Search This Blog

Sunday, 30 October 2016

2016 தேர்தல்கள்: குழப்ப நிலையில் அமெரிக்க ஜனநாயகம்

The 2016 elections: American democracy in shambles

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான புதன்கிழமை இறுதி விவாதத்திற்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் நவம்பர் 8 தேர்தல் முடிவுகளை அவர் அங்கீகரிக்கப் போவதில்லை என்று கூறிய கருத்துக்கள் மீது பரபரப்பாக குரல் எழுப்பியுள்ளன.
"இத்தேர்தல் முடிவை முழுமையாக ஏற்று கொள்வீர்களா" என்று விவாத ஒருங்கிணைப்பாளர் Fox News இன் கிறிஸ் வாலஸ் வினவியதும், அவர் "அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்" என்றும், “உங்களை ஆவலில் வைத்திருப்பேன்" என்றும் பதிலளித்தார். வியாழனன்று ட்ரம்ப் அவர் கருத்துக்களில் இருந்து சற்றே இறங்கி வந்து, "தெளிவான தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வதாக" அவர் கூறினார். இருந்தபோதினும் கிளிண்டன் "இதுவரை பதவிக்குப் போட்டியிட்டவர்களிலேயே மிகவும் மோசடியான மற்றும் நேர்மையற்ற நபர்" என்று வாதிட்ட அவர், தொடர்ந்து கூறுகையில், “கேள்விக்குரிய முடிவு ஏற்பட்டால் சட்டபூர்வ சவாலைப் பதிவு செய்யும் அல்லது முன்நிறுத்தும்" உரிமை அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.
அந்த விவாதத்தில் டரம்ப் இன் கருத்துக்கள், இந்த தேர்தல் கிளிண்டனுக்கு சார்பாக ஊடகங்களால் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்ற முந்தைய கருத்துக்களின் வரிசையில் இருக்கின்றன, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் குறிபாக நகர்புற மையங்களில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக வாக்கிடுவதாக அவை தெளிவாக இனவாத தொனியைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறை மீதான சமூக கோபத்தை மற்றும் எதிர்ப்பை ஒரு தீவிர வலதுசாரி திசையில் திருப்பும் முயற்சியில், அவர் தேர்தல்களுக்குப் பின்னர் அபிவிருத்தியடையும் நிலைமைகளுக்காக அவரது முறையீடுகளை நிலைநிறுத்துகிறார்.
அமெரிக்க ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை அசுத்தப்படுத்துவதாக ட்ரம்ப் மீதான ஒரேமாதிரியான கண்டனமே, ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் மேலாதிக்கம் கொண்ட பிரிவுகளிடமிருந்து வரும் விடையிறுப்பாக உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகையில், “உள்நாட்டு போர் முடிந்த பின்னர் வாக்காளர்களின் விருப்பத்தை மதித்தமை அதிகாரம் சமாதானமான முறையில் கைமாற்ற அனுமதித்துள்ளது, அது இந்நாட்டின் மீது உலகை பொறாமை கொள்ளச் செய்துள்ளது,” என்றது. ட்ரம்ப், “அமெரிக்க வாக்காளர்களின் புத்திஜீவிதத்தை அவமதிப்பதிலிருந்து அமெரிக்க ஜனநாயகத்தையே அவமதிக்க" திரும்பி உள்ளார் எனவும் நியூ யோர்க் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.
குடியரசு கட்சி செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் மெக்கெய்ன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஒரு தேர்தலில் வெற்றியாளரை ஏற்றுக் கொள்வது "அமெரிக்க மக்களின் விருப்பத்தை மதிக்கும் நடவடிக்கையாகும், இம்மதிப்பை அளிக்க வேண்டியது ஒவ்வொரு அமெரிக்க தலைவரின் முதல் கடமையாகும்,” என்றார். மேலும் துணை ஜனாதிபதி ஜோ பைடென், உணர்ச்சிபூர்வ சீற்றத்தின் கவசம் தரித்து, வியாழனன்று வழங்கிய ஓர் உரையில் கூறுகையில், “நீங்கள் கேள்வி எழுப்புவீர்களாயின், ஒரு ஜனநாயக தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது என நீங்கள் வலியுறுத்துவீர்களாயின், நாம் ஒரு ஜனநாயக அமைப்புமுறையைக் கொண்டிருக்கிறோமா என்ற அடிப்படை கருத்தின் மீதே நீங்கள் தாக்குதல் நடத்துகிறீர்கள்,” என்றார்.
பத்திரிகை தலையங்க குழுக்கள் முன்னணி அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இத்தகைய அறிக்கைகளில் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. அவர்கள் ஒரு பதட்டத்தையும் வெளிப்படுத்துகிறார்கள், அதன் விளைவுகள் திரு. ட்ரம்ப் இன் கருத்துக்களையும் கடந்து விரிகிறது. ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், பரந்த பெரும்பான்மை மக்களால் அதிகரித்தளவில் செல்லுபடியாக ஒன்றாக பார்க்கப்படும் ஓர் அமைப்புமுறையை பாதுகாக்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வரலாற்று நிலைப்புள்ளியிலிருந்து பார்த்தால், 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரையில் அமெரிக்காவின் ஒவ்வொரு தேர்தலும் "தீர்மானிக்கப்பட்டு" இருந்தது, அது வரையில் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் வாக்களிக்கவே தடுக்கப்பட்டிருந்தார்கள் என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். 1920 இல் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை வரிகள், ஜிம் கிரோவ் பிரிவினை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலமாக தெற்கில் அமைப்புரீதியிலேயே ஆபிரிக்க அமெரிக்கர்களின் உரிமைபறிப்பு, 1960 களின் மத்தியில் கடுமையான சமூக போராட்டங்களின் துணைவிளைவாக அக்காலக்கட்டத்தில் தான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1971 இல் தான், ஓட்டுரிமை தகுதி வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. அதுவரையில், இளைஞர்களால் வாக்களிக்க முடியாததால் தலைமை தளபதியின் கட்டளையின் பேரில் போர்களில் போரிட்டு இறக்க கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
கடந்த நான்கு தசாப்தங்களாக, சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சியுடன் சேர்ந்து, ஜனநாயக ஆட்சி வடிவங்கள் அமைப்புரீதியிலான தாக்குதலின் கீழ் உள்ளன. 1998 மற்றும் 1999 இல் பாலியல் முறைகேட்டில் பில் கிளிண்டன் மீது களங்கம் கற்பிக்கும் பிரச்சாரத்துடன் ஒரு திருப்புமுனை வந்தது, அதை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டது. ட்ரம்ப் இன் கருத்துக்கள் மீதான தற்போதைய விவாதங்களில் குறைந்தபட்சம் 2000 தேர்தல் குறிப்பிடப்படுவதைப் பொறுத்த வரையில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் தேர்தலை ஒப்படைப்பதென்ற உச்ச நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொள்வதில் அல் கோர் இன் "நடைமுறையை மதிக்கும்" பண்பை தான் பாராட்ட வேண்டும்.
உண்மையில் புளோரிடாவின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் எடுத்த 5-4 முடிவானது, வெகுஜனங்களின் வாக்குகளை மற்றும், சகல வாக்குகளும் நியாயமாக எண்ணப்பட்டிருந்தால், வெகுஜன வாக்குகளை இழந்திருந்த ஒரு தனிநபரை பதவியில் நியமித்தது. இந்த ஜனநாயக கேலிக்கூத்தில் விளைந்த விளைவுகளில் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசியலமைப்புரீதியிலான உரிமை அமெரிக்க மக்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மோசடி, ஒரு மாகாண நீதிமன்றத்தின் பின் அறையில் நடக்கவில்லை, மாறாக அந்நாட்டின் உயர்மட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
டிசம்பர் 2000 க்கு முன்னரே, புஷ் vs கோர் என்ற முடிவு வருவதற்கு முன்கூட்டியே, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் குறிப்பிடுகையில், “பாரம்பரிய முதலாளித்துவ ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை உடைப்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தளவிற்கு தயாராகி உள்ளது,” என்பதை இந்த முடிவு வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இறுதியில், உச்சநீதிமன்றத்தின் அப்பட்டமான அரசியல் நடவடிக்கை ஜனநாயக கட்சி மற்றும் கோரிடம் இருந்தோ, அல்லது ஒட்டுமொத்தமாக ஊடங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்தோ எந்த கடுமையான எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியவாறே, இறுதி முடிவு, "ஜனாதிபதி தேர்தல் மீதான ஒரு ஜனநாயக நீதிமுறைக்கு ஆளும் உயரடுக்குகளுக்குள் எந்த முக்கிய மதிப்பும் இல்லை என்பதை அம்பலப்படுத்தியது.”
கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் ஆளும் வர்க்கம் அதன் நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் மீதான அதன் அலட்சியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து, புஷ் மற்றும் பின்னர் ஒபாமாவின் கீழ், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது பெருமளவிலான ஜனநாயக-விரோத நடவடிக்கைகளைக் கொண்டு, அதாவது தேசிய பாதுகாப்பு சட்டம்; உத்தரவாணையின்றி பாரிய உளவுபார்ப்பு; வழக்கு விசாரணையின்றி காலவரையின்றி சிறையிலடைப்பது; சித்திரவதை மற்றும் "அசாதாரணரீதியில் வேறுநாட்டிடம் ஒப்படைத்தல்"; அமெரிக்க பிரஜைகள் உள்ளடங்கலாக, டிரோன் படுகொலை; இராணுவத்தை அதிகரித்தளவில் உள்நாட்டில் பயன்படுத்துவதை மேற்பார்வை செய்யும் ஓர் இராணுவ நீதித்துறையான உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வடக்கு கட்டளையக துறையை ஸ்தாபித்தமை ஆகியவற்றால் நியாயப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொலை செய்யும் இராணுவமயப்பட்ட பொலிஸ் படையையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் நடைமுறையைப் பொறுத்த வரையில், உச்சநீதிமன்ற முடிவுகள் வாக்குரிமை சட்டத்தைப் பலவீனப்படுத்தி உள்ளதுடன், வறிய, முதிய மற்றும் சிறுபான்மை வாக்காளர்களது வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை அவசியப்படுத்தும் மாநில சட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. முந்தைய சிறிய சிறிய குற்றங்களுக்காக (வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொரு 40 வாக்காளர்களில் ஒருவர்) சுமார் 6 மில்லியன் குடிமக்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். 2010 இல் Citizens United என்ற முடிவு, பெருவணிகங்கள் வேட்பாளர்களுக்கும் மற்றும் அவர்களது அரசியல் நடவடிக்கை குழுக்களுக்கும் நிதி வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களை நிர்மூலமாக்கியது. 2016 இல் 7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக, தொகுத்து கூறுவதானால், 2012 இல் செலவிடப்பட்டதை விட இரண்டு மடங்கு செலவிடப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம்-கட்சி வேட்பாளர்களது பெயர்கள் வாக்குச்சீட்டில் தெரிவதிலிருந்து அவர்களைத் தடுக்க, பத்து நூறாயிரக் கணக்கான கையெழுத்துக்களை அவர்கள் சேகரிக்க வேண்டும் என்ற அவசியப்பாடுகள் உள்ளடங்கலாக, சகலமும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊடகங்களோ, உத்தியோகப்பூர்வ "விவாதம்" பாதுகாப்பாக ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடைய குறுகிய கட்டமைப்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேலை செய்கின்றன.
“அமெரிக்க ஜனநாயகம்" என்பது நிதியியல் செல்வந்த தட்டு மற்றும் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு கட்சிகளால் மேற்பார்வை செய்யப்படும் வெறும் கூடாக உள்ளது. "மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்று வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த ஒபாமா நிர்வாகத்துடனான அனுபவம், மில்லியன் கணக்கானவர்களது வாக்குகள் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் மீது எந்த பாதிப்பும் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த சீரழிவானது, கிளிண்டன் பரம்பரையின் வழிவந்த ஒரு மில்லியனருக்கும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி நட்சத்திரமும் ஊகவணிக நில/கட்டிட விற்பனைத்துறையின் ஒரு பில்லியனருக்கும் இடையிலான ஒரு போட்டியாக, 2016 தேர்தலில் முதிர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது.
ட்ரம்ப அவரே கூட ஒரு நோய்பீடித்த சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறையின் விளைபொருளாக, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இன் தகுதிவாய்ந்த வழிதோன்றலாக உள்ளார். கிளிண்டனைப் பொறுத்த வரையில், அதே நோயின் வெறுமனே மற்றொரு வெளிப்பாடாவார், அவர் ஒரு நீண்ட மற்றும் கேடுகெட்ட வரலாறைக் கொண்டுள்ள மக்கார்த்தியிச மழுப்பல்களுடன் சேர்ந்து, அவர் கணவருக்கு எதிராக குடியரசு கட்யினரால் பயன்படுத்தப்பட்ட அதே முறைகேடு-வாய்சவுடால்களின் அடிப்படையில் அவரது பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்..
வோல் ஸ்ட்ரீட் உடனான கிளிண்டனின் தொடர்புகளை அம்பலப்படுத்தும் கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களைக் குறித்த எந்தவித கேள்விக்கும் ஜனநாயகவாதிகளின் பாகத்திலிருந்து வரும் விடையிறுப்பு என்னவென்றால் அதெல்லாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கைவேலை என்று முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுகளை நோக்கி விடயத்தை மாற்றிவிடுவதாக உள்ளது. அவர் தேர்தலை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக் கொள்ள போவதில்லை என்று ட்ரம்ப் கூறுகின்ற வேளையில், கிளிண்டன் தோற்கடிக்கப்பட்டால் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்யா குறுக்கீடு செய்ததனால் தான் இவ்வாறு நடந்ததென ஜனநாயக கட்சியினர் அறிவிப்பார்கள்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்முறைக்குப் பின்னால், அடிப்படை பிரச்சினைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன அல்லது உதறிவிடப்படுகின்றன. அமெரிக்க "ஜனநாயகத்தின்" யதார்த்தத்தை ஒருவேளை இந்த உண்மையைக் கொண்டு தொகுத்துக் கூறலாம், அதாவது நவம்பர் 8 க்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவம் மத்தியக் கிழக்கில் ஒரு பாரிய இராணுவ தீவிரப்பாட்டைத் தொடங்கியுள்ளது, மேலும் கொள்கையை மக்கள் தீர்மானிப்பதற்கு தேர்தல்களே பிரதான வழிவகையாக கூறப்படுகின்ற நிலையில், அந்த தீவிரப்பாட்டின் விளைவுகளைக் குறித்து தேர்தலில் எந்த குறிப்பிடத்தக்க விவாதமும் இல்லை.
இந்த ஜனநாயக நெருக்கடியானது, வெளிநாட்டில் போர் மற்றும் உள்நாட்டில் சிக்கனத் திட்ட கொள்கையை முன்னெடுக்க தீர்மானகரமாக உள்ள ஆளும் வர்க்கத்தால் மேற்பார்வை செய்யப்படுகின்ற அமெரிக்க முதலாளித்துவத்தினது சீரழிவின் விளைபொருளாகும்—அதுபோன்றவொரு கொள்கைக்கு ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீது இன்னும் அதிகமான தாக்குதல்கள் தேவைப்படுகின்றன. நவம்பர் 8 இல் என்ன நடந்தாலும், அது எதையும் தீர்க்கப் போவதில்லை என்பதோடு ஒரு நீடித்த அரசியல் நெருக்கடிக்கு மட்டுமே களம் அமைக்கும், அதை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.
Joseph Kishore
21 October 2016
http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/sham-o24.shtml

Saturday, 29 October 2016

குழப்பநிலையில் அமெரிக்காவின் "ஆசிய முன்னிலை"

US “pivot to Asia” in disarray

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் அதன் இறுதி நாட்களில் நுழைந்துள்ள நிலையில், சீனாவை வளைத்து அடிபணியச் செய்யும் நோக்கத்திலான ஒபாமா நிர்வாகத்தினது "ஆசிய முன்னிலை" தோல்வியடைந்து வருவதாக வாதிடும் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடக கருத்துரைகள் அதிகரித்து வருகின்றன. எவ்விதத்திலும் அப்பிராந்தியத்திலிருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, வாஷிங்டனின் பிரதிபலிப்பு ஆசிய பசிபிக்கில் அதன் இராஜாங்கரீதியிலான சூழ்ச்சிகள் மற்றும் ஆத்திரமூட்டும் இராணுவக் கட்டமைப்பைத் தீவிரப்படுத்துவதாகவே இருக்கும்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ற இன் பெய்ஜிங்கிற்கான கடந்த வார அரசு விஜயத்தால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, அவரது சீனாவை நோக்கிய திடீர் திருப்பம், ஐயத்திற்கிடமின்றி ஆசியாவில் அமெரிக்க மூலோபாயத்திற்கு ஒரு அடியாகும். பைனான்சியல் டைம்ஸ் வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டுரையாளர் கீடியன் ராஹ்மன், அமெரிக்காவிடமிருந்து ஒரு "பிரிவு" மற்றும் சீனாவுடனான ஒரு புதிய சிறப்பு உறவு என்ற டுரேற்ற இன் பெய்ஜிங் அறிவிப்பை எடுத்துக்காட்டி, அம்மாற்றத்தை "ஒரு முக்கிய மூலோபாய திருப்பமாக" குணாம்சப்படுத்தினார்.
டுரேற்ற ஜூனில் பதவியேற்றதில் இருந்தே, ஜனாதிபதி ஒபாமாவை "வேசி மகன்" என்று விளாசியதோடு, தெற்கு பிலிப்பைன்சின் மின்டானோ தீவிலிருந்து அமெரிக்க சிறப்பு படைகளை வெளியேற்ற அழைப்புவிடுத்ததுடன், தென் சீனக் கடலில் அமெரிக்க-பிலிப்பைன் கூட்டு இராணுவ பயிற்சிகளையும் நிறுத்தினார், மற்றும் அமெரிக்காவுடனான அந்நாட்டின் இராணுவத் தள உடன்படிக்கையை மீளாய்வு செய்ய முன்மொழிந்தார். ஹேக்கில் உள்ள மத்தியஸ்த்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் மணிலாவிற்கு சார்பான மற்றும் பெய்ஜிங்கின் உரிமைகோரல்களுக்கு எதிரான தீர்ப்பை கவனத்திற்கு எடுக்காதுவிடுவது என்ற அவரின் முடிவு, தென்சீனக் கடலில் சீனா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கு அத்தீர்ப்பை சாதகமாக்கிக் கொள்வதென்ற அமெரிக்க திட்டங்களை குழப்பத்திற்கு உட்படுத்தி உள்ளது.
ஓர் அமெரிக்க கூட்டாளியான தாய்லாந்து, சீனாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு திரும்பியதோடு, மேற்கினால் திணிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை மலேசிய பிரதம மந்திரி நிஜீப் ரஜாக் தவிர்க்க முயன்று வருகின்ற நிலையில் அந்நாடு ஆதரவிற்காக பெய்ஜிங்கை நோக்கி திரும்பியிருப்பதால், அமெரிக்கா ஏனைய பின்னடைவுகளையும் முகங்கொடுத்திருப்பதாக ராஹ்மன் குறிப்பிட்டார்.
ரூபேர்ட் முர்டோஹிகின் ஆஸ்திரேலியன் இல் வெளியுறவுத்துறை ஆசிரியர் கிரெக் ஷெரிடன் நேற்று எழுதுகையில், “டுரேற்ற இன் சீனாவை நோக்கிய திடீர் திருப்பம், சைகோன் (Saigon) வீழ்ச்சிக்குப் பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்,” என்றார். இந்த திருப்பம், ஆசியாவில் அமெரிக்க கூட்டணி முறையை மரணகதியில் பலவீனப்படுத்தி உள்ளது என்று அறிவித்த அவர், ஒபாமாவின் வெளியுறவு கொள்கையை "ஏறத்தாழ மொத்த தோல்வியாக" முத்திரை குத்தினார். அது சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் அவற்றின் செல்வாக்கெல்லையை "அபாயகரமாக விரிவாக்குவதற்கு" அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்.
ஒபாமா நிர்வாகத்தினது "முன்னிலையானது", ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு பரந்த இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயமாகும். எவ்வாறிருப்பினும் அப்பிராந்தியம் எங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் பங்காளிகள், ஆசியாவிற்கான வாஷிங்டனின் கடமைப்பாடு மீது அதிகரித்தளவில் குறைவில்லாமல் கேள்வியெழுப்பி உள்ளனர், ஏனென்றால் அமெரிக்க ஜனாதிபதி போட்டியாளர்கள் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் இருவரது எதிர்ப்பையும் மற்றும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் இரண்டினது சட்டமன்ற பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, இப்போது அதன் மத்திய பொருளாதார நடவடிக்கையான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை (TPP) சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இந்த "முன்னிலையில்" TPP மையத்தில் உள்ளது என்பது அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர் ஆல் கடந்த ஆண்டு எடுத்துக்காட்டப்பட்டது, அவர் அந்த பொருளாதார உடன்படிக்கைக்கும் பெண்டகனின் போர் திட்டங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் விதத்தில், அந்த உடன்படிக்கை "மற்றொரு விமானந்தாங்கி போர்க்கப்பல் அளவிற்கு எனக்கு முக்கியமானதாகும்" என்று அறிவித்திருந்தார். ஆகஸ்டில் சிங்கப்பூரின் பிரதம மந்திரி Lee Hsien Loong, ஆசியாவில் அமெரிக்காவின் தலையீடு நிலைத்திருக்க  வேண்டுமென வலியுறுத்தியதுடன், TPP ஐ ஏற்றுக்கொள்வதென்பது "உங்களது நம்பகத்தன்மை மற்றும் நோக்கத்தின் தீவிரத்தன்மை மீதான பரிசோதனை" என்று எச்சரித்தார்.
ஆசிய பசிபிக்கின் ஆளும் உயரடுக்குகளது கவலைகள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பகட்டாராவாரம் மற்றும் இழிவார்ந்த காட்சிப்படுத்தலாலும் மற்றும் அடுத்த நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கையைச் சுற்றி நிலவும் தெளிவின்மையாலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ள, அமெரிக்காவின் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி மீது அதிகரித்துவரும் அறிகுறிகளால் சூழப்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை செயலராக கிளிண்டன் தான் அந்த "முன்னிலை" இன் பிரதான வடிவமைப்பாளராக இருந்தார் மற்றும் சீனாவிற்கு எதிராக அதிக இராணுவவாத மூலோபாயத்தின் ஆதரவாளராக இருந்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் க்கான அவரது உரைகளில் 2013 ஆம் ஆண்டு உரை ஒன்றில் அவர் அறிவிக்கையில், “நாங்கள் சீனாவை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொண்டு சுற்றி வளைக்கப் போகிறோம். நாங்கள் எமது கடற்படையின் பெரும்பான்மையை அப்பகுதியில் நிறுத்தவிருக்கிறோம்,” என்றார்.
ஆசியாவை நோக்கிய ட்ரம்ப் இன் கொள்கை தெளிவாக இல்லை, ஆனால் அவரது "தலைசிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம்" முழக்கம் சீனாவை நோக்கி முன்பினும் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அறிவுறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக இதில், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற அதன் கூட்டாளிகள் அதிக சுமையை ஏற்க வேண்டுமென வாஷிங்டன் வலியுறுத்தக்கூடும்.
அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களோடு சேர்ந்து அமெரிக்க தேர்தல் உருவாக்கியுள்ள நிச்சயமற்றத்தன்மைகளும் மற்றும் மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார கண்ணோட்டமும், ஆசிய பசிபிக்கின் ஆளும் வர்க்கங்களை அவர்களது பேரங்களை நிறுத்துவதற்கு ஊக்குவித்து வருகின்றன. அமெரிக்க "முன்னிலையின்" இரண்டு மத்திய தூண்களான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இரண்டுமே, அமெரிக்காவுடன் முரண்படும் கொள்கைகளைப் பின்தொடர்ந்து வருகின்றன.
பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, வாஷிங்டனால் ஒரு "சட்டவிரோதமாக்கப்பட்ட அரசாக" அதிகரித்தளவில் முத்திரை குத்தப்படும் ஒரு நாட்டுடன் உறவுகளை ஜோடிக்கும் ஒரு முயற்சியில் குரில் தீவுகள் விவகாரத்தில் ரஷ்யாவுடனான ஜப்பானின் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டங்களை இப்போது அறிவித்துள்ளார். அமெரிக்காவிடமிருந்து ஆணித்தரமான அழுத்தங்களுக்கு இடையிலும், ஆஸ்திரேலிய அரசாங்கம் தென் சீனக் கடலில், சீன கடல் எல்லை உரிமைகோரல்களைச் சவால்விடுப்பதற்கான "சுதந்திர கடல் போக்குவரத்து" நடவடிக்கையை தொடங்க ஒப்புக் கொள்ளவில்லை, இது அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியை எதிர்கொள்ளும் ஆபத்தின் மீது ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்குக்குள் நடந்து வரும் விவாதத்தைப் பிரதிபலிக்கிறது.
வாஷிங்டனின் ஆசிய வெளியுறவு கொள்கையின் குழப்பநிலை, அதன் அடியிலுள்ள பித்துபிடித்த நோக்கத்திலிருந்து, அதாவது உலகளாவிய மேலாதிக்கத்தை எட்டுவதற்கான சாத்தியமற்ற பணியிலிருந்து பெருக்கெடுக்கிறது. பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை சுற்றியுள்ள நெருக்கடியால் எடுத்துக்காட்டப்பட்டதை போல பொருளாதாரரீதியில் உலகிற்கு கட்டளையிட இயலாமல், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதிகரித்தளவில் பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டல்களிலும் மற்றும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலுக்குள் உலகை மூழ்கடிக்க அச்சுறுத்தும் தலையீடுகளுக்குள்ளும் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டுரேற்ற சீனாவில் இருந்தபோது, அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலின் பாராசெல் தீவுகளில் சீன கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் சவால்விடுக்க ஒரு நான்காவது "சுதந்திர கப்பல் போக்குவரத்து" நடவடிக்கையை நடத்துவதற்காக ஏவுகணை தாங்கிய விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது. அந்நடவடிக்கை சீனாவுடனான ஒரு கடற்படை மோதல் அபாயம் மீதான வாஷிங்டனின் விருப்பத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக அமெரிக்க கடற்படையின் மூன்றாவது கடற்படை சீனாவிற்கு எதிராக மேற்கு பசிபிக்கில் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்காக அதன் 100 போர்க்கப்பல்கள் மற்றும் நான்கு விமானந்தாங்கி போர்க்கப்பல்களுடன் உள்நுழைந்திருப்பதற்கும் சமிக்ஞை காட்டியது.
இந்த விடையிறுப்பு போரை நோக்கி உந்திச் செல்லும் அபாயகரமான இயக்கவியலை அடிக்கோடிடுகிறது: அதாவது வாஷிங்டன் அதன் உலகளாவிய அபிலாஷைகளுக்கு அதிகமான எதிர்ப்பை மற்றும் தடைகளை எதிர்கொள்கையில், அதன் நடவடிக்கைகளும் அதிகமாக பொறுப்பின்றி இராணுவமயப்பட்டதாக இருக்கிறது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில், சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெர்ரி வைட் மற்றும் நைல்ஸ் நிமுத் மட்டுமே போர் அபாயங்களைக் குறித்து எச்சரித்து வருகிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் “முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" என்ற நவம்பர் 5 மாநாட்டில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மற்றும் சோசலிசத்திற்காக போராட்டத்திற்கான அரசியல் அடித்தளத்தை விவாதிக்கும். ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் அனைவரும் மற்றும் அதை எதிர்த்து போராட ஒரு வழியைத் தேடுபவர்களும் அதில் கலந்து கொள்ள பதிவு செய்யலாம்.
Peter Symonds
26 October 2016

Thursday, 27 October 2016

சமூக சமத்துவமின்மையும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்

Social inequality and the fight against capitalism


சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி குறித்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்ட பிரெஞ்சு அரசியல் பொருளியல்வாதி தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) ஆல் ஞாயிறன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வழங்கப்பட்ட உரை, இரண்டு நிலைப்பாட்டில் இருந்து முக்கியமானதாகும்.
முதலாவதாக, 2014 இல் சிறந்த விற்பனையான நூலான இருபத்தியோராம் நூற்றாண்டில் முதலாளித்துவம் என்ற அவரது நூலில் அவர் முன்வைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும், அத்துடன் அது பிரசுரிக்கப்பட்டதற்குப் பிந்தைய இரண்டாண்டுகளது புதிய புள்ளிவிபரங்களையும் சேர்த்து, பரந்த பெருந்திரளான மக்களது வாழ்க்கை தரங்கள் மந்தமாகி வருகிறது அல்லது வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், பிகெட்டி, பல விளக்கமான வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளைக் கொண்டு சமூகத்தின் உயர்மட்டங்களில் கட்டுக்கடங்காத செல்வவள திரட்சியின் நிகழ்முறையை ஆவணப்படுத்தி இருந்தார்.
இரண்டாவதாக, இந்த அதிகரித்துக்கொண்டே செல்லும் சமூக துன்பமானது செல்வவளம் மற்றும் மூலதனம் மீதான வரிகள் உட்பட முதலாளித்துவ அரசாங்கங்களது பல்வேறு கொள்கை தகவமைப்புகளை மாற்றுவதன் மூலமாக சற்று கட்டுப்படுத்தலாம் என்ற கருத்துக்காக இயங்கிவரும், பிக்கெட்டி மற்றும் ஏனைய பொருளியல்வாதிகள் முன்னெடுத்த அரசியல் முன்னோக்கின் திவால்நிலையை அந்த உரை அம்பலப்படுத்தி இருந்தது.
தரவுகள் உறுதியானவை என்ற பழமொழி கூறுவதுபோல், மேலும் புறநிலை புள்ளிவிபரங்களின் ஒரு பகுப்பாய்வில் இருந்து பிக்கெட்டி உருவாக்கிய தரவுகளே, சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச புரட்சியைக் கொண்டு தூக்கிவீசுவதைத் தவிர, சமூக சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கு வேறு வாய்ப்பில்லை என்பதற்கே வாதிடுகின்றன.
2014 மே மாதம் பிக்கெட்டியின் நூல் அதன் ஆங்கில மொழி பதிப்பாக வெளியானபோதே, நிதியியல் உயரடுக்குகள் உடனடியாக அதன் கண்டுபிடிப்புகளில் உள்ளடங்கி இருந்த அபாயங்களை ஒப்புக் கொண்டன. அவற்றின் பிரதான ஊதுகுழல்களில் ஒன்றான இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல்டைம்ஸ், அதன் பொருளாதார பிரிவு ஆசிரியரைக் கொண்டு பிக்கெட்டி அவரது புள்ளிவிபரங்களைப் பயன்படுத்திய விதத்தில் "குழப்பம்" உள்ளது என்று கூறி, அதன் மீது கேள்வி எழுப்பும் ஒரு கட்டுரையைக் கொண்டு நேரடியாக தாக்குதலுக்குள் சென்றிருந்தது. அப்பத்திரிகை, “பிக்கெட்டியின் படைப்பின் மீது நிறைய கேள்விகள் தொங்குகின்றன" என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியது.
அந்நூலின் புள்ளிவிபர அலைகளுக்கும், அத்துடன் அந்நூல் வெளியானதற்குப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட கூடுதல் உண்மைகளுக்கும் இடையே அதுபோன்ற விமர்சனங்கள் காணாமல் போயின. ஒரேயொரு எடுத்துக்காட்டை மேற்கோளிடுவதானால்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், உலக மக்கள்தொகையில் அரைவாசி மக்களிடம் உள்ள செல்வவளத்தின்  அளவிற்கு  சமமான செல்வவளம் 85 செல்வந்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விபரம் வெளியானது. இந்த ஆண்டு இது வெறும் 65 ஆக குறைந்துள்ளது.
சிட்னி உரையில் பிகெட்டியின் முன்னோக்கு, இலாபகர அமைப்புமுறையை தூக்கியெறியும் விடயத்தை கொண்டிருக்கவில்லை, மாறாக அதற்கு தலைகீழாக இருந்தது. அவர் அதுபோன்றவொரு விளைவைத் தடுக்க இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது அரசியல் கண்ணோட்டத்தில், அவர் மார்க்ஸ் க்கு ஒரு எதிர்ப்பாளராக உள்ளார் மற்றும் சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு வரலாற்று நெருக்கடி மீதான மார்க்ஸின் கண்ணோட்டத்தை "உலக பேரழிவு" (apocalyptic) கண்ணோட்டமாக குறிப்பிடுகிறார்.
கிளிண்டனின் முன்னாள் தொழிலாளர் துறை செயலர் ரோபர்ட் ரைச் குறிப்பிட்ட ஒரு சொற்பதத்தைப் பிரயோகித்து குறிப்பிடுகையில், அவர் "வர்க்க போராளி" (class warrior) கிடையாது, “மாறாக வர்க்கத்திற்காக கவலைப்படும் ஒருவர்,” (a class worrier) என்கிறார். பிக்கெட்டி அவரது நூலில், நிதியியல் மூலதனத்தின் இலாபங்கள் அதிகரிப்பதற்கும் நிஜமான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே அதிகரித்துவரும் பிளவைச் சுட்டிக்காட்டி இருந்தார், “செல்வவள பகிர்வின் நீண்டகால இயக்கவியல் விளைவுகள் சாத்தியமான அளவிற்கு பீதியூட்டி வருகிறது,” என்றவர் குறிப்பிட்டார்.
அதாவது, தற்போதைய சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பால் அதிகரித்துவரும் அபாயங்களைக் குறித்து அவர் ஆளும் உயரடுக்குகளை எச்சரிக்க முனைந்திருந்தார் என்பதோடு, பிரதானமாக மூலதன இலாபங்கள் மீதான ஓர் உலகளாவிய வரிமுறையுடன் தற்போதைய அபாயகரமான போக்குகளை எதிர்கொள்ளும் பல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். "நீண்டகால ஓட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு விகிதத்தில் தற்போது அதிகரித்து வருகின்றதும் மற்றும் சுதந்திர சந்தையின் மிகவும் உணர்வுபூர்வமான பாதுகாவலர்களைக் கூட கவலை கொள்ள செய்துள்ளதுமான செல்வவளத்தின் வரைமுறையில்லா உலகளாவிய சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்தும்,” என்றவர் தெரிவித்தார்.
இந்த எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் என்ன நடந்துள்ளது?
உலகின் மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் அதிமலிவு பணத்தைப் பாய்ச்சியதால் எரியூட்டப்பட்டு, சமூகத்தின் உயரங்களில் பரந்த செல்வவள திரட்சி தொடர்ந்து வேகமெடுத்துள்ளது, அதேவேளையில் அடியிலிருக்கும் நிஜமான பொருளாதாரம் எது "நீடித்த மந்தநிலை" என்று குறிப்பிடப்படுகிறதோ அதில், அதாவது குறைந்த வளர்ச்சி மற்றும் முதலீடு, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தித்திறன், உலக வர்த்தக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குறைவு, மற்றும் இவற்றின் விளைவாக வாழ்க்கை தரங்களில் வீழ்ச்சி ஆகியவற்றில் அதிகரித்தளவில் சிக்கியுள்ளது.
இது அடிமட்டத்திலிருந்து கிளர்ச்சியை ஆரம்பநிலையில் உருவாக்கி உள்ளது, இவை முரண்பட்ட விதத்தில் பிரிட்டனில் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளிலும், அமெரிக்காவில் பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட "சோசலிஸ்ட்" பேர்ணி சாண்டர்ஸ் க்கான ஆதரவிலும், டோனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தேர்வானதிலும், உலகெங்கிலும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சி மற்றும் அரசியல் மற்றும் நிதியியல் ஸ்தாபகத்தை நோக்கி அதிகரித்துவரும் விரோதம் ஆகியவற்றிலும் பிரதிபலித்தது. இந்த பிரச்சினைகள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் ஏனைய பிரதான உலகளாவிய பொருளாதார அமைப்புகளின் ஒவ்வொரு கூட்டத்தின் திட்டநிரலிலும் இடம்பெறுகின்றன என்றளவிற்கு சமூகப் பதட்டங்கள் தீவிரமாக உள்ளன.
பிக்கெட்டியின் நூல் பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது, ஆனால் உலகின் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு அரசாங்கமும் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பைத் தலைகீழாக்க அவர் அறிவுறுத்தி உள்ள எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இது பெயரளவிலான "இடது" அரசாங்கங்கள் இல்லை என்பதால் கிடையாது. ஜூலை 5, 2015 இல் சிக்கனத் திட்டத்திற்கு எதிரான பாரிய வாக்களிப்பை மறுத்தளித்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திய அலெக்சிஸ் சிப்ராஸ் இன் சிரிசா அரசாங்கம் உள்ள கிரீஸ் இன் அனுபவம் சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாகும். ஒட்டுமொத்த இலாபகர அமைப்புமுறையைத் தூக்கியெறியாமல் நிதியியல் மூலதன சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேறு வழியே கிடையாது என்பதே அரசியல் அனுபவத்தில் நிரூபிக்கப்பட்டது.
பிக்கெட்டியின் சிட்னி உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இத்தகைய அனுபவங்களுடன், அனைத்திற்கும் மேலாக உலகின் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு அரசாங்கமும் அவர் அறிவுறுத்திய நடவடிக்கைகளை வெறுமனே கவனத்திற்குக் கூட எடுக்கவில்லை என்ற உண்மையுடன் அவரை எதிர்கொண்ட போது, அந்த பொருளியல்வாதியினது சீர்திருத்தவாத முன்னோக்கின் முட்டுச்சந்தின் முழு பார்வையும் வெளிப்பட்டது.
கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளைப் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் நிராகரித்தமை "மிகவும் வருந்தத்தக்கது" என்றவர் தெரிவித்தார். “ஒருவேளை வேறெந்த சமயத்திலாவது வேறொரு பேர்ணி சாண்டர்ஸ், ஒருவேளை குறைந்தளவில் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர், இதைவிட இளைஞராக இருக்கும் ஒருவர்" ஜெயிக்க முடிந்தால் "மாற்றம் ஏற்படலாம்" என்று நம்பிக்கை வெளியிட்டு, இந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் இரண்டு வேட்பாளர்களில் எவரும் அவர் அறிவுறுத்திய வரி கொள்கைகளை ஏற்க போவதில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.
"அறிவு ஜனநாயகமயப்படுத்துவது" தான் அவரது ஒரே முன்னோக்கு, அது கொள்கை மாற்றத்தைப் பெற "போதுமானளவிற்கு அழுத்தங்களைக்" கொண்டு வருமென அவர் நம்பினார்.
பிக்கெட்டியின் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏனைய சீர்திருத்தவாதிகளாக வரக்கூடியவர்களுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் முன்வரலாறு முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது. வெறும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான், அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கும் மற்றும் உலகின் ஏனைய இடங்களில் உள்ள ICFI இன் பிரிவுகளும் அவற்றின் பெயர்களை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என்று மாற்றின.
சிறிது காலமே உயிர்பிழைத்திருந்த வளர்ச்சிக்கு அடியில் மற்றும் "சந்தையின் மந்திரம்" என்று புகழப்பட்ட ஆழ்ந்த பிரச்சாரம் ஆகியவற்றைக் கொண்டு முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் அதிகரித்து வந்த ஒழுங்கின்மை அப்போது சற்றே மூடிமறைக்கப்பட்டிருந்த நிலையில், அது அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையில் தன்னை வெளிப்படுத்தி, நமது காலத்திலேயே ஒரு தீர்க்கமான பிரச்சினையாக மாறும் என்ற புரிதலின் அடிப்படையில் தான் அந்த மாற்றம் செய்யப்பட்டது—நீண்டகாலத்திற்கு முன்னரே அது உத்தியோகபூர்வ விவாதங்களின் ஒரு விடயமாகவும் இருந்தது.
இந்த மதிப்பீட்டை தற்செயலாக வந்தடையவில்லை, அல்லது இதுவொரு அதிருஷ்டவசமான அனுமானத்தின் விளைவுமல்ல. இது மார்க்ஸ் பகுத்தாராய்ந்ததைப் போல முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை முரண்பாடுகளைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது, இதைத்தான் பிக்கெட்டியும், ஏனையவர்களும் விடாப்பிடியாக மறுக்கிறார்கள்.
பரந்த பெருந்திரளான தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை மீது தாக்கம் ஏற்படுத்தி அவர்களது நனவை மற்றும் புரிதலை மாற்றிக் கொண்டே இருக்கும் இந்த இலாபகர அமைப்புமுறையினது நெருக்கடியின் மத்திய வடிவங்களில் ஒன்றான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது, அரசியல் மற்றும் சமூக போராட்டத்தின் ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறி, ஒரு தத்துவார்த்த கட்டமைப்பாக அல்ல, மாறாக வாழ்வின் ஒரு யதார்த்தமாக, சோசலிச புரட்சிக்கான அவசியத்தை முன்னிறுத்தும் என்பதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு முடிவாகும்.
பிரிட்டன் வெளியேறுவதில் இருந்து தொடங்கி அமெரிக்க தேர்தல்கள் வரையில், உலகெங்கிலும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியினாலும் மற்றும் உடைந்துசெல்லும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளது ஆழ்ந்த அரசியல் நெருக்கடிகளில், அவற்றின் அனைத்து முரண்பாடுகளோடு சேர்ந்து, பிக்கெட்டி மற்றும் ஏனைய சீர்திருத்தவாத விமர்சகர்களின் கனவுகள் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, மாறாக புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டம் எழுச்சி பெறுவதைக் காண்கிறோம்.
Nick Beams
25 October 2016

Wednesday, 26 October 2016

அமெரிக்காவின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் பின்னால் இருப்பது என்ன?

What is behind the anti-Russia campaign in the US?

image source from internet
இணைவழி போர்முறை மூலமாக இத்தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா உள்நோக்கம் கொண்டுள்ளதாக சித்தரிக்கும் பிரச்சாரமே, 2016 ஜனாதிபதி பிரச்சாரத்தின் பிரதான கருத்துருவாக உள்ளது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வார இறுதி விவாதத்தில், “ரஷ்யா அமெரிக்கர்களுக்கு எதிராக உளவுவேலையில் ஈடுபட்டிருப்பதாகவும்", மற்றும் "இணையத்தில் வெளியிடுவதற்காக விக்கிலீக்ஸ் க்கு தகவல்களை அளித்திருப்பதாகவும்" அறிவித்தார். இந்நடவடிக்கை "நமது தேர்தல் மீது ஆளுமை செலுத்தும்… ஒரு முயற்சியில், புட்டினிடம் இருந்தே… வந்துள்ளது" என்று அப்பெண்மணி அறிவித்தார். குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு "கைப்பாவையாக" இருந்து வருகிறார் என்றவர் குற்றஞ்சாட்டினார்.
ஜனநாயகக் கட்சியின் மற்றும் கிளிண்டனின் கணினி நடவடிக்கைகளை ஊடுருவி எடுத்து, விக்கிலீக்ஸ் இல் பிரசுரிக்க அத்தகவல்களை பரிமாறியதற்கு ரஷ்யா அரசாங்கமே பொறுப்பாகிறது என்பதில் “அமெரிக்க உளவுத்துறை சமூகம்" “உறுதியாக" உள்ளதாக அறிவித்த தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் இன் அக்டோபர் 7 அறிவிப்பே ஆதாரம் என்பதாக மேற்கோளிட்டு, கிளிண்டன் அவரது குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்கிடமற்ற உண்மைகளாக முன்வைத்தார்.
ரஷ்ய ஊடுருவல் என்ற வாதங்களை நிரூபிக்க அமெரிக்க அரசாங்கமோ அல்லது வேறெந்த ஆதாரநபர்களோ பொதுமக்களின் முன்னால் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அந்த அரசாங்கம் தனியார் தொலைத்தொடர்புகள் மீது பாரியளவில் உளவுபார்ப்பை நடத்திக் கொண்டிருக்கிறதா என்று அவரிடம் 2013 மார்ச்சில் நேருக்கு நேராக கேட்கப்பட்ட போது, அமெரிக்க செனட் நீதித்துறை கமிட்டி உறுதிமொழியை மீறி அவர் பொய் சாட்சியம் வழங்கிய ஒரு பொய்யர் ஆவார்.
கிளிண்டனும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உட்பட அவரது கைக்கூலிகளும், அமெரிக்க "உளவுத்துறை சமூகத்தின்" பொய் உரைகளை அமெரிக்க மக்கள் மறந்துவிட்டதாக நினைப்பதாக தெரிகிறது. இன்று ரஷ்ய-விரோத சொல்லாடல்களை விற்பனை செய்து வருகின்ற இதே ஊடக நிறுவனங்கள் தான், 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னர் ஈராக்கில் பாரிய பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக விமர்சனமின்றி ஊக்குவித்து வந்தன.
இறுதியாக, கிளிண்டனின் ஊழல் மற்றும் நேர்மையின்மையை அம்பலப்படுத்தும் மின்னஞ்சல்களை கசியவிடுவதில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது இரண்டாதரப் பிரச்சினையாகும். கிளிண்டன், ஜனநாயக கட்சி மற்றும் ஊடகங்கள் இந்த கதையை பற்றிக்கொண்டு, தீர்க்கமான அரசியல் முடிவுகளுக்கு அது சேவையாற்றுவதால் 2016 தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் அதை கொண்டு வந்துள்ளன.
முதலாவதாக ரஷ்ய உளவுவேலை குறித்த இந்த குற்றச்சாட்டானது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை தண்டனைக்குரியதாக ஆக்காமல் பெரிதும் சமாதானப்படுத்துவதற்குரிய விதத்தில் குறைத்துக் காட்டுவதற்கு கிளிண்டன் பிரச்சாரத்தையும், அத்துடன் சேர்ந்து பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடங்களின் பெரும் பகுதிகளையும் அனுமதிக்கிறது. வோல் ஸ்ட்ரீட் க்கான அவரின் பணிவான உரைகள் மற்றும் வேட்பாளர் தேர்தலில் பேர்ணி சாண்டர்ஸ் இன் சவாலைத் தோற்கடிக்க ஜனநாயகக் கட்சி தலைமையுடன் சேர்ந்து அவர் செய்த இரகசிய உதவிகள் மற்றும் வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு அவரது தனிப்பட்ட மின்னஞ்சலை சட்டவிரோதமாக பயன்படுத்தியதன் மீதான உத்தியோகபூர்வ விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான அவர் முயற்சிகள், கிளிண்டன் அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான ஊழல் நிறைந்த உறவுகள், இன்னும் இதர பிற விடயங்களும் அந்த மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களில் உள்ளன.
செய்தியை வெளியிட்டவரை தாக்குவதன் மூலமாக செய்தியை மழுங்கடிக்க முயற்சிப்பதற்கு இது சரியானதொரு உதாரணமாகும்.
ஆனால் ரஷ்யாவைக் கடிந்துரைப்பதில் இன்னும் அதிக அடிப்படையான விடயங்கள் உள்ளன. யுரேஷியா மீதான அதன் மேலாதிக்க முனைவில் வாஷிங்டன் ரஷ்யாவை ஒரு தடையாக கருதுகிறது. அனைத்திற்கும் மேலாக மாஸ்கோ உடனான பதட்டங்களை அதிகரிப்பதானது, மேற்கு ஐரோப்பாவின் அமெரிக்க கூட்டாளிகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார திட்டநிரலுக்குப் பின்னால் வரிசைப்படுத்த சேவையாற்றுகிறது. ஐரோப்பாவில், அமெரிக்க அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்ட, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் கிழக்கு பக்கத்தில் ஒரு வெளிப்புற அச்சுறுத்தலை வளர்த்துக்கொண்டதே  பனிப்போர் காலத்தின் ஒரு பிரதான செயல்பாடாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு, இந்த பாத்திரம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத சக்தியாக இன்னமும் விளங்கும் முதலாளித்துவ ரஷ்யாவிடம் மாறியது.
சோவியத் ஒன்றியம் கியூபாவில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது என்றும், கியூபாவிற்கு செல்லும் அனைத்து ரஷ்ய கப்பல்களை இடைதடுத்து சோதனையிடுவதற்கான ஒரு தடையாணையை அமெரிக்க அரசாங்கம் பெற்றுள்ளது என்றும் அமெரிக்க மக்களுக்கு ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி உரையாற்றிய 54வது நினைவுநாளை இன்று குறிக்கிறது என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். கியூப ஏவுகணை நெருக்கடி மனித நாகரீகத்தையே அணுஆயுத பேரழிவுக்கு மிக நெருக்கத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
அமெரிக்காவின் பொறுப்பற்ற மற்றும் கலகம் தூண்டும் போர் திட்டம், 1962 இன் அந்த 13 நாட்களுக்குப் பின்னர் வேறெந்த காலத்தையும் விட இன்று அணுஆயுத நிர்மூலமாக்கலுக்கு மிக நெருக்கத்திற்கு உலகைக் கொண்டு வந்துள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க பினாமிப் போர் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய இரத்தந்தோய்ந்த தலையீடுகள், மற்றும் அமெரிக்க தலைமையிலான கிழக்கு ஐரோப்பிய இராணுவமயமாக்கல் ஆகியவை மீண்டுமொருமுறை வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவை அபாயகரமாக போருக்கு நெருக்கத்தில் கொண்டு வந்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு முன்னணியில் உள்ள கிளிண்டன் புட்டினை தற்போது அரக்கத்தனமாக சித்தரிப்பது இந்த அபாயத்தை அதிகரிக்க மட்டுமே செய்கிறது.
பனிப்போருடன் ஒரு வெறித்தனமான கம்யூனிச-விரோத சித்தாந்தமும் சேர்ந்திருந்தது, அது அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தின் சகல அம்சங்களையும் பாதித்தது. சோவியத் ஒன்றியத்தின் தொடர்ச்சியான இருப்பு, அது எந்த விதத்தில் சிதைவுற்றதாக இருந்திருந்தாலும் கூட, புரட்சிகர சோசலிசத்தின் மரபியத்தை வெளிப்படுத்தியதற்காக சோவியத் ஒன்றியம் மீதான அமெரிக்க ஆவேசமானது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெறுப்பு மற்றும் அச்சத்தால் உந்தப்பட்டிருந்தது. ஆனால் நேட்டோ மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாகவும், நேரடியாக வாஷிங்டனின் ஏகாதிபத்திய கூட்டாளிகள் மூலமாகவும், அமெரிக்காவின் உலகளாவிய புவிசார்அரசியல் ஒழுங்கமைப்பில் அதன் மேலாதிக்க அந்தஸ்தைப் பாதுகாக்கும் விதத்தில் பனிப்போர் அமைந்திருந்தது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தன்னைத்தானே ஒரே அளப்பரிய அசகாய சக்தியாக பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, அதன் மேலாதிக்கத்திற்கு எந்தவித உலகளாவிய, ஆகக்குறைந்தது பிராந்திய சவாலைக் கூட சகித்துக் கொள்ளாது என்பதை அறிவித்தது. இருந்த போதினும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய 25 ஆண்டுகளில், 1991 இல் முதல் வளைகுடா போருடன் தொடங்கி, அமெரிக்கா தொடர்ச்சியான மூலோபாய இழப்புகளைக் கண்டுள்ளதோடு, அதன் சொந்த மேலாதிக்கத்தின் கீழ் இருந்த மத்திய கிழக்கின் அரசு கட்டமைப்புகளை மாற்றாமல் அப்பிராந்தியத்தை ஒரு கொலைக்களமாக மாற்றியதற்கு இடையே, அது அமெரிக்காவிற்கான ஏதேனுமொரு தெளிவான மூலோபாய ஆதாயத்தையும் கூட உருவாக்க தவறியுள்ளது.
இதற்கிடையே சீனா மற்றும் ஏனைய ஆசிய பொருளாதாரங்களது வளர்ச்சி, அத்துடன் உலகின் மிகப் பெரிய மூலதன ஏற்றுமதியாளராக ஐக்கிய ஜேர்மனி மாறியமை ஆகியவை உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை இன்னும் கூடுதலாக பலவீனப்படுத்தி உள்ளது, அதுவும் அந்நாட்டின் பொருளாதார வாழ்வு அதிகரித்தளவில் பல்வேறு ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிக வடிவங்களால் மேலாதிக்கம் பெற்றுள்ளது.
இத்தகைய நிலைமைகளின் கீழ், அமெரிக்கா அதன் மிக நெருக்கமான நேட்டோ கூட்டாளிகளுடன் சேர்ந்து அதிகரித்த பதட்டங்களை முகங்கொடுக்கிறது. இத்தகைய பதட்டங்கள் வணிகம், வரிமுறை மற்றும் இராணுவ கொள்கை மீதான தொடர்ச்சியான பிரச்சினைகளில் எழுந்துள்ளன. இதில், அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மை மீதான பேரம்பேசல்களின் முறிவு மற்றும் அமெரிக்காவின் மிகப் பெரிய பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 13 பில்லியன் டாலர் முந்தைய வரிகளைச் செலுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையீடு ஆகியவையும் உள்ளடங்கும்.
2008 நிதியியல் நெருக்கடியில் ஜேர்மனியின் நலிந்த டோச்ச வங்கி வகித்த பாத்திரத்திற்காக அது 14 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமென்று கோரியதன் மூலமாக அமெரிக்கா பதிலடி கொடுத்தது, இந்நகர்வில் ஒரு உயர்மட்ட ஜேர்மனி அதிகாரி கூறுகையில், அது "ஒரு பொருளாதார போருக்குரிய தன்மையைக் கொண்டிருப்பதாக" தெரிவித்தார். இத்தகைய பொருளாதார பதட்டங்கள், அமெரிக்கா மேலாதிக்கம் கொண்ட நேட்டோவிற்கு துணையாக, அல்லது அதை புறந்தள்ளுவதற்காக கூட, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ கூட்டணியாக மாற்றும் நகர்வுகளோடு பிணைந்துள்ளன.
உக்ரேனில் 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அழுத்தம், மற்றும் ரஷ்ய எல்லை மீதான நேட்டோ கட்டமைப்பு உட்பட, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவ ஆத்திரமூட்டல்கள் ஒரு நெருக்கடி சூழலை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளன, இதில் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் இராணுவ பதிலடிகளை முகங்கொடுக்கும் சாத்தியக்கூறுகளுடன், அமெரிக்காவுடன் இராணுவ மற்றும் பொருளாதார கூட்டணியை மேற்கொண்டுள்ளன.
ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ தீவிரப்பாடு அடுத்த நிர்வாகத்தின் போது தீவிரமடையும் என்பதற்கு அங்கே எல்லா அறிகுறியும் உள்ளது. வாஷிங்டன்போஸ்ட் அதிசயமான நேர்மையோடு வியாழனன்று எழுதிய செய்தியில், “வெளியுறவு கொள்கை உயரடுக்கை அமைக்கும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினர், சாத்தியமாகக்கூடிய கிளிண்டன் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட பாத்திரம் வகிக்கக்கூடிய அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட ஆரவார அறிக்கை மூலமாக, இன்னும் ஆணவமான அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்,” என்று குறிப்பிட்டது.    
“நாடு ஒருபோதும் இந்தளவிற்கு துருமுனைப்பட்டிராத ஒரு காலக்கட்டத்தில் வருகின்ற, இருகட்சிகளுக்கும் ஒத்த சமீபத்திய பரிந்துரைகளின் இயல்பானது" ரஷ்யா மற்றும் சிரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் தீவிரப்பாட்டுக்கு "வெளியுறவு கொள்கை உயரடுக்கில் குறிப்பிடத்தக்க கருத்தொற்றுமை இருப்பதைப் பிரதிபலிக்கிறது,” என்று போஸ்ட் குறிப்பிட்டது.
இத்தகைய அபிவிருத்திகள், பனிப்போர் முடிவுக்குப் பின்னர் மனித நாகரீகத்திற்கு மிகப் பெரிய அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. கடந்த மாதம், ரஷ்யா அமெரிக்க போர்விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கு நேரடியாக அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேரடியாக அச்சுறுத்தும் விதத்தில், அதன் மேற்கு பகுதியின் விளிம்பில் உள்ள கலினின்கார்டுக்குள் அணுஆயுத தகைமை கொண்ட ஏவுகணைகளை நகர்த்தியதன் மூலமாக அமெரிக்க தீவிரப்பாட்டிற்கு விடையிறுத்தது.
முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டனின் நிர்வாகம் ரஷ்யாவுடனான வாஷிங்டன் மோதலின் கணிசமான தீவிரப்பாட்டை பின்தொடரும் என்பதற்கு எல்லா அறிகுறியும் இருப்பதோடு, சமீபத்திய பல கொள்கை ஆய்வறிக்கைகள் முன்கணிப்பதைப் போல, வாஷிங்டனின் அபாயகரமான இராஜதந்திர நடைமுறைகளின் விளைவாக ரஷ்யாவுடன் முழுமையான அணுஆயுதமில்லா போர் அல்லது அணுஆயுத போர் ஏற்படுவதற்கான நிஜமான சாத்தியக்கூறு நிலவுகிறது.
இதற்கிடையே, ஊடகங்களும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் போர் அச்சுறுத்தல் மீது முற்றிலும் மவுனமாக இருக்கின்றன. உலக சோசலிச வலைத்தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போர் அபாயம் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பி வருகின்றன. உலக சோசலிச வலைத் தள வாசகர்கள், நவம்பர் 5 இல் நடைபெறவுள்ள "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" மாநாட்டில் கலந்து கொண்டு, போருக்கு எதிராக மற்றும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைக்க உதவுமாறு நாம் அழைப்புவிடுக்கிறோம்.
Andre Damon
22 October 2016

Tuesday, 25 October 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் போலிஸ் கொலை தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது

Police murder of two Jaffna University students expose Sri Lankan Tamil nationalists

image source from internet

சென்ற வியாழக்கிழமையன்று, யாழ்ப்பாணத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பவுன்ராஜ் சுலக்‌ஷண் மற்றும் நடராசா கஜன் ஆகிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு கலைப் பிரிவு மாணவர்களை இலங்கை போலிஸ் கொலை செய்தது. ஒட்டுமொத்த தீவிலும் வர்க்கக் குரோதங்கள் துரிதமாக தீவிரமடைந்து செல்வதன் மத்தியில் போலிஸின் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அமெரிக்கா ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு பொறியமைவு செய்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அதன்மூலம் அமர்த்தப்பட்ட “நல்லாட்சி” அரசாங்கமானது மேலும் மேலும் அதிகமாய் மக்கள்வெறுப்பதாய் ஆகிக் கொண்டிருக்கிறது, அத்துடன் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் மத்தியில் அதற்கான எதிர்ப்பும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது.
திகிலூட்டும்விதமாக, பாதுகாப்புச் செயலரான கருணாசேன ஹெட்டியாராச்சி இந்தக் கொலைகளை வழக்கமான நடைமுறை என்றார். “வடக்கில் மட்டுமல்ல, இதேபோன்ற சம்பவங்கள் தெற்கிலும் கூட நடந்திருக்கின்றன. இதனை யாரும் பிரத்தியேகமானதாக” தீவின் வடபகுதியின் தமிழ் சிறுபான்மையினர் மீதானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். தொடர்ந்து கூறுகையில், “அவசியப்பட்டால்” சட்டம் ஒழுங்கை உறுதிசெய்வதற்கு “இராணுவம் போலிசுக்கு உதவத் தயாராய்” இருப்பதாக அவர் அச்சுறுத்தினார்.
போலிஸ், ஊடகங்கள் மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சிகள் இந்தக் கொலையை ஆரம்பத்தில் ஒரு விபத்தாக சித்தரிக்க முயற்சி செய்தன. தமிழ் தேசியவாத வலைத் தளங்கள் அமெரிக்க ஆதரவு இலங்கை ஆட்சியை பாதுகாக்கும் விதமாய், இந்தப் போலிஸ் கொலையை ஒரு “துயரமான சம்பவம்” எனக் கூறின.
பிரேதப் பரிசோதனையின் போது, இறந்தவர்களில் ஒருவரின் மார்பிலும் தலையிலும் துப்பாக்கி ரவை இருந்ததையும், இரண்டாமவர் கடுமையான உட்புறக் காயங்களுக்குப் பலியாகியிருந்ததையும் நீதித்துறையின் மருத்துவ அதிகாரிகள் கண்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டியவரை போலிஸ் தலைமீது குறிவைத்ததால், அவர் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த ஒரு சுவரில் மோதியிருப்பதாய் தென்படுகிறது.
குற்றச் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் வாழும் மக்கள் அவர்கள் முதலில் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதை உலக சோசலிச வலைத் தளத்தின்செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, காயமடைந்த மாணவர்களைக் கொண்டுசெல்வதற்கு போலிஸ் தயாரிப்பு செய்து கொண்டிருந்ததை கண்டனர்.        
சம்பவத்திற்கு எதிராக மருத்துவமனையின் முன் கூடிய நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பொதுமக்களும் விபத்து என்று விடப்பட்ட கதையை  நிராகரித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா மத்தியஸ்தம் செய்வதற்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். விபத்து என்னும் கதையை விற்க முயன்ற சேனாதிராஜாவுக்கு எதிராக மாணவர்கள் கோபத்துடன், “இது ஒரு விபத்து அல்ல, இது கொலை” குரலெழுப்பினர். “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறி விட்டு சேனாதிராஜா சம்பவ இடத்தில் இருந்து பின் வாங்கினர்.
மாணவர் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரான சம்பந்தன் கிழக்கு மாகாணத்தில் தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுடன் ஒரே மேடையையில் இருந்தார். போலிஸ் மிருகத்தனம் குறித்து ஒரு வார்த்தையும் கூட சம்பந்தன் உச்சரிக்கவில்லை. அதற்கு மாறாய், அவர் சிறிசேனாவைப் புகழ்ந்து, அமெரிக்க ஆதரவு ஆட்சியின் பின்னால் மீண்டும் தன்னை நிறுத்திக் கொண்டிருந்தார்.
அவர் பேசினார்: “நாட்டின் மக்களிடையே ஒற்றுமையையும் புரிதலையும் உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் தீவிரமாய் முயற்சி செய்கிறது என்பதான ஒரு எண்ணம் சர்வதேச சமுதாயத்தின் மத்தியில் உருவாகியுள்ளது. ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களது முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு நாம் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”
போலிஸ் கொலைகளைக் கண்டனம் செய்ய சம்பந்தன் மறுத்ததென்பது ஒரு தனிமைப்பட்ட நிகழ்வு அல்ல. தமிழ் தேசியவாதிகள் போலிஸ் மிருகத்தனத்தை ஆதரிக்கிறார்கள். 2015 மே மாதத்தில், உயர்நிலைப்பள்ளி மாணவியான வித்யா சிவலோகநாதன் கொடூரமான விதத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்ததன் பின்னர், வட மாகாணம் முழுமையாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் போலிசுடன் மோதினர், சுமார் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் போலிசுடன் இணைந்து செயல்பட்டனர், அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டனம் செய்தனர். வடக்கு மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்: “நாம் போலிசுடன் ஒத்துழைக்க வேண்டும், அவர்களை எதிரியாகப் பார்க்கக் கூடாது. சில துஷ்டநோக்கம் கொண்ட மனிதர்கள் நமக்கும் போலிசுக்கும் இடையில் பேதங்களை உருவாக்கி ஒரு சண்டையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதும், நிலைமையைச் சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதும் மிகத் தெளிவாய் தெரிகிறது.”
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை அரசியலுக்கு பெருகிச் செல்கின்ற எதிர்ப்பை ஒடுக்குவதற்கு, பாதுகாப்புப் படைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்ற தமிழ் தேசியவாதக் குழுக்களும் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சலுகைகொண்ட ஒரு சிறு அடுக்கு தவிர்த்து மற்ற அத்தனை பேருமே போரினால் விளைந்த பெருநாசத்தின் நிழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு அரசாங்கமும் வட மாகாணசபையும் எதுவும் செய்யவில்லை.
போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, கொள்ளைகள் மற்றும் குழு மோதல் நடவடிக்கைகளை காரணமாகக் கூறி போலிஸ் படைப்பலம் பாரிய அளவில் வலுவாக்க பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகஸ்டில், தமிழ் பேசும் போலிஸ் கூடுதலாய் 400 பேர் அமர்த்தப்பட்டனர். ”பயங்கரவாத எதிர்ப்பு”க்குப் பெயர்பெற்ற இராணுவ பாணியிலான போலிஸ் அலகான, சிறப்பு அதிரடிப் படை (STF) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் யாழ்ப்பாண தீபகற்பத்தைச் சுற்றிய முக்கிய பகுதிகளிலும் நிறுத்தப்படுவதை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் பேசும் மோட்டார் சைக்கிள் போலிஸ் அலகு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டிருந்ததைக் காட்டும் காணொளியை புதன்கிழமையன்று தமிழ் தேசியவாத வலைத் தளமான தமிழ் வின் பெருமைபொங்கக் காட்டியது. அடுத்த நாள் இந்த இரண்டு மாணவர்களையும் போலிஸ் கொலை செய்தது.
150,000க்கும் அதிகமான படையினர்களைக் கொண்ட இராணுவ ஆக்கிரமிப்புப் படையும் போலிசும்தான் குற்றவியல் நடவடிக்கைகளது அதிகரிப்புக்கு காரணமாய் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர், ஏனெனில் இலங்கையின் கடற்படை ரோந்துப் படகுகளின் கவனத்திற்குத் தப்பி, பாக்கு தொடுவாயினை கடந்து இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடைபெற முடியாது. இராணுவ உளவுப்பிரிவு பல சந்தர்ப்பங்களில் குழு நடவடிக்கைகள், கொள்ளைகளை ஒழுங்குபடுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கமும் வடமாகாண சபையும் போலிஸ் அரசு ஆட்சி வடிவங்களை உருவாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை, யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் சேவையில் இருக்கையில், தான் பயன்படுத்திய வழிமுறைகள் குறித்து நினைவுகூர்கையில் அவர் கூறினார்: “சிறப்பு அதிரடிப் படை மாலை நேரங்களில் வீதிகளில் மும்முரமாக ரோந்து சுற்றுவதற்கு எனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி நான் உத்தரவிட்டேன். ஐந்து பேருக்கும் அதிகமாய் கூடிநிற்பதே சட்டவிரோதம் என்று அறிவித்து அதை மீறுபவர்களைக் கைது செய்வதற்கும் உத்தரவிட்டேன்.”
மரணதண்டனையின் தீவிர ஆதரவாளரான இளஞ்செழியன் ஏராளமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். பலசமயங்களில் அவர், சந்தேகிக்கப்படுபவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்ற சட்ட உரிமையை மறுத்திருப்பதோடு வழக்கறிஞர்கள் வழக்குகளை பின்போடுவதனையும் மறுத்திருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க, சர்வதேச விசாரணையினையும் அல்லது வெளிநாட்டு நீதிபதிகளினையும் அவர் எதிர்த்தார். “நீதித்துறை சுதந்திரத்திற்கு அவரளித்த பங்களிப்பை” அங்கீகரிக்கும் விதமாக 2001 இல் அமெரிக்கா அவருக்கு கௌரவ அமெரிக்கக் குடிமகன் அந்தஸ்தை வழங்கியது. உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது சேவைகளின் காரணமாகவே அவர் “கௌரவிக்க பட்டிருந்தார்”.
தமிழ் தேசியவாதக் கட்சிகள், இளஞ்செழியனின் தன்னிச்சையான வழிமுறைகளை எதிர்த்ததுமில்லை அல்லது மக்களுக்கு எதிரான போலிசின் வன்முறையைக் கண்டித்ததுமில்லை. இந்த இரண்டு மாணவர்களின் கொலையில் அரசாங்கத்தின் பொறுப்பைக் கண்டனம் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை வெளிப்படையாவே மறுத்து விட்டன.
அரசாங்கத்திற்கும் அமெரிக்காவில் இருக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பகிரங்கமான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சிறிசேன வாக்குறுதியளித்துள்ளதையும், குற்றமிழைத்த ஐந்து போலிஸ்காரர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதையும், குற்றத்தை விசாரிக்க புதிய போலிஸ் படைகளும் உளவுப் படையும் அனுப்பப்பட்டுள்ளதையும் அவர்கள் தூக்கிப் பிடிக்கின்றனர். மாணவர்களின் நியாயமான கோபத்தை திசைதிருப்புவதற்கும் கொலைகளுக்கான அரசியல் பொறுப்பை மூடிமறைப்பதற்குமே அவை முனைந்து கொண்டிருக்கின்றன.
By K. Nesan,
24 October 2016

Monday, 24 October 2016

நவம்பர் 5 “சோசலிசம் Vs. முதலாளித்துவம் மற்றும் போர்” கருத்தரங்கும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தைக் கட்டியெழுப்புதலும்

The November 5 conference, “Socialism vs. Capitalism and War,” and the building of a new movement against imperialist war

சோசலிச சமத்துவக் கட்சியும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) மிச்சிகன் மாகாணம் டெட்ராயிட் நகரில் உள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Wayne State University) நவம்பர் 5 அன்று“சோசலிசம் Vs. முதலாளித்துவம் மற்றும் போர்” என்ற ஒரு போர்-எதிர்ப்பு கருத்தரங்கை நடத்துகின்றன. போரின் பெருகும் அபாயத்தை ஆய்வு செய்வதும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு இயக்கத்திற்கான அரசியல் அடித்தளங்களை அமைப்பதும் இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிந்து கொண்டே செல்லும் போர் உந்துதலை மையமாய் கொண்டு ஒரு தீவிரமான புவியரசியல் நெருக்கடி எழுந்திருப்பதன் மத்தியில் இந்த கருத்தரங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாய் அமெரிக்கா நடத்தியிருக்கக் கூடிய கால் நூற்றாண்டு காலப் போர்களும், பதினைந்து ஆண்டு கால “பயங்கரவாதத்தின் மீதான போரும்” அமெரிக்காவின் மிகப்பெரும் புவியரசியல் எதிரிகளுடனான ஒரு நேரடி மோதலாக, பலரும் அறிந்திருப்பதை விடவும் மிகத் துரிதமான வேகத்தில், உருமாற்றம் கண்டு வருகின்றன.
அமெரிக்க தேர்தலுக்கு முந்தைய இந்த இறுதி வாரங்களில், ஒபாமா நிர்வாகம் சிரியாவில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கை அதிகரிப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான தனது பிரச்சாரத்தை ஏககாலத்தில் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிரியாவில் “பறக்கத் தடை விதிக்கப்பட்ட வலயம்” அமைக்க - இது ரஷ்யாவுடனான ஒரு போரில் சென்று முடியத்தக்கது என்பதை அமெரிக்க இராணுவத் தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஞாயிறன்று நடந்த நகர அரங்கு ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
சென்ற வாரத்தில், வாஷிங்டன் டிசியில் நடந்த அமெரிக்க இராணுவ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் —இந்த நிகழ்வு ஏறக்குறைய அமெரிக்க ஊடகங்களால் பேசப்படாததாய் இருந்தது— ஒன்றுகூடியிருந்த அமெரிக்க அதிகாரிகள் மூர்க்கத்தனமான மிரட்டல்களை விடுத்ததோடு இராணுவம் பாரிய அளவில் விரிவாக்கப்படுவதற்கும் கோரினர்.
இராணுவத்தின் படைத் தலைவரான மார்க் மிலி கூறுகையில், வருங்காலத்தில் பெரும் தேசிய-அரசுகள் பங்குபெறுகின்ற ஒரு போர் “ஏறக்குறைய நிச்சயமானதாக இருக்கிறது” என்றார். “அமெரிக்காவை எதிர்ப்பதற்கு முயல்பவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு நாங்கள் சொல்வது, நாங்கள் உங்களைத் தடுத்து நிறுத்தி, முன்னெப்போது நீங்கள் தோற்கடிக்கப்பட்டதை விடவும் கடுமையாக உங்களைத் தோற்கடிப்போம்” என்று அறிவித்தார்.
துணை பாதுகாப்புச் செயலரான ரோபர்ட் வேர்க் (Robert Work) விடுத்த எச்சரிக்கையில், “எங்களை வெளியில் நிறுத்தி வைக்கலாம் என்று கருதுகின்ற எதிரிகள்” எவரையும் “மூக்குடைப்பதற்கு” அமெரிக்க இராணுவம் தயாரிப்புடன் இருக்கிறது என்றார். மேஜர் ஜெனரல் வில்லியம் ஹிக்ஸ் பேசுகையில், “அண்மை எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு வழமையான மோதலானது அபாயகரமானதாகவும் வேகமானதாகவும் இருக்கும்” என்றார். “கொரியாவுக்குப் பின்னர் அமெரிக்க இராணுவம் கண்டிராத வீச்சிலான வன்முறைக்கு” தயாரித்துக் கொள்வதற்கு இராணுவ அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
இந்த தீவிரமான போர் அபாயமானது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் விடுபட்டதாக இருப்பதோடு அமெரிக்காவில் அரசியல் “இடது” என தன்னைக் காட்டிக் கொள்கின்றவர்களாலும் ஏறக்குறைய உதாசீனப்படுத்தப்படுவதாய் இருக்கிறது. ஒபாமாவின் கீழான எட்டு ஆண்டுகள் உட்பட —இரண்டு முறை பதவிக்காலத்தில் இருந்த சமயம் முழுமையாக தொடர்ந்து நாட்டை போரில் ஈடுபடுத்தியிருந்த முதல் ஜனாதிபதி— கால்நூற்றாண்டு காலம் முடிவில்லாத போர் நடத்தியிருந்ததன் பின்னரும் கூட செயல்பாட்டு நிலையிலான எந்த போர்-எதிர்ப்பு இயக்கமும் இல்லாதிருக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சியும் IYSSE ம் அழைப்பு விடுத்திருக்கக் கூடிய கருத்தரங்குமட்டுமே ஏகாதிபத்தியப் போருக்கான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்காகநடைபெறுகின்ற ஒரே முயற்சியாகும். விளக்க அவசியமாக இருக்கும் ஒரு அசாதாரணமான உண்மையாக இது இருக்கிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட போர்-எதிர்ப்பு இயக்கம் காணாமல் போனதை எப்படி கணக்கில் எடுப்பது? அமெரிக்க மற்றும் உலக மக்கள் போர்-ஆதரவாளர்களாக மாறி விடவில்லை. 2003 இல் ஈராக் மீதான படையெடுப்புக்கு முன்னதாக நூறாயிரக்கணக்கில், சில சந்தர்ப்பங்களில் மில்லியன்கணக்கிலும் கூட, வெடித்தெழுந்த போரெதிர்ப்பு மனோநிலை மறைந்து விட்டிருக்கவில்லை. மாறாக, பெரும்பாலும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை கொடுத்திருந்த அமைப்புகள் ஏகாதிபத்திய தலையீட்டின் மிக ஆர்வமான ஆலோசகர்களாகவும் வக்காலத்துவாதிகளாகவும் ஆகி விட்டிருக்கின்றன.
இந்த சக்திகள் முன்வைக்கின்ற வாதங்களது ஒரு உதாரணமாக, “சுயாதீனமான சோசலிச மன்றம்” (independent socialist forum) என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற புதிய அரசியல் என்ற வலைத் தளத்தில் ஸ்டான்லி ஹெல்லர் எழுதி வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையை காணலாம். புதிய அரசியலின் ஸ்தாபக ஆசிரியர்களாக இருக்கும் ஜூலியஸ் மற்றும் பில்லிஸ் ஜாகப்சன் இருவரும் மாக்ஸ் சாச்ட்மனின் — இவர் 1940 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு பின்னாளில் கொரியா மற்றும் வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் ஒரு பெரும் ஆதரவாளராக ஆனார்— அரசியல் சகாக்களாக இருந்தவர்களாவர். புதிய அரசியல் ஆசிரியர் குழுவில் பலதரப்பட்ட போலி-இடது அமைப்புகளின் அங்கத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
"அலெப்போ மற்றும் சிரியாவிற்கான ஆவேசம்” என்ற செப்டம்பர் 28 அன்றான அவரது கட்டுரையில் ஹெல்லர், “இது ஏதோ 2003 போன்றும் ஒவ்வொருவரும் மேற்கத்திய ஏகாதிபத்திய சாகசங்கள் மீது கவனம் குவிக்க வேண்டும் என்பது போன்றும் நடந்து கொள்கின்றவர்களை” தாக்கினார். “...இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரதான படுகொலைக்கும் ‘சாம்ராஜ்யத்திற்கும்’ அதிக சம்பந்தமில்லை.”
பிரச்சினை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் அல்ல, மாறாக பஷார் அல்-அசாத்தின் அரசாங்கம்தான் என்று ஹெல்லர் வலியுறுத்துகிறார். “அவருக்கு ஒரு அரை-பாசிச நாடு (ரஷ்யாவைக் குறிப்பிடுகிறார்], மற்றும் இன்னொரு மத அடிப்படையிலான நாடு [ஈரான்] ஆகிய வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து உதவியும் [சில விதங்களில் உத்தரவும்] கிடைக்கிறது.” சிரியாவில் சிஐஏ ஆதரவுடன் நடக்கின்ற நடவடிக்கைகளை எதிர்க்கின்ற எவரொருவரையும், அசாத் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒரு ஆதரவாளராக அவர் குரூரப்படுத்துகிறார்.
ஈராக்கிலான அமெரிக்காவின் போரில் இருந்தான மிக மோசமான பிரச்சாரத்தை மீண்டும் கையிலெடுக்கும் ஹெல்லர், சிரியாவில் அமெரிக்க தலையீட்டுக்கு வெகுஜன ஆதரவு இருப்பதாய் கண்டறிந்து சொல்கிறார். “சிரிய மக்கள் பல ஆண்டுகளாகவே பறக்கத் தடை விதிக்கப்பட்ட ஒரு வலயத்தைக் கோரி வருகின்றனர்” என்றார் அவர். “NFZ [பறக்கத் தடைவிதிக்கப்பட்ட வலயம்] கோருகின்ற எவரொருவரையும் ‘பென்டகனின் முகவர்’ என்று குரூரப்படுத்திக் காட்டுகின்ற ‘ஏகாதிபத்திய-விரோத’ இடதுகள் எனக்கு வெறுப்பூட்டுகின்றனர்” என்று அவர் எழுதுகிறார்.
“ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களின் மீது” குறிப்பாக கிளிண்டன் மீது, சிரியாவில் ஒரு கூடுதல் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அழுத்தமளிக்க வேண்டும் என்று “அமைதி இயக்க”த்திற்கு அழைப்பு விடுத்து ஹெல்லர் நிறைவு செய்கிறார். ”ஹிலாரி கிளிண்டன் மட்டுமே”, ஒரு பறக்கத் தடை கொண்ட வலயத்தை ஆதரிப்பது உள்ளிட “சிரியாவின் அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு ஏதேனும் செய்வது குறித்த மனோநிலை எதனையும் வெளிப்படுத்துகிறார்” என்று அவர் எழுதுகிறார். ஆயினும், கிளிண்டன் வெற்றி பெற்றாலும் கூட, அவர் “ஜனவரி வரையிலும் பதவியில் அமர்வதற்கு முடியாது” என்று முணுமுணுக்கிறார்.
சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) அங்கமான சோசலிஸ்ட் தொழிலாளி (Socialist Worker) பத்திரிகைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் எழுதி வருபவரான ஹெல்லர், “அமைதி இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவோம்” (“Revive the Peace Movement”) என்ற பொருத்தமில்லா பெயர் கொண்ட ஒரு குழுவின் தலைவரும் ஆவார். இக்குழு, ISO, CODEPINK, மத்திய கிழக்கு நெருக்கடிக் குழு, மற்றும் பல்வேறு பிற குழுக்களால் வழிமொழியப்பட்டதாகும். அமைதி இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவோம் குழு சமீபத்தில் “சிரியா தொடர்பான ஒரு பகிரங்கக் கடிதம்” ஒன்றையும் வெளியிட்டது. ஹெல்லர் மேற்கூறப்பட்ட தனது கட்டுரையில் இக்கடிதத்தைக் குறிப்பிடுகிறார்.
சென்ற மாதத்தில் தோல்வியடைந்த சண்டைநிறுத்தத்திற்காக ஒபாமா நிர்வாகத்தின் மீது தாக்குதல் நடத்துவது தான் இந்தக் கடிதத்தின் மையப் பொருளாய் இருக்கிறது. அது அசாத்திற்கு எதிரான பிரச்சாரத்தை பலவீனப்படுத்தும் என்று அது கூறுகிறது. “கெர்ரி-லாவ்ரோவ் உடன்பாட்டின்” கீழ் “அசாத்தை பதவியில் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படும்” என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது.
இந்தக் கடிதத்தில் ஒரு மிகப் பரந்த கூட்டணி கையெழுத்திட்டிருந்தது. ISO இன் ஆஷ்லி ஸ்மித்; Against The Current இன் நிர்வாக இயக்குநரான டேவிட் ஃபிங்கெல்;பசுமைக் கட்சியின் ஹவி ஹாக்கின்ஸ்; அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கானபிரச்சார அமைப்பின் இணை-இயக்குநரான ஜோன் லாண்டி; செய்திகள் மற்றும் கடிதங்கள் குழுவின் ஃபிரெட் மெக்லென்பெர்க்; புதிய அரசியல் பத்திரிகையின் இணை-ஆசிரியரும் Solidarity அமைப்பின் முன்னணி உறுப்பினருமான டான் லா போட்ஸ் மற்றும் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்துடன் ஒற்றுமையுணர்வுகொண்ட போரெதிர்ப்புக் குழுவின் பிரதிநிதிகள், Black Lives Matter உடன் இணைந்த “Moral Mondays’ குழு, மற்றும் பலரும் இதில் அடங்குவர்.
இந்தப் பட்டியல் அமெரிக்காவில் உள்ள ஏறக்குறைய ஒட்டுமொத்தமான போலி-இடதுகளையும் கொண்டிருக்கின்றது. இதன் கீழ்வரும் அமைப்புகள் மார்க்சிசத்தை நோக்கிய எதிர்ப்பிலும், தொழிலாள வர்க்கத்தை நோக்கிய குரோதத்திலும் தாங்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு தகாத உறவைப் பராமரித்து வருபவையாகும். பல்வேறு சாச்ட்மன்வாத அமைப்புகளின் ஒரு கலவையான Solidarityஆல் Against the Current வெளியிடப்படுகிறது. 1950களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பப்லோவாதப் போக்கினால் வெளியிடப்படுகின்ற சர்வதேச கண்ணோட்டம் [International Viewpoint] பத்திரிகையுடன் ஒரு அரசியல் தொடர்பையும் இது பராமரித்து வருகிறது. ISO சாச்ட்மன்வாத அரசியலின் இன்னுமொரு கிளையாகும். செய்திகள் மற்றும் கடிதங்கள் [News and Letters] Raya Dunayevskaya மற்றும் CLR James ஆகியோரின் “மார்க்சிச மனிதநேயம்” இல் தனது தோற்றுவாய்களைக் கொண்டிருக்கிறது.
ஃபிங்கெல், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் - இது 1963 இல் பப்லோவாதிகளுடன் மறுஇணைவு கண்டு, அதற்கு அடுத்து வந்த ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கஸ் லீக்கை உருவாக்கவிருந்த போக்கினை வெளியேற்றியது - ஒரு முன்னாள் உறுப்பினராவார். International Viewpointஇன் பின்னால் இருக்கின்ற பிரதான அமைப்பான புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்பவரான ஜில்பேர் அஷ்கார் உடன் ஃபிங்கெல் சமீபத்தில் நேர்காணல் செய்தார். அஷ்கார், உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில்குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, ISO வின் ஆஷ்லி ஸ்மித்துடன் இணைந்து, சிரியாவில் தலையீட்டுக்கான ஒரு முன்னணிப் பிரச்சாரகராக இருப்பவரும், அத்துடன் லிபியாவில் போரை ஆதரித்து நின்றவரும் ஆவார்.
இந்த பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திடாத போலி-இடது குழுக்கள் அதில் கூறப்பட்டிருந்த கோட்பாடுகளுக்கு எதிர்ப்புக் காட்டி அதில் இருந்து ஒதுங்கவில்லை. உதாரணமாக, சோசலிச மாற்று அமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான மறைப்பாக அதன் போர் உந்துதலையே அலட்சியம் செய்து வந்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செப்டம்பர் 4 அன்று வெளியான அதன் கட்டுரை, போர் அபாயத்தை தணித்துக் காட்டுவதோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகை நம்பிக்கைவாதம் கொண்டிருப்பது போன்ற ஒரு சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. “ஈராக்கை விடுங்கள், சிரியாவில் இந்த சமயத்தில் ஒரு முழுவீச்சிலான இராணுவத் தலையீடு என்பது, அரசியல்ரீதியாக அவர்களுக்கு [அமெரிக்காவுக்கு] சிந்தித்துப் பார்க்க முடியாததாகும்” என்று சோசலிச மாற்று எழுதுகிறது. இதே அமைப்பின் முந்தைய கட்டுரை ஒன்றில், “களத்தில் பூட்ஸ் கால்களை இறக்குவதற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் பெரும் தயக்கம்” கொண்டிருப்பதாகக் கூறியது.
இப்போதைய நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுமார் 1,000 தளங்களில் நூறாயிரக்கணக்கிலான படையினர்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மை நிலையிலும் கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாகவே, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது வெளிநாடுகளில் முற்றிலும்பொறுப்பற்ற தன்மையுடன் இராணுவ சாகசங்களை மேற்கொள்வதையே அடிப்படையாகக் கொண்டிருந்து வந்திருக்கிறது. சிரியாவின் விடயத்தில் அமெரிக்கா, அல்கெய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் பிற பினாமி இஸ்லாமியப் படைகளுடன் அறிவிக்கப்படாத ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாய் அந்நாட்டின் மீது குண்டுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அங்கு ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்கா முன்னெடுத்த போரானது நூறாயிரக்கணக்கிலான சிரியர்களை படுகொலை செய்திருப்பதோடு மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. சிரியா ஏறக்குறைய முற்றிலுமாய் சேதப்படுத்தப்பட்டதற்கு பிரதான பொறுப்பு அமெரிக்காவினுடையதே ஆகும்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முதனிலைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது,சோசலிச மாற்று அமைப்பானது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு “சோசலிச” எதிரியாகக் காட்டிக் கொண்ட சாண்டர்ஸ், தனது முதனிலைப் பிரச்சாரம் முழுமையிலும் ஒபாமாவின் போர்க் கொள்கைக்கான தனது முழுமையான ஆதரவை வழங்கினார். இப்போது அவர், பெருமளவில் ரஷ்ய-விரோதத்தை கிளறி விடுவதன் அடிப்படையில் போட்டியிடுபவரும், சிரியாவில் ஆசாத் மற்றும் ரஷ்யாவின் படைகளுக்கு எதிரான இராணுவத் தீவிரப்படுத்தலை அறிவுறுத்திக் கொண்டிருப்பவருமான கிளிண்டனுக்கு உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவு நோக்குநிலை என்பது அடிப்படையாக தவறான சிந்தனைகளின் விளைபொருளோ அல்லது ஏதேனும் ஒரு தனிப்பட்ட அரசியல்வாதியின் இற்றுப்போன அரசியலின் விளைபொருளோ அல்ல. இந்த அமைப்புகளின் கருத்தொற்றுமையானது அவற்றின் வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது.
அவை முதலாளித்துவ அரசியலின் ஒரு கன்னையைக் கொண்டிருக்கின்றன. மேல் மட்டத்தில் இருக்கும் 10 சதவீதம் பேரின் செல்வத்தில் தமக்கான ஒரு கூடுதல் பெரிய பங்கையும், அத்துடன் பெருநிறுவன உயரடுக்கிலும், தொழிற்சங்க எந்திரத்திலும் மற்றும் அரசிலும் கூடுதல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் விரும்புகின்ற தனிச்சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக அவை பேசுகின்றன. மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் சுமார் 10 முதல் 1 சதவீதம் வரை இருக்கக் கூடிய உயர் நடுத்தர வர்க்கமானது, 2008க்குப் பிந்தைய பங்குச் சந்தை எழுச்சியில் - இதுவும் கூட வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தையும் சொந்த நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊதிய வெட்டுகளையுமே நம்பியிருக்கிறது - மிகப் பெருமளவில் ஆதாயமடைந்திருக்கிறது. போலி-இடதுகள், தீவிரப்பட்ட மற்றும் “சோசலிச” சொல்லாடல்களைப் பயன்படுத்துவதென்பது அதன் போர்-ஆதரவு மற்றும் முதலாளித்துவ ஆதரவு நோக்குநிலையை இருட்டடிப்பு செய்வதற்காய் நோக்கம் கொண்டிருக்கிறது.
ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதென்பது, போலி-இடதுகளின் துரோக அரசியலுக்கு எதிராய் தொழிலாளர்களும், மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் கையிலெடுத்தாக வேண்டியிருக்கும் மிக அவசரமான அரசியல் பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிப்ரவரி 18, 2016 அன்று வெளியிட்ட “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அறிக்கையில் வலியுறுத்தியிருந்தவாறாக, “இத்தகையதொரு இயக்கமானது சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.” போருக்கு எதிரான போராட்டமானது சர்வதேசரீதியானதாகவும், சோசலிசத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாக சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்குக் குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
ICFI மட்டுமே போருக்கான எதிர்ப்பை அணிதிரட்டுகின்ற ஒரே அமைப்பாய் இருக்கிறது, ஏனென்றால் அது மட்டுமே உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்காகவும் முன்னோக்கிற்காகவும் போராடுகின்ற ஒரே அமைப்பாகும். போரை உருவாக்குகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் போருக்கு முடிவு கட்டுவதற்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகிறது. உலகெங்கிலுமான தொழிலாளர்களின் கோபமும் எதிர்ப்பும் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்பட்டு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தில் செலுத்தப்பட்டாக வேண்டும். ஒரு அரசியல் தலைமை கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும், அந்த நோக்கத்திற்காகத் தான் SEPம் IYSSEம் டெட்ராயிட்டில் நவம்பர் 5 கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
வம்பர் 5, சோசலிசம் Vs முதலாளித்துவம் மற்றும் போர் கருத்தரங்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும் அதற்கு பதிவு செய்வதற்கும், இங்கே கிளிக் செய்யவும்.
Eric London and Joseph Kishore
12 October 2016
http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/conf-o14.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts