Search This Blog

Tuesday, 30 September 2014

ஐக்கிய நாடுகள் சபையில் வஞ்சகமும், ஏமாற்றுத்தனமும்

  இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டுஜனாதிபதி பராக் ஒபாமாஉலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிடபுதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் வந்தார்.
அந்த உரை வெற்றுத்தனமான ஓய்ந்துபோன முழக்கங்களுடன் குறைகூறல்கள்அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளோடு இணைந்த பகட்டுப்பேச்சின் ஒரு தொகுப்பாக இருந்ததுஅது இழுத்தடித்தசம்பிரதாயமான முறையில்ஒரு அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பாகநீண்ட மௌன இடைவெளிகள் அளிக்கப்பட்டு மற்றும் ஒரு பொருத்தமான வாதத்தை முன்வைக்க எந்தவொரு முயற்சியும் இல்லாமல்ஒரு உதட்டசைவாக வழங்கப்பட்டது.
ஆனால் அனைத்திற்கும் மேலாக அந்த உரை எவ்வகையில் வித்தியாசமாக இருந்ததென்றால்அதன் வலியுறுத்தல்களுக்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே முற்றிலும் தொடர்பற்றதாக இருந்ததுஒபாமாவின் பொய்கள் மிகவும் மோசமானதாகவும் ஆணவத்துடன் இருந்துஅவை ஒரு மூளைக்குழப்பத்திற்குரிய குணாம்சத்தை எடுத்திருந்தனஅதிகாரத்தில் இருப்பவர்களால் ஒரேயொரு உண்மையைக் கூட ஒப்புக் கொள்ள முடியாத புள்ளியை உலக அரசியல் நிலைமை எட்டியிருக்கின்ற போதுஅதுவே ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு நெருக்கடியின் ஓர் அசாதாரண மட்டத்தின் வெளிப்பாக இருக்கிறது.
ஒரு நாட்டின் எல்லைகள் மற்றொன்றால் மாற்றி வரையப்படக்கூடிய ஒரு உலகில்... வலிமைக்கே உரிமை இருக்கிறது என்ற ஒரு உலக கண்ணோட்டத்தைஒபாமா கண்டித்ததில்எல்லா பொய்களும்பாசாங்குத்தனமும் ஒன்றிணைத்து கூறப்பட்டனஅவர் அறிவித்தார், “அமெரிக்கா வித்தியாசமான ஒன்றுக்காக நிற்கிறதுஉரிமையே வலிமையை தருவதாக நாங்கள் நம்புகிறோம்அதாவது பெரிய நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தக் கூடாதுஅதாவது மக்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தேர்ந்தெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]
இந்த கருத்துஉலகின் மிகவும் வன்முறைமிகுந்த மற்றும் அச்சுறுத்தும் நாட்டின் பிரதிநிதியிடமிருந்து வந்ததாகும்அந்நாடு தான்எங்கெல்லாம் அதன் பொருளாதாரஅரசியல் அல்லது புவிமூலோபாய நலன்கள் ஆபத்தில் இருக்கிறதோ அங்கே இராணுவரீதியில் தலையிட அதற்கு கட்டுப்பாடில்லாத உரிமை இருப்பதாக வலியுறுத்திநேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறிமுன்கூட்டி போர்தொடுப்பதை அதன் வெளிநாட்டு கொள்கையின் அஸ்திவாரமாக கொண்டுள்ளது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது எழுந்ததில் இருந்துஅமெரிக்கா அதன்விருப்பம் போல சிறிய மற்றும் பெரிய நாடுகளின் மீது அதன் விருப்பத்தைத் திணிக்க மற்றும் அச்சுறுத்த தனக்குத்தானே உரிமை எடுத்துக் கொண்டுள்ளதுகடந்த கால் நூற்றாண்டு,குறிப்பாகஉலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒரு முடிவில்லாத மற்றும் தீவிரமான தொடர் யுத்தங்களைபடையெடுப்புகளைஇரகசிய நடவடிக்கைகளை மற்றும் குண்டுவீச்சுக்களைக் கண்டுள்ளதுஇந்த காலகட்டத்தில் இருந்த அதன் இராணுவ நடவடிக்கைகளில்நூறாயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகிறது
ஒருவர்ஏனையவைகளோடு சேர்த்து, 1989 பனாமா படையெடுப்பு, 1991இல் ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர், 1992-93இல் சோமாலியாவில் தலையீடு, 1994இல் ஹைட்டி மீது படையெடுப்பு, 1998இல் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சு, 1999இல் சேர்பியாவுக்கு எதிரான போர், 2001இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003இல் ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்ஒபாமாவின் கீழ்அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஒரு போருக்குத் தலைமை வகித்துள்ளது,சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் நோக்கில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டதுமற்றும் ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான்யேமன் மற்றும் சோமாலியாவில் ஆளற்ற விமான டிரோன் தாக்குதல்களை நடத்தியது
உலகைக் கட்டுப்படுத்தும் அதன் உந்துதலில்அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை ஒரு புதிய பேரழிவுகரமான உலக யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறதுஒபாமாவின் முடிவுரை இந்த வலியுறுத்தலுடன் தொடங்கியது: “இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது இருந்த உலக போர் நிழல் நீங்கிவிட்டதுபிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறைக்கப்பட்டுள்ளது. "வாஷிங்டனும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு ஆயுதமேந்திய முகாமிற்குள் திருப்ப தொடங்கியுள்ள நிலையில் மற்றும்மேற்கு மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் விளிம்புக்கு உலகைக் கொண்டு வர உக்ரேனின் உள்நாட்டு யுத்தத்தைஇந்த நெருக்கடி அவர்களின் சொந்த உருவாக்கமாகும்பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் இது கூறப்படுகிறது.
அடுத்த வெறும் ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர்ஒபாமா மாஸ்கோவிற்கு எதிராக தெளிவாக இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை அறிவித்தார். “ஒருங்கிணைந்த தற்காப்புக்கு எங்களின் பொறுப்புறுதியை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மற்றும் இதற்காக எங்களின் நேட்டோ கூட்டாளிகளையும் நாங்கள் வலியுறுத்துவோம்," என்றார்.
ஆசியாவில்வாஷிங்டன் ஓர் ஆக்ரோஷமான இராஜாங்கபொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலை சீனாவிற்கு எதிராக பின்பற்றி வருகிறது.மேலும் சிரியாவில் புதிய யுத்தம் ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் சுற்றி வளைக்க அச்சுறுத்துவதுடன்அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் சிரிய ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு (ஈரான் மற்றும் ரஷ்யா)இடையே ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறதுஒபாமாவின் வாதத்திற்கு நேரடியாக முரண்பட்ட விதத்தில்பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு முன்னொருபோதும்  இல்லாதளவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது.
அவரது உரையின் பிரதான பகுதிக்கு வந்தால்வெளிவேடத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக என்றுஒரு முடிவில்லா "தலைமுறையுத்தத்தைத் தொடங்கியுள்ள ஒபாமா, “ஒரு பிரச்சினை மாற்றி ஒரு பிரச்சினையில்வெவ்வேறு நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட விதிகள் பற்றிய ஒரு புத்தகத்தை நாம் சார்ந்திருக்க முடியாது," என்றார்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால்யுத்தத்தை வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துவதை மற்றும் நாடுகள் மற்ற நாடுகளின் உள்நாட்டு போர்களில் தலையிடுவதைத் தடுக்கும்.நா சாசனம் இனியும் பொருந்தாது என்பதையே அது குறிப்பிடுகிறது.
அடுத்து அவர் ஈராக் மற்றும் சிரியாவில் நிலவும் பேரழிவுகளை விபரிக்க சென்றார்முஸ்லீம் உலகின் "தீவிரவாத வன்முறை புற்றுநோய்என்று எதை அவர் குறிப்பிட்டாரோ அதையே இந்த பேரழிவுக்கு காரணமாக சாட்டிவிட்டார்ஆனால் அப்பிராந்தியத்தின் பேரழிவுக்கான பொறுப்பு பெரிதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே தங்கியிருக்கிறது என்பது அதை அவதானிக்கும் ஒவ்வொருவருக்குமே நன்றாக தெரியும்.
ஒரேமூச்சில் ஒபாமா அறிவித்தார், “மத்திய கிழக்கு முழுவதிலும் சுன்னி மற்றும் ஷியாவிற்கு இடையிலான பினாமி யுத்தங்கள் மற்றும் கொடூர நடவடிக்கைகளாலேயே அந்த பேரழிவு உருவாக்கப்பட்டது என்பதில் உடன்படுவதற்கு இதுவே நேரமாகும்." அதேவேளையில் அடுத்ததாக அவர் பிரஸ்தாபித்தார், “ISIL பயங்கரவாதிகளுக்கும் [ஷியா சார்ந்தமற்றும் அசாத் ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிர்பலமாக சிரிய எதிர்த்தரப்பிற்கு [அதிகளவில் சுன்னி முஸ்லீம்களை கொண்டதுஅமெரிக்காநம்முடைய கூட்டாளிகளுடன் சேர்ந்துஅவர்களுக்கு ஆயுதமேந்த உதவி வருகிறது மற்றும் பயிற்சி அளித்து வருகிறது."
ஒபாமாவின் 45 நிமிட உரைக்குள் நிறைந்திருந்த அத்தனை பிரமாண்ட பொய்களையும் தொகுத்தளிப்பது இங்கே சாத்தியமல்லஆனால் உக்ரேனிய நெருக்கடி குறித்து அவர் கூறியதே அவரது கருத்துகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை நிரூபணம் செய்கிறது.  
அவர் கூறினார், “இதுதான் அங்கு நடந்ததுஉக்ரேனிய மக்கள் பரந்த போராட்டங்களில் ஒன்றுதிரண்டு சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்ததும்அவர்களின் ஊழல்மிகுந்த ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடிவிட்டார்கியேவ் அரசாங்க விருப்பத்திற்கு எதிராககிரிமியா இணைத்துக் கொள்ளப்பட்டது.ரஷ்யா கிழக்கு உக்ரேனுக்குள் ஆயுதங்களை அனுப்பியதுஅது வன்முறைமிக்க பிரிவினைவாதிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஒரு மோதலையும் தூண்டி வருகிறது."
நிச்சயமாகஅந்த "பரந்த போராட்டங்களுக்குஅமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியுதவி வழங்கப்பட்டுஒத்து ஊதப்பட்டன என்பதுடன்நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரேனிய யூதர்களின் பாரிய படுகொலைக்கு ஒத்துழைத்த உக்ரேனியர்களை பெருமைப்படுத்தும் ஆயுதமேந்திய பாசிசவாதிகளால் அந்த போராட்டங்கள் தலைமை தாங்கப்பட்டன.
ரஷ்யாவை ஆதரித்த அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டார் என்பதுடன்அவருக்கு மாற்றாக அங்கே நவ-நாஜிக்கள் மற்றும் அதிதீவிர-தேசியவாதிகளைக் கொண்டசட்டவிரோத அரசாங்கம் நிறுவப்பட்டதுஅது அந்நாட்டின் கிழக்கு பகுதியில் குடியிருந்த பெரும்பான்மையினரை புறக்கணித்தது.
அதைத்தொடர்ந்து கிழக்கு உக்ரேனில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆயிரக் கணக்கானவர்கள்அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய இராணுவம் மற்றும் பாசிச-மேலாதிக்கம் கொண்ட போராளிகள் குழுக்களின் கரங்களால் கொல்லப்பட்டார்கள்அவை ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை முற்றுகை இட்டன.
கடந்த மாதம் தான்மத்திய கிழக்கில் இருக்கும் வாஷிங்டனின் கூட்டாளிஇஸ்ரேல்காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி, 2,200க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்ததுஅதில் பரந்த பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.
இன்னும் அதிகமாக திகிலூட்டுவதைக் கூறுவதே கடினமாக இருக்கிறது,அதாவது ஒபாமாவின் வலியுறுத்தல்களுக்கும் மற்றும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது அவருக்கே முற்றிலும் தெரியும்,அப்படியில்லையென்றால் அவர் யதார்த்தத்திலிருந்து மிகவும் துண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றாகும். இந்த நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புகிறார்அமெரிக்க ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை மற்றொரு உலக யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற அதேவேளையில்அதன் கட்டுப்பாட்டையும் இழந்திருப்பதற்கு இந்த உரையை ஒரு மைல்கல்லாக எதிர்கால வரலாற்றாளர்கள் மிக சரியாக திரும்பி பார்ப்பார்கள்.
Barry Grey
25 September 2014
http://www.wsws.org/tamil/articles/2014/sep/140927_dec.shtml

Friday, 26 September 2014

அமெரிக்கா சிரியாவிற்குள் விமானத் தாக்குதல்களை தொடங்குகிறது

ராக்கை ஒட்டியுள்ள சிரியாவின் எல்லை நெடுகிலும் ISISஇன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசுஇலக்குகள் மீதான மற்றும் ரக்கா நகரத்தின் மீதான குண்டுவீச்சுடன்அமெரிக்கா செவ்வாயன்று அதிகாலை சிரியாவிற்குள் பல பேரழிவுகரமான மற்றும் தொடர்ச்சியான விமான தாக்குதல்களை தொடங்கியதுசிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிமாற்ற நடவடிக்கையை அதிகரிப்பதற்கு போலிக்காரணமாக இருக்கும் ISIS மீதான இந்த தாக்குதல்கள்மத்திய கிழக்கிலும் மற்றும் அதைக் கடந்தும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத யுத்தம் விரிவாக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
பெண்டகன் பத்திரிகை தொடர்பு செயலர்ரியர் அட்மிரல் ஜோன் கெர்பி அந்த புதிய வான்வழி போரை ஒரு சிறிய அறிக்கையில் அறிவித்திருந்தார். “அமெரிக்க இராணுவமும் மற்றும் கூட்டணி நாடுகளின் படைகளும்,போர்விமானங்கள்குண்டுவீசிகள் மற்றும் டோமாஹாக் தரைவழி தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றைப் பிரயோகித்து சிரியாவில் உள்ள ISIL [ISIS]பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை எடுத்து வருவதாக," குறிப்பிட்டார்பொதுமக்களுக்குத் தெரிவிப்பதை அலட்சியப்படுத்தும் விதத்தில்ஜனாதிபதி ஒபாமா எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லைஎவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
சிரியாவிற்குள் நடத்தப்படும் வான்வழி நடவடிக்கை கடந்த ஆறு வாரங்களில் ஈராக் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களின் அளவையும் வெகுவாக கடந்திருப்பதாகபெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.அமெரிக்க கடற்படை கப்பல்களிலிருந்து ஏவப்பட்ட கப்பற்படை ஏவுகணைகள்அத்துடன் போர்விமானங்கள் மற்றும் டிரோன்களிலிருந்து செலுத்தப்பட்ட குறிப்பிட்ட-இலக்கைத் தாக்கும் குண்டுகள் ஆகியவற்றைப் பிரயோகித்துமுதல் ஒருசில மணிநேரங்களிலேயே குறைந்தபட்சம் 20இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. ISISஇன் இராணுவ மையங்கள்ஆயுத வினியோக தளங்கள்கிடங்குகள்முகாம்கள் மற்றும் கட்டிடங்களை அத்தாக்குதல்கள் இலக்கில் வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கூட்டாளிகளான சவூதி அரேபியாஜோர்டான்பஹ்ரெய்ன்,கட்டார்மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய குறைந்தபட்சம் நான்கு அரபு நாடுகள் அமெரிக்க போர்விமானங்களுடன் இணைந்து செயல்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றனஉலகில் மிகக் கொடூர கொடுங்கோலாட்சிகளின் மத்தியில் இருக்கும்எதேச்சதிகார மத்திய கிழக்கின் முடியாட்சிகளுடன் அது கூட்டணி சேர்ந்துள்ளது என்ற உண்மையேவாஷிங்டன் குறிப்பிடும் அதன் புதிய யுத்தத்திற்கு பரந்த ஆதரவு இருக்கிறது என்ற வாதங்களைப் பொய்யாக்கிவிடுகின்றன.
அந்த விமானத் தாக்குதல்கள்அமெரிக்காவிற்கு ஒருபோதும் ஒரு அச்சுறுத்தலாக இருந்திராத ஒரு நாட்டிற்கு எதிரான ஒரு சட்டவிரோத யுத்த நடவடிக்கையாகும்ஒபாமா நிர்வாகம் அந்த குண்டுவீச்சை ஒரு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் ஆமோதிப்பு கூட இல்லாமல்மற்றும் சிரிய அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பிற்கு எதிராகவும் தொடங்கியதுசிரிய அரசாங்கம் ISISக்கு எதிராக சண்டையிடுவதில் வாஷிங்டனுக்கு ஒத்துழைக்க சம்மதித்திருந்ததுமீண்டுமொருமுறை,அமெரிக்கா ஒரு தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது—இந்த நடவடிக்கையைத் தான் பிரதான குற்றச்சாட்டாக கொண்டு,இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய நூரெம்பேர்க் விசாரணைகளில்,ஜேர்மன் நாஜி தலைவர்கள் வழக்கிற்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.
அமெரிக்க நியாயப்படுத்தல்களை முகமதிப்பாக அப்படியே ஒருவர் எடுத்துக் கொண்டாலும் கூடபிற்போக்குத்தனமான ISIS இஸ்லாமியவாதிகளோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது முந்தைய யுத்த குற்றங்களின் ஒரு நேரடி விளைபொருளாக இருக்கிறார்கள். 1980களில் ஆப்கானிஸ்தானில் CIAஇன் இரகசிய போர், 2003இல் ஈராக்கிய படையெடுப்புமற்றும் 2011இல் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆகியவை அதில் உள்ளடங்கும்உண்மையில்இன்றைய குண்டுவீச்சில் சேர்ந்திருக்கும் இதே கூட்டாளிகள் தான்—சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகள்—கடந்த மூன்று ஆண்டுகளாக அசாத்தைக் கவிழ்க்க சிரியாவிற்குள் ISIS மற்றும் இதர இஸ்லாமிய போராளிகளுக்கு நிதியுதவியும்போர் பயிற்சிகளும் மற்றும் ஆயுத உதவிகளும் அளித்து வந்தவர்கள்.
வாஷிங்டனின் விளக்கங்கள் அல்லது சாக்குபோக்குகளின் மீது எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாதுசவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கின் கூட்டாளிகள் சிரியாவிற்கு எதிரான போரில் மும்முரமாக இணைந்திருக்கின்றன ஏனென்றால் அமெரிக்காவினது நோக்கம் ISISஐ அழிப்பதல்லமாறாக மத்திய கிழக்கில் ஈரானின் பிரதான கூட்டாளியான அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதாகும்ஈரானை அதன் பரம-விரோதியாக கருதும் சவூதி அரேபியாஓராண்டுக்கு முன்னர் சிரியாவிற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் அதன் வான்வழி யுத்த திட்டத்தைக் கடைசி தருணத்தில் இரத்து செய்தபோதுஒபாமா நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது.
சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் குறித்து நிர்வாகத்தின் ஓர் அதிகாரிநியூ யோர்க் டைம்ஸில் கருத்து தெரிவிக்கையில், ISIS-கைவசமிருக்கும் பகுதிகளின் மீதான ஆரம்ப தாக்குதல்களைசிரிய ஆட்சி சாதகமாக்கிக் கொள்வதற்கு அனுமதிக்காதென தெளிவுபடுத்தினார். “பிராந்தியங்களை அசாத் மீண்டும் உரிமைகோரிப் பெறுவதை எளிமையாக்க எங்களுக்கு திட்டமில்லை," என்று தெரிவித்த அவர்அதற்காக பயன்படுத்தப்படவிருக்கும் முறைகளை வெளிப்படுத்தவில்லைசிரியாவில் குண்டுவீச்சைத் தொடங்கியுள்ள நிலையில்சிரிய அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு எதிரான வான்வழி போருக்குத் திரும்புவதற்கு,போலிக்காரணமாக ஒரு சம்பவத்தை ஜோடிக்கவும் அமெரிக்கா முற்றிலும் தகைமை பெற்றிருக்கிறது.
அசாத் ஆட்சி பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை கடந்த வாரங்களில் ஒபாமா நிர்வாகம் புதுப்பித்திருப்பதும் ஏதோ தற்செயலானதல்லசிரியா அதன் இரசாயன ஆயுதங்கள் மற்றும் ஆலைகளை மூடிவிட்டது என்ற உண்மைக்கு இடையிலும்அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரிஎவ்வித ஆதாரமும் இல்லாமல்அது எதிர்ப்புகள் வசமிருக்கும் கிராமங்களுக்கு எதிராக குளோரின் வாயுவைப் பயன்படுத்தி இருப்பதாக இப்போது வாதிடுகிறார்ஓராண்டுக்கு முன்னர்டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கூத்தாவில் நரம்புகளைத் தாக்கும் விஷவாயு தாக்குதலை அசாத் அரசாங்கம் நடத்தியது என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்(பின்னர் இந்த குற்றச்சாட்டு மதிப்பிழந்து போனது), அமெரிக்கா சிரியா மீது குண்டுவீசும் நிலைப்பாட்டிற்கு வந்திருந்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் துன்பத்திலிருக்கும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறும் ஒபாமா நிர்வாகத்தின் வாதங்கள்கொடூரமான நகைச்சுவையாகும்.ஈராக்கில் 2003 அமெரிக்க படையெடுப்பு ஆழமாக அந்நாட்டை நிலைகுலைத்ததுஅதில் நூறாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்மில்லியன் கணக்கானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள்அத்துடன் அப்பிராந்தியம் முழுவதிலும் கடுமையான குறுங்குழுவாத பதட்டங்கள் தூண்டிவிடப்பட்டனஅமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்ட மூன்றாண்டுகால சிரிய உள்நாட்டு யுத்தம்மற்றுமொரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கியது.
சமீபத்திய இராணுவ தலையீட்டின் விளைவுகளும் குறைந்த பேரழிவுகளாக இருக்கப் போவதில்லைஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவார்கள்மில்லியன் கணக்கானவர்கள் வெளியே நிர்பந்திக்கப்படுவார்கள்அத்துடன் எஞ்சியிருக்கும் சிரியாவின் சமூக மற்றும் ஸ்தூல உள்கட்டமைப்புகளும் இடிபாடுகளாக ஆக்கப்படும்.
அதுவே முடிவாக இருக்கப் போவதும் இல்லைசிரியாவிற்கு எதிரான யுத்தம் என்பது அசாத்தின் ஆதரவாளர்கள்—ஈரான் மற்றும் ரஷ்யா—மற்றும் அத்துடன் சீனாவுடனும் அமெரிக்க இராணுவ மோதல்களுக்கு முன்னோடியாக இருக்கிறதுஅதன் வரலாற்று பொருளாதார வீழ்ச்சியால் உந்தப்பட்டுஅமெரிக்க ஏகாதிபத்தியம் எரிசக்தி வளம்மிகுந்த மத்திய கிழக்கிலும்மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும்அதன் மேலாதிக்கத்தை அதிகரிப்பதற்காகஓர் உலகளாவிய மோதலுக்கு களம் அமைத்து கொண்டுஒரு தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் ஒப்புதலின் ஒரு சாயல் கூட இல்லாமல் அல்லது அமெரிக்க மக்களுக்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் ஒபாமா நிர்வாகம்சிரியா மீதான தாக்குதல்களைத் தொடங்கி உள்ளதுஅது நிதியியல் பிரபுத்துவத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மேலாதிக்கம் அத்தியாவசியமாக இருக்கிறதென்பதற்காக அதற்காகவே ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறதுஅன்னிய நாடுகளின் மீது இராணுவவாதத்தைத் தொடுப்பதென்பதுஉள்நாட்டின் சமூக பதட்டங்களை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தைக் கட்டமைப்பதுடனும் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையுடனும் கைகோர்த்து செல்கிறதுஇராணுவம் மற்றும் பொலிஸிற்கு முடிவில்லாமல் வளங்கள் வாரியிறைக்கப்படுகின்ற அதேவேளையில் அத்தியாவசிய பொதுச் சேவைகள் வெட்டப்பட்டு வருகின்றன.
தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்திய வன்முறையின் வேகம்புரட்சிகர மேலெழுச்சிகளுக்கு அடித்தளத்தைத் தயாரித்து வருகின்ற அதே பூகோளமயப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியால் உந்தப்பட்டிருக்கிறது.இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் காலங்கடந்த இலாப அமைப்புமுறைக்கு முடிவு கட்டசோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில்சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசரமான அவசியமாகும்.
By Peter Symonds
23 September 2014
http://www.wsws.org/tamil/articles/2014/sep/140926_usla.shtml

Thursday, 25 September 2014

சிரியா மீதான குண்டுவீச்சும், முடிவில்லா அமெரிக்க யுத்தமும்

மீண்டுமொருமுறை அமெரிக்க இராணுவ எந்திரம்மத்திய கிழக்கின் ஒரு பாதுகாப்பற்ற நாட்டின் மீதுஇந்த முறை சிரியாவின் மீதுக்ரூஸ் ஏவுகணைகளைச் செலுத்திகுண்டுகளை வீசியிருக்கிறது. 2003இல் ஈராக்கிற்கு எதிராக நடத்திய "அதிரடி-ஆக்கிரமிப்புமற்றும் 2011இல் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடத்திய "மனிதாபிமானயுத்தம் போலவேவாஷிங்டன் பொய்களின் அடிப்படையில் அமெரிக்க மக்களை ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குள் பலவந்தமாக தள்ளுகிறது.
அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த சமீபத்திய வெடிப்பில் அநேகமாக எது மிகவும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் வேறுபட்டு இருக்கிறதென்றால்,அமெரிக்க ஜனாதிபதி முற்றிலும் மேம்போக்கான முறையில்வாஷிங்டன் இன்னுமொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதென அறிவித்ததுதான்.
பராக் ஒபாமா செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் புல்வெளியில் ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்னதாக வெறும் மூன்று நிமிடங்கள் பேசினார். “உலகம் இதுவரை அறிந்திராத மிகச்சிறந்த இராணுவம்என்ற பாராட்டுடன் தொடங்கிஅவர் வழங்கிய சுருக்கமான கருத்துக்கள்,அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் இராணுவ தலையீடுகளை,நியாயப்படுத்துவது தேவையற்றது என்பது மட்டுமல்லவிவரிப்பதற்கு கூட கடமைப்பட்டிருப்பதாக உணரவில்லை என்பதைத்தான் தெளிவுபடுத்தியது.அவற்றை பொதுமக்கள் வெறுமனே ஏதோ வாழ்வின் நிரந்தர உண்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரையில்குண்டுவீச்சு தொடங்குவதற்கு முன்னரே,ஐந்து-வார தேர்தலுக்கு-முந்தைய விடுமுறைக்காக அது வெகுதூரம் நகரை விட்டோடிவிட்டதுபோர் தொடுப்பது மீதான அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை அது முற்றிலுமாக கைத்துறந்து விட்டிருக்கின்ற அதேவேளையில்வாக்குப்பதிவின்போது இந்த மிக முக்கிய கேள்வி ஒரு பிரச்சினையாகிவிடாமல் தடுப்பதற்காக அது வேலை செய்து வருகிறது.
ஜனநாயக கட்டுப்பாடு குறித்தும் மற்றும் மக்கள் ஆதரவு இல்லை என்ற சாக்குபோக்குகளுக்கு மத்தியிலும்அனைத்து நிஜமான முடிவுகளும் அரசின் மிக சக்திவாய்ந்த பிரிவுகளால்பரந்த இராணுவ-உளவுத்துறை அமைப்பால் எடுக்கப்படுகின்றது என்பது அதிகளவில் மிகத் தெளிவாக இருக்கிறது.குறிப்பிடத்தக்க விதத்தில்சிரிய யுத்தம் குறித்த முதல் பொது அறிவிப்பு வெள்ளை மாளிகையிலிருந்து வரவில்லைமாறாக பெண்டகனிலிருந்தான் வந்துள்ளது.
ஒபாமா இந்த கொலைகார அமைப்பின் வெறும் ஒரு ஊதுகுழலாக சேவை செய்கிறார்அத்துடன் தரைப்படை துருப்புகளைக் கொண்டு செல்லப் போவதில்லை என்ற அவரது தொடர்ச்சியான வாக்குறுதிகளோதளபதிகள் அவர்களின் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருகையில் விரைவிலேயே ஓரங்கட்டப்பட உள்ளன.
மேலும் ஒரு நாட்டிற்கு எதிராக யுத்தம் தொடங்குவதென்பது ஏறத்தாழ வழக்கமானஒரு முடிவில்லாத மற்றும் அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தொடர்ச்சியான அம்சங்களில் ஒன்றாகிவிட்டது என்ற உணர்வு அங்கே இத்தகைய நடவடிக்கைகளில் நிலவுகிறதுஇந்த கடிவாளமற்ற இராணுவவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பின்தொடர்வதில் மட்டும் ஒரு கருவியாக இருக்கவில்லை,மாறாக சமூக ஸ்திரமின்மையை ஒழுங்குமுறைப்படுத்தவும்முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே மிக சமூகரீதியில் துருவமுனைப்பட்டுள்ள நாட்டில் கிளர்ந்தெழும் ஆழ்ந்த பதட்டங்களை வெளியே நோக்கி திருப்பிவிடவும்ஒரு கருவியாக இருக்கிறது.
செவ்வாயன்று அவரது சுருக்கமான அறிக்கையில் ஒபாமா, "நமது நண்பர்கள் மற்றும் பங்காளிகளான சவுதி அரேபியாஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஜோர்டன்பஹ்ரெய்ன்மற்றும் கட்டார்," ஆகியவற்றுடன்"தோளோடு தோள் சேர்ந்து நிற்பதில் பெருமைப்படுவதாகஅவரே அறிவித்தார்அவை சிரியாவிற்கு எதிராக அமெரிக்க விமான குண்டுவீச்சில் சிறிய ஒத்துழைப்பு பாத்திரங்களை வகித்தன.
அவர்களின் நண்பர்களைப் தெரிந்தால் அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்வாஷிங்டன்மத்திய கிழக்கின் அரச ஒட்டுண்ணிகள் மற்றும் விபச்சாரர்களுடன் "தோளோடு தோள் சேர்த்து" “பயங்கரவாதத்திற்கு"எதிரான யுத்தத்திற்கு செல்கிறதுஅவர்கள் சமீபத்திய காலம் வரையில் இப்போது இலக்கில் வைக்கப்பட்டிருக்கும் இதே "பயங்கரவாதிகளுக்கு"நிதியளித்து பிரதான வள்ளல்களாக சேவை செய்து வந்தார்கள்.
ஒபாமாவால் அமெரிக்க யுத்தத்திற்குப் பின்னால் அணிவகுக்க செய்யமுடிந்த ஒரே அரசுகள் அந்த நான்கு முடியாட்சிகளாகும்அவை சவுதி அரேபியா உட்பட பெரிய எண்ணெய் பெருநிறுவனங்களின் துணைநிறுவனங்கள் என்பதற்கு சற்றே மேலதிகமாக இருக்கின்றன,அவற்றின் வழக்கமான தலையைத் துண்டித்து கொல்லும் நடவடிக்கைISISக்கு ஒரு உத்வேகமாக சேவை செய்கிறதுஅத்துடன் ஐந்தாவதுஅதாவது ஜோர்டன்அது இஸ்ரேலின் ஒரு வாடிக்கை அரசாக செயல்படுகிறதுஊடகங்களால் ஒபாமாவிற்கான ஒரு "அதிரடி வெற்றியாக"புகழப்படும் இந்த இழிந்த கூட்டணிவாஷிங்டனின் புதிய யுத்தத்தினது முற்றிலும் ஊழல்மிகுந்த மற்றும் சட்டவிரோத குணாம்சத்தை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
பெருநிறுவன-கட்டுப்பாட்டில் உள்ள சில ஊடகங்கள்இந்த தலையீடு துல்லியமாக சிரியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்டமுந்தைய விமான தாக்குதல்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் ஒதுங்கிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்ட ஓராண்டிற்குப் பின்னர் வருவதைக் குறிப்பிட்டுக் காட்டி கவலைப்படுகின்றனஓராண்டுக்கு முந்தைய அந்த தாக்குதல்முற்றிலுமாக வேறு போலிக்காரணத்தின் அடிப்படையில்அதாவது சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி அவரது சொந்த மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற அடிப்படையில் தொடங்கப்படுவதாக இருந்ததுஆனால் அந்த பொய் பின்னர் மதிப்பிழந்து போனது.
மக்களின் எதிர்ப்பை முகங்கொடுத்ததாலும்பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பு அதன் சர்வதேச வேஷத்தை அகற்றியதாலும்யுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்க காங்கிரஸ் மறுத்ததாலும்ஒபாமாசிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பது மற்றும் ஈரானின் அணுஆயுத திட்டங்களின் மீது பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய மாஸ்கோவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கையை ஏற்க நிர்பந்திக்கப்பட்டார்.அப்போதிருந்துவெள்ளை மாளிகையும் பெண்டகனும்இப்போதைய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பெருநிறுவன ஊடகங்களால் திரும்ப திரும்ப கூறப்படும் ஒரு புதிய பொய்களின் தொகுப்புடன் நியாயப்படுத்தப்பட்ட அவர்களின் யுத்தத்திட்டங்களை மறுதிருத்தம் செய்து வந்துள்ளன.
வெள்ளை மாளிகைபெண்டகன்அரசுத்துறை அல்லது ஊடகங்களால் அது குறித்து எதுவுமே கூறப்படவில்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது என்ற மூலக்கூற்றே இந்த புதிய அமெரிக்க யுத்தத்தின் ஒரு தெளிந்த மதிப்பாய்வு செய்வதற்கான மதிப்பார்ந்த தொடக்க புள்ளியாக உள்ளது.
அமெரிக்க விமான தாக்குதல்களின் பிரதான இலக்கான அதாவது ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை கொடுக்கவில்லை என்று சமீபத்திய வாரங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்த நிலையில்நிர்வாகம் திடீரென இதுவரையில் அறியப்படாத பயங்கரவாத பிரிவான குராசான் குழு" (Khorasan Group)சிரியாவில் இருப்பதாகவும்அதன் திட்டங்கள் "அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில்இருப்பதாக செய்திகள் கிடைத்திருப்பதாகவும்அதுவொரு உடனடி அபாயத்தை முன்னிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.தொலைக்காட்சியில் பேசும் தலைவர்களும்கைக்கூலிபெறும் பாதுகாப்புத்துறை நிபுணர்களும் அந்த குராசான் அபாயம் எனப்படுவதை,அது நீண்டகாலமாகவே இருந்த ஒன்றாகவும் மற்றும் அதுபற்றி நன்கு அறிந்திருந்ததாகவும் அதை ஓர்வெல்லியன் பாணியில் குறைகூறிதமது ஒரேமாதிரியான பிரதிபலிப்பை காட்டியுள்ளனர்.
யதார்த்தம் என்னவென்றால் இப்போதைய யுத்தம் அப்பிராந்தியத்தில் முந்தைய அமெரிக்க தலையீடுகளின் பேரழிவுகர விளைவுகளிலிருந்து நேரடியாக வளர்கிறதுஈராக்கில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பின் போதுஈராக்கிய சமூகத்தை நாசப்படுத்தியமை மற்றும் நூறு ஆயிரக்கணக்கான அந்நாட்டு மக்களைப் படுகொலை செய்தமை இரண்டுமே அதில் உள்ளடங்கும்அதேபோன்ற பேரழிவு,வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஒத்துஊதப்பட்ட மற்றும் ஆதரிக்கப்பட்ட ஆட்சி-மாற்றத்திற்கான ஒரு குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தம் மூன்றாண்டுகளாக சிரியா மீதும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
ISIS என்பது மிகப்பரந்தளவிற்கு சிரியாவில் அமெரிக்க தலையீட்டின் நேரடி விளைபொருளாகும்அதுஅதற்கு முன்னர் லிபியாவில் போலவேஆட்சி-மாற்ற யுத்தத்தில் அதன் தரைப்படை துருப்புகளாக குறுங்குழுவாத இஸ்லாமிய ஆயுதக்குழுக்களை பலமாக சார்ந்திருந்ததுஅமெரிக்க உளவுத்துறைக்கு ISISஇல் உள்ள முன்னணி நபர்களை தெரியும் என்பதுடன்,அவர்களுடன் சேர்ந்து அது வேலை செய்திருக்கிறதுஅவர்களின் குற்றங்களும் மற்றும் அட்டூழியங்களும் CIAஇன் அழுக்கு யுத்தங்களின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி உள்ளன.
இந்த ஆயுதக்குழுக்களது நடவடிக்கைகள் ஈராக்கில் சுன்னி மக்களின் கிளர்ச்சியுடன் ஒற்றோடு ஒன்றிணைந்தபோதுஅமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட ஈராக்கிய பாதுகாப்பு படைகளைச் சிதைக்க மற்றும் அந்நாட்டின் பெரும் பகுதிகளில் கட்டுப்பாட்டை இழக்க இட்டுச் செல்கிறது. இங்குதான் ISISஇன் நிகழ்ச்சிநிரல் வாஷிங்டனுடன் மோதலுக்கு வருகிறது.
இருந்தபோதினும்அமெரிக்க தலையீட்டின் பிரதான நோக்கம் ஓராண்டுக்கு முன்னர் என்னவாக இருந்ததோ அதுவே தான்அதாவது மூலோபாயரீதியில் முக்கியமான மற்றும் எண்ணெய் வளம்மிகுந்த மத்திய கிழக்கின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை அழியாது காப்பாற்றி வைப்பது,மற்றும் டமாஸ்கஸின் பிரதான கூட்டாளிகளுக்கு எதிராகஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராகஇன்னும் அதிக பேரழிவு யுத்தங்களுக்குத் தயாரிப்பு செய்வது ஆகிய நோக்கத்துடன்அசாத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்ப்பதும் மற்றும் அமெரிக்க-கட்டுப்பாட்டைக் கொண்ட கைப்பாவை ஆட்சியை அங்கே கொண்டு வருவதும் ஆகும்.
சிரியாவிற்கு எதிராக குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ள அதே நிர்வாகம்ஒரேநேரத்தில்ரஷ்யா மற்றும் சீனாவுடனான யுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதில் வாஷிங்டனின் அணுஆயுத கையிருப்புகளை மேம்படுத்த ட்ரில்லியன் டாலர் திட்டத்தையும் தொடங்கி வருகிறது.
இந்த அபிவிருத்திகள் முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் தொடங்கியதற்குப் பின்னர் பார்த்திராத அளவுக்கு ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் ஒரு மீளெழுச்சியின் பாகமாக உள்ளனதற்போதைய மோதல் விரிவடைந்து வருவதானதுமனிதகுலத்தை ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலக யுத்தத்திற்குள் இழுத்துச் செல்லும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கு மற்றும் உலகெங்கிலும் கட்டவிழ்ந்துவரும் சம்பவங்கள்,நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்"சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்"—மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்"யுத்தத்திற்கு எதிரான போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்பணிகளும் ஆகிய தீர்மானங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த நிரூபணமாக உள்ளன.
இந்த ஆவணங்களைக் கவனமாக ஆராய்ந்துசோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை கட்டியெழுப்புவதில் இணைய முடிவெடுக்குமாறு நாங்கள் எமது வாசகர்களை வலியுறுத்துகிறோம்அதிகரித்துவரும் யுத்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் ஒரே வழிவகையாக முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே போராடி வருகின்றன.
Bill Van Auken
24 September 2014
http://www.wsws.org/tamil/articles/2014/sep/140925_thep.shtml

Wednesday, 24 September 2014

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

Foreword to The Russian Revolution and the Unfinished Twentieth Century

முன்னுரை


டேவிட் நோர்த்தின் வெளிவரவிருக்கும் புத்தகம்ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் (416பக்கங்கள்; ISBN 978-1-893638-40-2),மெஹ்ரிங் நூலகத்தில் உங்கள் பிரதிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் ஆவார்.
* * * * * *
1914 ஆகஸ்ட்டில் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டானது அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஒரு தனித்துவமான காலகட்டம் என்பதில் வரலாற்றாளர்கள் மத்தியில் ஒரு பரந்த உடன்பாடு இருக்கின்றதுஆனால் எப்பொழுது நூற்றாண்டு முடிவுற்றது அல்லது ஒரேயடியாய் முடிவுற்றிருக்கிறதா என்ற கேள்வியானது தீவிர விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றதுஇந்த கருத்துமோதலானதுஎடுத்துக்கொள்ளப்பட்ட 100 ஆண்டு காலப்பகுதியினை பொதுவாக கால அளவீடு செய்வது பற்றியதல்ல. 1900கள் முடிந்துவிட்டன நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பது தெளிவானதேஇரண்டாம் பத்தாண்டின் மத்தியில் இருப்பினும் இப்போதும்கூடஎமது உலகமானது இருபதாம் நூற்றாண்டின் ஈர்ப்புக்குரிய செல்வாக்கு எல்லைக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்கிறது. வரலாற்றாளர்கள் கடந்த நூற்றாண்டினை சினத்துடன் திரும்பிப்பார்ப்பார்களாயின்அதற்கான காரணம் மனிதகுலமானது அரசியல்பொருளாதாரம்மெய்யியல் மற்றும் கலைத்துறை செயற்களங்களில் கூட அதனது முடிவுசெய்யப்படாத கருத்துமோதல்களில் இன்னும் போராடிக் கொண்டிருப்பதேயாகும்.
அண்மைக்காலம் வரைக்கும்வரலாற்றாளர்கள் இருபதாம் நூற்றாண்டானது வெற்றிகரமானவகையில் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது என்று மிதமான அளவில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1989ல் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவும் 1991டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் முதலாளித்துவ வெற்றிவாத அலையை இயங்கும்படி செய்வித்ததுடன், அது சிறு எதிர்ப்புடன் உலகம் முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்களை சூழ்ந்ததுபேராசிரியர் குழாம்அண்மைய செய்தித்தாள் தலைப்புச்செய்திகள் மற்றும் ஆசிரியர் தலையங்க கட்டுரைகளுக்கு அணி பொருந்தும் வகையில் வரலாறு பற்றிய அதன் தத்துவங்களைக் கொண்டுவருவதற்கு விரைந்து மேற்சென்றது.
1989-91ன் நிகழ்வுகளுக்கு முன்னர்கல்விசார் நிபுணர்களின் பரந்த பெரும்பான்மையானதுகிட்டத்தட்ட இதுதான் சோசலிசம் என்று சமன் படுத்திப் பார்த்த சோவியத் ஒன்றியம் என்றென்றைக்கும் நீடித்திருக்கும் என அனுமானித்தனர்ஸ்ராலினிசம் பற்றிய லியோன் டரொட்ஸ்கியின் விமர்சன ஆய்வுடன் பரிச்சயப்பட்டவர்கள் கூடகிரெம்ளின் அதிகாரத்துவத்தின் ஆட்சியானது சோவியத் தொழிலாள வர்க்கத்தால் தூக்கி எறியப்படாவிட்டால்அது தொழிலாளர் அரசைக் கலைத்துவிடும் மற்றும் முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுக்கும் என்ற அவரது முன்கணிப்பையதார்த்தபூர்வமற்ற மற்றும் ஸ்ராலின் வென்றடக்கிய அவரின் எதிரிகள்தமக்குத்தாமே நியாயம் கற்பிக்கும் புலம்பல் எனக் கருதினர்.
ஸ்ராலினிச ஆட்சிகள் தாமே கலைந்து கொண்டிருக்கையில், ஆயினும்பேராசிரியர்கள் மற்றும் சிந்தனைக்குழாமின் ஆய்வாளர்கள் அமெரிக்கா அதன் பனிப்போர் பகைவர்கள் மீது திரும்பப் பெறவியலாத வெற்றியை ஈட்டியிருப்பதோடுமட்டுமல்லாமல்முதலாளித்துவமானது அதனது சோசலிச நிரந்தர எதிரியை வரலாற்று சாத்தியங்களின் செல்வாக்கெல்லையிலிருந்து துடைத்து அழித்துவிட்டிருந்தது எனப் பறைசாற்றுவதற்கு அவசரப்பட்டனர்அந்த கணத்தின் உயிர்ப்பானது, National Interest என்ற இதழில், “வரலாற்றின் முடிவா?” என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டஅமெரிக்காவின் சிந்தனைக் குழாமான Rand இன் ஆய்வாளர்,பிரான்சிஸ் புக்குயாமா ஆல் எழுதப்பட்ட கட்டுரையில் அதன் முற்றமுழுதான வெளிப்பாட்டைக் கண்டதுஅவர் எழுதினார்:
நாம் சாட்சியாய் இருக்கப்போவது வெறும் குளிர் யுத்தத்தின் முடிவுக்குமட்டுமல்லஅல்லது போருக்குப் பிந்தைய வரலாற்றின் குறிப்பிட்ட காலப்பகுதியை கடந்து செல்லுதலுக்கு அல்லமாறாக வரலாற்றின் முடிவு என்றவாறாக ஆகும்அதாவது,மனிதகுலத்தின் கருத்தியல் பரிணாமத்தினதும் மற்றும் மனிதத்தன்மையான அரசாங்கத்தின் முற்றுப்பெற்ற வடிவமாக மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தின் உலகமயம் என்பதன் இறுதிப்புள்ளியுமாகும். [1]
புக்குயாமாவிற்கு நேர்மையாக இருப்பதெனில்எதிர்காலம் தொல்லைகள் இல்லாததாகவும் அமைதிவாய்ந்ததாகவும் விளங்கும் என்று அவர் வாதிடவில்லைஆயினும்தாராண்மை முதலாளித்துவ ஜனநாயகம் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் முறையற்றவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும்மனிதகுலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமவளர்ச்சியின் அர்த்தத்தில்கடந்து செல்லப்படமுடியாத ஒரு நிறைவான முன்னுதாரணத்தை பிரதிநிதித்துவம் செய்கிறதுஎன்பதில் இனியும் ஒரு சந்தேகம் இருக்க முடியாது என்று அவர் வாதிடுகிறார்முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பத்தகுந்த அறிவார்ந்த மற்றும் அரசியல் மாற்றீடு இல்லை என்ற பொருளில் வரலாறானது முடிந்து” விட்டது என்கிறார். 1992இல் வெளியிடப்பட்ட புத்தகத்தில் அபிவிருத்திசெய்யும் அவரது வாதத்தில் புக்குயாமா எழுதுகிறார்:
நமது பாட்டனார் காலத்தில்விவேகம் உள்ள மக்கள் பலர் களிப்பூட்டும் சோசலிச எதிர்காலத்தை முன்கூட்டிப் பார்த்தனர்,அதில் தனிச்சொத்துடைமையும் முதலாளித்துவமும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கும் மற்றும் அதில் அரசியலும் கூட ஏதோ ஒருவகையில் வெற்றிகொள்ளப்பட்டிருக்கும். இன்றோஅதற்கு மாறாகஎமது சொந்த உலகைவிட மிகச்சிறந்ததாய் இருக்கும் உலகை அல்லது அடிப்படையில் ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவம் அல்லாத ஒரு எதிர்காலத்தை கற்பனை செய்வதில் தொல்லைகளை எதிர்கொள்கிறோம்அந்தக் கட்டமைப்பிற்குள்ளேஒருவேளை பல விஷயங்கள் முன்னேற்றம் அடையக்கூடும்தான்: வீடில்லாதோருக்கு வீடு வழங்க முடியும், சிறுபான்மையினருக்கும் பெண்களுக்குமான வாய்ப்பை உத்திரவாதப்படுத்த முடியும், போட்டியிடும் தன்மையை முன்னேற்றுவிக்க முடியும் மற்றும் புதிய வேலைகளை உருவாக்க முடியும்இதேபோல் நாங்கள் எமக்கு இப்போது தெரிந்த உலகத்தைவிட முக்கியமாக மோசமானதொரு எதிர்கால உலகத்தையும் கற்பனை செய்யமுடியும். அங்கு தேசியஇனஅல்லது மத சகித்துக்கொள்ளாத்தன்மை திரும்பி வருவதையும் அல்லது நாம் யுத்தத்தால் சூழப்பட்ட நிலையும் அல்லது சுற்றுச்சூழல் சிதைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் எம்மால் இப்போது இருப்பதைவிட அடிப்படையில் வித்தியாசமானஅதேவேளை அதைவிட சிறந்த ஒரு உலகத்தை வரைந்துகொள்ளமுடியாது. ஏனைய மற்றும்மேலோட்டமாய் சிந்திக்கப்பெற்ற காலங்கள்தாங்கள்தான் சிறந்தவை என நினைத்தன, தாராளவாத ஜனநாயகத்தைவிட சிறந்ததாக இருந்திருக்கவேண்டியது என நாம் உணர்ந்த, மாற்றீடுகளை தேடுவதிலிருந்து, ஏதோஒருவகையில் நாங்கள் இந்த முடிவிற்கு வந்து சேர்ந்துவிட்டோம்.” [2]
புக்குயாமாவின் ஆய்வு முதலாளித்துவ அரசியல் வெற்றிவாதம் மற்றும் அதி மெய்யியல் அவநம்பிக்கைவாதம் இரண்டும் சேர்ந்ததாகும்புக்குயாமா புத்தகம் ஒவ்வொன்றுடனும் ஒரு புரொசாக் (மன அழுத்தத்திற்கான மருந்து -Prozacஎடுப்பதற்கான மருத்துவர் குறிப்பையும் சொருகுதல் வெளியீட்டாளருக்கு பொருத்தமுடையதாக இருக்கும்அனைத்துவிதமான உள்நோக்கங்கள் மற்றும் காரணங்களை பொறுத்தவரைஅதை அடையக்கூடியது நல்லது என்றால்மனிதகுலத்தின் எதிர்காலம் என்பது மிகவும் மங்கலாக இருக்கிறதுஆனால் புக்குயாமாவின் கருதுகோள் எத்துணை யதார்த்தபூர்வமானதுஹெகலிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றதாக அவர் கூறிக்கொண்டாலும் இயங்கியல் பற்றிய அவரது கிரகிப்பு மிகவும் மட்டுப்பட்டதுமுதலாளித்துவமானதுமோதல் மற்றும் நெருக்கடியை  உருவாக்கிய உள்ளார்ந்த மற்றும் முழுமையாயப் பரவியுள்ள முரண்பாடுகளை ஒருவாறு  தீர்த்துவிட்டது மற்றும் வெற்றிகொண்டுவிட்டது என்று அது எடுத்துக்காட்டக்கூடும் என்றால்வரலாறு முடிந்துவிட்டது என்ற கூற்று அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்ஆனால்அத்தகைய ஆணித்தரமான முடிவை புக்குயாமா தவிர்த்தும்கூட விட்டார்முதலாளித்துவம் சமூக சமத்துவமின்மை மற்றும் அது உருவாக்கிய அதிருப்தியால் கொள்ளைநோயால் பீடிக்க்கப்பட்டுள்ளது என்று அவர் உறுதிப்படுத்துகிறார். “சரியற்ற எதிரெதிர் இயங்குமுறையை (அதாவது சமூக சமத்துவமின்மையைஉணர்தலுடன் ஏற்பட்ட அதிருப்தியின் சாத்தியமானது,முதலாளித்துவம் மற்றும் தாராண்மை ஜனநாயகத்திற்கு ஒரு மாற்றீடை இடதிலிருந்து[3] கண்டுகொள்ளும் முயற்சிக்கு மூலமாக அமையும் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்வரலாற்றின் முடிவு பற்றிய புக்குயாமாவின் பிரகடனத்தில் பின் என்னதான் எஞ்சியுள்ளது?
அமெரிக்க வரலாற்றாளர் மார்ட்டின் மாலியா (1924-2004), புக்குயாமாவின் தத்துவம் மறுக்கப்பட முடியாதது என்று புரிந்து கொண்டார்.“பாசிசம்  மற்றும் கம்யூனிசம் இவை இரண்டினதும் பிரமைகளை  வெற்றிகொண்டுவிட்ட பின்னர்வரலாறானது இறுதியில் சந்தை ஜனநாயகம் என்ற பாதுகாப்பான துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது என்ற வெற்றிவாதப் பேச்சு” பற்றி அவர் எச்சரிக்கிறார்.மாலியா, வரலாற்றின் முடிவு குறித்த ஒரு பிந்தைய-மார்க்சிச (post-Marxist) கண்ணோட்டத்தின் செல்தகைமை பற்றி சந்தேகங்களை…”[4] வெளிப்படுத்துகின்றார். முதலாளித்துவமானது அதன் வரலாற்று பகைஉணர்வு கொண்ட முன்னறிகுறி காட்டும் தீமைகளில் இருந்து ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என்று அஞ்சுகிறார். “சோசலிச சிந்தனையானது சமத்துவமின்மை இருக்கும்வரை நிச்சயமாய் நம்மோடு இருக்கும்உண்மையில் அது மிக நீண்டகாலமானதாகும்.” இவ்வாறுமாலியா வாதிடுகிறார்சோசலிச அபிலாஷைகளின் இருப்பினை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரே வழிசோவியத் அனுபவத்தின் அடிப்படையில் சோசலிசம் இயங்காது என்பதை வலியுறுத்துவதாகும்இதுதான் சோவியத் துயரம் என்பதன் ஆய்வுப்பொருளாகும். 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்துபோனது 1917 அக்டோபர் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும். போல்ஷிவிக் கட்சி சாத்தியமற்றதொன்றை முயற்சி செய்ததுஅதாவது முதலாளித்துவம் அல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவதற்குஇதுதான் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பேராபத்தான வரலாற்றுத் தவறாக இருந்தது.
முழுநிறைவான சோசலிசத்தின் தோல்வி என்பது முதலில் தவறான இடமான ரஷ்யாவில் அது முயற்சிக்கப்பட்டது என்பதிலிருந்து எழவில்லை, மாறாக சோசலிச கருத்துள் உள்ளிருந்தே எழுகிறதுஇந்த தோல்விக்கான காரணம் முழு முதலாளித்துவம் அல்லாத்தன்மை என்ற வகையில் சோசலிசம் அதன் உள்ளியல்பிலேயே சாத்தியமற்றது என்பதாகும். [6]
இந்த விவாதம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படவில்லைமற்றும் மாலியா அவரது புத்தகத்தை வினோதமான வகையில் இரு எண்ணங்கொண்டதாகவும் பிரச்சினைக்குரியதான குறிப்பைக் கொண்டதாகவும் முடித்தார்அவர் சோசலிசத்திற்கான ஒரு பரந்த புரட்சிகர இயக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியின் சாத்தியத்தை முன்னுணர்ந்தார்.
முன் எதிர்பார்த்திருந்திராத லெனினிச நிகழ்வுப்போக்கு முன் எதிர்பார்த்திராத 1914-1918 உலக நெருக்கடியின் காரணமாக தோன்றியதுஒப்பிடக்கூடிய எந்த பூகோள நெருக்கடியும் செயலூக்கம் குன்றிய சோசலிச வேலைத்திட்டங்களை மீண்டும் ஒருமுறை சமரசத்திற்கிடங்கொடாத தீவிரத்தை நோக்கி செலுத்தும், அதன் விளைவாக முற்றுமுழுதான முடிவைப் பெறும்பொருட்டு முழு அதிகாரத்தையும் பெறுவதற்கு கவர்ச்சியூட்டும். [7]
புக்குயாமா வரலாற்றின் முடிவு” சோசலிசத்தின் முடிவைக் குறிக்கும் என்று வாதிடுகையில்மாலியா முதலாளித்துவமல்லாத அமைப்பின் இலக்கு அடைவதற்கு சாத்தியமற்றதெனினும்சோசலிசமானது ஆதரவாளர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் என்று மௌனமாக ஒப்புக்கொள்கிறார்அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்திருந்த எரிக் ஹோப்ஸ்வாம் (1917-2012), புக்குயாமா மற்றும் மாலியா இருவரதும் வாதங்களைக் கடன்வாங்கிபுதுமை செய்து இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய தத்துவத்தை வடிவமைப்புச் செய்கிறார்அது பரந்த இடது தட்டின் மற்றும் முன்னாள் இடதுகளின் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும். ஹோப்ஸ்வாம் புக்குயாமாவின் இயங்காநிலை (metaphysical) ஊகங்களை ஏற்கும் அளவுக்கு மிக அறிவாற்றலைக் கொண்ட வரலாற்றாசிரியனாயும் அனுபவவாத வழிமுறையில் அளவுக்கதிகமாக மூழ்கியுள்ளவராயும் இருக்கிறார்அவர் புக்குயாமாவின் கருத்துருவை இன்னும் நிர்வகிக்கக்கூடிய விகிதாசாரத்தில் இங்குமங்கும் கத்தரித்து சீர்படுத்துகிறார்.சோவியத் ஒன்றியத்தின் பொறிவு வரலாற்றின் முடிவு இல்லை என்றால்இருபதாம் நூற்றாண்டின் முடிவைக் குறிக்கிறது என்கிறார்.The Age of Extremes (தீவிரங்களின் காலம்என்னும் புத்தகத்தில், 1914ல் உலக யுத்தம் வெடித்ததற்கும் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்து போனதிற்கும் இடையிலான வருடங்கள் குறுகிய இருபதாம் நூற்றாண்டின்” உட்கூறாய் அமைந்திருப்பதாக வாதிடுகிறார்.
நாம் இப்பொழுது மாறுபட்ட நிலையில் நோக்கக்கூடியஅது வடிவமைத்த தெளிவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வரலாற்றுக் காலகட்டம் இப்பொழுது முடிந்துவிட்டிருக்கிறது..... 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் உள்ள உலக வரலாற்றின் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது மற்றும் புதிய ஒன்று தொடங்கிவிட்டதுஅதுதான் இந்த நூற்றாண்டின் வரலாற்றாளர்களுக்கான அத்தியாவசியமான ஒரு புதிய தகவல்… [8]
1914 மற்றும் 1991க்கும் இடையில் விரியும் ஒரு குறுகிய” எழுபத்தேழு ஆண்டு காலகட்டம் என்று ஹோப்ஸ்வாமால் காலவகைப்படுத்தப்பட்ட இருபதாம் நூற்றாண்டுசிறிது உரத்த குரலில்போல்ஷிவிக்குகளின் புரட்சிகர செயல்திட்டம் மாலியாவால் நிராகரிக்கப்படுவதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்ததுடன் இருபதாம் நூற்றாண்டின் நாடகத்தில் திரைச்சீலையை அவிழ்த்துவிட்டதன் மூலம்ஹோப்ஸ்வாம் முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன் ஆரம்பித்த ஒரு புரட்சிகர சகாப்தம் முடிவுற்றது என பறைசாற்றுகிறார். 1914க்கும் 1991க்கும் இடையில் சோசலிசம் ஏதாவதொரு வடிவில் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடாகப் பார்க்கப்பட்டிருந்ததுஅந்தக் காலகட்டம் 1991ல் எல்லாக்காலத்துக்குமாக முடிந்துவிட்டது.லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட புரட்சிகர சோசலிச செயற்திட்டம் தொடக்கம் முதலே ஒரு பிரமையாக இருந்திருக்கலாம் என்று ஹோப்ஸ்வாம் ஒரு சிறு சந்தேகத்தை விட்டுச்செல்கிறார். 1991ன் வெளிச்சத்தில்முக்கால் நூற்றாண்டுக்கு முன்னதாக போல்ஷிவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றல்ஒரு துன்பகரமான பிழை என்று பார்க்கப்பட்டிருக்கக் கூடும். 1917ல் நிலை கொண்டிருந்த சூழ்நிலைகளில்போல்ஷிவிக் தலைவர்களின் முடிவுகளுக்கான அரசியல் நியாயப்படுத்தலை ஒருவர் கண்டுகொண்டாலும்அக்டோபர் புரட்சி அது வேறுபட்டமுற்றிலும் தனித்துவமான மற்றும் மீண்டும் செய்யமுடியாத ஒரு நிகழ்ச்சி எனவும்அது வெளிவந்த சூழ்நிலையும் தனியியல்பானதாக இருப்பதால் இதற்கு எவ்விதமான தற்கால அரசியல் முக்கியத்துவமும் இல்லை என ஹோப்ஸ்வாம் வலியுறுத்துகின்றார்.
புக்குயாமாவும் ஹோப்ஸ்வாமும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை பற்றிய தங்களின் காலவகைப்படுத்தலின் மையத்தில் வைத்தனர்புக்குயாமாவை பொறுத்தவரை (சோவியத் ஒன்றியம்கலைந்துபோனது வரலாற்றின் முடிவைக் குறிக்கிறதுஹோப்ஸ்வாமை பொறுத்தவரை அது குறுகிய இருபதாம் நூற்றாண்டு” முடிவைக் குறிக்கிறதுசோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அவர்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் நிகழ்வாக விளங்கிய அக்டோபர் புரட்சியை ஏதோஒருவகை பின்னால் இருந்து அடித்து முன்னே அனுப்பும் உறுதிப்படுத்தலாக இருந்ததுஆயினும், “வரலாற்றின் முடிவு” மற்றும் குறுகிய இருபதாம் நூற்றாண்டு” இந்த இரண்டு கருத்தோட்டங்களுமே, 1917ல் போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பத்தாண்டுகளில் பரிணாமம் அடைந்த சோவியத் அரசு பற்றியும் அக்டோபர் புரட்சியின் வரலாற்று அடித்தளங்கள் பற்றியுமான அடிப்படையில் தவறான கருத்துக்களை அடித்தளமாக கொண்டிருந்தனபுக்குயாமா வரலாற்று தற்செயல் நிகழ்வு பற்றிய தனித்துவமான பிரச்சினைகளுக்கு சிறிது கவனம் செலுத்தும் அருவமான கொள்கைப்படுத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை, ஹோப்ஸ்வாம்முதலாவது உலக யுத்தத்தின் பிரதான பேரழிவுக்குரியதாக  ரஷ்யா இருந்திராதாயின் அங்கு சோசலிசப் புரட்சி இடம்பெற்றிருந்திருக்காது என்ற வழமையான மேலெழுந்தவாரியான கருத்தை ஏற்கிறார். “பேரழிவான காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாளித்துவ சமூக உடைவு இல்லை எனில்அங்கு அக்டோபர் புரட்சியும் இருந்திருக்காது சோவியத் ஒன்றியமும் இருந்திருக்காது” என அவர் எழுதினார்.
இது ஒருபொருள் சொல்லடுக்கே அன்றி ஒரு விளக்கம் அல்லஹோப்ஸ்வாமால் தவிர்க்கப்படும் உண்மையான அறிவுஜீவித சவாலானது ஆழ்ந்து வேரூன்றியபூகோளத்தன்மை உடையஇறுதியில் உலகப் போரிலும் மற்றும் சமூகபுரட்சியிலும் வெடித்த முரண்பாடுகளை அடையாளம் காணலாகும்மொத்தத்தில், பெரும் வல்லரசுகளின் வருடக் கணக்காக உக்கிரமடைந்துவரும் மோதல்கள்,முதலாம் உலகயுத்தத்திற்கு முன்நிகழ்வாய் அமைந்திருந்தன. அக்டோபர் புரட்சிக்கு முந்திய பத்தாண்டுகளில் சோசலிசமானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச வெகுஜன இயக்கமாக வெளிப்பட்டது. 1914க்கு முன்னர் சோசலிஸ்டுகள் முதலாளித்துவ சமூக அமைப்பின் உடைவை மட்டும் எதிர்பார்த்திருக்கவில்லைமாறாக உடைவானது பேரழிவுகரமான ஐரோப்பிய அளவிலான மற்றும் உலக யுத்தத்தின் வடிவைக் கூட எடுக்க நேரும் என்றும் எச்சரித்தனர்அத்தகைய யுத்தமானது சோசலிச புரட்சிக்கான அத்தியாவசியமான ஒரு முன்நிபந்தனை என்ற வகையில் வரவேற்பதற்கு மாறாக, 1914க்கு முந்தைய கால மாபெரும் மார்க்சிஸ்டுகள் ஏகாதிபத்திய இராணுவ வாதத்திற்கு எதிரான போராட்டத்தை தங்களின் அரசியல் வேலையின் மையப்புள்ளியாக வைத்தனர்.
ஒர் பாரிய ஏகாதிபத்திய யுத்தமானது நெருங்கிவருகின்றது என்பது அதிகரித்த அளவில் காணக்கூடியதாகியபோதேபுரட்சிகரப் போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்துசோசலிஸ்டுகள் அத்தகைய நிகழ்வின் மூலோபாய விளைபயன்களை கருத்தில்கொள்ள தலைப்பட்டனர். 1914க்கு முன்னரே மார்க்சிச சோசலிஸ்டுகள் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நெருக்கடியில் போரினதும் புரட்சியினதும் பொதுவான மூலத்தை உணர்ந்திருந்தனர்சோசலிச இயக்கத்திற்குள்ளே 1914க்கு முன்னரான விவாதங்களை புறந்தள்ளிவிட்டுவரலாற்று தற்செயல் நிகழ்வு பிரச்சினையை பற்றிய ஹோப்ஸ்வாமின் மேலெழுந்தவாரியான கவனிப்புஅக்டோபர் புரட்சியினை யுத்தத்தின் தற்செயலான மற்றும் ஒரு துணை விளைபொருளாக சித்தரிக்கிறது.
புக்குயாமாஹோப்ஸ்வாம் மற்றும் மாலியாவையும் நாம் சேர்க்க வேண்டும்இவர்களின் வாதங்களில் உள்ள சீரிய குறைபாடு,சோவியத் ஒன்றியத்தை அதன் வரலாற்றின் அனைத்துக் கட்டங்களிலும் சோசலிசத்துடன் விமர்சனமற்றவகையில் அடையாளப்படுத்துதல் ஆகும்ஸ்ராலினிச ஆட்சியானதுஅக்டோபர் புரட்சியின் மூலத் தீவினையில் இருந்து வந்த தவிர்க்க முடியாத வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதுசோவியத் வரலாறு பற்றிய இந்த விதிப்பயன்வாத மற்றும் அதிதீர்மானிப்புவாத கண்ணோட்டமானதுஸ்ராலினிசமல்லாத வளர்ச்சிப்போக்கின் சாத்தியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க மறுக்கிறதுஹோப்ஸ்வாம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே ஸ்ராலினால் தலைமை தாங்கப்பட்டஎழுந்துவந்து கொண்டிருந்த அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பாக நடந்த எதிர்த்தரப்பு போக்குகளின் போராட்டம் பற்றிகுறிப்பாக ட்ரொட்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட போக்கின் போராட்டம் பற்றி முற்றிலும் பாரபட்சமானதன்மையை வெளிப்படுத்தினார்ஸ்ராலின் ஆட்சிக்கு மாற்றீடுகளைவரலாற்றின் உண்மை அல்லாத நிகழ்வுகளின் அடிப்படையிலான நியாயபூர்வமற்ற முயற்சியாக நிராகரிக்கிறார்எவ்வாறாயினும்கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே மோதல் தீவிரமடைந்துஇறுதியில் ஸ்ராலின் பிரிவு நிலைகொண்டதுஅந்தக் கண்ணோட்டத்திலிருந்து ஸ்ராலினிசமானதுவரலாற்றாளரின் அவநம்பிக்கைவாத சொற்றொடரை மேற்கோள் காட்டுவதாயின், “ஒரேயொரு சாத்தியமாகஇருந்தது. 1923க்கும் 1927க்கும் இடையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினுள் எழுந்த போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் கூறியவை மற்றும் எழுதியவை எல்லாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு தொடர்பில்லாத ஒன்றாக இருந்தது.ஹோப்ஸ்வாமைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினை இன்னும் சொல்லப்போனால் நேரடியாகக் கூறுவதாக இருந்ததுஸ்ராலின் வென்றார்ட்ரொட்ஸ்கி தோற்றார்அதில் இருந்தது அவ்வளவுதான்வரலாற்றாளர்கள் வேறு எது நடந்திருக்கலாம் என்பது குறித்து தங்களின் அக்கறையைக் கொண்டிருக்கக்கூடாது.
ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடுகள் பற்றிய ஹோப்ஸ்வாமின் முன்கூட்டிய நிராகரிப்புக்கள் அரசியலில் மன்னிப்புக் கோரல் என்பதைவிடவும் சமரசத்திற்கு இடங்கொடாத வரலாற்றின் புறநிலைவாதத்தின் வெளிப்பாடு என்பதற்கும் மிகக் குறைவான வெளிப்பாடாகும்அவர் பக்கசார்பு இல்லாத மற்றும் தனித்துநிற்கும் விமர்சகராக இருந்ததில்லைபிரிட்டிஷ் ஸ்ராலினிச இயக்கத்தில் அவர் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தபொழுதுஹோப்ஸ்வாம் ரஷ்யப் புரட்சியின் வரலாறு மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாத்திரம் பற்றியும் சோவியத் அதிகாரத்துவ பொய்ம்மைப்படுத்தலுக்கு ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லைஹோப்ஸ்வாம்பொய்களை அடிப்படையாகக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் பற்றிய அதிகாரபூர்வ ஸ்ராலினிச வரலாற்றைத்தான் அவர் பற்றிப்பிடித்திருந்தார் என்பதை ஒளிவுமறைவின்றி ஒருபோதும் உறுதிப்படுத்தாத நிலையில், 2012ல் தொன்னூற்றைந்து வயதாக இருக்கும்பொழுது அவரது கல்லறைக்கு சென்றார்.
ஹோப்ஸ்வாமின்படிசோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, “தீவிரங்களின் காலத்தை” ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. 1917க்கு முன்னர் இருந்திருந்தவாறு, முதலாளித்துவமானது மீண்டும் ஒரேயொரு சாத்தியமாக” இருந்ததுஎதிர்காலத்தில் சில புள்ளிகளில் சமூகமானது வன்முறை கொண்ட பேரெழுச்சிகளை அனுபவிக்கும் என்பது விரும்பத்தகாததாக இல்லாதிருந்த அதேவேளைபரந்த புரட்சிகர சோசலிச இயக்கம் மீண்டும் எழும் என்ற சந்தர்ப்பமும் அங்கு இல்லை.
ஹோப்ஸ்வாமின் விளக்கமானதுமனிதகுலமானது ஒரு இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டது மற்றும் அதன் சூழ்நிலை நம்பிக்கை அற்றதாகிவிட்டது என்ற முடிவுக்கு ஒரு வாசகரை இட்டுச்செல்கிறது. “நாம் எங்கு செல்கிறோம் என்பதே நமக்குத் தெரியாது,” எனதீவிரங்களின் காலம் என்பதின் இறுதியில் அவர் எழுதுகிறார்எதிர்காலத்திற்கான சாதகமான வழிகாட்டியாக விளங்கக் கூடிய கடந்த காலத்தின்  அனுபவத்தில் ஹோப்ஸ்வாம் ஒன்றையும் பார்க்கவில்லைஒன்றே ஒன்றில் மட்டும் அவர் நிச்சயமாய் இருந்தார்:அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சியானது எதிர்கால போராட்டங்களுக்கான ஒரு எடுத்துக்காட்டாகவோ அல்லது  வழிகாட்டியாகவோ சேவைசெய்திருக்கவும் முடியாதுஇனி செய்யவும் முடியாது. “அந்த அடிப்படையில் நாம் மூன்றாவது ஆயிரமாண்டைக் கட்டி எழுப்ப முயற்சித்தால் நாம் தோல்வியுறுவோம்” என்று எழுதினார்மற்றும் அத்தோல்விக்கான விலை என்னவென்றுஹோப்ஸ்வாமின் நீண்ட புத்தகத்தின் இறுதி வாக்கியத்தில் இருட்டாகும்” [10என எழுதினார்.
இந்த தொகுதியில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் உரைகளும்பெரும்பாலான பகுதிசோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தை ஒரு இறுதியான முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்ற கூற்றுக்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டதாகும்புக்குயாமாவின் வரலாற்றின் முடிவு” மற்றும் ஹோப்ஸ்வாமின் குறுகிய இருபதாம் நூற்றாண்டு” இவற்றுக்கான எதிர்ப்பில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானதுநிச்சயமாய் மிக முக்கியத்துவம் உடைய நிகழ்வு எனினும்அது சோசலிசத்தின் அதிர்ச்சிமிக்க முடிவைக் குறிக்கவில்லை என்று நான் வாதிட்டேன்வரலாறு தொடரும்இருபதாம் நூற்றாண்டை போர்களையும் புரட்சியையும் எழச்செய்யும்முதலாளித்துவத்தின் உக்கிரமான நெருக்கடியின் சகாப்தம் என வரைவிலக்கணம் செய்யும்வரை, “முடிவுறாதது” என்று குணாதிசயப்படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்அதாவதுஇருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதகுலம் எதிர்நோக்கிய பொருளாதாரசமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளின் மையம்பிரதானமாகஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதிர்கொண்ட அதே முரண்பாடுகளாகும்அனைத்துவிதமான விஞ்ஞான முன்னேற்றங்கள்தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள்அரசியல் எழுச்சிகள்சமூக மாற்றங்கள் இருப்பினும்இருபதாம் நூற்றாண்டு புதிரான வகையில் முடிவுறாத குறிப்புடன் முடிவுற்றதுநூற்றாண்டின் போராட்டங்களின் கீழே இருந்த மாபெரும் சமூகபொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளில் ஒன்று கூட முடிவார்ந்தவகையில் தீர்க்கப்பட்டிருக்கவில்லைமுதலாவது உலக யுத்தம் முந்தியதாக நடந்தது மற்றும் உண்மையில் பால்கன்களில் உள்ள அரசுகளின் எல்லைகள் மீதான மோதல்களால்  தூண்டிவிடப்பட்டதுகிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர்அமெரிக்காவாலும் ஜேர்மனியாலும் தூண்டிவிடப்பட்ட யூகோஸ்லாவிய கலைப்பானதுஅரசின் இறையாண்மை மற்றும் எல்லைகளை கண்டறிதல் தொடர்பாக இரத்தம் தோய்ந்த தசாப்தகால மோதலை முடுக்கிவிட்டது. 1914ல் தொடங்கிய முதலாவது உலக யுத்தம் சேர்பியாவில் உள்ள தேசியவாத ஆட்சி ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக இருந்ததால் அதனைத் தண்டிக்க ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு எடுத்த முடிவுடன் ஆரம்பமானதுஎண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்இருபதாம் நூற்றாண்டின் அஸ்தமனத்தின்போதுபால்கன்களில் எல்லைகளை ஏகாதிபத்திய மறு ஒழுங்கு செய்தலை சேர்பியா ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்துஅமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மீது ஈவிரக்கமற்றமுறையில் குண்டுகளை வீசியது.
இது ஏதோ (plus ça change, plus c’est la même choseஅதிகமானவை மாற மாறஅதிகமானவை அதேபோன்று இருத்தல் என்பது பற்றியதல்லமாறாக, 2014 உலகத்தை 1914 உடன் இணைக்கும் அடிப்படை சமூகபொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளின் நீண்டகால தொடர்ந்து நீடித்தலுக்கு ஒரு உதாரணமாகும் மற்றும் இருபதாம் நூற்றாண்டை அதன் முடிவுறாத” பண்புக்கு உரித்தாக்குகிறது.
ஒப்பீட்டு நோக்கும் வகையில்இருபதாம் நூற்றாண்டின் விடியலில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடியவர்களுக்கு 1800 உலகம் எப்படி அமைந்திருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். 1800கள் நெருங்கி வந்தபொழுதுநெப்போலிய போர்கள்  (1800–15) வரலாற்றின் மண்டலத்தில் இருந்து பின்னோக்கி மறைந்து போய்விட்டிருந்ததனபிரெஞ்சுப் புரட்சிஒஸ்டர்லிட்ஸ் மற்றும் வாட்டர்லூ சண்டைகள்1900களில் வாழ்ந்தவர்களுக்கு மிகவேறுபட்ட காலத்தின் வீரம்மிக்க போராட்டங்களாக தோன்றினரோபேஸ்பியர்டன்டோன் மற்றும் நெப்போலியன் ஆகியவர்கள் தொடர்ந்தும் அவர்களை ஈர்க்கக்கூடியவர்களாக இருந்தனர்ஆனால் அவர்கள் 1900 உலகிலிருந்து தொலைவில்இன்னொரு காலப் பகுதியில் மற்றும் வரலாற்று இடத்தின் உருவங்களாக இருந்தனர்நிச்சயமாகஉலகவரலாற்றில் அவர்களது தாக்கம் நிலைத்து நிற்கும்தான்ஆனால் அவர்கள் வாழ்ந்த அரசியல் உலகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் அடிப்படை ரீதியாக மற்றும் திடீரென்று உருமாறத் தொடங்கிவிட்டிருந்ததுமேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிந்தைய அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சியினால் விரைவுபடுத்தப்பட்ட  முதலாளித்துவ ஜனநாயக நிகழ்வுப்போக்குகள் மற்றும் தேசிய அரசை வலுப்படுத்துதல் என்பனபெரும்பாலும் முடிவடைந்திருந்தனதொழிற்புரட்சியானது முன்னேறிய நாடுகளில் சமூகப் பொருளாதார கட்டமைப்புக்களை மாற்றி இருந்தனநிலப்பிரபுக்களுக்கும் எழுந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான பழைய மோதல் தொழிற்துறை முதலாளித்துவத்தின் விரைந்த வளர்ச்சி மற்றும் தோன்றிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தின் புது வகை வர்க்கப் போராட்டத்தால் உருமாறினபிந்தைய பதினெட்டாம் நாற்றாண்டின் மாபெரும் போராடங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த பொதுவான ஜனநாயக சொற்றொடர்கள் போதுமான அளவு இல்லாதிருந்தமை, 1848 புரட்சிகளால் துன்பகரமான வகையில் வெளிப்படையானதுமனிதனின் உரிமைகள் (The Rights of Manஎன்ற புத்தகம் பழைய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளின் மொழியில் எழுதப்பட்டதுகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது, புதிய பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் மொழியில் எழுதப்பட்டது.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில்அரசியலானதுஒரு உயர்ந்தளவில் ஒன்றோடு ஒன்று  பிணக்கப்பட்டிருந்த உலக பொருளாதாரத்தின் அபிவிருத்தியின் அடிப்படையில் முற்றிலும்  பூகோளத்தன்மையை பெற்றிருந்ததுபத்தொன்பதாம் நூற்றாண்டின் போக்கில் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அரசுகளின் அமைப்புமுறைகடுமையான நெருக்கடியின் கீழ்வந்தது. அது உலக மேலாதிக்கத்திற்காக சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகளின் மத்தியில் அதிகரித்த அளவில் கசப்பான போராட்ட வடிவத்தை எடுத்தது.இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டின்பொழுது, “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லானது பொதுவான வழக்கத்தில் நுழைந்தது.முதலாவது உலக யுத்தத்தின் வெடிப்புக்கு இட்டுச்சென்ற வருடங்களில்இந்த புதிய நிகழ்வுப்போக்கின் பொருளாதார அடித்தளங்கள் மற்றும் அதன் சமூக மற்றும் அரசியல் விளைபயன்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. 1902ல் பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஜே.ஏ.ஹாப்சன் ஏகாதிபத்தியம் என தலைப்பிடப்பட்ட ஒரு நூலை எழுதினார்அதில், “ஏகாதிபத்தியத்தின்  பொருளாதார ஆணிவேர்,அவற்றின் உபரி பொருட்கள் மற்றும் உபரி மூலதனம் இவற்றுக்காகபொதுநலன்களப் பலியிட்டு பொது சக்திகளால் தனியார் சந்தைகளைப் பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவுமான ஒழுங்கமைக்கப்பட்ட பலம் வாய்ந்த தொழில் துறை மற்றும் நிதிநலன்களின் வேட்கையாகும்”. [11என வாதிட்டார். 1910ல் ஆஸ்திரிய சமூக ஜனநாயக கொள்கை வகுப்பாளர் ருடோல்வ் ஹில்பெர்டிங்அவரது நிதி மூலதனம் என்ற புத்தகத்தில்ஏகாதிபத்தியத்தின் உள்ளார்ந்த ஜனநாயகவிரோத மற்றும் வன்முறை கொண்ட பண்பை மட்டுமல்லாமல் அதன் புரட்சிகர தாக்கங்களுக்குள்ளும் கூட கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்:
ஏகாதிபத்தியத்தின் கொள்கையில் வெளிப்படுத்தப்படுவதுபோல்முதலாளித்துவ வர்க்கத்தின் நடவடிக்கைகளே பாட்டாளி வர்க்கத்தை சுயாதீனமான வர்க்க அரசியல் பாதைக்குள் அத்தியாவசியமாகவே வழிநடத்தும்அது முதலாளித்துவம் இறுதியாய் தூக்கிவீசப்படுவதில்தான் முடியும்தலையிடாக்கொள்கை இன் கோட்பாடுகள் மேலாதிக்கம் செய்யும் வரைமற்றும் பொருளாதார விஷயங்களில் அரசின் தலையீடு இருக்கும்வரைஅதேபோல வர்க்க மேலாதிக்கத்தை ஒழுங்குபடுத்தல் என்ற வகையில் அரசின் பண்பு இருக்கும்வரைஅவை மறைக்கப்படும்வரைஅதற்கு ஒரு அரசியல் போராட்டத்திற்கான தேவையை ஊக்குவிப்பதற்கான ஒரு ஒப்பீட்டளவில் முதிர்ச்சியடைந்த மட்டத்திலான புரிந்துகொள்ளல் தேவைப்படுகிறதுமேலும் எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி அரசியல் இலக்குக்கானஅதாவது அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான அவசியம் தேவைப்படுகிறது. அப்பொழுதுதலையீடு இல்லாத, வழிவழிமரபிலானதான, இங்கிலாந்தில்,  சுயாதீனமான அரசியல் நடவடிக்கையின் தோற்றம் அந்த அளவுக்கு கடினமானதாக இருந்தது என்பது தற்செயலானதல்லஆனால் இது தற்போது மாறிவருகிறதுமுதலாளித்துவ வர்க்கமானது அரசு சாதனத்தை ஒளிவுமறைவற்றநேரான மற்றும் வெளிப்படையான வழியில் உடைமையாக்கிக் கொள்கிறதுமற்றும் அதனை ஒவ்வொரு தொழிலாளிக்கும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதனை சுரண்டும் நலன்களுக்கான ஒரு கருவியாக செய்கிறதுபாட்டாளி வர்க்கத்தால் அரசியல் அதிகாரம் வென்றெடுக்கப்படுவது,தனது சொந்த மிக உடனடியான தனிப்பட்ட நலன் என்று அவர்கள் இப்பொழுது கட்டாயம் அடையாளம் கண்டாகவேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தால் அரசு வெளிப்படையாக கைப்பற்றப்படுவது ஒவ்வொரு பாட்டாளியையும் அதன் சொந்த சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழியாக அரசியல் அதிகாரத்தை வெல்வதற்கான முயற்சிக்கு நேரடியாக நிர்பந்திக்கிறது. [12]
1916ல்உலகயுத்தமானது அதன் மூன்றாவது ஆண்டில் நுழைந்தபொழுது ஏகாதிபத்தியம் பற்றிய பண்பிடலை லெனின் மணிச்சுருக்கமாக வழங்கினார்:
தடையிலாப் போட்டியானது ஏகபோகத்தால் பதிலீடு செய்யப்படுவதுஅடிப்படை பொருளாதார இயல்பு, ஏகாதிபத்தியத்தின் முக்கிய சாராம்சமாகும்.
......அமெரிக்காஐரோப்பா மற்றும் பின்னர் ஆசியாவில், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாக ஏகாதிபத்தியமானது 1898-1914ல்  இறுதி வடிவத்தை எடுத்தது. ஸ்பானிய அமெரிக்க யுத்தம் (1898), ஆங்கிலோ-போயர் யுத்தம் (1899-1902), ரஷ்ய-ஜப்பானிய யுத்தம்(1904-1905) மற்றும் 1900ல் ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஆகியன உலகவரலாற்றின் புதிய சகாப்தத்தில் முதன்மையான வரலாற்றுக் குறியீடுகளாகும்.
… முதலாளித்துவத்தின் சிதைவானது குத்தகைதாரர்களின் பெரும் அடுக்கை உருவாக்கல், “வட்டி வருவாய் சீட்டுக்களை சேர்த்துவைப்பதன் மூலம் வாழும் முதலாளிகளை உருவாக்கல், .... மூலதனத்தை ஏற்றுமதி செய்வதில் ஒட்டுண்ணித்தனம் உயர்ந்த அளவுக்கு எழுவது.... அதன் வழி முழுவதும் அரசியல் பிற்போக்கு ஆகியன ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பாகும்பெரிய அளவில் ஊழலும் லஞ்சமும் மற்றும் எல்லாவகையான மோசடிகளும் .... கையளவே ஆன பெரும்” வல்லரசுகளால் ஒடுக்கப்பட்ட தேசங்கள் சுரண்டப்படுதல்...”[13]
1915ல் எழுதப்பட்ட போரும் அகிலமும் என்பதில் ட்ரொட்ஸ்கி இந்த மோதலை
தேசம் மற்றும் அரசின் அரசியல் வடிவத்திற்கு எதிரான உற்பத்தி சக்திகளின் ஒரு கிளர்ச்சி என்று அடையாளப்படுத்துகிறார். அதன் பொருள் தேசிய அரசு ஒரு சுயாதீனமான பொருளாதார அலகு என்றவகையில் பொறிந்துபோதல் ஆகும்.
.......யுத்தமானது தேசிய அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டதை பறைசாற்றுகிறதுஇருப்பினும் அதேவேளை அது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியையும் பறைசாற்றுகிறதுதேசிய அரசின் மூலம் முதலாளித்துவமானது உலகப்பொருளாதார அமைப்பு ஒட்டுமொத்தத்தையும் புரட்சிகரமயப்படுத்தியதுஅது முழு உலகத்தையும் பெரும்வல்லரசுகளின் ஒருசிலவராட்சிகளுக்கு மத்தியில் பங்குபோட்டதுசிறு நாடுகள் இப்பெரு வல்லரசுகளை சார்ந்திருக்கும் குழுக்களாக சேர்ந்தன,அவைகளுக்கு இடையிலான பகைமை கொண்ட போட்டியில் இவைவாழ்க்கையை நடத்தவேண்டி பெரிய ஒன்றைச்சார்ந்திருந்தனமுதலாளித்துவ அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால அபிவிருத்தி என்பதன் அர்த்தம் புதிய மற்றும் என்றும் புதிய சுரண்டலுக்கான புதிய துறைகளுக்கான இடைநிறுத்தம் இல்லாத போராட்டமாகும்அந்த சுரண்டலானது ஒரேயொரு மற்றும் அதே மூலவளமான பூமியில் இருந்துதான் பெறப்பட்டாக வேண்டும்இராணுவவாதப் பதாகையின் கீழ் பொருளாதார பகைமைப் போட்டியானதுதிருடல் மற்றும் அழித்தல் ஆகியவற்றால் இணைந்துகொள்ளப்படுகிறதுஇவை மனிதப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகின்றனஉலக உற்பத்தியானதுதேசிய மற்றும் அரசு பிரிவுகளினால் உண்டுபண்ணப்பட்ட குழப்பத்திற்கு எதிராக மட்டுமல்லாமல்,முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்புக்கு எதிராகவும் கலகம் செய்கின்றனஅம்முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கள் காட்டுமிராண்டித்தனமான ஒழுங்கற்றவையாகவும் பெருங்குழப்பமுடையனவாகவும் மாறுகின்றன. [14]
இந்த எழுத்துக்களில் நிகழ்கால சர்வதேச புவிசார் அரசியலின் வார்த்தைகளையும் சொற்பதங்களையும் நாம் எதிர்கொள்கின்றோம். அவற்றுள் விளக்கப்படுகின்ற உலகம் நாம் இன்னும் நம்முடைய சொந்தம் என்று உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறதுஅது முதலாளித்துவத்தின்ஒரு சிலவராட்சியின் செல்வந்தத்தட்டின்தங்களின் பூகோள நலனகளை நாடுகின்ற பெரும் பகாசுர நிறுவனங்களின் மற்றும் தன்முனைப்பு ஆட்சிகளின் உலகமாகும்இந்தப் படைப்புக்கள் யுத்தங்களும் புரட்சிகளும் நிறைந்த, இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும், இந்த சகாப்தத்தின் விடியலின்பொழுது எழுதப்பட்டன.  இருபதாம் நூற்றாண்டின் மோதல் கொண்ட கருத்துருக்கள் தற்போதைய நிலை பற்றிய நமது புரிதலுக்கான மற்றும் எதிர்காலத்திற்கான நமது எதிர்பார்ப்புக்களுக்கான நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருந்தன. “வரலாற்றின் முடிவு” பற்றிய விவாதப் பொருள், விலகுவதையும் திருப்தியையும் முறைமை உடையதாக்குகிறது. “குறுகிய இருபதாம் நூற்றாண்டு”, அதன் தவிர்க்கவியலா தோல்வி மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தின் இறுதி திராணியின்மை பற்றிய விளக்கத்துடன் சேர்ந்துமுதலாளித்துவ உலகத்தில்அது நாகரிகம் இருத்தலையே அச்சுறுத்தக்கூடிய அழிவை நோக்கி மாற்றவியலா வகையில் நகருகின்ற போதிலும் கூட – அது பரந்த மக்களின் எதிர்ப்பு எது எழுந்தாலும் அதை நசுக்குவதற்காக எப்போதும் போதுமான சக்தியை உடைமையாக கொள்ளும் நிலையிலும் கூடநம்பிக்கையின்மை தொடர்பான இருத்தலியல் மனோபாவத்தை முன்னிலைப்படுத்துகிறது.
முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” எனும் கருத்துரு குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவியின் ஒரு வரலாற்று சார்பற்ற அவநம்பிக்கைவாதத்தை நிராகரிக்கிறது. “முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” தொடர்ந்து தீர்க்கப்படாத மோதல்களின் மத்தியில் மனிதசமுதாயத்தை நிறுவுகிறதுஆகஸ்ட் 1914ல் ஆரம்பமான பூகோள நெருக்கடியின் வெளிப்பாடு இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டி இருக்கிறதுமனிதகுலம் எதிர்கொள்கின்ற வரலாற்று மாற்றீடுகள்கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்முதலாவது உலக யுத்தத்தின் மத்தியில் ரோசா லுக்சம்பேர்க்கால் இனம் காணப்பட்டன: “ஒன்றில் ஏகாதிபத்தியத்தின் வெற்றி மற்றும் அனைத்துவிதமான கலாச்சாரங்களையும் அழித்தல்மற்றும் புராதன ரோமில் போல மக்களை இல்லாமற்செய்தல்பாழிடமாக்கல்சீரழித்தல்பரந்த அளவு கல்லறைகளைத் தோற்றுவித்தல்அல்லதுசோசலிசத்தின் வெற்றிஅதாவது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் நனவான போராட்டம்.” [15மார்க்சிஸ்டுகளைப் பொறுத்தவரைநம்பிக்கையின்மை பற்றி நிலவும்நிலைமையை வலியுறுத்தும் வகையறாக்களுக்கு வரலாற்று சாத்தியங்கள் பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான மதிப்பிடல்களில் இடம் இல்லை.அவற்றின் அனைத்துவிதமான சிக்கல்களிலும்சமூகப் பொருளாதார முரண்பாடுகளை ஆளுமை செய்யும் விதியின் உருமாற்றங்களின் விளக்கிக்காட்டல்கள் புரிந்துகொள்ளப்பட முடியும் (புரிந்துகொள்ளப்பட்டாக வேண்டும்மற்றும் அதன்மீது  செயல்பட முடியும் என்று,நாம் நிலவும் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முடியும்இருபதாம் நூற்றாண்டின் முடிவுறாத” தன்மையை பற்றிய புரிந்துகொள்ளலானதுஅதன் வரலாற்றை பற்றி படிப்பதன் மீது பெரும் முக்கியத்துவத்தை வைக்கின்றதுகடந்தகாலத்தின் எழுச்சிகள்  மற்றும் போராட்டங்கள் முக்கியமான மூலோபாய அனுபவங்களாகப் பார்க்கப்பட வேண்டும்அந்த அனுபவங்களின் படிப்பினைகள் சர்வதேச சோசலிச இயக்கத்தால் நன்றாக உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டாக வேண்டும்.
சோவியத் ஒன்றியம் பொறிந்துபோனதன் முக்கியத்துவம் பற்றிய முரண்பாடான விளக்கங்கள் வடிவப்படுத்தியதன் பின்னரில் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்டனஅவற்றுள் எது காலத்தின் சோதனையில் நின்றுபிடித்திருக்கிறதுபுக்குயாமாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாகசோவியத் ஒன்றியம் கலைந்து போனதன் பின்னரான காலத்தில்வரலாறானது வலுவிழந்துபோகும் அடையாளத்தைக் காட்டவில்லைஅவரது முக்கியமான வாதங்களுள் ஒன்று வரலாற்றின் முடிவு” யுத்தங்கள் அடிக்கடி நிகழுந்தன்மையில் ஒரு வீழ்ச்சியால் பண்பிடப்படும்ஹியூம்காண்ட்மற்றும் சும்பெட்டர் பற்றி படித்த குறிப்புக்களுடன்தாராளவாத ஜனநாயகம் அமைதியானது என்று வாதிடுகிறார். “பின்னர் வரும் வாதத்தில்” அவர் வருவதுரைப்பதாவது, “தாராளவாத ஜனநாயகமானது வலுச்சண்டைக்கு போவதற்கும் வன்முறைக்குப் போவதற்குமான மனிதனின் இயற்கையான உட்தூண்டல்களைக் கட்டுப்படுத்தும் என்று அந்த அளவுக்கு இல்லைமாறாக உட்தூண்டல்கள் தம்மை அடிப்படை ரீதியாகவே உருமாற்றியிருக்கிறது மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான நோக்கத்தை அகற்றிவிட்டது.” [16]
திருவாளர்புக்குயாமா கோளாறான படிகக்கல்லால் ஆன பந்தை உற்று நோக்குகிறார்சோவியத் உலகுக்குப் பிந்தைய உலக அமைதியை Rand அமைப்பின் கல்விமான் புக்குயாமா கற்பனைசெய்தவாறுஅமெரிக்காவானது உலகின் மேலாதிக்க சக்தியான அதன் நிலைக்கு ஒரு புதிய போட்டியாளர் தோன்றுவதை அனுமதிக்காது என்று அது பறைசாற்றுகிறதுஇந்த புதிய மூலோபாய கொள்கை வழிக்கு அமெரிக்க புவிசார் அரசியலின் ஒரு அத்தியாவசிய கருவியாக யுத்தத்தை உண்மையில் ஸ்தாபனமயப்படுத்தல் தேவைப்படுகிறதுஅதன்படி, 1990கள் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரே வெடிப்பைக் கண்டதுஇந்த தசாப்தம் ஈராக்கிற்குள் முதலில் நுழைவதில் தொடங்கி சேர்பியாவிற்கு எதிராக கொடூரமாக குண்டுகளை வீசுவதுடன் முடிந்தது.
அதன் தெளிவற்ற மூலகாரணம் மற்றும் நிறைவேற்றல் ஒருபோதும் போதுமான அளவுக்கு விளக்கப்படாத, 9/11 துயரமானது,ஒருபோதும் முடிவுறாத மற்றும் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்படும் பயங்கரத்தின் மீதான யுத்தத்தை” அறிவிப்பதற்கு புஷ் நிர்வாகத்தால் பற்றிக்கொள்ளப்பட்டதுஒபாமாவின் கீழ், “பயங்கரவாதிகளுக்கான” வெறிபிடித்த வேட்டையானது, முழுக்கோளத்தையும் வான்வெளியையும்  கூட  அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியமான அரங்காக மாற்றி இருக்கின்ற, கட்டுப்படுத்தப்படாத புவிசார் அரசியலின் வேட்கையுடன் ஒன்றிணைந்துள்ளதுசோவியத்திற்குப் பிந்தைய ஏகாதிபத்திய இராணுவவாத வெடிப்பால் உருவாக்கப்பட்ட குழப்பங்களின் கொடூரமான மனித விலையானதுஇன்றைய உலகில் (ஜூலை 2014) அகதிகளின் எண்ணிக்கை ஐம்பது மில்லியன்களை தாண்டிவிட்டது என்ற உண்மையால் சுட்டிக்காட்டப்படுகிறது. இது இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதின் பின்னரான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். [17மத்திய ஆசியா ஊடாக வாஷிங்டனின் கொலைசெய்யப்படும் அட்டூழியங்களின் பிரதான இலக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை மொத்த அகதிகளின் எண்ணிக்கையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோரைக் கொண்டுள்ளது.
புக்குயாமா தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியை அறிவித்த பின்னர் இருந்துஅது எங்கேயும்எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது என்பது மேலும் மேலும் வெளிப்படையாகி இருக்கிறதுஅமெரிக்க அரசானது என்றும் அதிகமான ஈவிரக்கமற்ற ஒரு கட்டுக்கடங்காத கடற்பூதத்தின் தன்மையை எடுக்கிறதுஉரிமைகள் மசோதா ஒரு வெற்றுருவாக்கப்பட்டுள்ளதுஅமெரிக்க அரசாங்கமானது அதன் குடிமக்களின் மீது ஆதிக்கத்தை வலியுறுத்துகிறதுஅவர்களை உளவுபார்ப்பது மற்றும் அவர்களது வாழ்வின் மிகத்தனிப்பட்ட அம்சங்கள் பற்றிய தகவலைத்திரட்டுவது மட்டுமல்லாமல்சட்ட அணுகுமுறை எதுவுமில்லாமல் அவர்களைக் கொல்லவும்கூட மேலாண்மையை உறுதிப்படுத்துகிறதுஇது ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்தில் உண்மையில் எண்ணிப்பார்க்க முடியாததாக இருந்திருக்கிறதுஎரிக் ஹோப்ஸ்வாமின் குறுகிய இருபதாம் நூற்றாண்டு” என்பதைப் பொறுத்தவரை அதன் அறிவுஜீவித உள்ளடக்கத்தின் வாழ்வு அதன் ஆசிரியர் கற்பனை செய்து பார்த்திருக்கக்கூடிய சாத்தியத்தை விடவும் குறுகியது என நிரூபிக்கப்பட்டுவிட்டதுபுதிய இருபத்தோராம் நூற்றாண்டானது தொடங்குவதற்கு முன்னரே அது 1900களின் வரலாற்றுப் பிரச்சினைகளால் முன்னரே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையாகியுள்ளதுஅதிகமான தொலைதூர கடந்த காலத்திற்குள் செல்வதிலிருந்து விலகிஇருபதாம் நூற்றாண்டானது பெரும் கடன்களை கொண்ட பண்பைப் பெற்றிருக்கிறதுஇதனை எப்படித் தீர்ப்பது என்பது ஒருவருக்கும் தெரியாது.
* * * * * *
இந்த செலுத்தப்படாத கடன்தற்போதைய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப வரலாற்றை திருத்தலுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் வடிவத்தில் வட்டியை வலிந்து கேட்கின்றதுவரலாற்றை கையாளுதல் அல்லதுஅவற்றின் சரியான பெயரில் அழைப்பதெனில், “போலி வரலாறு” ஆளும் செல்வந்தத்தட்டுக்களின் நிதி மற்றும் அரசியல் நலன்களுக்கு என்றுமிராத அளவு முழுமுட்டாள்த்தனமான வகையில் கீழ்ப்பட்டுத்தப்பட்டுள்ளதுவரலாற்றுக்கும் பிரச்சாரத்துக்கும் இடையிலான வேறுபாடு திட்டமிட்டமுறையில் தடமில்லாமல் அழிக்கப்பட்டுள்ளது.
வரலாறுபிரச்சாரமாக தரந்தாழ்த்தப்பட்டதன் விளைபொருள் இருபதாம் நூற்றாண்டு தொடர்பான இன்னொரு அணுகுமுறையை உருவாக்குவதாகியுள்ளது. “வரலாற்றின் முடிவு” மற்றும் குறுகிய இருபதாம் நூற்றாண்டு” “புனைந்துருவாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டுக்கு” வழிவகுத்துக்கொண்டிருக்கிறதுஇந்த பள்ளியின் படைப்பானது வரலாற்று பதிவுகளை நசுக்குதல்திரித்தல் மற்றும் முற்றுமுழுதாக பொய்மைப்படுத்துதல் ஆகும்இந்த செயற்திட்டத்தின் இலக்கு இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மிகமோசமான குற்றங்களை மூடிமறைத்தலும் சட்டரீதியானதாக காட்டுவதும்அதற்கு நேர்மாறாகசர்வதேச சோசலிச இயக்கத்தின் முழுப்போராட்டத்தையும் குற்றமாய் மற்றும் தார்மீக ரீதியில் முறைமையற்றதாயும் காட்டுவதாகும்.
வலதுசாரி வரலாற்று திருத்தல்வாதத்தின் இந்த நடைமுறைப்படுத்தலில், 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சியானது இருபதாம் நூற்றாண்டின் பிரதான குற்றமாகவும்இருபதாம் நூற்றாண்டின் குறிப்பாக ஹிட்லரின் நாஜி ஆட்சி மற்றும் இனஅழிப்பு உள்ளடங்கலான அடுத்தடுத்த பயங்கரங்கள் எல்லாம் தவிர்க்கவியலாதததாகவும் மற்றும் சட்டபூர்வமானதாகவும் அப்புரட்சியிலிருந்து தொடர்ந்து வந்ததாக காட்டப்பட்டதுசோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு முன்னர்இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய அத்தகைய ஒரு பூதாகர உருத்திரிப்புக்கள்குறிப்பாக ஜேர்மனியில்அறிவார்ந்த வகையில் சட்டபூர்வமற்றதாகவும் இழிவுக்குத் தகுதியானதாகவும் கருதப்பட்டிருக்கக்கூடும்.
1980களின் நடுப்பகுதி மற்றும் 1990களின் ஆரம்பத்தில்ஜேர்மனி ஆனது ஒரு புகழ்பெற்ற Historikerstreit —“வரலாற்றாளர்களின் மோதல்காட்சி ஆக இருந்தது. இது வரலாற்றாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட ஆல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையால் தூண்டிவிடப்பட்டதுநாஜி ஆட்சியின் குற்றங்கள்அக்டோபர் புரட்சி, 1918-21 ரஷ்ய உள்நாட்டுப் போர் மற்றும் சோவியத் போல்ஷிவிசத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு புரிந்து கொள்ளக்கூடிய பதிலிறுப்பாக பார்க்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்மூன்றாம் குடியரசு பற்றிய அனுதாபத்துடன்கூடிய மறுமதிப்பீட்டிற்கான அழைப்பில், “ரஷ்யப்புரட்சியின் பொழுது இடம்பெற்ற பூண்டோடு அழித்த நடவடிக்கைகளுக்கு அச்சம்கொண்ட பதில் நடவடிக்கையாக” நாஜி நடவடிக்கைகள் இருந்தன என்று நோல்ட்ட எழுதினார்நோல்ட்ட தொடர்ந்தார்: “மூன்றாம் குடியரசை அரக்கத்தனமாக சித்திரிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதுமூன்றாம் குடியரசு எல்லா மனிதசமூகத்தையும் மறுக்கும்பொழுது நாம் அரக்கத்தனம் பற்றிப் பேசலாம்மனிதசமூகம் என்ற அந்த வார்த்தை எல்லாம் மனிதத்தன்மை என்பது முடிவானது என்று எளிதாக அர்த்தப்படுத்துவதுடன்மற்றும் இதன்படி ஒன்றில் அனைவரும் நல்லவர்கள் இல்லை அல்லது அனைவரும் கெட்டவர்களும் இல்லைஅனைவரும் வெளிறிய தோல்நிறத்தை கொண்டவர்களும் இல்லை அனைவரும் கறுத்த தோலை கொண்டவர்களும் இல்லை”. [18]
நோல்ட்டவின் எழுத்துக்கள்இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர்ஹிட்லரையும் மூன்றாம் குடியரசையும் பாதுகாக்க குவிக்கப்பட்ட ஜேர்மன் உயர்கல்வியியல் அமைப்பின் ஒரு உறுப்பினரால் எடுக்கப்பட்ட மிகவும் வெளிப்படையான முயற்சியைக் குறிக்கிறது. 1939ல் சியோனிச உலக காங்கிரசின் தலைவரான சைய்ம் வைய்ஸ்மான், யூதர்கள் பிரிட்டனுடன் சேர்ந்து ஜேர்மனிக்கு எதிராகப் போராட வேண்டும் [19என்று அறிவித்தார் என்பதன் அடிப்படையில் ஐரோப்பிய யூதர்கள் கொடூரமாக நடத்தப்பட்டதை நோல்ட்ட நியாயப்படுத்தவும் கூட செய்தார். 1992ல் எழுதப்பட்ட மார்ட்டின் ஹெய்டெகரின் மிகவும் பெரிதளவிலான மனப்பாங்கு கொண்ட சுயசரிதையில்,  அம்மெய்யியலாரின் யூத எதிர்ப்பு மற்றும் நாஜிசத்தை அவர் அரவணைத்துக் கொண்டதை நோல்ட்ட சரிஎன்கிறார். “கம்யூனிசத்துடன் ஒப்பிடும்பொழுது தேசிய சோசலிசத்தின் ஜேர்மன் புரட்சியானதுஅதன் இலக்குகளில்... சொற்ப அளவானதாயினும் கூடஜேர்மனின் கௌரவத்தை மீட்டல் மற்றும் உரிமைகளின் சமத்துவத்தை நிலைநாட்டல் — இவற்றில் தன்னடக்கமானது — மற்றும் அதன் வழிமுறைகளில் மிதவாதப்போக்கு உடையது.” [20]
நோல்ட்டவின் எழுத்துக்கள் ஜேர்மன் மற்றும் அமெரிக்க கல்வித்துறை சார்ந்த சமூகத்தில் கொள்கைசார்ந்த எதிர்ப்பைக் கண்டது.நாஜிசத்தின் சார்பில் வரலாற்று ரீதியாக வருத்தம் தெரிவிப்பதில் ஈடுபட்டுள்ளவராக அவர் குற்றம் சாட்டப்பட்டார் மற்றும் ஒரு அறிஞர் என்ற வகையில் அவரது புகழ் சிதறுண்டுபோனதுஆயினும்இன்றுநோல்ட்டவின் நட்சத்திரம் உதயமாகி இருக்கிறதுஇப்பொழுது அவருக்கு தொன்னூறு வயதாகிறதுஇறுதியில் அவரது காலம் வந்துவிட்டது என்று ஒரு தீர்க்கதரிசியாக அவர் புகழப்படுகிறார்.ஜேர்மனியில் மிகவும் பரந்த அளவில் விநியோகமாகும் செய்தி இதழான Der Spiegel பிப்ரவரி 14, 2014 இதழில்வெளியான முகப்புக் கட்டுரையில் நோல்ட்டவின் கருத்துக்கள் மெய்ப்பிக்கப்பட்டிருப்பதாக அது கூறியதுஸ்ராலினின் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஹிட்லரின் குற்றங்களின் அளவு குறைந்தே தோன்றுகிறது என்று Der Spiegel வலியுறுத்துகிறதுDer Spiegel இதழால் பேட்டி எடுக்கப்பட்ட வரலாற்றாளர்களுள்பேர்லினுள் உள்ள கௌரவமிக்க ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகள் துறையின் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி (Jörg Baberowski) யும் ஒருவர்நோல்ட்டேயின் கருத்துகளுடன் எப்போதும் ஒத்துப்போகும்  பாபெரோவ்ஸ்கி, பின்வருமாறு அறிவிக்கிறார்: “ஹிட்லர் மற்றவர்க்கு ஊறுவிளைவிக்கும் மனநிலைதிரிந்தவர் அல்ல,மற்றும் அவர் இரக்கமற்றவரும் அல்லஅவர் யூதர்களை பூண்டோடு அழிப்பதைப்பற்றி தன்னுடைய மேசையில் யாரும் பேசுவதை விரும்பாதவர்.” [21]  மூன்றாவது குடியரசின் குற்றங்களின் வித்தியாசமான தன்மையையும் அதன் அளவினையும்  குறைத்துக்காட்டும் நோல்ட்டவின் முயற்சிகளை நியாயப்படுத்தி, “வரலாற்று ரீதியாக பேசினால் அவர் சரிதான்” [22என்று பாபெரோவ்ஸ்கி கூறுகிறார்.
எது தொடர்பாக நோல்ட்ட சரியாக இருந்தார்Der Spiegel ஆல் பேட்டி எடுக்கப்பட்ட நோல்ட்டபிரிட்டன் மற்றும் போலந்தின் விட்டுக்கொடுக்காத தன்மையால் ஹிட்லர் போருக்குச்செல்லும்படி தள்ளப்பட்டார் என்று கூறுகிறார்நோல்ட்ட, “யூதர்களுக்கு அவர்களின் சொந்த குலாக்கின் பங்கை’, காரணங்கூறுவதை வலியுறுத்துகிறார். “ஏனென்றால் சில போல்ஷிவிக்குகள் யூதர்களாக இருந்தனர்இந்த தர்க்கத்தின் படியூதர்கள் குறைந்தபட்சம் பகுதி அளவேனும் அவுஸ்விட்ச் (Auschwitz) க்கு பொறுப்பாயிருந்தனர்.நோல்ட்டவின் வெளிப்படையான கூற்றால் ஏதோஒரு வகையில் வியப்படைந்த Der Spiegel, அவரது நிலைப்பாடு யூத எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதமாக இருந்துவருகிறது” [23என்று உறுதிப்படுத்தியதுDer Spiegel இன் விமர்சனம் அந்த மட்டுக்குத்தான் இருந்தது. மேலும் நோல்ட்ட மற்றும் பாபெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் உண்மையில் எந்த பொது எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லைநோல்ட்ட மற்றும் பாபெரோவ்ஸ்கியின் கூற்றுக்கள் பெரும்பாலும் சவால்செய்யப்படவில்லை என்ற உண்மையானது அறிவுஜீவிதபோக்கு மட்டுமல்ல அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாகவும் இருக்கிறதுகடந்த வருடத்தின்பொழுதுஜேர்மன் இராணுவ வாதத்தை புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் ஆதரவைக் கட்டி எழுப்பும் தீர்மானகரமான அரசியல் பிரச்சாரம் இருந்திருக்கிறதுநாட்டின் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கால் முன்னெடுக்கப்பட்டுமுன்னணி பத்திரிகைகள்ஜேர்மன் மக்கள் தங்களின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமைதிவாதத்தை கடந்து ஜேர்மனியானது தனது எல்லைகளுக்கும் அப்பால் இராணுவ நடவடிக்கைகள் தேவைப்படுகின்ற முறைமையான பெரும்வல்லரசின் நலன்களைக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்கவேண்டும் என்று கோரின.
குறிப்பிடத்தக்கவகையில், “உரிய இடத்தை” ஜேர்மனி மீண்டும் பெறுவதற்கான அழைப்புக்களின் புத்துயிர்ப்பானது முன்னரே நிலைநாட்டப்பட்ட வரலாற்று ஒருமித்த கருத்தை வரலாற்றாளர்  பிரிட்ஸ் பிஷ்ஷரின் தகர்த்தெரிகின்ற மற்றும் மிக்க புரிதிறன் உள்ள ஆய்வான முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் குறிக்கோள்கள் (Griff nach der Weltmachtவெளியிடப்பட்ட 1961 காலப்பகுதிக்கு திரும்பிச்சென்றால் – 1914ல் உலக யுத்தம் வெடித்ததற்கு பிரதான பொறுப்பு இரண்டாம் கெய்சர் வில்ஹெல்ம்மின் முடியாட்சி என்ற கருத்தை செல்வாக்கிழக்கச்செய்யும் முயற்சிகளுடன் இணைந்துகொள்கிறது. 1999ல் இறந்த பிஷ்ஷர்ஒரு அறிஞர் என்ற வகையில் அவரது மறைவிற்குப் பின் தரப்படுகின்ற புகழை அழிக்கும் நோக்கம்கொண்ட தொடர்ந்த தாக்குதல்களின் இலக்காக இப்பொழுது ஆகி இருக்கிறார்.
உக்ரேனில் நிலவிக்கொண்டிருக்கும் நெருக்கடிநிகழ்கால புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு வரலாற்றை கீழ்ப்படுத்துவதன் ஒரு எடுத்துக்காட்டாகும்பாசிச அமைப்புக்கள் பிரதான பங்காற்றிய பிப்ரவரி 2014 வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியானதுஅமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஒரு ஜனநாயகப் புரட்சி என்று சந்தைப்படுத்தப்படுவது வரலாற்றுச்சான்றை படுமோசமான பொய்ம்மைப்படுத்தலால் எளிதாக்கப்படுகிறதுஇந்த நிகழ்வானது இந்த தொகுதியில் உள்ள கடைசிக்கு முந்தைய கட்டுரையின் கருப்பொருளாகும்.
* * * * * *
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பொய்ம்மைப்படுத்தல்கள் மற்றும் திரித்தல்கள் இவற்றுக்கெதிராக வரலாற்று உண்மையை பாதுகாப்பதற்கு கடந்த இருபது ஆண்டுகளாக  அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட சான்றின் ஒரு பகுதியை இந்த தொகுதி கொண்டிருக்கிறதுஇந்த போராட்டத்திற்காகத்தான் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நன்கு தயாரிக்கப்பட்டது. 1923ல் இடது எதிர்ப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இருந்துட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பொய்களுக்கு எதிராக அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தையும் வரலாற்று சான்றையும் பேணும்படி நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள்அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கு எதிரான அதிகாரத்துவ பிற்போக்கானதுட்ரொட்ஸ்கியை லெனினது கடும் எதிரியாய் சித்தரிக்கும் நோக்கத்துடன் ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளே எழுந்த 1917க்கு முந்தைய கன்னைப் போராட்டங்களை திரித்தலுடன் 1920களின் ஆரம்பத்தில் ஆரம்பித்ததுபின்னர்ட்ரொட்ஸ்கியின் அரசியல் நிலைப்பாடு அவரை ரஷ்ய விவசாயிகளின் கொடூரமான எதிரியாகக் காட்டுவதற்கு தவறாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. 1927ல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டதன் பின்னர் மற்றும்1929ல் சோவியத் ஒன்றியத்திலிருந்து அவர் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் சோவியத் வரலாற்றில் ஒவ்வொரு நிகழ்வும் ஸ்ராலினிச ஆட்சியின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப பொய்மைப்படுத்தப்பட்டதுசேர்ஜி ஐஸன்ஸ்டைன் கூட தனது சிறந்த படைப்பான 1927ல் எழுதப்பட்ட உலகைக் குலுக்கிய பத்து நாட்களில்ட்ரொட்ஸ்கியின் உருவம் எதுவும் இல்லாத அளவுக்கு மீள்வெட்டு செய்ய வேண்டி இருந்ததுஉண்மையில் அந்த மனிதர்தான் பெட்ரோகிராட்டில் 1917 அக்டோபர் எழுச்சியை ஒழுங்கு செய்தவரும் அதற்குத் தலைமை தாங்கியவருமாவார்.
ட்ரொட்ஸ்கியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கும்அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை மறுப்பதற்குமாக 1920களின் பொய்களும் மற்றும் பொய்மைப்படுத்தல்களும் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச்சென்றகம்யூனிஸ்ட் அகிலத்தை அமைத்த மற்றும் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய மார்க்சிஸ்டுகளின் தலைமுறையை பெரிய அளவில் களையெடுப்பு செய்வதற்கு, போலியான சட்டரீதியான மூடுதிரையாக நடத்தப்பட்ட போலி மாஸ்கோ விசாரணைகளுக்குள் 1930இல் பெருகிப் பரவினட்ரொட்ஸ்கி விளக்கியவாறுவரலாறு பற்றிய பொய்கள் அரசியல் பிற்போக்கினை கருத்தியலால் உறுதியாக்கும் ஒரு முக்கிய பங்காக சேவைசெய்தனநீதிமன்ற போலி வழக்குகளாயினும் அரசு மற்றும் செய்தி ஊடக பிரச்சாரமாயினும்கொள்கையற்ற குட்டிமுதலாளித்துவ கல்வியாளர்களால் வரலாற்றுச் சான்றுகள் திரிக்கப்படலோ ஆயினும் அவற்றின் நோக்கம்ஆளும் செல்வந்த தட்டுக்களின் குற்றங்களை நியாயப்படுத்துவதும்மக்கள் கருத்தை தடம் விலகச்செய்வது,முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சக்தி மிக்க மற்றும் புரட்சிகர போராட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படும் அறிவு மற்றும் தகவல்களைக் கிடைக்கவிடாமல் செய்வதுமாகும்இவ்வாறு வரலாற்று பொய்ம்மைப்படுத்தல்களுக்கு எதிரான போராட்டமானது, அரசியல் வேலையின் விருப்பத்தேர்வோ அல்லது இரண்டாந்தரமானதோ இல்லைசிறப்பாக அக்டோபர் புரட்சி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தின் அனுபவங்கள் இவற்றை இணைக்கும் வரலாற்று உண்மையை பேணுவது என்பது தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவின் மறுமலர்ச்சிக்கு அவசியமானதாகும்.
சோவியத் ஒன்றியத்தின் இறுதிக் காலங்களில் ரஷ்யப் புரட்சியின் வரலாறு பற்றி நாடு முழுவதும் பொதுவான அக்கறையின் ஒரு எழுச்சி இருந்ததுஒடுக்குமுறையின் பல பத்தாண்டுகாலத்திற்கு பின்னர்ட்ரொட்ஸ்கி பற்றிய கட்டுரைகளும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும் பரவலாக காணக் கிடைக்கலாயினஇந்த அபிவிருத்தியானது சோவியத் தலைமைக்குள்ளே ஒரு கவலையை எழுப்பியதுசந்தைப் பொருளாதாரத்திற்கு திரும்புவதுதான் ஒரே முன்னேறும் வழி என்று பொது மக்களை நம்பவைக்க விழைந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தொடர்ந்த முதலாளித்துவ சார்பு நோக்குநிலைக்கு மாறாகட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களும்,ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டமும் அதிகாரத்துவ ஆட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீடு சாத்தியமாக இருந்தது எனபதைத் தெளிவாக்கியது.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை எடுத்துச்செல்வதில் கிரெம்ளினின் முக்கிய நோக்கங்களின் மத்தியில் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே ஒரு சோசலிச முன்னோக்கு புத்துயிர்ப்பு பெறுவதை முன்கூட்டியே முறியடிப்பதாக இருந்ததுஇவ்வாறு,கலைப்பானது வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தலுடன் சேர்ந்துசோவியத் ஒன்றியமானது ஆரம்பத்தில் இருந்தே எதிர்காலம் இல்லா நிறுவனமாக இருந்தது என்ற கூற்றை மையப்படுத்தி இருந்ததுஇந்த புதிய சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்ம்மைப்படுத்தல் பள்ளியின் தோற்றம்புக்குயாமாமாலியா மற்றும் ஹோப்ஸ்வாம் எழுத்துக்களைப் போல அதே வளைவரைகோட்டில் நகருகிறதுஇவ்வனைத்துப் படைப்புக்களும்சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அக்டோபர் புரட்சியிலிருந்தே தவிர்க்கமுடியாத தொடர்ச்சி என்றும் மற்றும் வேறு எந்த விளைவுகளுமே சாத்தியமில்லை என்ற அடிப்படை செய்தியை நம்பவைப்பதாகும்ஸ்ராலினிசம் என்பதுஅக்டோபர் புரட்சியின் நெறிபிறழ்ந்த ஒன்று அல்ல மாறாக அதன் அவசியமான விளைபயன் என்பதாகும்அங்கு மாற்றீடு எதுவும் இருக்கவில்லை.
முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு” என்ற கருத்துருவின் அபிவிருத்தியில்இந்தப் புத்தகத்தில் உள்ள உரைகளும்கட்டுரைகளும்,அங்கு ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்று இருந்தது என்று வரலாற்றுச்சான்று முடிவாய் மெய்ப்பித்திருந்தது என்பதை வலியுறுத்தியுள்ளது.எதிர்நிகழ்வுகள் வரலாற்றில் ஸ்ராலினிசத்திற்கு  மாற்றீடுகள் இருந்தன என்ற எந்த கருதிப்பார்த்தல்களும் அர்த்தமற்ற மற்றும் முறைமை அற்ற செயற்பாடு என்ற ஹோப்ஸ்வாமின் கூற்றை நான் சவால்செய்திருக்கிறேன். “வரலாறு என்ன நிகழ்ந்தது என்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டாக வேண்டும்” என அவர் எழுதினார், “ஏனையவை ஊகம் தான்.” [24]
இந்த குறிப்பட்ட பகுதியில் கவனம் செலுத்துமாறு நான் அழைக்கிறேன்ஏனெனில் இதுசோவியத் ஒன்றியம் பற்றிய பரந்த அளவினதான மற்றும் நயவஞ்சகத்தனமான அணுகுமுறைக்கு முன்மாதிரியாக இருக்கின்றதுஹோப்ஸ்வாம் வரலாற்று ஆவணங்களை நேரடியாக பொய்மைப்படுத்தலில் தங்கியிருக்கவில்லை. ஹோப்ஸ்வாமின் வரலாற்று உண்மைகளுக்கு எதிரான பாவங்கள், முக்கியமான உண்மைகளை மறைப்பதிலும் மற்றும் முழுமையற்ற குறிப்புக்களையும் முன்வைப்பதிலும் இருக்கின்றது.ஹோப்ஸ்வாமின் தவிர்த்தல்கள் வரலாற்றை திரிபுபடுத்துதலுக்கு பங்களிக்கின்றன.
பெரும்பாலான உரைகள் மற்றும் கட்டுரைகளில்துரதிரஷ்டவசமாக தவிர்த்தல்களுடன் மட்டுமல்லாமல் வரலாற்று உண்மைகளை அப்பட்டமாக திரித்தல்களுடனும் கவனிக்கும்படி நான் நிர்பந்திக்கப்பட்டேன்என்னால் உதவமுடியாத நேரங்களும் இருந்தனஆனால் தங்களைத்தாங்களே வரலாற்றாளர்கள் என்று அழைத்துக்கொள்ளும்உண்மை அற்றது என விளக்கப்படக்கூடிய தாள் அறிக்கைகளை வைக்கக்கூடியமற்றும் இதன் மூலம் தங்களின் அறிவார்ந்த நேர்மையற்றதன்மை பற்றிய ஆதாரத்தை வருங்கால சந்த்திகளுக்கு விட்டுச்செல்லும் சில தனிநபர்கள் பற்றி ஆச்சரியப்பட்டேன்.
பொய்ம்மைப்படுத்தல் நடைமுறையானது பின்நவீனத்துவத்தின் பல்வேறு பள்ளிகளின் செல்வாக்கால் சாதகமாக இருந்ததுவரலாற்றை எழுதுவதன் மீதும் ஆய்வு செய்வதன் மீதும் அதன் திரண்டு வளரும் பாதிப்பு என்பது அழிவுகரமானதை தவிர ஒன்றுமில்லை.மெய்யியலில் இந்த பின்னடைவிற்கும் வரலாற்றைப் பொய்ம்மைப்படுத்தலுக்கும் இடையிலான இந்தத் தொடர்பு மிகைபடக் கூறமுடியாததுபேராசிரியர் பாபெரோவ்ஸ்கியின் எழுத்துக்களை மீண்டும் குறிப்பிடுவோம்இவர் பேராசிரியர் மிஷேல் ஃபூக்கோவின் மாணவராவார்அவர் தனது வரலாற்றின் பொருள் [Der Sinn der Geschichte] என்றதில் தனது படைப்பை வழிநடத்திய வழிமுறையியல் பற்றி விவரிப்பதாவது:
யதார்த்தத்தில் வரலாற்றாளர் கடந்தகாலத்தோடு ஒன்றும் செய்வதற்கில்லைமாறாக அதன்பொருள்விளக்கத்தோடுதான் அவரின் பணியுள்ளதுதாம் அழைக்கும் யதார்த்தம் என்பதை கடந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வார்த்தைகளில் இருந்து தனிமைப்படுத்த முடியாதுஅது உருவாக்கும் நனவிலிருந்து பிரிந்து அங்கு யதார்த்தம் என்பது இல்லைஆவணங்களின் வழியாக எம்மை வந்தடையும் நிகழ்வுகளை மீளுருவமைத்துக்கொள்வதன் மூலம் ரஷ்யப் புரட்சி உண்மையில் என்னவாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்துருவிலிருந்து நாம் நம்மைக் கட்டாயம் விடுவித்துக்கொள்ள வேண்டும்அதன் பிரதிநிதித்துவம் இல்லாமல் அங்கு யதார்த்தம் என்பது இல்லைவரலாற்றாளராக இருத்தல் என்பதன் அர்த்தம்ரோஜே சார்த்தியேரின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதெனில், பிரதிநிதித்துவங்களின் அரங்கை ஆய்வு செய்வதாகும். [25]  [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]
பாபெரோவ்ஸ்கி கருத்துவாத ஆன்மீக நித்தியவாதத்தின் [solipsism] மிக அதிதீவிர அளவை தூண்டுகிறார் சிந்தனையிலிருந்த பிரிந்து அதற்கு அப்பால் வெளியே யதார்த்தம் அங்கு இல்லை என்பது— இது புறநிலை ரீதியாக நிலவிய கடந்தகாலத்தின் உண்மையான மீள்கட்டமைப்பாக வரலாற்றுத் தொகுப்பை மறுப்பதை முறைமைப்படுத்துவதற்கு ஆகும்வரலாறு அகநிலைக் கட்டமைப்பாக மட்டுமே நிலவுகிறது என்று அவர் நமக்கு கூறுகிறார்அவை ஒருமுறை உண்மையில் நிலவியது என்றவகையில் சமூகபொரளாதார மற்றும் அரசியல் நிலைமைகளைத் துல்லியமாகத் தீட்டும் புறநிலை ரீதியான வரலாற்று உண்மை அங்கு இல்லைஅந்தவகையான வரலாற்று யதார்த்தம் என்பதில் பாபெரோவ்ஸ்கிக்கு அக்கறை எதுவும் இல்லைபாபெரோவ்ஸ்கி அறிவிக்கிறார்: “வரலாற்றாளனால் நிர்மாணிக்கப்படும் வளாகத்திற்குள் வரலாறு சேவை செய்யுமானால் அது உண்மையாக இருக்கிறது.” [26இந்த வரலாற்றின் அடித்தளத்தை அகற்றும் வேலையான மோசடியான விளக்கங்களை எழுதுவதுஉதாரணமாக ஹிட்லரின் குற்றகரமான ஆட்சியை புனருத்தாரணம் செய்வது போன்ற அகநிலைரீதியாக சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு சேவைசெய்யும்ஏர்ன்ஸ்ட் நோல்ட்ட போன்ற சக்திகளுடன் பேராசிரியர் பாபெரோவ்ஸ்கி சேர்ந்தது தற்செயலானது ஒன்றும் அல்ல.
எதிர்கால தலைமுறையானது, “முதலாளித்துவ சிந்தனையின் அடித்தளத்தில்” [27இருந்து தேடுகையில் குலைந்துபோன கருத்துருக்களுடன் வேலைசெய்யும்  ஜோன் பிரான்சுவா லியோதார்ட்,  ரிச்சார்ட் ரோர்ட்டி மற்றும் ஃபூக்கோ போன்ற மெய்யியல்வாத  பிற்போக்காளர்கள்இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலும் இருபத்தோராவது நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலும் அத்தகைய சரியான காரணமற்ற மற்றும் ஆபத்தான செல்வாக்கைத் திணிக்க எப்படி வந்தனர் என்பதை புரிந்துகொள்வதற்கு போராடும்.மெய்யியல்வாத பிரச்சினைகளுடன் அலசும் இந்த தொகுதியில் உள்ள உரைகளும் கட்டுரைகளும்பின்நவீனத்துவ கொள்ளைநோயின் அரசியல் மற்றும் சமூக அவலத்தைப் புரிந்துகொள்வதற்கு எதிர்கால அறிஞர்களுக்கு உதவுமானால் நான் மிகவும் மகிழ்வேன்.
இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்படும் அரசியல் அணுகுமுறை நாம் வாழுகின்ற காலம் மற்றும் கருப்பொருள் இரண்டிற்கும் பொருத்தமுடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன்வரலாறானது ஒரு யுத்தகளமாக ஆகி இருக்கிறதுஇறந்துபோன அனைத்து தலைமுறைகளதும் மரபானது வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் மூளைகளின்மீது ஒரு பேயுரு போல வருத்துகிறது” [28என்று மார்க்ஸ் எழுதினார்புதிய நூற்றாண்டுக்கான பதினைந்து ஆண்டுகளில்அரசியல்வாதிகளும் சரி வரலாற்றாளர்களும் சரி கடைசி ஒன்றின் பேரச்சங்களில் இருந்து தம்மை விடுவித்துகொள்ள முடியவில்லைஇருபத்தோராம் நூற்றாண்டின் என்றும் அதிகரித்துவரும் மோதல்களும் நெருக்கடிகளும் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு மீதான சர்ச்சைகளில் மாட்டிக்கொள்கின்றனதற்கால அரசியல் போராட்டங்கள் வரலாற்றுப் பிரச்சினைகளை தூண்டுகிறபோதுஇந்த பிரச்சினைகள் மேலும் மேலும் அரசியல் சிந்தனைகளால் வெளிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றனகடந்த காலமானதுஇந்நாளைய அரசியல் பிற்போக்கின் நலனில் பொய்மைப்படுத்தப்படுகிறதுஇருபதாம் நூற்றாண்டு வரலாற்றின்மிகப் பளிச்சிடும் பொய்ம்மைப்படுத்தல்களில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது அம்பலப்படுத்துவதன் மூலம்இந்த நூலானது எதிர்காலப் புரட்சிகரப் போராட்டங்களில் ஒரு ஆயுதமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என்பது இதன் ஆசிரியரின் நம்பிக்கை ஆகும்.
* * * * * *
இந்த நூலில் விஷயங்கள் காலவரிசைப்பட்டியலின் படிசில விலக்குகளுடன் மட்டும் முன்வைக்கப்பட்டுள்ளனஇது இரு பத்தாண்டுகாலம் மீதான வரலாற்று பிரச்சினைகள் மீதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பரிணாமத்தை பின்பற்றுவதற்கு வாசகரை அனுமதிக்கும்இயல்பான தொகுக்கும் முறையின் ஒரு பகுதியாகஅவர்கள் கேட்ட அரங்கிலிருந்து இடம்பெற்ற உரைகளின் அடிக்கடி மிகைப்படும் பகுதிகளை அவர்கள் வாசிக்கும் அச்சிட்ட பக்கத்திற்கு எளிதாக்குவதற்கு தேவைப்படும் அழகியல் மாற்றங்களை நான் செய்திருக்கிறேன்.
இந்த உரைகளும் கட்டுரைகளும் சர்வதேச ரீதியாகவும் அமெரிக்காவிற்குள்ளும் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உள்ள சகசிந்தனையாளர்களுடனும் தோழர்களுடனும் நான் பெற்ற ஆழ்ந்த ஒத்துழைப்பின் விளைவுகளைப் பிரதிபலிக்கும்சோசலிச சமத்துவக் கட்சியின் [Partei für Soziale Gleichheit]  தேசிய செயலாளரான உல்ரிச் ரிப்பேர்ட்டுடன்நாற்பதாண்டுகள் நெருங்கிய கால அளவு ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் துன்பகரமான மற்றும் சித்திரவதைசெய்யப்பட்ட வரலாறு தொடர்பாக கலந்துரையாடல் மற்றும் வேலைகளை செய்திருக்கிறேன். Frederick S. Choate இடமிருந்து பெற்ற உதவியை நான் பெரிதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்ரஷ்யா மற்றும் சோவியத் பற்றிய அவரது அறிவுநான் பல்லாண்டுகாலம் பெற்ற ஒரு அறிவுஜீவித வளமாகும்மெஹ்ரிங் நூலகத்தின் ஆசிரியர் குழுவிற்குமுற்றிலும் வேறு வேறான பகுதிகளில் இருந்து ஒருங்கிசைந்த மற்றும் முறையாக குறிப்புரைக்கப்பட்ட தொகுதியை ஒன்றிணைக்க பொறுப்பேற்றிருந்த Jeannie Cooper மற்றும் Heather Jowsey ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்இந்த தொகுதியில் உள்ள உரைகள் மற்றும் கட்டுரைகள் அவை திருத்த வரைவுப் படிகளாக இருந்து இறுதி வடிவத்திற்கு முன்னேறுகையில், அவற்றில் பலவற்றைக் கவனம் எடுத்து மீள்பார்வை செய்ததற்காக ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் லின்டா தெனென்பௌமிற்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன்.
இறுதியாகநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வேலையின் அபிவிருத்தியில் காலம்கடந்த சோவியத் வரலாற்றாளரும் சமூகவியலாளருமான வாடிம் ரொகோவினால் ஆற்றப்பட்ட பங்கைக் கவனமெடுக்குமாறு நான் அழைத்தாக வேண்டும். 1993 பிப்ரவரியில் கியேவ் நகரில் முதன்முறையாக நாங்கள் சந்தித்தோம். 1923க்கும் 1927க்கும் இடையில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக இடது எதிர்ப்பால் நடத்தப்பட்ட போராட்டத்தின்மாற்றீடு இருந்ததாஎன்று தலைப்பிடப்பட்ட ஆய்வை அண்மையில் அவர் முடித்திருந்தார்அங்கும் மாஸ்கோவிலும் அவருடன் நிகழ்த்தப்பட்ட கலந்துரையாடல்களின் விளைவாக அவர், “சோவியத்திற்கு பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் பள்ளிக்கு எதிராக சர்வதேச எதிர்த்தாக்குதலை” அபிவிருத்தி செய்வதில் அனைத்துலகக் குழுவுடன் வேலை செய்வதற்கு முடிவெடுத்தார். 1994ல் மரணத்தை விளைவிக்கும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு இருப்பினும்,அனைத்துலகக் குழுவால் உலகமெங்கும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் அவர் உரை ஆற்றினார்ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டம் பற்றிய வாடிமின் ஆய்வானது ஏழு தொகுதிகளாக வளர்ந்தது. 1991க்குப் பின்னர்இன்றைய நாள்வரை சோவியத் ஒன்றியம் பற்றிஅதாவது வரலாற்று இலக்கியத்தின் இந்த அற்புத படைப்புக்கு நடையிலும் கருத்தாழத்திலும் நிகராக இன்னொரு நூல் எழுதப்படவில்லை.
1998, ஜனவரியில் நான் இறுதியாக வாடிமுடன் மேடையை பகிர்ந்து கொண்டேன்சோசலிச சமத்துவக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பள்ளியில் உரையாற்றுவதற்காக அவர் தனது துணைவியார் காலியாவுடன் ஆஸ்திரேலிய சிட்னிக்கு பயணித்தார்அவரது உரையின் முடிவில்வாடிம் அவரது வரலாற்றுப் படைப்பின் இறுதித் தொகுதியை அனைத்துலகக் குழுவிற்கு அர்ப்பணிப்பதாக கூறினார்எட்டு மாதங்கள் கழித்து 1998 செப்டம்பர் 18 அன்று வாடிம் அவரது அறுபத்தோராம் வயதில் மாஸ்கோவில் காலமானார்.வரலாற்று உண்மைக்காகப் போராடிய இந்தப் போராளியின் நினைவுக்கு நான் இந்த தொகுதியை அர்ப்பணிக்கிறேன்.
ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இன்றே மெஹ்ரிங் நூலகத்திற்கு விஜயம் செய்யுங்கள்.
Footnotes:
1 The National Interest 19 (Summer 1989), p. 3. [back]
2 Francis Fukuyama, The End of History and the Last Man (New York: The Free Press, 1992), p. 46. [back]
3 Ibid., p. 299. [back]
4 Martin Malia, The Soviet Tragedy (New York: The Free Press, 1994), p. 514. [back]
5 Ibid. [back]
6 Ibid., p. 225. [back]
7 Ibid., p. 520. [back]
8 Eric Hobsbawm, The Age of Extremes (New York: Pantheon Books, 1994), p. 5. [back]
9 Ibid., p. 8. [back]
10 Ibid., p. 585. [back]
11 J.A. Hobson, Imperialism: A Study (Cambridge: Cambridge University Press, 2010), p. 113. [back]
12 Rudolf Hilferding, Finance Capital (London: Routledge & Kegan Paul, 1981), p. 368. [back]
13 V.I. Lenin, Collected Works, Volume 23 (Moscow: Progress Publishers, 1964), pp. 105–106. [back]
14 Leon Trotsky, The War and the International (Colombo: A Young Socialist Publication, June 1971), pp. vii-viii. [back]
15 Rosa Luxemburg, The Junius Pamphlet (Colombo: Young Socialist Pamphlet, undated), p. 17. [back]
16 The End of History and the Last Man, p. 263. [back]
17 Available: http://www.bbc.com/news/world-27921938 [back]
18 “Between Historical Legend and Revisionism? The Third Reich in the Perspective of 1980,” by Ernst Nolte in Forever In the Shadow of Hitler?, James Knowlton, ed., Truett Cates, tr. (Amherst, NY: Humanity Books, 1993), pp. 14–15. [back]
19 Cited by Geoffrey Eley in “Nazism, Politics and the Image of the Past: Thoughts on the West German Historikerstreit 1986–1987,” Past and Present, No. 121, November, 1988, p. 175. [back]
20 Martin Heidegger: Politik und Geschichte im Leben und Denken by Ernst Nolte, cited in a review by Richard Wolin, The American Historical Review Volume 98, No. 4, Oct. 1993, p. 1278. [back]
21 Available: http://www.spiegel.de/international/world/questions-of-culpability-in-wwi-still-divide-german-historians-a-953173.html [back]
22 Ibid. [back]
23 Ibid. [back]
24 Eric Hobsbawm, On History (London: Weidenfeld & Nicolson, 1997), p. 249. [back]
25 Jörg Baberowski, Der Sinn der Geschichte: Geschichtstheorien von Hegel bis Foucault (Munchen: C.H. Beck, 2005), (translation by D. North), p. 22. [back]
26 Ibid., p. 9. [back]
27 The phrase was coined by G.V. Plekhanov. [back]
28 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 11 (New York: International Publishers, 1979), p. 103. [back]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts