Search This Blog

Wednesday, 30 November 2016

"முதல் தாக்குதல் இல்லை" என்ற அணுஆயுத உறுதிமொழியை கைவிடுமாறு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உந்துதல் அளிக்கிறார்

Indian defence minister urges jettisoning of “no first-strike” nuclear pledge

Image source from internet
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியா ஒருபோதும் "முதலில் அணுஆயுதமேந்தியத் தாக்குதலை நிகழ்த்தாது" என்ற அதன் உறுதிமொழியை கைவிட வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்புவிடுகின்றார்.
சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று புது தில்லி இல் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது, 1998ல் இந்தியா அதனை ஒரு அணுஆயுத நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டதில் இருந்து, அதன் கொள்கையான அணுஆயுத விவகாரத்தில் ஒருபோதும் இந்தியாவின் "முதல் பயன்பாடு இருக்காது" என்பதை கவனத்துடன் பின்பற்றி வந்திருக்கும் நிலையிலும், தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு இருப்பது "பலத்தினை விட்டுக் கொடுப்பதற்கு" ஒப்பானது என்று விவாதித்தார்.
"திகைக்க வைத்தல்" மற்றும் "முன் கணிக்கமுடியாமை" ஆகியவை இராணுவ மூலோபாயத்தின் அத்தியாவசியக் கூறுகள் என விவாதிப்பதோடு, "நான் ஏன் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்?" என்றும் வாயடிப்புடன் வினவுகிறார்.
இந்தியா அதன் வசமுள்ள அணுஆயுதப் போருக்கான சாத்தியங்களை வெளிப்படையாக வைத்திருப்பதன் மூலம் மட்டுமே தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பாரிக்கர் தெரிவிக்கிறார். அதாவது, ஒருவேளை போர் வெடித்தாலும், எந்த நேரத்திலும் இந்தியா அதன் முதல் அணுஆயுத தாக்குதலிலேயே அவர்களை அழித்துவிட முனையும் என்பது போன்ற சக்திமிக்க அச்சுறுத்தல்களை, அதன் பிரதான மூலோபாய போட்டியாளர்களான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு விடுக்கவேண்டும். "முதல் பயன்பாடு இல்லை" என்பதை "ஒரு எழுதப்பட்ட மூலோபாயமாக" பின்பற்றுவோமானால், "உண்மையிலேயே நீங்கள் உங்களது பலத்தினை விட்டுக்கொடுத்து வருகிறீர்கள்" என்பதுதான் அர்த்தமாகிறது எனவும் தெரிவித்தார். புதிய அர்த்தசாஸ்திரம்: இந்தியாவிற்கான ஒரு பாதுகாப்பு மூலோபாயம்  (The New Arthashatra: A Security Strategy for India) என்ற நூல் வெளியீட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பின்வருமாறு கூறினார்: இந்தியாவிற்கான ஒரு பாதுகாப்பு மூலோபாயமான இது, இந்தியாவின் முதன்மை இராணுவ மூலோபாயவாதிகளில் ஒருவரான, ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் குர்மீத் கன்வால் என்பவரால் இந்த தொகுப்பு திருத்தப்பட்டுள்ளது. "முன் கணிக்கமுடியாமை" என்பது "குறிப்பிட்ட வகையான கொள்கைகளில்(க்கு) கட்டிஅமைக்கப்படவேண்டும்" எனவும் பாரிக்கர் அறிவித்தார்.
பின்னர் அவர், "பயங்கரவாதிகள்" மற்றும் அவர்களது பாகிஸ்தானிய "பாதுகாப்பாளர்களையும்" இலக்கு வைத்து செப்டம்பர் இறுதியில் இந்திய சிறப்பு படையினரால் நடத்தப்பட்ட "நுட்பமான தாக்குதல்கள்" குறித்தும் பாராட்டினார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, இதுவரையிலும் நிகழாத வகையில், புது தில்லி பாகிஸ்தானுக்கு உள்ளே பகிரங்கமாக தனது முதல் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. தந்திரோபாய அணுஆயுதங்கள் உடனான இந்தியாவின் படையெடுப்பினை தடுக்கும் விதமான, பாகிஸ்தானின் எஞ்சிய அச்சுறுத்தல்களுக்கும் முடிவுகட்டி உள்ளனர். இந்த தாக்குதல் "ஆச்சரியத்தின் சாதகமான தன்மையை" நிரூபிப்பதாக அவர் இறுமாப்புடன் பெருமைபேசிக் கொண்டார்.
இந்திய அரசாங்கம் தனது அணுஆயுத நிலைமையினை இன்னும் தீவிரமாக அச்சுறுத்தும் மற்றும் அதிரடி தன்மை கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை, என்பது தொடர்பான அவரது சொந்த "சிந்தனைகள்" மற்றும் "உணர்வு(கள்)" பற்றியே தான் கருத்து தெரிவிப்பதாகக் கூறினார்.
பாரிக்கரின் கருத்துக்களை மிகைப்படுத்தாது கூறினால் அவை பொறுப்பற்ற மற்றும் பெரிதும் ஆத்திரமூட்டும் தன்மை உள்ளதாகவே இருந்தன. அவர் இந்திய இராணுவத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பது மட்டும் அல்லாது, இந்தியா அதன் பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள ஒரு போர் நெருக்கடிக்கு மத்தியிலும் இருக்கிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், கடந்த வாரம் முழுவதும் பெரும் அளவிலான எல்லை தாண்டிய பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கி தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இராஜதந்திரிகள் எனும் போர்வையின்கீழ், இரு நாடுகளிலும் வெளியுறவு அரசு பணியாளர்கள் வேவு பார்ப்பதாக ஒருவருக்கொருவர் சுமத்திக் கொண்ட பழிக்கு பழியான குற்றச்சாட்டுகள் என்ற ஒரு ஆக்ரோஷமான நிலைமை தொடர்ந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில், பாரிக்கர் அவரது போர் ஆக்ரோஷத் தன்மைக்குப் பேர்போனவராக இருக்கிறார்.
இந்திய இராணுவத்தின் "நுட்பமான தாக்குதல்கள்", இஸ்லாமாபாத் உடனான புது தில்லியின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கத்தை குறிக்கிறது. இந்தியாவிற்கு "போர் விருப்பம்"  இல்லை எனினும், இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எந்தவொரு இராணுவ தளவாட உதவிகள் செய்வதையும் பாகிஸ்தான் நிராகரிக்கும் வரையிலும், இந்தியா தொடர்ந்து இஸ்லாமாபாத் மீதான அதன் இராணுவ அழுத்தங்களை அதிகரித்துவரும், மேலும் அதன் விளைவு ஒரு முழு அளவிலான போருக்கு முன் கூட்டியே வகை செய்யும் அபாயகரமான நிலைமையையும் கொண்டிருக்கும், என்று பாரிக்கர் சபதம் இடுகிறார்.
"ஒரு புத்தக வெளியீட்டின்போது, உயர் அதிகாரிகள் அணுஆயுத கோட்பாடுகள் தொடர்பான அவர்களது தனிப்பட்ட கருத்துக்களுக்காக குரல் எழுப்புவார்களா! என்று உண்மையான காரணத்தோடு வியப்பதோடு, அணுஆயுதங்களை வைத்திருப்பதானது பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுவிடும் என்பதால் அதன்மீது பெரிய அளவிலான கவனத்தையும் மற்றும் கட்டுப்பாட்டினையும் விதிப்பது அவசியமாகிறது" என்று சென்னையை தளமாக கொண்ட ஹிந்துநாளிதழின் ஒரு ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டு, இது "உலகில் எங்கும் காணமுடியாதது," ஆக உள்ளது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், "அக்கறை இன்றி இம்மாதிரியான வார்த்தைகளை பிரயோகிப்பவர்களை, கொஞ்சமும் சிந்திக்காமல் நடவடிக்கை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்" என்றும் விமர்சித்து, ஹிந்து நாளிதழ் ஆழ்ந்த கவனத்தை வெளிப்படுத்துகிறது.
பாரிக்கர் பேசியதைத் தொடர்ந்து சிறிது நாட்களிலேயே, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிவிப்பானது அவர் வெளியிட்ட கருத்துக்கள் யாவும் அவரது "தனிப்பட்ட கருத்துக்களே" என மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் பாரிக்கரின் கருத்துக்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று கூற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு நேர்மாறாக, மோடி தனது மூன்று நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியதும், பாரிக்கரை அவரது அரசின் "திறமானவர்களில்" ஒருவர் என்று வழக்கமான முறையில் புகழ்ந்து தள்ளினார். மேலும், "பல வருடங்களுக்குப் பின்னர்", "40 ஆண்டு காலமாக நிலுவையாக இருந்து வந்த ஆயுதப் படைகள் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட ஒரு பாதுகாப்பு அமைச்சரை நாடு பெற்றுள்ளது, இதற்கு அவர் அயராது உழைத்து உள்ளார்." என்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பிஜேபி பேரணியின் போது தெரிவித்தார்.
இந்திய அணுஆயுத நிலைப்பாட்டில் மறைமுகமாக ஒரு மாற்றத்தை கொண்டுவரும் நோக்கத்துடன், பாரிக்கரின் இந்த "தனிப்பட்ட கருத்துக்கள்" என்பது உண்மையிலேயே மோடியின் ஒப்புதல் பெற்ற கருத்துக்களாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பிஜேபி அதன் 2014 தேசிய தேர்தல் அறிக்கைகளில், "இந்தியா தற்போதைய சூழ்நிலைச் சவால்களை எதிர்கொள்ளும் தகுதியினை அடைய" அதன் அணுஆயுத கொள்கைகளை "திருத்தியமைக்கவும் மற்றும் புதுப்பிக்கவும்" ஏற்றதான ஒரு வரியிலான உறுதிமொழியை உட்படுத்தி இருந்தது. இருந்தபோதிலும், ஊடகப்பிரிவுகள் இதுகுறித்து அவர்களது கவலைகளை எழுப்பிய பின்னர், பிஜேபி "எதிரிகளை அச்சுறுத்தி ஒடுக்குதல்" என்று இந்தியா அறிவித்திருந்த கொள்கையை கைவிடவே திட்டமிட்டது. அதாவது, இந்தியா அணுஆயுத தளவாடங்களை பராமரிப்பதன் ஒரே நோக்கம், இந்தியாவின் மீது பிற சக்திகள் ஏதும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்கு வைக்கும்பட்சத்தில், அவற்றை ஒடுக்கி பின்வாங்க வைப்பதற்காகவே ஆகும். 2014 ஆண்டு கோடை காலத்தில், இந்திய அணுஆயுத கொள்கைகளை திருத்தி அமைக்கும் திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றே மோடி அரசாங்கம் அறிவித்தது.
பாரிக்கரின் கருத்துக்கள் ஆகக்குறைந்தது, இந்திய ஆளும் வட்டங்களில் நிலவும் போர் வெறிக்கு அழைப்புவிவதுடன் இணைத்துக்கொள்ளும் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையாகவே உள்ளன.
இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இரண்டும் நிச்சயமாக கவனத்தில் வைக்கப்படும்.
வாஷிங்டன், சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ மூலோபாயத் தாக்குதலில் இந்தியாவை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அதன் தீவிரமடைந்த பிரச்சாரத்தின் மூலம் ஒரு பெரும் தெற்கு ஆசிய ஆயுதப் போட்டியின் ஒரு அங்கமாக, கடந்த தசாப்த காலம் முழுவதும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே அவர்களது அணுஆயுத படைக்களத்தை துரிதமாக விரிவாக்கம் செய்துள்ளனர்.
தெற்கு ஆசியாவின் அணுஆயுதமேந்திய சக்திகளின் போட்டிகளுக்கு இடையில் "பயங்கரவாத சமநிலை" ஏற்படுவதற்கு இந்தியா அதன் மென்மைத் தன்மையை அகற்றவேண்டும் என்பது போன்ற பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக, அமெரிக்கா இந்தியாவின் மீது அதன் மூலோபாய உதவிகளை பொழிந்துள்ளது.
வாஷிங்டன் இந்தியாவை ஒரு பெரிய பாதுகாப்பு தளவாட பங்குதாரராக குறிப்பிட்டு, அதிநவீன அமெரிக்க ஆயுத முறைகளை இந்தியா இயக்குவதற்கு அனுமதியளிக்கிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) கையெழுத்து இடாத நாடாக இந்தியா இருந்தபோதிலும், புது தில்லி அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு அனுமதி பெறும் வகையில், உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்புக்குள் இந்தியாவிற்கென ஒரு தனித்துவமான இடத்தையும் பேச்சுவார்த்தையின் மூலம் அமெரிக்கா பெற்றுத்தந்து உள்ளது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் மீதான அக்கறையினால் மட்டுமே, அமெரிக்கா இந்தியா உடனான அதன் 2008 அணுசக்தி ஒப்பந்தத்தினை நியாயப்படுத்துவதாக கூறும் அதேவேளையில், இந்தியா அதன் அணுஆயுத தளவாடங்களை மேம்படுத்த உள்நாட்டு அணுசக்தி திட்டத்திற்கான வளங்களின் மீது கவனம் செலுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்பதை வாஷிங்டன் நன்றாக தெரிந்து வைத்திருந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், ஜோர்ஜ். W. புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு குழுவின் ஒரு உறுப்பினரான ஆஸ்லே டெல்லிஸ், இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய பங்காற்றினார். சீனாவை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் "மதிப்பினை" வாஷிங்டன் அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் அணுஆயுத சக்தி வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அதன் அதிகாரபூர்வ கொள்கைகளை வாஷிங்டன் கைவிட வேண்டும் என்று சமீபத்தில் விவாதித்தார்.
அமெரிக்க ஆதரவுபெற்ற இந்தியாவுடன் எப்போதும் வளர்ந்து வரும் மூலோபாய சமநிலையின்மையினால் பாகிஸ்தான் எச்சரிக்கை அடைகிறது. சீனா உடனான அதன் நீண்ட கால உடன்படிக்கையை வலுப்படுத்துவதன் மூலமாகவும், மற்றும் குறிப்பாக வளர்ச்சி மற்றும் "தந்திரோபாயம்" அல்லது போர்கள அணுஆயுத பயன்பாடு என்ற வகையில் அதன் அணுஆயுத திட்டத்தை விரிவாக்குவதன் மூலமாகவும், பாகிஸ்தான் இதற்கு விடையிறுக்கிறது.
சமீபத்திய வருடங்களில், இந்தியாவோ அல்லது அதன் துருப்புக்களோ பாகிஸ்தான் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதன் தந்திரோபாய முறையில் ஆயுதங்களை பிரயோகிக்கும் என்று இஸ்லாமாபாத் மீண்டும் மீண்டும் எச்சரித்து உள்ளது. அதற்கு பதிலடியாக இந்தியா, "முதல் பயன்பாடு இல்லை" என்ற அதன் கொள்கை ஒருபுறம் இருந்தாலும், பாகிஸ்தான் நகரங்களை நிர்மூலமாக்கும் இலக்கினை முன்னிட்டு, இந்தியா அதன் "மூலோபாய" தாக்குதல் பயன்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக, ஏதேனுமொரு தந்திரோபாய அணுஆயுத தளவாடங்களை பயன்படுத்த தீர்மானிக்கும்.
By Keith Jones
14 November 2016
http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/innu-n23.shtml

Tuesday, 29 November 2016

ட்ரம்பின் தேசியவாதம் மற்றும் போரின் எதேச்சாதிகார அரசாங்கம்

Trump’s authoritarian government of nationalism and war

டொனால்ட் ட்ரம்பின் ஆரம்பகட்ட நியமனங்கள், அவர் தலைமை கொடுக்க இருக்கும் நிர்வாகத்தின் அதீதமான மற்றும் வரலாற்றில் முன்கண்டிராத தன்மையை ஊர்ஜிதம் செய்கின்ற நிலையிலும் கூட, ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும் அவருக்கு அரசியல் அதிகாரம் கைமாறுவதை இயல்பானதாக ஆக்குவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன.
அட்டர்னி ஜெனரல் பதவிக்கு, ட்ரம்ப் அலபாமாவின் செனட்டரான ஜெப் செசன்ஸ் ஐ தேர்வு செய்திருக்கிறார், இவர் குடியுரிமைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதிலும் அரசாங்க வேவுபார்த்தலின் மிக ஊடுருவலான வடிவங்களுக்கு உளவு முகமைகளை காட்டிலும் அதிகமாக ஆதரவு அளிப்பதிலும் நீண்டகாலமாக அறியப்பட்டு வந்திருப்பவராவார். இவர் போலிஸ் இராணுவமயமாதலின் ஒரு விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்திருப்பவர் என்பதோடு புலம்பெயர் மக்களை கடுமையாகக் கண்டனம் செய்து வருபவருமாவார், ஒருமுறை இவர், “கிட்டத்தட்ட டொமினியன் குடியரசில் இருந்து வரும் ஒருவரும் கூட” நமக்குப் “பயன்தரக் கூடிய ஒரு நிரூபணமான திறன் உடன்” அமெரிக்காவுக்கு வருவதில்லை என்று அறிவித்தார்.
சிஐஏ இயக்குநர் பதவிக்கு, ட்ரம்ப் பிரதிநிதி மைக் போம்பியோவை முன்மொழிந்து கொண்டிருக்கிறார், இவர் அரசியல் சட்டவிரோதமான வேவுத் திட்டங்களின் இன்னுமொரு வக்காலத்துவாதி ஆவார்; NSA எச்சரிக்கையூட்டியான எட்வார்ட் ஸ்னோவ்டென் மீது வழக்குவிசாரணை நடத்தப்பட வேண்டும், அவர் மீது குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூறியிருந்தவர் இவர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ட்ரம்ப் ஓய்வுபெற்ற தளபதி மைக்கல் ஃபிளினை தேர்வு செய்திருக்கிறார், இவர் சித்திரவதை செய்வதற்கு ஓரளவுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும் என்பதை ஆதரிக்கின்ற ஒரு வெறிகொண்ட இஸ்லாமிய-விரோத இராணுவவாதி ஆவார், “கடைசித் தருணம் வரையிலும் மேசை மீது பல தெரிவுகளை வைத்திருப்பதன் மீது” தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பவர்.
மற்ற தெரிவுகளும் இதேபோக்கில் தான் பின்வர இருக்கின்றன. பாதுகாப்புச் செயலருக்கான போட்டியில் ஓய்வுபெற்ற மரைன் தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ் தான் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது, இவர் 2004 இல் ஈராக்கின் ஃபலூஜாவுக்கு எதிரான மிருகத்தனமான படுகொலைத் தாக்குதலுக்கு தலைமை கொடுத்தவர் என்பதோடு அதற்கு ஒரு வருடத்திற்கு பின்பு “சிலரைச் சுடுவதில் சந்தோசம் இருக்கிறது” என்று பயங்கரமானதொரு அறிவிப்பைக் கொடுத்தவராவார்.
ஆயினும், இதில் மிக முக்கியமானது, ட்ரம்ப்பின் புதிய “தலைமை மூலோபாயவாதி” ஸ்டீபன் பானனின் மையமான பாத்திரம் ஆகும்; Breitbart News இன் முன்னாள் தலைமை அதிகாரியான இவர் மாற்று-வலது (alt-right) என்று அழைக்கப்படுவதை சுற்றியுள்ள வெள்ளை தேசியவாத அமைப்புகளால் போற்றப்பட்டு வந்திருப்பவர் (இந்த அமைப்புகள் செசன்ஸ் இன் தேர்வையும் பாராட்டியுள்ளன).
புதிய நிர்வாகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திட்டநிரலை செதுக்குவதில் பானன் மையமான பாத்திரத்தை வகிக்கவிருக்கிறார். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இதழ் வெள்ளியன்று வெளியிட்ட ஒரு நேர்காணலில், பானன், பாசிச மிகைகளுடனான பொருளாதார மற்றும் அரசியல் தேசியவாதத்தின் ஒரு கொள்கையை சுருக்கமாகக் கூறியிருந்தார்.
“நான் ஒரு வெள்ளை தேசியவாதி அல்ல” என்ற பானன், “நான் ஒரு தேசியவாதி. நான் ஒரு பொருளாதார தேசியவாதி” என்கிறார். ”அமெரிக்க தொழிலாள வர்க்கத்துக்கு கொள்ளி வைத்து ஆசியாவில் ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி” இருக்கக் கூடிய ”உலகவாதிகளை” —வர்த்தகம் மற்றும் மக்களின் நடமாட்டத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதை ஆதரிக்காத எவரையும் குறிப்பிடுவதற்கு மாற்றுவலதுகள் (alt-right) மத்தியில் பிரபலமான ஒரு வார்த்தைப் பிரயோகம்— அவர் கண்டனம் செய்கிறார்.
இந்த தேசியவாதப் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதனுடன் சேர்ந்து கடனைக் கொண்டு நடத்தப்படும் உள்கட்டமைப்பு செலவினங்கள் இவற்றின் அடிப்படையில் “ஒரு முற்றிலும் புதிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே” தனது நோக்கம் என்று பானன் கூறுகிறார். அவர் அறிவிக்கிறார்: “உலகெங்கிலும் பூச்சியத்திற்கும் குறைவான எதிர்மறை வட்டி விகிதங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொன்றையும் மறுகட்டுமானம் செய்வதற்கு இது மாபெரும் வாய்ப்பாகும்... சுவற்றில் அதைத் தூக்கியெறிந்து அது ஒட்டுகிறதா என்பதை நாங்கள் காணப் போகிறோம். பழமைவாதிகள், அவர்களுடன் ஜனரஞ்சகவாதிகள், ஒரு பொருளாதார தேசியவாத இயக்கத்தில் — 1930களில் போலவே உத்வேகத்துடன், ரீகன் புரட்சியை விடவும் பெரியதாக இது இருக்கப்போகிறது.”
இது, அமெரிக்க அதிகாரத்தின் உச்சியில் இதற்கு முன் கேட்டிராத ஒரு மொழி வகை ஆகும். ட்ரம்ப்பும், பானனும் மற்றவர்களும் தங்களது வேலைத்திட்டத்தினை ஜனரஞ்சக மொழியின் தொனியில் வழங்கி, ஜனநாயகக் கட்சிக்கும் உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகைகொண்ட அடுக்குகளின் அடையாள அரசியலுக்குமான பரவலான குரோதத்தை சுரண்டிக் கொள்வதற்கு முனைகின்ற அதேநேரத்தில், பொருளாதார தேசியவாதத்தின் வேலைத்திட்டம் என்பது உக்கிரமான வர்க்கப் போரின் ஒன்றாகும்.
சொந்த நாட்டில் இதன் பொருள், “தேசம்” மற்றும் “தேசியப் பாதுகாப்பு” ஆகியவற்றின் பேரில் வர்க்கப் போராட்டம் அத்தனையையும் ஒடுக்குவது என்பதாகும். சர்வதேச அளவில் இதன் பொருள், சொந்த நாட்டில் சமூகப் பதட்டங்களைத் திசைதிருப்புவது மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கக் கூடிய அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்வது ஆகிய இரண்டுக்காகவும் போரில் இறங்குவது என்பதாகும். புதிய நிர்வாகமானது, வோல் ஸ்டீரீட் மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் வன்முறையான சாதனமாக இருக்கக் கூடிய இராணுவ-உளவு-போலிஸ் எந்திரத்தினால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கும்.
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்மையளவுக்கு அதே முக்கியத்துவம் பெற்றதாய் இருப்பது ஜனநாயகக் கட்சியின் பதிலிறுப்பாகும். ட்ரம்ப் வெற்றி பெற்றால் நாட்டிற்கு அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று பித்துப்பிடித்தது போல் எச்சரித்து வந்ததில் இருந்து வரவிருக்கும் நிர்வாகத்திற்கு தாங்கள் ஆதரளிக்கப் போவதாகவும் முக்கியமான கொள்கைக் கூறுகளில் சேர்ந்து வேலைசெய்யவிருப்பதாகவும் வாக்குறுதியளிக்கின்ற நிலைக்கு ஜனநாயகக் கட்சியினர் அசாதாரணமான வேகத்தில் —இரண்டு வாரங்களுக்குள்ளாக— நகர்வு கண்டிருக்கின்றனர்.
ட்ரம்ப்பின் ஆரம்பகட்ட கபினட் நியமனங்களின் அதேகாலத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மை பிரிவுத் தலைவராக சார்ல்ஸ் சூமர் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் நடந்துள்ளது. செனட்டில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரில், சூமர் தான் அநேகமாக வோல் ஸ்ட்ரீட்டுக்கு மிக நெருக்கமானவர் மற்றும், குறிப்பாக சீனாவுக்கு எதிரான, வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு மிக உத்வேகத்துடன் ஆலோசனையளித்து வருபவர் என்று கூறலாம்.
சூமர், பேர்னி சாண்டர்ஸை செனட்டில் ஒரு தலைமைப் பதவிக்கு மேலுயர்த்தியிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாண்டர்ஸ், இடதுசாரி மற்றும் முதலாளித்துவ விரோத எதிர்ப்பு மனோநிலையை போர் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் பின்னால் திருப்புவதற்கு வேலைசெய்திருந்தார். உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, அவரின் தேசியவாத பொருளாதார வேலைத்திட்டமானது டொனால்ட் ட்ரம்பின் வேலைத்திட்டத்திற்கு நெருக்கமாக இணைசொல்லக் கூடியதாக இருந்தது.
சூமர் மற்றும் சாண்டர்ஸ் இருவருமே வாரஇறுதியில் அளித்திருந்த நேர்காணல்களில், “வர்த்தகம்” மற்றும் “உள்கட்டமைப்பு” குறித்த பிரச்சினைகளில் ட்ரம்ப் “எங்களுடன் இணைந்து வேலைசெய்வார்” என்று நம்புவதாக அறிவித்திருந்தனர். அமெரிக்கர்கள் “தங்களது வேலைகள் சீனாவுக்கும் மற்ற மலிவு-ஊதிய நாடுகளுக்கும் செல்வதைக் கண்டு வெறுப்பும் களைப்பும் அடைந்திருந்தனர்” என்று சாண்டர்ஸ் தெரிவித்தார்.
ட்ரம்பின் பாசிச தலைமை மூலோபாயவாதியான பானனால் முன்னிலை கொடுக்கப்படுகின்ற பொருளாதார ஆலோசனைமொழிவுகளில் ட்ரம்புடன் ஒரு கூட்டணி கொள்வதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஆலோசனையளித்து வருகின்றனர்.
அத்தனை வகையான பொய்கள், சேறுவீசல்கள் மற்றும் வாய்வீச்சுகள் —அவற்றின் பின்னால் ஆளும் உயரடுக்கிற்குள்ளான பல்வேறு தந்திரோபாய பிளவுகளும் மோதல்களும் மோதிக் கொண்டிருக்கும்— ஆகியவையே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் குணாம்சங்களாக இருக்கின்றன. இந்த வகையில் தான் ஆளும் வர்க்கத்தின் இறுதியான கொள்கையும் பயணப்பாதையும் தன்னை நிலைநாட்டுகிறது.
வரவிருக்கும் காலகட்டம் தீவிரமான அதிர்ச்சிகளும் அரசியல் எழுச்சிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கும். முன்னெப்போதினும் பெரிய கடனளவு மட்டங்களால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற ட்ரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகளும், அவற்றுடன் சேர்ந்து செல்வந்தர்களுக்கு பாரிய வரி வெட்டுகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களிலான வெட்டுகள் ஆகியவையும் சேர்ந்து, பொருளாதார குழப்பநிலையையும் வர்க்க மோதலையும் உருவாக்க இருக்கின்றன. அமெரிக்க மற்றும் முதலாளித்துவத்தின் தீராத முரண்பாடுகளை அவை தீர்க்கப்போவது கிடையாது.
மேலும், ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சமூக அவலங்களை சுரண்டிக் கொள்ளவும் ஹிலாரி கிளிண்டனுக்கான வாக்கு வங்கி உருக்குலைந்ததில் ஆதாயமடையவும் முடிந்ததே தவிர, அவர் அமலாக்க திட்டமிட்டு வருகின்ற வேலைத்திட்டத்திற்கு வெகுஜன ஆதரவு இருக்கவில்லை.
வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதில், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைவதும் அணிதிரள்வதும் அடிப்படையான அரசியல் பணியாகும். ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் இயங்கும் அத்தனை அமைப்புகளுடனும் முழுமையாகவும் தீர்க்கமாகவும் முறித்துக் கொள்வது இதற்கு அவசியமாக இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே தொழிலாள வர்க்கமானது ட்ரம்ப் நிர்வாகம் ஒன்றின் பொருளாதாரத் தேசியவாதம், எதேச்சாதிகாரவாதம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் புரட்சிகர எதிர்ப்பினை முன்னெடுக்க முடியும்.
Joseph Kishore
21 November 2016

இந்திய அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்கும் நடவடிக்கையானது பாரிய துன்பங்களையும், பொருளாதார குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது

Indian government’s demonetisation causes mass hardship and economic chaos

Image source from internet
நவம்பர் 8 செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில், நரேந்திர மோடி தலைமையிலான இந்துமத மேலாதிக்கவாத பிஜேபி அரசாங்கம், "பணம் செல்லாததாக்கும்" என்ற அதன் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பின் மூலம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் (சுமார் 7.50 டாலர் மற்றும் 15 டாலர் மதிப்பிலானது) அந்த நாளின் நள்ளிரவு முதல் செல்லாதாக்கியது.
வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டு கையில் இருப்பில் உள்ள, மற்றும் அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்த இறுதி நாளாக டிசம்பர் 31ம் தேதியினை அரசாங்கம் நிர்ணயித்து இருந்தது. மேலும், நாளொன்றுக்கு ரூபாய் 4000 வரை மட்டுமே பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்களை பெற முடியும் என்ற வரம்பினையும் விதித்தது. இந்த வரம்பினையும் பின்னர், நாளொன்றுக்கு ரூபாய் 2000 எனக் குறைத்தது.
நாடு முழுமையிலும் அனைத்து வங்கிகளுக்கு வெளியேயும் மக்களின் நீண்ட வரிசையிலான காத்திருப்பினை உருவாக்குகின்ற உடனடி மற்றும் மிகப்பரவலான சமூக தாக்கத்தினை இது ஏற்படுத்தியது. பல மில்லியன் கணக்கிலான மக்கள், அதிலும் இவர்களில் பெரும்பாலானோர் நாள்தோறும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக இருந்தாலும் சரி அல்லது பழைய நோட்டுக்களை மாற்றுவதாக இருந்தாலும் சரி ஒரு தடவைக்கு பல மணி நேரங்களை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். மேலும், அன்றாட வாழ்க்கையும் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் தீவிர பாதிப்பினை ஏற்படுத்தியது.
அன்றாட செலவினங்களுக்காக பணம் பெறுவதற்கு மக்கள் அவசரமாக முயற்சிக்கும் வேளையில் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம்.கள் குறைந்தளவிலான மதிப்புள்ள நாணயங்கள் தீர்ந்துபோன நிலையை திரும்ப திரும்ப எதிர்கொண்டன.
வங்கிகளோ அல்லது பணபரிமாற்ற வசதிக்கான ஏதேனும் ஒரு இயந்திரநுட்ப முறையோ இதுவரை கொண்டுவரப்படாத கிராம பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களில் வேண்டுமானால் உணவு மற்றும் எரிபொருள் ஆகிய அன்றாட தேவையிலான பொருட்களை மக்கள் வாங்க இயலாத நிலை போன்ற தீவிர பாதிப்பினை தராத குறைந்தபட்ச விளைவினை இது ஏற்படுத்தியிருக்கலாம். இன்னும் கூடுதலாக சொல்வதானால், சிறு விவசாயிகள் தங்களது பழுதடைந்துபோகக்கூடிய உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்களுக்கு விற்க இயலாத நிலையில் உள்ளனர். ஏனென்றால், இந்த சிறுவணிக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ரொக்கத்திற்கே நடைபெறுகின்றன.
இந்திய மக்கள் தொகை 1.2 பில்லியன் இல் பெரும் பெரும்பான்மையை உள்ளடக்கிய தொழிலாள வர்க்கம், இதர உழைப்பாளிகள் மற்றும் ஏழைகள் ஆகியோர் மீதே மிகப்பெரிய தாக்கத்தை இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 8 அறிவிப்பிற்கு பின்னர் மறுநாளிலேயே, உணவு பொருட்கள் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் செல்லத்தக்க மதிப்பிலான பணம் இல்லாத நிலையில் அநேகரால் சாப்பிட இயலவில்லை. இன்னும் சிலராலோ அவசர மருத்துவ உதவிகள் பெற இயலவில்லை.
நவம்பர் 8ல் இருந்து இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையினால் உருவான நேரடியான அல்லது மறைமுகமான இடையூறுகளின் காரணமாக குறைந்தபட்சம் 55 பேர் இறந்திருக்கலாம் என்று செய்தி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறப்புகள் குறித்து மோடி அரசாங்கம் ஒரு இறுக்கமான மௌனத்தையே சாதிப்பதுடன், சந்தேகமின்றி இதனை தமக்கு சிரமமானதுதான் என்று பார்க்கின்றபோதிலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய "கூட்டு சேதமே" என்றும் கருதுகின்றனர்.
வெகுஜன துன்பத்திற்கு காரணமான இந்த மோடி அரசாங்கம் மிகுந்த அலட்சியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இதற்கு ஏற்றவாறே, தற்போது நிழவிய எந்தவொரு பாதிப்பும், துன்பமும் "நீண்டகால ஆதாயம் பெறுவதற்கான தற்காலிக வலியே" என்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.
இதுபோன்ற மனித நேயமற்ற அரசியல் அலட்சிய தன்மைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு எச்சரிக்கையை கொண்டுவந்துள்ளது. பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படவேண்டும் என்பது குறித்த ஒரு அவசர தீர்மானத்தின் மீது நடந்த விசாரணையின் போது, இந்த பாரிய துயரத்தினைப் போக்குவதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லையானால் வெகு விரைவில் வன்முறைகள் வெடிக்கும் நிலையே உருவாகும் என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு ஊழலுக்கு எதிரானவர் என்ற போலிப்போர்வையை அணிந்துகொண்டுள்ள, ஒரு சுயதன்மைகொண்ட இந்துமத தீவிரவாதி மற்றும் பெரும் வணிக நிறுவனங்களின் வெட்கம்கெட்ட அரசியல் முகவராகவும் இருக்கும் மோடி, தனது அரசாங்கத்தின் இந்த அதிரடியான பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையை, கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு உள்ளே இந்தியா நடத்திய முன்னெப்போதும் நிகழாததும், சட்டவிரோதமானதும் மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டல்களுடன்கூடிய இராணுவ தாக்குதல்களுடன் உருவகப்படுத்தி அதற்கு ஈடான "கருப்பு பணத்திற்கு" எதிரானதொரு "நுட்பமான தாக்குதல்" போன்றதே என்கிறார்.
"பல ஆண்டுகளாக" "ஊழல், கருப்பு பணம் மற்றும் பயங்கரவாதம் போன்ற புரையோடிய புண்களே, அபிவிருத்தியை நோக்கிய ஓட்டத்தில் நமக்கு பின்னடைவினை கொடுக்கின்றன என்பதை இந்த நாடு உணர்ந்துள்ளது. எனவே, ஊழல் பிடியில் இருந்து முறித்துக்கொள்வதற்கு....... தற்போது பயன்பாட்டில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று நடு இரவிலிருந்து இனிமேல் எப்போதும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதாக இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம் என்று தேசிய அளவிலான ஒரு தொலைக்காட்சி உரையில் மோடி அறிவித்தார்.
வளைந்து கொடுக்கும் மற்றும் துதிபாடும் பெரும் நிறுவனங்கள், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு, இதனை கருப்பு பணத்திற்கு எதிரான ஒரு "திறம்பட்ட தாக்குதலான" நகர்வு என்று பாராட்டி திளைத்துப் போயினர். அதாவது கருப்பு பணம் என்பது வரித்துறையினருக்கு கணக்கில்காட்டப்படாத சொத்து மதிப்பு ஆகும். அந்த வகையில் நிலபுலன்கள், தங்கம் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்து மறைத்து வைத்திருப்பது, வெளிநாடுகள் அல்லது உள்நாட்டு வங்கி கணக்குகளில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பது என்பதாகும்.
தொழிலதிபர்கள், கிராம பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் போன்ற இந்திய சமூகத்தின் மிக அதிக சலுகை பெற்றுள்ள பிரிவினர்களிடையே தான் மிகப்பெரிய அளவிலான இந்தியாவின் "கருப்பு பணம்," பதுக்கிவைக்கப்பட்டு  இருப்பதாக பொதுவாக அறியப்படுகிறது. இது, இந்தியன் எக்ஸ்பிரஸ் இன் ஒரு பத்தியில், தொழிலதிபரும் மற்றும் நவீன தாராளவாத பொருளாதாரவாதியுமான சுர்ஜித் S. பல்லா என்பவரால் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படடுள்ளது. மேலும் அவர், "கருப்பு பண" எழுச்சி என்பது 1960களின் இறுதியில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரத்துவங்களின் ஒழுங்கமைப்பு அதிகாரத்தினால்  பணக்காரர்கள் மற்றும் ஓரளவு வசதியானவர்கள் மீது சுமத்தப்பட்ட உயர் வரி விகிதங்கள் குறித்த ஒரு புரிந்துகொள்ளத்தக்க மற்றும் புகழத்தக்க விடையிறுப்பாக இதனை கருதலாம் என விவாதிக்கிறார்.
மோடியின் "பணம் செல்லாததாக்குதல்" திட்டமானது இந்த அடுக்கினர் மற்றும் அவர்களது சட்டவிரோத சொத்துக்கள் மீது சிறு அளவிலான தாக்கத்தைக்கூட கொண்டிருக்காது.
ஊழல் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக காட்டிக்கொள்வது என்பது ஒரு மூடிமறைப்பாகும். அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை வெகுஜனங்களின் மீது மேலும் மாற்றிவிடுவதேயாகும். அந்த வகையில், பிஜேபி அரசாங்கத்தினால் அழுத்தம் கொடுக்கப்பட்ட ஒரு புதிய தேசிய அளவிலான 18 சதவிகித பொருட்கள் மற்றும் சேவை வரி உயர்வு, உழைக்கும் மக்கள் வருமானங்கள் மீதான வரி விதிப்பு ஆகியவற்றினாலான அவர்களுடைய இழப்பில் இந்தியாவின் வங்கி அமைப்புக்களுக்கு முட்டு கொடுக்க வழிசெய்வதேயாகும்.
இந்திய மற்றும் சர்வதேச அளவிலான பெரும் வணிகர்கள் மோடியின் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை குறித்து பாராட்டியிருப்பதில் வியப்பேதும் ஏதுமில்லை.
"ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சட்டவிரோதமான நிதிய பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
"உயர் மதிப்பிலான நோட்டுக்களை மதிப்பு குறைப்புக்கு உட்படுத்துவது என்பது பண வடிவிலான சொத்துகுவிப்பினை கட்டுப்படுத்தவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்க இயலும்" என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (Confederation of Indian Industry-CII) செயலாளர் நவுஷத் ஃபோர்ப்ஸ் தெரிவித்தார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் ஹர்ஷவர்தன் நியோட்டியா மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் "ஒரு மிக துணிச்சலான நகர்வு" என இதனை பாராட்டினார். மேலும், "இது நாட்டின் இணைப்பொருளாதாரத்தில் ஒரு தளர்வு ஏற்படுத்தும் தாக்கத்தினை ஏற்படுத்தும், அதேபோல பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பின் மீதும் இது ஒரு கடுமையான தாக்கத்தை கொடுக்கும்." என்றும் நியோட்டியா கூறுகிறார்.
"உயர் மதிப்பிலானது" என்பதற்கு அப்பால், பண செல்லாததாக்குதல் நடவடிக்கையின் இலக்கிலான இந்த நோட்டுக்கள், இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் நோட்டுக்களில், அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் நோட்டுக்கள் ஆகும் மற்றும் அன்றாட பண பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானவையாகவும் இருக்கின்றன, என்பது உற்சாகமூட்டும் பெறுநிறுவன செய்தி ஊடகங்கள் மற்றும் வர்த்தக செய்தி தொடர்பாளர்களின் கருத்தாகும். இந்திய நோட்டுக்களில் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் 47.8 சதவிகிதத்தையும், 1000 ரூபாய் நோட்டுக்கள் மேலும் 38.4 சதவிகிதத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன.
அதிகளவில் நிதி தேவையினை கொண்டிருக்கும் இந்தியாவின் பிரதான மற்றும் அரசுடமையான வங்கித் துறைக்கு தீவிர நிதி வழங்கலை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். முதலாவதாக, வர்த்தக கடன்கள் முறையாக திரும்ப செலுத்தப்படாமல் இருப்பது அல்லது எப்பொழுதாவது செலுத்தப்படுவது என்ற வகையிலான "செயற்படா சொத்து" (Non-Performing Assets-NPA) அதிகரிப்பினால் பொது துறை வங்கிகள் (Public Sector Banks-PSBs) கட்டுப்படுத்தபடுகின்றன. ஏனென்றால் அவர்களது செயற்படா சொத்துக்கள் வடிவிலான வராக்கடன்கள் குறித்த அச்சுறுத்தல்கள் மாபெரும் அளவிலானது, ஆகையினால் இந்திய வங்கிகள் இந்தியாவின் மூலதன இறக்கம் கொண்ட மற்றும் ஏற்கனவே அளவிற்கு அதிக பயன்களைப் பெற்ற வர்த்தக அமைப்புக்களுக்கு கடன் வழங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ளன. மேலும், ஏற்கனவே தொழில்துறை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் விற்பனைப் பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட கடும் வீழ்ச்சி கண்டுள்ள முக்கிய துறைகளின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் நிலைக்கு கடன் போதாமையினால் உருவாகும் அச்சுறுத்தல்கள்  திரும்பியிருக்கின்றன.
ஜுன் 2016 வரை, வங்கிகளின் மொத்த NPS மதிப்பு ரூபாய் 6 ட்ரில்லியன் ($90 billion) ஆக இருந்தது, ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் அநேகமாக இப்பிரச்சனையை பொதுவாக குறைத்து காட்டுகின்றன.
எது நேர்ந்தாலும், நவம்பர் 14 அன்று, பண செல்லாததாக்குதல் அறிவிப்புக்கு அடுத்து 6 நாட்களுக்கு பின்னர், மொத்த இந்தியன் வங்கி வைப்புக்களின் மதிப்பு முன்னதாகவே ரூபாய் 4 ட்ரில்லியனை ($60 billion) தாண்டியிருந்தது. இந்த மொத்த வைப்பு தொகையின் பெரும்பகுதி செலவினங்களுக்காக வங்கியிலிருந்து திரும்ப எடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இந்த வைப்புத் தொகை மதிப்பீட்டில் 10-15 சதவிகிதம் வங்கி அமைப்புக்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா மதிப்பீடு செய்கிறார்.
பணம் வைத்திருப்பவர்களை அவர்களது கையிருப்பு தொகையினை வங்கியில் செலுத்த கட்டாயப்படுத்துவதால், அரசாங்கம் அதன் பெரும் நிதி பற்றாக்குறையினை பூர்த்தி செய்வதற்கு ஏதுவான வகையில் எதிர்பாரா வருமான வரியினை சேகரிக்க இயலும் என்று அரசாங்கமும் நம்புகின்றது. டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னர் ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்ற இந்த பணம் செல்லாததாக்குதல் செய்யப்பட்ட நோட்டுக்களின் மதிப்பானது ரூபாய் 250,000 ($3,700) இனை தாண்டுவதாகவும் இருந்து, ஒருவரது வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட வைப்புத் தொகைக்கும் இடையில் "பொருத்தமின்மையும்" இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டியிருப்பது மட்டும் அல்லாமல், 200 சதவிகிதம் வரையிலான அபராதங்களும் செலுத்த வேண்டிவரும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதிக்கு முன்புவரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் இருந்த மொத்த மதிப்பீட்டு தொகை ரூபாய் 14 ட்ரில்லியனில் கிட்டத்தட்ட ரூபாய் 3 ட்ரில்லியன் ($45 billion) வரையிலான தொகை கணக்கில் செலுத்தப்படாமலும் அல்லது புதிய நோட்டுகளாக மாற்றப்படாமலும் விட்டுவைக்கப்பட்டு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கணிசமான அளவிலான தொகை இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை குறிப்பில் ஒரு வரவாக குறித்து காட்டப்பட்டு, பின்னர் அரசாங்க கஜானாவிற்கு இது ஒரு "பங்காதாயமாக" கருதி மாற்றம் செய்யப்பட்டுவிடும்.
பேரார்வத்துடன் பெரு வணிக சார்பு உடைய பிஜேபி அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கு இவற்றின், நிலைபாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு மூன்றாவது நன்மை யாதெனில் இந்த பணம் செல்லாததாக்குதல் திட்டமானது வங்கி அமைப்பு முறையில் அதிகளவிலான மக்கள் பங்கேற்பினை கட்டாயமாக்கும் என்பதாகும். இந்தியாவில் பெருமளவிலான மக்கள் வங்கியில் ஒரு கணக்கு கூட வைத்திருக்கவில்லை. இது ஏனென்றால் அவர்களுக்கு வங்கி அணுகுமுறை அவ்வளவு எளிதானதாக இல்லாமலிருக்கலாம் - பல ஊரக பகுதிகளில் வங்கிகள் இல்லாமலும் இருக்கலாம் - அல்லது அவர்கள் வங்கியில் கணக்கு வைத்து பராமரிக்கும் அளவிற்கு அவர்களிடம் குறைந்த அளவிலான கையிருப்புகூட இல்லாத நிலையில் மிகவும் நலிவுற்றவர்களாக இருக்கலாம்.
அதன் விளைவாக, நகர்புறங்களில் கூட பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் ரொக்கத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. மக்களை வங்கிகளில் கணக்கு துவங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் வரலாற்று அடிப்படையிலான பின்தங்கிய தன்மையினையும், அதேபோன்று இந்திய முதலாளித்துவத்தின் வங்கி முறை மற்றும் அதன் எல்லையினை வலுப்படுத்துவதன் மூலம் பின்தங்கிய முதலாளித்துவ பொருளாதாரத்தையும் "நவீனப்படுத்த" மோடி ஆட்சி முயன்றுவருகிறது. பிஜேபி அரசாங்கம் அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக வங்கி அமைப்புக்களின் பெரும் பகுதிகளை தனியார்மயமாக்குவதற்கு முன்னெடுக்கும் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.
பிஜேபி அரசாங்கம் மற்றும் இந்தியாவின் உயரடுக்கு அவர்களது இந்த பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் உண்மையினையும் மற்றும் அதன் மறைமுகமான இலக்குகளையும் எந்த அளவுக்கு உணர்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அது குறுகிய காலத்தில் இந்திய வங்கி முறை மற்றும் அரசாங்க நிதியிலும் எந்தவிதமான வலிநிவாரண தாக்கத்தைக் கொண்டுருப்பினும், பணம் செல்லாததாக்குதல் என்பது பாரிய மக்களின் அதிருப்தியினை மேலும் தூண்டுவதாகவே இருக்கின்றது, மேலும் இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு உயர் வளர்ச்சி விகிதத்தினை அடைவது பற்றிய மோடியின் கூற்று ஒருபுறம் இருந்தாலும், உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பிற்கு உள்ளான நிலையிலேயே இந்திய பொருளாதாரம் உள்ளது. கடந்த வாரம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் என்ற விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும், மேலும் 2015 முழுவதிலும் 150,000க்கும் குறைவான எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புக்களே உருவாக்கப்பட்டன என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
By Kranti Kumara and Arun Kumar
21 November 2016

Monday, 28 November 2016

கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள்

SEP public meeting in Colombo: The international implications of Trump’s election

19 November 2016
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி கலந்துரையாட, நவம்பர் 30, கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரியானதாக இருக்கும். கருக்கலைப்பைத் தடை செய்யும் மற்றும் பெருந்தொகை புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டம் தொடர்பான ட்ரம்ப்பின் வலியுறுத்தல்களும் தனது பிரதான மூலோபாயவியலாளராக வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் நவ-பாசிச குழுவினருடன் நேரடி உறவுகளைக் கொண்ட ஸ்டீபன் பானனை அவர் நியமித்தமையும் அதன் உண்மையான தன்மையை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. ட்ரம்ப் உள்நாட்டில் வர்க்கப் போரையும் வெளிநாடுகளில் அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதல்களையும் உக்கிரமாக்குவதோடு பிரமாண்டமான ஆபத்துக்களை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படுத்துவார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதான அவரது சீன-விரோத கருத்துக்களில் வெளிப்பட்டவாறு, ட்ரம்ப் பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் யுத்த தயாரிப்புகளை துரிதப்படுத்தி, இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதலுக்கான வாய்ப்பை அதிகரிப்பார். சீனா மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான ட்ரம்பின் கடுமையான நிலைப்பாடு, இந்தியாவை மேலும் ஊக்குவித்து, பிராந்தியத்தில் ஏற்கனவே வெடிப்பு நிலையில் இருக்கும் பூகோள-அரசியல் பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும்.
இலங்கையில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய பிரச்சாரத்துக்குள் கொழும்பை ஒருங்கிணைக்கும் பொருட்டு, 2015ல் அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையினால் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வரவுள்ள டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கத் தயார் என உடனடியாக தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பில் சோ.ச.க.-ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், ட்ரம்ப் தேர்வாவதற்கு வழிவகுத்த இன்றியமையாத அரசியல் காரணிகளும், குறிப்பாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தின் வர்க்கத் தன்மை மற்றும் பல்வேறு உயர் மத்தியதர வர்க்க அமைப்புகளும் போலி இடதுகளும் ஆற்றிய பாத்திரமும் விளக்கப்படும். இந்தக் கூட்டத்தில் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களைப் பற்றி விபரிக்கப்பட உள்ளதோடு, ஏகாதிபத்தியப் போர் அபாயத்தையும் அதிகரித்த சமூக சிக்கன வெட்டுத் தாக்குதல்களையும் எதிர்க்க தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றியும் தெளிவுபடுத்தப்படும்.
எமது கூட்டத்துக்கு வருகை தந்து இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகள் பற்றிய முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

நாள் மற்றும் நேரம்: நவம்பர் 30, புதன்கிழமை, மாலை 4 மணி

இடம்: கொழும்பு, புதிய நகர மண்டபம்

http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/meet-n23.shtml

இந்திய உயரடுக்கு ட்ரம்ப் இன் தேர்வை வரவேற்கிறது

Indian elite welcome Trump’s election

Image source from Internet
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இந்திய ஆளும் உயரடுக்கு உற்சாகத்துடன் வரவேற்று உள்ளது. இந்த வரவேற்புக்கு காரணம், ட்ரம்ப் இன் அதிதீவிரமான சீன-எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான்-எதிர்ப்பு நிலைப்பாடுகள் புது தில்லி இன் பிரதான ஆசிய போட்டியாளர்களுக்கு எதிரான அதன் புவிசார்-அரசியல் நலன்களை வலுப்படுத்தும் என்று கணிப்பிட்டு உள்ளதாலாகும்.
இந்திய அரசாங்கத்திற்கும், மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் இடையில் போதுமான முந்தைய கலந்துரையாடல்கள் இல்லாத நிலை குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், இந்தியாவையும் மற்றும் அதன் இந்துமத மேலாதிக்கவாத பிரதம மந்திரி நரேந்திர மோடியையும் தனது பிரச்சார உரைகளிலும் அமெரிக்க ஜனாதிபதி குறித்து பாராட்டி துதிபாடுகிறார் என்று அனைத்து இந்திய ஊடக அறிக்கைகளும் அறிவிக்கின்றன. ஒரு "இந்துமத பலசாலி" ஆக 2002ல் குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைக்குத் தலைமை வகித்தவருமான மோடி, மற்றும் அவரது இரண்டு ஆண்டு கால இந்திய அரசாங்கமும் இனவாதத்தை தூண்டியும், அதிருப்தியாளர்களை ஒடுக்கியும் வந்திருக்கின்றன என்றும், மேலும் "பொருளாதாரத்திலும் மற்றும் அதிகாரத்துவத்திலும் சீரமைப்பை கொண்டுவருவதில் மிகுந்த சுறுசுறுப்பானவராக இருக்கும் பிரதம மந்திரி மோடி உடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். பெரிய மனிதர். நான் அவருக்கு எனது பாராட்டுக்கள்." என்றும் ட்ரம்ப் தெரித்தார்.
மோடி தனது பங்கிற்கு, வாஷிங்டன் உடனான புது தில்லி இன் "உலகளாவிய மூலோபாயக் கூட்டணி" தொடர்ந்து விரிவடையும் என்று நம்பிக்கை குரல் எழுப்புகிறார்.
மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின்  கீழ், இந்தியா, சீனாவிற்கு எதிரான வாஷிங்டன் இன் இராணுவ-மூலோபாய தாக்குதல்களில் ஒரு "முன்னணி நாடாக" உண்மையில் மாறிக்கொண்டு வருகிறது. மேலும், அதன் இராணுவ தளங்களை அமெரிக்க போர் விமானங்களும் மற்றும் போர் கப்பல்களும் வழக்கமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிசெய்து உள்ளது; தென் சீனக் கடல் சச்சரவு பற்றிய வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் சீன-எதிர்ப்பை திரும்பதிரும்ப கூறுவது; ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டுகள் ஆகியவற்றுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பினை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது.
இந்த வாரம் நடைபெற்ற இந்திய அரசியல் தலைவர்களுக்கான ஒரு தனி இரவு விருந்தில், மோடி, ட்ரம்ப் உடனான தனது "நல்ல உறவுகள்" பற்றி பெருமை பேசியதுடன், "இருதரப்பு உறவுகளுக்கு இடையிலான எந்தவொரு பாரிய மாற்றம்" குறித்தும் அச்சமுறுவதற்கு "எந்த காரணமும் இல்லை" எனவும் தெரிவித்ததாக Times of India  குறிப்பிட்டது.
மோடி, இந்தியாவின் உயர்மட்ட இராஜாங்க அதிகாரியான, வெளியுறவு செயலர் S.ஜெய்ஷங்கரை, ட்ரம்பின் இடைக்கால  அணித் தலைவர்களை சந்திக்கவும், ஜனவரி மத்தியில் இந்த பில்லியனர் வாய்ச்சவுடால் அரசியல்வாதி, ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், ட்ரம்ப்-மோடி சந்திப்புக்கு அவர்களுக்கு அழுத்தம்கொடுக்கவும் அமெரிக்காவுக்கு அனுப்பினார்.
சேவானந்த் கட்டலாவின், "ட்ரம்ப் இன் தேர்வினால் இந்தியாவிற்கு என்ன பயன்?" என்ற தலைப்பிட்ட முதல் கருத்துக் கட்டுரையில் Firstpost இல், ஜனநாயகக் கட்சி தலைமையில் இருந்ததைவிட ட்ரம்ப் இன் தலைமையிலான நிர்வாகத்திலிருந்து "இந்தியா மேலும் அதிக பயன்களைப் பெற முடியும்" என்று விவாதிக்கிறது, ஏனென்றால், "சீனா மற்றும் பாகிஸ்தான் மீதான ட்ரம்ப் இன் கடுமையான நிலைப்பாடு" அவ்வாறு உள்ளது. மேலும், "உலகிலேயே மிக ஆபத்தான நாடு" என்று பாகிஸ்தானை ட்ரம்ப் முத்திரைகுத்துவதையும், "பாகிஸ்தானை கட்டுப்படுத்த" இந்தியாவை அவர் அழைப்பதையும் கட்டலா குறிப்பிடுகிறார். கூடுதலாக அவர், ட்ரம்ப் இன் நிர்வாகம் "பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் உதவிகளை நிறுத்துவதற்கு முனைப்பாக இருக்கவேண்டும்," என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில் போதுமான சுமையை தாங்கிக்கொள்வில்லை என்ற நிலைப்பாட்டை கொண்ட அவரது பிரிவினர் அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு அமைப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தலாம். இந்த கன்னை பற்றி குறிப்பிடும் அவர், இஸ்லாமாபாத், தாலிபான் உடன் போர் புரிவது போன்று "பாசாங்கு" செய்து கொண்டே, "அமெரிக்காவிடமிருந்து உதவிகளை சேகரித்துக் கொண்டே இருக்கிறது" என்றும் வாதிடுகிறார்.
இந்நிலையில், இந்தியா வாஷிங்டன் உடனான அதன் மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மைக்கு வழிதேடும் மோடியின் தலைமையிலான இந்தியா, அச்சுறுத்தல், துன்புறுத்தல்கள் மற்றும்  இராணுவ அழுத்தம்  மூலமாக  சர்ச்சைக்குரிய காஸ்மீர் பகுதியில் உள்ள இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய தீவிரவதிகளுக்கு இஸ்லாமாபாத் செய்துவரும் எந்தவொரு இராணுவ தளவாட உதவிகளையும் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தும் பிரச்சாரத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. செப்டம்பர் இறுதியில், மோடி அரசாங்கம் பாகிஸ்தான் உடனான புது தில்லி இன் "மூலோபாய சுய தடுப்பு" எனும் கொள்கையை கைவிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உள்ளே எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்திவருகின்றது, அதனால் "பயங்கரவாதிகள்" மற்றும் அவர்களது பாகிஸ்தானிய "பாதுகாவலர்கள்" மீது கடும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் பிரகடனப்படுத்திய வகையில் இந்த விவகாரம் ஒரு புதிய தரத்தை அடைந்துள்ளது.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் அப்பட்டமான சட்டவிரோத மற்றும் உயர்ந்தபட்ச ஆத்திரமூட்டுதல்களுடன் கூடிய தாக்குதல்களை ஒபாமா நிர்வாகம் முதலில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் ஆதரித்தது. அதன் அணுஆயுதமேந்திய அதன் பிரதான போட்டியாளருடனான மோதலுக்கு இன்னும் பாரியளவு சுதந்திரத்தை எதிர்விருக்கும் ட்ரம்ப் இன் நிர்வாகம் இந்தியாவிற்கு கொடுக்கும் என புது தில்லி இப்பொழுதும் நம்பிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்டு வரை இந்தியாவின் அமெரிக்க தூதராக இருந்த அருண் குமார் சிங், சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய பலமாக இந்தியாவைப் பயன்படுத்தும் வாஷிங்டனின் கொள்கைக்கு ஒரு வலுவான இருகட்சி ஆதரவினை வலியுறுத்துகிறார் என்று Times of India தெரிவிக்கிறது. மேலும் அவர், ஜுலை மாதம் குடியரசு கட்சி மாநாட்டின் போது, மூத்த குடியரசு கட்சியினர் மற்றும் ட்ரம்ப் இன் தேர்தல் பிரச்சார அதிகாரிகள் உடனான தனது கலந்துரையாடல்களில், "இந்தியாவை ஒரு சாதகமான தனித்த பாதுகாப்பு வழங்குநராக கருதுவது, மற்றும் 21ஆம் நூற்றாண்டில் ஒரு வரையறுக்கப்பட்ட அமெரிக்க-இந்திய உறவுகளை எதிர்நோக்குவதுமான வகையில், இந்தியாவின் எழுச்சிäயை அணைத்துக்கொண்டு தற்போது வெளிப்படுத்தப்பட்டிருந்த அமெரிக்க கொள்கையினை ட்ரம்ப் இன் நிர்வாகம் அப்படியே தொடரும் என்ற எனது திடமான நம்பிக்கையினை மீண்டும் வலுப்படுத்தி உள்ளேன்," என்றும் கூறுகிறார். 
இந்திய மூலோபாயவாதி C. ராஜா மோஹன், இந்தியாவின் ஒரு வலுவான ஆதரவாளராக, சீனா-எதிர்ப்பு "சமநிலைக்கு" ஏதுவாக வாஷிங்டன் உடனான இந்தியாவின் கூட்டுக்களை எப்பொழுதும் நெருக்கமானதாக வைத்திருக்கிறார். அமெரிக்க தலைமையிலான உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கமைப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அமெரிக்கா அதன் பாரம்பரிய நட்பு நாடுகளிடமிருந்து நிதி மற்றும் இராணுவ செலவினங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ட்ரம்ப் அழைப்பு விடுவதை இந்தியாவும் தன்னை ஒரு முக்கிய ஆசிய மற்றும் இந்திய சக்தியாக உருவெடுக்க வைத்திருக்கும் அதன் சொந்த குறிக்கோள்களை முன்னெடுக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் விவாதிக்கிறார். "புவிசார் அரசியல் முனையில்," என்ற தலைப்பில், மோஹன் அவரது இந்தியன் எக்ஸ்பிரஸின் வழக்கமான பத்தியில், ஐரோப்பிய-ஆசிய நிலப்பகுதிகள் மீதான அமெரிக்காவின் இராணுவ சுமைகள் பற்றிய ட்ரம்ப் இன் மறுபரிசீலனையானது, தில்லி தனது பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அதன் சொந்த பங்களிப்புகளை விரிவாக்கும் ஒரு அரிய வாய்ப்பினை வழங்குகிறது என எழுதினார். அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின் அச்சாணியாக இந்தியா செயல்படுவதை காட்டிலும், சக்தி அமைப்பின் பிராந்திய சமநிலைக்கு தன்னை ஒரு முன்னணி அங்கமாக உருவாக்கிக் கொள்ளலாம். ட்ரம்ப் இன் கண்ணோட்டத்தின்கீழ், ஒருவேளை அமெரிக்கா நேரடி பிராந்திய அமைப்புக்களாக இருந்து செயல்படுவதற்கு பதிலாக அதனை ஒரு தொலைதூர வல்லரசாக கருதி, ஆதரவாக இருந்து உதவிகளை செய்யுமானால், அதன்மூலம், இந்தியா ஒரு வலுவான யுரேசிய கூட்டணியை உருவாக்க தேவைப்படுகின்ற பாரிய இடத்தையும் மற்றும் தகுதியையும் பெறும்.
RSS நிழலில் பிஜேபி இன் இந்து வலதுசாரி கூட்டணிகள் உணர்ச்சிபொங்க ட்ரம்பை பாராட்டியுள்ளனர். குறைந்தபட்சமாக அவரது முஸ்லீம்-எதிர்ப்பு மதவெறியே இதற்கு முக்கிய காரணம். RSS's Organiser இல் வந்த ஒரு அட்டைப்படக் கட்டுரையில் "பாரதம் (இந்தியா) மற்றும் இந்துக்களுக்கு ஒரு விருப்பத்திற்குரியவராகள் ட்ரம்ப் இருக்கிறார்" என்று உரத்துக் கூறுகின்றனர். "பயங்கரவாதத்தின் மீதான போர்" கட்டுக்கதை தவறானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று தன்மைபடுத்தி, "ட்ரம்ப் இன் தேர்வினால் பாரதம் ஒரு மாபெரும் பயனாளியாக இருக்கும், ஏனென்றால் இரண்டு நாடுகளுமே இஸ்லாமிய தீவிரவாதத்தின் முதன்மை இலக்குகளாக இருக்கின்றன." என்று கட்டுரை தொடருகின்றது, மேலும் "உலக பொருளாதாரத்தில் காணப்படும் சீனாவின் ஆதிக்கத்தினை" தடுக்க "பாரதம்-அமெரிக்கா-ரஷ்யா கூட்டணிக்கு" ஒரு அழைப்பு விடுப்பதோடு இது நிறைவுறுகின்றது.
இந்திய உயரடுக்கு முழுவதும், ட்ரம்ப் இன் சீன விரோத போக்கு குறித்து மகிழ்ச்சியடைகின்றது. ஆனாலும், அவருடைய அமெரிக்கா முதல் என்ற பாதுகாப்புவாத திட்டத்தினால் இந்தியா ஒதுக்கப்பட்டுவிடலாம் என்பது குறித்த கணிசமான கவலையும் இதில் இருக்கிறது. அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களின்போது, வெளிநாடுகள் உடனான அவரது பேரினவாத கண்டனங்களின் ஒரு அங்கமாக அமெரிக்க வேலைகளை "பறிக்கப்படுவதற்கு", அதாவது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு தொழில் வல்லுநர்களை வேலைக்கு அமர்த்த அனுமதியளிக்கும் H1-B விசாவினை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக திரும்ப திரும்ப ட்ரம்ப் கூறுகிறார். அமெரிக்காவில் தற்போது பணியில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் இருக்கும் (IT Sector) அனைவரும் இந்த H1-B விசா அனுமதியில் தான் இருக்கின்றனர். H1-B பணியாளர்கள் தான் இந்தியாவிற்கு கணிசமான அளவு நிதி வருமானத்தை கொடுக்கின்றனர். இருந்தபோதிலும், இந்திய உயரடுக்கின் பெரும் கவலையானது H1-B இட ஒதுக்கிட்டு குறைப்பின் மீதானது அல்ல, அந்த திட்டம் அகற்றப்படுவது பற்றிக்கூட ஒன்றும் கூறுவதற்கில்லை, ஆனால் அமெரிக்காவில் உள்ள இந்தியா சார்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்த திட்டம் சீர்குலைக்கும் என்பதனாலேயே ஆகும்.
ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் இன் ஆக்ரோஷமான நிலைப்பாடு குறித்தும் கவலைகள் இருக்கின்றன. ஏனென்றால் அவர், ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அச்சுறுத்தி உள்ளார், இது இந்திய-ஈரான் பொருளாதாரம் மற்றும் மூலோபாயக் கூட்டுக்களை வெட்டிவிடுவதில் ஒரு எழுச்சியை உருவாக்கும். மத்திய ஆசியாவுடன் ஒரு பொருளாதார வழித்தடத்தை இந்திய ஏற்படுத்திக்கொள்வதற்கு தகுந்தவாறு இந்திய திட்டங்களின் மையமாக ஈரானியன் துறைமுகமான சாபாஹார் இருக்கிறது. இங்குதான் இந்தியா சீனாவுடன் மூலோபாய செல்வாக்கிற்காகவும் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றது.
இந்தியாவில் அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்குகள் ட்ரம்ப் இன் தேர்வுக்கு உற்சாகத்துடன் பதிலிறுக்கும் அதேவேளையில், பாகிஸ்தானில் இத்தேர்வு முடிவு ஒரு நடுக்கத்தினூடேயே கையாளப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க கூட்டணி வலுப்படும் அதேவேளையில், இந்தியாவில் கருத்து நிலவுவது போலவே, ட்ரம்ப் இன் நிர்வாகம் பாகிஸ்தான் உடனான அமெரிக்க கூட்டுக்களை இன்னும் குறைக்கும் என்றே இஸ்லாமாபாத்திலும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
புது தில்லியுடனான வாஷிங்டனின் மூலோபாய அரவணைப்பானது இப்பிராந்திய சக்தி சமநிலையினை நிலைகுலையச் செய்யும் என்று இஸ்லாமாபாத் எப்போதும் உரத்த குரலில் திரும்ப திரும்ப எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கைகளை வாஷிங்டன் புறக்கணிப்பதை முன்னிட்டு, அமெரிக்க-பாகிஸ்தானிய உறவுகள் மேலும் நலிவுறும் பட்சத்தில் மட்டுமே ஒரு வளர்ச்சி ஏற்படும் என்ற கருதுவதனால், பாகிஸ்தான் பெய்ஜிங் உடனான அதன் நீண்டகால உடன்படிக்கையினை மேம்படுத்த முனைகின்றது.
எவ்வாறாயினும், வழமையாக, "அமெரிக்காவின் நேட்டோ அல்லாத ஒரு முக்கிய கூட்டணியாகவும்" மற்றும், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இராணுவ ஒழுங்கமைப்பு அச்சாணியாகவும் பாகிஸ்தான் தொடருகின்றது.
லாகூரைச் சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான ஹசன் அஸ்காரி ரிஜி, "அமெரிக்கா பாகிஸ்தானை கைவிடாது" என்று எழுதினார். மேலும் அவர், "ஆனால் நிச்சயமாக, பாகிஸ்தானுக்கு ஹிலாரி கிளின்டனை விட ட்ரம்ப் இன்னும் மேலான ஒரு கடுமையான ஜனாதிபதியாகவே இருப்பார்...... என்றும், ஆனால் பாகிஸ்தான் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியா ஒரு சிறந்த மற்றும் சுமுகமான தொடர்பினையே ட்ரம்ப் உடன் கொண்டிருக்கும் என்றே நான் கருதுகிறேன்." என்றும் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் (PPP) மற்றும் அமெரிக்காவின் முன்னாள் பாகிஸ்தானிய வெளியுறவு தூதருமான ஷெர்ரீ ரெஹ்மான், "கடினமான பாதை முன்னுள்ளது." என்று Dawn இல் எச்சரித்து எழுதுகிறார். அமெரிக்க-பாகிஸ்தானிய கூட்டணியை "அல்லது, சீனாவின் பிரதான கூட்டாளியாக பாகிஸ்தான் இருப்பதை தடுக்கவோ பகிரங்கமாக ட்ரம்ப் கேள்வி எழுப்பாது விடலாம். மிகமோசமான சூழ்நிலையாக பொருளாதாரத் தடைகள் தள்ளிப்போடப்படலாம், ஆனாலும், அவசரமும் மற்றும் திசைகாட்டலும் இல்லாமல் இது வெளியுறவு கொள்கைக்கு பொருந்தாது."
பாகிஸ்தானிய உயர்மட்டத்தினர் இடையே அமெரிக்கா மீதான பரந்த அதிருப்தியே காணப்படுகிறது. அமெரிக்கா அதன் புவிசார் அரசியல் விளையாட்டில் பாகிஸ்தானை ஒரு பகடைக்காயாகவே மீண்டும் மீண்டும் "பயன்படுத்தி", பின்னர் "கைவிடகூடும்" என்ற விதமாகவே இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் ஆட்சிக்கே ஒரு அதிமுக்கிய ஆதரவாக இருந்து வந்திருக்கிறது, இருந்தபோதிலும், பாகிஸ்தானிய முதலாளித்துவம் வாஷிங்டன் உடனான தனது கூட்டணியை நிலைநாட்டும் முயற்சியில் தீவிரமாகவே உள்ளனர்.    
பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு அதனை ட்ரம்ப்பிற்கு உகந்தவராக காட்டிக்கொள்வதில் இருக்கும்  ஆர்வம், மேலும் இந்தியா உடன் அதிகரித்துவரும் போர் நெருக்கடி குறித்த அதன் பயம் இவ்விரண்டும் பற்றி ஒரு சமிக்கையாகவே இது காணப்படுகின்றது. கடந்த வாரம், பாகிஸ்தானிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் நஃபீஸ் ஜக்காரி, ஏழு தசாப்த காலமாக பழமைவாய்ந்த காஷ்மீர் சர்ச்சைக்கு "மத்தியஸ்தம்" செய்ய ட்ரம்ப் இடம் முறையீடு செய்து உள்ளார்.
By Deepal Jayasekera and Keith Jones
19 November 2016
http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/indi-n26.shtml

Sunday, 27 November 2016

ட்ரம்ப் தேர்வாயிருப்பதன் பின்னர்: அமெரிக்க அரசியலின் மறுஒழுங்கமைப்பு

After the election of Trump: The realignment of US politics

2016 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதன் பிந்தைய ஒன்றரை வார காலத்தில், ஜனநாயகக் கட்சியின் முன்னிலைப் பிரமுகர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவரை ஏற்றுக் கொள்வதற்கு அசாதாரண வேகத்துடன் இயங்கினர். நவம்பர் 8 க்கு முன்பாக ட்ரம்ப்பை நாட்டினதும் உலகினதும் இருப்புக்கே அச்சுறுத்தலாக கூறி கண்டனம் செய்து கொண்டிருந்த அதே மனிதர்கள் இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கும் ஒத்துழைப்பதற்கும் உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த பத்து நாட்களில் என்ன நடந்தது? முதலாவதாய் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் இருந்தும் தேர்தலில் ட்ரம்ப்பின் போட்டியாளராக இருந்த ஹிலாரி கிளிண்டனிடம் இருந்தும் நல்லிணக்க அறிக்கைகள் வந்தன. ட்ரம்ப் ”வெற்றிகரமாக” இயங்குவதை உறுதி செய்வது தான் தனது “முதலிட முன்னுரிமை” என்று ஒபாமா வாக்களிப்பு முடிவு கிட்டிய அடுத்த நாளிலே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி தேசிய பத்திரிகையும் கிளிண்டன் பிரச்சாரத்தில் ஆர்வமுடனான ஒரு ஊக்குவிப்பாளருமாக இருந்த நியூ யோர்க் டைம்ஸ், தேர்தல் செய்திகளை தான் கையாண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரியமை பின்னர் வந்தது.
செனட்டர்கள் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் உட்பட பெயரளவுக்கு “இடது” ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப்பின் திட்டநிரலின் அடிப்படையான விடயங்களில் அவருடன் “இணைந்து செயல்பட” இருப்பதாகக் கூறுவதற்காக குதித்தோடி வந்தனர், AFL-CIO இன் தலைவரான ரிச்சார்ட் ட்ரம்கா மற்றும் UAW இன் தலைவரான டென்னிஸ் வில்லியம்ஸ் போன்ற தலைமையான தொழிற்சங்க நிர்வாகிகளும் அவ்வாறே செய்தனர். இந்த வாரத்தில் துணை ஜனாதிபதி ஜோசப் பைடன், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மைக் பென்ஸ் உடனான ஒரு சந்திப்பிற்குப் பின்னர் அவரைப் பாராட்டினார், புதிய நிர்வாகத்தின் “முதல் நாளில்” இருந்தே பதவி “சரியான கரங்களில்” இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிபோக்கு முழுவதிலுமே, வரவிருக்கும் நிர்வாகத்தின் அதி-வலது திட்டநிரல் - ஒரு இனவாதியும் பாசிஸ்டுமான ஸ்டீபன் பானனை தலைமை மூலோபாய ஆலோசகராய் ட்ரம்ப் தேர்வு செய்ததில் இது உச்சம்பெற்றது - உதாசீனப்படுத்தப்பட்டது, அல்லது தணித்துக் காட்டப்பட்டது. ட்ரம்ப் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வாக்குகள் அளவுக்கு மக்கள் வாக்குகளில் தோற்றுப் போயிருந்தார் என்ற உண்மைக்கும் இதே கதியே நிகழ்ந்தது, புதிய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வற்கான முயற்சிக்கு அசவுகரியமான ஒரு உண்மையாக ஜனநாயகக் கட்சியினராலும் ஊடகங்களாலும் அது கையாளப்பட்டது.
ஜனநாயகக் கட்சியின் குணாம்சமாக நீண்டகாலமாக இருந்து வருகின்ற முதுகெலும்பற்ற தன்மையையும் தவிர, ஒரு குறிப்பிட்ட அரசியல் தர்க்கமும் கூட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரமானது, ஆளும் வர்க்கத்திற்குள்ளான கடுமையான கன்னை மோதல்களுக்கு வெளிப்பாட்டை வழங்கிய அதேவேளையில், அதன் விளைவானது வர்க்கக் கொள்கை ஒரு ஆவேசமான தேசியவாத திசையில் மறுநோக்குநிலை காண்பதற்கு பாதையமைத்து கொடுத்திருக்கிறது.
ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள், வாஷிங்டனின் புதிய அதிகாரத்திற்கு அளித்திருக்கும் பதிலிறுப்பு மிகவும் வெளிப்பட்டு நிற்கிறது. இந்த மாற்றத்திற்கு செனட்டின் ஜனநாயகக் கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர், அவர்கள் புதனன்று, ஓய்வு பெறும் நெவெடா மாநிலத்தின் ஹாரி ரீட்டின் இடத்திற்கு சார்ல்ஸ் சூமர் என்ற ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்தனர்.
நியூ யோர்க் மாநிலத்தின் செனட்டரான சூமர், வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களை ஆர்வத்துடன் பாதுகாப்பவராவார். அதேநேரத்தில் அவர் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கையில் ஒரு கூடுதல் மூர்க்கமான சீன-எதிர்ப்புக் கொள்கையுடன் அடையாளப்படுத்தப்படுபவரும் ஆவார். சீன இறக்குமதிகள் மீது தண்ட வரிகளுக்கான அச்சுறுத்தலைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அரசாங்கம் சீனாவை அதன் நாணயமதிப்பை மறுமதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கோருகின்ற ஒரு தீர்மானத்தை குடியரசுக் கட்சியின் போர் வெறியரான தெற்கு கரோலினாவின் லிண்ட்சே கிரஹாம் உடன் சேர்ந்து வருடம் தவறாமல் இவர் கொண்டு வந்திருந்தார்.
அத்தகையதொரு கொள்கையின் மிக ஆவேசமாக வலியுறுத்துபவராக இருந்து வருபவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் திரு.ட்ரம்ப் ஆவார், இவர் சீனாவை நாணய மதிப்பைக் கைப்புரட்டு செய்யும் நாடாக முத்திரை குத்தும் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பிப்பேன் என்றும், பீஜிங்கை தனது நாணயமதிப்பை மறுமதிப்பீடு செய்ய நிர்ப்பந்திக்கும் பொருட்டு 45 சதவீதம் வரையான வரிகளை விதிப்பேன் என்றும் அறிவித்து வந்திருக்கிறார். ட்ரம்ப், சூமர் இருவருமே ஒருவரையொருவர் பல தசாப்தங்களாக அறிந்தவர்களாய் இருந்திருக்கின்றனர், சூமரின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் பிரச்சாரங்களுக்கு ட்ரம்ப் நிதிப்பங்களிப்பு செய்திருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியினரின் ட்ரம்ப்-ஆதரவு பிரச்சாரத்தை பெரும்பாலும் ஆதரித்து எழுதும் நியூ யோர்க் டைம்ஸ், தனது வியாழக்கிழமை முதன்மைச் செய்திக்கு “செனட் ஜனநாயகக் கட்சியினரின் ஆச்சரியமான மூலோபாயம்: ட்ரம்ப்பின் பின்னால் நிற்க முயற்சி செய்கின்றனர்” என்று தலைப்பிட்டிருந்தது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினர் “ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ஜே. ட்ரம்ப்பை அவரது சொந்தக் கட்சிக்கு சிக்கலாக்கும் வண்ணம் அவரின் பல ஆலோசனைகளின் பின்னால் நிற்கும் ஒரு திட்டநிரலை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று அந்தச் செய்திக் கட்டுரை தெரிவித்தது.
ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்புக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற தலைமையுடன் உறவுகள் இல்லாததை மனதில் கொண்டு, அவர்கள் பெருமளவில் உடன்படக் கூடிய அவரது வர்த்தகப் போர் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவரை தங்களின் பக்கம் வென்றெடுத்து விடலாம் என்று நம்புகின்றனர். டைம்ஸ் செய்தி தொடர்ந்து எழுதுகிறது: “ஜனநாயகக் கட்சியின் புதிய சிறுபான்மைத் தலைவராக புதனன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நியூ யோர்க்கின் செனட்டரான சக். சூமர் திரு.ட்ரம்ப் உடன் பல முறை பேசியிருக்கிறார், அத்துடன் வரவிருக்கும் வாரங்களில் திரு.ட்ரம்ப்புக்கு பிடித்தமான வகையான ஜனரஞ்சக பொருளாதார மற்றும் அறநெறி முன்முயற்சிகளை அறிவிப்பதற்கும் ஜனநாயகக் கட்சியினர் திட்டமிடுகின்றனர்.”
ட்ரம்ப்புடன் ஜனநாயகக் கட்சியினரின் கூட்டணியை, “வெள்ளை தொழிலாள வர்க்கத்தை” நோக்கிய ஒரு ஜனரஞ்சகமான திருப்பம் என்பதாக முன்வைப்பதற்கான முயற்சி ஒரு மோசடியாகும். தேசியவாத திட்டநிரலானது அமெரிக்கப் பெருநிறுவனங்கள் அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக தங்களது நலன்களை மூர்க்கமாக திட்டவட்டம் செய்வதையே நோக்கம் கொண்டதாகும். உலகெங்கிலும் இன்னும் கூடுதல் வன்முறையுடன் இராணுவத் தலையீடு செய்வது இந்தக் கொள்கையின் துணைக்கூறு ஆகும்.
ஜனநாயகக் கட்சியில் சாண்டர்ஸின் புதிய உயர்த்தப்பட்ட பாத்திரமானது (அவர் இந்த வாரத்தில் செனட்டின் தலைமைக்கு நியமனம் செய்யப்பட்டார்) குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியின்போது வர்த்தக உடன்படிக்கைகளுக்கான எதிர்ப்பின் மீதே தனது பிரச்சாரத்தின் பெரும்பகுதியை சாண்டர்ஸ் அமைத்துக் கொண்டிருந்தார். கடுமையான பாதுகாப்பு வாதம் பேசக் கூடியவரும், குடியரசுக் கட்சிக்கு தாவுவதைக் குறித்து விவாதித்து வந்திருந்தவருமான மேற்கு வெர்ஜினியாவின் செனட்டர் ஜோ மான்சின் செனட் தலைமைக்கு உயர்த்தப்பட்டுள்ள இன்னொருவர் ஆவார்.
ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப்புடன் குறிப்பிட்ட பிரச்சினைகளில் “சேர்ந்து வேலை செய்வார்கள்” என்றும் மற்றவற்றில் எதிர்ப்பார்கள் என்றும் கூறுவது ஒரு அரசியல் கற்பனைக்கதை ஆகும். ஒரு தேசியவாத பொருளாதாரக் கொள்கையுடன் வெளிநாடுகளில் இராணுவ வலிமையை மூர்க்கமாகப் பயன்படுத்துவதும் தவிர்க்கவியலாமல் உடன்வந்தே தீரும். ஒரு ஊரறிந்த போர்வெறியரான ஓய்வுபெற்ற தளபதி மைக்கேல் ஃபிளின்னை தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ட்ரம்ப் நியமிக்க இருக்கிறார் என்று வியாழனன்று இரவு வந்த அறிவிப்பில் இதன் சமிக்கை வெளிப்பட்டது.
மேலும், தேசியவாத நடவடிக்கைகளின் மூலமாக பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு ஆளும் வர்க்கம் முயற்சி செய்யக் கூடிய மட்டத்திற்கு, அது அமெரிக்காவிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை தீவிரப்படுத்துவதையே அடிப்படையாகக் கொள்ள முடியும். ஆளும் வர்க்கம் ட்ரம்ப்பை நோக்கி திரும்புவதானது, சமூக எதிர்ப்பின் வளர்ச்சியைக் கையாளுவதற்கு கூடுதல் எதேச்சாதிகாரமான ஆட்சி வடிவங்களையும் போலிஸ்-அரசு வன்முறையையும் பயன்படுத்துவதற்கு அது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறி ஆகும்.
ட்ரம்ப்பின் தேர்வு ஆளும் வர்க்கத்தின் அரசியல் வழிமுறைகளில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது என்ற அதேநேரத்தில், அவருடைய கொள்கைகள் பல தசாப்தங்களாக இருந்து வருகின்ற ஒரு பொதுவான கோட்டின் பாதையிலேயே பயணிக்கின்றன.
வாஷிங்டனில் வடிவம் பெற்று வருகின்ற அதி-வலது, எதேச்சாதிகார, இராணுவவாத ஆட்சிக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்திற்கு என அமெரிக்க ஆளும் உயரடுக்கிடமோ அல்லது அதன் இரண்டு அரசியல் கட்சிகளிடமோ எந்த இடமும் இருக்கவில்லை. மக்கள் தொகையின் கால் பகுதிக்கும் குறைவான வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தான் கட்டவிழ்க்க இருக்கும் மூர்க்கமான பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எந்த மக்கள் உத்தரவும் கொண்டிராத வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகமானது, பிரம்மாண்டமான நெருக்கடி கொண்டதாகும்.
ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டமானது, மதிப்பிழந்து போன ஜனநாயகக் கட்சியின் எந்தக் கன்னையின் மூலமாகவோ அல்லது முதலாளித்துவ அரசின் எந்த ஸ்தாபகங்களின் மூலமாகவோ நடத்தப்பட முடியாது. தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தனது சொந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் ஊடாக சுயாதீனமான வகையில் அரசியல் அணிதிரட்டப்படுவது இதற்கு அவசியமாக இருக்கிறது.
Patrick Martin
18 November 2016
http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/trum-n19.shtml

ட்ரம்ப்பின் எதிர்கால பதவி நியமனங்கள் அமெரிக்க இராணுவவாதத்தின் தீவிரமயமாக்கலை காட்டுகிறது

Trump transition points to escalation of US militarism

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள-ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் வெளியுறவுத்துறை செயலருக்கான விருப்பத்தேர்வின் முன்னிலையில் நியூயோர்க் நகர முன்னாள் நகர முதல்வர் ருடோல்ப் யூலியானி இருப்பதாக பல ஊடகங்களும் குறிப்பிடுவது, எதிர்வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தினது அதிதீவிர வலதுசாரி குணாம்சத்திற்கும் மற்றும் ஆக்ரோஷமான இராணுவ குணாம்சத்திற்குமான மேலதிக அறிகுறியை காட்டுகின்றது.
யூலியானியே அப்பதவிக்கு விருப்பத்திற்குரியவராக இருப்பதாக ட்ரம்ப் பிரச்சாரத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அசோசியெடெட் பிரஸ் க்கு தெரிவித்தார், அதேவேளையில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தவரும், அதேபோன்ற வலதுசாரி மற்றும் இராணுவவாத நபருமான ஜோன் போல்டனும் போட்டியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த கால் நூற்றாண்டு அமெரிக்க போர் ஒவ்வொன்றிற்கும் விடாப்பிடியான ஆதரவாளர்களாக இருந்துள்ள இவ்விருவருமே, வரவிருக்கும் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் உயர்மட்ட வெளியுறவு கொள்கை பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்ற உண்மை, சமீபத்திய அமெரிக்க இராணுவ தலையீடுகளை ஏதோவிதத்தில் அவர் எதிர்க்கிறார் மற்றும் “தேசத்தைக் கட்டமைப்பார்" எனும் முன்னணி பிரச்சாரம் மீதான ட்ரம்ப் இன் பாசாங்குத்தனத்தினது பொய்களை எடுத்துக்காட்டுகிறது.
அவர் ஈராக் போருக்கு எதிராக இருந்ததாக கூறும் ட்ரம்ப் இன் போலிக்கூற்றுகள், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஹிலாரி கிளிண்டன் எதனுடன் மிகத் தெளிவாக அடையாளம் காணப்பட்டாரோ அந்த முடிவில்லா அமெரிக்க இராணுவ தலையீடுகள் மீதான மக்கள் எதிர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதற்காகவே இருந்தன. அதேநேரத்தில், எவ்வாறிருப்பினும், அவர் அமெரிக்க இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரிக்கவும் மற்றும் வாஷிங்டனின் அணுஆயுதங்களை நவீனப்படுத்தவும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினார்.
அவரது "அமெரிக்கா முதலிடத்தில்" வாய்சவுடாலும் மற்றும் பொருளாதார தேசியவாதத்தின் ஊக்குவிப்பும், இந்த உலகத்தை முன்பினும் அதிகமாக ஒரு மூன்றாம் உலக போருக்கு நெருக்கத்தில் கொண்டு செல்லும் அமெரிக்காவினது ஆக்ரோஷமான உலகளாவிய இராணுவ நடவடிக்கையைக் கூடுதலாக தீவிரப்படுத்துவதுடன் கை கோர்த்து செல்கிறது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியின்படி, முன்னாள் நியூ யோர்க் மேயர் அவரது சொந்த நியமனத்திற்கு பகிரங்கமாக அழுத்தமளித்து வருகிறார். அப்பத்திரிகை குறிப்பிடுகையில், வாஷிங்டனில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலைமை செயலதிகாரி குழுவிற்கு திங்களன்று வழங்கிய கருத்துக்களின் போது “தாம் [வெளியுறவுத்துறை செயலர்] பதவிக்கு ஆர்வமாக இருப்பதாக" யூலியானி "பல முறை முறையிட்டார்" என்று குறிப்பிட்டது. அக்கூட்டம் "வாஷிங்டனின் பல ஆண்டுகால மிகப் பெரிய எண்ணற்ற மாற்றத்தின் தாக்கங்களை புரிந்து கொள்ள வணிக தலைவர்களுக்கு இணையற்ற சந்தர்ப்பமாக" விளம்பரம் செய்யப்பட்டது.
ISIS மீதான போர் என்றழைக்கப்படுவது அந்நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று அவரது கருத்துக்களில் யூலியானி வலியுறுத்தியதன் மூலமாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலுமான போர்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உலகளாவிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடரும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். தனது சொந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கும் மற்றும் அவரது நிர்வாகத்தை குணாம்சப்படுத்திய கட்டுங்கடங்கா ஊழலை மறைப்பதற்கும் 9/11 சம்பவத்தின் இரத்தந்தோய்ந்த அங்கியை போர்த்திக் கொள்ள ஒருபோதும் தயங்காத அந்த முன்னாள் நியூயோர் நகரசபை தலைவர், அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்றபோதினும், அக்கொள்கையில் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளார்.
ஈரான் உடனான அணுஆயுத உடன்படிக்கையை கைவிடுவதற்கான ட்ரம்ப் இன் கோரிக்கைகள் குறித்து யூலியானியிடம் கேட்கப்பட்ட போது, “நீங்கள் முன்னுரிமைகளை அமைக்க வேண்டும். ஆகவே முன்னுரிமையில் ISIS அழிப்பது முதலில் இருந்தால், மற்றவற்றை விட்டுவிட்டு ISIS ஐ ஒழித்து விட்டு, பின்னர் இதற்கு திரும்ப வேண்டியிருக்கும்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரவிருக்கும் நிர்வாகத்தின் திட்டநிரலில் ஈரான் உடனான ஒரு புதிய அமெரிக்க போர் உள்ளது. 2008 இல் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு யூலியானி போட்டியிட்ட போது, ஈரானின் அணுஆயுத திட்டத்திற்கு எதிராக தந்திரோபாய அணுஆயுதங்களை பயன்படுத்துவதை "பரிசீலனையில் இருந்து நீக்கக்கூடாது" என்று இவர் தெரிவித்திருந்தார்.
மேலும், ட்ரம்ப் ரஷ்யாவுடனான நல்லிணக்கம் குறித்து வெற்று வார்த்தைகளை பேசுகின்ற நிலையில் —ஜனநாயகக் கட்சியினரால் வலதிலிருந்து அவர் விளாடிமீர் புட்டினின் ஒரு கைப்பாவை என்று மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகின்ற போதினும்— யூலியானியோ மாஸ்கோவை நோக்கி மிகவும் அச்சுறுத்தும் தொனியை ஒலித்தார். மாஸ்கோவுடனான உறவுகளை மாற்றுவதற்கான ஒரு வழிவகையாக இராணுவ மோதலை அவர் அறிவுறுத்தினார்.
“ரஷ்யா தன்னை ஒரு இராணுவ போட்டியாளர் என்று கருதுகிறது, ஆனால் நிஜத்தில் அப்படியில்லை,” என்று யூலியானி தெரிவித்தார். “ஒபாமா நிர்வாகத்தின் கீழ், நமது இராணுவ பிரயோகம் கொண்டு அச்சுறுத்தக் கூட நாம் விருப்பமில்லாமல் இருந்தது தான் ரஷ்யாவை மிகவும் பலப்படுத்தி உள்ளது,” என்றார்.
யூலியானிக்கு எந்தவொரு வெளியுறவு கொள்கை அனுபவமும் இல்லை என்ற போதினும், அவர் ஒரு பிரதான ட்ரம்ப் விசுவாசியும் மற்றும் பொலிஸ் அரசு ஆட்சிமுறைகளின் ஒரு நீண்டகால ஆதரவாளரும் ஆவார். நகர முதல்வராக அவர் பதவி வகித்தபோது, ஒரு ஒடுக்குமுறையான "நின்று கைமாற்றி ஒப்படைக்கும்" (stop and frisk) திட்டத்துடன் அடையாளம் காணப்பட்டார் —பின்னர் அத்திட்டம் அரசியலமைப்புக்கு புறம்பானதாக தடுக்கப்பட்டது— அத்திட்டம் நடைமுறையளவில் அந்நகரின் ஒவ்வொரு சிறுபான்மையினரையும் மற்றும் தொழிலாள வர்க்க இளைஞரையும் சந்தேகத்திற்குரியவராக மாற்றியதுடன், விடாப்பிடியாக இருந்த Amadou Diallo மற்றும் Patrick Dorismond போன்ற அப்பாவி இளைஞர்களைப் பலி கொண்ட மூர்க்கமான தொடர் பொலிஸ் படுகொலைகளில் போய் முடிந்தது.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை தொடர்ந்து நியூயோர்க் நகரசபை தேர்தல்களை இரத்து செய்ய பரிந்துரைத்த அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தகைமை கொண்ட ஒரே மனிதராக தனக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரு புதிய பதவி காலத்தை வழங்க வேண்டுமென முன்மொழிந்தார். மிக சமீபத்தில் அவர் குறிப்பிடுகையில், நாடுதழுவிய ட்ரம்ப்-விரோத ஆர்ப்பாட்டங்களை பொலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு எதிர்க்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கான அவரது வெளிப்படையான பிரதான போட்டியாளர் ஜோன் போல்டன், ஒவ்வொரு விதத்திலும் அதேயளவிற்கு பிற்போக்குத்தனமானவரும் மற்றும் ஒருதலைபட்சமான அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தின் தீவிர ஆதரவாளரும் ஆவார். வெறுமனே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான், போல்டன் நியூ யோர்க் டைம்ஸ் இல் "ஈரானின் குண்டுகளைத் தடுக்க, ஈரான் மீது குண்டுவீசுங்கள்" என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரை கட்டுரை எழுதியிருந்தார். அவரது குறிப்புரை, “ஆட்சி மாற்றத்தை" தொடர்ந்து கடுமையான குண்டுவீச்சை கோரியது.
புளோரிடா வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்ட ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பிரச்சாரத்தின் வெற்றிகரமான நடவடிக்கையில் ஒரு வழக்கறிஞராக சேவையாற்றிய பின்னர், போல்டன் குடியரசு கட்சி வட்டாரங்களில் முக்கிய நபராக உயர்ந்தார்.
அவர் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போருக்கு குறைந்தபட்சம் 1998 இல் இருந்து வக்காலத்து வாங்குபவராக இருந்தார். சதாம் ஹூசைன் "பேரழிவுகரமான ஆயுதங்களை" தயாரித்து வருகிறார் என்றும், அல் கொய்தாவிடம் அவற்றை ஒப்படைக்க தயாரிப்பு செய்து வருகிறார் என்றும் கூறப்பட்ட பொய்கள் ஊக்குவிக்கப்பட்ட அந்த ஆண்டைத் தொடர்ந்து, ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பு போரைத் தயார் செய்வதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து, 2002 இல், அவர் வெளியுறவுத்துறையின் ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான துணை செயலராக இருந்தார்.
வெளியுறவுத்துறையில் அவரது முன்னாள் சக பணியாளர்களில் ஒருவரால் "அணைத்த பின்னர் உதைந்து விடும் ஒருவித நபர்" என்று வர்ணிக்கப்பட்ட போல்டன், புஷ் நிர்வாகத்தால் இடைக்கால நியமனமாக ஆகஸ்ட் 2005 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு தூதராக பெயரிடப்பட்டார், அது ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாக சேவையாற்றுவதற்காக இருந்தது, இதற்காக போல்டன் அவரது வெறுப்பை மீண்டும் மீண்டும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் போலவே யூலியானி மற்றும் போல்டன் இருவருமே, குவாண்டனாமோ, பக்ராம் விமானத் தளம் மற்றும் உலகின் ஏனைய நிழலுலக தளங்களில் பெண்டகன் மற்றும் சிஐஏ இன் சித்திரவதையை பயன்படுத்துவதை நியாயப்படுத்தி உள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு முக்கிய நபராக யூலியானி அல்லது போல்டன் இருவரில் ஒருவரை நியமிப்பதன் சாத்தியம் பற்றிய விவாதம், ட்ரம்ப் இன் தலைமை வெள்ளை மாளிகை மூலோபாயவாதியாக முற்றிலும் பாசிசவாதியான ஸ்டீபன் பானனை ஞாயிறன்று பெயரிட்டதில் எடுத்துக்காட்டப்பட்டதை போலவே அதேயளவிற்கு ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது. Breitbart News இல் பானனின் பராமரிப்பில் குணாதிசயப்படுத்தப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத அரசியலில் அவர்கள் இருவரும் பகிரங்கமாக ஈடுபடாவிட்டாலும், அவர்கள் அமெரிக்க அரசியலில் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் மதிப்பிழந்த பிரமுகர்களாக உள்ளார்கள் என்பதில் எவ்விதமான கேள்வியும் இல்லை.
செவ்வாயன்று மாலை வரை ஒரு நியமன அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாக இல்லை என்றாலும், ட்ரம்ப் இன் இடைக்காலக்குழு முற்றிலும் குழப்பத்திலும் மற்றும் கடுமையான உள்கட்சி கருத்து முரண்பாடுகளிலும் குழம்பி போயிருப்பதைக் குறித்து செய்திகள் வெளியாயின. தேசிய பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் க்கு ஆலோசனை வழங்க அழைக்கப்பட்டிருந்தவரும் மற்றும் சிஐஏ இயக்குநராக அனேகமாக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுபவருமான குடியரசு கட்சியைச் சேர்ந்த மிச்சிகனின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மைக் ரோஜர்ஸ், முன்னதாக நியூ ஜெர்ஸி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி இன் வெளியேற்றத்தை தொடர்ந்து, பதவி நியமன நடைமுறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பதவி நியமன நடவடிக்கையின் தலைவராக இருந்த கிறிஸ் கிறிஸ்டியின் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவசர அவசரமாக பிரதியீடு செய்யப்பட்டார்.
“[ட்ரம்ப் இன் மருமகன் ஜாரெட்] குஷ்னரின் தந்தையை சிறைக்கு அனுப்புவதில் ஓர் அமெரிக்க வழக்கறிஞராக [அப்போது பெடரல் வழக்கறிஞராக இருந்த] கிறிஸ்டி வகித்த பாத்திரத்திற்கு பழி வாங்குவதற்காக" கிறிஸ்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வெளியேற்றம் நடத்தப்பட்டதாக செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.
அந்த நியூ ஜேர்ஸி ஆளுனர், வழக்கின் கட்டமைப்பை ஸ்தாபிப்பத்த ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டவர் என்பதால், ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், கிறிஸ்டியை வெளியேற்றியது நடைமுறையளவில் நியமன நடைமுறைகளை முடக்குவதாக உள்ளது.
முன்னர் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் என்று அவரை குற்றஞ்சாட்டியவர்களுக்கு தலைமை கொடுத்த குடியரசுக் கட்சியின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரியின் உண்மையான முகத்தில், ட்ரம்ப் முகாமிற்குள் நிலவும் குழப்பமும் பிளவுகளும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. கடந்த வாரம் American Interest இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் அவர் வாதிடுகையில், ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்காலம் "நாம் நினைப்பதை விட சிறப்பாக இருக்கக்கூடும்,” மற்றும் ஒன்றையொன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரத்துவ செயலின்மை வரவிருக்கின்ற நிர்வாகத்தில் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
செவ்வாயன்று காலை ட்வீட்டர் குறிப்பில் கோஹன் எழுதுகையில், “ட்ரம்பின் இடைக்கால குழுவுடனான கருத்து பரிவர்த்தனைகளுக்கு பின்னர், ஒதுங்கி இருத்தல் என்ற எனது பரிந்துரையை மாற்றிக் கொண்டேன். அவர்கள் கோபமும், அகங்காரமும் கொண்டு 'நீங்கள் தோற்றுவிட்டீர்!' நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்காது என்ற கூப்பாடும் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
ட்ரம்ப் முகாமிற்குள் நிலவும் இந்த குழப்பம், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பில்லியனிய ஜனாதிபதிக்கு “முற்போக்காளர்களாக" காட்டிக்கொள்ளும் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் உட்பட ஜனாதிபதி ஒபாமா மற்றும் முன்னணி ஜனநாயக கட்சியினர் பணிவாக வளைந்து கொடுப்பதுடன் கூர்மையாக முரண்படுகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் தேசியளவிலான போராட்ட நிலைமைகளின் கீழ், பெரும்பான்மை வாக்காளர்களால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்திற்கு எதிராக அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட, அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரி நிர்வாகமாக வடிவமெடுத்து வரும் ஒன்றுக்கு அவர்கள் [ஜனநாயக கட்சியினர்] நடைமுறையளவில் எந்த எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள்.
By Bill Van Auken
16 November 2016
http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/trum-n18.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts