Search This Blog

Friday, 22 August 2014

அமெரிக்கா ஆசிய யுத்த உந்துதலை வேகமாக தொடர்கிறது

வ்வொரு பிரதான சர்வதேச கூட்டங்களும், விவாத கருத்தரங்குகளும் அல்லது உச்சி மாநாடுகளும் புதிய ஆத்திரமூட்டல்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும்,யுத்த தயாரிப்புகளுக்கும் ஒரு களமாக மாறி வருகின்றன என்ற அளவுக்கு உலகம் முழுவதிலும் புவிசார்-அரசியல் உறவுகளின் செறிந்த நிலைமை நிலவுகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெலின் ஆசியப் பயணங்களும் இதேபோன்றவொரு விடயமாக இருக்கின்றன.
அந்த இரண்டு அதிகாரிகளுமே செவ்வாயன்று அவர்களது ஆஸ்திரேலிய சமதரப்பினரோடு AUSMIN ஆண்டு பேச்சுவார்த்தைக்காக சிட்னி சென்றிருந்தனர்அமெரிக்க கப்பல்கள்போர்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான ஒரு தளமாக ஆஸ்திரேலியாவை பலப்படுத்தக்கூடிய,சீனாவிற்கு எதிராக நோக்கங்கொண்டஒரு இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திடுவதே அக்கூட்டத்தின் மையப்புள்ளியாக இருந்ததுஆனால் அந்த இரண்டு கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதற்குஈராக்கில் புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க வான்வழி போருக்கு அவர்களின் பொறுப்புறுதியை அறிவிப்பதற்குமற்றும் காசாவில் இஸ்ரேலின் இடுக்கிப்பிடிக்கு ஆதரவளித்து கொண்டிருக்கின்ற அதேவேளையில் அப்பகுதியைக் குறித்து சிறிது முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் அதை பயன்படுத்தின.
மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டியும்மற்றும் அந்த விபத்து நடந்த இடத்தில் சர்வதேச புலனாய்வாளர்களை நிறுத்த ஒரு ஐநா தீர்மானத்திற்கு அழுத்தம் அளித்தும்ஆஸ்திரேலிய கூட்டணி அரசாங்கம் உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் பதட்டங்களைத் தூண்டிவிடுவதில் குறிப்பாக ஒரு ஆத்திரமூட்டும் பாத்திரத்தை வகித்துள்ளதுஅந்த MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதற்கு ரஷ்யா தான் பொறுப்பாகும் என்ற ஆதரமற்ற வாதங்களை மீண்டும் வலியுறுத்துவதற்குமற்றும் இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் விலக்கி வைக்கப்பட வேண்டுமென்று எச்சரிப்பதற்கு கெர்ரி சிட்னியின் தளத்தைப் பயன்படுத்தினார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப்போ இன்னும் மேலதிகமாக மோதல்போக்கோடு இருந்தார்ரஷ்ய உதவிப்பொருள் வாகனங்கள் மீது ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே பகிரங்கமான மோதல் அபாயம் அதிகரித்திருக்கையில்அவர் ஏதோவொருவித மனிதாபிமான நடவடிக்கையின் போர்வையின் கீழ் உக்ரேனுக்குள் நுழைவதற்கான ரஷ்யாவின் எந்தவொரு முயற்சியையும் ஆஸ்திரேலியா சாத்தியமான பலமான வார்த்தைகளைக் கொண்டு கண்டிக்கும்என்று அறிவித்தார். “மேஜையின் மீது அனைத்தும் பரிசீலனைக்கு உள்ளன," என்ற அறிவிப்போடுஏற்கனவே அவர்ரஷ்யாவிற்கு உரேனியம் தாது விற்பதற்கு கான்பெர்ரா தடைவிதிக்கக்கூடுமென கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
ஈராக்கிய வான் எல்லைகளில் அமெரிக்க போர் விமானங்கள் திரும்பி வந்ததை நியாயப்படுத்துவதற்காக ஈராக்கில் ஒபாமா நிர்வாகத்தினது"மனிதாபிமானதிட்டத்திற்கு கான்பெர்ரா முழு ஆதரவளிக்கின்ற நிலையில்,இந்த பாசாங்குத்தனம் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
உலகின் மறுபக்கத்தில் கான்பெர்ரா வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் முகவராக செயல்பட்டு வருகிறது என்ற உண்மை ஒரு பிதற்றலோ அல்லது MH17சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு வெறுமனே ஒரு விடையிறுப்போ அல்லஅது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போர் திட்டங்களுக்குள் ஆஸ்திரேலியா நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது என்பதிலிருந்து வருகிறது.
உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் அமெரிக்க தலைமையிலான மோதல்,சீனாவிற்கு எதிரான அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புமற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் இராணுவத்தைக் கட்டமைக்கும் அதன் நடவடிக்கைகளின் ஒரு துணுக்காகும்மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இடையேவாஷிங்டன் அதன் மூலோபாய ஒருங்குவிப்பை யுரேஷியாவிற்கு மாற்றியுள்ளதுஒப்பீட்டளவில் அதன் வரலாற்று வீழ்ச்சியால் உந்தப்பட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம்,இந்த பரந்த நிலப்பகுதியின் மீதும்மலிவு உழைப்புகள் மற்றும் மூலப்பொருட்களின் அதன் பரந்த வளங்களின் மீதும் மேலாதிக்கம் செலுத்துவதற்கு அதன் நீண்டகால அபிலாஷையைப் பின்தொடர்ந்து வருகிறது.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் யுத்தத்திற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கின்ற நிலையிலும் கூடஒபாமா நிர்வாகம் ஆசியாவில் பெய்ஜிங்கை நோக்கமாக கொண்ட இராணுவ கூட்டணிகளின் ஒரு வலையமைப்பைக் கட்டமைத்து வருகிறதுஅத்தோடு சீனாவிற்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையிலே ஒரு பிளவைத் தூண்டிவிடுவதற்கும் மற்றும் சீன ஆட்சியை "விரிவாக்கவாத ஆட்சியாகசித்தரிப்பதற்கும் முயன்று வருகிறதுஆஸ்திரேலியாவில் அவர்கள் வருவதற்கு முன்னர்,கெர்ரியும் ஹாகெலும் புதிய வலதுசாரி இந்திய அரசாங்கத்தோடு அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டுறவுகளை ஒருங்கிணைக்க புது டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்கள்முக்கியமாக இராணுவ தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதில் ஹாகெல் நெருக்கமான கூட்டுறவுக்கு முன்மொழிந்தார்அது அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் என்பது மட்டுமல்லமாறாக காலங்காலமாக இந்தியா ரஷ்ய ஆயுதங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து அதை பிரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
கெர்ரி கடந்த வாரம் பர்மாவில் நடந்த தெற்காசிய நாடுகள் அமைப்பின்(ஆசியான்பிராந்திய விவாத கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்அங்கே அவர் தென்சீனக் கடலில் சீனாவினது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் என்று கூறப்படுபவைகளை "நிறுத்துவற்கானகோரிக்கையோடு சீனாவை எதிர்கொண்டார்பதட்டங்களைத் தணிப்பதற்காக அல்லாமல்பெய்ஜிங்கின் நடவடிக்கைகளை ஒரு ஆக்ரோஷமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளாக முத்திரை குத்துவதில் ஒரு புதிய அளவுகோலை அமைப்பதே கெர்ரியின் நோக்கமாக இருந்ததுகடந்த நான்காண்டுகளாக,ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிராக குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை அவற்றின் உரிமைகோரல்களுக்கு மூர்க்கமாக அழுத்தம் அளிக்க ஊக்குவித்ததன் மூலமாகதென்சீனக் கடலில் ஓப்பீட்டளவில் சிறிய எல்லை பிரச்சினையாக இருந்ததை அபாயகரமான யுத்த வெடிப்புப்புள்ளிகளாக மாற்றிவிட்டிருக்கிறது.
இந்தியா மற்றும் ஜப்பானோடு சேர்ந்துஆஸ்திரேலியாவும் அமெரிக்க"முன்னெடுப்பின்முக்கிய அச்சாணிகளில் ஒன்றாக உள்ளதுஇந்த வாரம் கையெழுத்தான படைகளை நிலைநிறுத்துவதற்குரிய அமெரிக்க-ஆஸ்திரேலிய ஒப்பந்தமானதுவடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க கப்பற்படைகளை நிலைநிறுத்துவதற்கு 2011இல் முந்தைய தொழிற் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை உறுதிப்படுத்துவதாக உள்ளதுஅந்த ஆவணம் டார்வினில் ஒட்டுமொத்த கடல்வழி வான்வழி/தரைவழி படைப்பிரிவுகளை நிறுத்துவதற்கும்அத்தோடு வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில்"விரிவாக்கப்பட்ட விமான கூட்டுறவுமற்றும் "கடற்படை கூட்டுறவுக்கும்"சட்டபூர்வ மற்றும் நிதியியல் கட்டமைப்புகளை அமைத்துக் கொடுக்கிறது.
ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால்அமெரிக்கா ஆஸ்திரேலிய கண்டத்தை சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பரந்த இராணுவ தளமாக மாற்றி வருகிறதுஅதுவும் குறிப்பாக தென்சீனக் கடலில் மலாக்கா ஜலசந்தி போன்ற இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களின் மத்தியில் மூலோபாய கப்பல் போக்குவரத்து தடைச்சாவடிகளை அமைக்க முனைந்து வருகிறது.படைகளை நிலைநிறுத்தும் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க-இந்திய பாதுகாப்பு கட்டமைப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கி இருக்கும் முக்கிய கடமைப்பாடுகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியங்களாக வைக்கப்பட்டிருக்கின்றனமுதலாம் உலக போருக்கு களம் அமைத்த இரகசிய நெறிமுறைகள் மற்றும் உடன்படிக்கைகளைப் போலதற்போதைய இராணுவ திட்டங்களும் தயாரிப்புகளும்யார் யுத்தத்திற்கு பெரிதும் விரோதமாக இருக்கிறார்களோ அந்த உழைக்கும் மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய ABC-TVஇன் "7.30" நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களில்,பாதுகாப்புத்துறை செயலர் ஹாகெல் அமெரிக்கா உலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் பின்வாங்கி வருகிறது என்ற கருத்தை அழுத்தமாக நிராகரித்தார். “நீங்கள் ஆசிய பசிபிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்நாங்கள் ஆசிய பசிபிக்கில் முன்னொருபோதும் செய்யாத அளவிற்கு அங்கே மேலதிக கப்பல்களோடுமேலதிக நபர்களோடுமேலதிக முனைவுகளோடு நிறைய செய்து வருகிறோம்நாங்கள் உலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் பின்வாங்கவில்லைஉக்ரேனில் பாருங்கள்கிழக்கு ஐரோப்பாவில் நாங்கள் ஈடுபட்டிருப்பதைப் பாருங்கள்நாங்கள் மத்திய கிழக்கில் பெரும் எண்ணிக்கையில் படைகளை நிலைநிறுத்தி இருக்கிறோம்," என்று அறிவித்தார்.
"ஒரு புதிய உலக அமைப்பு முறையை வரையறுக்க முயன்றுவருவதை நான் உலகின் கணிக்கவியலாத அபாயமாக கருதுகிறேன்," என்று அவர் கவலையை வெளியிட்டார். “புதிய உலக அமைப்பு முறைக்குதலைமை கொடுக்கவும் மற்றும் அதை வடிவமைக்கவும் அமெரிக்கா கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்ஹாகெல் குறிப்பிடும் அந்த"கணிக்கவியலாத அபாயம்", கடந்த நூற்றாண்டில் இரண்டு உலக போர்களை விளைவித்த முதலாளித்துவத்தின் அதே தீர்க்கவியலா முரண்பாட்டிலிருந்து,அதாவது உலகளாவிய பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய அமைப்புமுறைக்கும் இடையிலிருக்கும் முரண்பாட்டிலிருந்துவெடித்தெழுந்த விளைபொருளாகும்அமெரிக்க ஏகாதிபத்தியம் வார்த்தையளவில் ஒட்டுமொத்த உலகையும் அதன் நலன்களுக்கிணங்க "வடிவமைக்க"முனைந்துள்ளதுஅதன் இரக்கமற்ற அதிகளவிலான இராணுவப் படை பிரயோகங்களின் மூலமாகஅது மற்றொரு பெரும்மோதலை நோக்கி மனிதகுலத்தை மூழ்கடித்து வருகிறது.
அதன் மூலகாரணமாக உள்ள முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலமாக இந்த யுத்த உந்துதலை நிறுத்துவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே தகைமை கொண்டதாகும்அதற்கு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்தசர்வதேச யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்அதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடி வருகிறது.

Peter Symonds
16 August 2014
http://www.wsws.org/tamil/articles/2014/aug/140821_uswa.shtml

Tuesday, 19 August 2014

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் காசா மீதான இஸ்ரேலியஇராணுவத் தாக்குதலுக்கு எதிராக ஆகஸ்ட் 5 அன்று மத்திய கொழும்பில் உள்ளலிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
சுமார் 50 கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்றனர். தொழிலாளர்கள் வீடு திரும்பும் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சுலோக அட்டைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்: "காசா மீது கை வைக்காதே!", "காசா மீது இஸ்ரேலியஆக்கிரமிப்பை எதிர்ப்போம்!", "அரபு மற்றும் யூத தொழிலாளர்களைஐக்கியப்படுத்து!", "மத்திய கிழக்கில் ஒரு ஐக்கிய சோசலிச குடியரசுக்காக!","ஏகாதிபத்திய உலகப் போர் திட்டங்களை எதிர்த்திடு!"

W.A. சுனில் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சோசக அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில்,காசா மீதான இஸ்ரேல் இராணுவத் தாக்குதலின் இலக்கு, 60 ஆண்டுகளுக்கும் மேலான பாலஸ்தீன எதிர்ப்பை தகர்ப்பதாகும் எனக் கூறினார். அமெரிக்கமற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை கொண்ட இஸ்ரேலியதாக்குதல்களின் கொடூரமான பண்பை சுட்டிக்காட்டிய சுனில், "சர்வதேசதொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இந்த ஏகாதிபத்தியசக்திகள் களஞ்சியத்தில் வைத்திருப்பவை என்ன என்பது பற்றி அவர்களுக்குஒரு எச்சரிக்கை ஆகும்," என்றார்.
ஜூலை 15 இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுனில் சுட்டிக் காட்டினார். "‘சம்பந்தப்பட்ட தரப்பினர் வன்முறையை நிறுத்துவதற்கு கூடுமானவரை சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்', என்று அழைப்புவிடுக்கும் அந்த அந்த அறிக்கை, இஸ்ரேலையும் ஹமாஸையும் ஒரே நிலையில் வைப்பதன் மூலம் இஸ்ரேலை குற்றத்தில் இருந்து காக்கின்றது," என்று அவர் விளக்கினார்.
நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிசகட்சியும் கொழும்பில் ஜூலை 31 ஏற்பாடு செய்து, "பாலஸ்தீனியர்கள் வாழ விடு" என்ற தொனிப்பொருளில் அழைக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தின்ஏகாதிபத்திய சார்பு அரசியலை பேச்சாளர் அம்பலப்படுத்தினார். அந்ததொனிப்பொருள் இஸ்ரேல், அதன் அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்தியஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு சமமானதாகும், என்று பேச்சாளர் கூறினார். "மாறாக, சோசக/ஐவைஎஸ்எஸ்இ பிரச்சாரத்தின் நோக்கம்,ஏகாதிபத்தியம் மற்றும் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளுக்கு எதிராக, ஒருசர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளவர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதாகும்."
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சோசக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்பொரளை மற்றும் புறக்கோட்டையில் இருந்து பல முக்கிய வீதிகள் ஊடாகஅணிவகுத்து சென்று லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடினர். இந்த அணிவகுப்புபுஞ்சி பொரளை, மருதானை, கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ் போன்றகூட்டம் நிறைந்த பிரதேசங்களை கடந்து சென்றது. 

சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர் முஸ்லீம் குடும்பத்துடன் பேசுகிறார

"காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்திடு" என்ற WSWS அறிக்கையின் சுமார்3,000 பிரதிகள் சிங்களம் மற்றும் தமிழில் விநியோகிக்கப்பட்டன. இந்ததுண்டுப்பிரசுரமானது எதிர்வரும் ஆகஸ்ட் 18 அன்று கொழும்பு பொது நூலககேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள, உலக போர் ஆபத்துக்களை பற்றி சோசக/ஐவைஎஸ்எஸ்இ ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தின் விளம்பரமும் அடங்கியிருந்தது.
அணிவகுப்பில் சென்றவர்களுக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள்மற்றும் பெண்களிடமிருந்து சிறந்த பிரதிபலிப்பு கிடைத்தது. சாரதிகள் வாகனத்தை நிறுத்தி துண்டு பிரசுரங்களை கேட்டனர். அதேபோல் பஸ்பயணிகளும் கேட்டனர். வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும்ஆர்வத்துடன் சோசக பிரச்சாரகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.முஸ்லீம் பகுதிகளில் சிறந்த ஆதரவு கிடைத்தது.
புறக்கோட்டை சில்லறை வியாபாரிகள் குழுவினர் WSWSக்கு கருத்து தெரிவித்தனர். அதில் பின்வருவனவும் அடங்கும்:
“அமெரிக்கா இஸ்ரேலுக்கு 250 மில்லியன் டொலர் கொடுத்ததாக நேற்றுபத்திரிகைகளில் பார்த்தோம். எனவே அமெரிக்கா குழந்தைகள் மற்றும் பெண்கள்உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள்கொலைசெய்யப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும். நேற்று அவர்கள் [இஸ்ரேல்]ஒரு பாடசாலையை தாக்கியுள்ளனர். நாம் இந்த தாக்குதல்களை கண்டிக்கிறோம்.
 "அமெரிக்கா எந்த ஆதாரமும் இல்லாமல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவை குற்றம் சாட்டியது. ஆனால் ரஷ்யா, அதைஉக்ரேன் செய்தமைக்கான சான்றுகளை வழங்கியது. அமெரிக்கா மேலும்அழிவுகரமான யுத்தங்களைத் தொடங்கப் போகிறது. 
"இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், முஸ்லீம்மக்களுக்கு எதிராக சில அரசாங்க ஆதரவு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.அரசாங்கம் மக்களை பிரிக்க விரும்புகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா போன்றஏகாதிபத்திய சக்திகள் இதே முறையையே பயன்படுத்துகின்றன. ஈராக்கில்இப்போது என்ன நடக்கிறது பாருங்கள். மக்கள் சுன்னி, ஷியா மற்றும் குர்திஷ் என மூன்று குழுக்களா பிரிக்கப்பட்டுள்ளனர்."

கட்சியின் பகுப்பாய்வை விளக்குகிறார்

சிவில் உடையில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், "நாம் குழந்தைகள் மற்றும்அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக கொழும்பு நடத்திய யுத்தத்தை ஆதரித்தது என்றுசுட்டிக்காட்டிய போது, ஏன் வாஷிங்டன் போர் குற்றங்கள் தொடர்பாக இராஜபக்ஷஅரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது என அவர் கேட்டார். இலங்கைஅரசாங்கத்தை விட அதிக குற்றங்களை அமெரிக்கா செய்கையில், அதற்கு[இலங்கையில்] போர் குற்றங்களை விசாரிக்க உரிமை இல்லை, என அவர் கூறினார்.
புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தால் கொல்லப்பட்ட மற்றும்இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து அமெரிக்கவுக்கு எந்தகவலையும் இல்லை என்று சோசக ஆதரவாளர்கள் விளக்கினார். இரத்தக்களரிமோதலுக்கு முழுமையாக ஆதரவளித்த நிலையில், அமெரிக்கா, இராஜபக்ஷஅரசாங்கத்தை சீனாவில் இருந்து ஒதுங்குவதற்கும் வாஷிங்டனுடன் இன்னும்நெருக்கமாக இணைவதற்கும் அழுத்தம் கொடுக்கவே போர்க்குற்றங்களைபயன்படுத்தி வருகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஒரு பெண் தொழிலாளிதெரிவித்ததாவது: "தொழிலாளர்கள் காசா மீதான தாக்குதல்களை எதிர்க்கவேண்டும். இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுகின்றது என்பதுதெளிவாக இருக்கிறது. சிலர் 'இலங்கைக்கும் இதற்கும் என்ன தொடர்பு?' என்று கேட்கின்றனர். அது போன்ற கேள்விகள் அவசியமான கேள்விகளைதவிர்க்கின்றன என நான் நினைக்கின்றேன். இது ஒரு பரந்த உலக போர்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நான் உங்கள் துண்டுப்பிரசுரத்தைபடித்து உங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்."

ஒரு தொழிலாளி சோசலிச சமத்துவக் கட்சி துண்டுப்பிரசுரத்தை படிக்கிறார்

ஒரு முஸ்லீம் இளைஞர் தெரிவித்ததாவது: "காசா பற்றி பேசுவது மிகவும்முக்கியம். எனக்கு உங்கள் கட்சி பற்றி அதிகம் தெரியாது ஆனால் இஸ்ரேலின்நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் சில எங்களைசமாதானப்படுத்தக் கூறுவது போல் இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒருபோர் அல்ல. இஸ்ரேலினால் மொத்த பாலஸ்தீனியர்களும்கொல்லப்படுகின்றனர்."
ஒரு தொலைத்தொடர்பு தொழிலாளி தெரிவித்ததாவது: "நான் பாலஸ்தீனம்இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்க்கிறேன். எல்லோரும் அதை எதிர்க்கவேண்டும், ஆனால் உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்று முழுமையானதகவல்களை இங்கு பெற முடியாது. மக்களுக்கு புரியவைக்க முயற்சிக்கும்உங்கள் பிரச்சாரத்திற்கு நான் ஆதரவு தருகிறேன்...
"உங்கள் செயல்கள் என்ன நடக்கிறது என்று மக்கள் புரிந்துகொள்ள உதவும். காசாபகுதியில் உள்ள ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நான் உங்கள்துண்டுப்பிரசுரத்தை படிக்கிறேன், மற்றும் ஒரு உலக யுத்தத்தை நோக்கிய நகர்வு பற்றிய உங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறேன்."
By WSWS correspondents
8 August 2014
http://www.wsws.org/tamil/articles/2014/aug/140819_sril.shtml

Sunday, 17 August 2014

காசா, உக்ரேன் மற்றும் நகரப்புற யுத்தத்திற்கான அமெரிக்க தயாரிப்புகள்


காசாவில் சிக்கியுள்ள மக்களுக்கு எதிராக பத்தாயிரக் கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தியதையும்மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வறிய காசா பிராந்தியத்தை குண்டுகள்ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் தகர்த்துள்ளதையும்ஒரு மாதத்திற்கும் மேலாக உலகம் திகிலோடு பார்த்து வந்திருக்கிறதுஇந்த தொடர் தாக்குதலில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்வீடுகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் பாரியளவில் அழிக்கப்பட்டதால் சுமார் ஒரு அரை மில்லியன் மக்கள் இடம் பெயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து ஊடகங்களில் வெகு குறைவான செய்திகளே வெளியாகி வருகின்ற நிலையில்இதேபோன்ற அட்டூழியங்கள் கிழக்கு உக்ரேனிலும் கட்டவிழ்ந்து வருகின்றனஅங்கே பிரதான நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் மீதான கடுமையான முற்றுகையில் அமெரிக்க ஆதரவிலான கியேவ் ஆட்சிசுயஅதிகாரம் கொண்ட பாசிச போராளிகள் குழுக்களின் முக்கிய ஆதரவோடுஅதன் இராணுவ தாக்குதலைத் தொடங்கி இருந்ததுகடந்த இரண்டு வாரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதோடுபுதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் மிதமான ஒரு மதிப்பீட்டின்படி 2,086 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்;குறைந்தபட்சம் 5,000க்கும் அதிகமானவர்கள் உறுதியாக காயமடைந்திருந்தார்கள்.
இங்கேயும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள்இது கியேவில் உள்ள வலதுசாரி தேசியவாதிகளால் ஒரு திட்டமிட்ட இன சுத்திகரிப்பு பிரச்சாரமாக உருவெடுத்து வருகிறதுமேலும்காசாவைப் போலவேஇங்கேயும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது குண்டுவீசப்பட்டு இருக்கின்றனஅதில் நோயாளிகளும்குழந்தைகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
காசா மற்றும் உக்ரேன் இரண்டு இடங்களிலிருந்தும் கிடைக்கும் குழந்தைகளின்வயதானவர்களின் உயிரற்ற மற்றும் ஊனமுற்ற உடல்களைக் காட்டும் படங்களும்வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் இடிபாடுகளுக்கு பின்னாலிருந்து அழுது கொண்டிருக்கும் பெண்களின் படங்களும்மற்றும் தங்களின் வீட்டை விட்டு வெளியே வந்த போதோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்காக உணவோ அல்லது குடிநீரோ பெற சென்ற போதோ குண்டுகளின் கூர்மையான உலோகங்களால் வெட்டப்பட்ட அப்பாவி ஆண்கள் மற்றும் பெண்களின் படங்களும்,உலகெங்கிலும் உள்ள அனைத்து உழைக்கும் மக்களை அதிர்ச்சியும் திகைப்பும் அடைய செய்திருக்கிறது.
எவ்வாறிருந்த போதினும்இதர வட்டாரங்களில்இந்த சம்பவங்கள் விறுப்புவெறுப்பின்றி தொழில்ரீதியான நலன்களோடு உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.
இது தான் பேர்லின் மற்றும் இதர ஐரோப்பிய தலைநகரங்களின் மூத்த அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களின் அலுவலகங்களில் நடக்கும் விடயமாக உள்ளதுஅவை கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிரான கியேவ் ஆட்சியினது "பயங்கரவாதத்திற்கு எதிரானபிரச்சாரத்தை ஆதரித்துள்ளன.
இந்த ஒடுக்குமுறை யுத்தத்தில் ஒட்டுமொத்த தரைப்படை தாக்குதலும் தோற்றப்பாட்டளவில் தீவிர வலது மற்றும் நவ-நாஜி போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ள நிலையிலும்ஐரோப்பிய அரசாங்கங்களோ தொடர்ந்து மவுனமாக இருக்கின்றனஅவற்றில் அஜோவ் இராணுவபிரிவும் (Azov Battalion) உள்ளடங்கும்அதுலண்டனின் Sunday Timesகுறிப்பிடுவதைப் போல, "நாஜி அதிரடி துருப்புகளால் பயன்படுத்தப்பட்டதும் தற்போது ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளதுமான ஓநாயின் கொக்கியை அதன் முத்திரையாக பயன்படுத்துகிறது."
அவர்களே ஒப்புக்கொண்ட விதத்தில்இந்த பாசிச போராளிகள் குழுக்கள் ஸ்வீடன்இத்தாலிபிரான்ஸ்கனடா மற்றும் கிரீஸ் உட்பட வேறு பல நாடுகளின் நவ-நாஜிக்களையும் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் நியமனங்களையும் உள்ளெடுத்துக் கொண்டிருக்கிறதுசிரியாவில் சண்டையிட சென்று பின்னர் ஐரோப்பாவிற்குத் திரும்பும் ஐரோப்பிய இஸ்லாமியவாதிகளின் அபாயங்கள் குறித்த கூக்குரல்களும்,சாடைமாடையான பேச்சுக்களும் அங்கே நிரம்பி இருக்கின்ற போதினும்,கிழக்கு உக்ரேனில் சண்டையிட்டு பயிற்சியைப் பெற்றுவரும் அவர்களைக் குறித்து அங்கே எந்தவொரு பேச்சுக்களும் எழுப்பப்படவில்லை.அக்கண்டத்தில் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களின் நிலைமைகளின் கீழ்,பாசிச குண்டர்களை உள்ளடக்கிய சண்டை வெகு அருகாமையிலான எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்குமென ஐரோப்பிய ஆளும் மேற்தட்டின் சில அடுக்குகளிடையே சந்தேகத்திற்கிடமின்றி ஒரு உணர்வு நிலவுகிறது.
காசா மற்றும் உக்ரேன் சம்பவங்கள் மீது பெண்டகன் மிக நெருக்கமாக கவனம் செலுத்தி வருகிறதுஇந்த இரண்டு யுத்தங்களிலுமே அதன் முழங்கை வரையில் இரத்தம் தோய்ந்திருக்கிறதுஅமெரிக்க இராணுவம் இஸ்ரேலிய இராணுவ படைகளுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுடிருப்பதுடன்வாஷிங்டன் அதற்கு ஆண்டுக்கு பில்லியன் டாலர் அளவிற்கு நிதியுதவி வழங்குகிறது.
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு பிரிவுகளைப் பலப்படுத்தவும் பயிற்சியளிக்கவும்—ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 23 மில்லியன் டாலருக்கு மேலதிகமாகஇன்னொரு 19 மில்லியன் டாலரை பெண்டகன் சமீபத்தில் காங்கிரஸிடம் கோரியதுஅந்நாட்டின் கிழக்கில் நடக்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதலுக்குமத்தியில்இந்த இரத்தந்தோய்ந்த நடவடிக்கையை மதிப்பீடு செய்ய அமெரிக்க இராணுவம் "மூலோபாயம் மற்றும் கொள்கைகளுக்கான"ஒரு நிபுணர்கள் குழுவை கடந்த மாதம் கியேவிற்கு அனுப்பியது.
இந்த இரண்டு மோதல்களுமே எதற்காக பெண்டகனுக்கு அதிகளவில் மிக முன்னுரிமையாக உள்ளனவோ அதற்கானஅதாவது நகர்புற யுத்தத்திற்கான அமெரிக்க படைகளை தயாரிப்பதற்கான—நிஜ-வாழ்வு ஆய்வுக்கூடங்களை வழங்குகின்றன.
இஸ்ரேலைப் பொறுத்த வரையில்இதுவொன்றும் புதியதல்ல. 2001இல் அமெரிக்கா இஸ்ரேலிய இராணுவ படைகளுக்கு 266 மில்லியன் டாலர் செலவில் நெகெவ் பாலைவனத்தில் ஒரு நகர்புற யுத்த பயிற்சி மையத்தைக் கட்டமைத்தது. 7.4 சதுரமைலில் அமைக்கப்பட்ட அந்நகரம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சிறப்பு படைப் பிரிவுகளின் கூட்டு பயிற்சி ஒத்திகைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறதுமுறையே காசாமேற்கு கரை மற்றும் லெபனானில்,மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அவை கற்றறிந்துள்ள நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்கில்பெண்டகன் இன்னும் பெரும் ஆர்வத்தோடு பார்த்துவரும் ஏதோவொன்றை—அதாவது ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழில்துறைசார் தொழிலாள வர்க்கத்தின் மையமாக விளங்கும் ஒரு நகரத்தினது ஒரு முழு அளவிலான முற்றுகையை—அது மேற்பார்வையிட்டு வருகிறது.
பெரு நகரங்களில் நடக்கும் சண்டைஅமெரிக்க இராணுவ படைகளால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற இராணுவ கோட்பாடுகளுக்கு மைய ஸ்தானத்தில் உள்ளதுஇது "பெருநகரங்களும் அமெரிக்க இராணுவமும்ஒரு சிக்கலான மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கான தயாரிப்புஎன்ற தலைப்பிலான ஒரு ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதோடுஅந்த ஆவணம் இராணுவத்தின் மூலோபாய ஆய்வு குழுவால் ஜூனில் வெளியிடப்பட்டு இராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் ரேமாண்ட் ஓடெய்ர்னோவால் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
“10 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் இருக்கும் பெருமகாநகரங்களாக வர்ணிக்கப்படும் பெரிய நகரங்கள்பெரிதும் அநேகமாக,அமெரிக்க இராணுவ தலையீடு அவசியப்படும் எந்தவொரு எதிர்கால நெருக்கடியிலும் முக்கிய மூலோபாய பகுதியாக விளங்கும்," என்று அனுமானித்துஅந்த அறிக்கைடாகாபங்களதேஷ்லாகோஸ்நைஜீரியா;பாங்காங்தாய்லாந்துமெக்சிகோ நகரம்மெக்சிகோரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாவ்லோபிரேசில் ... நியூ யோர்க் நகரம் ஆகியவற்றில் அதுபோன்ற தலையீடுகளுக்கான தயாரிப்பில் பெண்டகன்"முன்னாய்வுகளையும்மற்றும் "களப்பணிகளையும்நடத்தியுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்க இராணுவ தலையீடுகள் அவசியப்படுமென அது அனுமானிக்கின்ற நிலைமைகளை வர்ணித்து அந்த அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கிறது: “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரிக்கையில் ... தேக்கநிலை முன்னொருபோதும் இல்லாத அளவிலான அபிவிருத்தியுடன் அதனோடு இணையும்அதேவேளையில் சேரிகளும் குடிசை நகரங்களும் நவீன உயர்தர வளர்ச்சிகளுக்கு அருகாமையிலேயே வேகமாக விரிவடைகின்றனஇதுவே நகர்புறத்தின் எதிர்காலமாகும்," என்று குறிப்பிடுகிறது.
இத்தகைய தூரதூரத்து நகர்புற பகுதிகளில் மிகமுக்கிய "ஸ்திரமின்மைக்கான உந்துசக்தியாக" “தீவிர வருவாய் ஏற்றத்தாழ்வுகூடுதலாக வர்ணிக்கப்படுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால்உலக முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்ட முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மையின் தவிர்க்கவியலாத விளைவுகளாக அவர்கள் எதை பார்க்கிறார்களோ அந்த மக்கள் கிளர்ச்சிகளை அடக்குவதை நோக்கமாக கொண்ட நேரடியான எதிர்புரட்சிகர தலையீடுகளுக்காக அமெரிக்க இராணுவத்தைத் தயாரிப்பு செய்ய பெண்டகனின் மேலதிகாரிகள் முனைந்து வருகிறார்கள்.
அதன் "முன்னாய்வுகளில்நியூ யோர்க் நகரை உள்ளடங்கி இருப்பதென்பது,இந்த தயாரிப்புகள் ஏதோ ஆபிரிக்காஆசியாமத்திய கிழக்கு அல்லது இலத்தீன் அமெரிக்காவின் புரட்சிகர அபிவிருத்திகளை நோக்கி மட்டுமே திருப்பிவிடப்படவில்லைமாறாக அமெரிக்காவிற்குள்ளேயே ஏற்படும் மிக இக்கட்டான சூழ்நிலைகளை நோக்கியும் திருப்பிவிடப்படுகின்றன என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்ட உதவுகிறது.
அமெரிக்காவிற்குள் மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க இராணுவத்தை தயார்செய்யும் இந்த நோக்கம்சமீபத்திய ஆண்டுகளில் பிரதான அமெரிக்க நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஆக்ரோஷமான "நகர்புற யுத்த பயிற்சிஒத்திகைகளுடனும் பின்தொடரப்பட்டு வந்துள்ளதுஅலுவலக கட்டிடங்கள்ஒரு தேவாலயம்ஒரு விளையாட்டு மைதானம்ஒரு சுரங்கவழி நிறுத்தம் மற்றும் ஒரு ரயில் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு போலி அமெரிக்க நகரத்துடன்ஒரு அமெரிக்க இராணுவ சமச்சீரற்ற யுத்த குழு பயிற்சி மையமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கே வெர்ஜீனியாவில் தொடங்கி வைக்கப்பட்டது. “வளாக நடவடிக்கை சூழ்நிலைகளை நிஜமான விதத்தில் அதேமாதிரியாக தருவிக்க மற்றும் தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்காகஅந்த 96மில்லியன் டாலர் மதிப்பிலான மையம் வடிவமைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் தெரிவித்தது.
பெண்டகனின் தயாரிப்புகள்மக்கள் சேவைக்கான பொலிஸ் படைகள் என்று கூறப்படுவதை இராணுவமயமாக்குவதோடு கை கோர்த்து செல்கின்றனஇந்த படைகள் மைக்கேல் பிரௌனின் பொலிஸ் படுகொலையை எதிர்த்த புனித லூயிஸ் குடியிருப்பு மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதைப் போன்ற நவீன யுத்தமுறையின் கோரப்பற்களோடு ஆயுதபாணியாக்கப்பட்ட SWAT (சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள்அதிரடி படைகளோடு ஏறத்தாழ உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன.
காசா மற்றும் உக்ரேனிய தாக்குதல்கள்அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையை பிரதிநிதித்துவம் செய்கிறதுஇந்த யுத்தங்களை ஆதரிக்கின்ற அதே நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த மேற்தட்டுக்கள்தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் ஒரு புரட்சிகர சவாலுக்கு எதிராக அதன் அமைப்புமுறையை பாதுகாப்பதற்காக படுபயங்கரமான வன்முறையைப் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றன.
அதுபோன்றவொரு தவிர்க்க முடியாத நிலைமைக்கு ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் தயாராகி வருகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.தொழிலாள வர்க்கமும் அதற்கேற்ப தன்னைத்தானே தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.

Bill Van Auken
14 August 2014
http://www.wsws.org/tamil/articles/2014/aug/140815_gaza.shtml

Thursday, 14 August 2014

நிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி உரக்க ஒலிக்கிறது


மெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளிடம் இருந்து வங்கிகளுக்கும் மற்றும் ஊகவணிகர்களுக்கும்  வெள்ளமென பாய்ச்சப்பட்ட தோற்றப்பாட்டளவில் வட்டியற்ற பணத்தின் விளைவாக உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை மற்றொரு பேரிடரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன.

செவ்வாயன்று, "உலகளாவிய பொருளாதாரம் மற்றொரு நெருக்கடிக்கு மிக அருகில் இருக்கிறது" என்ற தலைப்பில் பிரிட்டிஷ் தினசரி Telegraph ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. சந்தைகளின் தற்போதைய அமைதி, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் கட்டமைந்துவரும் அபாயங்களை மறைத்து வருகிறது என்ற பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் முன்னாள் பொருளியல்வாதிகளால் நடத்தப்படும் நிதியியல் நிறுவனமான Fathom Consulting இன் குறிப்புகளை அக்கட்டுரை மேற்கோளிட்டுக் காட்டியது.

Fathom இன் இயக்குனர் அப்பத்திரிகைக்கு கூறுகையில், ஆபத்து வருமானால் சீனா “முதலில் வெளியேறுவதாக" இருப்பதுடன் அதனது பொருளாதாரத்தின் “வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டால்”, ஏற்கனவே பெருமளவிற்கு முடங்கியிருக்கும் திரும்பிவாராக் கடன்கள் அதிகரிக்கும் என்றார். அவர் இன்றைய சீனாவிற்கும், 2006இல் அமெரிக்காவில் வீட்டுச்சந்தை சரியத் தொடங்கிய போது அதன் நிலைமைக்கும் இடையிலான சமாந்தரங்களை வரைந்தார். 

Fathom அளிக்கும் தகவல்படி, சீனப் பொருளாதாரத்தின் திரும்பிவாராக் கடன்கள் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் சீனப் பொருளாதாரம் "மிதமாக வேகம் குறையுமென்று" அனுமானிக்கும் அந்நிறுவனம், ஆணையங்களால் ஒரு நெருக்கடியைத் தவிர்க்கவியலாதபடிக்கு ஒரு "பெரும் அபாயம்" அங்கே நிலவுகிறது என்று எச்சரித்ததோடு, “அங்கே நிறைய பணம் திரும்புவரமுடியா நிலையில் சுற்றிலும் சிக்கலுக்குள் சிக்கியுள்ளது" என்று குறிப்பிட்டது.   

சீனாவோ, அல்லது வேறு ஏதாவதொரு சந்தையோ, ஒரு புதிய உலகளாவிய நெருக்கடியை எது தூண்டிவிட்டாலும் சரி, கடந்த ஆறு ஆண்டுகளாக பெடரலால் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே அதற்கு மூலகாரணமாக இருக்கும். செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவிலிருந்து, நிதியியல் சந்தைகளுக்குள் பெடரல் ஏறக்குறைய 4 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சி, பங்கு மதிப்புகளிலும் ஏனைய நிதியியல் சொத்துக்களிலும் ஒரு குமிழியைக் கொண்டு வந்துள்ளது.

செவ்வாயன்று அமெரிக்க நிதியியல் செய்தி சேனல் CNBC, 25 பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் மூலதன நிதிய நிறுவனமான (hedge fund) எலியாட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பண நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட ஒரு முதலீட்டாளர்களுக்கான கடிதத்திலிருந்து குறிப்புகளை மேற்கோளிட்டுக் காட்டியது. “நிதியியல் சொத்து விலைகள் செயற்கையானவை, சமநிலைமை என்பது தற்காலிகமானது, கொந்தளிப்பு இல்லாமல் இருப்பதென்பது ஒரு வலைப்பொறி போன்றது, ஒட்டுமொத்தமும் வெடிக்கும் போது, அங்கே உண்மையில் இறுதி முடிவு வந்துவிடும்," என்று அந்த கடிதம் குறிப்பிட்டது.   

"பணத்தைப் புழக்கத்தில் விடும்" பெடரலின் கொள்கை, அதாவது பாரியளவில் பணத்தை அச்சடிப்பதும் மற்றும் வெறும் 0.25 சதவீத வட்டி விகிதத்தை அளவுகோலாக அது கொண்டிருப்பதும், இலாபத்திற்கான தேடலில் பணத்தை நிதியியல் சந்தைகளுக்குள் வெள்ளமென பாய்ச்சியுள்ளதோடு, அது சொத்து விலைகளின் ஓர் உயர்விற்கும் மற்றும் பத்திரங்களில் இலாபங்கள் குறைவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. இவற்றின் விளைவாக, எலியாட் மேனேஜ்மென்ட் குறிப்பிட்டதைப் போல: “முதலீட்டாளர்கள் இப்போது குறைந்த மற்றும் மிகக் குறைந்த அளவிலான சொத்துக்களில் நிலவும் இலாபங்களை பெறமுயன்று, அதிக, மிகஅதிகமான அந்நிய கடன்களை கொண்டு அதனை ஈடுகட்டுவதற்காக மிகமிக குறைவான இலாபங்களை பெற்று வருகிறார்கள்."

சந்தை கட்டவிழ தொடங்கிய உடனேயே, அபாயகரமான சொத்துக்களில் தங்கள் பணத்தைப் முதலிட்டிருக்கும் ஊகவணிகர்கள் அவர்களின் நடவடிக்கைகைகளுக்கு தேவையான நிதிக்காக வாங்கிய கடன்களைத் திரும்ப செலுத்த அவற்றை விற்க வேண்டியதிருக்கும் என்பது ஆபத்தாக உள்ளது. அதுபோன்றவொரு விற்பனை பரந்தளவில் இருந்தால், அது குறைந்த அபாயத்தைக் கொண்ட ஏனைய சொத்துக்களையும் இன்னும் அதிகமாக விற்பனை செய்ய தூண்டிவிட்டு, சந்தையைப் பீதியூட்ட இட்டுச் செல்லும்.

தனியார் முதலீட்டு நிதிய நிர்வாகிகள் மற்றும் ஏனைய நிதியியல் சந்தை பங்குதாரர்களோடு இந்த கவலைகள் மட்டுப்பட்டுவிடவில்லை. கடந்த மாதம் பெடரல் ரிசர்வ் வங்கியின் டல்லாஸிற்கான தலைவர் ரிச்சார்ட் பிஷ்ஷர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், மீண்டும் பெடரலின் கட்டுப்பாட்டு கொள்கையைக் குறித்து கவலைகளை வெளிப்படுத்தினார்.

அவரது பல கருத்துக்கள் ஜூன் மாத இறுதியில் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வங்கியால் அதன் ஆண்டறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டதை எதிரொலித்தன, அந்த அறிக்கையில் அவ்வங்கி பொருளாதாரத்திற்கு அடியிலிருக்கும் கூறுகளில் இருந்து சொத்து விலைகள் விலகியிருப்பதைக் குறித்து எச்சரித்திருந்தது. BISஇன் அந்த எச்சரிக்கை, மத்திய வங்கியினது கட்டுப்பாட்டு கொள்கைகளை இறுக்குவதற்கு அழுத்தம் அளிப்பதன் ஒரு பாகமாக இருந்தது.

அதற்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு கூட்டு விவாத கூட்டத்தில் பெடரல் பெண் தலைவர் ஜெனெட் யெலென் அவர் வழங்கிய ஓர் உரையில் விடையிறுப்பு காட்டினார், அதில் அவர் வட்டிவிகிதத்தை இறுக்குவதானது பெரிதும் வேலைவாய்ப்பின்மைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதால், அதற்கு பதிலாக "விவேகமான பரந்த" நெறிமுறைகளை, அதாவது பெடரலின் நேரடி கண்காணிப்பைக் கொண்டு வருவது நிதியியல் அபாயத்தைக் கையாள்வதற்கு உரிய கருவியாக இருக்குமென வாதிட்டார்.

யெலெனை நேரடியாக விமர்சிக்காத போதினும் பிஷ்ஷர், தடுப்பதற்கு எளிமையான வழி என்று நிரூபணமானதும், ஒரு ஜேர்மன் படையெடுப்பைத் தடுப்பதற்காக என்று கூறப்பட்டதுமான, 1930களில் அபிவிருத்தி செய்யப்பட்ட இழிவார்ந்த பிரெஞ்சு மாஜினோ போக்கை (French Maginot Line), இந்த முழு உடைவையும் தடுப்பதற்கான பரந்த நெறிமுறை கண்காணிப்போடு தொடர்புபடுத்தினார்.  

முன்னொருபோதும் இல்லாதளவிற்கு பெடரலிடம் குவிந்திருக்கும் நிதியியல் சொத்துக்களையும் பிஷ்ஷர் குறிப்பிட்டுக் காட்டினார். அது இப்போது அமெரிக்க கருவூல பத்திரங்களின் பங்குகளில் 40 சதவீதத்தைக் கொண்டிருப்பதோடு, அதேயளவிற்கு அடமானக்கடன் பத்திரங்களையும் (MBS) கொண்டிருக்கிறது, அவை தான் 2008இன் பொறிவின் போது மையத்தில் இருந்தவை.

பெடரல் கொள்கையின் உலகளாவிய தாக்கங்களைச் சுட்டிக்காட்டி பிஷ்ஷர் கூறுகையில், “உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்கான பாதுகாவலரின் நிலைமையைப் பொறுத்த வரையில், இது முன்னொருபோதும் இல்லாத நிலைமையாகும்," என்றார். 

பெடரலின் பங்குடைமையில் இருக்கும் பத்திரங்கள் மற்றும் MBSஇன் அதிகரிப்பு எதை குறிக்கிறதென்றால், 2008இல் அதனால் பெருமளவிற்கு செய்ய முடிந்ததைப் போல, எந்தவொரு நிதியியல் நெருக்கடியிலிருந்தும் அது விலகி இருக்க முடியும் என்பதை அல்ல, மாறாக மீண்டும் தலைதூக்கும் எந்தவொரு நெருக்கடியும், மத்திய வங்கியின் அதன் சொந்த நிலைக்கும் தன்மையின் மீதே கேள்வியெழுப்பி, அதுவே ஆழமாக அந்த நெருக்கடிக்கு உடந்தையாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் அபிவிருத்தியானது நீண்டகால பொருளாதார தாக்கங்களைக் கொண்டிருக்கும். அதேவேளையில் அது எழுப்பக்கூடிய அரசியல் பிரச்சினைகளும் குறைந்த முக்கியத்துவமானவையாக இருக்காது.

2008இன் தொடக்கத்தில், பெடரலும் இதர மத்திய வங்கிகளும், ஆளும் நிதியியல் மேற்தட்டுக்களின் சார்பாக செயல்பட்டு, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதியியல் அமைப்புகளுக்கும் ஊகவணிகர்களுக்கும் பிணையெடுப்பாக அளித்தன. அவை அப்போதிருந்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களைக் கூர்மையாக குறைத்தும் சமூக சேவைகளை வெட்டியும் அரசு நிதியின் பாரிய செலவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவைக் கொண்டு வருவதை ஆதரித்ததன் மூலமாக அமெரிக்க முதலாளித்துவம் கால அவகாசத்தைப் பெற முனைந்தது, ஆனால் அவை கையாளும் நிதியியல் முறைமைகள் இலாப அமைப்புமுறையின் அடியிலுள்ள நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை என்பதை ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே அறிந்து வைத்துள்ளன. அடுத்த எந்தவொரு சம்பவத்திலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கையாளப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் கையாள முடியாது. ஒரு புதிய நெருக்கடி ஆழ்ந்த சமூக மற்றும் வர்க்க போராட்டங்களைக் கொண்டு வரும்.

அதனால் தான் நிதியியல் மேற்தட்டுக்களுக்கு கட்டுப்பாடில்லாத பணத்தை வாரி வழங்கிய நடவடிக்கையோடு பாரிய அரசு ஒடுக்குமுறைக்கான தயாரிப்புகளும் உடன் இணைக்கப்பட்டிருந்தது. NSAஇன் உளவுவேலை மற்றும் உலகெங்கிலும் உள்ள உளவுத்துறை அமைப்புகளோடு இணைந்த நடவடிக்கைகளைக் குறித்த வெளியீடுகள் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, அமெரிக்காவிலும் மற்றும் வேறெங்கெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் "அவர்களுக்குள் இருக்கும் எதிரிகளாக" உழைக்கும் மக்களையே கருதுகின்றன.     

அவை தயாரித்து வருகின்ற விடையிறுப்பு வடிவம், 2013இன் பாஸ்டன் தொடர்ஓட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்த ஒரு ஒட்டுமொத்த நகரமும் பொலிஸ்-இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் சித்திரத்தைப் போல வெளிப்பட்டது. அது மற்றொரு நிதியியல் உருகுதலின் போது தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பைக் கையாளும் முறைமைகளுக்கான ஒரு வெள்ளோட்டமாக இருந்தது.

உள்நாட்டில் அதிகரித்துவரும் அரசு ஒடுக்குமுறை, தீவிரமாக்கப்பட்டு வரும் யுத்த உந்துதலோடு உடன் இணைந்துள்ளது. ஆகஸ்ட் 4இன் WSWS முன்னோக்கு குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, “இன்று காசாவில் நடத்தப்பட்டு வருகின்ற யுத்த குற்றங்களும், மற்றும் அவை அனைத்து பிரதான சக்திகளாலும் ஆதரிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக என்ன தயாரிக்கப்பட்டு வருகிறதோ அதற்கு ஒரு முன்னெச்சரிக்கையாகும்."

மற்றொரு போரில் இருந்தோ அல்லது ஒரு புதிய நிதியியல் பொறிவிலிருந்தோ எழக்கூடிய வர்க்க போராட்டங்களுக்காக ஆளும் மேற்தட்டுக்கள் தங்களைத்தாங்களே தயாரிப்பு செய்து வருவதைப் போலவே, தொழிலாள வர்க்கமும் செய்ய வேண்டும்.

யுத்தம் மற்றும் அரசு ஒடுக்குமுறையின் ஆளும் வர்க்க வேலைத்திட்டத்திற்கு ஒரே பதிலாக, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையாக அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே இத்தகைய தயாரிப்புகளுக்கான மைய அச்சாகும்.

Nick Beams
8 August 2014
http://www.wsws.org/tamil/articles/2014/aug/140812_alr.shtml

Monday, 11 August 2014

ஐ.நா இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு குழுவை நியமித்தது


ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு (UNHRC) தலைவர் நவநீதம் பிள்ளை, கடந்த வாரம், 2009ல் பிரிவினைவாத தமிழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பாதுகாப்பு படைகள் செய்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணைக்கு குழுவை அறிவித்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரின் போது, இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால் சுமார் 200,000 மக்கள், பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐநா நிபுணர் குழு, ஏனைய பல போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், கடைசி மாதங்களில் நடந்த இராணுவத் தாக்குதல்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

ஒரு சர்வதேச விசாரணையை கோரி, கடந்த மார்ச்சில் யுஎன்எச்ஆர்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு அமெரிக்க ஆதரவுடைய தீர்மானத்தை அடுத்தே, இந்த குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த தீர்மானம், இலங்கை நோக்கிய அமெரிக்கக் கொள்கையில் மேலும் கூர்மையான மாற்றத்தைக் குறித்தது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தை ஆதரித்தன. இராஜபக்ஷ அரசாங்கம் போரில் வெற்றி பெற ஆயுதங்கள் மற்றும் நிதியும் வழங்கிய பின்னர், போருக்கு பிந்தைய இலங்கையில் சீனா குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெறும் என்பது தெளிவான போதே, அவை போரின் இறுதி கட்டத்தின் போது இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சிக்கத் தொடங்கின.

இந்த ஆண்டு வரை, சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலகச் செய்வதற்கான அமெரிக்க அழுத்தம், ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பதுடன் நின்றுள்ளது. இது போர்க்குற்ற குற்றச்சாட்டை முன்கொணர்வதற்கான  வாய்ப்பைக் கொண்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம், சீனாவை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதற்கான அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை தீவிரமாகத் தொடர்கின்றது. வாஷிங்டன் ஆத்திரமூட்டும் வகையில், ஒரு பரந்த யுத்தத்தை வெடிக்கச் செய்யும் இராணுவ மோதல்கள் ஏற்படக்கூடியவாறு, கடற்பகுதி உரிமை தொடர்பான முரண்பாடுகளில் சீனாவுக்கு எதிராக ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை ஊக்குவிக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங் உடனான அதன் நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு துணைநிற்க வேண்டும் என்பதே வாஷிங்டனின் விருப்பமாகும்.

இலங்கை தொடர்பான மூன்று உறுப்பினர் கொண்ட ஐநா குழுவில் பின்வருவோர் அடங்குவர். பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் கொசோவோவுக்கான ஐநா சிறப்பு தூதருமான மார்ட்டி ஆடிசாரி, அமெரிக்க ஆதரவுடைய கொசோவோ ஆட்சியை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபட்டிருந்தவர். முன்னாள் நியூசிலாந்து ஆளுனர் நாயகம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட், கேமர் ரூஜ் போர் குற்றங்கள் தொடர்பான கம்போடியா நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர்; பாக்கிஸ்தான் நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர், ஐநா சிறப்புக் கூட்ட அறிக்கையாளராக இருந்தவர்.

"விசாரணையின் போது ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் அத்துடன் சுயாதீன சரிபார்ப்பு ஆகிய முறையில் ஒரு உதவி வகிபாகத்தை" இந்தக் குழு வழங்கும் என பிள்ளையின் அலுவலகம் தெரிவித்தது. 12 பேர் கொண்ட விசாரணைக் குழு, ஐநாவின் மூத்த அதிகாரி சாண்ட்ரா பெய்டாசினால் ஒருங்கிணைக்கப்படும். இவர், நேபால், ஹெய்டி, சூடான் மற்றும் சோமாலியாவில் ஐநாவின் முந்தைய தலையீடுகளில் முன்னணி வகிபாகம் ஆற்றியவர். விசாரணைகள் 2015 ஏப்ரல் நடுப்பகுதி வரை பத்து மாதங்கள் நடத்தப்படும்.

ஐநா மனித உரிமைகள் சபையில் மார்ச் மாதம் கூட்டாக தீர்மானத்துக்கு அனுசரணையளித்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும், குழுவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மாரி ஹார்ஃப், இலங்கை அரசாங்கம் யுஎன்எச்ஆர்சியுடனும் அதன் விசாரணைகளுடனும் முழுமையாக ஒத்துழைப்பதோடு, "ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், நல்லிணக்கம், நீதி, மற்றும் பொறுப்புடைமை தொடர்பாக நிலவும் அதிகப் பிரச்சினைகளை அணுகுவதற்கு அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வாஷிங்டன் "பலமாக வலியுறுத்துகிறது" என்று தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் இரட்டை பாசாங்குத்தனம் ஆகும். இரு நாடுகளும் முழுமையாக இலங்கை யுத்தத்தை ஆதரித்ததுடன் அனைத்து உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களுக்கு அவையும் பொறுபேற்க வேண்டும். வாஷிங்டன் மற்றும் லண்டனும் தசாப்தங்களாக நீளும் பலவகையான போர் குற்றங்களுக்கு பேர் போனவை. உதாரணத்திற்கு சிலவற்றை கூறினால், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்களில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லிபியா மற்றும் சிரியாவில், ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளும் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதும் மேலும் அட்டூழியங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இராஜபக்ஷவின் அரசாங்கம் ஐநா தீர்மானத்தை நிராகரித்துள்ளதோடு இலங்கைக்கு வருகைதரவுள்ள ஆய்வுக் குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இராணுவ உயர்மட்டத்தினர் மட்டுமன்றி, இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய இராஜபக்ஷவினதும் உடந்தை தொடர்பான ஆதாரங்கள் உள்ள போதும், போர் குற்றங்கள் தொடர்பாக எந்த பொறுப்பும் ஏற்க அரசாங்கம் இன்னமும் முழுமையாக மறுத்து வருகின்றது.

எனினும், குழு விசாரணையை முன்னெடுக்கின்றது. ஜஹாங்கிர் பிபிசிக்கு கூறியதாவது: "ஒரு அரசாங்கத்தின் ஒத்துழையாமை சர்வதேச விசாரணைகளை நிறுத்த முடியாது." "விசாரணைக் குழுவின் முன் வாக்குமூலம் கொடுக்காமல் மக்களை தடுக்கும் முயற்சிகள் தனது சொந்த நிலைமையையே மோசமாக்கும்" என்று அவர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்தார்.

மார்ச் மாதம், தெற்காசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், ஒபாமா நிர்வாகம் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்றார். இராஜபக்ஷ வழிக்கு வந்தால், வாஷிங்டன் விரைவில் அதன் "மனித உரிமைகள்" கோரிக்கைகளை கைவிடும். எனினும், இல்லை என்றால், மற்ற தேர்வுகளில் ஆட்சி மாற்றமும் உள்ளடங்கக் கூடும்.

இராஜபக்ஷ, போர் குற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்தும் கவனத்தை திசை திருப்புவதற்காக, தேசிய உணர்வுகளை தூண்டிவிடுவதன் பேரில் மேற்கத்திய-விரோத வாய்ச்சவடால் விடுக்க ஐநா விசாரணையை பயன்படுத்தி வருகின்றார். இராஜபக்ஷ, தனது அரசாங்கம் "சர்வதேச சமூகத்தினால்" தண்டிக்கப்படுவதாக கூறினாலும், நாடுகளின் பெயர்களை கூறுவதில்லை. 

அதே நேரம், அமெரிக்க நகர்வுகள் பற்றி கவலைகொண்டுள்ள இராஜபக்ஷ, சீனாவின் அதிகமான வர்த்தக பயணங்கள் இடம்பெறும் இந்திய பெருங்கடலில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் குறித்து நனவாக இருப்பதோடு, வாஷிங்டனுடன் சிறந்த உறவுகளை எதிர்பார்க்கின்றார். வெளிவிவகார அமைச்சு இலங்கையின் நலன்களை ஊக்குவிக்க மேலும் இரண்டு அமெரிக்க பரப்புரை நிறுவனங்களான, மேடிசன் குரூப் மற்றும் பெல்ட்வே கவர்ன்மன்ட் ஸ்டெடர்ஜிஸ் என்பவற்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக இந்த வாரம் கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்க தலைநகரில் செயற்படுகின்றன.

ஜனவரியில், இலங்கை தொடர்பாக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தோமஸ் ஆலோசனை குழு என்ற ஒரு நிறுவனம், இலங்கை “இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வர்த்தக பாதைகளின் அருகில் அமைந்துள்ளதுடன்” சீனா ஏற்கனவே "நாட்டுக்குள் ஊடுருவியுள்ளது" என்று சுட்டிக்காட்டியது. “அமெரிக்கா உடனான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படுவதை” இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று தோமஸ் ஆலோசனை குழு தெளிவுபடுத்தியுள்ளது.

விசாரணையை நிராகரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமிழ் முதலாளித்துவத்தின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்த அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் (ஸ்ரீலமுகா) வாக்களிப்பை பகிஷ்கரித்தன.

இராஜபக்ஷ அரசாங்கத்துடனான ஒரு "அதிகாரப் பகிர்வு" உடன்படிக்கைக்கு தமிழ் கூட்டமைப்பு அமெரிக்க ஆதரவை பெற முயற்சிக்கின்றது. அதற்கு தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக அக்கறை கிடையாது. அது தனது சொந்த முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஸ்ரீலமுகா இதில் வேறுபட்டதல்ல. அரசாங்க-சார்பு பௌத்த அதிதீவிரவாத சக்திகள் அண்மையில் முஸ்லிம்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தியமை, இராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலமுகாவுக்கும் இடையே பதட்டங்களை தூண்டிவிட்டு, அதை பகிஷ்கரிக்க நெருக்கியுள்ளது.

ஜேவிபீ மற்றும் யூஎன்பீயைப் பொறுத்தவரை, யூஎன்பீ தமிழர்-விரோத போரை தொடங்கியதுடன், இரண்டு கட்சிகளும் 1983ல் இருந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளன. பெருவணிக பாரம்பரிய கட்சியான யூஎன்பீ, அமெரிக்க நகர்வுகளுக்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்து, சர்வதேச விசாரணையை அனுமதிப்பதாக கூறிய அதே வேளை, "ஜனநாயக ஆட்சி அமைப்பையும் நிறுவனங்களையும் மீள ஸ்தாபிக்குமாறு" அரசாங்கத்தை வலியுறுத்தியது.

ஜேவிபீ, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற விசாரணையை கோரி பாராளுமன்றத்திற்கு திருத்தங்களை சமர்ப்பித்தது. ஆனால் ஆளும் கூட்டணி அதை நிராகரித்தது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக ஜேவிபீ காட்டிக்கொள்வது, அரசாங்கத்தின் மீது பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சியே ஆகும்.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்கள், வாஷிங்டன் மற்றும் கொழும்பில் உள்ள போர் குற்றவாளிகளுக்கு எதிராக தமது சொந்த சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அவர்கள், வாஷிங்டன் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் மனித உரிமைகள் பற்றிய சூழ்ச்சிகளுக்கு எந்த ஆதரவும் கொடுக்காத அதே வேளை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அல்லது முதலாளித்துவத்தின் வேறு எந்த பிரிவுக்கும் ஆதரவளிப்பதை நிராகரிக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் மட்டுமே போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றம் சுமத்தவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் முடியும். தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக –ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை- ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கப் போராடுவதே இதன் அர்த்தமாகும்.

By W.A. Sunil5 July 2014
http://www.wsws.org/tamil/articles/2014/july/140729_unsri.shtml

Sunday, 10 August 2014

அமெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தையில் வர்த்தகம் மீது விரிசல்கள்

Frictions over trade at US-India Strategic Dialogue

மெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தையின் கடந்த வார ஆண்டுக்கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒரு பரிந்துரைக்கப்பட்ட உடன்படிக்கையின் மீது இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்தன. ஜூலை 31இல் புது டெல்லியில் நடந்த அந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி சுஷ்மா சுவராஜூடன் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி துணை-தலைமை வகித்தார்.

ஜெனிவாவில் விவாதத்தின் கீழ் இருந்த WTO ஒப்பந்தம் ஜூலை 31ஐ இறுதிக்கெடுவாக கொண்டிருந்ததோடு, உணவுதானிய சேமிப்பு பிரச்சினையின் மீது விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் இந்தியா கையெழுத்திட மறுத்ததால், அந்த உடன்படிக்கை முறிந்து போனது. அவர்களின் பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவின் வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராம் அவரது அமெரிக்க எதிர்தரப்பில் இருக்கும் பென்னி பிரிட்ஜ்கெரிடம், இந்தியா அதன் நிலைப்பாட்டிலிருந்து மாறாது என்று தெரிவித்தார்.

சுவராஜூடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், கெர்ரி ஒரு தெளிவான அச்சுறுத்தலை விடுத்தார்: “இந்தியா உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றால், அது WTO விதிமுறையை மீறி நிற்கும் அபாயத்தை எடுக்கும்," என்றார். அதற்கடுத்த நாள் பிரதம மந்திரி நரேந்திர மோடி உடனான அவரது சந்திப்பையும், கையெழுத்திடுவதற்கு இந்தியா மறுப்பது மீதான அமெரிக்காவின் கவலைகளை மேலெழுப்ப பயன்படுத்தினார், இந்தியா வர்த்தகத்திற்காக திறந்திருக்கிறது என்ற மோடியின் சேதியை அது பலவீனப்படுத்தக்கூடுமென அவர் எச்சரித்தார்.

சுங்க விதிமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலமாகவும், மற்றும் ஏழைகளுக்கு மானிய உணவை வழங்கும் இந்தியாவின் உணவுதானிய சேமிப்பைக் குறைப்பதன் மூலமாக WTO உடன்படிக்கை இந்தியாவின் சந்தைகளுக்குள் பெரும் அணுகுதலை வழங்குமென அமெரிக்க அராசங்கம் நம்பி வந்திருந்தது. “சிறிய இந்திய விவசாயிகள் குறித்த கவலைகளில்" இந்தியாவின் நிலைப்பாடு ஊன்றியிருப்பதாக மோடி வாதிட்ட போதினும், WTO உடன்படிக்கை மலிவு இறக்குமதிகளுக்கான தடைகளை நீக்கி, இந்திய வர்த்தகங்களுக்கு குழிபறிக்கும் என்பதே அவரது பிரதான எதிர்ப்புரையாகும்.

வர்த்தக கருத்துவேறுபாடுகள் இருந்த போதினும், இருதரப்பும் இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை அபிவிருத்தி செய்ய தீர்மானமாக உள்ளன. மூலோபாய பேச்சுவார்த்தைகளுக்குப் பிந்தைய அவர்களின் கூட்டு அறிக்கை குறிப்பிடுகையில், இந்தியாவிற்கு நாளை வரவிருக்கிற அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெலின் விஜயம், “இராணுவ ஒத்திகைகள், பாதுகாப்பு, வர்த்தகம், கூட்டு-உற்பத்தி மற்றும் கூட்டு-அபிவிருத்தி, மற்றும் இராணுவத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் மீதான ஆராய்ச்சிகளுக்காக" அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டது.

"தெற்காசிய பிராந்தியத்திலும், ஆசியாவிலும் மற்றும் உலகளவிலும் பிராந்திய அமைதி, ஸ்திரப்பாடு மற்றும் செல்வ வளத்தில், ஓர் உண்மையான இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுறவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மந்திரி சுவராஜூம் செயலர் கெர்ரியும் ஏற்றுக் கொள்வதாக," அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தானும் மற்றும் கென்யா, லைபீரியா, மலாவி, ரவாண்டா மற்றும் கானா போன்ற ஆபிரிக்க நாடுகளும் உட்பட, “ஏனைய கூட்டு நாடுகளுக்கு இணைந்து ஒத்துழைக்கும் அவர்களின் கடமைப்பாட்டை" அவ்விரு அதிகாரிகளும் "மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்."

அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டுறவுக்கும் அமைதி மற்றும் செல்வ வளத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. சீனாவை ராஜாங்கரீதியிலும் பொருளாதாரரீதியிலும் பலவீனப்படுத்த மற்றும் இராணுவரீதியில் அதை சுற்றி வளைக்க நோக்கம் கொண்ட ஒரு பரந்த மற்றும் ஆக்ரோஷமான மூலோபாயமான அமெரிக்காவினது "ஆசியாவை நோக்கிய முன்னெப்பின்" பாகமாக அது உள்ளது. வாஷிங்டன் அந்த "முன்னெடுப்பின்" ஒரு முக்கிய உட்கூறாக இந்தியாவைக் காண்கிறது, அதேவேளையில் புது டெல்லியோ அதன் பிராந்திய எதிரியான சீனாவிற்கு எதிராக ஆசியா மற்றும் உலகளவில் அதன் இடத்தை உயர்த்திக் கொள்ள முனைந்து வருகிறது.

அவர்களின் அறிக்கையில், கெர்ரியும் சுவராஜூம் "பொருளாதார மண்டலங்களை அபிவிருத்தி செய்வது உட்பட மியான்மர் வழியாக தெற்காசியா மற்றும் ஆசியானுக்கு (ASEAN) இடையே போக்குவரத்து மற்றும் வர்த்தக இணைப்பைக் கட்டமைக்க இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்." இது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை இலக்கில் வைத்து அமெரிக்க-தலைமையிலான முத்தரப்பு கூட்டணிக்குள் இந்தியாவை மேலதிகமாக ஒன்றிணைப்பது என்பதைக் குறிக்கிறது. கெர்ரி இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், இந்தியா ஐந்தாண்டுகளில் முதல் முறையாக மலபார் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு கடற்படை ஒத்திகைகளில் இணைந்தது.

காசா பகுதியின் படுபயங்கர இஸ்ரேலிய தாக்குதல் போன்ற பிரச்சினைகளில் இந்தியா கூடுதலாக அமெரிக்க முகாமிற்குள் சாய்ந்து வருகிறது என்பதையும் அந்த கூட்டு அறிக்கை எடுத்துக்காட்டியது. “காசா மற்றும் இஸ்ரேல் வன்முறையின் அதிகளவிலான தீவிரத்தன்மை குறித்து அது கவலை" வெளியிட்டதோடு, “இருதரப்பும் அதிகபட்ச கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்குமாறு அழைப்புவிடுத்தது." இஸ்ரேலை மற்றும் அதன் தசாப்தகால குற்றங்களை நியாயப்படுத்துவதில் அமெரிக்கா முன்னிலை வகித்துள்ள நிலையில், இந்தியா காலகாலமாக பாலஸ்தீன மக்களின் ஒரு ஆதரவாளராக காட்டி வந்துள்ளது. இருதரப்பினது வன்முறை குறித்து பேசும் அமெரிக்காவோடு இணைந்ததன் மூலமாக, பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேலின் ஒருதரப்பிலான படுகொலைகளைக் கண்டிப்பதை மோடி அரசாங்கம் தவிர்ப்பதோடு, இஸ்ரேலுடன் மேற்கொண்டும் உறவுகளைப் பலப்படுத்த இந்தியாவின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.

"சிரியாவில் தொடர்ந்துவரும் வன்முறை மற்றும் மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலைகளை" வெளிப்படுத்தி, இந்தியாவும் அமெரிக்காவும் சிரியா மீது ஒரேமாதிரியான எரிச்சலூட்டும் மொழிகளைப் பயன்படுத்தின, அத்தோடு "அவற்றின் கருத்துவேறுபாடுகளை அனுசரித்துக் கொண்டு ஒரே தளத்தில் இருக்க" முயலுமாறு அனைத்து கட்சிகளையும் வலியுறுத்தின. மேலெழுந்த வாரியாக பார்க்கும் போதே அந்த கருத்துக்கள் அர்த்தமற்றவையாக உள்ளன—ஜனாதிபதி பஷீர் அல்-அசாத்தின் ஆட்சிக்கும் அவரை வெளியேற்ற முனைந்து வருகின்ற அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கும் இடையே அங்கே எந்தவொரு பொதுவான தளமும் இருக்க முடியாது. சிரியாவில் அமெரிக்க ஆட்சி-மாற்றத்திற்கான நடவடிக்கைக்கு இந்தியா அதன் மறைமுகமான ஆதரவை வழங்கி வருகிறது.

வரவிருக்கின்ற காலத்தில் அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்கள், தலையீடுகள் மற்றும் யுத்தங்களுக்கு தெளிவாக இன்னும் அதிகளவிலான இந்தியாவின் ஆதரவை கெர்ரி பார்த்து வருகிறார். “வார்த்தையில் கூறுவது சுலபமானது. வரவிருக்கின்ற நாட்களில் நாம் எடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் தான் நம்முடைய நட்புறவை நிஜமாக தீர்மானிக்கும்," என்று அவர் அறிவித்தார். “இந்த சந்திப்பிலிருந்து தீர்மானத்திற்கு வந்து நாம் அனைவரும் நிறைய வேலை செய்ய வேண்டியதிருக்கிறது என்று நான் [இந்தியாவின்] வெளியுறவு மந்திரியிடம் தெரிவித்தேன்," என்றார்.

சுவராஜ், ராஜாங்க வெற்றுரைகளோடு விடையிறுப்பு காட்டினார், “எங்களின் மூலோபாய கூட்டுறவின் பிராந்திய மற்றும் உலகளாவிய அம்சம் இருதரப்பிற்கும், குறிப்பாக தற்போதைய உலகளாவிய மற்றும் பிராந்திய பாய்ச்சலில், பெரும் மதிப்பைக் கொண்டுள்ளது," என்று அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எங்களின் மூலோபாய நட்புறவின் முதிர்ச்சி, இருதரப்பிற்கும் மேற்கொண்டு பேசுவதற்கும் மற்றும் கலந்துரையாடுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக, நாங்கள் முரண்பட்டுள்ள பிரச்சினையைக் கையாள்வதற்கான தகைமையை அளித்துள்ளது என்பதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்," என்றார்.

யதார்த்தத்தில், அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் ஆதரவைப் பாதுகாப்பதற்கு விலையாக இந்தியா தான் மேற்படி விட்டுகொடுப்புகளை அளிக்க கேட்டுக் கொள்ளப்படும்.

அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான நட்புறவு, மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூத்த தலைவர்களை அமெரிக்கா உளவுபார்த்தது என்ற எட்வார்ட் ஸ்னோவ்டெனின் அம்பலப்படுத்தல்களால் எடுத்துக்காட்டப்பட்டது. “நம்முடைய இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று நட்பு நாடுகளாக கருதுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் தரப்பில் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை எங்களால் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாது," என்பதை அவர் கெர்ரிக்கு கூறிவிட்டதாக சுவராஜ் அறிவித்தார்.

கெர்ரி வெறுமனே அந்த பிரச்சினையை மழுப்பிவிட்டார், அமெரிக்க அரசாங்கம் உளவுத்துறை விவகாரங்களைப் பகிரங்கமாக விவாதிப்பதில்லை என்று கூறிய பின்னர், அமெரிக்க மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கமான கூட்டுறவைப் பாராட்டினார். எதிர்காலத்தில் இந்திய தலைவர்கள் மீது அது உளவுபார்க்காது என்ற ஒரு பொறுப்புறுதியை வழங்க கூட வாஷிங்டனுக்கு விருப்பமில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா அதன் வசதியைப் பின்தொடர, ஏனைய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளைப் போல, இந்தியாவும் அது கருதும் விதத்தில், எதிர்பார்க்கும் விதத்தில் பொருந்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

கெர்ரி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹாகெலின் விஜயங்கள், ஜனாதிபதி ஒபாமா உடனான பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த மாதம் மோடியின் வாஷிங்டனுக்கான விஜயத்திற்கு பாதை அமைக்கும்.

By Deepal Jayasekera 
6 August 2014
http://www.wsws.org/tamil/articles/2014/aug/140808_fric.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts