Search This Blog

Sunday, 25 January 2015

2015ஆம் ஆண்டும், அதிகரித்துவரும் போர் அலையும்

2015 and the rising tide of war
the above image is taken from Internet
செவ்வாயன்று இரவு அவரது நாட்டின் நிலைமை தொடர்பான உரையில் ஜனாதிபதி பராக் ஒபாமா, புதிய நூற்றாண்டின் ஒன்றரை தசாப்தத்தில் குறுக்கீடில்லா போரின் 13க்கும் அதிகமான ஆண்டுகளில் அமெரிக்கா "புதிய பக்கத்தைத் திறந்துள்ளதாகவும்", ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் அதன் தலையீடுகளில் இருந்து "விலையுயர்ந்த படிப்பினைகளைப்" பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்
அமெரிக்க பொருளாதாரத்தின் மீதிருந்த "நெருக்கடி நிழல் அகன்றுவிட்டதாகவும், அதற்காக அதன் "ஆர்ப்பரிக்கும் தொழில்துறைக்கு" நன்றி கூற வேண்டுமென்றும், “மீட்சி" “அதிகளவிலான மக்களின் வாழ்வைத்" தொட்டுவிட்டதுடன், ஊதியங்கள் "இறுதியில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதுடன்" சேர்ந்து, அமெரிக்கா "பின்னடைவிலிருந்து எழுச்சி பெற்றுள்ளதாகவும்ஏமாற்றுத்தனமானதும் பொய்யானதுமான ஜனாதிபதியின்   இந்த வலியுறுத்தல்  எதார்த்தநிலையை போன்றே உள்ளது.
யுத்த போக்கிலிருந்து பின்வாங்குவது பற்றிய ஒபாமாவின் பழகி சலித்துபோன வாதங்கள், அவரது அந்த சொந்த உரையிலேயே பின்தொடர்ந்து வந்த கூற்றுகளால் பொய்யாக்கப்பட்டது. அதில் ஈராக் மற்றும் சிரியாவில் வெள்ளை மாளிகை ஐந்து மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய புதிய போரை உள்ளடக்கிய, முடிவில்லாமல் இராணுவ படைகளைப் பிரயோகிப்பதற்கு அங்கீகாரம் (AUMF) வழங்குவதை நிறைவேற்றுமாறு காங்கிரஸிற்கு விடுத்த அழைப்பு உள்ளடங்கி இருந்தது.  
தண்டனையிலிருந்து முழு விலக்கீட்டு உரிமையுடன் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ள புஷ் நிர்வாகத்தின் போது சித்திரவதை திட்டங்களைச் செயல்படுத்தி வந்த அமெரிக்க உளவுத்துறை முகமைகள் இனி சித்தரவதையில் ஈடுபடாது என்று அமெரிக்க ஜனாதிபதி போலியான வாதத்தை அளித்தார். சில மூச்சு அவகாசத்திலேயே, அவர் "பயங்கரவாத செவ்வாய்கிழமைகள்" என்றறியப்படும் வெள்ளை மாளிகை அமர்வுகளில் "படுகொலை பட்டியல்களின்" மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட டிரோன் ஏவுகணை தாக்குதல்களை "முறையான கட்டுப்பாடுடன்" பிரயோகிப்பதை முன் கொண்டு வந்தார். இத்தகைய இலக்கில் வைக்கப்பட்ட படுகொலைகள் மீதான ஒரு சமீபத்திய ஆய்வு, பாகிஸ்தானில் 41 தனிநபர்களைப் படுகொலை செய்யும் முயற்சியின் போக்கில், அமெரிக்க டிரோன்கள் 1,147 மக்களைக் கொன்றதை எடுத்துக்காட்டி இருந்தது.
அவருக்கு முன்னர் இருந்த ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் வார்த்தை ஜாலங்களையே எதிரொலித்து, “நம்பிக்கை மற்றும் மாற்றத்திற்கானமுன்னாள் பாதுகாவலர் அறிவித்தார்: “அமெரிக்காவிற்கும் மற்றும் நமது கூட்டாளிகளுக்கும் நேரடியான அச்சுறுத்தலை முன்வைக்கும் பயங்கரவாதிகளை அழிக்க, நான் பதவியேற்றதிலிருந்து நாம் சளைக்காமல் செய்துள்ளதைப் போல, நாம் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதைத் தொடர்வோம், அவர்களது வலையமைப்புகளை அழிப்போம், ஏகமனதாக செயல்படுவதற்குரிய உரிமையை நாம் கொண்டிருக்கிறோம்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த பூமியில்சர்வதேச சட்டத்தை தூக்கிவீசிவிட்டு, எந்தவொரு இடத்திலும், யார் மீதும் தாக்குதல்களைத் தொடுக்கும் உரிமையை, தொடர்ந்து வலியுறுத்துகிறது
"9/11க்குப் பின்னர் முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் நமது போர் நடவடிக்கை முடிந்துவிட்டது" என்ற  ஒவ்வொருவரிடமிருந்தும் கரகோசம் பெற்ற ஒபாமாவின் ஆரம்ப வரிகளே ஒரு அப்பட்டமான பொய்யாகும். அந்நாட்டில் இன்னமும் சுமார் 15,000 துருப்புகள் இருக்கின்ற நிலையில், சிறப்பு நடவடிக்கை படைகள் காபூலில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தேடல் மற்றும் அழித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த அமெரிக்க தளபதி, அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைப்புகளின் "நடவடிக்கையை நீடிப்பதைத்" தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக அறிவித்தார்.
கட்டவிழ்ந்துவரும் உலக நிலைமையின் உள்ளடக்கத்தில், புதிய பக்கத்தைத் திறந்திருப்பதைக் குறித்த ஒபாமாவின் வாதம் ஒரு புதிய சமாதான காலக்கட்டத்தை நோக்கி திறந்திருப்பதை அறிவுறுத்தவில்லை, மாறாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு பிரளயகரமான உலக போருக்குள் மனிதயினத்தை மூழ்கடித்த அதேவிதமான ஆழமடைந்துவரும் உலகளாவிய பதட்டங்களை நோக்கிய பின்னணியை  அறிவுறுத்துகிறது.
உண்மையில் ஒவ்வொரு கண்டத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய உலக போரைத் தூண்டிவிட அச்சுறுத்துகிற பொறுப்பற்ற இராணுவவாத தலையீடுகளில் ஈடுபட்டுள்ளது. 2015இன் முதல் மூன்று வாரங்கள் இத்தகைய அச்சுறுத்தல்களின் ஒரு தீவிரப்பாட்டை மட்டுமே கண்டுள்ளது.
அமெரிக்க ஆதரவுடனான கியேவ் ஆட்சியின் படைகளுக்கும் உக்ரேனின் கிழக்கில் உள்ள அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மரணகதியிலான சண்டை மீண்டும் தொடங்கியுள்ள நிலைமைகளின் கீழ், பெண்டகன் பாசிய போராளிகள் குழுக்கள் மேலாளுமை செலுத்தும் ஒரு படையான புதிய தேசிய பாதுகாப்புப்படைக்கு ஆலோசனை வழங்கவும், பயிற்சிகள் வழங்கவும் அந்நாட்டிற்கு அமெரிக்க துருப்புகளை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. ஏப்ரலில் இருந்து சுமார் 5,000 உயிர்களைப் பறித்துள்ள அந்த மோதலுக்கு ஒரு சமாதானமான தீர்வைப் பரிந்துரைத்த ரஷ்யாவின் பரிந்துரையை, ஒரு "ரஷ்ய ஆக்கிரமிப்பு திட்டம்" என்று கூறி அதை ஒபாமா நிர்வாகம் நிராகரித்துள்ளது.
ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பொருளாதாரம் சீரழிந்து போய்விட்டது" என்று பெருமையடித்துக் கொண்டே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவினால் ரஷ்யா மீது திணிக்கப்பட்ட தடையாணைகளால் உண்டாக்கப்பட்ட பேரழிவுகள் மீது அவர் குரூர திருப்திப்பட்டுக் கொண்டார்.
ரஷ்யா மீது ஒரு முடிவான புவிசார் அரசியல் தோல்வியைச் சுமத்துவதற்காக உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருக்குமாறு வைத்திருக்க வாஷிங்டன் தீர்மானகரமாக உள்ளது. அணுஆயுத போர் அபாயம் ஏற்பட்டாலும் கூட, இதை அது யுரேஷிய பெருநிலத்தின் மீது அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாக பார்க்கிறது.
ஆசியாவில், சோனி நிறுவனத்தின்  மீது வடகொரியா இணைய ஊடுறுவல் செய்ததென்ற அதன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் வட கொரியாவுடன், அதேவேளையில் சீனாவுடனான ஒரு மோதல் முயற்சியில், வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகிறது. பேச்சுவார்த்தைக்கு வந்த வட கொரியாவின் அழைப்பை அமெரிக்க அரசுத்துறை மறுத்தளித்து, இந்த இளவேனிற்காலத்தில் தென் கொரியாவுடன் கூட்டு இராணுவ ஒத்திகைகளுடன் முன்னோக்கி செல்வதன் மூலமாக, கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகரித்து வருகிறது
போர் முனைவுக்கு தலையேற்று வருகின்ற அதேவேளையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனித்து இல்லை. சிறிய ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் சொந்த நலன்களை வலியுறுத்தி வருகின்றன. ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டுமே பகிரங்கமாக இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதற்கு ஆதரவாக அவற்றின் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சமரசவாத பாசாங்குத்தனங்களைத் துறந்து வருகின்றன. பிரான்ஸோ மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் அதைக் கடந்தும் ஏகாதிபத்திய தலையீடுகளைத் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த பாரீசில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களைக் கைப்பற்றி வருகிறது. கனடிய துருப்புகள் ஈராக்கில் துப்பாக்கி சண்டைகளில் ஈடுபட்டுள்ளன, அதேவேளையில் ஆஸ்திரேலியாவோ தன்னைத்தானே வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" ஒரு ஆக்ரோஷமான கூட்டாளியாக அர்பணித்துள்ளது
சிரியா மற்றும் ஈராக்கில் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஒரு போராட்டத்தை நடத்தி வருவதாக ஒபாமா கூறிக் கொள்கின்ற அதேவேளையில், மத்திய கிழக்கில் பிரதான அமெரிக்க கூட்டாளியான இஸ்ரேல்முன்னர் வாஷிங்டனே செய்ததைப் போலசிரியாவில் அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அமைப்புக்கு உதவியும், ஆயுதபாணியாக்கியும் வருகிறது, அதனோடு ஒரு பிராந்தியம் தழுவிய போரைத் தூண்டிவிடும் நோக்கில் ஆத்திரமூட்டும் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
1914 மற்றும் 1939 போலவே, இந்த உலகந்தழுவிய இராணுவவாத எழுச்சியை உந்துச் சென்று கொண்டிருப்பது உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த, நீடித்த மற்றும் முறைப்பட்ட நெருக்கடியாகும், இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் அதன் போட்டியாளர்களது விலையில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள உந்தப்படுகிறது.
ரஷ்ய புரட்சியின் இணை-தலைவர் லியோன் டிரொட்ஸ்கி, போரும் அகிலமும் என்ற அவரது காலத்தால் அழியா அறிக்கையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், விவரித்ததைப் போல, போருக்கான அடிப்படை காரணம் உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் தங்கியுள்ளது, அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயப்பட்ட இயல்பிற்கும் மற்றும் முதலாளித்துவமும் உற்பத்திசாதனங்களிகளின் மீதான தனியார் சொத்துடைமையும் அது வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளில் தங்கியுள்ளது.
டிரொட்ஸ்கி எழுதினார், 1914இல் வெடித்த உலக போரானது "அதன் சொந்த உள்ளார்ந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையின் வரலாற்றில் மிகவும் பிரமாண்டமான நிலைமுறிவாகும். “தான் முதலாளித்துவ சமூகத்தை வழிநடத்தவும், அதன் பெயரைகூறிக்கொள்வதற்கும் மற்றும் அந்த  சமூகத்தை சுரண்டுவதையும் தனது கடமை எனக்கூறிக்கொண்டதன்", "வரலாற்று திவால்நிலைமையை" அது எடுத்துக்காட்டியது.  
முதலாளித்துவம், அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில், அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்க்க முயலும் அணுகுமுறையே" போர் ஆகும் என்றபோதினும், டிரொட்ஸ்கி தொடர்ந்து கூறுகையில், தொழிலாளர் வர்க்கம் "அதன் சொந்த அணுகுமுறையை, சோசலிச புரட்சியெனும் அணுகுமுறையைக்" கொண்டு அதை எதிர்க்க வேண்டியுள்ளது என்றார்.
இந்த வரிகள் எழுதப்பட்டு ஒரு நூறு ஆண்டுகள் ஆன பின்னர், முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு அணுஆயுத மூன்றாம் உலக போர் எனும் இன்னும் பெரும் பேரழிவுகரமான அச்சுறுத்தலுடன் மனிதயினத்தை எதிர்கொள்கிறது, இது 1914இல் டிரொட்ஸ்கியால் வரையப்பட்ட மாற்றீட்டை இன்னும் அதிக சக்தியோடும், அவசரத்துடனும் பிரயோகிக்க வேண்டியுள்ளது. பூகோளமயப்பட்ட முதலாளித்துவத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்ற பேரழிவிலிருந்து வெளியே வருவதற்கு, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின்  அடிப்படையில் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரே வழியாக உள்ளது
Bill Van Auken
23 January 2015
http://www.wsws.org/tamil/articles/2015/jan/150125_and.shtml

Monday, 19 January 2015

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு?

image taken from Internet
சென்ற வாரத்தில் பாரிஸில் சார்லி ஹெப்டோ அலுவகங்களின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரான்சினால் மட்டுமல்லாது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளாலும், ஒரு முற்றிலும் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காய் சிடுமூஞ்சித்தனமாக சுரண்டப்படுகின்றது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுடன்  (பிரெஞ்சு போலிஸின் மற்றும் இப்போது துருப்புகளின் பெருந்திரள் குவிப்பால் ஏற்கனவே இது வெளிப்படையாகியிருக்கிறது)  வெளிநாடுகளில்  (முதல் முன்னுரிமையாக மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில்)  போரை அதிகரிப்பதற்கான தயாரிப்புகளும் கைகோர்த்துச் செல்கின்றன.

துப்பாக்கிச் சூடுகள் குறித்த பொதுமக்களது அதிர்ச்சி மற்றும் அச்சத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கும், எந்த விமர்சனரீதியான கேள்விகளையும் ஒடுக்குவதற்குமான இந்த ஒத்திசைந்த ஏற்பாட்டு பிரச்சாரத்தில் பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அடிமைத்தனமிக்க ஸ்தாபக ஊடகங்கள் அத்தியாவசியமான உடந்தையாளர்களாய் இருக்கின்றன. முஸ்லீம்-விரோத மனோநிலையை தூண்டிவிடுவதற்கான குரூரமான முயற்சிகள் தொடங்கி பயங்கரச் செயல் புரிந்தோரை “மேற்கத்திய சுதந்திரங்களின்” எதிரிகளாக சித்தரிப்பதற்கான சிடுமூஞ்சித்தனமான முயற்சிகள் வரையிலும் (காணவும்: சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் கருத்து சுதந்திரம் என்னும் பாசாங்குத்தனம்), இந்த வெளிப்பாடுகள், அனைத்துக்கும் மேல், இந்த துப்பாக்கிச் சூடுகளுக்கான பிரதான அரசியல் பொறுப்பு யாருக்குரியது என்பதான எந்த ஆராய்ச்சியும் நடந்து விடாமல் தடுக்கின்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டவையாக இருக்கின்றன.

முக்கிய கயவர்கள் பலரையும் ஞாயிறன்று பிரான்சில் நடந்த உத்தியோகபூர்வ பேரணிக்குத் தலைமை கொடுத்த “உலகத் தலைவர்கள்” இடையேதான் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் பங்குபெற்றிருந்த அமெரிக்க தலைமையிலான “பயங்கரவாதத்தின் மீதான போரும்” பெரும்பாலும் முஸ்லீம் நாடுகளிலான அட்டூழியங்களும் தான், மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் மற்றும் ஆசியாவிலும் இளைஞர்களது ஒரு தலைமுறையை அந்நியப்படுத்தி ஆவேசத்துக்குள்ளாகியிருந்தது.

பிரான்ஸ்க்கு உள்ளேயே கூட, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோரது கொள்கைகள் புலம்பெயர் சமூகங்களில் அதீத மட்டங்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் ஏழ்மையையும் உருவாக்கி விட்டிருக்கிறது. இதனுடன் பர்கா மற்றும் முஸ்லீம் முக்காடுகள் மீதான தடை உள்ளிட்ட இஸ்லாமிய-அச்ச நடவடிக்கைகளும் சேர்ந்து வலது-சாரி இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆட்சேர்க்க வளமான ஒரு களத்தை உருவாக்கி விட்டிருக்கின்றன.

இருப்பினும் கூட, சென்ற வாரத் தாக்குதல்களுக்கு பிரான்சின் அரசு எந்திரம் குறைகூறத்தக்கது என்பதான ஒரு மிக உடனடியான உணர்வு நிலவவே செய்கிறது. சார்லி ஹெப்டோ மற்றும் ஒரு கோஷர் மளிகைக் கடை மீதான தாக்குதலை நடத்திய சதிகாரர்கள், அவர்களுக்கு விரித்திருந்த வலையில் இருந்து எப்படியோ தப்பி விட்டார்கள் என்று போலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள் அளிக்கும் விளக்கங்கள் ஒருவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

சார்லி ஹெப்டோ அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்திய செரிஃப் மற்றும் சாய்த் கௌச்சி சகோதரர்கள் இருவருமே பிரெஞ்சு அதிகாரிகளுக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாய் அறியப்பட்டிருந்தவர்களே ஆவர். அவர்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனாலும் கூட பின்தொடரப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

இருவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாக “அநேகமாக பின்தொடரப்பட்டிருந்தார்கள்” என்று சென்ற வாரத்தில் ஒப்புக் கொண்ட பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கசெனேவ், ஆனாலும் அவர்கள் ஒரு தாக்குதல் நடத்தவிருந்ததற்கான எந்த அறிகுறிகளும் இருந்திருக்கவில்லை என்பதாகக் கூறிக் கொண்டார். செரிஃப் 2005 இல் கைது செய்யப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவில் சேர்வதற்காக அவர் ஈராக்கிற்கு பயணம் செல்ல சதித்திட்டம் தீட்டிய குற்றம் உறுதி செய்யப்பட்டது. சாய்த் 2011 இல் ஏமன் பயணம் மேற்கொண்டு அரேபியத் தீபகற்பத்தில் அல்கெய்தாவிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதாக பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்தான தகவல்கள் கூறுகின்றன.

கோஷர் மளிகைக்கடையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அஹமெட் குலிபாலி, ஆயுதங்களைக் கொண்டு வழிப்பறி செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தார் என்பதுடன் பாரிஸில் தீவிர இஸ்லாமிய வட்டங்களில் சேர்ந்து விட்டிருந்தவராகவும் அறியப்பட்டிருந்தார். 2009 இல், சப்வே குண்டுவெடிப்புக் குற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்த ஸ்மெயின் எய்த் அலி பெல்காசெம்மை - இவர் அல்ஜீரிய ஆயுத இஸ்லாமியக் குழுவின் ஒரு உறுப்பினர் - தப்புவிக்க சதிசெய்ததாய் குற்றம்சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் செரிஃப் கௌச்சியும் கூட விசாரிக்கப்பட்டார், ஆனாலும் கூண்டிலேற்றப்படவில்லை. 2014 மார்ச் மாதத்தில் தான் குலிபாலி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.  

“பயங்கரவாதத்தின் மீதான போரில்” வழக்கமாய் காணக்கூடிய ஒரு நிகழ்வுவரிசையே சென்ற வார பாரிஸ் துப்பாக்கிசூடுகளது விடயத்திலும் தொடர்கிறது. 9/11 தாக்குதல்கள், போஸ்டன் நெடுந்தூர ஓட்ட குண்டுவெடிப்புகள் தொடங்கி இலண்டன் சுரங்கப்பாதை இரயில் மற்றும் மாட்ரிட் இரயில் நிலைய குண்டுவெடிப்புகள், சென்ற மாதத்தில் சிட்னியில் நடந்த காப்பி சிற்றுண்டி விடுதி முற்றுகை வரையிலும் முக்கிய ஏகாதிபத்திய மையங்களில் நடந்திருக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அல்லது அவற்றுடன் தொடர்புடைய ஏறக்குறைய எல்லோருமே அந்தந்த நாடுகளது பாதுகாப்பு முகமைகளுடன் விளக்கப்படாத மற்றும் சந்தேகத்துக்குரிய உறவுகளை கொண்டிருந்தவர்களாய் இருந்திருக்கின்றனர்.

"சார்லி ஹெப்டோ படுகொலைகளை சுற்றிய முக்கிய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் போகின்றன” என்ற தலைப்பிலான யூரோநியூஸ் கட்டுரை ஒன்று பிரெஞ்சு பாதுகாப்பு முகமைகள் சதிகாரர்களை நெருக்கமாய் கண்காணித்து வந்ததைத் தவறவிட்டது எப்படி என்று வினவுகிறது. “அதற்கு என்ன காரணமாய் இருக்கலாம் என்றால்” என்று அதுவே சொல்கிறது, “கடந்த காலத்தில் பலமுறை கண்டிருப்பதைப் போல, பிரெஞ்சுக்காரர்கள் பயங்கரவாதிகளை அவர்கள் முயற்சி செய்வதன் பக்கம் ‘திரும்ப’ச் செய்வதற்கு விரும்புகிறார்கள். கௌச்சி சகோதரர்களும் கூட இத்தகையதொரு அணுகுமுறையை பெற்ற நபர்களாக இருந்திருக்கலாம், ஆனாலும் கூட பாரிஸில் எவரொருவரும் இதனை ஒருபோதும் ஒப்புக் கொள்ளத் தயாராய் இருப்பதாகத் தெரியவில்லை, இத்தனைக்கும் இது ஒற்றுவேலையை எதிர்கொள்வதன் ஒரு ஏற்புடைய வடிவமாகவே இருக்கின்றபோதிலும். இப்போதில்லை.”

அரசு எந்திரத்திலான கூறுகளது செயலூக்கமான பங்கேற்பில்லை என்றாலும் கூட, அவை ஓசையெழுப்பாமல் உடந்தையாகவேனும் இல்லாமல் இந்த மூன்று பேர் மட்டும் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எல்லாம் கொண்டான ஒரு மிகப்பெரும் சதித்திட்டத்தை தீட்டி நடத்தியிருக்க முடியும் என்பது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. குலிபாலியின் நண்பியான ஹயாத் பூமேடியன் - இவரும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தேடப்படுபவர் - தப்பித்தது இன்னும் விசித்திரமாய் இருக்கிறது. விவரங்கள் தெளிவின்றி இருக்கின்ற அதேநேரத்தில், அவர் பிரான்ஸில் இருந்து ஸ்பெயினுக்குத் தப்பி ஓடி, அங்கேயிருந்து துருக்கிக்கு விமானத்தைப் பிடித்து, பின் அங்கிருந்து எல்லை கடந்து சிரியாவுக்குள் சென்றுசேரும் வரைக்கும் கண்டுபிடிக்கப்படாமல் தப்ப முடிந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் சேர்ந்து வேலை செய்வதென்பது ஒரு நெடிய வரலாறைக் கொண்டதாகும். இதில் மிகப் பயங்கரமானதென்றால் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக ஒசாமா பின் லாடன் மற்றும் அல்கெய்தாவின் முன்னோடிகள் உள்ளிட்ட ஜிகாதிஸ்டுகளுக்கு நிதியும், ஆயுதங்களும் மற்றும் பயிற்சியும் அளித்த சிஐஏ இன் மிகப்பெரும் நடவடிக்கையைக் குறிப்பிடலாம். நன்கறியப்பட்ட அல்கெய்தா ஆட்கள் நாட்டிற்குள் நுழைந்து, பயிற்சியெடுத்து 9/11 தாக்குதலை நடத்தி முடிக்க முடிந்ததான சூழ்நிலைமைகள் இன்றைய நாள் வரையிலும் முழு விளக்கமில்லாமலேயே தான் இருந்து கொண்டிருக்கின்றன.

வட ஆபிரிக்காவிலும் மற்றும் மத்திய கிழக்கிலுமான தனது காலனியாட்சி அபிலாஷைகளை பின்தொடரும்விதமாக, பிரெஞ்சு ஏகாதிபத்தியமானது 2011 முதலாக லிபியாவிலும் பின் சிரியாவிலும் அமெரிக்காவின் தலைமையிலான ஆட்சிகளை-மாற்றுகின்ற நடவடிக்கைகளில் முன்வரிசையில் இருந்து வந்திருக்கிறது. அல்கெய்தா தொடர்புடைய இஸ்லாமியப் போராளிகள் தான், நேட்டோ வான் படையின் ஆதரவுடன், லிபியத் தலைவர் மும்மார் கடாபியை பதவியை விட்டு அகற்றி படுகொலை செய்த தரைப் படைகளின் மையமாக இருந்தவர்கள், அவர்கள் தான் இப்போது சூழ்ந்திருக்கும் குழப்பத்தில் மேலாதிக்கத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களும்.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை அகற்றப் போர் புரிந்து கொண்டிருக்கும் “போராளிகள்” என்பதாகச் சொல்லப்படுபவர்களுக்கு -இவர்களில் மிகப் பெருவாரியானோர் இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள்- நிதி, ஆயுதம் மற்றும் பயிற்சியளிக்கும் அமெரிக்க தலைமையிலான பிரச்சாரத்தில் பிரான்ஸ் செயலூக்கத்துடன் பங்குபற்றி வந்திருக்கிறது. “பயங்கரவாதத்தின் மீதான போரில்” சமீபத்திய அத்தியாயத்தின் இலக்காயிருந்த ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) சிரியாவில் ஒரு பினாமிப் போருக்கான உருவாக்கமே ஆகும்.

லிபியா மற்றும் சிரியாவிலான பிரெஞ்சு நடவடிக்கைகளானவை, காலனி நாடுகளில் தனது அசிங்கமான வேலைகளை செய்யும் பொருட்டு வெளிநாட்டுக்கான படையில் (Foreign Legion) மிகவும் பிறழத்தக்க மனநிலையும் மற்றும் வன்முறையும் கொண்டதான கூறுகளைச் சேர்க்கக் கூடிய பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நெடிய, குற்றவியல் பாரம்பரியத்தின் வரிசையில் வருபவையாகும். சென்ற வார துப்பாக்கி சூடுகளில் அரசு எந்திரத்தின் பொறுப்பு எந்த மட்டத்திற்கு இருந்தது, ஏன், செயலூக்கத்துடனா அல்லது செயல்படாமல் இருந்ததன் மூலமா என்பதெல்லாம் நிச்சயமாக மூடி மறைக்கப்பட்டு விடும். தாக்குதல்கள் குறித்த எந்த உருப்படியான விசாரணையும் இருக்காது, ஏனென்றால் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் இராணுவ-உளவு எந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் புதிய போர்களுக்காய் தயாரிப்பு செய்வதற்குமாய் இத்தாக்குதல்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றன என்பதையே அப்படியானதொரு விசாரணை தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்துவதாக இருக்கும்.

Peter Symonds
13 January 2015

http://www.wsws.org/tamil/articles/2015/jan/150114_who.shtml

Sunday, 18 January 2015

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் “பேச்சு சுதந்திரம்" எனும் பாசாங்குத்தனம்

சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகங்கள் மீதான தாக்குதல் பொதுமக்களை அதிர்ச்சியூட்டி உள்ளது, அவர்கள் பாரீசின் மையத்தில் 12 பேரது பயங்கர மரணத்தால் பீதியுற்றுள்ளனர். துப்பாக்கிதாரிகள் அவர்களது ஆயுதங்களைக் கொண்டு சுடுவதையும், ஏற்கனவே காயப்பட்ட ஒரு பொலிஸ்காரரை அவர்கள் கொல்வதையும் காட்டும் வீடியோ படக்காட்சிகள், மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, அந்த புதன்கிழமை சம்பவங்களைக் குறித்து ஒரு அசாதாரணமான யதார்த்தத்தைக் காட்டியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் உடனடியாக, அரசும் ஊடகங்களும் பொதுமக்களின் அச்சம் மற்றும் குழப்பத்தைச் சுரண்டுவதற்கு முனைந்து வருகின்றன. மீண்டுமொருமுறை அரசியல் திவால்நிலைமை மற்றும் பயங்கரவாதத்தின் இன்றியமையாத பிற்போக்குத்தன குணாம்சம் அம்பலப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை கொடுங்கோன்மை மற்றும் இராணுவவாதத்திற்கு ஆதரவாக திருப்பிவிட பிரயோகிக்கும் அரசினது நலன்களுக்கு அது சேவை செய்கிறது. 2003 இல், புஷ் நிர்வாகம் ஈராக்கின் மீது படையெடுத்த போது, அமெரிக்காவிடமிருந்து பாரிய அரசியல் அழுத்தத்தின் முன்னிலையிலும், ஜனாதிபதி ஜாக் சிராக் தலைமையிலான அரசாங்கம் பிரெஞ்சு மக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக அந்த போரை எதிர்க்க நிர்பந்திக்க வேண்டிய நிலையில் இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதோ, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக பிரான்ஸைத் திருப்ப போராடி வருகின்ற நிலையில், பாரீஸில் நடந்த இந்த தாக்குதல் அவரது கரங்களில் சாதகமானதாகியுள்ளது.

இத்தகைய முயற்சிகளில் ஹோலாண்ட் ஊடங்களைச் சார்ந்திருக்க முடியும், அவை இதுபோன்ற சூழல்களில் அவற்றின் மொத்த சக்தியையும் உணர்வுபூர்வமாக உபாயங்கள் செய்வதிலும் மற்றும் பொதுமக்களின் அரசியல் நிலைநோக்கைப் பிறழச் செய்வதையும் நோக்கி திருப்பி விடுகின்றன. அரைகுறை உண்மைகளுடன் மற்றும் முற்றுமுதலான பொய்களுடன் தகவல்களை திறமையாக நசுக்குவதுடன் சேர்ந்து, பரந்த பொதுமக்களின் கீழ்மட்ட உள்ளுணர்வுகளுக்கு மட்டுமல்லாது அவர்களது ஜனநாயக மற்றும் கருத்துவாத உணர்வுகளுக்கும் அழைப்புவிடுவதை கணிப்பிட்டு கட்டுக்கதைகளை புனைகின்றன.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும், சார்லி ஹெப்டோ இதழ் மீதான தாக்குதல், பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலென்றும், இதழாளர்கள் அவர்களது சுதந்திரத்தை இழக்காமல் அல்லது அவர்களது உயிர் குறித்த பயமின்றி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு ஜனநாயக சமூகத்தில் அன்னியப்படுத்த முடியாத விதத்தில் அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. சார்லி ஹெப்டோ கேலிச்சித்திர ஓவியர்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் படுகொலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிகவும் புனிதத்திற்குரியதாக இருந்து வந்ததாக கூறப்படும் பேச்சு சுதந்திரத்தின் கோட்பாடுகள் மீதான ஒரு தாக்குதலாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விதத்தில் பார்த்தால், சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல், மேற்கத்திய "சுதந்திரங்களை" சகித்துக் கொள்ள முடியாத முஸ்லீம்களின் மற்றொரு அட்டூழியமாக தான் காட்டப்படுகிறது. இதிலிருந்து என்ன முடிவுக்கு வர முடிகிறதென்றால் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்"—அதாவது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா மீதான ஏகாதிபத்திய தாக்குதல்—ஒரு தவிர்க்கவியலாத அவசியமென்று ஆகிறது.

ஜனநாயக பாசாங்குத்தனத்தின் இந்த பெருங்கூத்துக்கு இடையே, அமெரிக்க இராணுவம், மத்திய கிழக்கில் அதன் போரினூடாக, குறைந்தபட்சம் 15 இதழாளர்கள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பாகும் என்ற உண்மையைக் குறித்து எந்த குறிப்பும் காட்டப்படுவதில்லை. “தாக்குதலின் கீழ் இருக்கும் பேச்சு சுதந்திரம்" மீது வழங்கப்பட்டு வருகின்ற பொருள்விளக்கத்ததில், அங்கே 2003இல் பாக்தாத்தில் அல் ஜசீரா அலுவலகங்கள் மீது வானிலிருந்து தரைக்கு செலுத்தும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து எதையும் குறிப்பிட அங்கே இடமில்லாமல் போய்விடுகிறது, அதிலேயும் மூன்று இதழாளர்கள் கொல்லப்பட்டார்கள், நான்கு பேர் காயமுற்றனர்.

அல்லது பாக்தாத்தில் வேலை செய்து வந்த புகைப்பட பணியாளர்கள் நமிர் நூர்-எல்தீன் மற்றும் ஓட்டுனர் சயித் சமாஹ் ஆகிய இரண்டு ராய்டரின் இதழாளர்கள் ஜூலை 2007இல் கொல்லப்பட்டது குறித்தும் எதுவும் எழுதப்படுவதும் இல்லை அல்லது சொல்லப்படுவதும் இல்லை. அந்த இரண்டு நபர்களுமே கிழக்கு பாக்தாத்தில் வேலைக்குப் பொறுப்பேற்றிருந்த போது, அமெரிக்க அப்பாச்சி துப்பாக்கிதாங்கிய விமானங்களால் திட்டமிட்டு இலக்கில் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ஒரு அமெரிக்க சிப்பாய் கோப்ரல் பிராட்லி செல்சியா மானிங்கிடமிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் விளைவாக—இரண்டு இதழாளர்களும் அத்துடன் ஒரு ஈராக்கிய குழுவினரும் கொல்லப்பட்ட இரத்தம் உறைய வைக்கும் படுகொலையின் ஒரு வீடியோவை —இது துப்பாக்கியேந்திய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது— அமெரிக்க மற்றும் சர்வதேச மக்களல் முதலில் பார்க்க முடிந்தது.

மேலும் விக்கிலீக்ஸ் பேச்சு சுதந்திரத்தின் நடைமுறையை பாதுகாக்க அமெரிக்காவும் ஐரோப்பாவும் எவ்வாறு செயல்பட்டுள்ளன? விக்கிலீக்ஸின் ஸ்தாபகரும் பிரசுரிப்பாளருமான ஜூலியன் அசான்ஜ் இரக்கமின்றி வழக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள முன்னணி அரசியல் மற்றும் ஊடக பிரபலங்கள் அவரை ஒரு "பயங்கரவாதி" என்று குற்றஞ்சாட்டியதோடு, சிலர் அவர் படுகொலை செய்யப்பட வேண்டுமென்றும் கூட பகிரங்கமாக அழைப்புவிடுத்தனர். அமெரிக்க மற்றும் ஸ்வீடன் உளவுத்துறை சேவைகளால் ஜோடிக்கப்பட்ட மோசடி "கற்பழிப்பு" வழக்குகளில் இன்னும் இழுக்கப்பட்டு வருகிறார். அவர் இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் புகலிடம் கோர நிர்பந்திக்கப்பட்டார், அந்த தூதரகத்தை விட்டு அவர் வெளியே வந்தால் அவரைப் பிடித்துக் கொள்ள பிரிட்டிஷ் பொலிஸ் தொடர் காவலில் வைக்கப்பட்டுள்ளது. செல்சியா மானிங், தேசத்துரோக குற்றத்திற்காக 35 ஆண்டுகள் தண்டனை பெற்று, தற்போது சிறையில் உள்ளார்.

இப்படித்தான் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மாபெரும் முதலாளித்துவ "ஜனநாயகங்கள்" பேச்சு சுதந்திரம் மற்றும் இதழாளர்களின் பாதுகாப்புக்கு அவற்றின் கடமைப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன!

அரசு மற்றும் ஊடகங்களால் சுழற்றிவிடப்படும் நேர்மையற்ற மற்றும் போலித்தனமான வனப்புரைகள், சார்லி ஹெப்டோவையும் படுகொலை செய்யப்பட்ட அதன் கேலிச்சித்திர ஓவியர்களையும் மற்றும் இதழாளர்களையும் பேச்சு சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தியாகிகளாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சாகச இதழியலின் போற்றுதலுக்குரிய ஜனநாயக பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாக தூக்கிப்பிடிக்க கோருகின்றன.

பைனான்சியல் டைம்ஸில் புதனன்று பிரசுரமான ஒரு கட்டுரையில் தாராளவாத வரலாற்றாளர் சைமன் ஷாமா, “சுதந்திரத்தின் ஜீவநாடியாக" உள்ள இதழியல் பாரபட்சமின்மையின் பெருமைமிகு பாரம்பரியத்தில் சார்லி ஹெப்டோவை நிறுத்துகிறார். பெருந்தலைவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் மீதும் அவர்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருந்த பதினாறாம் நூற்றாண்டுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட தலைசிறந்த ஐரோப்பிய நையாண்டி ஓவியர்களை அவர் நினைவுகூர்கிறார். 1500களில் டச் சுதந்திர போராட்டத்தை இரத்தத்தில் மூழ்கடித்த மூர்க்கமான அல்பாவின் கோமானும்; பிரெஞ்சு "சூரிய மன்னர்" பதின்நான்காம் லூயி; பிரிட்டிஷ் பிரதம மந்திரி வில்லியம் பிட்; மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோரும் அவர்களது ஒப்பற்ற இலக்குகளில் இடம் பெற்றிருந்தார்கள் என்று ஸ்சாமா நமக்கு நினைவூட்டுகிறார். “தேனீர் விடுதிகளிலும் மற்றும் ஓய்விடங்களிலும் காற்றோட்டமாக அமர்ந்து ஏளனத்திற்குரிய சொகுசான ஓநாய்களை வரையும், நையாண்டி அரசியலின் சுவாசம் மாறியுள்ளது, அந்த கேலிச்சித்தரிப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் பதிப்பிக்கப்படுகிறது,” என்று ஷாமா எழுதுகிறார்.

ஷாமா, சார்லி ஹெப்டோவை அதற்கு சம்பந்தமில்லாத ஒரு பாரம்பரியத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஷாமா குறிப்பிடும் தலைச்சிறந்த நையாண்டி ஓவியர்கள் அனைவரும் ஒரு ஜனநாயக அறிவொளியின் பிரதிநிதிகளாக இருந்தனர், அவர்களின் நையாண்டி கற்பனையை அவர்கள் பிரபுத்துவ செல்வாக்கினது சக்தி வாய்ந்த மற்றும் ஊழல்மிகுந்த பாதுகாவலர்களுக்கு எதிராக திருப்பி இருந்தனர். ஆனால் சிறிதும் தயவுதாட்சண்யமின்றி முஸ்லீம்களை இழிபடுத்தும் சித்திரங்களில் சார்லி ஹெப்டோ ஏழைகளையும், அதிகாரமற்ற பலவீனர்களையும் ஏளனப்படுத்தி இருந்தது.

சார்லி ஹெப்டோவின் அந்த இழிவார்ந்த, வெறுப்பூட்டும் மற்றும் கீழ்தரமான பாத்திரம் குறித்து அப்பட்டமாகவும், நேர்மையோடும் பேசுவதானால், அதன் நபர்களைப் படுகொலை செய்தவர்களை மன்னிக்க கூடாது தான். ஆனால் "நான் தான் சார்லி" என்ற முழக்கம் கையாளப்படுகையில், ஊடகங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் முழக்கமாக அது பலமாக ஊக்குவிக்கப்படுகையில், அரசு மற்றும் ஊடக பிரச்சாரத்தில் மூழ்கிப் போயிராதவர்கள் இவ்வாறு தான் பதிலளிக்க கடமைப்படுவர்: “நாங்கள் அந்த இதழ் மீதான வன்முறை தாக்குதலை எதிர்க்கிறோம், ஆனால் நாங்கள் 'சார்லியும்' அல்ல —அதனுடன் எங்களுக்கு பொதுவில் எதுவும் கிடையாது," என்பர்.

மக்கள் மத்தியில் மதவாத செல்வாக்கிற்கு எதிராக போராடுவது என்ன என்பது மார்க்சிஸ்டுகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மதவாத நம்பிக்கை உயிர்வாழ்வது என்பது பெருந்துன்பங்கள் மற்றும் பெரும் கஷ்டமான நிலைமைகளின் காரணத்தினாலேயாகும் என்ற புரிதலுடன் அந்த போராட்டத்தை நடத்துகின்றனர். மதத்தை ஏளனப்படுத்துவதல்ல, மாறாக அதை கார்ல் மார்க்ஸ் புரிந்து கொண்டு விமர்சித்தவாறு புரிந்து கொண்டு விமர்சிக்கப்பட்ட வேண்டும்:

“மதரீதியிலான அவலநிலை என்பது … நிஜமான அவலங்களின் வெளிப்பாடாகும், எனவே நிஜமான அவலங்களுக்கு எதிரான போராட்டமும் ஆகும். மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜீவனின் ஏக்கப் பெருமூச்சாக, ஓர் இதயமற்ற உலகின் இதயமாக, உயிர்ப்பில்லாத நிலைமைகளில் உயிருருவாக இருக்கிறது. அது மக்களின் போதைப்பொருளாக உள்ளது.

“மக்களின் கற்பனையான மனநிம்மதியாக உள்ள மதத்தை அகற்றுதல் என்பது அவர்களின் நிஜமான மகிழ்ச்சியை கோருவதைப் போன்றதாகும். நிலவும் நிலைமை தொடர்பான பிரமைகளைக் கைவிடுமாறு கோருவது, அந்த பிரமைகளை அவசியமாக கொண்டிருக்கும் அரசு விவகாரங்களைக் கைவிட கோருவதாகும். ஆகவே மதத்தின் மீதான விமர்சனம் என்பது, மதத்தின் ஒளிவட்டமாக விளங்கும் துன்பகரமான உலகத்தின் தோற்றுவாயை விமர்சிப்பதாக உள்ளது.” [Contribution to Critique of Hegel’s Philosophy of Law, in Marx and Engels Collected Works, Volume 3 (New York, 1975), pp. 175-76]

சார்லி ஹெப்டோவில் வெளிப்பாட்டைக் கண்டுள்ள முன்னாள்-இடது அரசியல் வெறுப்பின் ஆரோக்கியமற்ற சூழலில் இருந்து மார்க்சிசத்தைப் பிரிக்கும் இந்த புத்திஜீவித மற்றும் தார்மீக இடைவெளியைக் கண்டுகொள்வதற்கு, இத்தகைய வார்த்தைகளைத் தான் ஒருவர் வாசிக்க வேண்டியுள்ளது. அவர்களின் சிறுபிள்ளைத்தனத்திலும் மற்றும் பெரும்பாலும் முஸ்லீம் மதம் மற்றும் அதன் பாரம்பரியங்களைக் குறித்து ஆபாசமாக இழிவுபடுத்துவதிலும், அறநெறி மற்றும் புத்திஜீவித கருத்துக்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்களது கருத்துக்களில் அறிவொளி வழங்கக்கூடிய எதுவும் அங்கே இல்லை.

சார்லி ஹெப்டோவின் பல பல அட்டைப்படங்களில் வெளியாகி உள்ள சிடுமூஞ்சித்தனமான வெறுப்பூட்டும் முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்கள் பிரான்சில் வலதுசாரி பேரினவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதுடன், துணைபோயும் உள்ளன. சார்லி ஹெப்டோவினை பாதுகாக்கும் வழியில், அதன் கேலிச்சித்தரங்கள் அனைத்தும் "மிகவும் கேலிக்குரியவை" என்றும், அவை எந்த அரசியல் விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் வாதிடுவது முற்றிலும் அர்த்தமற்றதாகும். பிரெஞ்சு அரசாங்கம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் அதன் இராணுவ நிகழ்ச்சிநிரலை அதிகரிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக பெருமுயற்சி செய்து வருகிறது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, பிரான்ஸில் நவ-பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அரசியல் சூழலில், சார்லி ஹெப்டோ அரசியல்மயப்பட்ட முஸ்லீம்-விரோத உணர்வின் ஒரு வடிவம் வளர்வதற்கு உதவியுள்ளது, அது 1890களில் பிரான்சில் ஒரு பாரிய இயக்கமாக எழுச்சி கண்ட அரசியல்மயப்பட்ட யூத-எதிர்ப்புவாதத்திற்கு பெரிதும் பொருந்தியதன்மையை ஏற்கிறது.

முஸ்லீம்களைக் குறித்து ஒரேமாதிரியாக வஞ்சகமான படங்களை நிரப்பிக் கொடுக்கும் கொடூரமான மற்றும் கொச்சையான கேலிச்சித்திரங்களை அது பயன்படுத்தியதில், ஜேர்மனியின் சார்பாக ஒரு யூத அதிகாரி உளவுவேலைகளில் ஈடுபட்டதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டதற்குப் பின்னர், 1894இல் வெடித்த பிரபல டெரெஃபஸ் விவகாரத்தின் (Dreyfus Affair) போது, பிரான்ஸ் மூழ்கடித்திருந்த யூத-எதிர்ப்புவாத கிளர்ச்சிக்கு முட்டுக்கொடுப்பதில் ஒரு முக்கிய பங்காற்றிய மலிந்த இனவாத பிரசுரங்களையே சார்லி ஹெப்டோ நினைவுபடுத்துகிறது. மக்களிடையே யூத வெறுப்பைத் தூண்டிவிடுவதில், இழிபெயர்பெற்ற எடோர்ட் அடால்ஃப் ட்ரூமோன்ட்டால் பிரசுரிக்கப்பட்ட La Libre Parole [“பேச்சு சுதந்திரம்”] எனும் இதழ், பெரிதும் திறமையாக கேலிச்சித்திரங்களைப் பயன்படுத்தியது, அது பரிச்சயமான யூத-எதிர்ப்பு சாதனங்களைப் பயன்படுத்தியது. அந்த கேலிச்சித்திரங்கள் டெரெஃபஸ் மற்றும் அவரது பாதுகாவலர்கள், அதாவது மாபெரும் நாவலாசிரியரும் J’Accuse இன் ஆசிரியருமான எமில் சோலா போன்றவர்களுக்கு எதிராக குண்டர்களை ஏவிவிட்டு, பொதுக்கருத்தைத் தூண்டிவிடுவதில் சேவை செய்தது.

நீண்டநெடிய அரசியல் கோட்பாடுகளின் அடித்தளத்தில் உலக சோசலிச வலைத் தளம், சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கிறது மற்றும் சிறிதும் தயக்கமின்றி கண்டிக்கிறது. ஆனால் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் காரணமாக சார்லி ஹெப்டோவை ஒரு தியாகியாக சித்தரிப்பதில் நாங்கள் சேர்ந்து கொள்வதை நிராகரிக்கிறோம், மேலும் இந்த போலித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தை ஊக்குவிக்கின்ற பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிநிரலில் இருந்து இடையறாது விழிப்புடன் இருக்குமாறு நாம் எமது வாசகர்களை எச்சரிக்கிறோம்.
David North
9 January 2015 
http://www.wsws.org/tamil/articles/2015/jan/150114_free.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts