Search This Blog

Wednesday, 28 December 2016

2016 இல் "பூமியில் சமாதானம்" இல்லை

No “Peace on Earth” in 2016

Image source from Internet
“பூமியில் சமாதானம், மனிதர்களிடையே நல்லெண்ணம்" என்று அதிகளவில் பாடப்படும் ஒரு கிறிஸ்துமஸ் பாடல் வரி இவ்வாறு செல்கிறது. இந்தாண்டின் இறுதி விடுமுறை நாட்களில், அரசியல் ஸ்தாபகத்தின் பல்வேறு பிரமுகர்களால் ஆனமட்டும் எரிச்சலும் பாசாங்குத்தனமும் எடுத்துக்காட்டப்படுகின்ற நிலையில், மக்களின் பரந்த அடுக்களால் பொதுவாக இதுபோன்ற உணர்வுகள் தான் உண்மையாக வெளியிடப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் உலக அரசியலின் உண்மையான போக்கு, ஏறத்தாழ முழுமையாக விரைவில் அமெரிக்க ஜனாதிபதியாக ஆகவிருப்பவரிடம் இருந்து வந்த ஒரு ட்வீட் செய்தியில் பிரதிபலித்தது. “அமெரிக்கா அதன் அணுஆயுத தகைமைகளைப் பிரமாண்டமாக பலப்படுத்தி, விரிவாக்க வேண்டும்,” ட்ரம்ப் வியாழனன்று அறிவித்தார். MSNBC நிகழ்ச்சி தொகுப்பாளர் Mika Brzezinki இன் அறிக்கை ஒன்று இதை தொடர்ந்து வெள்ளியன்று வெளியானது: “அது ஆயுத போட்டியாகவே இருக்கட்டும். நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைக் கடந்து சென்று, அவர்கள் அனைவரையும் தோற்கடிப்போம்,” என்றார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் ட்ரம்ப் இருவருமே அவரவர் நாடுகளது அணுஆயுத தளவாடங்களைக் குறித்து பெருமைபீற்றியதில், புட்டின் உடனான பரிவர்த்தனையின் பாகமாக ட்ரம்பிடம் இருந்து வந்த இந்த கருத்துக்கள், இரத்தக்களரியான ஓர் ஆண்டை அதற்கு பொருத்தமான முறையில் நிறைவு செய்வதாக தெரிகிறது.
2016 இல், உலகின் பெரும்பாலான பகுதிகள் இராணுவ மோதலால் சூழப்பட்டிருந்தன. பெயரளவில் சமாதானத்திற்காக நின்ற அரசுகள், போருக்கு தயாரிப்பு செய்வதில் அவற்றின் நேரத்தை செலவிட்டதுடன் ஆயுத மோதலில் இருந்து தப்பி வந்த அகதிகளைக் கடுமையாக கையாண்டன.
முடிவான புள்ளிவிபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றாலும், 2016 இல் உலகெங்கிலுமான ஆயுத மோதலில் குறைந்தபட்சம் 150,000 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். 2016 இல் 100,000 க்கு அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையுடன் அங்கே மூன்று "பிரதான போர்கள்" நடைபெற்று இருந்தன:
· சிரிய உள்நாட்டு போர், இதில் 46,442 பேர் இந்தாண்டு கொல்லப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. 2011 இல் இஸ்லாமிய கிளர்ச்சிகளை அமெரிக்கா ஆதரிக்க தொடங்கியதில் இருந்து, 470,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் 4.9 மில்லியன் மக்களை வெளிநாடுகளுக்கு வெளியேற நிர்பந்தித்துள்ளது மற்றும் 6.6 மில்லியன் பேரை சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்த்தி உள்ளது.
· ஈராக் போர், இதில் இந்தாண்டு மட்டும் 23,584 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2003 இல் அமெரிக்கா இந்நாட்டின் மீது படையெடுத்ததில் இருந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் வரையில், 3.1 மில்லியன் மக்கள் இந்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர், மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி இருந்தனர்.
· ஆப்கானிஸ்தான் போர், இதில் இந்தாண்டு 21,932 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1978 இல் தாலிபான்களின் முன்னோடிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க தொடங்கியதில் இருந்து, அந்நாட்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அந்நாடு 2001 படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.
இராணுவ சண்டைகளில் உலகளாவிய உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கை இந்த மூன்று போர்களும் கணக்கில் கொண்டுள்ளன. இவை இரண்டாம் உலக போருக்குப் பின்னர், சமாந்தரத்தில் இல்லாதளவிற்கு ஓர் அகதிகள் நெருக்கடிக்கும் இட்டுச் சென்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2015 இன் முடிவில் 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர், இது 2014 க்குப் பின்னர் இருந்து 5 மில்லியன் அளவிற்கு அதிகமாகும் மற்றும் 2011 க்குப் பின்னர் இருந்து அண்மித்து 25 மில்லியன் அதிகமாகும்.
அகதிகளின் அதிகரிப்பானது, அவர்கள் சென்றடையும் நாடுகளில் அதிகரித்தளவில் அவர்கள் குரூரமாக கையாளப்படுவதுடன் சேர்ந்து, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினால் இதுவரையில் பதிவு செய்திராத அளவில் பெரும்தொகையான அகதிகள் உயிரிழப்புக்கும் இட்டுச் சென்றுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 7,100 அகதிகள் உயிரிழந்தனர், இது 2015 இல் இறந்த 5,740 பேரை விட அதிகமாகும். இந்த உயிரிழப்புகளில் பாதிக்குப் பாதி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் போர் மற்றும் நாசப்படுத்தலில் இருந்து அகதிகள் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்டதாகும்.
இந்தாண்டு, ஐரோப்பா அகதிகளுக்கு அதன் கதவுகளை மூடியது. அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதைத் தடுத்து, ஐரோப்பாவின் வாயில் காவலனாக சேவையாற்ற துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பணம் வழங்க ஒப்புக் கொண்டது, அதேவேளையில் அது அதன் எல்லை ரோந்து நடவடிக்கையை இராணுவமயப்படுத்தியதுடன், “மக்கள் கடத்தல்களை" தடுப்பதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் கடற்படைகளை நிலைநிறுத்தியது.
இந்த மாற்றம், அப்பிராந்தியத்தின் மிகவும் சக்தி வாய்ந்த அரசான ஜேர்மனியால் மிகச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டப்படுகிறது, தன்னைத்தானே மேலாதிக்க ஐரோப்பிய சக்தியாக வலியுறுத்துகின்ற அது துரிதமாக இராணுவமயப்பட்டு வருகிறது. 2015 இல் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பாசாங்குத்தனமாக அகதிகளை "வரவேற்கும் கலாச்சாரத்தை" பிரகடனப்படுத்திய போதினும், அவர் இம்மாதம் முழுமையாக முகத்தை மறைக்கும் முக்காடுக்கு தடைவிதிப்பதற்கு அழைப்புவிடுத்தும் மற்றும் அகதிகளை கூடுதலாக ஒடுக்குவதற்குக் கோரியும், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியின் வேலைத்திட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை ஏற்று கொண்டார்.
ஈராக், சிரியா மற்றும் லிபியாவின் "கடுமையான போர்களுக்கு" அப்பால், சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் உந்துதல் உலகின் பிராந்திய வெடிப்பு புள்ளிகளுக்கு எரியூட்டியுள்ளது. இரண்டு அணுஆயுத சக்திகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லையோரங்களில் நடந்த தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுக்களில் இந்தாண்டு சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான இராணுவ பதட்டங்கள், இதுவும் அணுஆயுத போருக்குள் தீவிரமடைய அச்சுறுத்துகின்ற நிலையில், மிக வேகமாக தீவிரமடைந்துள்ளன.
முடிவின்றி விரிவடைந்து வந்துள்ள போர்களின் ஒரு கால் நூற்றாண்டு, இன்னும் அதிக வெடிப்பார்ந்த ஒரு கட்டத்தை எட்டி வருகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு நேரடியாக வழிவகுத்த, 1991 இல் முதல் வளைகுடா போருடன் தொடங்கி, அமெரிக்கா அடுத்தடுத்த வெளிநாட்டு தலையீடுகள் மூலமாக அதன் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்துகொள்ள முயன்றது.
இரண்டு பதவிகாலங்கள் முழுவதிலும் தொடர்ச்சியான போரில் சேவையாற்றிய முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வெளியேறவிருக்கிறார். விசாரணையின்றி அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்யும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு என்று பிரகடனப்படுத்திய ஒரு மனிதராக, ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற டிரோன் "தாக்குதல்களுக்கு" தனிப்பட்டரீதியில் அனுமதி வழங்கியவராக, அவர் வரலாற்றில் தரந்தாழ்ந்து போகவிருக்கிறார்.
எவ்வாறிருப்பினும் இந்த முடிவில்லா போர்கள் அவை விரும்பிய விளைவை அடைவதில் தோல்வியடைந்துள்ளன. கடந்த பதினைந்து ஆண்டுகளில், உலக ஏற்றுமதி சந்தையில் சீனா அதன் பங்கை மூன்று மடங்காக்கி உள்ளது, அதேவேளையில் அமெரிக்காவின் ஏற்றுமதி பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையில் லிபியா வரையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், புதைகுழிகளாக மற்றும் தோல்விகளாக திரும்பியுள்ளன. இம்மாதம் சிரியாவில் சிஐஏ இன் இஸ்லாமிய பினாமிகளது தோல்வி, மத்திய கிழக்கிலும் மற்றும் உலகெங்கிலும் அதன் விருப்பத்தை திணிப்பதற்கான அமெரிக்காவின் தோல்வியை உள்நாட்டில் திருப்பி தாக்கியுள்ளது.
ஆனால் இத்தகைய தோல்விகள் அமெரிக்காவின் போர்வெறி கொண்ட ஆளும் உயரடுக்கை சமாதானவாதிகளாக மாற்றிவிடும் என்று ஒரு முட்டாள் தான் நம்புவார். அதற்கு மாறாக, அவை அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அதன் மிகப்பெரிய போட்டியாளர்கள் மீது இன்னும் அதிக நேரடியாக ஒருமுனைப்பட இட்டுச் சென்றுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் வரவு, உலக மோதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. சீனாவிற்கு எதிரான ட்ரம்பின் ஆத்திரமூட்டல்களும் மற்றும் ரஷ்யாவுடன் அவர் ஒரு புதிய ஆயுத போட்டியை வரவேற்பதாக அறிவிப்பதும், அமெரிக்க செல்வந்த அதிகார அடுக்குகளின் நலன்களைப் பேணுவதற்கு அவர் நிர்வாகம் எந்தளவிற்கு தயாராக இருக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் மட்டுமேயாகும்.
1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிறைவான  2017 ஆம் ஆண்டு, போருக்கு எதிரான போராட்டத்தை மனிதகுலம் முகங்கொடுக்கும் மிக உயர்ந்த மற்றும் மிக அவசர அரசியல் பணியாக மீண்டுமொருமுறை முன்வைக்கின்றது.
Andre Damon
23 December 2016
http://www.wsws.org/tamil/articles/2016/12-dec/peac-d28.shtml

Tuesday, 27 December 2016

அமெரிக்கா உளவு பார்ப்பதற்கு கடலுக்கடியில் ட்ரோனை பயன்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது

China accuses US of using undersea drone to spy

Image source from Internet
வியாழனன்று தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரு அமெரிக்க கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ட்ரோனை திருப்பி அனுப்பவுள்ளதாக உறுதியளித்து சனியன்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரு நாடுகளும் இது தொடர்பாக எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்ற போதும், "அமெரிக்கா இந்த விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக பிரமாண்டப்படுத்தி வருவதாக" செய்தி தொடர்பாளர் யாங் யுஜுன் அவரது கவலையினை வெளிப்படுத்தினார்.
பென்டகன் வெள்ளியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிலிப்பைன்ஸில் உள்ள சூபிக் வளைகுடா பகுதி கடற்படை தளத்திற்கு வடமேற்கிலிருந்து கிட்டத்தட்ட 50 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இருந்த ஆளில்லாத கடலுக்கடியில் மிதக்கும் வானூர்தி கலம் ஒன்று ஒரு சீன கப்பலால் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்தது. கடல் படுகை வரைபட தயாரிப்பிலும், கடலியல் தரவினை தொகுப்பதிலும் இந்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பென்டகன் கூறுவதுடன், இதனை "சட்டவிரோதமான" கைப்பற்றப்பட்டதாக கண்டனம் தெரிவித்து ட்ரோனை திருப்பி கையளிக்க கோரியது.
ஒரு சீன அறிக்கை, "சீனா கடற்பகுதிகளில் நெருங்கிய கண்காணிப்பினையும், இராணுவ ஆய்வுகளையும் நடத்துவதற்கு அமெரிக்கா தனது கப்பல்களையும், விமானங்களையும் அடிக்கடி ஈடுபடுத்தி வருகிறது என குறிப்பிட்டது. சீனா இத்தகைய செயல்களை உறுதியாக எதிர்ப்பதுடன் அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமென்றும் கோருகிறது. அமெரிக்கா தொடர்புடைய நடவடிக்கைகள் மீது சீனா விழிப்புடன் இருக்கும், மேலும் அவர்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்" எனவும் குறிப்பிட்டது.
சீனா "திறமையுடனும் பொறுப்பாகவும்" நடந்துவருகின்றது என்று வலியுறுத்துவதுடன், "கடல்போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு எந்தவொரு தீங்கும் இதனால் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதன் சாதனத்தை பரிசோதிக்கவும், சரிபார்க்கவும் தான் சீனக் கப்பலால் ட்ரோன் எடுக்கப்பட்டது" என்று செய்தி தொடர்பாளர் கூறுகிறார். அமெரிக்க கடற்படையை பொறுத்தவரை, ஒரு கடலியல் ஆய்வு கப்பலான USNS Bowditch அருகிலிருந்த அதன் மற்ற மிதவை வானூர்தி கலங்களை மீட்டுகொண்டிருந்ததாக அது தெரிவித்ததுடன், ட்ரோனை திருப்பியனுப்ப கோருவதற்கு சீன கப்பலை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்தது.
ஒரு ஓய்வு பெற்ற சீன துணை அட்மிரல், யாங் யீ, அமெரிக்க கடற்படைக்கு எதிரான அவரது அவர் மிகக்கூர்மையான குற்றச்சாட்டுக்களுடன், சீனாவினால் உண்மையில் கட்டுப்படுத்தப்படும் ஆனால் பிலிப்பைன்ஸினால் உரிமை கோரப்படும் ஒரு பாறைப்பகுதியான ஸ்கார்பாரோ கடல்படுகைக்கு வெகு அருகாமையிலுள்ள நீர்பரப்பில் இந்த ட்ரோன் செயல்பட்டுவருவதாக அறிவித்தார். சீன மாலுமிகள் ட்ரோனை கைப்பற்றுவதும், ஆய்வுக்கு உட்படுத்துவதும் இயல்பானதே என்றும் கூறுகிறார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடந்த வார, ஒரே சீனா கொள்கையை கேள்விக்குட்படுத்தியதை குறிப்பிட்டுக்காட்டி, அட்மிரல் யாங் பின்வருமாறு அறிவித்தார்: "சீனாவின் கொள்கை மற்றும் முக்கிய நலன்களின் அடிப்படை தன்மைக்கு சவாலாக ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரசாங்கம் தைரியமாக நடவடிக்கைகளை எடுக்குமானால், அவர் மீதான எந்தவொரு எதிர்பார்ப்பினையும் நாங்கள் கைவிட நேரிடும், மற்றும் மூக்குடைப்பும் தருவோம்."
யாங் இன் கருத்துக்கள், இந்த ட்ரோன் கைப்பற்றுதல் என்பது டரம்புக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டது. வர்த்தகத்திலும் வட கொரிய மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் மீதும், சீனா விட்டுக்கொடுப்புக்களை வழங்கினாலன்றி ஒரே சீனக் கொள்கைக்கு கட்டுபட்டிருப்பதாக தான் கருதவில்லை என டரம்ப் அறிவித்திருந்தார். 1979ம் ஆண்டு முதல் ஒரே சீன கொள்கை முறையாக அமுலில் இருந்துவருவதுடன், அதன்கீழ் தாய்வான் உட்பட சீனா முழுமைக்கும் பெய்ஜிங்கை ஒரு சட்டபூர்வமான அரசாங்கமாக அமெரிக்கா ஒத்துக்கொள்ளும் வகையிலான அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளத்தையும் அமைக்கிறது.
தென் சீனக் கடல் பகுதியை ஒரு அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக மாற்றிய ஒபாமா நிர்வாகத்தின் மோதலைத்தூண்டும் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையினை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துவருவதை யாங் இன் போர்வெறிகொண்ட கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது. சீனாவிற்கு எதிராக வணிகப்போர் நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளையும் மதிப்பிழக்க செய்வதற்கான அவரது அச்சுறுத்தல்கள் சிறு சம்பவங்களையும் பெரும் மோதல்களுக்கு இட்டுச்செல்லும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கும்.
சனியன்று, ட்ரம்ப் முரண்பட்ட Tweets களுடன் இந்த சர்ச்சைக்குள் தலையீடு செய்தார். அவர் முதலில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், "சர்வதேச கடல்பரப்பில் இருந்த அமெரிக்க கடற்படை ஆராய்ச்சிக்குரிய ட்ரோனை சீனா திருடுவது என்பது, அதனை கடல்பரப்பிலிருந்து வெளியேற்றுதலுக்கும், சீனா மீதான முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கும் வழிசெய்யும்." என்று கூறினார். பின்னர், பெய்ஜிங் மிதவை வானூர்தியை திருப்பியனுப்ப வேண்டும் என்ற கோசமிடுவதில் இணைவதைக்காட்டிலும், ட்ரம்ப் இரண்டாவது Tweetல், "அவர்கள் திருடிய அந்த ட்ரோனை நாங்கள் திரும்பப்பெற விரும்பவில்லை, அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்று நாங்கள் சீனாவிற்கு தெரிவிக்க வேண்டும்!" என அறிவித்தார்.
சீனாவிற்கு எதிரான இன்னும் ஒரு இராணுவவாத விடையிறுப்பாக அழுத்தம் அளிப்பதற்கு இந்த சம்பவத்தினை குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மக்கெயின் பயன்படுத்தினார். மேலும், இந்த ட்ரோன் கைப்பற்றுதலை "சர்வதேச சட்டத்தினை முற்றிலும் மீறிய," ஒரு செயலாக அவர் முத்திரைகுத்தியதுடன், ஜனவரியில் ஈரான் அதன் பிராந்தியத்திற்குட்பட்ட கடல்பரப்பில் இரண்டு அமெரிக்க கப்பல்களை கைப்பற்றிய நிகழ்வுடன் ஒப்பிட்டார். "பாருங்கள், அமெரிக்காவின் பக்கம் எந்தவொரு வலிமையும் இல்லை. அனைவரும் இதனை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்," என்று புலம்பியதுடன், கூடுதலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் "இது விரைவில் மாறும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார்.
New York Times அதன் அறிக்கையில், ட்ரோன் உளவு நடவடிக்கையில் இருந்துவந்தது என்ற சீனாவின் கூற்றுக்களை நிராகரிக்கவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல்களின் வழித்தடங்களை கண்டறிவதற்காக உளவுத்துறை உளவினைப் போன்றே இந்த சாதனம் உளவு செய்ததாக தென் சீனக் கடல் ஆய்வுகளுக்கான சீன தேசிய நிறுவனத்தின் தலைவர் வூ ஷிகுன் அறிவித்ததையும் இது குறிப்பிட்டது. ஹைனன் தீவில் ஒரு பிரதான சீன நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு அருகில் தென் சீனக் கடல் உள்ளது.
அமெரிக்கர்கள் அநேகமாக எதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய திரு.வூ இன் கருத்தினை ஒரு அமெரிக்க கடற்படை நிபுணர் ஒத்துக்கொள்கின்றார் என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. "ட்ரோன்களின் காலகட்டத்தில் போர் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளின் தொகுப்புக்கள் எதுவும் இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை," என்று சீன கடல்சார் கற்கை நிறுவனத்தின் இணை பேராசிரியர் லைல் கோல்ட்ஸ்ரைன் கூறினார். "சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே மேற்கத்திய பசிபிக் பகுதியின் மோதலுக்குட்பட்ட நீர்நிலைகள் மற்றும் வான்வெளிகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விமான மற்றும் கடற்படை ட்ரோன்களை பயன்படுத்திவருவது என்பது அதிகரித்த வகையிலான ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.
பல சந்தர்ப்பங்களில், கண்ணிவெடிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போரை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், கண்காணிப்பு உட்பட கடலுக்கடியிலான ட்ரோன்களை அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்மாணிப்பது தொடர்பான பென்டகனின் திட்டத்தினை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் மாதம் ஒரு உரையில், அவர், சீனாவை எதிர்ப்பதற்கு ஆசியாவில் "மீள்சமநிலைக்கு" "மூன்றாம் கட்டமாக" எதனை குறிப்பிட்டார் என்று சுட்டிக்காட்டியதுடன், "உலகில், மிகவும் அபாயகரமான கடலடிப்பகுதியையும், நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியையும்" அமெரிக்கா கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 40 பில்லியன் டாலரில் ஒரு பகுதியாக கடலுக்கடியிலான ட்ரோன்களுக்கு அதிகரித்தளவிலான நிதி ஒதுக்கீடு இருக்கும் என்பதை கார்ட்டர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாத இதற்கு முந்தைய உரையில், "முக்கியமாக, எங்கு மனிதர்களுள்ள நீர்மூழ்கி கப்பல்களை இயக்கமுடியாதோ அங்கெல்லாம் ஆழமற்ற நீர்நிலைகளில் இயங்கக்கூடிய பல அளவுகள் மற்றும் பலதரப்பட்ட தரவுகளிலான புதிய கடலுக்கடியிலான ட்ரோன்களை இயக்க முடியும்" என்று கார்ட்டர் குறிப்பிட்டார். தென் சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகள் ஆழமற்ற நீர்நிலைகளையே கொண்டுள்ளன.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் மூளுவதற்கு காரணமான இந்த ஒப்பீட்டளவில் சிறிய சம்பவம் கூட ட்ரம்ப் பதவியேற்றபின் என்ன நிகழவுள்ளது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஞாயிறன்று ஒரு Fox News பேட்டியின்போது, ஒரே சீனக் கொள்கை குறித்து ட்ரம்பின் முந்தைய வார கருத்துக்களாக எழுப்பப்பட்ட கேள்விகளை வரவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியான ரியன்ஸ் பிரைபஸ் நியாயப்படுத்தினார். "பாருங்கள், உங்களிடம் உண்மையை சொல்வதானால் இவை அனைத்தும் ஆத்திரமூட்டும் தன்மையுள்ளவை என்று மட்டும் நான் நினைக்கவில்லை" என்று கூறியதுடன், கூடுதலாக: "நாம் இப்பொழுது ஒரே சீனக் கொள்கையை பரிசீலிக்கவேண்டும் என்று நாங்கள் ஆலோசனை தெரிவிக்கவும் இல்லை" என்றும் தெரிவித்தார்.
பிரைபஸ் இன் கருத்துக்கள் அனைத்தும் வேண்டுமென்றே தவறான வழிநடத்துதல்களாகவே இருந்தன. தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ ஒரே சீனக் கொள்கையை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் நோக்கம் கொண்டாலும், அல்லது சீனாவிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு பேரம் பேசுவதற்கான கருவியாக இந்த சச்சரவுகளை வெறும் அச்சுறுத்தல் போன்று பயன்படுத்தினாலும் இறுதியான விளைவு ஒரேமாதிரித்தான் இருக்கும். உலகளாவிய புவிசார் அரசியலின் அச்சாணிகளில் ஒன்றாக இருக்கும் பிராந்தியத்தில் ஒரு கேள்விக்குறியை இடுவதுடன், ஆசிய பசிபிக் பகுதி முழுமையிலும் உறுதியற்ற நிலைமையினையும் அதிகரிக்கச்செய்வதுடன், மேலும் அவர் பதவியை பொறுப்பெடுப்பதற்கு முன்னரே சீனாவுடனான ஆத்திரமூட்டலையும் அதிகரிக்கிறார்.
By Peter Symonds
19 December 2016
http://www.wsws.org/tamil/articles/2016/12-dec/usch-d23.shtml

Sunday, 25 December 2016

துருக்கிக்கான ரஷ்ய தூதர் அங்காராவில் கொல்லப்பட்டார்

Russian ambassador to Turkey assassinated in Ankara

Photo source from internet
திங்களன்று அங்காராவின் ஒரு புகைப்பட கண்காட்சி அரங்கில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லொவ் ஐ (Andrei Karlov) பணியில் இல்லாத துருக்கிய பொலிஸ்காரர் ஒருவர், அதிர்ச்சிகரமாக பார்வையாளர்களின் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றார்.
22 வயது நிரம்பிய அந்த துப்பாக்கிதாரி அங்காரா கலக தடுப்பு பொலிஸின் (Mevlüt Mert Altintaş) பழைய உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்டார். கறுப்பு உடையில், அவரது பொலிஸ் அடையாள அட்டை வைத்திருந்த அவர், கார்லொவுக்கு காண்பிப்பதற்காக “துருக்கியர்களின் பார்வையில் ரஷ்யா" என்று தலைப்பிட்ட ஒரு கண்காட்சி கலை அரங்கினுள் நுழைந்தார். அவர் ஒரு துப்பாக்கியை எடுத்து, அத்தூதரின் முதுகில் மீண்டும் மீண்டும் சுட்டார், பின்னர் அவர் இஸ்லாமிய சுலோகங்களுடன் சேர்ந்து, "அலெப்போவை குறித்து மறந்துவிட வேண்டாம், சிரியாவைக் குறித்து மறந்துவிட வேண்டாம்,” என்று துருக்கிய மற்றும் அரேபிய மொழிகளில் கூட்டத்தை நோக்கி கத்த தொடங்கினார்.
பின்னர் கனரக ஆயுதமேந்திய துருக்கிய பொலிஸ் அந்த அரங்கை முற்றுகையிட்டு, துப்பாக்கிதாரியை சுட்டு வீழ்த்தியது. அச்சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்தனர்.
அந்த தூதரின் உறையவைக்கும் படுகொலையின் புகைப்படங்களும், அதற்குப் பின்னர் அவரை படுகொலை செய்தவரின் வசை மொழிகளும் காணொளியாக படம் பிடிக்கப்பட்டு, பரவலாக பரப்பப்பட்டன.
ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் ஒரு மூர்க்கமான ரஷ்ய-விரோத பிரச்சாரம் நடத்தப்பட்டு வரும் சூழலில் இப்படுகொலை நடந்துள்ளது. இந்த பிரச்சாரத்தில், மேற்கத்திய ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களிடமிருந்து அலெப்போ நகரை மீண்டும் கைப்பற்றுவதில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இன் சிரிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்குவதில் ரஷ்யா வகித்த பாத்திரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
நடப்பிலுள்ள போர் நிறுத்தம் குறித்தும் மற்றும் முன்னர் எதிர்ப்பாளர் வசமிருந்த அலெப்போவிலிருந்து வெளியேற்றுதல் ஆகியவை குறித்தும், அத்துடன் ஐந்தரை ஆண்டுகால சிரிய போரை இன்னும் பரந்த விதத்தில் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விவாதிப்பதற்காக, துருக்கிய வெளியுறவு மந்திரி Mevlüt Çavuşoğlu மற்றும் அவரது ரஷ்ய மற்றும் ஈரானிய சமதரப்பான சேர்ஜி லாவ்ரொவ் மற்றும் மொஹம்மத் ஜாவித் ஜரீஃப் ஆகியோருக்கு இடையே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட சந்திப்புக்கு முன்னதாக, தூதரின் இந்த படுகொலை நடந்துள்ளது.
அங்காரா, மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் இன் கூட்டுழைப்பால், ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா முடுக்கிவிட்ட போரின் ஒரு மூலோபாய தோல்வியாக, அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களது இந்த கடைசி நகர்புற கோட்டையை இழந்ததன் மீதான மேற்கின் கோபம் தீவிரமடைந்துள்ளது. இன்றைய இந்த பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் தவிர்க்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2015 இல் துருக்கிய விமானப்படை சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி கொண்டிருந்த ஒரு ரஷ்ய போர்விமானத்தை வழிமறித்து சுட்டுவீழ்த்தியபோது, இந்த சிரிய ஆட்சி மாற்ற நடவடிக்கையானது ரஷ்யா மற்றும் துருக்கியை போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது. இச்சம்பவம் மாஸ்கோ மற்றும் அங்காராவிற்கு இடையிலான உறவுகளை உறைய செய்வதிலும் மற்றும் துருக்கிக்கு எதிராக ரஷ்யா பொருளாதார தடைகளை விதிப்பதிலும் போய் முடிந்தது.
கடந்த ஜூனில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்கு வருத்தம் தெரிவித்து, மாஸ்கோ உடன் சமரசம் கோரினார். இதை தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒரு தோல்வியுற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்தது, இதற்கு எர்டோகனின் ஆதரவாளர்கள் அமெரிக்காவையும், பென்சில்வேனியாவில் வசிக்கும் எதிர்ப்பு மதகுரு பெத்துல்லா கூலன் தலைமையிலான இயக்கத்தையும் குற்றஞ்சாட்டினர். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடர்ந்து மாஸ்கோ மற்றும் அங்காராவுக்கு இடையிலான உறவுகள் நெருக்கமானதுடன், கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை மத்தியஸ்தம் செய்யும் இந்த சமீபத்திய கூட்டுறவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
ரஷ்ய மற்றும் துருக்கிய அரசாங்கங்கள் இரண்டுமே, அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் நோக்கில் கார்லொவ் இன் படுகொலையை ஒரு "ஆத்திரமூட்டலாக" கண்டித்தன. இதற்கு யார் பொறுப்பு என்பது மீதான அவற்றின் மதிப்பீட்டில் அவை கருத்து வேறுபட்டிருப்பதாக தெரிந்தாலும், இரண்டு அரசாங்கங்களும் ஒருமாதிரியே அந்த படுகொலையை ஒரு பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்தன.
“ஒரு குற்றம் நடத்தப்பட்டுள்ளது, அது சந்தேகத்திற்கிடமின்றி ரஷ்ய-துருக்கிய உறவுகள் இயல்பாவதைத் தடுக்கும் நோக்கத்திலான மற்றும் ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் ஏனையவர்களால் செயலூக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரிய சமாதான நிகழ்வுபோக்கை கெடுக்கும் நோக்கத்திலான ஒரு ஆத்திரமூட்டலாகும்,” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கிரெம்ளினில் ஒரு தொலைக்காட்சி சந்திப்பில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசுகையில், “இந்த கொலையாளியின் கரங்களை வழிநடத்தியவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்பதையும் புட்டின் சேர்த்துக் கொண்டார். வெளியுறவுத்துறை மந்திரி சேர்ஜி லாவ்ரொவ், SVR வெளிநாட்டு உளவுத்துறை சேவையின் தலைவர் சேர்ஜி நாரிஷ்கின் (Sergei Naryshkin), உள்நாட்டு FSB பாதுகாப்பு சேவைகளின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகொவ் (Alexander Bortnikov) ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் திங்களன்று இரவு ஒரு தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “அலெப்போ சம்பந்தமாக எங்களிடையே நல்லிணக்கம் நிலவுகின்ற நிலையில்" இந்த படுகொலை ஓர் "அத்திரமூட்டலாகும்" என்று கூறியதுடன், அவர் புட்டினுடன் பேசுகையில் "நாம் ரஷ்யாவுடன் நமது உறவுகளைப் பேண தீர்மானகரமாக உள்ளோம்,” என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மாஸ்கோ இல் ரஷ்யா, துருக்கிய மற்றும் ஈரானிய மந்திரிகளுக்கு இடையிலான திட்டமிட்ட முத்தரப்பு சந்திப்பு செவ்வாயன்று தொடர்ந்து நடக்கும் என்பதை இருதரப்பும் தெளிவுபடுத்தின.
அலெப்போ மற்றும் சிரியா குறித்த துப்பாக்கிதாரியின் குறிப்புகளும், ஜிஹாத் குறித்து அரபிக்கில் அவர் கூச்சலிட்டமையும், அவர் கடந்த பல வாரங்களாக அலெப்போவின் மலைப்பூட்டும் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஆதரவாகவோ அல்லது ஒருமித்தோ செயல்பட்டு வந்தார் என்பதை பலமாக எடுத்துக்காட்டின.
இஸ்லாமிய அரசு (ISIS) அந்த படுகொலை உடனான எந்தவொரு தொடர்பையும் மறுப்பதாகவும், அதேவேளையில் அலெப்போவில் அமெரிக்க ஆதரவிலான படைகளது முதுகெலும்பாக இருந்துள்ள சிரிய அல் கொய்தா இணைப்பு அமைப்பான அல் நுஸ்ரா முன்னணியுடன் தொடர்புபட்ட வலைத் தளங்கள் அப்படுகொலையை வரவேற்பதாகவும் சில செய்திகள் குறிப்பிட்டன.
எவ்வாறிருப்பினும் கலகம் தடுப்பு பிரிவின் அந்த பொலிஸ்காரர் உண்மையில் கடந்த ஜூலை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்புலத்தில் இருந்ததாக அரசாங்கம் குற்றஞ்சாட்டிய கூலனிய இயக்கத்தின் (Gulenist movement) ஓர் அங்கத்தவர் என்பதை நிரூபிக்கும் நோக்கில், துருக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். கூலனிஸ்டுகளுடன் தொடர்புபட்டவர்களாக குற்றஞ்சாட்டும் ஆயிரக் கணக்கான படைத்துறைசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உறுப்பினர்களை துருக்கிய அரசாங்கம் கடந்த பல மாதங்களாக களையெடுத்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட பின்னர் அந்த துப்பாக்கிதாரி கூச்சலிட்ட சுலோகங்கள் வெறுமனே அவரது உண்மையான தொடர்புகளை மூடிமறைக்கும் நோக்கில் செய்யப்பட்ட திசைதிருப்பல்கள் என்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த படுகொலையை கூலன் கண்டித்திருப்பதாக கூறிய அந்த மதகுருவின் ஒரு செய்தி தொடர்பாளர், அவர்தான் இதற்கு பொறுப்பு என்ற கருத்துக்களை "நகைப்பிற்கிடமானது" என்றார்.
உயரடுக்கு பொலிஸ் பிரிவின் ஓர் அங்கத்தவர் சிரிய அல் கொய்தா அங்கத்தின் ஒரு அனுதாபி அல்லது நடவடிக்கையாளர் என்பதை மறுப்பதற்கு, துருக்கிய அரசாங்கம் வெளிப்படையாக நோக்கம் கொண்டுள்ளது. சிரியாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு போராளிகளை அனுப்புவதில் அங்காரா அதன் பாதுகாப்பு படைகளது ஒத்துழைப்புடன், மறைமுகமாக அல் நுஸ்ரா முன்னணிக்கும் மற்றும் அதுபோன்ற இஸ்லாமிய போராளிகள் குழுவிற்கும் நிறைய ஆதரவளித்திருந்தது.
இந்த படுகொலைக்கான உடனடி பொறுப்பு யாருடையது என்பதில் எந்தவொரு உடன்பாடின்மைகள் இருந்தாலும், மாஸ்கோ மற்றும் அங்காராவின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் அந்த படுகொலைக்கு அமெரிக்கா மற்றும் மேற்கின் மீது பழிசுமத்தினர்.
எர்டோகனின் தலைமை ஜனாதிபதி ஆலோசகர் Ilnur Cevik திங்களன்று கூறுகையில், “துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு இடையே எல்லா துறைகளிலும் அதிகரித்துவரும் உறவுகள் மற்றும் ஆழ்ந்த கூட்டுறவானது, மேற்கில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் கோபத்தை உருவாக்கி உள்ளது. அலெப்போவின் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான அவ்விரு நாடுகளது கூட்டு முயற்சிகள் சமீபத்திய சான்றுகளாகும். இந்த உறவுகளை சீர்குலைக்க மேற்கு முயலும் என்பது தவிர்க்கவியலாதது. தூதரைப் படுகொலை செய்ய பெத்துல்லா கூலனின் பயங்கரவாத அமைப்புடன் இணைப்பு கொண்ட ஒரு பொலிஸ்காரரை அவர்கள் பயன்படுத்தியது வருந்தத்தக்கதாகும்,” என்றார்.
ரஷ்ய சட்டமன்றமான டூமாவின் ஓர் அங்கத்தவரும், அதன் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன்னாள் தலைவருமான அலெக்சி புஷ்கோவ் (Alexei Pushkov), ரஷ்யா அலெப்போவில் "படுகொலைகள்" மற்றும் "இனப்படுகொலைகளை" ஒழுங்கமைத்து வருகிறது என்ற மேற்கின் பிரச்சாரம் இத்தாக்குதலை தூண்டுவதற்கு உதவியதாக மாஸ்கோவிலிருந்து குற்றஞ்சாட்டினார்.
புஷ்கோவ் ரஷ்ய தொலைக்காட்சியில் கூறுகையில், “மேற்கத்திய ஊடகங்களால் முன்னெடுக்கப்படும் அலெப்போவைக் குறித்த விஷமப் பிரச்சாரத்தின் விளைவுகளாகும்,” என்றார். “துல்லியமாக இந்த படுகொலையானது, ரஷ்யா செய்திராத பாவங்கள் மற்றும் குற்றங்கள் அனைத்திற்கும் அந்நாட்டின் மீது பழிசுமத்துவதற்கான முயற்சிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை அலெப்போ போராளிகளது குற்றங்களை முற்றிலுமாக உதறிவிடுவதுடன், இந்நகரில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் பயங்கரவாத நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்தது என்ற நிலையில், அதை குறித்து ஒரு சிதைந்த மற்றும் பொய்யான சித்திரத்தை உருவாக்குகிறது,” என்றார்.
ரஷ்ய மேல் சபையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புக் குழு துணை தலைவர், செனட்டர் Frantz Klintsevich, அந்த படுகொலை "ஒரு திட்டமிட்ட நடவடிக்கை" என்று குற்றஞ்சாட்டி இன்னும் ஒருபடி மேலே சென்றார்.
“அவர் இந்த புகைப்பட கண்காட்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அது ISIS ஆக இருக்கலாம், அல்லது எர்டோகனை தொந்தரவுக்குள்ளாக்குவதற்கு முயலும் குர்திஷ் இராணுவமாக இருக்கலாம்,” என்றார். “ஆனால் [அதில்] அதற்குப் பின்னால் வெளிநாட்டு நேட்டோ இரகசிய சேவைகளின் பிரதிநிதிகள் இருந்திருக்கலாம்—மற்றும் பெரிதும் அதற்கான சாத்தியக்கூறு உள்ளது,” என்றார்.
அந்த படுகொலையை முன்னெடுத்தவரின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலான உறவுகள் மேற்கொண்டு உறுதிப்படுவதற்கான சாத்தியக்கூறு வாஷிங்டன் உடனான பதட்டங்களை அதிகரிக்க மட்டுமே சேவையாற்றும். வரவிருக்கின்ற நிர்வாக மாற்றங்கள் என்னவாக இருந்தாலும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கே வாஷிங்டன் பொறுப்பேற்றுள்ளது.
By Bill Van Auken
20 December 2016
http://www.wsws.org/tamil/articles/2016/12-dec/turk-d24.shtml

Friday, 23 December 2016

அமெரிக்காவின் சமத்துவமின்மை

The United States of Inequality

உலகளாவிய சமத்துவமின்மை குறித்து ஆராயும் முன்னணி வல்லுனர்களான பொருளாதார நிபுணர்கள் தோமஸ் பிக்கெட்டி, இமானுவெல் சயாஜ் மற்றும் கப்ரியல் ஜூக்மன் ஆகியோர் 1946 மற்றும் 2016 க்கு இடையே அமெரிக்காவின் வருவாய் சமத்துவமின்மை வளர்ச்சி குறித்து இம்மாத தொடக்கத்தில் ஓர் அதிர்ச்சியூட்டும் ஆய்வை வெளியிட்டனர்.
உலகிலேயே மிகவும் சமநிலையற்ற ஒரு அபிவிருத்தியடைந்த நாடான அமெரிக்காவின் சமத்துவமின்மையை ஆவணப்படுத்துவதில், இந்த பொருளாதார நிபுணர்களது முந்தைய ஆய்வுகள் கணிசமானளவிற்கு அபிவிருத்தி அடைந்தவை தான் என்றாலும், மருத்துவக் கவனிப்பு (Medicare) மற்றும் மருத்துவ சிகிச்சை உதவி (Medicaid) போன்ற சமூக திட்டங்கள், வரிவிதிப்பு ஆகியவற்றின் தாக்கம் மற்றும் மூலதன இலாபங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளடங்கலாக “முழு தேசிய வருமானத்தையும் உள்ளடக்கியதாக" கூறும் முதல் ஆய்வு இதுவேயாகும்.
இதன் முடிவு, வேறெந்த முந்தைய முயற்சிகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது. இறுதி தீர்மானங்கள் மலைப்பூட்டுகின்றன, நவீன வரலாற்றில் கடந்த நான்கு தசாப்தங்களின் போக்கில் அங்கே மிக வேகமான மேல்நோக்கிய வருவாய் மறுபகிர்வுகளில் ஒன்று ஏற்பட்டுள்ளதை அது அம்பலப்படுத்துகிறது.  

அமெரிக்க மக்கள்தொகையில் அடியிலுள்ள பாதி மக்களுக்கு தேசிய வருவாயில் வரிக்கு முன்னர் கிடைத்த பங்கு, 1980 க்குப் பின்னர் 20 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அண்மித்து அரைவாசியாக குறைந்துள்ளது, அதேவேளையில் இந்த வருவாய் பங்கு உயர்மட்ட ஒரு சதவீதத்தினருக்கு 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அண்மித்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அப்பொருளாதார நிபுணர்கள் கண்டனர். “அடிமட்ட 50 சதவீதத்தினரிடம் இருந்து உயர்மட்ட 1 சதவீதத்தினருக்கு தேசிய வருவாயில் 8 புள்ளிகள் மாற்றப்பட்டதுடன், அடிப்படையில் இவ்விரு குழுக்களுக்கான வருவாய் பங்குகளும் மாற்றப்பட்டுள்ளதாக,” அந்த ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த ஆய்வு, 1946-1980 க்கும் மற்றும் 1980 இல் இருந்து இதுவரைக்கும் இடையிலான ஒரு கூர்மையான மாற்றத்தை ஆவணப்படுத்துகிறது. முதல் காலக்கட்டத்தில், சம்பாதிப்பவர்களில் கீழ்மட்ட 50 சதவீதத்தினரின் வரிக்கு முந்தைய வருவாய்கள் 102 சதவீதம் அதிகரித்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது, அதேவேளையில் உயர்மட்ட 1 சதவீதத்தினரின் வருவாய் 47 சதவீதமும், உயர்மட்ட 0.001 சதவீதத்தினரின் வருவாய் 57 சதவீதமும் மட்டுமே அதிகரித்தது.
ஆனால் 1980 க்குப் பின்னர், சம்பாதிப்பவர்களில் கீழ்மட்ட 50 சதவீதத்தினரின் வருவாய் (நடப்பு டாலர் மதிப்பில்) ஆண்டுக்கு சுமார் 16,000 டாலராக தேக்கமடைந்துள்ளது, அதேவேளையில் உயர்மட்ட 1 சதவீதத்தினரின் வருவாய் 205 சதவீத அளவிற்கும், உயர்மட்ட 0.001 சதவீதத்தினரின் வருவாய் 636 சதவீத அளவிற்கும் அதிகரித்துள்ளது.
பல்வேறு வரி வருவாய்கள் மற்றும் சமூக திட்டங்களது தாக்கத்தைக் கணக்கிட்ட பின்னர், சம்பாதிப்பவர்களில் அடிமட்ட அரைவாசி பேரின் வருவாய்கள் 1980 களுக்குப் பின்னர் 21 சதவீத அளவிற்கே அதிகரித்திருப்பதை இந்த பொருளாதார நிபுணர்கள் கண்டனர். ஆனால் இந்த அதிகரிப்பில் எதுவுமே செலவு செய்வதற்கான வருவாய்க்குள் செல்லவில்லை என்பதையும் கண்டனர். அதற்கு மாறாக ஏறத்தாழ முழுமையாக Medicare இற்கான அதிகரித்த மருத்துவக் காப்பீட்டு செலவுகளின் விளைவுகளால் இவ்வாறு ஏற்பட்டிருந்தது. இந்த மருத்துவக் கவனிப்புகளானது, அத்தியாவசிய மருத்துவ கவனிப்பு சேவைகளின் விலையை உயர்த்துவதில் மட்டுமே ஈடுபட்ட மருந்து நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக 2000இல் இருந்து வருவாய் சமத்துவமின்மையின் அதிகரிப்பில் இருந்த பிரதான காரணி, “மூலதன வருவாய்" அதிகரிப்பு, அதாவது பங்குச்சந்தை அதிகரிப்பாக இருந்துள்ளது. பங்குச்சந்தை குமிழிகள் ஊதிப்பெரிதானதே பிரதான வடிவமாக இருந்துள்ளது, இதன் மூலமாகவே ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒரு பாரிய செல்வவள பரிமாற்றத்தைச் செய்துள்ளனர்.
பிக்கெட்டி, சயாஜ் மற்றும் ஜூக்மன் அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்கள், அமெரிக்க முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலும் அமெரிக்காவில் வர்க்க உறவுகளிலும் ஏற்பட்டுள்ள வரலாற்று மாற்றங்களை பிரதிபலிக்கிறது. சமூக சமத்துவமின்மையின் பிரமாண்ட அதிகரிப்பானது அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவுடனும், அதன் உலக பொருளாதார நிலையின் வீழ்ச்சியுடனும் பிணைந்துள்ளது.
அமெரிக்கா அதன் ஆரம்ப நாட்களில் மேற்கத்திய உலகிலேயே சமூகரீதியில் மிகவும் சமத்துவமான பிராந்தியமாக இருந்ததை வரலாற்றாளர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஏகபோகமயமாக்கல் மற்றும் நிதியியல் மூலதனத்தின் வளர்ச்சியானது, அமெரிக்காவை ஒரு துருவத்தில் "கொள்ளைக்கூட்ட சீமான்களின்" பெருநிலமாகவும் மற்றும் மறுபுறம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரது வாழ்க்கை நிலைமைகளை 1890 இல் பிரசுரிக்கப்பட்ட Jacob Rii இன் How the Other Half Lives மற்றும் Upton Sinclair இன் The Jungle of 1906 போன்ற படைப்புகளில் வெளிப்படுத்திக்காட்டப்பட்ட நிலைமைகளுக்கு மாற்றியது.
ஆனால் இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளோடு தொழிலாளர் இயக்க வளர்ச்சியும் வந்தது. இது பெரிதும் சோசலிஸ்டுகளின் முயற்சி மூலமாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் எண்ணற்ற இன, மத மற்றும் பிராந்திய பிளவுகளைக் கடந்து அவர்களை ஒழுங்கமைப்பதற்காக போராடியது. 1917 ரஷ்ய புரட்சி இத்தகைய போராட்டங்களுக்கு புதிய தூண்டுதலை வழங்கியது, தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கு இட்டுச் சென்ற 1930 களின் போர்குணம் மிக்க தொழிலாளர் நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்கும்.
அமெரிக்க தொழிலாளர்கள் போல்ஷிவிக்குகள் அமைத்த முன்னுதாரணத்தை பின்தொடர்வதற்கான சாத்தியக்கூறால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகின் மிகப்பெரிய பொருளாதார பலம் மற்றும் அதிநவீன தொழில்துறை பொருளாதாரத்தை அதன் மேற்பார்வையில் கொண்டிருந்த நிலையில், ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த சமூக சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை அமைத்தது. சமூக பாதுகாப்பை அறிமுகப்படுத்திய இது, வோல் ஸ்ட்ரீட் இன் படுமோசமான துஷ்பிரயோகங்களுக்குக் கடிவாளமிட்டது.
உலக பொருளாதார உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா, இரண்டாம் உலக போரில் இருந்து உலகளாவிய மேலாதிக்க சக்தியாக எழுந்தது. ஆனால் 1960 களின் இறுதிவாக்கில், ஐரோப்பிய மற்றும் ஆசிய பொருளாதாரங்கள் மீள்கட்டமைப்பு ஆனதும், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார மேலாதிக்கம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 1970 களின் பொருளாதார மந்தநிலையும் பணவீக்கமும் சேர்ந்து ஒரு தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உச்சத்தை அடைந்தன.
அதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கமோ, வர்க்க போர், தொழில்துறைகளை அழித்தல் மற்றும் நிதிமயமாக்கல் கொள்கையில் பயணித்ததன் மூலமாக விடையிறுத்தது. 1979 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டரால் பெடரல் ரிசர்வின் தலைவராக பௌல் வோல்கர் (Paul Volcker) நியமிக்கப்பட்டதுடன், அமெரிக்க மத்திய வங்கி ஒரு உற்பத்தி மந்தநிலைக்குள் தள்ளப்பட்டது. 1981 இல் ரொனால்டு ரீகன் பதவிக்கு வந்த பின்னர், அவர் ஒரு முழு அளவிலான சமூக எதிர்புரட்சியைத் தொடங்கினார், PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை உடைத்ததன் மூலமாகவும் மற்றும் போராட்டக்காரர்களை வேலையிலிருந்து நீக்கியும் மற்றும் தொழிலில் ஈடுபடுவதை தடுப்பதன் மூலமாகவும் இதை ஆரம்பித்திருந்தார். இதேபோன்ற கொள்கைகள் உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்களால் பின்தொடரப்பட்டன.
1980 கள் முழுவதிலும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் தனிமைப்படுத்தியும் மற்றும் காட்டிக்கொடுத்தும், பெருநிறுவன நிர்வாக மற்றும் அரசின் கட்டமைப்பிற்குள் தங்களைத்தாங்களே இணைத்துக் கொண்டும், இந்த தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பதில் தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. அந்த தசாப்தத்தின் முடிவில், தொழிற்சங்கள் சகல நடைமுறை நோக்கங்களுக்காகவும், தங்களைத்தாங்களே நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் உறுப்புகளாக மாற்றிக் கொண்டன. அவற்றை மேலாளுமை செலுத்திய அதிகாரத்துவ உயரடுக்குகள் அவற்றின் எல்லா முயற்சிகளையும் தொழிலாள வர்க்க போராட்டத்தை நசுக்கவும் மற்றும் அடிபணிய செய்வதற்கும் அர்ப்பணித்தன.
அதற்கடுத்து வந்த ஒவ்வொரு நிர்வாகமும், ஜனநாயக கட்சி ஆகட்டும் மற்றும் குடியரசு கட்சி ஆகட்டும் ஒன்றுபோல, சமூக சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் கொள்கைகளைப் பின்தொடர்ந்தன, அடுத்தடுத்து கொண்டு வரப்பட்ட நிதியியல் நெறிமுறை தளர்த்தல், பெருநிறுவனங்கள் மற்றும் அதிக வருவாய் ஈட்டுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரிவெட்டுக்கள், சமூக திட்டங்களை வெட்டுதல் மற்றும் வேலையிட பாதுகாப்புகளை நீக்குதல் ஆகியவை அதில் உள்ளடங்கும்.
2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம் இந்த நிகழ்முறைகளைத் தீவிரப்படுத்தியது. வெள்ளை மாளிகை புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி பிணையேற்புகளைத் தொடர்ந்து விரிவாக்கியது. அது பெடரல் ரிசர்வின் "பணம் அச்சடித்து புழக்கத்தில் விடும்" கொள்கைகள் மூலமாக வோல் ஸ்ட்ரீட் க்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்ச உதவியது, அதேவேளையில் 2009 வாகனத்துறை மறுசீரமைப்பு போல கூலிகளைக் குறைக்க வேலை செய்தது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பின் வரவிருக்கும் நிர்வாகத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இத்தாக்குதல் கூர்மையாக தீவிரமடையும். ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஏதோ புதியவொன்றை பிரதிநிதித்துவம் செய்கிறது தான். பில்லியனர்கள், தீவிர வலது, வணிக சார்பு சித்தாந்திகள் மற்றும் தளபதிகளை கொண்டு அவர் அவரின் மந்திரிசபையை அமைத்துள்ளார்—இவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்த மற்றும் பரந்த மக்கள் எதிர்ப்பை முன்பினும் அதிக வன்முறையாக ஒடுக்குவதற்கு அர்ப்பணித்துள்ளவர்கள்.
ஆனால் ட்ரம்ப் ஏதோ வானத்திலிருந்து விழுந்தவரல்ல. அவர் ஏதோ ஒரு வகையில் பிறழ்ச்சியுமல்ல. மாறாக அவர், அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவு, முன்னொருபோதும் இல்லாதளவிலான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தினது பொறிவின் இழிவார்ந்த விளைபொருள் ஆவார்.
இத்தகைய இதே நிகழ்ச்சிப்போக்குகள் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளங்களையும் உருவாக்கி உள்ளன. 1990 களின் மத்தியில், அமெரிக்க தொழிலாளர் கழகம் (Workers League) மற்றும் உலகின் ஏனைய இடங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகள், சோசலிச சமத்துவக் கட்சி என்ற பெயரை ஏற்று, கழகங்களில் இருந்து கட்சிகளாக தங்களை மாற்ற தொடங்கிய போது, "முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் ஒரு சிறிய சதவீதத்தினருக்கும் மற்றும் பல்வேறு தரப்பட்ட பொருளாதார நிச்சயமின்மை மற்றும் துன்பத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்களுக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளியின்" ஆழ்ந்த புரட்சிகர முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருந்தோம்.
கடந்த இரண்டு தசாப்தங்கள் இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தி உள்ளன. ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒழுங்கமைத்து ஐக்கியப்படுத்த, சோசலிச சமத்துவ கட்சியாக உருவெடுக்கும், ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவது சமூக சமத்துவமின்மைக்கான போராட்டத்திற்கு அவசியமாகும். முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையானது சமத்துவம், சர்வதேச திட்டமிடல் மற்றும் உற்பத்தி மீதான ஜனநாயக கட்டுப்பாடு—அதாவது சோசலிசத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
Andre Damon
20 December 2016

Thursday, 22 December 2016

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தொடர்பாக டேவிட் நோர்த் லண்டனில் பேசுகிறார்

David North speaks in London on Donald Trump’s election

உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் சனிக்கிழமை லண்டனில் ஆற்றிய உரையைக் கேட்க சுமார் 100 தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
நோர்த்தின் உரையானது டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கான காரணத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி விவரித்தது.
ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவியை விவரிக்கையில், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏற்றநிலையுடன் தொடர்புடைய தலைமையை அதன் வரலாற்றுச் சரிவோடு தொடர்புடைய தலைமையோடு நோர்த் வேறுபடுத்திக் காட்டினார். ஆரம்பகாலத்தில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமானது ஜோர்ஜ் வாஷிங்டன், தோமஸ் ஜெஃபர்சன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றோரை உருவாக்க முடிந்தது. “இப்பொழுது” “அவர்கள் ட்ரம்ப்பை உருவாக்குகின்றனர்” என்று நோர்த் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதிப் பதவியின் கருத்துருவும், அது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதும் அந்த பொறுப்பை வகிக்கும் பண்பு கொண்டோரால் பெரிதும் வடிவமைக்கப்படும் என்று நோர்த் விளக்கினார். ஃபிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட், “சமூகப் பாதுகாப்பை உருவாக்கியவர் என தொழிலாளர் வெகுஜனங்களால் பார்க்கப்பட்டார்.”
ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதன் விளைவுகள் “மகத்தானதாக இருக்கும்” என்று டேவிட் நோர்த் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தார், “நான் இதனை இந்த அறையில் உள்ள இளைஞர்களுக்கு கூறுவேன். உங்களது வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருப்பவற்றால் பெரிதும் மேலாதிக்கம் செய்யப்படப் போகின்றது… அத்தகைய வரலாற்று அபிவிருத்தியின் விளைவுகளுக்கு நீங்கள் தப்ப முடியாது”.
ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்வது, “அமெரிக்க வாழ்க்கையில் உள்ள அனைத்து நோய்வாய்ப்பட்ட, சீர்கேடு, ஒழுக்கக்கேடு, பின்தங்கிய நிலை மற்றும் முட்டாள்தனத்தையாகும். ஆனால் அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப்பை விட கிட்டத்தட்ட 3 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றதை குறிப்பிட்டு, நோர்த் 2000க்கு முந்தைய நிலையை விளக்கினார், “20ம் நூற்றாண்டின் அனைத்து தேர்தல்களிலும் மக்களின் வாக்குகளை மிக அதிகம் பெற்றவரே எப்போதும் தேர்தலில் வெற்றி பெறுவார்.” கடந்த முறை அப்படி அல்ல, 2000க்கு முன் 1888ல்தான் அவ்வாறிருந்தது. அவ்வாறு. இருந்தும் ட்ரம்ப் மக்கள் வாக்கை இழந்ததை ஜனநாயகக் கட்சியினரால் ஒரு பிரச்சினையாகக்கூட எழுப்பப்படவில்லை. அதற்கு பதிலாக வலதுபுறத்தில் இருந்து ட்ரம்ப்பை தாக்குவதிலேயே குறியாயிருந்தனர் அதாவது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கான ஒரு கைக்கூலியாக பார்த்தனர்.
மின்னஞ்சல் ஊடுருவல் என்று கூறப்படும் ஊழல் மீதான பிரத்தியேக கவனத்துடன், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ரஷ்யா ட்ரம்ப்பிற்கு ஆதரவாக தலையீடு செய்ததாக ஆதாரம் எதுவிமின்றிக் கூறிக்கொண்டு, “ட்ரம்ப்பும் அவர் முன்வைக்கும் சமூகப் பொருளாதார கொள்கைகளும் ஒரு முறைகேடு அல்ல” என்று நிரூபித்தனர்.
ஆளும் தட்டுக்குள் அடித்துக்கொள்வதெல்லாம் வெளியுறவுக் கொள்கை மீதான முரண்பாடுகளும் அவை தொடர்பாக ட்ரம்ப் பற்றிய கவலைகளுமே, சீனா மீதான அவரது குவிப்பு, புட்டினுடன் ஒரு பேரத்திற்கு தயாரித்துக் கொண்டிருப்பது ஆகியன, என்றார் நோர்த். “ஹில்லாரி கிளிண்டனை ஆதரித்த ஆளும் தட்டின் ஒரு பிரிவைப் பொறுத்தவரை, (ரஷ்யா) உடனடியான பெரும் அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அல்லது, வேறுவிதமாக கூறுவதானால், சீனாவுடன் நீண்டகால வாய்ப்பில் அணுகுதல் மற்றும் அது வல்லமையாக எழுந்து வருவதன் ஆபத்து அமெரிக்கா முதலில் ரஷ்யர்களுடன் கணக்குத் தீர்ப்பதை வேண்டி நிற்கிறது.”
ட்ரம்ப் மக்கள் செல்வாக்கு அலையின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்துள்ளார் என்ற கூற்றுக்கு பதிலளிப்பது முக்கியம் என்றார் நோர்த். ஜனநாயக கட்சிக்காரர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை, வாழ்க்கைப் பாணி அல்லது அடையாளங்களை ஒன்று திரட்டல் அடிப்படையில்: இன அடையாளம், பாலியல் அடையாளம், பால் அடையாளம் அடிப்படையில் ஒழுங்கமைத்தனர் மற்றும் அதுதான் கூட்டுக்கு அடிப்படையாக இருந்தது. ஜனநாயகக் கட்சியுடனான ஒரு விவாதத்தில், தொழிலாள வர்க்கம் பற்றிய பிரச்சினை திரும்பத்திரும்ப, மேலோட்டமாக வந்தது. பொருளாதார வேண்டுகோளை நாம் விடுக்கவில்லை என்றால் ஆபத்தாகாதா என்று பில் கிளிண்டன்தான் கேட்டார். அது விளைவொன்றும் இலாததாக தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வெண்டுகோள் விடுக்க விரும்பவில்லை.”
இன்னும் சொல்லப்போனால், ஜனநாயகக் கட்சிக்காரர்கள், “மிக சலுகை மிக்க தட்டான 10 சதவீதத்தை நோக்குநிலைப் படுத்தியிருந்தனர்….. இந்த தேர்தல் மூலோபாயம் ஜனநாயகக் கட்சிக்காரர் முகத்தில் குத்துவிட்டது ஏனெனில் அவர்கள் வெறுமனே கழித்துவிட்டனர் மிக முக்கிய மாநிலங்களில் விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ஓகியோவில் இறுதியில் வாக்கை இழந்தனர்.”
இந்த மாநிலங்களில் வென்றிருந்தால், கிளிண்டன் தேர்தல் கல்லூரியிலும் கூட பெரும்பான்மை பெற்றிருப்பார். போலி இடதுகள் கூறிக்கொள்வதுபோல, ட்ரம்ப் வெற்றி பெற்றது “வெள்ளையின சிறப்புரிமை பற்றிய விளக்கிக் காட்டல்” காரணமாக அல்ல, மாறாக ஜனநாயக் கட்சி வாக்கு பொறிந்ததால் ஆகும்.
நோர்த் தொடர்ந்தார், பாராக் ஒபாமா 2008ல் பெருமளவில் மக்கள் வாக்குளை வென்றார். “இனவாத வெள்ளையர்” என்று கூறப்படும் ஒரு பரந்த பகுதியானது முதல் ஆபிரிக்க-அமெரிக்கரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது மற்றும் மீண்டும் தேர்நெதடுத்தது”, ஏனெனில் அவர்கள் ‘மாற்றத்தை நீ நம்பு’ என்ற முழக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அது 2008ல் ஏற்பட்ட பொருளாதாரப் பொறிவின் சகாப்தமாக இருந்தது, அதுதாமே ஒரு நீண்டகால பொருளாதார சீரழிவின் உற்பத்திப் பொருளாய் இருந்தது, அவர்கள் ஒபாமாவுக்காக வாக்களித்தனர்……. அந்தவகையான எதுவும் நிகழவில்லை. அவர் ஜனாதிபதியாகி  வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்கு அபரிமிதமான அளவில் சேவை செய்தார்.”
தேர்தல் உண்மையில் மக்கள் தொகையில் இடதுபுறத்துக்கு ஆழமான நகர்வைப் பிரிதிநிதித்துவம் செய்கிறது என்று நோர்த் விளக்கினார். ஜனநாயகக் கட்சிக்கான ஆரம்பநிலை தேர்தல்களில், செனெட்டர் பேர்னி சான்ட்ரஸ் அவரது கூற்றான “ஜனநாயக சோசலிஸ்ட்” ஆக இருப்பதாக மற்றும் “பில்லியனர் வகுப்பு” தொடர்பான அவரது கண்டித்தல்கள் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர், 1928ல் வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஒரு ஆண்டு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி செய்த ஆய்வைக் குறிப்பிட்டார்: “வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும் ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”
அந்த வார்த்தைகள் இன்று ஆழமான உடனடித் தன்மையை எடுக்கின்றன, என்றார். செல்வத்தட்டின் அமைச்சரவைக்கு ஒரு பில்லியனர் தலைமை வகிக்கிறார். இதுவரை அதற்குப் பெயர் அறிவிக்கப்பட்டவர்கள் மொத்தமாக 14 பில்லியன் பவுண்ட்டுகளுக்கும் அதிகம் செல்வம் கொண்டவர்கள். அவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு வர்க்க யுத்தத்தை பின்பற்றுவார்கள். கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றப் பொறுப்பில் சிக்கிய மூத்த இராணுவ நபர்களை அவர் பொறுப்புக்களில் நியமித்தது, அமெரிக்க இராணுவத் திறத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் பொருளாதாரப் போட்டியாளர்களை எதிர்கொள்ள அவர் முயற்சிப்பார் என்பதையே காட்டுகிறது.
எங்கே அமெரிக்கா போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு பதில் கூறுகையில் நோர்த் கூறினார், “சர்வாதிகாரத்திற்கு, போருக்கு மற்றும் அனைத்திற்கும் மேலாக புரட்சிக்கு” என்றார்.
அவர் முடிவாகக் குறிப்பிட்டார், “1941ல் முதலாளித்துவ முரண்பாடுகளுக்கு ஒரு யுத்தத்தின் மூலம் ஆளும் தட்டுக்கள் பதிலளித்தன. 1917ல் அந்த முரண்பாடுகளுக்கு தொழிலாள வர்க்கம் ரஷ்யாவில் ஒரு புரட்சியின் மூலம் பதிலளித்தது. அவ்வகையான பண்புடைய இன்னொரு காலகட்டத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம், ஆனால் பெரிய அளவில். எமது சகாப்தம் வெறுமனே சோசலிச சகாப்தம் மட்டுமல்ல, மாறாக உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தமாகும். அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் எழுச்சிகள் உலக ரீதியாக பிரமாண்டமான வெடிப்புக்களை உற்பத்திசெய்யாது என எவரும் நம்புகிறீர்களா? ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது, ஒருவர் சூழ்நிலையை நினைக்கையில், பிரிட்டனில் உள்ள நெருக்கடிக்கு, பிரான்ஸில் உள்ள நெருக்கடிக்கு, ஆஸ்திரியா அல்லது இத்தாலியில் அபிவிருத்தி அடைந்துவரும் நெருக்கடிகளுக்கு தெளிவான இணைநிகழ்வுகள் அங்கே இல்லையா?
“அமெரிக்காவில் இருப்பதைப்போலவே, இங்கும் மக்களின் ஆழமான அதிருப்தியின் வளர்ச்சியைப் பார்க்கிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கான விடை, லெனினால் அபிவிருத்தி செய்யப்பட்ட, அனைத்திற்கும் மேலாக ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட புரட்சிகர மார்க்சிசத்தின் அடிப்படைக் கருத்துருக்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் தலைமையைக் கட்டி எழுப்புதல் மூலமாக மட்டுமே அளிக்கப்பட முடியும். தொழிலாள வர்க்க எழுச்சி தவிர்க்கமுடியாதது என நாம் நம்புகிறோம். அது ட்ரம்ப்புகள் மூலமாக, இங்கு பிரிட்டனில் தேசியவாதத்தை ஊக்குபவர்கள் மூலம், பிரான்சில் லூ பென் மூலம் அது பார்க்கப்படும். இந்த வேலைத் திட்டங்களின் மோசடியும் திவாலும் மிக விரைவில் அம்பலமாகும்.”
அவர் வலியுறுத்தினார், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் “தொழிலாள வர்க்கத்தின்பாலும், முன்னேறிய இளைய பகுதியினர் பாலும் கட்டாயம் திரும்பும். நாம் சோசலிச மாற்றீட்டை வழங்குவோம்.”
நோர்த்தின் விரிவுரை உற்சாகத்தாலும் நீடித்த கைதட்டல்களாலும் வாழ்த்தி வரவேற்கப்பட்டது. வினா- விடைப் பகுதியில், பார்வையாளர் உறுப்பினர்கள் நோர்த்திடம் இன்று தொழிலாள வர்க்கத்தின் சேர்க்கை தொடர்பாக, தேர்தல் கல்லூரி முறை, கிளிண்டன் மின்னஞ்சல் களவு பற்றிய ஊழல், ட்ரம்ப்பின் சீன எதிர்ப்புக் கொள்கையின்  விளையபயன்கள் பற்றிக் கேட்டனர்.
கூட்டத்தில் நோர்த்தின் சொந்த படைப்புகள் உள்பட 300 பவுண்ட்ஸ்க்கும் அதிகமான நூல்கள் விற்கப்பட்டன. சோசலிச சமத்துவக் கட்சியின் வளர்ச்சி நிதியான £100,000  நிதிக்கு கிட்டத்தட்ட 4,500 £ திரட்டப்பட்டது.
WSWS correspondents
19 December 2016

Wednesday, 21 December 2016

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்க ஊடகங்களின் நவ-மக்கார்த்தியிச பிரச்சாரம்

The US media’s neo-McCarthyite campaign for war against Russia

போருக்கு வழிவகுக்கும் நோக்கில் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு சரமாரியான மூர்க்கத்தனமான பிரச்சாரத்திற்கு அமெரிக்க மக்கள் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் இன் ஒரு முன்னணி கட்டுரையின் பிரசுரத்துடன் தொடங்கி, இப்பிரச்சாரம் இவ்வாரம் கூர்மையாக தீவிரமடைந்தது. பெயர்குறிப்பிடப்படாத ஆதாரங்கள் மற்றும் முற்றிலும் வலுவற்ற மற்றும் இட்டுக்கட்டப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில்,  ஜனநாயக கட்சி மின்னஞ்சல்களை ரஷ்யா இணையவழியில் ஊடுருவி, அமெரிக்காவிற்கு எதிராக "இணையவழி போர்" தொடுத்து வருவதற்கு தீர்க்கமான ஆதாரமாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுக்கள் புதனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைப் பின்தொடர்ந்து வந்தன, அதில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் ஏர்னெஸ்ட், விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஜனநாயகக் கட்சி மின்னஞ்சல்களைக் குறித்து செய்தி வெளியிட்டு, அமெரிக்காவிலுள்ள ஊடக நிறுவனங்கள் "இன்றியமையாத விதத்தில் ரஷ்ய உளவுத்துறையின் ஆயுதங்களாக மாறிவிட்டன" என்று அறிவித்தார்.
வியாழனன்று ஏர்னெஸ்ட் அறிவிக்கையில், ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் ட்ரம்ப் "அவரது போட்டியாளரை இணையவழியில் ஊடுருவுவது அவரது பிரச்சாரத்திற்கு உதவும் என்று கருதியதால், ரஷ்யா அவரின் போட்டியாளரை இணையவழியில் ஊடுருவ" ஊக்குவித்திருந்ததாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஜனாதிபதி ஒபாமா National Public வானொலிக்கு கூறுகையில் "எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமும் நமது தேர்தல்களில் நேர்மையில் பாதிப்பை ஏற்படுத்த முயல்கையில், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் நாம் அதை செய்வோம் என்பதில் எந்த சந்தேகமும் என்றே நான் நினைக்கிறேன்,” என்று கூறி, ரஷ்யாவிற்கு எதிராக பதிலடி கொடுக்க அச்சுறுத்தினார்.
ஒபாமா நிர்வாகத்தின் இத்தகைய போர்வெறியூட்டும் கருத்துக்களுடன் , ரஷ்யாவை நோக்கிய ட்ரம்பின் இணக்கமான நிலைப்பாட்டைக் கண்டித்தும், மற்றும் இணையவழி ஊடுருவல் எனக்கூறப்படுவதற்கும் மிகவும் ஆக்ரோஷமான பிரதிபலிப்பை முன்னணி அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைகளின் தலையங்கங்கள் உள்ளடக்கி இருந்தன. செய்திகள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இணையவழி ஊடுருவலுக்கு நேரடியாக உத்தரவிட்டு, மேற்பார்வை செய்தார் என்று, பெயர் வெளியிடாத உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், மூச்சுவிடாமல் அறிவித்தன.
டைம்ஸ் வியாழனன்று வெளியான அதன் ஒரு ஆத்திரமூட்டும் கட்டுரையில் ஏறத்தாழ முழுமையாக, ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் ஒரு ரஷ்ய முகவராக நடந்து கொள்கிறார் என்று குற்றஞ்சாட்டியது. “லெனினின் வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினால், ஒரு நயவஞ்சகமான வெளிநாட்டு சக்தியின் கரங்களில் அவர் பயன்படுத்தப்பட்டு வருவதை அறியாத ஒரு அமெரிக்க ஜனாதிபதியை விட மிகப்பெரிய 'பயனுள்ள முட்டாள்' வேறுயாரும் இருக்க முடியாது,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த தலையங்கம் இன்னும் கூடுதலாக, "நமது மிகப் பழைய, மிகவும் தீர்க்கமான வெளிநாட்டு விரோதிகளில் ஒன்று" என்பதாக ரஷ்யாவை வரையறுத்ததுடன், “2016 தேர்தலில் கிரெம்ளின் தலையை நுழைப்பது" “பழிவாங்கும் நடவடிக்கைகளை" நியாயப்படுத்துகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டது.
டைம்ஸ் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களின் அறிவிப்புகள், 1950 களின் இழிவார்ந்த மக்கார்த்தியிச கூறுபாடுகள் அனைத்தையும் அன்றைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பயன்படுத்தியதை போல்  இன்றைய  முதலாளித்துவ ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்துகின்றன: அதாவது "நயவஞ்சக ரஷ்யா" என்று மிரட்சியூட்டும் விதத்தில் கண்டிப்பது, வெட்கமின்றி பொய்யுரைப்பது மற்றும் உள்நாட்டு போட்டியாளர்களை உளவாளிகள், தேசதுரோகிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் முகவர்கள் என்று தாக்குவது ஆகியவையாகும்.
அந்நாட்டிற்குள் கடுமையான மற்றும் சீற்றமான மோதல்கள் உள்ளன மற்றும் இராணுவ-உளவுத்துறையின் ஒரு கன்னை ரஷ்யாவுடனான ஓர் ஆக்ரோஷமான மோதலில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானகரமாக உள்ளது. இது சிரியாவில் சிஐஏ-தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கை தோல்வியடைந்ததன் மீதான கோபத்துடன் இணைந்துள்ளது. ட்ரம்ப் அவரது மந்திரிசபையை தளபதிகளைக் கொண்டு நிரப்பி உள்ளதுடன் பாரியளவில் போரைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறார் என்றாலும், ரஷ்யாவுடன் அதிக இணக்கமாக இருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆளும் வர்க்கத்திற்குள் இந்த உட்பகை மோதலுடன் சேர்ந்து, அங்கே மத்திய கிழக்கில் மற்றும் ரஷ்யாவிற்கே எதிராக கூட இரு இடங்களிலும் இன்னும் இராணுவ மோதலை ஆதரிப்பதற்கு அமெரிக்க மக்களை அரசியல்ரீதியில் நிர்ப்பந்திக்க வைக்க ஒரு மறைமுகமான முயற்சி நடந்து வருகிறது.
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீட்டை குற்றஞ்சாட்டும் பிரச்சார நடவடிக்கையானது, அதற்கு சமாந்தரமாக, ரஷ்யா ஆதரவுடன் சிரிய அரசு துருப்புகள் சிரிய நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்றுகையில் படுகொலைகளை நடத்தி வருகின்றன என்று அதே சம்பந்தப்பட்ட ஊடகங்கள் செய்திகளைப் பொழிந்து வருகின்றன.
“அலெப்போவை அழிப்பவர்கள்: அசாத், புட்டின், ஈரான்" என்று தலைப்பிட்டு வியாழனன்று டைம்ஸில் வெளியான முதன்மை தலையங்கம் பின்வருமாறு அறிவிக்கிறது: “2011 இல் திரு. அசாத்தை "ஒதுக்க" அழைப்புவிடுத்த பின்னர், திரு. ஒபாமாவினால் அதற்குப் பின்னர் அவ்வாறு நிகழ்த்த இயலவில்லை, மேலும் அவர் பதவியில் இனி ஒருபோதும் அவ்வாறு நிகழப் போவதும் இல்லை, குறைந்தபட்சம் அதற்கான விலையாவது அமெரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள், முந்தைய பிரச்சார நடவடிக்கை அளவிற்கு "ஒத்திசைவாக" இல்லை என்ற உண்மைக்காக, டைம்ஸ் இன் வியாழக்கிழமை முதல்பக்க தலைப்பு செய்தி புலம்புகிறது.
இந்த விஷமப் பிரச்சாரத்தில் சர்வதேச பத்திரிகையும் இணைந்துள்ளன. சிரியாவின் நெருக்கடிக்கு “ஒபாமா ஓர் இராணுவ தீர்வை அல்ல, ஓர் இராஜாங்க தீர்வை தேடினார். அது "அமெரிக்காவிலும் மற்றும் இங்கே [ஜேர்மனியிலும்] இரண்டு இடங்களிலும் அவரை பிரபலமாக்கியது,” என்று ஜேர்மனியின் Der Spiegel இல் வெளியான ஒரு துணை-தலையங்கம் கடுமையாக குறைகூறுகிறது, அக்கட்டுரை குறிப்பிடுகையில், அதுபோன்ற "சுய-நியாயப்பாடு தவறானது" என்பதை அது சேர்த்துக் கொள்கிறது.
இதுபோன்ற ஊடக பிரச்சார நடவடிக்கை புதிதல்ல. 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு முன்னதாக செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்காக ஆப்கானிஸ்தான் மீது பழிசுமத்திய முயற்சிகள்; 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னதாக "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" குறித்து பொய் உரைகள்; 2011 இல் பெங்காசியில் அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் லிபியாவை நாசமாக்கியதற்குப் பின்னர் அங்கிருந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட இருந்ததாக குறிப்பிட்ட செய்திகள் என அவை ஒவ்வொரு விதிவிலக்கின்றி இரத்தக்களரியான இராணுவ சாகசத்தையே முன்னெடுத்துள்ளன.
எவ்வாறிருப்பினும் இப்போது வித்தியாசம் என்னவென்றால் இந்த பிரச்சாரம் நடைமுறையளவில் ஒரு நிராயுதபாணியான மற்றும் வறிய முன்னாள் காலனியை நோக்கி அல்ல, மாறாக உலகின் இரண்டாவது அணுசக்தி நாடான ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையோ, எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதையோ, மனிதயினத்தையே அழிவுக்கு இட்டுச் செல்லும் அணுஆயுத பரிவர்த்தனையை அதுபோன்றவொரு போர் எவ்வாறு தவிர்க்கும் என்பதையோ குறித்து இந்த பிரச்சாரத்தை நடத்துகின்ற எந்தவொரு பிரமுகரும் கவனமெடுப்பதில்லை.
முதல் தலைப்புக்கள் மற்றும் அவதூறு பரப்பும் ஆசிரியதலையங்களுக்குப் பின்னால், 60 ஆண்டுகளில் பார்த்திராத அளவில் போர்முறைக்கான தயாரிப்புக்கு நிஜமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் A. மில்லெ அமெரிக்க இராணுவ அமைப்பிற்கு கூறுகையில், இராணுவம் வல்லரசுகளுக்கு எதிரான போர்களுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அவை "இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நமது படை அனுபவித்துள்ள எதையும் போன்றில்லாமல், மிகவும் அதிபயங்கரமானதாக" இருக்கும் என்றார்.
கடந்த இரண்டு வாரங்களாக அபிவிருத்தி அடைந்துள்ள இந்த பிரச்சாரம், கிளிண்டன் நிர்வாகத்தின் கொள்கை என்னவாக இருந்திருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஜனநாயகக் கட்சியும் மற்றும் அதன் பின்னால் அணிவகுத்துள்ள ஊடகங்களும் அண்மித்து மூன்று மில்லியன் வாக்குகளால் மக்கள் வாக்களிப்பில் ட்ரம்ப் தோல்வி அடைந்திருப்பதன் அடிப்படையிலோ, அல்லது அவர் வலதுசாரி, பிற்போக்குத்தனமான பில்லியனர்கள், வங்கியாளர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் தளபதிகளைக் கொண்ட ஒரு மந்திரிசபையை அமைப்பது குறித்தோ அல்லாமல், மாறாக அவர் ரஷ்யாவிடம் "மிருதுவாக" இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை எதிர்ப்பதற்காக அவற்றினது எதிர்ப்பை அமைத்துக் கொண்டுள்ளன. அதாவது, ஜனநாயக கட்சி வலதிலிருந்து ட்ரம்ப் ஐ தாக்க செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவிற்குள் இந்த முரண்பாட்டின் விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது, தொடர்ச்சியான சமாதானத்தின் சகாப்தம் ஒன்றை குறித்தும், அத்தகைய சகாப்தத்தில் போட்டியாளர் இல்லாத அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் உலகம் 20 நூற்றாண்டில் மனிதயினத்தைத் தொற்றியிருந்த போர்களில் இருந்து சுதந்திரமாக இருக்கும் என்றும் உணர்ச்சிப் பிரவாக அறிவிப்புகளுடன் வரவேற்கப்பட்டது. இப்போதோ, ஒரு கால் நூற்றாண்டு இரத்தந்தோய்ந்த பிராந்திய மோதல்களுக்குப் பின்னர், பத்திரிகைகளது இரத்தம் கொதிக்கச் செய்யும் அறிவிப்புகள், ஒரு புதிய உலக போர் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதையே தெளிவாக்குகின்றன.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகள் மத்தியில், அங்கே போரை நோக்கிய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் எதிர்ப்பைக் குறித்து ஆழ்ந்த ஐயுறவு உள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு கன்னைக்குள்ளும் எவ்வித பிரதிபலிப்பும் காணவில்லை. முதலாளித்துவம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில், ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியப் பணியாகும்.
Andre Damon
16 December 2016

Tuesday, 20 December 2016

அலெப்போ தோல்வி குறித்து வாஷிங்டனின் பாசாங்குத்தனம்

Washington’s hypocrisy over the fall of Aleppo

Image source from Internet
கிழக்கு அலெப்போவில் மோதல்கள் முந்தைய மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மேற்கத்திய-ஆதரவிலான கடைசி இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்கள்" வரையில் ஒவ்வொருவரையும் வெளியேற்றுவதற்கான ஓர் உடன்படிக்கை மீண்டும் நடைமுறைக்கு வருவதாக புதனன்று மாலை வெளியான செய்திகளுடன், சிரியாவில் வாஷிங்டனின் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போரில் அது அடைந்துள்ள தோல்வியின் அளவு இன்னும் மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது.
அலெப்போவை மீண்டும் கைப்பற்றுவதில் நடந்த அட்டூழியங்கள் குறித்து, சிரிய அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிகளை, பிரதானமாக ரஷ்யா மற்றும் ஈரானைக் குற்றஞ்சாட்டி வெளியிடப்படும் அதிகரித்தளவில் மிரட்டும்ரீதியிலான கண்டனங்கள், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கும் உந்துதலில் ஏற்பட்டுள்ள இந்த மூலோபாய பின்னடைவு மீது பிரதான ஏகாதிபத்திய சக்திகளது, குறிப்பாக அமெரிக்காவினது, ஆளும் வட்டாரங்களுள் நிலவும் ஏமாற்றம் மற்றும் கசப்புணர்விற்கு ஓர் அளவீடாகும். பகிரங்கமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் வெறித்தனமான கொடூர தொனி, உள்ளே திரைக்குப் பின்னால் நடந்து வரும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் தீவிரப்பாட்டுடன் பொருந்தி உள்ளது.
கிழக்கு அலெப்போவின் வீழ்ச்சியுடன், அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமியவாதிகளை மேலாளுமையில் கொண்ட போராளிகள் குழுக்களது ஒரு கூட்டமான அமெரிக்க-ஆதரவு "கிளர்ச்சியாளர்கள்", அவர்களது கடைசி பிரதான நகர்புற மையத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளனர், அதாவது டமாஸ்கஸ் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு இனி இத்தகைய பினாமி சக்திகளை வெற்றிகரமாக பயன்படுத்துவதை இது நடைமுறையளவில் தடுக்கிறது.
இப்போது அந்த நீடித்த மற்றும் இரத்தந்தோய்ந்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதால், அமெரிக்க அதிகாரிகளும் பெருநிறுவன ஊடகங்களும் சிரியா மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக வெள்ளமென குற்றச்சாட்டுக்களைப் பொழிந்து வருகின்றன. புதனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜோன் கெர்பி, “போர் குற்றங்கள்,” “அட்டூழியங்கள்,” “சேதங்கள்" மற்றும் "மனசாட்சியின்மை" குறித்து சிரியா மற்றும் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டினார்.
“மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்திற்கான வாஷிங்டனினது சுய-நீதிமான்களாக கூறிக்கொள்பவர்களில் முன்னணி நபரும், தார்மீக பாசாங்குத்தனத்தின் சர்ச்சைக்கிடமற்ற பாதுகாவலருமான அமெரிக்க தூதர் சமந்தா பௌவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ஒரு நாள் முன்னதாக வழங்கிய உரையின் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறு கெர்பி அழைப்பு விடுத்தார்.
“அவற்றின் நடவடிக்கைகளில் எத்தனை அப்பாவி மக்களின் உடல்கள் குவிந்தாலும் அதுகுறித்து கவலையின்றி, அசாத் ஆட்சியும் ரஷ்யாவும், படைபலத்தைக் கொண்டு அலெப்போவின் ஒவ்வொரு கடைசி சதுர அங்குலத்தையும் கைப்பற்றுவதற்கு விடாப்பிடியாக இருப்பதாக தெரிகிறது,” என்றவர் அறிவித்திருந்தார். “பல தசாப்தங்களுக்குப் பின்னர் நமது மனசாட்சியை உறுத்தும் விதத்தில், நவீன கொடூரத்தை விவரிக்கும் உலக வரலாற்று சம்பவங்களின் பட்டியலில் அலெப்போ இணையும். ஹலாப்ஜா, ரவாண்டா, ஸ்ரீபெரெனிகா, இப்போது அலெப்போ,” என்றார்.
தன்னைத்தானே சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானை நோக்கி திருப்பிய அப்பெண்மணி, “அங்கே சொல்லக்கூடிய அளவில் உங்களுக்கு வெட்கக்கேடானது எதுவுமே இல்லையா? … அது குறித்து உங்களால் பொய் உரைக்காமல் இருக்க முடியுமா அல்லது நியாயப்படுத்த தான் முடியுமா?” என்றார்.
வெட்கக்கேடு, பொய்கள் மற்றும் நியாயப்படுத்தல்கள் என்று வரும்போது, திருமதி. பௌவருக்கு ஈடு இணையே இல்லை. “படைபலத்தைக் கொண்டு அலெப்போவின் ஒவ்வொரு கடைசி சதுர அங்குலத்தையும்" எடுக்கும் முயற்சிக்காக அவர் டமாஸ்கஸ் மற்றும் மாஸ்கோ மீது கொந்தளிப்பான கண்டனங்களை வீசுகின்ற வேளையில், கிழக்கே முண்ணூறு மைல்களுக்கு சற்று அதிக தூரத்தில் ISIS வசமிருக்கும் ஈராக்கிய நகரமான மொசூலில், ஈராக்கிய இராணுவம் மற்றும் பல்வேறு போராளிகள் குழுக்களுடன் அமெரிக்க இராணுவம் கூட்டு சேர்ந்து, துல்லியமாக அதையே தான் செய்ய தயாரிப்பு செய்து கொண்டிருந்தது. ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஊனமாக்கப்பட்டுள்ளனர், கிழக்கு அலெப்போவை விட மிக பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள மொசூல் மீதான தாக்குதல் இன்னும் ஆயிரக் கணக்கானவர்களை கொல்லும் என்றும், அதேவேளையில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களை இடம்பெயர்த்தும் என்றும் அனுமானிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அவையில் பௌவர் உரை நிகழ்த்திய போதே கூட, வாஷிங்டன் மத்திய கிழக்கின் மிக வறிய நாடான யேமன் மக்களுக்கு எதிராக ஒரு ஈவிரக்கமற்ற போர் நடத்த, அதன் முக்கிய அரபு கூட்டாளியான சவூதி முடியாட்சிக்கு உதவும் விதத்தில் ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது. வெறும் இருபது மாத இடைவெளியில் அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும் 11,000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்ற போதும், அதேவேளையில், சமீபத்தில் நிவாரண உதவி அமைப்பான ஆக்ஸ்ஃபோம் குறிப்பிட்டதைப் போல, அந்த ஒட்டுமொத்த நாடும் அமெரிக்க ஆதரவிலான முற்றுகையால் "மெதுவாக பட்டினியில் கொல்லப்பட்டு" வருகிறது என்ற போதும், அதைக் கண்டித்து அவர் ஒரேயொரு வார்த்தை கூட கூறவில்லை.
“நவீன கொடூரத்தை விவரிக்கும் உலக வரலாற்று சம்பவங்களின்" அவரது பட்டியலில் இருந்து, பௌவர், அமெரிக்க போர் ஆக்ரோஷத்தால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட ஈராக் மற்றும் லிபியாவில் தொடங்கி வியட்நாம் மற்றும் கம்போடியா வரையில் எண்ணற்ற நகரங்கள் மற்றும் சிறுநகரங்களையும், காசா மற்றும் ஃபல்லூஜா ஆகியவற்றையும் தவிர்த்துக் கொண்டார்.
உலக சோசலிச வலைத் தளம், அலெப்போ மக்களின் ஆழ்ந்த துயரங்களையும், அசாத் அரசாங்கம் மற்றும் அதன் ரஷ்ய கூட்டாளிகளால் பயன்படுத்தப்பட்ட கொடூரமான முறைகளையும், ஆயிரக் கணக்கானவர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரங்களையும் உணர்ந்துள்ளது. ஆனால் முடிவாக இந்த பேரழிவுக்கான மூலம் எது?
திருமதி. பௌவர் ஏதோ தார்மீக ஒலிம்பஸ் மலை உச்சியில் வசித்துக் கொண்டு, சிரியாவின் வன்முறை சம்பவங்களை சீற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஐ.நா வில் பேசலாம், ஆனால் உண்மை என்னவென்றால் வாஷிங்டனின் கரங்கள் இரத்தத்தில் நனைந்துள்ளன. முடிவாக, அரசு-எதிர்ப்பு இஸ்லாமிய போராளிகளுக்கு ஆயுதம் வழங்கவும், தளவாடங்கள் வினியோகிக்கவும், பயிற்சியளிக்க மற்றும் சம்பளம் அளிக்கவுமே கூட சிஐஏ மட்டுமே ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதுடன் சேர்ந்து, அலெப்போவில் கட்டவிழ்ந்துள்ள நாடகம், அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய ஒரு பாரிய ஆட்சி மாற்ற நடவடிக்கையின் விளைபொருளாகும். இது அமெரிக்க வான்வழி தாக்குதல்களுடன், சிரிய பொருளாதாரத்தில் என்ன எஞ்சியுள்ளதோ அதையும் முறிக்கும் நோக்கில் முடமாக்கும் தடையாணைகளையும் உள்ளடக்கி உள்ளன.
பாசாங்குத்தனமாக, அமெரிக்க அதிகாரிகளும், பெருநிறுவன ஊடகங்களும் மற்றும் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி-இடது குழுக்களும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மீதும் கூடுதலாக அமெரிக்க மேலாதிக்கத்தை கொண்டு வருவதற்கான இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை, ஒருவகையான சிரிய ஜனநாயக "புரட்சியாக" சித்தரிக்கின்றன.
சிரிய அரசு படைகளது வெற்றியை, "அதிக ஜனநாயக சிரியாவிற்கான கனவின் இறுதி மரணம்…" என்று குணாம்சப்படுத்தியமை, சமீபத்திய அலெப்போ சம்பவங்களுக்கு வாஷிங்டன் போஸ்டின் ஒரு குறிப்பிடத்தக்க விடையிறுப்பாக இருந்தது.
அடாவடித்தனத்துடன் வக்கிரமான பிரிவினைவாதம் கலந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களது ஒரு கூட்டத்தின் கிழக்கு அலெப்போ ஆட்சி தான், இந்த "கனவின்" அடியில் இருந்த யதார்த்தமாகும். விமானத் தாக்குதல்களால் வெறும் இடிபாடுகளாக சீரழிக்கப்படுவதற்கு முன்னர், அந்நகரம் இத்தகைய போராளிகள் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டது, இவை தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் மற்றும் பொருட்களை அபகரித்து, இலாபத்திற்காக விற்பனை செய்ய துருக்கிக்கு எல்லை கடந்து அவற்றை கொண்டு சென்றன.
சர்வதேச பொதுமன்னிப்பு சபை அதன் மிக சமீபத்திய அறிக்கையில், பின்வரும் வார்த்தைகளுடன் இந்த "ஜனநாயக கனவை" வர்ணிக்கிறது: “அதிகாரத்தில் இருக்கும் ஆயுத குழுக்களின் நடவடிக்கைகளை விமர்சித்தாலோ அல்லது அவற்றில் சில குழுக்கள் நடைமுறைப்படுத்தி உள்ள கடுமையான விதிமுறைகளுக்கு கீழ்படிய மறுத்தாலோ தாங்கள் கடத்தி கொல்லப்படலாம் என்ற நிரந்த அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர்.”
“இன்று அலெப்போ மற்றும் இட்லிப் இல், ஆயுதமேந்திய குழுக்கள் போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஏனைய மீறல்களில் இருந்து விலக்கீட்டுரிமையுடன் சுதந்திர அதிகாரத்தைக் கொண்டுள்ளன,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. அந்த அறிக்கை விசாரணையற்ற படுகொலைகள் மற்றும் சித்தரவதைகளையும் ஆவணப்படுத்துகிறது, அதேவேளையில் இந்த "கிளர்ச்சியாளர்கள்" அங்கே குழந்தைகளின் தலைதுண்டித்தல் உட்பட அவர்களது குற்றங்களை அவர்களே பதிவு செய்து பெருமைபீற்றிக் கொள்கின்றனர்.
சிரிய அரசு அலெப்போவிலும் அந்நாட்டின் ஏனைய இடங்களிலும் இராணுவ வெற்றியை அனுபவிக்கிறது என்றால், அது வெறுமனே ரஷ்ய ஆயுத பலத்தால் மட்டுமல்ல. அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களை அமெரிக்கா அதன் பினாமிகளாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்திற்காக அது ஐந்தாண்டுகளுக்கும் அதிக காலமாக ஒரு போர் நடத்திய பின்னர், பல சிரியர்கள் அசாத் அரசின் ஒடுக்குமுறை மற்றும் ஊழலை ஒரு குறைந்த கொடூரமாக பார்க்கிறார்கள்.
கிழக்கு அலெப்போவின் வீழ்ச்சி மீது ஊடகங்கள் மற்றும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் விஷம பிரச்சாரம், டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கை மீது நடக்கும் கடுமையான உட்பகை மோதல்களால் உந்தப்பட்டுள்ளது என்பதும் முக்கியத்துவத்தில் குறைந்ததில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போக்கில் ட்ரம்ப் அறிவுறுத்துகையில், சிரியாவின் "பயங்கரவாதத்தை" எதிர்த்து போராடுவதில் அமெரிக்கா ரஷ்யாவுடன் தன்னை கூட்டு சேர்த்துக் கொள்ளக்கூடும் என்று அறிவுறுத்தி இருந்தார், மற்றும் சிரிய "கிளர்ச்சியாளர்களுக்கு" ஆயுதங்கள் வழங்கும் வாஷிங்டனின் கொள்கை மீதும் கேள்வி எழுப்பி இருந்தார். அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த பிரிவுகள் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ உந்துதலில் எந்தவித தணிவையும் ஆழமாக எதிர்க்கின்றன.
ட்ரம்பின் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகள், மத்திய கிழக்கில் சமாதானத்திற்கான ஒரு புதிய சகாப்தத்திற்குள் திரும்பும் என்று யாரேனும் நம்பினால், அவர் ஒரு திடீர் அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர் ஆகிறார். குடியரசு கட்சி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும் ஒரு பொருளாதார தேசியவாத கொள்கையை முன்னெடுத்துள்ளார் மற்றும் அதற்கு தயாரிப்பு செய்ய அமெரிக்க இராணுவ இராணுவத்தின் ஒரு பாரிய கட்டமைப்பைக் கோரியுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, மோதலுக்கு உறுதி பூண்ட சமீபத்தில் ஓய்வூபெற்ற தளபதிகள் அவரை சூழ்ந்திருக்குமாறு அவரே செய்துள்ளார். நான்கு நட்சத்திர பதவியிலிருந்த கடற்படை தளபதிகள் இரண்டு பேர், பாதுகாப்புத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடற்படையின் நான்கு நட்சத்திர பதவியிலிருந்த மூன்றாவது தளபதியான ஜோன் அலென், இத்தகைய அடுக்குகளுக்கு இடையே உள்ள சிந்தனைக்கு சமீபத்தில் குரல் கொடுத்தார். அலென், வாஷிங்டன் போஸ்ட் க்காக அக்டோபர் இறுதியில் துணை-தலையங்கம் ஒன்றை இணைந்து எழுதியிருந்தார், அதில் அவர் "மோதலைத் தீவிரப்படுத்துவது தான்" சிரியாவிற்கான தீர்வு என்றார். அசாத்தின் இராணுவ உள்கட்டமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு நம்பகமானரீதியில் அச்சுறுத்தல் விடுக்க 'விருப்பமுள்ள ஒரு கூட்டணியை' ஒன்றுதிரட்ட அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார்.
சிரிய இராணுவம் மீதான அமெரிக்க தாக்குதல் ரஷ்ய துருப்புகளைக் கொல்லும் என்பதை உணர்ந்துள்ள அலென் ஆலோசனை வழங்குகையில், "தூண்டிவிட்டு வரும் சிரிய உட்கூறுகளைத் தாக்குவதற்கான" வாஷிங்டனின் "வாய்ப்பை இது தவறவிடாதவாறு" செய்யும் என்றார்.
ட்ரம்ப் இன் ஜனாதிபதி பதவிகாலம், உலகப் போரை நோக்கிய முதலாளித்துவத்தின் கூடுதல் தீவிரப்பாட்டை உள்ளடக்கி இருக்கும் என்பதற்கு இதுபோன்ற வெறிபிடித்த இராணுவவாதம் ஓர் எச்சரிக்கையாகும்.
Bill Van Auken
15 December 2016
http://www.wsws.org/tamil/articles/2016/12-dec/alep-d17.shtml#

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts