளின் மத்தியில் இவர்களை ஏராளமாகக் காணலாம்— பரந்த தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டும் அத்தனை முயற்சிகளையும் நிராகரிப்பவர்கள் வெகுஜன புரட்சிகர நனவு இன்மையை சுட்டிக்காட்டுகின்றனர். ஆயினும் அவர்களது ஐயுறவுவாதம் புரட்சிகர வெடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துத் தருகின்ற வரலாற்று நிகழ்முறைகள் குறித்த அவர்களது சொந்த அறியாமையையும் அலட்சியத்தையுமே வெளிப்படுத்துகிறது. சென்ற நூற்றாண்டில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் மகத்தான மூலோபாய மேதையாக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியவாறாக:
இவ்வாறாய், ஒரு புரட்சிகர சகாப்தத்தில் வெகுஜனக் கண்ணோட்டங்களிலும் மனோநிலைகளிலும் ஏற்படக் கூடிய அதிவிரைவான மாற்றங்கள், மனித மனத்தின் நெகிழ்வுநிலை மற்றும் இயங்குநிலையிலிருந்து பெறப்படுவதில்லை, மாறாக அதற்கு நேரெதிராய், அதன் ஆழமான பழமைவாதத்ததிலிருந்து பெறப்படுகின்றது. புதிய புறநிலைமைகளுக்கு பின்னே மக்களின் மீது ஒரு பிரளயத்தின் வடிவத்தில் வந்து மோதுகின்ற அந்த தருணம் வரையிலும் அந்த நிலைமைகளுக்கு காலத்தால் மிகவும் பின்தங்கியதாக சிந்தனைகளும் உறவுகளும் இருப்பதுதான், ஒரு புரட்சியின் காலகட்டத்தில் போலிஸ் மூளைக்கு வெறும் ”வாய்வீச்சாளர்களின்” நடவடிக்கைகளின் விளைவாக தென்படக் கூடிய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிப்பெருக்குகளின் அந்தப் பாய்ச்சல் இயக்கத்தை உருவாக்குவதாய் தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப்பின் வீர சூர நடிப்புகள் அத்தனையும் இருந்தாலும், இறுதி ஆய்வில், அவரது நிர்வாகமானது, அமெரிக்க முதலாளித்துவத்தை பீடித்திருக்கும் ஆற்றொணா நெருக்கடியின் விளைபொருளே ஆகும். அதன் பொறுப்பற்ற கொள்கைகள் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் அதனால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளை இயக்கத்தில் நிறுத்தும்.
இந்த புதிய சூழ்நிலையில், ஜனநாயகக் கட்சி மற்றும் அதே அளவுக்கு குடியரசுக் கட்சி ஆகிய பெரு வணிகத்தின் இரண்டு கட்சிகளிடம் இருந்தும் சுயாதீனமாயும் அவற்றுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதே மிகவும் அவசரஅவசியமான அரசியல் பணியாகும். இந்தப் பணிக்கே அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சக-சிந்தனையாளர்களும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத பதிலிறுப்புக்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சமூகத்தின் செல்வம் ஒருசிலவரது கட்டுப்பாட்டில் இருப்பதற்கு எதிராய், பிரம்மாண்டமான பெரு-நிறுவனங்களும் வங்கிகளும் தனியார் இலாபத்திற்கல்லாது சமூகத் தேவைகளுக்காய் சேவை செய்கின்ற விதத்தில் ஜனநாயகக் கட்டுப்பாட்டிலான பொது வசதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. சமூக சமத்துவம் என்ற இலட்சியத்தை முன்னெடுக்கவும், ஒரு கண்ணியமான ஊதியமளிக்கும் வேலை, தரமான ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் கல்வி, ஒரு பாதுகாப்பான மற்றும் சவுகரியமான வேலைஓய்வு, மற்றும் ஒரு ஆரோக்கியமான சுற்றுசூழல் ஆகியவற்றுக்கு தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள அடிப்படையான உரிமைகளை உறுதிசெய்வதற்காகவும் பாரிய செல்வ மறுவிநியோகம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
ஆளும் வர்க்கத்தின் தேசியவாத நஞ்சு மற்றும் போர் முனைப்பு ஆகியவற்றுக்கு எதிராக, அனைத்துத் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. புலம்பெயர்ந்த மக்களையோ அல்லது பிற நாடுகளின் தொழிலாளர்களையோ பலியாடுகளாக்குவதற்கு செய்யப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் தொழிலாளர்கள் எதிர்த்தாக வேண்டும் என்பதுடன் இனரீதியாக அல்லது பால்ரீதியாக பிளவுகளை விதைப்பதற்கு செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நிராகரிக்க வேண்டும்.
“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் விடுக்கும் அழைப்பானது உண்மையில் வர்க்கப் போர், இராணுவ வன்முறை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கான ஒரு அழைப்பாகும். இதற்கு பதிலிறுப்பாய், தொழிலாளர்கள் சர்வதேச ஐக்கியம், சமத்துவம் மற்றும் சோசலிசம் என்ற பெருமிதமிக்க பதாகையை கட்டாயம் விரும்பி ஏந்திக் கொள்ள வேண்டும்.
உழைக்கும் மக்களையும் அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஒரு முன்னோக்கிய பாதையை எதிர்நோக்கியிருக்கும் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
By The Socialist Equality Party
20 January 2017
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/trum-j20.shtml

Monday, 23 January 2017

ட்ரம்ப் பதவியேற்புக்கு உலக ரீதியான பரந்த எதிர்ப்புக்கள்

சிறப்பு செய்தி அறிக்கை

By a WSWS reporting team,
22 January 2017
சனிக்கிழமை அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு சக்திமிக்க முன் எதிர்பார்த்திருந்திராத எதிர்ப்பைக் காட்டும் விதமாக, மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
இந்த பரந்த எதிர்ப்புக்கள் அதனை ஏற்பாடு செய்தவர்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் மிக அதிகமாக இருந்ததானது முதலாளித்துவ செய்தி ஊடகங்களுக்கு ஒரு வியப்பாக இருந்தது. இவை ஈராக்கில் படையெடுப்பிற்கு எதிராக 2003 க்கு பின்னர் நடைபெற்ற உலகளாவிய ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. ஆர்ப்பாட்டங்கள் அண்டார்ட்டிகாவிலுள்ள அமெரிக்க ஆய்வு நிலையம் உள்ளடங்கலாக, ஒவ்வொரு கண்டத்திலுமாக மொத்தம் 600 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
Demonstrators in Washington DC
வாஷிங்டன் DC இல் நடந்த பதவியேற்புக்கு பிந்தைய ஊர்வலம் 500,000 பேருக்கும் அதிகமானோரை ஈர்த்தது, அதற்கு முந்தைய நாள் ட்ரம்ப்பின் பதவியேற்புக்கு வந்தகூட்டம் என்று கூறப்பட்டதைவிடவும் இருமடங்கு இருந்தது, அதே அளவு லாஸ்ஏஞ்செலஸிலும் அணிவகுத்தனர். 250,000 பேர் சிக்காகோ நகரமத்தியில் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அங்கே கூட்டமிகுதியின் காரணமாக திட்டமிடப்பட்ட ஊர்வலம் இரத்துச்செய்யப்பட்டு, அந்த இடத்தில் வெறுமனே ஆர்ப்பாட்டங்களில் அணிதிரண்டனர்.
போஸ்டனில் 150,000 பேர் ஊர்வலத்தில் பங்கேற்றனர், இது கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு முன்னர் வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய எதிர்ப்பாக விவரிக்கப்படுகிறது. மற்றொரு 100,000 பேர் நியூயோர்க் நகர ட்ரம்ப் டவர் எனுமிடத்தில் ஊர்வலமாகச் சென்றனர். இதர அமெரிக்க நகரங்களுள் செயின்ட்.பால் மின்னசோட்டாவில் 60,000 பேரும் விஸ்கான்சின், மாடிசனில் 75,000 பேருக்கு அதிகமானோரும் பங்கற்றதும் இவற்றுள் உள்ளடங்கும்.
A portion of the demonstration in Chicago
ஆர்ப்பாட்டங்கள் மெக்சிகோ சிட்டி, பாரிஸ், பேர்லின், பிராகு மற்றும் சிட்னியில் இடம்பெற்றன. லண்டனில் 100,000 பேரும் அதேபோல பிரிட்டீஷ் நகரங்களான Cardiff, Edinburgh, Leeds, Liverpool, Manchester மற்றும் வட அயர்லாந்திலுள்ள  Bristol  in Belfast –லும் அதேபோல் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் இனப்பெருக்க உரிமைகள், அதேபோல பல்வேறு அடையாள அரசியற் பிரச்சினைகள் பற்றியே மையப்படுத்திய எதிர்ப்புக்களை முன்வைத்ததாக ஊடகம் செய்தி அறிவித்தது. ஆயினும் வண்ணனையாளர்கள்  ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பெரும்பான்மைப் பகுதியினர் மூர்க்கத்தனமான இராணுவவாதம், உள்நாட்டு ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவ ஆதரவு கொள்கை பற்றிய ட்ரம்ப்பின் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு உள்பட, மிகவும் பரந்த அளவிலான பிரச்சினைகளால் நோக்கம் கொள்ளப்பட்டிருந்தனர் என்று ஒப்புக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். 
வாஷிங்டன் டிசியில் நடந்த ஆர்ப்பாட்டம், மாநகர போக்குவரத்தை வெள்ளம்போல் நிறைத்தது, மற்றும் நகரின் போக்குவரத்து பொறுப்புக்கழகம் அதன் சுரங்கப் பாதை வழி ”நெரிசல்” அளவை எட்டிவிட்டதாகக் குறிப்பிட்டது, இது பதவி ஏற்பு நாளில் வந்ததை விடவும் இரு மடங்கு இருந்தாகவும், பயணிகள் போக்குவரத்து வீதம் சாதாரண வேலைநாளை விடவும் குறைவாக இருந்தது என்றும் குறிப்பிட்டது.
வாஷிங்டன் டிசியின் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், “பெண்கள் அணிவகுப்பு” என்று அவர்கள் அழைத்த ஆர்ப்பாட்டம், ட்ரம்ப் ஜனாதிபதித் தன்மையின் ஆபத்து முற்றிலும் இனம் மற்றும் பால் அடிப்படையிலானது என்று காட்டினர். மேடையில் பேசிய பேச்சாளர்களுள் பல ஜனநாயகக் கட்சி காங்கிஸ் பெண் உறுப்பினர்கள், அதேபோல பெண்ணியவாதி Gloria Steinem மற்றும் பல நடிகைகளும் அடங்குவர். ஸ்ரைனெம், மிஷேலையும் பாராக் ஒபாமாவையும் “எமது மாபெருந்தலைவர்கள்” எனப் புகழ்ந்தார்.
ஊர்வல ஏற்பாட்டாளர்களின் அரசியலுக்கு நேர்மாறாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாசிச மற்றும் போர் முனைப்புள்ள ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அவர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்த முழு அரசியல் அமைப்புக்கும் ஆழமான மற்றும் உண்மையான வெறுப்பைக் காட்டினர்.
Madeleine and Zekeh from Baltimore, Maryland
கனேடிய-அமெரிக்கர் மெட்லைன் மற்றும் காங்கோலிய அமெரிக்கர் Zekeh உலகசோசலிச வலைத் தளத்திடம் ட்ரம்ப் தேர்தல் பற்றிப் பேசும்பொழுது உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தனர்.
Zekeh மேலும் குறிப்பிட்டார், “நாம் பூகோளக் கிராமத்தில் வாழுகிறோம், ஒரு பெரிய சிலந்திவலை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கிறோம். தேசபக்திவாதம் மற்றும் தேசியவாதம் ஒருத்தருக்கொருத்தர் எதிராக எங்களைத் திருப்பிவிடாது.”
Ryan from Chapel Hill, North Carolina
வாஷிங்டனில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்கார்களில் பெருபம்பகுதியினர், உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட இளைஞர்கள் ஆவர். வடகரோலினா, சாப்பல் ஹில்லிலிருந்து வரும் ரியான் உலக சோசலிச வலைத் தள செய்தி அறிவிப்பாளர்களிடம் கூறினார்,” ட்ரம்ப் ஜனாதிபதவி பற்றி நான் அச்சம் கொண்டுள்ளேன். சோசலிசம் மட்டுந்தான் தீர்வுதர இயலக் கூடிய ஒரே பொருளாதார அமைப்பு.”
ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப்பை ரஷ்யாவுடனானா அவரது உறவு என்று கூறப்படுவதன் அடிப்படையில் எதிர்த்துக்கொண்டு அதேவேளையில், “ட்ரம்ப்புடன் வேலைசெய்வதற்கு” விருப்புடன் இருப்பதாக உறுதிதரும் அவர்களுக்காக அவர் குரோதமாக இருந்தார். “அது முட்டாள்த்தனமானது. இந்தவகை அந்நியர் குறித்த வெறுப்பு அனைத்தும் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து வருகிறது. ட்ரம்ப் நாம் எதிர்ப்பதற்கு நிறையக் கொடுத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியினர் இது பற்றித் தயாரிக்கின்றனரா?
சமூக சமத்துவமின்மையில் பெரும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனநாயகக் கட்சி அது ஆற்றும் அதன் பார்த்திரத்திற்காக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல இளைஞர்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது குரோதத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்க பல்கலைக் கழகத்திலிருந்து வந்த பல இளம் மாணவர்கள் யுத்தம் மீதான அவர்களது வெறுப்பையும், எதிர்ப்பானது பரந்த எதிர்ப்பாக இட்டுச்செல்லும் என்ற தங்களது நம்பிக்கையையும் பற்றிப் பேசினர். “ஜனநாயகக் கட்சியினர் பணக்கார்களுக்கானவர்கள்” என்றார் Quincy.
Rachel மேலும் குறிப்பிட்டார், “மோசமான தவறு கிளிண்டனை நிற்க வைத்ததுதான். அவர்கள் பொதுக் கல்விக்குப் பணம் இல்லை என்றனர், ஆனால் அரசாங்கம் யுத்தத்திற்காக பைத்தியக்காரத்தனமாய் அதிக தொகையை செலவழிக்கின்றது!”
அத்தகைய உணர்வுகள் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைவர்களது நடத்தைக்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. அவர்கள் அமெரிக்க பகாசுரக் கம்பெனிகளின் நலன்களை முன்னுக்குக் கொண்டுவர, ட்ரம்ப் பொருளாதார தேசியவாதத்தை தழுவுதற்காக அவர் மீது இரக்கம் கொண்டனர், அதேவேளை ரஷ்யாவிற்கு எதிராக மிகவும் மூர்க்கமான நிலைப்பாட்டை அவர் எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
ஜனநாயகக் கட்சி செனெட் சிறுபான்மைக் குழுத்தலைவர் Charles Schumer ட்ரம்ப் பதவியேற்பை புகழ்ந்தார். இன்று நாம் ஜனநாயகத்தின் ஒரே அடிப்படை இயல்பான, அமைதியான வழியில் அதிகாரம் மாறுதலைக் கொண்டாடுகிறோம்.” ஜனாதிபதி ஒபாமா நவம்பர் தேர்தலை “குழுக்குள் ஆடும் விளையாட்டு” என்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் குடியரசுக் கட்சிக்காரர்களும் “ஒரே குழுவில் உள்ளவர்கள்” எனவும் அறிவித்தார்.
உலகரீதியான பெரும் ஆர்ப்பாட்டங்கள் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு தற்போதிருக்கும் பரந்த மக்கள் எதிர்ப்பின் ஆரம்பத்தைத்தான் சுட்டிக்காட்டுகிறது. வெளியில் இராணுவவாதத்தை பின்பற்றுவதற்கும் உள்நாட்டில் ஒடுக்குமுறையை பின்பற்றுவதற்கும் தீர்மானமாக இருக்கும் இந்த நிர்வாகம், யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு பரந்த இயக்கத்தை எதிர்கொள்ளும்.
http://www.wsws.org/tamil/articles/2017/1-jan/prot-j23.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts