Anti-Trump protests spread across the US
செவ்வாய் கிழமை ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியை அடுத்து தொடர்ந்து வரும் ஒரு எதிர்ப்பு அலையாக, வெள்ளிக்கிழமை அன்று பெரு நகரங்களிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் பத்தாயிரக்ணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிநடையிட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மியாமிக்கும் அயோவா நகருக்கும் இடையிலான மாநிலங்களுக்கிடையிலான நெடுஞ்சாலையை மூடிவிட்டனர். ஒமாகா, நெப்ரஸ்கா மற்றும் மின்னியபொலிஸ் மின்னசோட்டாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெளிநடப்புச்செய்தனர். நியோர்க் மாநகர், போஸ்டன் மற்றும் எங்கும் ”அன்பு பேரணிகள்” கூட்டங்களை ஈர்த்தன.
மன்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் பூங்கா சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
இந்த வாரம், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் போக்குவரத்தை தடுத்த எதிர்ப்பாளர்கள் 226 பேர் கைது செய்யப்பட்டது உட்பட, வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 260 க்கும் அதிகமான பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போர்ட்லாண்டில் சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. வியாழக்கிழமை இரவு பொலீசுக்கும் சிறு எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையில் அவை இடம்பெற்றன. கார் கதவுகளை உடைத்தல் மற்றும் ஏனைய சேதம் விளைவித்தலை அடுத்து போர்ட்லாண்ட் பொலீஸ் ரப்பர் குண்டுகளை சுட்டதுடன் மிளகு ஸ்பிரேயையும் அடித்தது. சாண்டியகோவில் 19 ஆர்ப்பாட்டக்காரர்கள் “கலைய மறுத்ததால்” அல்லது “சட்டவிரோதமான கூடலுக்காக 19 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலீஸ் கூறியது. இதுவரை பரந்த பெரும்பான்மை எதிர்ப்புக்களின் அமைதித்தன்மை இருப்பினும், வார இறுதியின் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்காக பொலீஸ் படையினர் முடுக்கிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ட்ரம்ப்பின் விரைவில் நிகழவிருக்கின்ற ஜனாதிபதி பதவிக்குப் பின்னே ஒன்றிணைவதற்கு ஒபாமா நிர்வாகம் மற்றும் கிளிண்டனின் பிரச்சாரம் ஆகியவற்றினாலான முயற்சிகளுக்கு எதிரான வகையில், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தொடர்ச்சியான சினத்தின் வெளிப்பாடு இருந்தது. தேர்தல்களை தொடர்ந்து ஒபாமா “உண்மையிலேயே நாங்கள் அனைவரும் ஒரே அணி” என்று கூறிய அதேவேளை, பேரணியில் இடம்பெற்ற பதாகைகளும் முழக்கங்களும் பெரும் எண்ணிக்கையினர் எதிர்ப்பதற்கு இருந்தனர் என்று தெளிவூட்டியது. நாடு முழுவதிலும் உள்ள எதிர்ப்பாளர்கள் மத்தியில் “எனது ஜனாதிபதி அல்ல” என்பது மிகவும் பொதுவான சுலோகமாக இருந்தது.
பல எதிர்ப்பாளர்கள் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படையாய் இனவாதம், வெளிநாட்டவர் கலாச்சாரம் குறித்த அச்சம் மற்றும் தப்பெண்ணங்களின் மற்ற வடிவங்கள் பற்றிய ட்ரம்ப்பின் சட்டபூர்வமாக்கல் மீது இலக்கு வைத்தனர். வெள்ளிக்கிழமை நியூயோர்க் மாநகரில் நடந்த பேரணியின் காட்சிகள், புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் ஒருபாலிணையர் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கும் முழக்கங்கள் உள்பட, பல ஆயிரம்பேரால் கலந்துகொள்ளப்பட்டதை காட்டியது. எவ்வாறாயினும், எல்லாவற்றுக்கும் மேலாக அடையாள அரசியலை உயர்த்துவதில் ஜனநாயகக் கட்சி மற்றும் போலி இடது அமைப்புக்களின் செல்வாக்கானது, ட்ரம்ப்பின் தோற்றத்திற்கான “வெள்ளையர்” மீது குற்றம்சாட்டும் அறிகுறிகள் உள்பட, ஊர்வலத்தின் பொழுது குறிப்பிடத்தக்க அரசியல் குழப்பத்தை வெளிக்காட்டியதைப் பார்க்க நேர்ந்தது.
உலக சோசலிச வலைத் தள (WSWS) குழுவினர் நியூயோர்க்கில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகித்ததுடன் அவர்களுடன் பேசினர். நியூயோர்க் பல்கலைகழகத்தில் வணிகம் பயிலும் மாணவர் Honor Sankey, “ட்ரம்ப்பால் பாதிப்புறும் பெண்கள், பலநிறத்து மக்கள் மற்றும் LGBTQ சமூகத்தினர் ஆகியோருடன் ஐக்கியத்தில் நிற்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்கு நான் வந்தேன். இந்த தேர்தல் உண்மையில் மக்கள் செயலூக்கத்துடன் இருப்பதற்ககான ஒரு நேரத்தை உருவாக்கியுள்ளது, மற்றும் இந்தநாட்டில் உள்ள அறியாமையின் மட்டத்தால் வெளிப்படையாகவே நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.
ட்ரம்ப்பிற்கு வாக்களித்த பல பகுதிகள் முன்னர் ஒபாமாவிற்கு வாக்களித்தவை என்று WSWS செய்தியாளர் சுட்டிக்காட்டிய பொழுது, Sankey குறிப்பிட்டதாவது, “சில வகைகளில் ட்ரம்ப்பிற்கு வாக்களிப்பது அரசியல் ஸ்தாபகத்திற்கு அளிக்கும் ஒரு F-you. ஆயினும், அவருக்கு வாக்களித்தோருக்கு இந்த நிர்வாகம் உதவாது என்பது தெளிவு” என்றார்.
நியூஜெர்சியிலுள்ள Watchung Hills உயர்நிலைப்பள்ளியிலிருந்து வந்த 16 வயது நிரம்பிய மாணவர் Renzo Mayhall பின்வருமாறு குறிப்பிட்டார், “இந்த தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்கையில் தப்பெண்ணம், இனவாதம் மற்றும் எந்தவகை வெறுப்பிற்கும் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்கு சாத்தியமான அளவு பல அமெரிக்கர்கள் வெளியே வரவேண்டும் என்பதால் நான் இங்கிருக்கிறேன். பெண்கள், முஸ்லிம்கள் மற்றும் ஹிஸ்பானியர்களுக்கு ட்ரம்ப் ஒரு ஆபத்து என்பது போல அது. சில வெள்ளை மனிதர்களை தவிர ஒருவருக்கும் பாதுகாப்பில்லை.”
WSWS செய்தியாளருடன் கலந்துரையாடிய பின்னர், வெள்ளை தொழிலாளர் உள்பட ஒட்டுமொத்த தொழிலாள வக்கத்தின் மீது தொடர்ந்த தாக்குதல் இருந்தது, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது என்று அவர் மேலும் சேர்த்தார். ட்ரம்பிற்கு வாக்களித்த மற்றும் பாதிக்கப்பட்ட மிட்வெஸ்டிலுள்ள வெள்ளை தொழிலாளர்களுடன் நான் ஒத்துணர்வாற்றல் உடையவனாயிருக்கிறேன். நான் சாண்டர்ஸ்க்கு ஆதரவளித்தேன், அவர் நின்று விட்டு, கிளின்டனுக்கு அவரது ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்த பின்னர், ஜனநாயகக் கட்சி ஒரு மாற்றத்தையும் வழங்கவில்லை, அது ட்ரம்ப் ஆக இருந்தாலும் கூட, விடயங்களை மாற்றுவதற்கு ஏதோ சில வழியாக அத்தொழிலாளர்கள் அதனைப் பார்த்தனர். நாம் இதனை எதிர்க்காமல் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை.”
soccer இதழுக்காக வேலைசெய்யும் ஹாரிஸன் பிரீஸ்ட் கூறினார், நான் இங்கு வந்தது பல காரணங்களின் பரந்த ஒளிக்கற்றைக்காக, ஆனால் பெரும்பாலும் ட்ரம்ப் ஆதரிக்கும் சமத்துவமின்மை மற்றும் நேர்மையின்மைக்காக ஆகும். இந்த எதிர்ப்பு உண்மையில் ஒரு ஆரம்பம்தான், இந்தப் இப்பிரச்சினைகளின் பெரும்பாலானவற்றை எதிர்கொள்ளும் பொருட்டு அதை ஒழுங்கு செய்யவேண்டியிருக்கிறது மற்றும் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது.
“இங்குள்ள பெரும்பாலானோர் தேர்தல் கல்லூரியால் கலக்கம் அடைந்துள்ளார்கள் என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள், ஆனால் நாங்கள் இந்த ஒட்டுமொத்த அமைப்புடனும் கலக்கம் அடைந்துள்ளோம். நான் சாண்டர்ஸின் பெரும் ஆதரவாளனாக இருந்தேன், மற்றும் அவர் ஹிலாரி கிளிண்டனை விடவும் ஒரு சிறந்த வேட்பாளராக இருந்திருப்பார்.”
ட்ரம்ப்புடன் வேலைசெய்ய முயற்சிப்பதாக சாண்டர்ஸ் உறுதிகொடுத்த்து பற்றி WSWS செய்தியாளருடன் விவாதித்த பின்னர், பிரிஸ்ட் பின்வருமாறு பதிலளித்தார், “(ஜனநாயக கட்சியினர்) ஜனநாயக வழிமுறைகளையும் அதிகாரம் அமைதியான வழியில் மாறுதலையும் ஏற்கும்பொருட்டு அவர்கள் என்னவாக இருப்பார்களோ அதைச்செய்கிறார்கள். அவர்கள் ட்ரம்ப்பிற்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறார்கள், ஆனால் அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளமாட்டார். அவர் ஏற்கனவே நம்மை ட்வீட்சில் சிறுமைப்படுத்திவிட்டார். அவர் இப்பொழுது ஒரு மரியாதைக்குரிய ஜனாதிபதியாக ஆவார் என்று எண்ணுதல் ஏமாற்றாகும்.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டு மாணவராக இருக்கும் ஜூலியா, குறிப்பிட்டார், “அது உண்மையில் மக்கள் மோசடிக்குள் இழுபட்டுச்சென்ற மிகவும் துருவமுனைப்பட்ட தேர்தலாக இருந்தது.” விவாதத்தில் இருந்த “மற்ற பக்கத்தை உண்மையிலேயே நாம் எதிர்கொள்ளவில்லை.”
தேர்தல் மீது, ஒபாமாவின் கீழ் சமத்துவமின்மையின் வளர்ச்சியின் பாதிப்பு பற்றி கேட்கையில், அவர் குறிப்பிட்டார் “இது உண்மையில் மக்கள் இழக்கவிருப்பது பற்றிய ஒரு அச்சத்திற்கு இட்டுச்செல்லும். அது ஜனநாயக உரிமைகள் அல்லது பொருளாதார நகர்வு இரண்டிற்கும் இடையில் தேர்ந்துகொள்ளுமாறு நம்மைக் கேட்பது போல ஆகும்.”
அவரது நண்பர் இவான் மேலும் குறிப்பிட்டதாவது, “சமத்துவமின்மை உண்மையில் மக்களைப் பிரித்துவிட்டது, மற்றும் பெரும்பான்மை ஜனநாயகக் கட்சியினர் வாக்களிக்க வரவில்லை. தங்களின் வேலைத்திட்டத்தை அமல்படுத்தும்பொருட்டு இப்பொழுது ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் ட்ரம்ப்புடன் வேலை செய்ய விரும்புகின்றனர், ஆனால் நாம் நன்கு தகுதி பெற்றிருக்கிறோம். நம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசாங்கத்திற்கும் நாம் தகுதி உடையவராக இருக்கிறோம்.
“சிலர் இப்போதுதான் அரசியலில் ஈடுபடுவது என்கையில், அது உண்மையில் ஊழல் அமைப்பில் பங்கேற்க மனச்சோர்வுடையதாக இருக்கிறது.”
No comments:
Post a Comment