Search This Blog

Saturday, 30 July 2016

சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் முடிவு: அரசியல் படிப்பினைகள்

The end of the Sanders campaign: The political lessons

Image source from internet
ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் வழங்கிய ஆதரவுடன் பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரம் ஒரு அவமானகரமான முடிவுக்கு வந்துள்ளது. அவரது படுமோசமான அரசியல் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதற்கு பிலடெல்பியாவில் சாண்டர்ஸினது கடந்த வார அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளையும் விட வேறெதைச் சேர்க்க வேண்டும்?
திங்களன்று மாநாட்டு திடலுக்கு வெளியே ஒரு சம்பவத்தில் அவருக்கு எதிராக வெறுப்புடன் கூச்சலிட்ட அவரின் சொந்த பிரதிநிதிகளையே சாண்டர்ஸ் கண்டித்தார், “இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜமான உலகம்,” என்று கூறி, அவரின் ஏற்பிசைவை நியாயப்படுத்தினார். இதன் மூலமாக அவர், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளால் முன்னிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் க்கு வேறெந்த எதிர்ப்பும் இல்லாத ஒரு "நிஜமான உலகை" அர்த்தப்படுத்தினார். “கோடீஸ்வர வர்க்கத்திற்கு" எதிரான சாண்டர்ஸின் "அரசியல் புரட்சி", நடப்பில் இருப்பதையும், இருகட்சி அமைப்பு முறையையும் பாதுகாக்க திரும்பி உள்ளது.
அம்மாநாட்டின் பின் இரவில் அவர் வழங்கிய உரையில், வோல் ஸ்ட்ரீட் உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதற்காக அவர் யாரை விமர்சித்திருந்தாரோ அதே வேட்பாளரை உழைக்கும் மக்களின் ஒரு முற்போக்கான கூட்டாளி என்று சித்தரித்து, ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் அவரது முன்னாள் எதிர்ப்பாளருக்கு சாண்டர்ஸ் புகழாரங்களைக் குவித்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெருமளவிற்கு ஏழைகளிடம் இருந்து பணக்காரர்களுக்கு செல்வவளத்தை கைமாற்றுவதை மேற்பார்வை செய்துள்ள ஒபாமா நிர்வாகத்தையும் அவர் புகழ்ந்தார்.
வேட்பாளர் நியமன நடைமுறையின் போது செவ்வாயன்று இரவு, கிளிண்டனை வேட்பாளராக அறிவிப்பதற்கு ஆதரவாக பெயரிட்டு கேட்கும் வாக்கெடுப்பை தவிர்க்குமாறு கூறி பாராட்டுரைகளை வழங்க அவர் எழுந்து வந்தபோது, சாண்டர்ஸ் அவரின் அரசியல் வேஷத்தைக் கலைக்கத் தொடங்கினார்.
வெற்று கோஷங்கள் மற்றும் வஞ்சக வார்த்தைஜாலங்கள் தவிர சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்தில் வேறெதுவும் இல்லை. ஆனால் இந்த விளைவு முன்கணிக்க முடியாததோ அல்லது முன் கணிக்கப்படாததோ இல்லை. இது, கடந்த ஆண்டு அவர் பிரச்சாரத்தை அறிவித்த பின்னரில் இருந்து உலக சோசலிச வலைத் தளம்வழங்கிய பகுப்பாய்வுகளை முழுமையாக நிரூபணம் செய்கிறது. ஒரு சோசலிசவாதியாக பொய்யாக கூறிவரும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியான சாண்டர்ஸ், உறுதியான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் போர் மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கைக்குப் பின்னால் அணிதிரட்ட முனைந்து வந்ததை நாம் ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்தோம்.
கடந்த ஆண்டில் உலக சோசலிச வலைத் தளம் எழுதிய மிக முக்கிய அறிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே மேற்கோளிடுகிறோம்:
  • “சாண்டர்ஸ்" பிரச்சாரத்தின் "பிரதான அரசியல் செயல்பாடு" அதிகரித்துவரும் சமூக அதிருப்தி மற்றும் விரோதத்தை தணித்து இப்போதைய அமைப்புமுறைக்குள்ளேயே கட்டுப்படுத்துவதற்காக ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதாகும். அவரது 'சோசலிச' பிரச்சாரம் என்று கூறப்படுவது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் எழுச்சியடைவதை முன்கூட்டியே தடுக்கும் ஒரு முயற்சியாகும்.” ("பேர்ணி சாண்டர்ஸ் ஒரு சோசலிசவாதியா?”, ஜூலை 16, 2015) 
  • "சாண்டர்ஸிற்கான ஆதரவு, ஆழ்ந்த சமூக கோபத்தின் ஓர் வெளிப்பாடு என்று கூறுவதற்கும், சாண்டர்ஸ் பிரச்சாரமே இந்த கோபத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சாண்டர்ஸ் தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை அச்சத்துடன் பார்க்கும் மற்றும் அதை தணிக்க ஏதேனும் வழியைக் காணத் துடிக்கும் ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரிவுக்காக பேசுகிறார். … சாண்டர்ஸ் அவரது பிரச்சார உரைகளில் வலியுறுத்துவதைப் போல 'புரட்சியை' உருவாக்க அல்ல, மாறாக அத்தகைய ஒன்றைத் தடுக்க நோக்கம் கொண்டுள்ளார்.” (பேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அரசியல் பாத்திரம், பெப்ரவரி 11, 2016)
  • சாண்டர்ஸ் இன் சொந்த வேலைத்திட்டத்தைக் குறித்து உலக சோசலிச வலைத்தளம் குறிப்பிடுகையில், குறிப்பாக அமெரிக்கா "உலகின் மிக பலமான இராணுவத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்ற அவரது அறிவிப்பும் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் டிரோன் படுகொலை திட்டத்தைத் தொடருவதற்கு அவர் உறுதியளித்தமை உட்பட ஏகாதிபத்தியத்திற்கான அவரின் ஆதரவை சுட்டிக்காட்டியது. அவர் “அரசியல் புரட்சி என்றழைத்ததை, பில்லியனர்கள் மற்றும் அமெரிக்க அரசியலில் அவர்களது ஊழலுக்கு எதிராக முழுமையான தடுப்புகளை உருவாக்குவது என இவற்றை அவர் ஊக்குவித்ததில் இருந்த மிகவும் வெளிப்படையான முரண்பாட்டில் இருக்கும் உண்மை என்னவென்றால், இப்புரட்சி விசித்திரமாக விளிம்பில் வந்து நின்றுவிடுகிறது என்பதாகும். வெளிநாட்டு கொள்கை பிரச்சினைகளில், அங்கே நடைமுறையளவில் கிளிண்டனிடம் இருந்து அல்லது ஆளும் ஸ்தாபகத்தின் வேறெந்த அரசியல்வாதியிடம் இருந்தும் சாண்டர்ஸை எதுவுமே வேறுபடுத்தவில்லை.” (“ஜனநாயக கட்சி விவாதத்தில் சாண்டர்ஸ்: ஒரு 'அரசியல் புரட்சி' விளிம்பில் வந்து நின்றுவிடுகிறது,” ஜனவரி 19, 2016 )
  • ஏகாதிபத்திய போருக்கான சாண்டர்ஸ் இன் ஆதரவு, தேசிய பேரினவாதம் மற்றும் பொருளாதார தேசியவாதத்தை அவர் ஊக்குவிப்பதுடன் நெருக்கமாக பிணைந்திருந்தது. “அமெரிக்க தொழிலாளர்களை உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நிறுத்த சேவையாற்றும் வகையில், வேலைநீக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையின் மீதான தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை, தேசியவாத தடங்களில் திருப்பி விடும் முயற்சியில், சாண்டர்ஸ் முற்றிலுமாக தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சி பிரிவுகளுடன் அணி சேர்ந்துள்ளார்.” ("பேர்ணி சாண்டர்ஸ், ஜனநாயக கட்சி மற்றும் சோசலிசம்", அக்டோபர் 15, 2015)
சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அரசியல் பாத்திரம் மற்றும் முக்கியத்துவம் குறித்த உலகசோசலிச வலைத் தளத்தின் விளக்கம் வர்க்க ஆய்வு மற்றும் வரலாற்று அனுபவத்தின் அடித்தளத்தில் இருந்தது. 2016 தேர்தல்களில் சாண்டர்ஸ் இன் நடவடிக்கைகள் முற்றிலுமாக அவரின் முந்தைய அரசியல் முன்வரலாற்றின் வரிசையில் இருந்தன. அவர் ஜனநாயகக் கட்சியினது பிரதான போக்கிலிருந்து சிறிதே வேறுபட்ட ஒரு முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்திற்கு மூடிமறைப்பாக, அவரது நீண்டகால "சோசலிச" முத்திரையையும் பெயரளவிற்கான சுதந்திரத்தையும் பயன்படுத்தினார். 1960 களில் அவர் ஒரு தீவிர மாணவராக இருந்த நாட்களில் இருந்து 1980 களில் வெர்மாண்ட் பேர்லிங்டனின் வணிகங்களுக்கு-நேசமான நகர முதல்வராக (மேயர்) வந்து, ஜனநாயகக் கட்சியின் ஒரு நீண்டகால காங்கிரஸ் கூட்டாளியாக வளர்ந்தது வரையில் அவரின் பரிணாமம், அரசியல் ஸ்தாபகத்துடன் ஒருங்கிணைந்துள்ள நடுத்தர வர்க்க போராட்டக்காரர்களின் ஓர் ஒட்டுமொத்த சமூக அடுக்கின் பரந்த வலது நோக்கிய நகர்வுடன் பிணைந்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரேயன் இன் (William Jennings Bryan) "வெகுஜனவாத" பிரச்சாரத்தில் இருந்து, 1980 கள் மற்றும் 1990 களில் ஜெஸ்ஸி ஜாக்சன் (Jesse Jackson) மற்றும் டென்னிஸ் குசினிக் இன் (Dennis Kucinich) பிரச்சாரங்கள் வரையில் ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்தாங்களே அரசியல் நம்பகத்தன்மை வழங்கி கொள்ளவும் மற்றும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் "வெளியிலிருந்து" பிரச்சாரங்களை பயன்படுத்தி உள்ளனர். சாண்டர்ஸ் அவரே அவரின் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுபவரை ஆதரிக்க சூளுரைத்திருந்தார் என்ற உண்மையைக் குறித்து ஒன்றும் கூறத்தேவையில்லை.
செயலூக்கத்துடன் அவருக்காக பிரச்சாரம் செய்ததன் மூலமாகவோ அல்லது அவரின் அரசியலுடன் ஐக்கியமாகி இருந்த அதேவேளையில் தந்திரோபாய அடித்தளத்தில் அவரை விமர்சித்ததன் மூலமாகவோ பிரமைகளை ஊக்குவிக்க முயன்ற போலி-இடது அரசியல் உதவியாளர்களது ஒட்டுமொத்த களமும் ஆரம்பத்தில் இருந்தே சாண்டர்ஸ் பிரச்சாரத்தை ஆதரித்திருந்தது. சாண்டர்ஸைப் போலவே, ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை சுற்றி செயல்பட்ட அந்த குழுக்களும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் எழுச்சியை எதிர்த்து, அவர்களது சகல முயற்சிகளையும் அதை தடுப்பதற்காக திருப்பி விட்டிருந்தன.
சோசலிஸ்ட் அல்டர்னேடிவ், சோலிடாரிட்டி (Solidarity), சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (International Socialist Organization), இளம் ஜனநாயக சோசலிசவாதிகள் (Young Democratic Socialists) மற்றும் பசுமை கட்சி போன்ற குழுக்கள் பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சி மாநாடு நடக்கும் அதே நேரத்தில் சோசலிச ஒருங்கிணைவு மாநாடு என்பதில் ஒன்று கூடுகின்றன. நேற்று அவர்கள் எழுதியதற்கு எந்த அரசியல் கணக்கும் வழங்காமல், அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்த அரசியல் பொறியைக் கட்டமைக்க ஜில் ஸ்ரைய்ன் இன் பசுமை கட்சி பிரச்சாரத்திற்குள் நகர்ந்து வருகிறார்கள், இவர், தனக்கு கிடைத்த கிடைப்பதற்கரிய பசுமை கட்சி வேட்பாளர் பதவியை, ஒரு மாதத்திற்கு முன்னர் சாண்டர்ஸ் க்கு வழங்க முன்வந்திருந்தார்.
இந்த அனுபவத்திலிருந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கான ஆதரவில் பிரதிபலிப்பைக் கண்ட ஆழ்ந்த சமூக பதட்டங்கள் மற்றும் கோபம் எதுவுமே இல்லாமல் போய்விடாது. நவம்பரில் யார் தேர்தல்களில் வெல்கிறார்கள் என்பது விடயமல்ல, வரவிருக்கும் காலகட்டம் வெடிப்பார்ந்த வர்க்க மோதல்களைக் கொண்டு வரும்.
வலதுசாரி ஆகட்டும் அல்லது பெயரளவிலான இடது ஆகட்டும் முதலாளித்துவ அரசியலின் சகல வடிவங்களில் இருந்தும் விட்டுகொடுப்பின்றி உடைத்துக் கொள்வது அவசியம் என்பதே மத்திய அரசியல் படிப்பினையாகும். சர்வதேசியவாதம், ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சமூக சமத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் அதி முக்கிய  அத்தியாவசியமாகும்.
இந்த முன்னோக்கின் மீதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜெர்ரி வையிட் மற்றும் நைல்ஸ் நிமுத் இன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து உண்மையான சோசலிசத்திற்காக போராட தீர்மானிக்குமாறும் சாண்டர்ஸ் இன் காட்டிக்கொடுப்பால் ஆத்திரமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் நாம் வலியுறுத்துகிறோம்.

Tom Hall

28 July 2016
http://www.wsws.org/tamil/articles/2016/july2016/sand-j30.shtml

Tuesday, 26 July 2016

துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியும், அமெரிக்க இராணுவவாதமும், ஜனநாயகத்தின் பொறிவும்

The Turkish coup, US militarism and the collapse of democracy

Image source from internet
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனைப் பதவியிலிருந்து தூக்கிவீசுவதற்கான கருச்சிதைக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், முக்கியமாக இஸ்தான்புல் மற்றும் அங்காராவை உலுக்கிய அந்த இரத்தக்களரியான சம்பவங்களில் வாஷிங்டனின் கரம் இருந்தது என்பதில் அங்கே எந்த ஐயப்பாடும் கிடையாது.
அமெரிக்கா ஐரோப்பாவில் அதன் மிக அதிகளவிலான அணுஆயுதங்களைப் பாதுகாத்து வைத்துள்ள இடமும், ஈராக் மற்றும் சிரியாவிற்கு எதிரான அதன் குண்டுவீச்சு நடவடிக்கையை நடத்துவதற்குரிய இடமாகவும் உள்ள இன்செர்லிக் விமானப் படைத்தளத்தின் தளபதி உட்பட பெண்டகன் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட துருக்கிய இராணுவ தளபதிகள் அந்த முயற்சிக்கப்பட்ட சதியில் நடவடிக்கையில் நேரடியாக உடந்தையாய் இருந்துள்ளனர். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவாக பல விமானங்கள் அமெரிக்க இராணுவ பார்வையின் கீழ் இன்செர்லிக் இல் இருந்து பறந்து சென்றன. அந்த சதி தோல்வியடைந்தமை வெளிப்படையாக ஆனதும், அந்த துருக்கிய விமானப்படை தளத்தின் தளபதி அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்தார்.
ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுக்கும், MIT என்று அறியப்படும் துருக்கியின் தேசிய உளவுத்துறை அமைப்பிற்கும் இடையிலான ரேடியோ தொலைதொடர்புகளை ஊடுருவி அனுப்பிய ரஷ்யாவிடமிருந்து உடனடியாக நடக்கவிருக்கும் ஓர் சதி குறித்த எச்சரிக்கை வந்திருந்ததாக புதனன்று தகவல்கள் வெளியானது. எர்டோகன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த கடற்கரை விடுதியில் அவரை கொல்வதற்கான அல்லது சிறைபிடிப்பதற்கான ஒரு நடவடிக்கையில் சிறப்பு நடவடிக்கை படைகள் அனுப்பப்படுவதற்கு வெறும் ஓர் அரை மணி நேரத்திற்கு முன்னர் தான், உரிய நேரத்தில் அவர் தப்பிச் செல்வதற்காக துருக்கிய ஜனாதிபதிக்கு இந்த எச்சரிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது.
சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் அப்பிராந்தியத்தில் அவற்றின் பாரிய ஆயத்தப்பாடுகளையும் மற்றும் உலகின் மிகவும் அதிநவீன மின்னணு உளவுப்பார்ப்பு வலையமைப்பையும் அவற்றின் மேற்பார்வையில் வைத்துள்ள நிலையில், அதே தகவல் பரிவர்த்தனைகளைக் குறித்து அவை அறியாமல் இருந்திருக்கலாம் என்பது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரம் துருக்கிய அரசாங்கத்திற்கு செய்தி அளிக்கவில்லை என்றால், அதற்கான காரணம் அவர்களும் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உடந்தையாய் இருந்தனர். எர்டோகனை ஒபாமா எச்சரிக்க விரும்பவில்லை; அவர் கொல்லப்பட வேண்டுமென விரும்பினார் என்பது தெளிவாகிறது.
பின்னர் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது வாஷிங்டனின் உண்மையான பிரதிபலிப்பு மாஸ்கோ இல் இருந்த வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியிடம் இருந்து வந்தது. கெர்ரி "துருக்கியில் ஸ்திரத்தன்மையும் சமாதானமும் தொடர்ச்சியும்" நிலவ வேண்டுமென அமெரிக்கா நம்புவதாக கூறி தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்டார். இராணுவ பதவிக்கவிழ்ப்புக்கு எதிராக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாப்பது குறித்து அதில் எந்த குறிப்பும் கிடையாது, அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகனின் தலைவிதி குறித்து எந்தவித கவலையும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூற வேண்டியதே இல்லை.
“துருக்கியில் தொடச்சிக்கான" ஆதரவிற்கு குரல் கொடுத்து கெர்ரி துல்லியமாக என்ன குறிப்பிடுகிறார் என்பதை கடந்த 70 ஆண்டுகால அமெரிக்க-துருக்கிய உறவுகளின் உள்ளடக்கத்தில் மட்டுந்தான் புரிந்து கொள்ள முடியும். 1947 இல், பனிப்போர் இன் ஆரம்ப கட்டத்தில், அமெரிக்கா அது சோவியத் ஆக்கிரமிப்பு என்று எதை குற்றஞ்சாட்டியதோ அதற்கு எதிராக கிரீஸ் மற்றும் துருக்கியைப் பாதுகாப்பதில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டதன் மூலமாக ட்ரூமன் கோட்பாட்டை பிரகடனம் செய்தது.
கருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலை இணைக்கும் ஜலசந்தி பாதையான துருக்கிய ஜலசந்தி வழியாக சுதந்திரமாக கடந்து செல்வதற்கான மாஸ்கோவின் கோரிக்கையை அது நிராகரிக்க உதவியாக, துருக்கிக்கு, அமெரிக்க உதவியும், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஒரு விமானந்தாங்கிய போர்க்கப்பல் குழுவும் விரைந்தன. 1952 இல், துருக்கி நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டது, அதற்குப் பிந்தைய நான்கு தசாப்தங்களில், அது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்க இராணுவ முனைவில் ஒரு முன்னணி நாடாக இருந்து வந்தது.
இந்த "தொடர்ச்சியை" பேணும் ஆர்வத்தில், வாஷிங்டன் துருக்கியில் பல தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை ஆதரித்தது, முதலில் 1960 இல் துருக்கிய பிரதம மந்திரி Adnan Menderes க்கு எதிராக நடந்தது, இவர் பொருளாதார உதவிக்காக மாஸ்கோ பக்கம் திரும்பியதும் அவரது தலைவிதி முடிக்கப்பட்டது, அவர் தூக்கிலிடப்பட்டார்.
முதலில் 2003 இல் இருந்து 2014 வரை பிரதம மந்திரியாகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் எர்டோகனும் அதேபோன்ற பிரச்சினைகளை முகங்கொடுத்தார். அவரது வலதுசாரி இஸ்லாமிய கட்சியான AKP இன் பிடியைப் பாதுகாக்கும் ஆர்வத்தில், அவர் ஒரு தேசியவாத கொள்கையைப் பின்பற்றியதால் அது தொடர்ந்து வாஷிங்டனை ஆத்திரமூட்டியது. 2003 இல், ஈராக் மீது தாக்குதல் நடத்த அதன் மண்ணை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு துருக்கி மறுத்தது. 2010 இல், ஈரானுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களுக்கான அமெரிக்க முனைவை அது ஆதரிக்கவில்லை. மேலும் 2013 இல், அது சீனாவிடமிருந்து ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையை வாங்கும் திட்டங்களை அறிவித்து, வாஷிங்டன் மற்றும் நேட்டோவை அது அதிர்ச்சியூட்டியது.
சிரியாவில் ஆட்சிமாற்ற போர் மீது, உறவுகள் இன்னும் கூடுதலாக மோசமடைந்துள்ளன, அங்கே அல் கொய்தா உடன் பிணைந்துள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரிக்கும் பிரதான ஆதரிப்பாளர், துருக்கியாகும், அதேவேளையில் வாஷிங்டன் அங்காரா யாருடன் போரிட்டு வருகிறதோ அதே துருக்கிய குர்திஷ் இயக்கமான PKK உடன் அணிசேர்ந்துள்ள சிரியாவின் குர்திஷ் போராளிகள் குழுக்களுடன் அதிகரித்தளவில் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளது.
நவம்பர் 2015 இல் ரஷ்ய போர் விமானம் ஒன்றை வேண்டுமென்றே சுட்டுவீழ்த்தியதன் மீது மிக சமீபத்தில் எர்டோகன் மாஸ்கோவிடம் மன்னிப்பு கோரியிருந்ததுடன், விளாடிமீர் புட்டின் அரசாங்கத்துடன் சமரசத்தை நோக்கி நகர்ந்திருந்தார்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, எர்டோகன் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னதாக புட்டின் உடன் பேசினார். மேலும் செவ்வாயன்று ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி உடனான ஒரு உரையாடலில், எர்டோகன், “ஈரான் மற்றும் ரஷ்யா உடன் கரங்கோர்த்து பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்கவும் மற்றும் இப்பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டை மீண்டும் கொண்டு வரும் எங்களது முயற்சியிலும் நாங்கள் தீர்மானகரமாக உள்ளோம்,” என்று அறிவித்தார்.
அப்பிராந்தியத்தில் அத்தகைய ஒரு மூலோபாய மறுஅணிசேர்க்கையை ஏற்றுக் கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விருப்பமில்லை. ஒரு முயற்சிக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் புகலிடமாக ஏற்பது ஐயத்திற்கு இடமின்றி ஒரு குற்றகரமான பொறுப்பற்ற கொள்கை தான். அது வெற்றி பெற்றிருந்தால், அனேகமான அதன் விளைவு, ஓர் உள்நாட்டு போராக இருந்திருக்கும் மற்றும் மரண எண்ணிக்கை ஒப்பீட்டளவில் எகிப்தில் நடந்த அமெரிக்க ஆதரவிலான இரத்தந்தோய்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியையே விஞ்சியிருக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றும் மற்றும் காயப்படுத்தியும், ஏற்கனவே ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசகரமாக ஆக்கியுள்ளதால், ஏன் துருக்கியையும் அவ்வாறு ஆக்காது?
துருக்கி உடனான பதட்டங்கள், அமெரிக்க இராணுவவாதத்தின் ஓர் உலகளாவிய வெடிப்பின் உள்ளடக்கத்தில் எழுகிறது. வார்சோவில் நடந்த ஒரு நேட்டோ உச்சி மாநாடு, ரஷ்யாவின் மேற்கு எல்லையில் இராணுவ ஆயத்தப்படுத்தல்களைப் பாரியளவில் தீவிரப்படுத்தும் திட்டங்களையும் மற்றும் மாஸ்கோ உடனான ஒரு நேரடியான மோதலுக்கு, அதாவது அணுஆயுத மோதலுக்கு தயாரிப்புகள் செய்யும் திட்டங்களை விவரித்து வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்துள்ளது.
ஆசியாவில் தென் சீனக் கடலில் சீன உரிமைகோரல்களுக்கு எதிராக மத்தியஸ்தத்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் தீர்ப்பை, பெய்ஜிங்கிற்கு எதிரான ஒரு மிகப்பெரிய இராணுவ தீவிரப்படுத்தலுக்கான சாக்குபோக்காக பயன்படுத்த விரும்புவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவுபடுத்தி உள்ளது.
அதற்காக, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க இராணுவ பலத்தைக் கொண்டு சீனாவை அச்சுறுத்தும் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கவும் மற்றும், மிகவும் குறிப்பாக, ஆஸ்திரேலியர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் அமெரிக்க போர் தயாரிப்புகளுக்குள் இழுக்கப்படுவார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கவும் துணை ஜனாதிபதி ஜோ பேடென் ஐ ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியது.
இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இராணுவ மோதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. அது அதன் போர் திட்டங்களது பாதையில் வரும் எல்லா தடைகளையும் நசுக்க தீர்மானகரமாக உள்ளது. அமெரிக்காவின் நவம்பர் மாத தேர்தல்களுக்கு முன்னரே இல்லையென்றாலும், அதை அடுத்து மிகப்பெரும் அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.
இராணுவவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் உலக போருக்கான தயாரிப்புகளும் பூமியின் எந்தவொரு இடத்திலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பேணுவதுடன் பொருத்தமற்று உள்ளன. போருக்கான முனைவானது ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் சர்வாதிகார முறைகளை நோக்கிய ஒரு திருப்பத்தைத் தீவிரப்படுத்தி அதிகரித்து வருகிறது, இந்தவொரு திருப்பமானது, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் சமூக சமத்துவமின்மையின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி மற்றும் 2008 நிதியியல் உருகுதலை அடுத்த வர்க்க பதட்டங்கள் ஆகியவற்றில் வேருன்றியுள்ளது.
துருக்கியிலேயே கூட, ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பின் தோல்வி ஏதோ ஜனநாயக மலர்ச்சியைக் கொண்டு வந்துவிடவில்லை, மாறாக அரசாணைகளைக் கொண்டு ஆட்சி செய்வதற்கான அதிகாரங்களைத் தனக்குத்தானே எர்டோகன் வழங்கிக் கொண்டு, அதேவேளையில் அவரை எதிர்ப்பவர்களாக கருதப்படும் பத்தாயிரக் கணக்கானவர்களை கைது செய்தும் மற்றும் வேலையிலிருந்து நீக்கியும் மற்றும் மரண தண்டனையை மீட்டமைக்க நகர்ந்ததன் மூலமாகவும், ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மேற்கின் முதலாளித்துவ விமர்சகர்களது உபதேசங்களுக்கு விடையிறுக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்காக என்ற சாக்கில் திணிக்கப்பட்டு ஆனால் அதிகரித்துவரும் சமூக பதட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க கிளர்ச்சிகளை நோக்கி திருப்பிவிடப்பட்ட ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடி நிலையாக மாறிவரும் ஒன்றின் கீழ் ஆட்சி செலுத்தி வரும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் செய்ததை தான் அவரும் செய்வதாக துருக்கிய ஜனாதிபதி விடையிறுத்தார்.
கருசிதைக்கப்பட்ட ஜூலை 15 சதியானது அதிகாரத்தைப் பிடிக்கும் துருக்கிய இராணுவத்தின் முயற்சிகள் முடிந்துவிட்டதைக் குறிக்கிறதா என்பதே ஒரு தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது. அதன் தளபதிகளில் முழுமையாக மூன்றில் ஒரு பங்கினர் கைது செய்யப்பட்டிருக்கையில், அந்நாட்டின் இராணுவ படைகள் ஒரு கொந்தளிப்பான நிலையில் உள்ளன. அனைத்திற்கும் மேலாக, வாஷிங்டன் அதன் மூலோபாய சுற்றுவட்டத்திலிருந்து துருக்கியை அவ்வளவு சுலபமாக விலக விட்டுவிடாது.
துருக்கிய சம்பவங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கூர்மையான படிப்பினையை வழங்கியுள்ளன. முதலாளித்துவ அமைப்புமுறையில் வேரூன்றி உள்ள ஏகாதிபத்திய போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போராட்டத்திற்கு வெளியே அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாததாகும்.
Bill Van Auken
22 July 2016
http://www.wsws.org/tamil/articles/2016/july2016/pers-j23.shtml

Monday, 25 July 2016

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவாதத்தை தூண்டுவதை கண்டனம் செய்!

Statement of the Socialist Equality Party and International Youth and Students for Social Equality (Sri Lanka)
23 July 2016
இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின் போது, இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஜூலை 16 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர்-விரோத இனவாத ஆத்திரமூட்டல்களை தூண்டி விடுவதற்கு, அரசாங்கத்தின் பகுதியினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சூழ்ந்துகொண்டுள்ள இனவாத கும்பலும் மேற்கொள்ளும் முயற்சி பற்றி, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ.இ.) அமைப்பும், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள், ஏகாதிபத்திய சார்பு கொழும்பு அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட மக்களை இனவாதத்தில் பிளவுபடுத்தி முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாப்பதே ஆகும்.
“புதிய மாணவர்களை வரவேற்பதற்காக” ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில், சிங்கள கண்டிய நடனம் ஒன்றை உள்ளடக்குவதை எதிர்த்த தமிழ் மாணவர் குழுவுக்கும், சிங்கள மாணவர் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, கலகம் வரை சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவர்கள் ஆறு பேர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிங்கள மாணவர்கள் சிலரின் முறைப்பாட்டின் படி, பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவர் சங்கத்தின் தலைவர், கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மாணவர் குழுவினரே தாக்குதல் நடத்தினர் என குற்றம் சாட்டிக்கொண்டு, சிங்கள இனவாத தட்டினரும் ஊடகங்களும் முன்னெடுக்கும் பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து, சட்டத்தை நடைமுறை மற்றும் ஒழுக்க விசாரணை என்ற பெயரில், அரசாங்கத்தின் பின்னணியுடன் மாணவர்கள் மீதான வேட்டையாடல் முன்னெடுக்கப்படுகின்றது.
கண்டிய நடனத்தை நுழைக்கும் முயற்சியானது, திட்டமிட்டு செய்யப்பட்ட ஆத்திரமூட்டலாகும். அது மாணவர்கள் மத்தியில் உடன்பாடு இல்லாத விடயமாக இருந்ததோடு, இராணுவச் சிப்பாய்களே அங்கு மத்தளம் கொட்ட பயன்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவம், சிங்கள மாணவர் அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் இந்த மோதல் வெடித்தமை தற்செயலானதல்ல. இது, சிங்கள இனவாத கும்பல்களும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத பதட்டங்களை தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாகும். இது, யாழ்ப்பாணத்தில் இராணுவ-பொலிஸ் உளவுச் சேவைகள், ஆத்திரமூட்டல்களை கிளறிவிடுமளவுக்கு பின்னணியில் இருந்து செயற்படக் கூடியதாக இருப்பதையே காட்டுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழகம் அவர்களது அவதானிப்பில் உள்ள இடமாகும்.
இனவாத பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து, கொழும்பு டெலிகிராப் இணையத் தளம் சில நாட்களுக்கு முன்னர், “யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள சங்கம், ஒரு தொகை துயரங்களையும் அவர்களுக்கு எதிரான சிங்கள-விரோத தாக்குதல்களையும் அம்பலப்படுத்துகிறது” (Jaffna University Sinhala Society expose series grievances and anti-Sinhala attacks on them) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கள சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன. அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பௌத்த வேலைத்திட்டங்களுடன் இந்த சங்கம் மேற்கொண்ட வெளிப்படையான ஒரு நடவடிக்கை, மே மாதம் இனவாத போரைக் கொண்டாடியதாகும். “எமது நாட்டின் உண்மையான வீரர்கள் –யுத்த வெற்றிக்கு இன்று 7 ஆண்டுகள்” என அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
இது, தடைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட அப்பாவித்தனமான செயலாகவே அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இனவாத பதட்டங்களை உக்கிரமாக்குவதற்காக, அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இராணுவத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளின் மத்தியில் அதன் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.
அரசாங்கதின் கூட்டுக் கட்சியான சிங்கள பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சவரை அமைச்சருமான பாடலி சம்பிக ரணவக, இந்த சம்பவம் தொடர்பாக ஆகவும் விஷமத்தனமான கருத்தை வெளியிட்டார். தாக்குதலில் சம்பந்தம்பட்ட தமிழ் மாணவர்கள் “குற்றவாளிகள்” என்றும் “இந்த சம்பவம் புதிதாக ஒரு பிரபாகரனை உருவாக்கும் வேலை திட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம்” என்றும் கூறிய ரணவக, “இத்தகைய சக்திகளை உடனடியாக அழிக்க வேண்டும் என” கூச்சலிட்டார். தமிழ் மாணவர்களை ஒடுக்குவதற்கு அழைப்புவிடுத்த அவர், “பகிடி வதை சம்பவம் தொடர்பாக களனிப் பல்கலைக்கழக மாணவிகள் கூட கைது செய்யப்பட்டுள்ளார்களெனில், சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை?” என கேட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்தி, தீவிரவாதம் தலை தூக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக இராஜபக்ஷவைச் சூழ்ந்துள்ள சிங்கள இனவாத கும்பல் குற்றம் சாட்டியுள்ளது. அதில் ஒருவரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஊடக மாநாடு ஒன்றில், “இது மிகவும் பயங்கரமான நிலைமை, அத்தகைய நிலைமைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார். அரசாங்கம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை தளர்த்தியுள்ளது என அவர் கூறும் கதை முற்றிலும் பொய்யானதாகும்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களினால் அவப்பேறு பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார, “மூட நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கின்ற நாட்டில், இந்தளவு பொறுமை காக்கும் இனமும் மதத் தலைவர்களும் உலகத்தில் வேறு எங்கும் கிடையாது. அந்த பொறுமையை மீண்டும் சோதிக்க வேண்டாம்,” என இன்னுமொரு ஆத்திரமூட்டலுக்கு தயாராவதாக அச்சுறுத்தியவாறே கூறியிருக்கின்றார்.
இராஜபக்ஷ தனது கையாட்களைக் கொண்டு முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரத்தின் மூலம், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுப்பதுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி இயக்கமொன்றை உருவாக்குவதற்கே முயற்சிக்கின்றார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), ஏனைய இனவாதிகளுடன் தோளோடு தோள் நிற்பதாக வெளிப்படுத்துவதற்கு உடனடியாக முன்வந்துள்ளது. அதன் தலைவர் அணுர குமார திசாநாயக்க, தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வடக்கில் தீவிரவாதிகள் மத்தியில் இனவாத உணர்வு உயர்ந்த மட்டத்தில் இருப்பதை வெளிப்படுத்துகிறது, என புதன் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனவாத மோதலுக்கு தூண்டி விடுபவர்கள், முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் தமிழ் மாணவர்களே எனக் கூச்சலிடுகின்றனர். இது முற்றிலும் வஞ்சத்தனமான கதையாகும். இவர்கள் அனைவருமே, இலங்கையில் தமிழ் மக்களை நசுக்கி கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த 26 ஆண்டுகால போரின் பங்காளிகளாவர்.
முதலாளித்துவ கட்சிகளும் இனவாத கும்பல்களும், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கறுப்பு ஜூலைக்கும் அதனுடன் தொடங்கிய யுத்தத்துக்கும் காரணம், 1983 ஜூலையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவச் சிப்பாய்கள் 13 பேரை கன்ணி வெடிவைத்து கொலை செய்ததே, எனக் கூறினர். இது பொய்யாகும். 1948ல் தொடங்கி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முன்னெடுத்த ஒரு தொகை இனவாத பாரபட்சங்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் ஊடாகவே முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்தை கிளறிவிட்டது.
விசேடமாக, தமிழ் பொது மக்கள் மீது அளவிட முடியா அழிவைத் திணித்ததன் மூலமே இனவாத யுத்தம் முடிவுக்கு வந்தது. 2009 மே மாதம் புலிகளைத் தோற்கடித்த பின்னர், வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தும் விரிவாக்கப்பட்டு வருகின்றது. இராணுவ மற்றும் பொலிஸ் உளவுச் சேவைகள் பொது மக்களை, குறிப்பாக இளைஞர்களை கண்காணித்து வருகின்றன. பிரதான சந்திகள் உட்பட பல இடங்களிலும் இராணுவம் பௌத்த சிலைகளை ஸ்தாபித்தல், அரச மரங்களை நாட்டுதல் மற்றும் பன்சலைகளை ஸ்தாபிப்பதும் இனவாத பதட்டங்களை உக்கிரமாக்கும் நடவடிக்கைகளின் பாகமாகும்.
சிறிசேன-விக்கிரமசிங் அரசாங்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் போர் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான மக்களை ஆகவும் வறுமைக்குள் தள்ளியுள்ள நிலைமையின் கீழேயே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன. சிறிசேன “தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்ற போலி பிரச்சாரத்தின் மூலம், தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த கொடூரமான நிலைமைகளை மூடி மறைக்கின்றார்.
சம்பவம் சம்பந்தமாக, தமிழ தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை, மக்கள் மத்தியில் “உண்மையான நல்லிணக்கத்துக்கு” தடங்களை ஏற்படுத்தும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்க இடமளிக்க வேண்டாம் என மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கை முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். தமிழ் கூட்டமைப்பின் முண்டுகோளுடனேயே அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை முன்னெடுக்கின்றது. அமெரிக்காவின் சீன-விரோத “ஆசியாவில் முன்னிலை” கொள்கைக்கு இலங்கையை பிணைத்து விட்டுள்ள கொழும்பு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதே தமிழ் கூட்டமைப்பின் தரித்திரம் பிடித்த கொள்கையாகும்.
வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் சுயநிர்ணயத்தின் கீழ் தமிழர்களுக்கு தனி அரசுக்காக பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத கட்சிகள் செயற்படுகின்றன. அவை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்றன. தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏகாதிபத்தியத்தின் தயவை நாடும் வேலைத் திட்டத்தையே அவை முன்வைக்கின்றன. இந்த முதலாளித்துவ வேலைத் திட்டத்தின் வங்குரோத்தும் பிற்போக்குத்தனமும், புலிகளின் அரசியலிலும் அதன் தோல்வியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு அவர்கள் கடும் எதிரிகளாவர்.
தென் பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவத்தில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.) அதை இயக்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) இனவாத பிரச்சாரத்துடன் ஒட்டிக்கொண்டு ஆத்திரமூட்டலுக்கான பொறுப்பை தமிழ் மாணவர்கள் மீதே சுமத்தியுள்ளன. யாழ்ப்பாண மோதல் பற்றி நிருபர்கள் மாநாடு ஒன்றை நடத்திய மு.சோ.க. தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவ, மாணவர்களின் மோதலுக்குள் இனவாதம் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறினார். இனவாதத்தின் விளைவுகள் பற்றியும் போரின் பின்னர் வடக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படாததைப் பற்றியும் மோசடியாக விளக்கமளித்த அவர், இத்தகைய “இனவாத மோதல்களை தவிர்த்துக்கொள்வதற்காக, பெரும்பான்மை தமிழ் மாணவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கின்றது” என முடித்தார்.
அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க.யும் பல்கலைக் கழகங்களுக்குள் பௌத்த மதம் உட்பட பிற்போக்கு சிந்தனைகளுடனும் அவற்றை வளர்த்தெடுக்கும் கும்பல்களுடனும் கூட்டாகச் செயற்படுகின்றது. மு.சோ.க. செயற்பாட்டாளர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜே.வி.பீ. தலைவர்களாக இருந்து இனவாத போருக்கு முழு ஆதரவு கொடுத்தனர். யுத்தத்தின் முடிவில் கட்சி அதிருப்திக்கு உள்ளாகி நெருக்கடிக்குள் போன நிலைமையில், இடது முகமூடியைப் போட்டுக்கொண்டு இளைஞர்களை சுற்றி வளைக்கும் இன்னொரு பொறியை அமைப்பதற்கே அவர்கள் ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்தனர். அ.ப.மா.ஒ. மற்றும் ஜே.வி.பீ.யும் பல்கலைக் கழகங்களுக்குள் இந்த இனவாத பிரச்சாரங்களை முன்னெடுத்தபோது மு.சோ.க. தலைவர்கள் அதில் முன்னிலை வகித்தனர்.
நெருக்கடியில் மூழ்கியுள்ள அரசாங்கம், இராஜபக்ஷ தலைமையிலான கட்சி கும்பல் முன்னெடுக்கும் இனவாத பிரச்சாரத்துக்கு எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட இளைஞர்களிடம் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் புதிய காலகட்டம் விரிவடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் தொழிலாளர்களதும் மாணவர்களதும் போராட்டங்கள் முன்னணிக்கு வந்துகொண்டிருக்கின்றன. நெருக்கடியின் விளைவுகளால் மாணவர்களும் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி வெட்டு, வேலையின்மை மற்றும் இலாப உழைப்பு சூறையாடலும் இந்த தாக்குதல்களின் பாகமாகும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக போராடும் சோசலிச வேலைத் திட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது இந்த நிலைமையின் கீழ் அத்தியாவசியமானதாகும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சர்வதேசியவாத ஐக்கியத்தில் அணிதிரட்டி, சோசலிச வேலைத் திட்டத்திற்காகவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும், அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதன் மூலமே, முதலாளித்து அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் இனவாத பிளவுபடுத்தல்களை தோற்கடிக்க முடியும். இது சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாகும். சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் இணைந்துகொண்டு இந்த வேலைத் திட்டத்துக்காக போராடுங்கள்.
http://www.wsws.org/tamil/articles/2016/july2016/iyse-j25.shtml

Sunday, 24 July 2016

அமெரிக்காவில் இனம், வர்க்கம் மற்றும் பொலிஸ் படுகொலை

Race, class and police murder in America

Image source from internet
வியாழனன்று இரவு டெக்சாஸ் டல்லாஸ் இல் பொலிஸ் அதிகாரிகள் மீதான பாரிய சூட்டுச்சம்பவத்தின் பின்னர், அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், நிராயுதபாணியானவர்கள் மீதான பொலிஸ் படுகொலையையும் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான பரந்த போராட்டங்களையும் அமெரிக்காவில் ஆழமடைந்து வரும் மற்றும் இணைக்கமுடியாத இனப்பிளவுகளுக்கான ஆதாரமாக சித்தரிக்க முனைந்துள்ளன.
ஊடகங்கள் முன்வைக்கும் செய்திகளின்படி, நாடெங்கிலும் பொலிஸாரின் மனிதப்படுகொலை நடவடிக்கைகளானது அடிப்படையில் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மீது கூட்டான இனவாத வெறுப்பை வெளிப்படுத்தும் "வெள்ளையின மக்களின்" ஏதோவிதமான ஒரு வெளிப்பாடு என்பதாக உள்ளது.
இதற்கு சான்றாக நியூ யோர்க் போஸ்ட் "உள்நாட்டு போர்" என்று பிரகடனப்படுத்தும் ஒரு தலைப்பு பதாகையை வெளியிட்டது, அதேவேளையில் "இனத்தால் பிளவு, வேதனையால் ஐக்கியம்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையுடன் நியூ யோர்க் டைம்ஸ் அதன் ஞாயிறன்று ஆசிரிய தலையங்க பகுதியை வெளியிட்டது.
இவ்வகையிலான சித்தரிப்பு யதார்த்தத்துடன் மோசமானவிதத்தில் முரண்படுகிறது. அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது இனப்போர் அல்ல, மாறாக வெறி கொண்ட பொலிஸ் படைகளால் ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் விசாரணையின்றி கொல்லப்படும் ஒரு நாட்டில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமாகும்.
நிச்சயமாக இனவாதம் இருக்கிறது தான், பல பொலிஸ் படுகொலைகளில் அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். மக்கள்தொகையில் கறுப்பின மக்களின் விகிதத்திற்குப் பொருத்தமற்ற எண்ணிக்கையில் அவர்கள் பொலிஸ் தாக்குதலின் இலக்காக இருக்கின்றார்கள் தான். ஆனால் பொலிஸ் வன்முறை மற்றும் படுகொலையின் துன்பம் கறுப்பின மக்களுடனோ அல்லது சிறுபான்மையினருடோ மட்டுப்பட்டது கிடையாது, மாறாக எல்லா இனங்கள் மற்றும் வம்சாவளியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர் வரையில், குறிப்பாக மிக மிக ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகள் வரையில் நீள்கிறது என்பதையே உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கார்டியன் பத்திரிகையினால் தொகுக்கப்பட்ட ஒரு தகவல்களின்படி, ஜூலை 9 வரையில், அமெரிக்காவில் இந்தாண்டு மட்டும் இதுவரையில் பொலிஸாரால் 571 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் உயிரிழந்தவர்களில் 88 ஹிஸ்பானியர்களும், 138 ஆபிரிக்க-அமெரிக்கர்களும் உள்ளடங்குவர், ஆனால் அண்மித்து பாதி பேர், 281 பேர், வெள்ளை இனத்தவர்கள். கடந்த ஆண்டு பொலிஸாரால் 1,146 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பான்மையினரான 586 பேர் வெள்ளை இனத்தவர்கள்.
இத்தகைய படுகொலைகளை செய்யும் பொலிஸ்காரர்களில் பலர் அவர்களே சிறுபான்மை குழுக்களின் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். தேசியளவில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்ட ஒரு அட்டூழியமான பால்டிமோரில் ஃப்ரெட்டி க்ரே இன் ஏப்ரல் 2015 படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு அதிகாரிகளில் மூன்று பேர், ஆபிரிக்க-அமெரிக்கர்கள். பொலிஸ் கொடூரம் பரவும் ஏனைய பல இடங்களைப் போலவே, அந்நகரில், நகரமுதல்வரும் சரி பொலிஸ் தலைமை அதிகாரியும் சரி கறுப்பினத்தவர்களே ஆவர்.
அரசாங்கமே கூட பொலிஸை அடக்கும் ஆற்றலின்றி இருப்பதாக தெரிகிறது. ஸ்டேடென் தீவில் எரிக் கார்னர் இன் பொலிஸ் படுகொலையைத் தொடர்ந்து, பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுதாமான கருத்துக்களை நியூயோர்க் நகரமுதல்வர் பில் டி பிளேசியோ வெளியிட்ட போது, அவர் நியூயோர் நகர பொலிஸால் நடைமுறையளவில் ஒரு எழுச்சியை முகங்கொடுத்தார்.
அமெரிக்கா திடீரென வகுப்புவாத வெறுப்பால் அதிர்கிறது என்று, தகுந்த ஆதாரமோ அல்லது வரலாற்று விளக்கமோ இல்லாமல் கூறப்படும் இந்த வாதம், எந்தவிதமான ஆழ்ந்த பகுப்பாய்வுக்கும் நிலைக்க முடியாத ஒரு பொய்மையாகும். இது குறிப்பிட்ட அரசியல் நலன்களுக்கு சேவைசெய்யும் கட்டுக்கதைகளின் பாகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சித்தரிப்பு அரசின் இயல்பை மூடிமறைப்பதுடன், பொலிஸ் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனம் மற்றும் படுகொலையை நடைமுறைப்படுத்துவதற்கு மூலவேராக உள்ள சமூக வர்க்கத்தின் அடிப்படை கேள்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புகிறது. ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, சமூக சமத்துவமின்மையின் ஓர் ஆழ்ந்த அதிகரிப்பு, வர்க்க போராட்டம் மீண்டெழுவதற்கு அதிகரித்து வரும் அறிகுறிகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பரந்த அரசியல் தீவிரமயப்படல் நடைமுறை என குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் அரசு வன்முறை அலை நிகழ்கிறது.
அமெரிக்காவில் 2015 இன் பிரதான வேலைநிறுத்தங்களில் இழந்த நாட்களின் எண்ணிக்கை, 2014 ஐ விட அண்மித்து நான்கு மடங்காகும், இந்த ஆண்டு, வெரிஜோன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மாதக் கணக்கில் நீண்டிருந்த நிலையில், இந்த புள்ளிவிபரங்கள் இன்னும் அதிகமாகும். ஆளும் வர்க்கத்தை இன்னும் அதிகமாக தொந்தரவுக்கு உள்ளாக்கும் விதத்தில், கடந்த ஆண்டு வாகனத்துறை தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கு-நெருக்கமான போராட்டம், தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் பிடியை இழந்து வருவது ஆகியவை உட்பட அங்கே அதிகரித்த அறிகுறிகள் உள்ளன. தன்னைத்தானே ஒரு சோசலிசவாதியாக விவரித்துக் கொண்டு
"பில்லியனிய வர்க்கத்திற்கு" எதிராக ஓர் "அரசியல் புரட்சி" குறித்து பேசுகிற பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே இருந்த பாரிய ஆதரவானது, ஆளும் உயரடுக்கின் கொடூரங்களுக்கு எதிராக பரந்தளவில் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.
பொலிஸ் வன்முறை மற்றும் அமெரிக்க சமூகத்தின் ஏனைய சகல அம்சங்கள் மீது அக்கறை கொண்ட ஓர் இனவாத கட்டுக்கதைகளுக்குள் பொதுமக்களை மூழ்கடிப்பதற்கான இந்த பிரச்சாரத்தின் நோக்கம், முதலாளித்துவ அமைப்புமுறையில் இருந்தே கவனத்தைத் திசைதிருப்புவதும் மற்றும் ஆளும் வர்க்கம் எதன் அபிவிருத்தியைக் கண்டு, அதாவது இந்த பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தைக் கண்டு பெரிதும் அஞ்சுகிறதோ அதை தலையை நசுக்குவதற்காகவும் ஆகும்.
இதற்கு மொத்தமாக இனம் குறித்த மக்களின் மனோபாவத்தைக் குழப்ப வேண்டியிருக்கிறது. உண்மையில் தெற்கில் ஜிம் க்ரோவ் பிளவு மற்றும் வடக்கில் பரந்த இனப்பாகுபாடு ஆகியவை மேலோங்கி இருந்த காலத்திற்குப் பின்னர், அங்கே பொதுவாக ஆரோக்கியமான பண்பில் பரந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1930கள் மற்றும் 1940களின் அமெரிக்காவில், கறுப்பின மக்கள் மீதான தான்தோன்றித்தனமான தீர்ப்பு நடைமுறையளவில் நாளாந்தம் நிகழ்ந்து வந்தன. தெற்கில் ஆபிரிக்க-அமெரிக்கர்களின் பெருந்திரளான மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இருக்கவில்லை, நடைமுறையளவில் அங்கே கறுப்பின அரசியல் பிரதிநிதிகளே இருக்கவில்லை.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் 1966 இல், எட்வர்டு புரூக் மாசசூசெட்ஸ் இல் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் அமெரிக்க செனட்டிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆபிரிக்க-அமெரிக்கராக இருந்தார். அந்நாடு முழுவதும் பொலிஸ் படைகள் ஏறத்தாழ முழுமையாக வெள்ளையினத்தவராக இருந்தனர், கருப்பினத்தவர்களுக்கும் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையிலான கலப்பு திருமணம் நடைமுறையளவில் காண முடியாது இருந்தது.
இந்த சூழல்கள் 1934 மற்றும் 1964 க்கு இடையே தொழிலாள வர்க்கத்தின் 30 ஆண்டுகால எழுச்சியால் தீவிரமாக மாற்றப்பட்டு, தெற்கில் பிளவின் முதுகெலும்பை முறித்து, பொலிஸ் மற்றும் அரசின் அனைத்து மட்டங்கள் உட்பட அரசு துறைகளை இனரீதியில் ஒருங்கிணைப்பதற்கு இட்டுச் சென்றது. அனைத்தையும் விட அமெரிக்கா 2008 இல் ஒரு ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்ததுடன், 2012 அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தது.
இன்று, 84 சதவீத வெள்ளையினத்தவர்கள் உட்பட அமெரிக்கர்களில் 87 சதவீதத்தினர், 1984 இல் 4 சதவீதமாக இருந்ததிலிருந்து அதிகரித்து, கலப்பின திருமணத்தை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றனர். 2010 இல் நடந்த மொத்த புதிய திருமணங்களில் பதினைந்து சதவீதம், 1980 இன் பங்கை விட இரண்டு மடங்காகும்.
உண்மையில் கடந்த வாரம் என்ன நடந்தது? அல்டன் பி. ஸ்டெர்லிங் மற்றும் பிலன்டோ காஸ்டைல் ஆகிய இரண்டு கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டமை, இரண்டுமே காணொளியில் பதிவாகி இருந்த நிலையில், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சீற்றத்தை மற்றும் எதிர்ப்பை தூண்டிவிட்டிருந்தது. குறைந்தளவே பகிரங்கபட்டிருந்த ஆனால் நடுக்கச் செய்ததில் குறைவின்றி இருந்த ஒரு காணொளியை உள்ளூர் ஊடகம் வெளியிட்டது, அதில் கலிபோர்னியாவின் ஃபரெஸ்னோவில் பொலிஸ் தரையில் அசையாமல் கிடந்த 19 வயது வெள்ளையின இளைஞரான டைலன் நோபலைப் படுகொலை செய்வது வெளியானது. நாடெங்கிலும் எல்லா இன மக்களும் நடத்த பாரிய போராட்டங்கள், ஆக்கிரமிப்பு படையினரைப் போல குறி வைத்து செயல்பட்ட உயர்ந்தளவில் இராணுவமயப்பட்ட பொலிஸால் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதைச் சந்தித்தது.
டல்லாஸ் துப்பாக்கிதாரியின் நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில், அமெரிக்காவின் எல்லைக்குள் டிரோன் வகைப்பட்ட போர்முறையினை போல் குண்டை வெடிக்கச் செய்யும் ரோபேர்ட்டைக் கொண்டு அவரை கொன்ற இந்த முதல் சம்பவத்தினால், அவரின் துல்லியமான நோக்கங்கள் என்னவாக இருந்தன என்பதை தீர்மானிக்க முடியாது செய்கின்றன.
அவரின் நடவடிக்கைகள் ஓரளவிற்கு ஆபிரிக்க-அமெரிக்களை பொலிஸ் படுகொலை செய்ததால் உந்தப்பட்டதாக தெரிகின்ற போதினும், அவர் அண்மித்து ஓராண்டை ஆப்கானிஸ்தானில் செலவிட்ட ஒரு முன்னாள் இராணுவ படையினராக இருந்தார் என்பதும் விடயமாகும். அவரது நடவடிக்கைகள், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் டஜன் கணக்கான பாரிய துப்பாக்கிச்சூடுகளின் வடிவத்தைப் பின்தொடர்கிறது, இதில் பல முன்னாள் இராணுவ படையினரால் நடக்கின்றன.
இனவாத அரசியலில் ஓர் ஆழ்ந்த மற்றும் மேவிய ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளும் மற்றும் கல்வியாளர்களுமே வகுப்புவாத கண்ணோட்டத்தை ஊக்குவிப்பதைத் தழுவுகின்றனர். இவர்களிடம், முடிவில்லாத போர், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை, நாடெங்கிலும் இராணுவ-வகையிலான ஆயுதங்களுடன் பொலிஸ் துறையை ஆயுதமேந்த செய்த எட்டாண்டு காலத்தில் தலைமை பதவியில் இருந்த ஜனாதிபதி ஒபாமாவைப் புகழ்ந்துரைப்பதைத் தவிர பொதுவாக வேறெதுவும் செய்வதில்லை. இனவாத அரசியலைப் பின்தொடரும் இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் சமூக துன்பங்களை அலட்சியப்படுத்துவதுடன், அவர்களின் துயரத்தை மேம்படுத்த இவர்களிடம் எந்த முன்மொழிவும் கிடையாது.
ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால் பரப்பப்பட்டு வரும் இந்த பிற்போக்குத்தனமான, இனவாத கட்டுக்கதைகளை நிராகரிக்குமாறு நாங்கள் சகல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவை அனைத்தும் ஜனாதிபதி ஒபாமாவை புகழ்வதைத்தவிரவேறு எதையும் செய்வதில்லை. இவர் கடந்த 8 வருடங்களாக முடிவற்ற யுத்தத்தையும் அதிகரிக்கும் சமத்துவமின்மையையும் ஏழ்மையையும் மற்றும் நாடு முழுவதும் பொலிஸ் துறையை இராணுவத்தின் தரத்திற்கு ஆயுதமயமாக்குவதை பேற்பார்வை செய்துள்ளார். எல்லா முக்கிய சமூக கேள்விகளைப் போலவே, பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவது அவசியப்படுகிறது.
The World Socialist Web Site Editorial Board
11 July 2016
http://www.wsws.org/tamil/articles/2016/july2016/race-j13.shtml

Saturday, 23 July 2016

துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

The Turkish coup: A warning to the international working class

Image source from Internet
துருக்கியின் தோற்கடிக்கப்பட்ட ஜூலை 15 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அண்ணளவாக 300 பேர் உயிரிழந்ததற்குப் பின்னர் அது நசுக்கப்பட்டதாக தெரிகின்ற போதினும், அந்நாடு புதிய வன்முறை மற்றும் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களால் சூழப்பட்டு, அதீத அரசியல் ஸ்திரமின்மையான ஒரு நிலையில் இருக்கிறது.
ஞாயிறன்று மாலை துருக்கியில் இருந்து செய்தி அளித்த உலக சோசலிச வலைத் தள செய்தியாளர், மக்களை மீண்டும் வீதிகளுக்கு திரும்பி பொது சதுக்கங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்குமாறு வலியுறுத்தும் கைத்தொலைபேசி தகவல்கள் மீண்டும் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது அபாயம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதற்கும் எந்தவொரு தருணத்திலும் இராணுவம் அதன் தலையீட்டை புதுப்பிக்கக்கூடும் என்பதற்கும் ஒரு வெளிப்படையான ஒப்புதலாக உள்ளது.
ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன் அரசாங்கம் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் படையினரை காவலில் வைத்திருப்பதற்கு கூடுதலாக சுமார் 6,000 நபர்களை கைது செய்து, ஒரு சர்வாதிகார ஒடுக்குமுறையைக் கொண்டு இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு விடையிறுத்துள்ளது. 1973 இல் சிலியில் நடந்த இரத்தந்தோய்ந்த கவலைக்குரிய சம்பவங்களை எதிரொலிப்பது போல, சில கைதிகளைப் பிடித்து வைக்க விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தியதில் இருந்தே இந்த சுற்றி வளைப்பின் அளவு எடுத்துக்காட்டப்படுகிறது.
ஆயிரக் கணக்கான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக கைது உத்தரவாணைகள் வழங்கப்பட்டுள்ளன, இவர்கள் இப்போது "ஆயுதமேந்திய பயங்கரவாத இயக்கத்தில்" பங்கெடுத்தவர்களாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். சாத்தியமான அளவிற்கு அனைத்து எதிர்ப்பாளர்களும் உள்ள அரசு அமைப்புகளையும் "சுத்திகரிக்க" அது சூளுரைத்திருப்பதற்கு கூடுதலாக, எர்டோகன் அரசாங்கம், அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை பிரயோகிப்பதை மீளவும் கொண்டுவர அழுத்தமளிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
துருக்கிய படையினருக்கு எதிராக வன்முறையோடு பழிதீர்க்கும் இஸ்லாமிய கும்பல்களை, இதில் இளம் வயதினர் பலர் கட்டாய சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அவர்களை வீதிகளில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள் அடித்து உதைப்பதாகவும், தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளி இஸ்தான்புல் இன் பொஸ்பொரஸ் பாலத்தில் சிப்பாய் ஒருவரின் தலை துண்டிக்கப்படுவதைக் காட்டுகிறது.
இப்போது கட்டவிழ்ந்து வரும் சூழல்களின் கீழ், துருக்கி ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு ஒத்த ஒரு நிலையையோ அல்லது அரசியல் ஸ்திரப்பாட்டின் எந்தவொரு நிலைமையையோ எவ்வாறு பேணும் என்பதைக் காண்பது சிரமம்.
இதன் பாதிப்புகள் ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகிற்கும் நீண்டகால தாக்கங்களை கொண்டிருக்கும். துருக்கி எவ்விதத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் அல்லது பொருளாதார பிரதேசம் கிடையாது. ஐரோப்பாவும் ஆசியாவும் சந்திக்கும் புள்ளியில் 75 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடாக, இது அமெரிக்காவிற்கு அடுத்து அதன் இரண்டாவது மிகப்பெரிய இராணுவத்தைப் பெருமைபடுத்திக் கொண்டு, அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஏகாதிபத்திய கூட்டணியின் ஒரு முக்கிய அங்கத்துவ நாடாக உள்ளது. இது ஐரோப்பாவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இல்லாத போதினும், துருக்கி ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்புகளுக்குள் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது.
துருக்கிய வரலாறு, ஆட்சிக்கவிழ்ப்புகளை மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிகளை நிறையவே கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அதுபோன்றவொரு சம்பவம் நடந்திருக்கவில்லை. 1960, 1971 மற்றும் 1980இல், பெரும்பாலும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கிரீஸ், இந்தோனேஷியா மற்றும் ஏனைய இடங்களில் நடந்ததைப் போலவே, அதேகாலக்கட்டத்தில் பெண்டகன் மற்றும் சிஐஏ இன் நெருக்கமான ஆதரவுடன், இராணுவம் துருக்கியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
துருக்கி போன்றவொரு நாட்டில் இராணுவத்தின் மிகப்பெரும் பிரிவுகளால் மீண்டுமொருமுறை அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தால், துருக்கியில் மட்டுமல்ல, மாறாக உலகளவில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளின் காலக்கட்டம் திரும்பியுள்ளது என்பதே அதிலிருந்து கிடைக்கும் தவிர்க்கமுடியாத முடிவாக இருக்கும். சமூக சமத்துவமின்மையின் முன்னொருபோதும் இல்லாத மட்டங்கள் மற்றும் கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களுக்கு இடையே, மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் ஏனைய இடங்களிலும் இருபத்தைந்து ஆண்டு கால அமெரிக்க தலைமையிலான போர்களால் எரியூட்டப்பட்ட அதீத வன்முறை, ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடியானது ஐரோப்பாவின் பிரதான முதலாளித்துவ மையங்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூமி எங்கிலும் இப்போது தவிர்க்க முடியாமல் பரவி வருகிறது.
வாரயிறுதி வாக்கில் இஸ்தான்புல் மற்றும் அன்காராவின் இரத்தந்தோய்ந்த சம்பவங்களுக்கான மூலக்காரணமாக இருந்த இத்தகைய பதட்டங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கும் மற்றும் அதற்கு பின்னரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அத்துடன் துருக்கியிலேயே கூட இதற்கான அவற்றின் பிரதிபலிப்பில் வெளிப்பட்டுள்ளது.
துருக்கியின் தொழிலாளர்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு, “இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது,” என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு சென்றார். எர்டோகன் அவரே கூட இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அவரது இப்போதைய எதிரியும் முன்னாள் கூட்டாளியுமான, நாட்டைவிட்டு வெளியேறி பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருபவரும், வெளிப்படையாகவே அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பை அனுபவித்து வருபவருமான அமெரிக்க-ஆதரவிலான இஸ்லாமிய மதகுருமார் பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) மீதும் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் மீதும் சாட்டினார். எர்டோகன், கூலன் மீது குற்றஞ்சாட்டுகையில், அவர் உண்மையில் ஒபாமாவைக் குறித்து தான் பேசுகிறார் என்று போதுமானளவிற்கு நிச்சயமாக கூறலாம்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த செய்திக்கு வாஷிங்டனின் ஆரம்ப விடையிறுப்பு ஆகக்குறைந்தது பல அர்த்தங்களை கொண்டிருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி "துருக்கியினுள் ஸ்திரத்தன்மை, சமாதானம் தொடர வேண்டுமென" அமெரிக்கா விரும்புவதாக மட்டுமே கூறியிருந்தார். ஆனால் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து வருவது வெளிப்படையாக ஆனதும் வெள்ளை மாளிகை "ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கி அரசாங்கத்திற்கு" ஆதரவை எடுத்துரைத்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
இதேபோல ஜேர்மன் அரசாங்க சான்சிலர் அங்கேலா மேர்க்கல் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கண்டிக்க நேரமெடுத்துக் கொண்டார். உத்தியோகபூர்வ அறிவிக்குக்கு பின்னர், ஜேர்மன் ஊடகங்களும் பல அரசியல்வாதிகளும் அவர்களின் கோபத்தை எர்டோகன் மீது மையப்படுத்தி, கூடுதல் அதிகார அரசியலமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அவரை எச்சரிக்கின்ற அதேவேளையில், ஒரு நேட்டோ நாட்டிற்குள் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அடுத்தடுத்த தாக்கங்கள் குறித்து அவர்கள் ஒன்றும் கூறவில்லை.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பது குறித்த ஐயப்பாட்டை சாதாரணமாக உதாசீனப்படுத்திவிட முடியாது. வெறுமனே மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான், ஒபாமா நிர்வாகம் எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹம்மத் முர்சி தூக்கியெறியப்பட்டதை ஓர் "ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக" அழைக்க மறுத்து, தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி தலைமையிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏறத்தாழ முழுமையாக பகிரங்க ஆதரவு வழங்கி இருந்தது. சிசி ஆட்சி அவரது எதிர்ப்பாளர்களை சிறையிலடைத்து, சித்திரவதை செய்து படுகொலை செய்து வந்த நிலையிலும், வாஷிங்டன் அதற்கு தொடர்ந்து இராணுவ உதவிகளைப் பாய்ச்சியது. பின்னர், 2014 இல், ஜேர்மனியுடன் சேர்ந்து, அது உக்ரேன் அரசாங்கத்தை வெளியேற்ற பாசிச-தாக்குமுகப்புடன் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வடிவமைத்தது.
துருக்கியில் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு நிச்சயமாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அது வெற்றி அடைந்திருந்தால் ஒபாமா மற்றும் மேர்க்கெலுக்கு அது விரும்பாத ஒன்றாக இருந்திருக்காது என்பதை ஒருவரால் தவிர்க்காமல் இருக்க முடியாது.
சிரியாவில் ஐந்தாண்டு கால உள்நாட்டு போர் சம்பந்தமாக வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையிலான பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா-முடுக்கிவிட்ட அப்போரில் பினாமி படைகளாக சேவையாற்றி வரும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எர்டோகன் அரசாங்கம் ஒரு முக்கிய ஆதரவாளராக இதுவரையில் செயல்பட்டுள்ளது. அதேவேளையில் சிரிய குர்திஷ் படைகளுடன் வாஷிங்டன் நெருக்கமாக இணங்கி இருப்பதை அன்காரா அதிகரித்த கோபத்துடன் பார்க்கிறது. சிரியாவில் குர்தியர்களின் இராணுவ வெற்றிகள் துருக்கிக்கு உள்ளேயே குர்திஷ் தன்னாட்சிக்கான கோர்க்கைகளைப் பலப்படுத்துமென அது அஞ்சுகிறது.
அண்டையில் நடக்கும் போரால் துருக்கி முன்பினும் அதிகமாக அரசியல் மற்றும் பொருளாதார விலைகளை கொடுக்க வேண்டியிருக்கின்ற நிலையில், ஒரு ரஷ்ய போர்விமானத்தைத் துருக்கி நவம்பர் 2015 இல் பதுங்கி இருந்து சுட்டுவீழ்த்தியதற்காக கடந்த மாதம் எர்டோகன் ரஷ்யாவிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். ரஷ்யா உடன் முயற்சிக்கப்பட்ட சமரசம், அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி சிரியாவுடன் ஓர் அரசியல் ஏற்பாடு செய்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் அதன் அணுஆயுதங்களுக்கான மிகப்பெரிய கிடங்குகளைக் கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இன்செர்லிக் (Incirlik) விமான தளத்தை அணுகும் உரிமையை அமெரிக்க போர்விமானங்களுக்கு பதிலாக, ரஷ்ய போர்விமானங்களுக்கு வழங்க எர்டோகன் அச்சுறுத்தி உள்ளார் என்றும் கூட அங்கே செய்திகள் உள்ளன. அத்தளத்தின் துருக்கிய தளபதி இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தலைவரென்றும், இப்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையே பதட்டங்கள் அதிகரிப்பதை குறித்து பிரிட்டிஷ்Telegraph நாளிதழ் விவரித்திருந்தது:
“இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக இந்த மாதத்தில் திரு. எர்டோகன் திடீரென ஒரு அதிரடியான இராஜாங்க புரட்சியை தொடங்கினார். துரிதமான வெற்றியுடன், அவரது அரசாங்கம், ரஷ்யா, எகிப்து மற்றும் இஸ்ரேல் உடனான அதன் உறவுகளை செப்பனிட்டது. புட்டின், சிசி மற்றும் நெத்தன்யாஹூ ஐ படுகொலையாளர்கள் என்று திரு. எர்டோகன் விவரித்தமை இரவோடு இரவாக மறந்து போனது. பின்னர், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக, துருக்கியின் புதிய பிரதம மந்திரி சிரியா உடனான உறவுகளை மீளமைப்பதற்காக கூட பேசியிருந்தார்.”
“அதேநேரத்தில், அமெரிக்கா உடனான உறவுகள் அதள பாதாளத்திற்குள் வீழ்ந்துள்ளது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடர்ந்து சிரியாவினுள் உள்ள ISIL க்கு எதிராக அவர்களது இன்செர்லிக் (Incirlik) விமானத் தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்களை, துருக்கியின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியில்" செலுத்தக்கூடாது என்பதையும் துருக்கிய அரசாங்கம் உள்ளடக்கிய போது, பெண்டகன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்னும் மோசமாக, அந்த இராணுவத் தளத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த துருக்கிய விமானத் தளத்தின் தளபதி கைது செய்யப்பட்டார், இது ஆட்சிகவிழ்ப்பாளர்கள் மற்றும் பெண்டகனுக்கு இடையே அவர் 'இடைதரகராக' இருந்தார் என்ற வதந்திகளை துருக்கியில் தூண்டியது. அச்செய்தி வெளிநாட்டில் தட்டிக்கழிக்கப்படலாம், ஆனால் அது திரு. எர்டோகனின் ஆதரவு தளம் எந்தளவிற்கு அதன் அமெரிக்க கூட்டாளியிடம் இருந்து அன்னியப்படுகிறது என்பதற்கு இதுவொரு அறிகுறியாகும்,” என்று குறிப்பிட்டது.
என்ன மாதிரியான முக்கியமான பதட்டங்களும் சூழ்ச்சிகளும் இந்த சம்பவங்களை உயர்த்தி இருந்தாலும், தெளிவாக முன்நிற்கும் கேள்வி இதுதான்: அரசியல் அரங்கில் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அச்சுறுத்தலை கொண்டிருக்கும் நேட்டோ அங்கத்துவ நாடு துருக்கி மட்டுந்தானா? சங்கிலி முதலில் அதன் பலவீனமான இணைப்பில் தான் உடையும், ஆனால் சங்கிலி முழுமையாக உடைகின்றது என்பதுடன், அச்சுறுத்தல் அனைவருக்குமாய் உள்ளது என்பதையே சமீபத்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன.
பிரிட்டன் வெளியேற்றமானது இங்கிலாந்து உடைவதற்கும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியமே சிதைவதற்கும் அச்சுறுத்துகின்ற நிலையில், இரண்டு பிரதான கட்சிக்களும் ஆழ்ந்த நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ள பிரிட்டனில் என்ன நடக்கும்? தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் பிரதம மந்திரியானால் அச்சம்பவத்தின் மீது ஓர் "இராணுவ கலகம்" குறித்து சமீபத்தில் தான் இராணுவத் தளபதிகள் அச்சுறுத்தி இருந்தனர். கோர்பினை நீக்குவதற்காக கட்சிக்குள்ளே ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காக முன்நின்று வரும் அக்கட்சியின் தலைமையில் உள்ள கோர்பினின் எதிரிகள், இராணுவத்தின் ஆதரவைப் பெறும் ஒரு முயற்சியில் அணுஆயுத பிரயோகத்திற்கும் அவர்களது விருப்பத்தை அறிவித்துள்ளனர்.
பிரான்சில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நீஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அந்நாட்டின் அவசரகால நெருக்கடி நிலையை நீட்டித்துக் கொண்டே இருப்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு குடியரசு என்ற அந்நாட்டின் அந்தஸ்தை ஆபத்திற்குட்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் ஒரு சிறிய உத்தரவில், அவர் அந்த அசாதாரண அதிகாரங்களை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்ததுடன், இராணுவத்தை வீதிகளுக்குள் இறங்க அழைப்பு விட்டார்.
அமெரிக்காவிலேயே கூட, பாசிசவாத குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றி வாய்ப்புடன், முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறை ஒரு இறுதி நெருக்கடி நிலையில் உள்ளது. வெளிநாட்டில் முடிவில்லா போர் என்பது தவிர்க்க முடியாதவாறு உள்நாட்டில் ஒடுக்குமுறையுடன் சேர்ந்துள்ளது, இது “பயங்கரவாதத்திற்கு" எதிராக போரிடுதல் என்ற பெயரில் இருந்தாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரிக்கும் எதிர்ப்பு மற்றும் தீவிரமயப்படலுக்கு எதிராக திருப்பி விடப்பட்டு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகரித்த ஒருங்கிணைப்பை உள்ளடக்கி உள்ளது.
துருக்கிய சம்பவங்கள் உலகெங்கிலுமான நாடுகளில் வரவிருப்பதன் ஒரு முன்னறிவிப்பாகும், இதில் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இராணுவவாதத்தின் இடைவிடாத அதிகரிப்பு மற்றும் அனைத்திற்கும் மேலாக வர்க்க போராட்டத்தின் தீவிரப்படல் ஆகிய சுமையின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக மாறி வருகின்றன.

Bill Van Auken

18 July 2016
http://www.wsws.org/tamil/articles/2016/july2016/turk-j20.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts