w e l c o m e - ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு (1917-2017) - சர்வதேச இணையவழி தொடர் - மார்ச் 11, மார்ச் 25, ஏப்பிரல் 22 மற்றும் மே 6 - இன்றே பதிவு செய்யுங்கள்

Search This Blog

The Struggle of Maruti Suzuki Auto Workers

The Struggle of Maruti Suzuki Auto Workers
Thirteen sentenced to life imprisonment in India Free the framed-up Maruti Suzuki workers!

Tuesday, 1 July 2014

மத்திய கிழக்கின் பேரழிவுகளுக்கு யார் பொறுப்பு?

லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல,அல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்து வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அவரது மத்திய கிழக்கிற்கான சமீபத்திய நெருக்கடி பயணத்தின் போது கெய்ரோ பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
கெர்ரி கூறியதைப் போலஈராக்-சிரியா இஸ்லாமிய அரசும் (ISIS),வளர்ந்து வரும் சுன்னி கிளர்ச்சி குழுக்களும் சிரியா மற்றும் ஜோர்டன் உடனான அந்நாட்டின் எல்லைகளிலும்ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கிலும் அவற்றின் பிடியைப் பலப்படுத்தி வருகின்றனஇந்த சண்டைகளால் ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் ஈராக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்மற்றும் ஆயிரக் கணக்கானவர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் குறுங்குழுவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
எதிர்விரோத போராளிகள் குழுக்களின் தொடர்ச்சியான சண்டையால் லிபியா முற்றிலுமாக பொறிந்து போகும் நிலையில் இருக்கிறதுஅந்த அரசு வெறுமனே பெயரளவிற்கு தான் நின்று கொண்டிருக்கிறதுஅங்கே எண்ணெய் உற்பத்தி குறைந்தபட்சம் 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதோடுஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்நாட்டின் வன்முறையால் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்பல ஆயிரக் கணக்கானவர்கள் ஆயுதமேந்திய குழுக்களால் நடத்தப்படுவதும்,திட்டமிட்ட சித்திரவதையை நடைமுறையாக கொண்டிருப்பதுமான சிறைக்கூடங்களின் வலையமைப்புகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் நிலைமை முற்றிலுமாக ஒரு தோல்விக்குள் திரும்பியதில் இருந்து, “அமெரிக்காவிற்கு எந்த பொறுப்பும் இல்லை,” என்ற அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான தம்பட்டத்தைத் தான் கெர்ரியின் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தது.
அமெரிக்காவின் 2003 ஈராக்கிய படையெடுப்பிற்கு ஒத்து ஊதிய ஆதரவாளரான ஒரு "மனித உரிமைகள்ஏகாதிபத்தியவாதிநியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் நிகோலஸ் கிறிஸ்டோப்பின் கருத்துரையும் அதற்கு முற்றிலும் பொருத்தமாக இருந்ததுஅவர் எழுதினார்: “ஈராக்கிய தோல்விஜனாதிபதி ஒபாமாவின் தவறல்லஅது குடியரசு கட்சியினரின் தவறல்ல... பெரிதும் அது ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி கமால் அல்-மலிக்கியின் தவறாகும்,” என்றார்.
அமெரிக்க ஆக்கிரமிப்பால் அங்கே அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு இருத்தப்பட்ட கைப்பாவையான மலிக்கி தான் வலையில் சிக்கியவர்.
டைம்ஸ் இதழின் வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மேன் ஞாயிறன்று எழுதுகையில்மலிக்கி ஒரு"தீமூட்டியாகஇருக்கிறார்அவர் "அமெரிக்கா ஈராக்கை விட்டு வந்த நிமிடமே,” திட்டமிட்டு குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட்டு விட்டார் என்று எழுதினார்இவர் யாரென்றால், 2003இல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது "ஏனென்றால் நம்மால்,” வீட்டுக்கு வீடு போய் அமெரிக்க துருப்புகளைக் குறித்து பெருமையாக பேச முடிந்ததுமேலும் ஈராக்கியர்களை "இதை அனுபவியுங்கள்என்று உத்தரவிட முடிந்தது என்று அறிவித்தவரும், “எண்ணெய்க்காக யுத்தமிடுவதில்தமக்கு "எந்த பிரச்சினையும் இல்லைஎன்று அறிவித்தவருமான அதே பிரெட்மேன் தான் இவர்.
ஈராக்கிய மற்றும் லிபிய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆழ்ந்த துன்பங்களுக்கு அமெரிக்கா எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று வலியுறுத்தும் அறிக்கைகளின் ஒன்றுசேர்ந்த குரல்களைக் கேட்கையில்,கீழேயிருந்து ஹெர்மன் கோரிங்கிடமிருந்தும்கைதிக்கூண்டில் ஒவ்வொருவராக எழுந்து தங்களைத்தாங்களே "குற்றவாளி அல்லஎன்று அறிவித்துக் கொண்டநூரெம்பேர்க்கில் நாஜி யுத்த குற்றவாளிகளைக் குறித்து ஒருவருக்கு நினைவு வருவதை விட அதிகமாக ஒன்றும் தோன்றப் போவதில்லை.
கெர்ரியும்ஆளும் ஸ்தாபகத்திற்குள் உள்ள ஏனைய பலரும் எந்த குற்றத்திட்டங்களுக்காக வாஷிங்டன் பொறுப்பாகாது என்று வலியுறுத்துகிறார்கள்?
அந்த சமயத்தில் அவர்கள் அவர்களின் சொந்த நடவடிக்கைகளுக்காக,ஏற்கனவே ஒரு தசாப்த கால கொடூரமான அமெரிக்க தடையாணைகளால் சிதைந்து போயிருந்த ஒரு சமூகத்தின் மீது மிகப் பெரிய அழிவுகரமான படையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அவர்கள்"அதிரடி ஆக்கிரமிப்பு" (shock and awe) விளக்கத்தைப் பயன்படுத்தினார்கள்.நூறு ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக ஆக்கியும்அமெரிக்க யுத்தமும்,ஆக்கிரமிப்பும் ஈராக்கிய சமூகத்தின் ஒவ்வொரு கட்டமைப்பையும் அழித்ததுஅதேவேளையில் ஈராக்கிய தேசியவாதத்தைக் கடந்து வருவதற்கான வழிவகையாக வாஷிங்டன் குறுங்குழுவாத பிரிவினைகளைத் திட்டமிட்டு தூண்டிவிட்டதுஅந்நாட்டின் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஆட்சியாளர்சதாம் ஹூசைன்ஒரு ஜோடனை நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு சத்தமில்லாமல் தூக்கிலிடப்பட்டார்.
இவை அனைத்தும் "பேரழிவுகரமான ஆயுதங்களின்உடனடி அச்சுறுத்தல் இருப்பதாகவும்பாக்தாத் மற்றும் அல் கொய்தாவிற்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்பட்ட எச்சரிக்கைகளால் நியாயப்படுத்தப்பட்டனஅவை அனைத்தும் பொய்களென்பதுஇப்போது இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் தெரியும்.
அங்கே பேரழிவுகரமான ஆயுதங்களும் இல்லைஅமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாட்டின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்துஅதன் சமூக கட்டமைப்பை துண்டாடும் வரையில் அங்கே அல் கொய்தா இருக்கவும் இல்லை.உண்மையில், 1980களில் ஆப்கானிஸ்தானில் வலதுசாரி இஸ்லாமியவாதிகளால் ஒரு குருதி கொட்டும் ஒரு யுத்தத்தைத் தூண்டிவிட வாஷிங்டன் வேலை செய்ததற்கு முன்னர் வரையில் அல் கொய்தா இருக்கவே இல்லை.
லிபியாவிலும் மற்றும் இப்போது சிரியாவிலும்ஒபாமா நிர்வாகம்"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்என்ற போலிக்காரணத்தைக் கைவிட்டு விட்டுஅதற்கு பதிலாக ஆட்சிமாற்றத்திற்காக அதேயளவிற்கு சமமாக வெறுப்பூட்டும் மற்றும் மோசடியான "மனித உரிமைகள்என்ற நியாயப்படுத்தலை கையிலெடுத்துள்ளதுலிபியாவில் அமெரிக்காவும் நேட்டோவும் அந்நாட்டின் மீது கடுமையாக குண்டுவீசின அதேவேளையில் அங்கே இருந்த அரசு மற்றும் சமூக கட்டமைப்புகள் அனைத்தையும் அழித்த ஒரு குறுங்குழுவாத யுத்தத்தில் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்ததோடு அவற்றை ஒன்று திரட்டி அமைத்தனஈராக்கைப் போலவேஅந்நாட்டின் மதசார்பற்ற தலைவர் மௌம்மர் கடாபியின் கொடூரமான படுகொலையோடு அந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.
வாஷிங்டன் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அதேபோன்றவொரு யுத்தத்தை நடத்தி வருகிறதுஅதில் அது ISIS தலைமையிலான சுன்னி இஸ்லாமியவாத மற்றும் குறுங்குழுவாத போராளிகள் குழுக்களை ஆதரிக்கிறதுஅதே சக்திகள் தான் ஈராக்கின் பெரும்பகுதியைத் திருப்பி போட்டிருக்கின்றனஒரு மூன்றாவது மதசார்பற்ற அரபு அரச தலைவர்,பஷர் அல் அசாத்தின் படுகொலையோடு இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமென அமெரிக்கா நம்புகிறது.
கடந்த வாரம் தான்ஒபாமா சிரிய "போராளிகளுக்குஆயுதங்களுக்காக500 மில்லியன் டாலரைப் பாய்ச்ச பரிந்துரைத்தார்இந்த ஆயுதங்கள்,ஈராக்கில் யாரை தோற்கடிக்க அமெரிக்க பொறுப்பேற்றிருப்பதாக கருதப்படுகிறதோ அதே ISISஇன் கைகளில் போய் சேருமென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
வாஷிங்டன் கொள்கையின் முரண்பாடுகளும்ஏமாற்றுத்தனங்களும் முன்பில்லாத வகையில் பிரகாசிக்கின்ற நிலையில்அமெரிக்க அதிகாரிகளோ அமெரிக்க மக்கள் எதையும் கவனிக்க மாட்டார்கள் அல்லது எதையும் நம்புவார்கள் என்பதைப் போல நடிக்கிறார்கள்அல்லது,அந்த விடயத்தைப் பொறுத்த வரையில்மருத்துவ பராமரிப்புகல்வி,வீட்டு வசதி அல்லது வேலைகளுக்கு "அங்கே பணமில்லைஎன்று உழைக்கும் மக்களிடம் கூறப்பட்டு வருகின்ற அதேவேளையில்ஒரு குற்றகரமான யுத்தத்திற்காக உடனடியாக 500 மில்லியன் டாலரை மறைக்கப்படுவதை அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்களா?
மனிதர்களுக்கு அது ஏற்படுத்தியுள்ள அனைத்துவிதமான கொடூர விளைவுகளோடு சேர்ந்துமத்திய கிழக்கில் அமெரிக்க செல்வந்த மேற்தட்டுக்கள் ஏற்படுத்தி உள்ள சீரழிவானது அமெரிக்காவிற்கு உள்ளேஅந்நாட்டின் உற்பத்தி அடித்தளத்தைத் தகர்த்தும்அதன் பொருளாதாரத்தை நிதியியல் ஒட்டுண்ணிகளுக்கான ஒரு சூதாட்ட விளையாட்டரங்கமாக மாற்றியும்மில்லியன் கணக்கான மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களை அழித்தும்அவை வகிக்கும் பேரழிவுகரமான பாத்திரத்தின் புற வெளிப்பாடாகும்உள்நாட்டில் அதிகரித்துவரும் நெருக்கடிக்கு எந்தவொரு பதிலும் இல்லாமல்வெளிநாடுகளில் அவை உருவாக்கிய பேரழிவுகளோடு ஒன்றுகலப்பதற்காக மட்டுமே வெளிநாடுகளின் மீது வன்முறைக்கு திரும்புகின்றன.
கெர்ரிகிறிஸ்டோப்பிரெட்மேன் மற்றும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் ஏனைய ஆலோசகர்கள் மற்றும் அனுதாபிகளிடம் இருந்து வரும் "பொறுப்பாக மாட்டோம்", “குற்றவாளிகள் இல்லைஎன்பது அழிந்து போகப் போவதில்லைமனிதயினத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகிறது.
இதுவரையில் யாருமே கணக்கில் கொண்டு வரப்படவில்லைபுஷ்,ஷெனெரும்ஸ்பெல்ட்ரைஸ்போவல்இன்னும் பலர் என ஆக்ரோஷ யுத்தத்தை நடத்த சூழ்ச்சி செய்த வாஷிங்டனில் இருப்பவர்கள் மட்டுமல்லஅவர்களுக்கு முன்னர் இருந்தவர்களைப் பாதுகாக்க மற்றும் அதே சூறையாடும் கொள்கைகளை தொடர சூழ்ச்சி செய்தவர்களான,ஒபாமாவிலிருந்து அடிமட்டத்திலிருப்பவர்கள் வரையில்இப்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லஅந்த யுத்தத்தை நடத்திய இராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமல்லஅதிலிருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்ட தனியார் ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லஅமெரிக்க மக்களுக்குள் அந்த யுத்தத்தைச் செருக உதவிய பொய் ஊடகங்கள் மட்டுமல்லஅவற்றை நியாயப்படுத்திய மற்றும் அதனோடு இணைந்து சென்ற கோழைத்தனமான மற்றும் உறுதி செய்தளித்த கல்வியாளர்கள் மட்டுமல்ல எவருமே கணக்கில் எடுக்கப்படவில்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாகஈராக்லிபியா மற்றும் சிரியாவின் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பேரழிவுகளுக்கு அவர்கள் தான் பொறுப்பாகிறார்கள்.
Bill Van Auken
30 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/1400630_who.shtml

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts