Search This Blog

Saturday, 30 April 2016

ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்! சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இணையுங்கள்!

Oppose imperialist war! Join the International May Day Online Rally!


எதிர்விரும் ஞாயிற்றுக்கிழமை, மே 1 அன்று அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி மாலை 1:00மணிக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஓர் இணையவழி கூட்டத்துடன் இந்த மே தினத்தை கொண்டாடும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகெங்கிலுமான தலைவர்களது சொற்பொழிவுகளைக் கொண்டிருக்கும் அதன் மத்திய நோக்கம், பூமியை அழிக்க அச்சுறுத்தி கொண்டிருக்கும் பரந்த ஏகாதிபத்திய இராணுவவாத பிரவாகத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதாகும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் 2016 ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட்டும் சொற்பொழிவாளர்களில் ஒருவராவார்.
நாம் ஒரு நிரந்தர போர் சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொய்கள் மற்றும் வரம்பில்லா பாசாங்குத்தனத்துடன் நியாயப்படுத்தப்படுகின்ற "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இப்போது அதன் பதினைந்தாம் ஆண்டை எட்டுகின்றது. இதன் விளைவாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் யேமனில் அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்ட இத்தகைய பிராந்திய போர்கள், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, முன்பினும் அதிகமாக வன்முறை, தனிநபர் பாதுகாப்பின்மை மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மையின் அலை பரவுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் நவ-காலனித்துவ தலையீடுகள், இன்னும் அதிகமாக இரத்தக்களரியான வல்லரசுகளின் மோதல்களுக்கு முன்னறிவிப்பாக உள்ளன.
உலகளாவிய மேலாதிக்க சக்தியாக தனது அந்தஸ்தைப் பேணுவதற்கு தீர்மானகரமாக உள்ள அமெரிக்கா, ஒரேநேரத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் எல்லைக்கருகே உள்ள நாடுகளில் நேட்டோ படைகளின் ஆதரவுடன் இராணுவ ஆயுதமயமாக்கல் நடைபெற்று வருகின்றன.
ஒபாமா நிர்வாகத்தினது "ஆசிய முன்னிலையினூடாக" சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க முயற்சிகளால், ஒட்டுமொத்த பிராந்தியமும் குழப்பத்தில் சிக்கி உள்ளது.
இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர், தென் சீனக் கடல் போர் சாகசங்களை தனிப்பட்டரீதியில் பார்வையிடவும் மற்றும் வாஷிங்டனின் இராணுவ கூட்டாளிகளது வலையமைப்பை பலப்படுத்த அமெரிக்க போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறப்பு படைப் பிரிவுகள் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தவும் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்தார்.
அவற்றின் சொந்த ஆளும் குழுக்களது முதலாளித்துவ நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தேசியவாத மற்றும் பேரினவாத ரஷ்யா மற்றும் சீனாவின் அரசாங்கங்கள் இரண்டுமே, இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு முழுமையாக போரில் முடியக்கூடிய பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுக்கின்றன. இம்மாத ஆரம்பத்தில் பால்டிக் கடலில் ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வாகனங்களுக்கு இடையிலான நுனியளவில் தடுக்கப்பட்ட மோதல் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாகும்: அதிகபட்ச கொந்தளிப்பான சூழலில், ஒரேயொரு தவறான அடிகூட துரிதமாக கட்டுப்பாட்டை மீறி விடக்கூடும்.
முதலாம் உலக போர் மற்றும் இராண்டாம் உலக போர் காலகட்டத்தின் போது, சகல ஏகாதிபத்திய சக்திகளும் உலகின் ஒரு புதிய "மறு-பங்கீட்டிற்கான" முனைவில் பங்கெடுத்திருந்தன. ஜேர்மனி மீண்டும் மீள்ஆயுதமயமாக்கி வருவதுடன், அதன் இராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருகிறது. ஜப்பானிய ஆளும் வர்க்கம் இரண்டாம் உலக போரில் அதன் தோல்விக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டுகளை நீக்குவதில் தீர்மானகரமாக உள்ளது. அணுஆயுதங்களைக் கொண்டு போரிடக்கூடிய ஒரு மூன்றாம் ஏகாதிபத்திய உலக போர் அபாயம், 1945 க்குப் பிந்தைய வேறெந்த காலத்தையும் விட அதிகமாக உள்ளது.
பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வல்லரசுக்கான ஒரு ஈவிரக்கமற்ற சண்டையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
Handelsblatt பத்திரிகைக்கான ஒரு பேட்டியில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், உலக புவிசார் அரசியல் உறவுகள் உச்சக்கட்ட கொந்தளிப்பில் இருப்பதை ஒப்புக்கொண்டார். “பழைய ஒழுங்கமைப்பை ஒரு புதிய ஒன்றைக் கொண்டு பிரதியீடு செய்யப்படவில்லை,” என்று கூறிய ஸ்ரைன்மையர், “மேலாதிக்கம் மற்றும் செல்வாக்கிற்கான இந்த போராட்டம் ஒரு சமாதானமான கருத்தரங்கின் சூழலில் நடைபெறவில்லை, மாறாக இது வன்முறைரீதியில் வெடித்து வருகிறது,” என்றார்.
முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் தேசிய-அரசு அரசியல் கட்டமைப்பிற்குள், அரசியல் மீதும், எல்லைகள், நிதி மற்றும் வர்த்தக நலன்கள் மீதும் நடக்கும் பிரச்சினைகள் உலக போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய தர்க்கத்தை கடந்து வருவது ஒருபுறம் இருக்கட்டும், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் ஓர் அணுஆயுத மோதலுக்குள் இறங்குவதை தடுக்க நினைத்தாலும் கூட, அவற்றின் சொந்த பொறுப்பற்றத்தனத்தின் விளைவுகளை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது.
உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் மக்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களது போர் மூலோபாயங்களை ஒழுங்கமைத்து வருகிறார்கள். அவர்களின் இராணுவ திட்டங்கள் மற்றும் கால அட்டவணைகள் பொது விவாதங்களால் மற்றும் மக்கள் போராட்டங்களால் குழப்பத்திற்கு உள்ளாவதை அவர்கள் விரும்பவில்லை.
அமெரிக்காவில் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஊடகங்கள், 2016 தேர்தல் விவாதங்களில் போர் பிரச்சினையை தவிர்த்து கொள்கின்றன. “ஆட்சி மாற்ற" போரின் ஒரு விளக்கவுரையாளரும், சிஐஏ மற்றும் பெண்டகனின் மிகவும் பொறுப்பற்ற பிரிவினரின் ஒரு ஊதுகுழலுமான ஹிலாரி கிளிண்டனை அதன் வேட்பாளராக்க ஜனநாயகக் கட்சி தயாரிப்பு செய்து வருகிறது. குடியரசுக் கட்சி போட்டியாளர்களை பொறுத்த வரையில், அவர்கள் அணுஆயுத பிரயோகத்தை ஏதோ விளையாட்டு பொருட்களின் பிரயோகத்தைக் குறித்து பேசுவதைப் போல நையாண்டியாக பேசி வருகிறார்கள். நவம்பர் தேர்தல்களுக்குப் பின்னர், இத்தகைய போர்வெறி கொடூரர்களின் கரங்களில்தான் புவியை அழிக்கவல்ல அமெரிக்க ஆயுதங்கள் சென்று சேர உள்ளன.
சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்க நலன்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் மீது ஒவ்வொரு நாட்டின் பெருந்திரளான உழைக்கும் மக்களிடையே மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் கோபத்துடன் சேர்ந்து, போருக்கும் ஆழ்ந்த மற்றும் செயலுக்குவராத வெறுப்பு உள்ளது.
உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கு ஒரு புதிய மூலோபாயம் அவசியப்படுகிறது. போருக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டுமென ICFI வலியுறுத்துகிறது.
நடந்துவரும் போர்களை நிறுத்துவதற்கும் மற்றும் மனித நாகரீகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிற ஒரு பேரழிவுக்குள் அவை தீவிரப்படுவதைத் தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்து, ஊக்குவித்து, புத்துயிர் அளிப்பதே சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தின் நோக்கமாகும்.
மே தின இணையவழி கூட்டத்தில் இணைய, நாம் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அனைத்து வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்!
இன்றே பதிவு செய்யுங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்களுக்கும் தெரிவியுங்கள். பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களிலும் இந்த பேரணியை ஊக்குவியுங்கள். இந்தாண்டின் பேரணியை ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக ஆக்க உதவுங்கள்!
மேலதிக விபரங்களுக்கும் மற்றும் பதிவு செய்வதற்கும், http://internationalmayday.org/ta/ தளத்தைப் பார்வையிடவும்.

By Joe Kishore and David North
  25 April 2016
http://www.wsws.org/tamil/articles/2016/apr2016/mayd-a30.shtml

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! - மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்

மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்

முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தூக்கியெறி! 
போர், சர்வாதிகாரம் மற்றும் வறுமைக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்து!
அமைதி, சமத்துவம், சோசலிசத்துக்காக!உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

மே 1, ஞாயிறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் வரலாற்று நாளான மே தினத்தைக் கொண்டாட, ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது.

Thursday, 28 April 2016

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! - மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்

முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தூக்கியெறி! 
போர், சர்வாதிகாரம் மற்றும் வறுமைக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்து!
அமைதி, சமத்துவம், சோசலிசத்துக்காக!உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

மே 1, ஞாயிறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் வரலாற்று நாளான மே தினத்தைக் கொண்டாட, ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது.

Wednesday, 27 April 2016

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! - மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்


மே 1, ஞாயிறு இணையவழி கூட்டம்

முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தூக்கியெறி! 
போர், சர்வாதிகாரம் மற்றும் வறுமைக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்து!
அமைதி, சமத்துவம், சோசலிசத்துக்காக!உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

மே 1, ஞாயிறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் வரலாற்று நாளான மே தினத்தைக் கொண்டாட, ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த மே தினக் கூட்டம், ஏகாதிபத்திய போர் மற்றும் அதைத் தோற்றுவிக்கின்ற முதலாளித்துவ முறைமைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக அழைப்புவிடப்பட்டுள்ளது.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" அமெரிக்காவினால் தொடங்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளின் பின்னர், முழு உலகமும் உக்கிரமடைந்துவரும் ஏகாதிபத்திய வன்முறைச் சூறாவளிக்குள் சிக்குண்டு வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்துள்ள படையெடுப்புகள் மற்றும் தலையீடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை அழித்துள்ளன. நேட்டோ, ரஷ்யாவுடனான போர் தயாரிப்பில் ஒரு பாரிய மறு ஆயுதப் பெருக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிரிக்கா, இடைவிடாத அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நவ காலனித்துவ சூழ்ச்சிகளின் இலக்காக உள்ளது. கிழக்கு ஐரோப்பா, டிரான்ஸ் காகசஸ், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென் அமெரிக்காவில் அயல் நாடுகளுக்கு இடையேயான எல்லை முரண்பாடுகள் பதட்டங்கள் மற்றும் அப்பட்டமான மோதல்களைத் தூண்டி வருகின்றன. கிழக்கு ஆசியாவில், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கை, பிராந்தியம் முழுவதையும் சீனாவுடனான அமெரிக்காவின் மோதலுக்குள் இழுத்துப் போடுகின்றது.
போருக்கான உந்துதலுடன் சேர்த்து, ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல் மற்றும் வெளிநாட்டவர்களை வெறுக்கும் வலதுசாரி அரசியல் இயக்கங்களை முன்னிலைப்படுத்துவதும் இடம்பெறுகின்றது. ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரான்சில், அரசியலமைப்பிலான பிரதான பாதுகாப்புகள் ஓரங்கட்டப்பட்டு நாடு அவசரகால நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும் ஐரோப்பா முழுவதும், மத்திய கிழக்கில் இருந்து போர்களில் தப்பி தஞ்சம் கோரும் அகதிகளின் வருகை, அதிதீவிர தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை ஊக்குவிப்பதற்கான சாக்குப் போக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில், ஒரு அரை-பாசிசவாதி குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னணிக்கு வந்துள்ளார் -இது முழு அரசியல் முறைமையினதும் ஆழ்ந்த சீரழிவு நிலைமையை சமிக்ஞை செய்கின்றது.
உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் அமைதியை பெரிதும் விரும்புகின்றனர். எனினும், தீ மூட்டும் ஏகாதிபத்தியவாதிகளின் ஈவிரக்கமற்ற கொள்கைகளை எதிர்க்கும் சர்வதேச அரசியல் இயக்கம் இன்னமும் ஒழுங்கமைக்கப்படவில்லை.
மூன்றாம் உலகப் போருக்கான உந்துதல் நிறுத்தப்பட வேண்டும்! முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர் வெகுஜனங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு புதிய சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். போர் வெறிநோயின் தோற்றுவாயான அதே முதலாளித்துவ நெருக்கடிதான், சமூகப் புரட்சிக்கான உந்துவிசையை உருவாக்குகிறது. எவ்வாறெனினும் யுத்தம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு விரோதமான உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பு, ஒரு புதிய அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.
சர்வதேச இணையவழி மே தின கூட்டம், "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அனைத்துலகக் குழுவின் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது:
  • போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அந்த தொழிலாள வர்க்கம் மக்களில் அத்தனை முற்போக்கு சக்திகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.
  • இராணுவவாதம் மற்றும் போருக்குமான அடிப்படை காரணமாக இருக்கின்ற, நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும் பொருளாதார முறைமைக்கும் முடிவுகட்டுதற்கான போராட்டம் இன்றி, போருக்கு எதிரான பொறுப்புணர்வு மிக்க போராட்டம் இருக்க முடியாது. ஆதலால், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ விரோதமானதாகவும் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தாக வேண்டும்.
  • ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து முழுமையாகவும் சமரசமின்றியும் சுயாதீனமானதாகவும் அவற்றுக்கு எதிரானதாகவும் இருப்பது அத்தியாவசியமாகும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு பதிலிறுக்க வேண்டும். இதன் மூலோபாய இலக்கு, தேசிய-அரசு முறைமையை ஒழித்து, ஒரு உலக சோசலிச ஒன்றியத்தை ஸ்தாபிப்பதே ஆகும். இது உலக வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிப்பையும் மனித கலாச்சாரம் புதிய மட்டங்களுக்கு உயர்த்தப்படுவதையும் சாத்தியமாக்கும்.
இந்த இயக்கத்தை வழிநடத்த, ஒரு அரசியல் தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2016 சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. மே 1 அன்று எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்! ஏகாதிபத்திய போருக்கும் முதலாளித்துவ முறைமைக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தில் பங்குபற்றுங்கள்!

http://internationalmayday.org/ta/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts