Search This Blog

Monday, 30 June 2014

கெர்ரியின் மத்திய கிழக்கு பயணத்தின் படுதோல்வி

மத்திய கிழக்கில் மூன்று நாள் சூறாவளி சுற்றுபயணத்திற்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி செவ்வாயன்று புரூசெல்ஸ் வந்தடைந்தார்ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசின் (ISIS)தாக்குதலையும் மற்றும் அதிகரித்துவரும் சுன்னி பிரிவினரின் கிளர்ச்சியையும் முகங்கொடுத்துஅமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட ஈராக்கிய பாதுகாப்பு படைகள் நிலைகுலைந்து போனதால் எடுத்துக்காட்டப்பட்ட வாஷிங்டனின் வரலாற்றுத்தோல்விக்கு விடையிறுப்பாக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறிருந்த போதினும் நேட்டோ வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்திற்காக கெர்ரி ஐரோப்பா வருவதற்கு முந்தைய அவரது அந்த பயணம் என்ன தெளிவுபடுத்தியதென்றால்தற்போதைய தோல்விக்கு இட்டுச் சென்றுள்ள பாசாங்குத்தனமான மற்றும் குற்றகரமான கொள்கைகளை எடுத்துகாட்டியதோடுமத்திய கிழக்கில் வாஷிங்டன் அதன் சூறையாடும் நோக்கங்களைப் பின்தொடர்வதில் ஒன்றின் மேல் ஒன்றாக அது அடுக்கி வைத்த முரண்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்கு அப்பாற்பட்டு,வேறொன்றையும் அதில் உள்ளடங்கி இருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியது.
அவரது முதல் நிறுத்தமாக கெய்ரோவில்கெர்ரி எகிப்தின் ஜனாதிபதியும் நடைமுறை இராணுவ சர்வாதிகாரியுமான அப்தெல் பதாஹ் அல்-சிசியின் முன்னால் பணிவுடன் காட்சியளித்தார்அமெரிக்க இராணுவ நிதியுதவியின் குழாய் மூடி மீண்டுமொருமுறை முழு வீச்சில் திறக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையால் அவரது விஜயம் கொண்டாடப்பட்டதுசிசி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்துள்ளார்குறைந்தபட்சம்20,000 பேரை அரசியல் கைதிகளாக சிறையில் அடைத்துள்ளார், 2,000த்திற்கும் மேற்பட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்குப் பொய் குற்றச்சாட்டுக்களின் பேரில் மரண தண்டனை விதித்துள்ளார்மற்றும் பரந்த சித்திரவதைகளை நிகழ்த்தி உள்ளார் என்ற உண்மைக்கு இடையே இது நிகழ்கிறது
வாஷிங்டன் 10 நாட்களுக்கு முன்னர் எகிப்திய இராணுவத்திற்கு சத்தமில்லாமல் 572 மில்லியன் டாலர் நிதியை வழங்கியிருந்தமை வெளியாகி இருந்ததுசினாயில் உள்ள இஸ்லாமிய போராளிகளைத் தாக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்று கூறப்படுவதும்ஆனால் ஒரு பாரிய கலகத்தை ஒடுக்குவதில் துல்லியமாக உயிர்பறிக்க கூடியதாக நிரூபிக்கப்பட்டதுமான 10 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை எகிப்திய ஆட்சிக்கு வழங்க அமெரிக்க முன்வருவதாக கெர்ரி உறுதிப்பட தெரிவித்தார்.
அதே மூச்சில், “அனைத்து எகிப்தியர்களின் சகல உரிமைகளையும் பாதுகாப்பதற்கானஅவரது கடமைப்பாடுகளையும் அவர் குறிப்பிட்டார்,மேலும் மனித உரிமைகளுக்கான சிசியின் பொறுப்புணர்வை "மிக பலமாக உணர்வதாகவும்அவர் நினைவுகூர்ந்தார்.  
மனித உரிமைகளுக்கான அந்த எகிப்திய பாதுகாவலர் சிசிஅதற்கடுத்த வெறும் 24 மணி நேரத்திற்குள், “பொய் செய்திகளைப் பரப்பினார்கள்என்ற ஒரு நகைப்பிற்கிடமான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று அல் ஜஜீரா இதழாளர்களுக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்த ஒரு எகிப்திய நீதிமன்றத்தின் தீர்ப்பைத் எடுத்துக்காட்டி கெர்ரியின் பாராட்டு துதிபாடல்களுக்கு வெகுமதி அளித்தார்வாஷிங்டன் அந்த தீர்ப்பிற்கு சம்பிரதாயமான கண்டனங்களை வெளியிட்டதுஆனால் அபாச்சிகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதை அது தெளிவுபடுத்தியது.    
ஆட்சி மாற்றத்திற்கான இலக்கில் வைக்கப்பட்டுள்ள ஈராக்லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் "ஜனநாயகத்தின்அறப்போராளியாக காட்டிக்கொள்கின்ற அதேவேளையில்மேலும் "அரேபிய எழுச்சி"என்றழைக்கப்படுவதற்கு ஆதரவு காட்டுவது போல் பாசாங்குத்தனம் செய்வதோடுஅமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் அதன் மூலோபாயத்தைஎகிப்தில் சிசியில் இருந்து சவூதி அரேபியாஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளின் பிற்போக்குத்தனமான முடியாட்சிகள் வரையில்பல சர்வாதிகார ஆட்சிகளின் மீது அடித்தளமாக கொண்டுள்ளது.
ஒரு அறிவிக்கபடாத நிறுத்தமாகஈராக்கில்இராணுவ விமானத்திலிருந்து குண்டு துளைக்காத கவசம் அணிந்து இறங்கிய கெர்ரிஈராக்கிய பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியைச் சந்தித்து 90 நிமிடம் உரையாடினார்அதில் அவர் ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மற்றும் "குறுங்குழுவாத பிளவுகளைக் கடந்துஅனைத்து தரப்பையும் உயர்த்தும் உட்பொருளில் வாதிட்டிருந்தார்.
கெர்ரி ஈராக்கை விட்டு புறப்பட்ட உடனேயேமலிக்கி ஒரு தேசிய ஒருமைப்பாட்டு அரசு குறித்த கருத்துருவை "அரசியலமைப்பிற்கு எதிரான சதியாகபகிரங்கமாக குற்றஞ்சாட்டி ஒரு உரையை வழங்கியதோடு,அதேவேளையில் "பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு புனித யுத்தத்திற்கு"அழைப்புவிடுத்ததோடுஅதில் தெளிவாக குறுங்குழுவாத வாய்ஜாலங்களையும் கையாண்டார்.
பாக்தாத் அரசாங்கத்தின் தரப்பில் இருக்குமாறு எர்பிலில் குர்திஷ் தலைமைக்கான கெர்ரியின் முறையீட்டை நிராகரித்து குர்திஷ் ஜனாதிபதி மஸ்சௌத் பர்ஜானி கை விரித்து விட்டார்அதுவும் அந்த முறையீடு செய்யப்படுவதற்கு முன்னரே அவர் அதை நிராகரித்துவிட்டார்கெர்ரியைச் சந்திப்பதற்கு முன்னர் நேரடியாக ஒரு நேர்காணலில் பர்ஜானி, “நாம் ஈராக்கில் ஒரு புதிய எதார்த்தத்தை முகங்கொடுத்து வருகிறோம்,” என்று அறிவித்ததோடுநாடு ஒன்றாக இருப்பதை கற்பனை செய்து பார்ப்பதும்"மிகவும் சிரமமாகஇருக்கிறதென்று அறிவித்தார்கிர்குக் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள எண்ணெய் வயல்களோடு குர்திஸ்தான் சுதந்திரத்தை நோக்கி செல்லும் என்று அவர் தெரிவிக்கிறார். அப்பகுதிகள் ISIS தாக்குதலால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு இடையே குர்திஷ் படைகளால் கைப்பற்றப்பட்டவை ஆகும்.  
ஈராக்கில் அமெரிக்க கொள்கையால் உருவாக்கப்பட்ட தோல்வியை கெர்ரியின் பயணம் இன்னும் ஆழப்படுத்த மட்டுமே செய்ததுஅந்த பயணத்தின் போதுகெய்ரோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் மிகவும் ஆச்சரியமான ஒரு கருத்தை வெளியிட்ட அவர், “லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்லஅல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்து வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்றார்.அவர் தொடர்ந்து கூறுகையில், “ஈராக்கியர்கள் அவர்களின் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பல ஆண்டுகளாக ஈராக்கியர்களுக்காக இரத்தம் சிந்தியதுகடுமையாக உழைத்தது,” என்று தெரிவித்தார்
என்னவொரு இறுமாப்புபோலித்தனம்ஈராக் மற்றும் லிபிய நெருக்கடிகளுக்கு (சிரியாவைக் குறிப்பிட வேண்டியதே இல்லைஅமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமே பொறுப்பல்லஇந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் அது நடத்திய குற்றங்களே இப்போது ஈராக்கிய பேரழிவை உருவாக்க ஒட்டுமொத்தமாக திரண்டு வந்துள்ளன.  
ஈராக்கில்அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் மற்றும் ஒவ்வொரு அமைப்பையும் அழித்துஅமெரிக்க இராணுவம் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் சிதைக்க கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்த அதேவேளையில் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களின் வாழ்க்கையை அது பறித்ததுஒரு பிரித்தாளும் மூலோபாயத்தைப் பயன்படுத்தி,வாஷிங்டன் ஈராக்கிய தேசியவாதத்தைத் துடைத்தழிக்க குறுங்குழுவாத அரசியல் முறையை திட்டமிட்டு விதைத்ததால்அதன்மூலமாக கட்டவிழ்ந்த கடுமையான குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தம் இப்போது மீண்டும் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.    
லிபியா மற்றும் சிரியாவில்ஆட்சி மாற்றத்திற்கான குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தங்களில் அதிரடி துருப்புகளாக, ISIS உட்பட ஏனைய இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு வாஷிங்டன் நிதியுதவியும்ஆயுத உதவியும் அளித்து வந்ததுஅப்போதும் அங்கே மீண்டும் ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டதுபஷார் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவும் மற்றும் துருக்கிசவூதி அரேபியா மற்றும் வளைகுடா முடியாட்சிகளில் உள்ள அதன் பிற்போக்குத்தனமான பங்காளிகளும் ஆதரித்து வந்த ISIS, இப்போதுஅமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நெருப்பூட்டப்பட்ட ஒரு யுத்தத்தை எல்லையைக் கடந்து ஈராக்கிற்குள் ஒரு பிராந்திய பாரியமோதலாக திருப்பி வருகிறதுசிரிய எல்லைக்குள், ISISக்கு எதிராக இராணுவ தாக்குதல்கள் நடத்துவதற்காக வாஷிங்டன் அங்கே இப்போதிருக்கும் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகிறதுஅதேவேளையில் ஈராக் எல்லைக்குள் அது பெரும்பிரயத்தனத்தோடு அதே ISISஐ தோற்கடிக்க அரசு படைகளை ஒழுங்கமைக்க முயன்று வருகிறது.         
ஈராக்கியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்க "இரத்தம் சிந்துவதைபொறுத்த வரையில்ஈராக்கிய யுத்தத்திற்கு மறுவாழ்வு கொடுக்க கெர்ரியின் முயற்சியானதுபுதிய மற்றும் இன்னும் குருதி கொட்டும் தலையீடுகளுக்குத் தயாரிப்பு செய்வதற்காக அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்த்திற்குச் சட்டப்பூர்வதன்மையைப் பெற முயலும் ஒபாமா நிர்வாகத்தினது(உண்மையில் இது யுத்த எதிர்ப்பு உணர்வின் ஒரு அலையால் பதவிக்கு கொண்டு வரப்பட்டது)ஒரு ஒருமித்த பிரச்சாரத்தின் பாகமாகும்.ஈராக்கில் ஜனநாயகத்தை விதைக்கவோ அல்லது அதைவிட பாரிய பேரழிவு ஆயுதங்களைக் கண்டறியவோ அமெரிக்கா ஈராக் மீது படையெடுக்கவில்லை.அப்போதும் சரி இப்போதும் சரி மூலோபாய ஆதாரவளங்கள் மீதும் மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவின் பிராந்தியங்கள் மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தைக் கொண்டு வர அமெரிக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதே அதன் நோக்கமாகும்.    
1971இல்வியட்நாமில் நான்கு மாதங்கள் இருந்து திரும்பி இருந்த ஒரு இளைஞரான கெர்ரிவெகுஜனங்களைக் கொல்லுதல்கிராமங்களை அழித்தல்,கைதிகளைச் சித்திரவதை செய்தல்கண்மூடித்தனமாக குண்டுவீசுதல் என அமெரிக்க படைகளின் குற்றங்களை விவரித்து வெளியுறவுகளுக்கான செனட் குழுவிற்கு யுத்தத்திற்கு எதிரான முன்னாள் வியட்நாம் இராணுவத்தினரின் ஒரு உருக்கமான அறிக்கையை வழங்கினார்இதே குற்றங்கள் அனைத்தும் ஈராக்கில் கடந்த மூன்று தசாப்தங்களில் மீண்டும் நடத்தப்பட்டிருந்தன.  
குழுவிற்கு அவர் வழங்கிய உரையில்கெர்ரிவியட்நாம்கம்போடியா அல்லது லாவோசில் ஒரு அமெரிக்கரின் இழப்பை நியாயப்படுத்தும் முயற்சியில்சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு அந்த இழப்பை இணைத்து...நாம் குற்றகரமான பாசாங்குத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறோம்அந்த வகையான பாசாங்குத்தனம் தான் இந்த நாட்டை சீரழித்திருப்பதாக நாம் உணர்கிறோம், என்று அறிவித்துஅப்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளின் மீது குற்றப்பத்திரிகை வாசித்தார்.
வியட்நாம்கம்போடியா அல்லது லாவோஸ்ஆகியவற்றிற்கு பதிலாக"ஈராக்என்ற சொல்லை பிரயோகித்தால் ஒருவரால் 43 வயதானநூறு மில்லியன் டாலர் பணக்காரரான கெர்ரியின் மீது மிகவும் துல்லியமாக பொருந்தக்கூடிய ஒரு குற்றப்பத்திரிகையை வைக்க முடியும்.
Bill Van Auken
26 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140627_thefia.shtml

Saturday, 28 June 2014

பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது, வோல் ஸ்ட்ரீட் எழுச்சியடைகின்றது

2014க்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பை பெடரல் ரிசர்வ் புதனன்று குறைத்ததோடுஅதன் நீண்டகால வருடாந்த வளர்ச்சி மதிப்பீட்டை சுமார் 2 சதவீதத்திற்குக் கொண்டு வந்தது. இது இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய சராசரியான 3.3 சதவீதத்தை விடவும் மிக குறைவாகும்ஆறு ஆண்டுகால வேலைவாய்ப்பின்மைவீழ்ச்சி அடைந்துவரும் ஊதியங்கள்மற்றும் கல்விசுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சமூக திட்டங்களின் வெட்டுக்களில் இருந்து பாரிய பெரும்பான்மை மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதையே இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
பொருளாதார வீழ்ச்சியும்பெருந்திரளான மக்களின் வாழ்க்கை தரங்களில் வீழ்ச்சியும் தொடர்ந்து நீடிக்கப் போகிறது என்பதை பெடரலின் மதிப்பீடு ஒப்புக் கொள்வதாக உள்ளது.
இந்த துயரகரமான மதிப்பீடு சமீபத்திய நாட்களில் வெளியான ஏனைய இரண்டு பொருளாதார அறிக்கைகளோடு ஒத்துள்ளதுகடந்த வாரம் உலக வங்கி இந்த ஆண்டின் உலகளாவிய வளர்ச்சிக்கான அதன் முன்கணிப்பை அதன் முந்தைய 3.2 சதவீத முன்கணிப்பிலிருந்து 2.8 சதவீதத்திற்கு குறைத்ததுமேலும் அமெரிக்காவினது அதன் கணிப்பை 2.8 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக கீழிறக்கியதுதிங்களன்று சர்வதேச நாணய நிதியம் அமெரிக்க வளர்ச்சிக்கான அதன் கணிப்பை 2.8 சதவீதத்திலிருந்து 2.0 சதவீதமாக மறுமதிப்பீடு செய்து குறைத்தது.  
அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மைகுறைந்தபட்சம் 2017 இறுதி வரையில் வழக்கமான மட்டத்திற்கு திரும்பாது என்று சர்வதேச நாணய நிதியம்  குறிப்பிட்டது.
இந்நிலையில் ஸ்டாண்டர்டு & புவர்ஸ் 500 பங்கு குறியீட்டை ஒரு புதிய சாதனை உயரத்திற்கு உயர்த்தியும்டோவ் குறியீட்டை 98 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்தும்வோல் ஸ்ட்ரீட் குதூகலத்தோடு புதனன்று பெடரலின் மதிப்பீடு மற்றும் கொள்கை அறிக்கைக்கு விடையிறுப்பு காட்டியது.
உலகம் முழுவதிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் கொள்கைகளைக் கருத்தில் கொண்டுபெடரல் குறைந்தபட்சம் இன்னுமொரு ஆண்டிற்கு நிதியியல் அமைப்பு முறைக்குள் நடைமுறைரீதியில் கட்டுப்பாடற்ற மற்றும் அளவில்லா நிதியை தொடர்ந்து பாய்ச்ச விரும்புவதாக தெளிவுபடுத்தி இருந்ததுபெடரலின் தற்போதைய பூஜ்ஜியத்திலிருந்து 0.25 சதவீத அளவிலான பெடரல் நிதியின் வட்டி விகித வரம்பை வரவிருக்கின்ற மாதங்களுக்கு நீடிக்க இருப்பதாகவும் மற்றும் அந்த அசாதாரண குறைந்த வட்டி விகிதங்கள் காலவரையின்றி நீடிக்குமென்றும் வங்கியாளர்களுக்கும் ஊக வணிகர்களுக்கும் மறுஉத்தரவாதம் அளிக்க பெடரல் தலைவர் ஜேனெட் யெல்லென் மத்திய வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தை முடித்த பின்னர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
நிதியியல் பிரபுத்துவத்திற்கு ஒரு பாரியளவு பொதுபணத்தை மானியமாக வழங்கும்துல்லியமாகஇந்த கொள்கை தான் கடந்த ஐந்து ஆண்டுகளாகவங்கியாளர்கள் மற்றும் தலைமை செயலதிகாரிகளின் சொத்துக்களை சாதனை அளவிலான மட்டத்திற்கு உயர்த்திசெப்டம்பர்2008இல் நெருக்கடி வெடித்த போது குறைந்த புள்ளிகளில் இருந்த பங்கு சந்தைகளின் மதிப்பை மூன்று மடங்கிற்கு அண்மித்தளவில் உயர்த்த உதவி உள்ளதுஅதேவேளையில் நிஜமான பொருளாதாரமோ தொடர்ந்து மந்தநிலைமையில் சிக்கியிருந்ததோடுபெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சி அடைந்திருந்தனஒரு சாதாரண அமெரிக்க குடும்பத்தின் வருவாய் 2007 மற்றும் 2012க்கு இடையே 8.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
எதிர்பார்த்தவாறே பெடரல் அதன் மாதந்தோறும் பங்குபத்திரம் வாங்கும் நடைமுறையில் (அதன் பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டம் என்றழைக்கப்படும் quantitative easingஇல்கூடுதலாக 10 பில்லியன் டாலர் அளவிற்கு குறைத்துக் கொண்டதுபத்திரிகைகளுக்கு அவர் அளித்த செய்திகளில்  பணத்தைப் புழக்கத்தில் விடும்  திட்டம் முடிந்த பின்னரும் கூடவட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் தொடரும் என்று யெல்லென் உறுதிப்பட தெரிவித்தார்.
அவர் பங்குச் சந்தையின் விண்ணைமுட்டும் உயர்வு உண்மையான பொருளாதாரத்தின் படுமோசமான நிலையுடன் முற்றுமுழுதாக தொடர்பற்றிருப்பதாகவும் மற்றும் "மிகைமதிப்பீடு செய்யப்படவில்லை"என்று குறிப்பிடும் அளவிற்கு சென்றார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் வோல் ஸ்ட்ரீட்டை பொறுத்தவரையில் அது தொடர்ச்சியான  பணப்பாய்ச்சலை பெறுமானால் அது திருப்தியடையும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிய வட்டிவிகித உயர்வுகள் தொடங்கப்படுமென்று நிதியியல் சந்தைகள் நம்பியபோது, 2015இன் மத்திய பகுதிக்குப் பின்னரும் வட்டிவிகிதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் வைத்திருக்க சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் பெடரலை வலியுறுத்தி இருந்தார்நிதியியல் அமைப்புமுறையின் பலவீனத்தை எச்சரித்து அவர் வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களுக்கு உண்மையான மலிந்த பணஉள்பாய்ச்சலை மத்திய வங்கிகள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென மறைமுகமாக குறிப்பிட்டார்.
அடிமட்டத்திலிருந்து மிகவும் மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை மறுபங்கீடு செய்யும் ஒரு திட்டமிட்ட கொள்கை எதற்காக அத்தியாவசியமாக இருக்கிறதென்றால் வேலைகளை உருவாக்குவதற்கும்,வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்குமே ஆகும் என்று யெல்லென்,லகார்ட் மற்றும் அவர்களைப் போன்றவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது.இதுவொரு பொய்யாகும்.
நிதியியல் அமைப்புமுறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவது உற்பத்தி முதலீடு மற்றும் கண்ணியமான சம்பள வேலைகளை விரிவாக்க இட்டுச் செல்லாது என்பதை அவர்கள் மிகவும் நன்கு அறிவார்கள்பொதுமக்களின் நிதிகளை இவ்வாறு திருப்பிவிடுவதிலிருந்து ஆதாயமடையும் வங்கியாளர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இந்த அதிருஷ்டமழையைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளையோ அல்லது பாடசாலைகளையோ கட்ட வேண்டிய அவசியமே அங்கே இல்லைகடந்த ஆறு ஆண்டுகளாக அரசாங்க பிணையெடுப்புகள் மற்றும் மத்திய வங்கிகளின் மானியங்கள் பெரும் பணக்காரர்களின் வங்கி கணக்குகளை மற்றும் பங்கு மதிப்புகளைக் கொழுக்க வைக்கவும் மற்றும் முன்பில்லாத அளவிற்கு அதிகமாக நிதியியல் சூழ்ச்சிகளின் பொறுப்பற்ற மற்றும் குற்றகரமான வடிவங்களுக்கு நிதியளிக்கவும் சென்றுள்ளது.
இதன் விளைவாக அரசுகளின் மீது ஏற்றப்பட்ட கடன்களைத் தீர்க்க,தொழிலாள வர்க்கத்தின் சமூக சேவைகள்வேலைகள்ஊதியங்கள்,ஓய்வூதியங்கள் மற்றும் வாழ்க்கை தரங்களை அழித்து,கண்மூடித்தனமான சிக்கன திட்டங்கள் திணிக்கப்பட்டுள்ளன. 2007 மற்றும்2012க்கு இடையே அமெரிக்க அரசாங்க செலவினங்களும் அரசுத்துறை முதலீடும் ஏறத்தாழ 8சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டதுஇது அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட காலத்தில் நடந்திருக்கும் மிகப்பெரிய வீழ்ச்சியாகும்பெருநிறுவன முதலீடோ மிக குறைந்தளவிற்கு குறைந்து போயுள்ளளது.
நிதியியல் மேற்தட்டிற்கு சமூக செல்வ வளத்தை பாரியளவில் திருப்பிவிடுவதோடு சேர்ந்துசர்வதேச நாணய நிதியம்உலக வங்கி மற்றும் பெடரல் ஆகியவை வேலை உருவாக்குகிறோம் மற்றும்போட்டித்தன்மை என்ற பெயரில்தொழிலாளர்களின் கடந்தகால சமூக சீர்திருத்தங்ங்களையும் பாதுகாப்புகளையும் வெட்ட தொடர்ந்து கோரி வருகின்றனஉணவு மற்றும் எரிபொருள் செலவுகளுக்கான அரசு மானியங்களை வெட்டுவதற்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கவும் அழைப்பு விடுத்துஉலக வங்கி அதன் ஜூன் 10இன்உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டதுவெளிப்புற நிதியியல் நிலைமைகள் இறுக்கமாகவும்,தொடர்ந்து சவாலாகவும் இருக்குமென்று உத்தேசிக்கப்படும் ஒரு உலகில்,எதிர்கால வளர்ச்சியானது உற்பத்திதிறன் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் உள்நாட்டு முயற்சிகளாலேயே பெரிதும் உந்தப்பட வேண்டும், என்று குறிப்பிட்டது.
ஆளும் மேற்தட்டின் நிதியியல் நடவடிக்கையை குணாம்சப்படுத்தும் அதே திரைமறை குற்றங்களும் சமூகரீதியில் பேரழிவுகரமான நடைமுறைகளும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் யுத்தவெறிப்பிடித்த வெளியுறவு கொள்கைகளிலும் வெளிப்பாட்டைக் காணுகின்றனஈராக்கிய பொறிவுஇது அந்நாட்டிலும்லிபியாசிரியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க யுத்தத்தின் மற்றும் அழிவுகளின் விளைபொருளாகும்எண்ணெய் விலைகளை உயர்த்தி அமெரிக்க பொருளாதாரத்தைத் தடம் புரள செய்யுமென லகார்ட் இந்த வாரம் எச்சரித்தார்.
அமெரிக்க தொழிலாளர்கள் ஏற்கனவே பங்கு விலைகள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களின் பணவீக்கத்தாலும் மற்றும் உக்ரேன் மற்றும் ஈராக் போன்ற இடங்களில் அமெரிக்க கொள்கையால் தலைகீழாகி போன நெருக்கடிகளாலும் எரியூட்டப்பட்டதால்அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளால் தாக்கப்பட்டிருக்கின்றனர்எரிவாயுவின் தேசிய சராசரி விலை 2008க்குப் பின்னர் இந்த ஆண்டு அதன் அதிகபட்ச விலையில் உள்ளதுஅமெரிக்க மாநிலஅரசுகளில் பாதிக்கும் மேற்பட்டவை எரிவாயு விலைகளின் உயர்வை அறிவித்துள்ளன.மாட்டிறைச்சிபன்றி இறைச்சிகோழி இறைச்சிமுட்டை மற்றும் பால் போன்றவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஆண்டிலிருந்து கூர்மையாக உயர்ந்துள்ளன.
கடந்த வாரம் பல பிரதான நாடுகளில் கட்டிட விலைகளின் பணவீக்கம் மற்றொரு நிதியியல் பொறிவின் அபாயத்தை உயர்த்தி இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்ததுஆனால் வங்கி அமைப்புமுறைக்குள் பணத்தைக் கொட்டுவதில் இருந்து தொடங்கி,சர்வதேச நாணய நிதியம் ஊக்குவிக்கும் அதே கொள்கைகள் தான் தவிர்க்கவியலாமல் உடைந்து போகக்கூடிய சொத்து குமிழிகளை உருவாக்குகின்றன.
இந்த முரண்பாடானதுஆளும் வர்க்கத்தின் இந்த அனைத்து அமைப்புகளும் பாதுகாக்கும் இந்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் இறுதி முடிவைப் பிரதிபலிக்கிறதுஇந்த ஒரு அமைப்புமுறை தான்மனித உற்பத்தி சக்தியை மந்தமாக்கியும் சீரழித்தும்,உயர்ந்து வரும் பங்கு சந்தைகள்சாதனையளவிலான பெருநிறுவன இலாபங்கள் மற்றும் எண்ணிக்கையளவில் சிறிய நிதியியல் பிரபுத்துவத்தின் தனிநபர் செல்வங்களுக்கு நிதியளிக்க சமூக ஆதார வளங்களைச் சூறையாடுவதை அதிகரித்துகடலளவிலான பாரிய மனித அவலங்களையும்ஒடுக்குமுறையையும் உருவாக்கி உள்ளது.
அடிக்கடி மேற்கோளிடப்படும் ஆனால் இருந்தபோதினும் அசாதாரணமாக வெளிப்படுத்திக் காட்டக்கூடியதும்மலைப்பூட்டுவதாகவும் உள்ள ஒரு புள்ளிவிபரம்முதலாளித்துவ அமைப்புமுறை அறிநெறிரீதியாகவும்,வரலாற்றுரீதியிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாது திவாலாகி இருப்பதை எடுத்துக்காட்டுகிறதுஅதாவது வெறும் 85 பில்லியனர்கள் இன்று உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள பாதி பேரின்அதாவது 3.5பில்லியன் மக்களின் செல்வ வளத்திற்கு இணையான செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைமை பொருளாதாரரீதியிலோ அல்லது அரசியல்ரீதியிலோ நிலைத்திருக்க கூடியது அல்லஅமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியிலும் சரி மேலும் மேலும் தொழிலாளர்கள்இப்போதைய இந்த அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் எந்தவொரு வழியும் இல்லைஇது பலரை விலையாக கொடுத்து ஒரு சிலரை இன்னும் அதிகமாக செழிப்பாக்கும் ஒரேதிசையில் ஒன்று குவிந்துள்ளதை வெளிப்படையாக மூடிமறைக்கிறது என்பதை உணர்ந்து வருகிறார்கள்.
எதிர்வரவிருக்கின்ற பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியாக்க அவசியப்படும் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே இதற்கான பதிலாக உள்ளது.
Barry Grey
20 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140623_ecom.shtml

Friday, 27 June 2014

ஜனநாயகமும் ஈராக்கிய தோல்வியும்

கடந்த இரண்டு வாரங்களில் ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க வெளியுறவு கொள்கை அமைப்பும் மத்திய கிழக்கு முழுவதிலும் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவற்காக ஈராக்கிய நெருக்கடியைச் சுரண்டுவதில் வேகமாக ஈடுபட்டுள்ளனஅமெரிக்க ஆளும் வர்க்கம் சிரியாவிற்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தவும் மற்றும் ஈரானின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் சூழ்ச்சிகளையும் திட்டமிட்டு வருகின்ற நிலையில்நூற்றுக் கணக்கான அமெரிக்க இராணுவ "ஆலோசகர்கள்மீண்டும் ஈராக்கிற்குத் திரும்பி வருகின்றனர்.
அரசியல் ஆளும்தட்டிடம் இருந்து வெளிவரும் வெறுப்பார்ந்த பாசாங்குத்தனம் நிரம்பி பிரச்சாரங்கள் ஊடகங்களினால் விமர்சனமின்றி பிரதிபலிக்கப்படுகின்ற நிலையில்அவை அருவருப்பூட்டபவகையாக உள்ளனஉலகளாவிய அதிகாரத்தைப் பின்தொடர்வதன் மீதான தந்திரோபாயங்களில் பிளவுபட்டிருந்தாலும் கூடஅரசு மற்றும் இராணுவ அமைப்புகளின் வெவ்வேறு கன்னைகள்குறைந்தபட்சம்எதற்கும் அவை பொறுப்பில்லை என்ற ஒரு விடயத்தில் ஒன்றுபட்டு உள்ளன.
அமெரிக்க கூட்டாளிகளோடு சதி ஆலோசனை செய்யவும்விரோதிகளை அச்சுறுத்தவும் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்ட ஒபாமாவின் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, “லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்லஅல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்த வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்று கெய்ரோவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்து பொதுவாக நிலவும் உணர்வை தொகுத்தளித்தார்இங்கே அவர் அமெரிக்க ஆதரவிலான எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் அல்-சிசியையும் சந்தித்தார்
கெர்ரியின் வரலாற்று பொருள் விளக்கத்தின்படிஈராக்கியர்கள் அவர்களின் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்கஅமெரிக்க இராணுவம் "ஈராக்கியர்களுக்காக பல ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளதோடு கடுமையாக உழைத்திருக்கிறதாம். அமெரிக்கா சுயநலமின்றி ஜனநாயகத்தை ஊக்குவித்த அதேவேளையில்ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு "சிரியாவிலிருந்து எல்லை தாண்டி இருக்கிறது,என்றார்.
கெர்ரி தொடர்ந்து கூறுகையில், ISIS சமூகங்களைத் தாக்கி உள்ளதோடு,அவர்கள் அது விரும்பும் அரசாங்கத்தைக் கொண்டிருக்க ஈராக்கின் சக்தியைச் சிதைப்பதன் மூலமாக முன்னேறி வருகிறார்கள், என்றார்.
எப்போதும் போல அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் யாருக்கும் எதுவும் தெரியாததைப் போல மற்றும் விளைவுகளே இல்லாமல் அப்பட்டமான பொய்களைச் சுற்றி திரிக்க முடியும் என்பதைப் போல பேசுகிறார்கள்.ஆனால் சம்பவங்களைக் குறித்த ஊடக செய்திகளிலே கூட உண்மைகள் அவற்றின் வழியைக் கண்டுள்ளதோடுகெர்ரியின் சொல்லாடல்களோடு அவை முரண்படுகின்றன.
முதலாவதாககடந்த சில வாரங்களாக ஈராக்கிய அரசு எதனால் சிதைந்து போயிருக்கிறதோ அந்த வேகத்தைக் கண்டு அமெரிக்கா அதிர்ச்சி அடைந்திருக்கின்ற நிலையில்அது எவ்விதத்திலும் ISISக்கு பரிச்சயமற்ற ஒன்றல்லசிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஏகாதிபத்திய-ஆதரவு கிளர்ச்சியின் பாகமாக அமெரிக்கா மற்றும் அதன் ஏதேச்சதிகார வளைகுடா பங்காளிகளிடம் இருந்து அந்த இஸ்லாமிய அடிப்படைவாத குழு நிதியுதவிகளைப் பெற்றுள்ளது.மீண்டுமொருமுறைஅமெரிக்கா அது எதை விதைத்ததோ அதேயே அது அறுவடை செய்து வருகிறது.
அனைத்திற்கும் மேலாகஈராக் அரசாங்கத்தின் மீதும் அதன் தற்போதைய பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கி மீதும் ஈரான் செலுத்தும் செல்வாக்கை குறைக்கும் என்றளவிற்கு ஈராக்கில் ISISஇன் முன்னேற்றம் நிச்சயமாக அமெரிக்க (மற்றும் இஸ்ரேலியஆளும் வர்க்கங்களின் பிரிவுகளால் ஒரு நேர்மறையான அபிவிருத்தியாக பார்க்கப்படுகிறது.
கெர்ரியின் மறுப்புகளுக்கு இடையேயும்அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு பொதுவான உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் பேரழிவுக்கு அமெரிக்காவே முதன்மையாக பொறுப்பாகிறது என்பது உலகம் முழுவதும் புரிந்து கொள்ளப்பட்டதாகும்.
புஷ் நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கைக்குப் பின்னால் இருந்த குற்றத்தன்மை மிக்க சூத்திரதாரியான முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னியின் அரசியல் மீளெழுச்சியானதுஅமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்கள் மீது எந்தவொரு கணக்குவழக்கும் முற்றிலுமாக இல்லாமல் இருப்பதைக் கடந்த வாரத்தில் மிகத்தெளிவாக காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.
ஈராக் மீதான மறுபடையெடுப்புக்கு தூண்டுதல் அளிக்க ஷென்னி ஞாயிறன்று ABCஇன் ஜோர்ஜ் ஸ்டீபனோபவுலஸ் உடன் இந்த வாரம்"எனும் நிகழ்ச்சியில் தோன்றினார்ஒபாமா நிர்வாகம் போதியளவிற்கு வேகமாக நகர்வதாக இல்லையென்று விமர்சித்துஷென்னி கூறுகையில்,வேலையைச் சரியாக செய்து முடிக்க 20,000 பேர் தேவைப்படுகின்ற போது நாம் 300 ஆலோசகர்களுக்காக வாதிடுகிறோம் என்றால்நாம் உண்மையிலேயே பிரச்சினையை சரியாக கண்டு கொண்டிருக்கிறோமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, என்றார்.
சிரியாவின் கொல்லைப்புறத்தில்[ஈராக்-சிரியாவின் இஸ்லாமிய அரசின்],பயிற்சி மற்றும் ஆயுதங்கள் மற்றும் இன்னும் இதர பிறவற்றோடு,சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இராணுவ தாக்குதலை தீவிரப்படுத்துவது உட்பட ஒரு"பரந்த மூலோபாயம்அவசியப்படுவதாக ஷென்னி தெரிவித்தார்.இப்போதைய நெருக்கடிக்கும் அவருக்கும் ஒன்றுமே சம்பந்தமில்லை என்பது போல கருத்துக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் அவர் தொடர்ந்து கூறுகையில்கடந்த 11 அல்லது 12 ஆண்டுகளில் என்ன நடந்தது என்று விவாதித்துக் கொண்டு நம்முடைய நேரத்தை நாம் செலவிட்டுக் கொண்டிருந்தால்நாம் வளர்ந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலைத் தவறுவிட்டு விடுவோம், என்றுரைத்தார்.
வெளியுறவு கொள்கைக்கு ஒரு புகழ்பெற்ற அதிகாரியாக ஷென்னி இன்னமும் பொதுமக்கள் முன்னால் வரமுடிகிறதென்ற உண்மையை விட வேறெதுவும் அமெரிக்க ஜனநாயகத்தின் சீரழிந்த நிலையை இந்தளவிற்கு தெளிவாக எடுத்துக் காட்ட முடியாதுஆளும் செல்வந்த மேற்தட்டால் நடத்தப்பட்ட குற்றங்களுக்கு எந்தவொரு நிஜமான சட்டரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான கணக்கெடுப்பும் இல்லை என்பதற்கு அவர் முன்னுதாரணமாக நிற்கிறார்ஒரு மிகப்பெரிய வெளியுறவு கொள்கை பேரிடருக்கு இடையிலும் கூடஈராக் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்என்றழைக்கப்படுவதில் செய்யப்பட்ட அமெரிக்க தலையீட்டு வரலாற்றின் மீது ஒரு சம்பிரதாயமான காங்கிரஸ் விசாரணைக்கான அழைப்பு கூட அங்கே இல்லை.
வியட்நாம் யுத்தத்திற்கு மத்தியில்அமெரிக்க செனட் வெளியுறவு குழு1966 மற்றும் 1971க்கு இடையே இஃபுல்பிரைட் விசாரணை (Fulbright hearings)என்று ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தியத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறதுமுக்கிய யுத்த எதிர்ப்பாளர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட முக்கிய சாட்சிகளிடமிருந்து இந்த விசாரணைகள் சாட்சியங்களைப் பெற்றதுஅந்த யுத்தத்தை முடிக்க கோரிக்கைவிடுத்த ஒரு முன்னாள் படையினராக கெர்ரியே கூட அதில் பங்கு வகித்தார்அமெரிக்க வரலாற்றில் அந்த காலக்கட்டத்தில்வெளியுறவு கொள்கை எவ்வாறு தீர்மானிக்கப்பபடுகிறது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்ற ஒரு குறிப்பிட்ட கருத்துரு அப்போது நிலவியது.
அதுபோன்று எதுவும் இப்போது இல்லைவெளியுறவு கொள்கை பிரத்யேகமாக மக்களின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்படுகிறதுஅதன் நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாவதுஎந்தவொரு பின்விளைவுகளும் இருக்காது என்ற முழு புரிதலோடு செயல்படும் ஒரு குற்றத்தன்மையான சதிக்கூட்டத்தால் அது தீர்மானிக்கப்படுகிறதுஇவை கட்டுபாடில்லாத இராணுவவாதம் மற்றும் உச்சக்கட்ட சமூக சமத்துவமின்மையால் முற்றிலுமாக சீரழிந்து போயுள்ள ஒரு அரசியல் அமைப்புமுறையின் அம்சங்களாகும்.
ஏகாதிபத்தியம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான ஒரு புதிய பாரிய இயக்கத்தை அவசரமாக உருவாக்குவது அவசியமாகும்.அதுபோன்றவொரு இயக்கத்தைத் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்தின் அடித்தளத்தில் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.ஆளும் வர்க்கம் திட்டமிட்டு வருகின்ற புதிய பேரழிவுகளுக்கு எதிரான போராட்டமானது ஒபாமா நிர்வாகம்ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள்,மற்றும் முதலாளித்துவ அரசின் அரசியல் முகமைகள் மற்றும் அமைப்புகளுக்கு வெளியே மற்றும் அவற்றிற்கு எதிராக அபிவிருத்தி செய்தாக வேண்டும்
ஒரு புத்துயிர்ப்பிக்கப்பட்ட யுத்த-எதிர்ப்பு இயக்கமானதுவிரல்விட்டு எண்ணக்கூடிய நிதியியல் செல்வந்த தட்டு மற்றும் அதன் அரசியல் சதிகாரர்களின் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கத்தோடுஒரு சோசலிச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களில் எந்தளவிற்கு வேரூன்றி இருக்கிறதோ அந்தளவிற்கு மட்டும் தான் அதனால் வெற்றி அடைய முடியும்.
Joseph Kishore
23 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140525_demo.shtml

Friday, 20 June 2014

ஈராக்கில் தோல்வியை முகங்கொடுக்கையில், அமெரிக்கா உதவிக்காக ஈரானிடம் திரும்புகிறது

ஈராக்கிய உள்நாட்டு யுத்த வெடிப்பை அடுத்துஅமெரிக்க வெளியுறவு கொள்கை நீண்டகால அரசியல் தாக்கங்களோடு ஒரு பாரிய பரிமாண உடைவைக் கண்டுள்ளது.
ஒரு இஸ்லாமிய படைகள் ஈராக்கின் மிக முக்கிய பகுதிகளில் அவற்றின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ள நிலையில்திங்களன்றுஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி உதவிக்காக ஈரான் பக்கம் திரும்பினார்வாஷிங்டன் தெஹ்ரானுடன் "பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளதுஎன்று அறிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்ஆக்கபூர்வமான எதையும் ஒதுக்கப் போவதில்லைஎன்றார்.
உலகின் மிகப் பெரியதும் மற்றும் அதிக செலவில் 2003 படையெடுப்பைத் தொடர்ந்து கட்டப்பட்டதுமான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து பகுதியான வெளியேற்றத்தை ஒபாமா நிர்வாகம் அறிவித்ததும் ஜோன் கெர்ரியின் அந்த முறையீடு வந்தது.
ஈரானை நோக்கி திரும்பியமை ஈராக்கிய தோல்வியின் அளவை எடுத்துக்காட்டுகிறதுஈராக்கில் நௌரி அல்-மலிக்கியின் ஈராக்கிய ஆட்சியை இப்போது அச்சுறுத்தி வரும் அதே இஸ்லாமிய அடிப்படைவாத படைகள் தலைமை தாங்கிய ஒரு கிளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கி வந்த நிலையில்வெறுமனே கடந்த பெப்ரவரியில் தான்சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக ஈரானை கெர்ரி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்பதினொன்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா படையெடுத்த ஒரு நாட்டில் அழிவைத் தடுப்பதற்கு கெர்ரி இப்போது ஈரானின் உதவியைக் கோருகிறார்.
1979 ஈரானிய புரட்சி ஷாவை கவிழ்த்தியதில் இருந்து, 35 ஆண்டுகளாக,ஈரானை நோக்கிய விரோதமே அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையின் மையத் தூணாக இருந்து வந்துள்ளது. 1980களின் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போதுரீகன் நிர்வாகம் அவரது பிராந்திய போட்டியாளர்களுக்கு எதிராக சதாம் ஹூசைனுக்கு நிதியுதவியும்ஆதரவும் வழங்கினார்.
அவரது 2002 கூட்டரசு உரையில்ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யுபுஷ் ஈரானை"துஷ்டர்களின் அச்சினது" (Axis of Evil) பாகமாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்அதேவேளையில் 2003இல் நடந்த ஈராக்கிய படையெடுப்பு ஈரான் மீதான ஒரு அமெரிக்க படையெடுப்புக்கும்ஆக்கிரமிப்புக்கும் ஒரு வெள்ளோட்டம் மட்டுமே ஆகும் என்பதை வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் தெளிவுபடுத்தினார்கள்ஒவ்வொருவரும் பாக்தாத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள்உண்மையான மனிதர்கள் தெஹ்ரானுக்கு செல்ல விரும்புகிறார்கள், என்ற புஷ் நிர்வாகத்தில் வியாபித்திருந்த கண்ணோட்டங்களை ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரி 2003இல் வர்ணித்தார்.
ஈரானின் அணுஆயுத திட்டம் மீதான பிரச்சினையைப் பயன்படுத்தி,அமெரிக்கா தயவுதாட்சண்யமின்றி அந்நாட்டை இலக்கில் வைத்து அந்நாட்டின் மீது நாசகரமான தடைகளை விதித்ததோடுஅதன் விஞ்ஞானிகளைப் படுகொலை செய்யவும் மற்றும் அதன் தொழில்துறை உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தவும் இஸ்ரேலுடன் கூடி வேலை செய்தது.
வெறும் ஓராண்டிற்கு முன்னர்ஈரானை மேற்கொண்டு தனிமைப்படுத்துவதன் மற்றும் மத்திய கிழக்கில் அதன் ஒரு பிரதான கூட்டாளியை இழக்குமாறு செய்வதன் பெரும் பாகமாக ஒபாமா நிர்வாகம் சிரியாவின் மீது குண்டுவீசுவதில் விளிம்பிற்கு வந்திருந்ததுசிரியாவில் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிடுவதில்அமெரிக்காவும் அதன் வளைகுடா முடியாட்சி பங்காளிகளும் சுன்னி தீவிரவாத ஈராக்-லேவன்ட் இஸ்லாமிய அரசு (ISIS)உட்பட பல்வேறு அல் கொய்தா கிளை அமைப்புகளை ஆதரித்தனஆனால் சிரியாவில் இருந்த வாஷிங்டனின் தீவிரவலது சுன்னி இஸ்லாமிய பினாமிகள் தோல்வியடைந்து கடந்த ஆண்டு பேரம்பேரம் மேசைக்கு வந்த போதுஈரான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள கூடாது என்று வாஷிங்டன் வலியுறுத்தியது.
கடந்த ஆண்டு தேர்தல்களுக்குப் பின்னரில் இருந்து ஈரானுடன் ஒரு நல்லிணக்கத்தை நோக்கிய தற்காலிக நகர்வுகள் இருந்த போதினும்,தற்போதைய திருப்பம் ஒரு அதிரடி திருப்பமாக இருக்கிறது.
அப்பிராந்தியம் முழுவதிலும் தசாப்தங்களுக்கும் மேலான இரத்தகர யுத்தங்களைக் கொண்டு கட்டி அமைக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவு கொள்கை முரண்பாடுகளின் சுமையால் பொறிந்து போய் கொண்டிருக்கிறது.அசாத்தைக் கவிழ்க்கும் ஒரு முயற்சியில் அல் கொய்தாவின் பல்வேறு துணை அமைப்புகளின் பக்கம் பொறுப்பற்று திரும்பி இருந்த நிலையில், ISISஈராக் முழுவதிலும் மூர்க்கத்தனமான வன்முறையோடு அங்கே உள்ள வாஷிங்டனின் ஷியைட் கைப்பாவை ஆட்சியைத் தாக்கத் தொடங்கி இலக்குகளை மாற்றியதும் வாஷிங்டன் வெளிப்படையாகவே கூனிக்குறுகி போனது.
ஈராக்கில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினாலும் பின்பற்றப்பட்ட2003-2011 அமெரிக்க யுத்தம்பரந்தளவிலும் குற்றமான முறையிலும் அமெரிக்கர்களின் மற்றும் ஈராக்கியர்களின் உயிர்களை அனாவசியமாக சூறையாடியது. ISIS போன்ற சக்திகள் ஆயுதமேந்துவதை மேற்பார்வையிடுவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவோடு சேர்ந்துஇதுவே கூட அல் கொய்தாவிற்கு எதிராக "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்"சண்டையிடுகிறோம் என்ற வாஷிங்டனின் வாதங்களை ஏளனப்படுத்துகின்ற நிலையில்ஈராக்கை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறோம் என்பது மத்திய கிழக்கில் இன்னும் அதிகமாக ஒரு புதிய பேரழிவுகரமான இரத்த ஆறுக்கு களம் அமைத்துள்ளது.
ஒபாமா நிர்வாகத்தினது போன்ற ஒரு வெளியுறவு கொள்கையின் உடைவைக் கண்ட ஆட்சிகள் அவற்றின் சொந்த நாட்டிற்குள் பெரிதும் பாரிய மக்கள் எதிர்ப்பின் வெடிப்பிற்கு ஆளாகின்றன என்பது நன்கறியப்பட்ட ஒரு வரலாற்று விதியாகும்.
அமெரிக்கா அனுபவிக்கும் இந்த வகையிலான ஒரு இராஜாங்க தோல்வி ஒரு ஆழ்ந்த செயற்பிறழ்ந்த அரசியல் அமைப்புமுறையின் விளைபொருளாகும்அதில் நிதியியல் ஊக வணிகத்தின் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போலி பண ஓட்டத்தால் குழம்பி போன ஆளும் வர்க்கம்விளைவுகளை ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்தி பேரழிவுகரமான குறுகிய-கால கொள்கைகளைப் பின்பற்றுகிறதுஅமெரிக்க அரசியலுக்குள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான எந்த கட்டமைப்பும் இல்லை.ஏகாதிபத்திய குற்ற நடவடிக்கைகளை ஆதரிப்பதில் மொத்தமாக இரண்டு கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தொற்றுமை நிலவுகிறதுஊடகங்களோ நிகழ்ச்சிநிரலில் என்ன யுத்தம் இடம் பெற்றிருந்தாலும் குதூகலத்தோடு ஒரு பிரச்சார நிறுவனங்களைப் போன்று செயல்படுகின்றன.
2003இல் ஈராக் படையெடுப்பு தொடங்கியதில் இருந்துஅமெரிக்க ஆளும் வர்க்கம் ஈராக்கை வெற்றி கொள்வதற்கு அதற்கு மொத்தத்தில் போதிய ஆயுத்தளவாடங்களே அவசியப்படுகிறது என்ற நம்பிக்கையின் மீது அதனை நிலைநிறுத்தி இருந்ததுஅதனோடு அதன் நோக்கங்களைப் பின்தொடர்வதில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நடத்தும் விருப்பமும் சேர்ந்திருந்ததுஉலக சோசலிச வலைத் தளம் முன்கணித்ததைப் போல,இப்போது அது "ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திய பேரழிவுகளோடுஅதற்கு தகுந்த வெகுமதியை பெற்று வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஈராக்கிய மக்களின் பரிதாபகரமான சந்திப்பு இன்னும் முடிந்துவிடவில்லைஆளும் வர்க்கத்திடம் நேரத்திற்கேற்ப பயன்படுத்துவதற்கு அருவருக்கத்தக்க இரத்தம் கோரும் மூலோபாய உபாயங்கள் பஞ்சமில்லாமல் இருக்கின்றனமேலும் அமெரிக்க துருப்புகளும்,டிரோன்களும் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளும் ஏற்கனவே அவர்களால் என்ன முடியுமோ அதை பேணுவதற்காக அனுப்பப்பட்டு விட்டனஒபாமா நிர்வாகம் அதன் வாய்ப்புகளை பரிசீலித்து வருகின்ற நிலையில்அந்நாட்டின் மீதான ஒரு புதிய படையெடுப்பும் எவ்விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.
இருப்பினும் ஈராக்கிய தோல்வி உலகம் முழுவதிலும்அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவில் எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஅது அரசியல் மற்றும் சமூக பதட்டங்களை அதிகரிக்கும் என்பதோடுதொழிலாளர் வர்க்கத்தின் பார்வையில் ஆளும் வர்க்கத்தையும்,அதன் அனைத்து அமைப்புகளையும் இன்னும் அதிகமாக இழிவுபடுத்தி,மதிப்பிழக்கச் செய்கிறது.
Alex Lantier
18 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140619_fac.shtml

அமெரிக்க ஊடகங்களும் ஈராக்கிய தோல்வியும்

நியூ யோர்க் டைம்ஸ்வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஒட்டுமொத்தமாக இதர முக்கிய செய்தி ஊடங்களின் நன்கு சம்பாதிக்கும் பண்டிதர்கள் எழுதிய பொய்யான மற்றும் சுயசேவைக்கு உதவும் கட்டுரைகளை விட,கான்சாஸில் உள்ள போர்ட் லீவன்வொர்த் இராணுவ சிறைச்சாலை கூடத்திலிருந்து செல்சியா (பிராட்லிமேனிங் எழுதிய ஒரு கட்டுரை ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கான நிஜமான ஆதாரங்களை எவ்வளவோ அதிகமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த அமெரிக்க சிப்பாயின் கட்டுரைபொய்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை அமெரிக்க மக்களிடையே கொண்டு செல்வதில் அரசாங்க இரகசியத்தன்மையின் பாத்திரத்தையும்ஊடகங்களின் கட்டுப்பாட்டையும் அம்பலப்படுத்துவதாக இருந்தது.
அமெரிக்காவினால் பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் நிதியுதவி வழங்கப்பட்ட ஈராக்கிய இராணுவத்தின் திடீர் பொறிவும் அந்நாடு முழுமையாக குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தத்திற்குள் வீழ்வதும் எதை எடுத்துக்காட்டுகிறதென்றால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்கள் மீதான சுமார் 700,000 இரகசிய ஆவணங்களையும்அத்தோடு உலகம் முழுவதும் பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவு கொள்கையின் அயோக்கியத்தனத்தையும் விக்கிலீக்ஸிற்கு வெளியிட அவரை உந்தியிருந்த கவலைகள் எதுவும் "தீர்க்கப்படவில்லைஎன்பதை மட்டுமே எடுத்துக்காட்டுவதாக மேனிங் குறிப்பிடுகிறார்.
அரசாங்கம் மற்றும் ஊடகங்களால் நிர்வகிக்கப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் முறைகேடான தகவல்களின் சுவர் இடிக்கப்பட்டமை அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தின் கடுங்கோபத்தைத் தூண்டிவிட்டதுஇராணுவ சிப்பாயும்முன்னாள் உளவுத்துறை பகுப்பாய்வாளருமான அவர் இப்போது35 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்ஏப்ரலில் ஓர் இராணுவ தளபதி அவரது கருணை மனுவை நிராகரித்தார்.
நான்காண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பால் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியின் 2010 நியமனத்திற்கு அமெரிக்க விடையிறுப்பை மேனிங் ஆராய்கிறார்அமெரிக்க யுத்தம் "ஒரு நிலையான மற்றும் ஜனநாயக ஈராக்கை உருவாக்குவதில் வெற்றிபெற்றுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கும் நோக்கில்அமெரிக்க பத்திரிகைகள் "அந்த தேர்தல்களை ஒரு வெற்றியாக அறிவித்த செய்திகளால் நிரம்பி இருந்தன,”என்று சிறையிலிருக்கும் அந்த சிப்பாய் நினைவுகூர்கிறார்.
அதே காலப்பகுதியில்பாக்தாத்தில் இருந்த அவரும் (மேனிங்அவரது ஏனைய இராணுவ பகுப்பாய்வாளர்களும் மலிக்கியின் சார்பாக செயல்படும்"ஈராக்கிய உள்நாட்டு மற்றும் மத்திய பொலிஸ் அமைச்சகம் அரசியல் அதிருப்தியாளர்களை கொடூரமாக ஒடுக்கியசெய்திகளைத் தொடர்ந்து பெற்று வந்ததாக அவர் எழுதுகிறார்அமெரிக்க ஆதரவிலான பிரதம மந்திரியின் எதிர்ப்பாளர்கள் "பெரும்பாலும் சித்திரவதை செய்யப்பட்டனர்,அல்லது கொல்லப்பட்டனர்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
மலிக்கி அரசாங்கத்தின் மீது ஒரு விமர்சனத்தை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட 15 நபர்களுக்கு "பயங்கரவாதத்தோடு முற்றிலுமாக எந்த தொடர்பும் இல்லைஎன்று கிழக்கு பாக்தாத்தின் அமெரிக்க தளபதிக்கு அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டுஅந்த குற்றங்களில் அமெரிக்க இராணுவம் நேரடியாக உடந்தையாய் இருந்ததை மேனிங் அம்பலப்படுத்துகிறார். “அவருக்கு இந்த தகவல் தேவையில்லை என்றும்,அதற்கு பதிலாகஇன்னும் அதிகமாக 'ஈராக்கிய-விரோத'அச்சுக்கூடங்களைக் கண்டறிவதில் நான் பெடரல் பொலிஸிற்கு உதவ வேண்டுமெனவும்அந்த தளபதி பதிலளித்தார்.
அந்த தேர்தல் மோசடியில் நமது இராணுவம் உடந்தையாய் இருந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்இருந்த போதினும் அந்த ஆழமான பிரச்சினைக்குரிய தகவல்கள் அமெரிக்க ஊடகங்களின் ராடார்களின் வழியாக பறந்து சென்றிருந்தன,” என்று அவர் எழுதுகிறார்.
இந்த கணக்குஈராக்கிய தோல்வி "மொத்தமாக மலிக்கியின் தவறாகும்"என்று இப்போது அமெரிக்க ஊடகங்கள் ஒரே குரலில் பாடுவதை பொய்யாக்குகிறது.
ஈராக்கில் இருந்த அபிவிருத்திகளுக்கும், “உள்ளிணைந்தஇதழாளர்களின் ஒரு அமைப்பு மூலமாக யுத்த செய்திகள் மீது பெண்டகன் நடத்திய தணிக்கையின் பாகமாக அவற்றை ஊடகங்கள் சித்தரித்ததற்கும் இடையே இருந்த கூர்மையான வேறுபாட்டை மேனிங் குறிப்பிடுகிறார்.இராணுவத்துடன் நல்லுறவு கொண்டிருந்த மற்றும் அதற்கு சாதகமான செய்திகளை வழங்கிய இதழாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது,அதேவேளையில் மோசடிகள்குற்றங்கள் மற்றும் பொய்களை அம்பலப்படுத்தியவர்கள் கருப்பு-பட்டியலில் வந்தனர்என்று எழுதுகிறார்.
ஒரு மில்லியனுக்கு மேலான ஈராக்கியர்களின் வாழ்வைப் பறித்த,அதேவேளையில் சுமார் 4,500 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்ட மற்றும் பத்து ஆயிரக் கணக்கானவர்களைக் காயப்படுத்திய ஒரு யுத்தத்தின் பேரச்சமூட்டும் மற்றும் குற்றத்தன்மையான குணாம்சத்தை அமெரிக்க மக்களிடமிருந்து மறைப்பதில் இராணுவ தணிக்கை முறை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், “உள்ளிணைப்புநிகழ்முறையானது பாக்தாத் மீது புஷ் "அதிரடி-ஆக்கிரமிப்பைக்கட்டவிழ்த்துவிட உத்தரவிடுவதற்கு முன்னரே தொடங்கி இருந்ததோடுஅதில் வெறுமனே யுத்த செய்தி வழங்குபவர்கள் மட்டுமல்ல,மாறாக பிரதான செய்தியிதழ்களின் மற்றும் ஏனைய ஊடக வெளியீடுகளின் உயர்மட்ட கட்டுரையாளர்கள்எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் இருந்தனர்.
டைம்ஸ் பிரசுரத்தின் ஜூனியர் ஆர்தர் ஓச்ஸ் சுல்ஜ்பெர்ஜர் மற்றும் அப்போதைய பத்திரிகை ஆசிரியரான பில் கெல்லர் போன்றவர்கள் ஈராக்கிற்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆதரிக்க அமெரிக்க மக்களுக்கு அழுத்தம் அளிப்பதில் சிறிதும் தயக்கமின்றி அவர்களையும் அவர்கள் செய்தியிதழ்களையும் அர்பணித்திருந்தனர்அவர்கள் ஈராக்கிய"பேரழிவு ஆயுதங்கள்குறித்தும்பாக்தாத் மற்றும் அல் கொய்தாவிற்கு இடையிலான தொடர்புகள் குறித்தும்இரண்டுமே அங்கே இல்லை என்ற போதினும்—அரசாங்கத்தின் பொய்களைக் கிளிபிள்ளை போல திரும்ப திரும்ப கூறியதோடுபுஷ் நிர்வாகத்தினது யுத்த பிரச்சாரத்தின் மீது எந்தவொரு விமர்சனரீதியிலான ஆய்வையும் தவிர்க்க முடிவெடுத்தனர்.முரண்பட்ட விதத்தில்டைம்ஸ் மற்றும் அதன் செய்தியாளர் ஜூடித் மில்லிரின் கபட முயற்சிகளினூடாகஅவர்கள் தங்களின் சொந்த பொய்களை அடுக்கிஅந்த பிரச்சாரத்தை அலங்கரித்தார்கள்.
இப்போதுபொறுப்பற்றதன்மையால் உண்டாக்கப்பட்ட ஈராக்கிய சமுதாயத்தின் சீரழிவால் முழு அளவிலான தோல்வி உண்டாகி இருக்கின்ற நிலையில்யுத்தத்திற்கு ஊடக பிரச்சாரகர்களாக யார் சேவை செய்தவர்களோ அவர்களே தங்களின் சொந்த பின்பக்கத்தைப் பாதுகாப்பதற்காகவேறு பக்கம் கவனத்தைத் திசைத் திருப்பி வருகிறார்கள்.தோமஸ் பிரெட்மேன் (இவர் ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் தமக்கு"எண்ணெய்க்காக ஒரு யுத்தம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை"என்று எழுதி இருந்தார்மற்றும் நிகோலஸ் கிறிஸ்டொஃப் போன்றடைம்ஸ் இதழ் கட்டுரையாளர்கள்ஈராக்கிய உடைவிற்கு முற்றிலும் மலிக்கியைத் தான் குறைகூற வேண்டும்அதில் அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது என்று வலியறுத்தி கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளனர்.
“ISIS இன் (ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசுவெறியர்களைத் திருப்பி ஓட்ட"அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்து, “மோசூலைத் திரும்ப கைப்பற்றுஎன்ற தலைப்பில் டைம்ஸ் கட்டுரையாளர் கோஹெனால் குறிப்பாக திங்களன்று எழுதப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க கட்டுரை அவர்களை பின்தொடர்ந்திருந்தது.
ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களைக் கொன்றதும் மற்றும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்ததும் ஆன ஒரு யுத்தத்திற்கு பொறுப்பை சுமத்தும் ஒரு அதிர்ச்சிகரமான வெறுப்பை உமிழ்கிற தூற்றலின் எந்தவொரு முயற்சியையும்அதாவது "குற்றஞ்சாட்டும் விளையாட்டைஏளனப்படுத்த கோஹென் அந்த கட்டுரையைப் பயன்படுத்துகிறார்.
அவர் எழுதுகிறார், “உண்மைகள் வெளிப்படையாக போதுமானளவிற்கு உள்ளன,” “அதன் பேரழிவு ஆயுதங்களுக்காக அமெரிக்கா 2003இல் ஈராக் மீது படையெடுத்ததுஆனால் ஈராக்கில் பேரழிவுகளுக்கான எந்தவொரு ஆயுதமும் இல்லை.” உண்மையில் யுத்தம் ஒரு பொய்யின் அடிப்படையில் இருந்தது என்பது போதுமானளவிற்கு வெளிப்படையாக உள்ளதுஇதை பரப்ப கோஹென் உதவி உள்ளார்.
அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “சதாமின் ஈராக்கில் அல் கொய்தா இருக்கவில்லைதாக்குதலினூடாக அமெரிக்கா அதை பிறப்பெடுக்க செய்தது.” இவ்விதத்தில் தான் யுத்தத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட மற்றொரு பொய் இருந்ததுஇதன் பேரழிவுகரமான விளைவுகளில் ஈராக்கிலும் அப்பிராந்தியம் முழுவதிலும் தீவிரவாத இஸ்லாமிய மற்றும் குறுங்குழுவாத போக்குகளைப் பலமடைந்ததும் உள்ளடங்கும்.
அவரது கட்டுரையில்கோஹென் ISIS “வெறியர்களுக்குஎதிராக ஒபாமா நிர்வாகம் "குறிப்பிட்ட இராணுவ படையைகட்டவிழ்த்து விட வேண்டுமென கோருகிறார்ஆனால் முதன்முதலில் லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்களில் இதே "வெறியர்களை"வாஷிங்டன் பயன்படுத்துவதற்கு அவரே உற்சாகத்தோடு ஆதரவளித்திருந்தார்அதுபோன்ற கொள்கை மீதான தர்க்கம் குறித்த எந்தவொரு கேள்வியையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்: “மத்திய கிழக்கில் ஒரு தர்க்கரீதியிலான அணுகுமுறை அரிதாகவே ஒரு சாத்தியமான அணுகுமுறையாக இருக்கிறது,” என்கிறார்அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்த மற்றும் அப்பிராந்தியத்தின் வளங்களைச் சூறையாட கையில் எந்த கருவி இருக்கிறதோ அதை பயன்படுத்துவது மட்டும் தான் "தர்க்கமாக"இருக்கிறது.
குற்றஞ்சாட்டும் விளையாட்டு ஒரு புள்ளியைத் தவறவிடுகிறது,” என்று கோஹென் தொடர்ந்து எழுதுகையில், “அமெரிக்காவின் விருப்பமில்லா தலையீட்டிற்குமுன்பே ஈராக் மற்றும் சிரியா இரண்டும் "உடைவதற்கு முதிர்ந்திருந்தன," என்கிறார்.
அவர் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்மூன்று நாட்களுக்குள்ளாக 504ஏவுகணைகளைப் பயன்படுத்தியது உட்பட சுமார் 1,700 குண்டுகள் வீசப்பட்ட ஒரு நடவடிக்கையில்பெண்டகனின் உத்தரவின் பேரில் குண்டுவீசுவதற்கான முழு சக்தியும் பயன்படுத்தி இருந்த நிலையில் அமெரிக்க தலையீடு ஏதோ "விருப்பமில்லாதஒன்றா.
இவ்வாறான ஒருவர், 1939 ஐரோப்பாவை "உடைவிற்கு முதிர்ந்திருந்தது"என்றும் ஹிட்லரின் மின்னல் வேக தாக்குதல்கள் "விருப்பமில்லாமல்"நடந்ததென்றும் கூட வர்ணிக்கக்கூடும் அல்லது நூரெம்பெர்க் தீர்ப்பாயங்களை "குற்றஞ்சாட்டும் விளையாட்டின்ஒரு பயனற்ற நடைமுறை என்றும் கூட நிராகரிக்கக்கூடும்.
குற்றத்தை நிஜமாக பகிர்ந்தெடுப்பது இன்னும் நடக்கவில்லை என்பது தான் யதார்த்தம்அதற்கு ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் திட்டமிடுவதில் மற்றும் செயல்படுத்துவதில் பொறுப்பானவர்கள்புஷ்,செனேரூம்ஸ்பெல்டுரைஸ் மற்றும் பவெல் முதல் உயர்மட்ட இராணுவ தளபதிகள் வரையில்யுத்த குற்றவாளிகளாக வழக்கின் முன்னால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.
இழிந்தயூதவிரோத வாரயிதழான Der Stürmerஉம் மற்றும் பின்னர் நாளிதழாக மாற்றப்பட்ட Fränkische Tageszeitung இன் பதிப்பாசிரியரான ஜூலியஸ் ஸ்ரெச்செர்மூன்றாம் குடியரசில் உயிர்பிழைத்திருந்த தலைவர்களோடு நூரெம்பெர்க்கின் நீதிமன்ற கூண்டில்இறுதியாக தூக்குமேடையில்நின்று கொண்டிருந்ததை நினைவுகூர வேண்டியிருக்கிறதுயுத்த கொள்கையை முறைப்படுத்துவதில் ஸ்ரெச்செர் நேரடியாக பங்கு வகிக்கவில்லை என்று அந்த தீர்ப்பாயம் கண்டது என்றபோதினும்அவர் எவ்வாறிருந்தாலும் ஜேர்மன் மக்களின் நனவில் நஞ்சூட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்ஸ்ரெச்செர்ரின் பிரச்சார முயற்சிகள் இல்லாது இருந்திருந்தால்ஜேர்மன் தளபதிகள் "யாருமே உத்தரவுகளுக்கு கீழ்படிந்திருக்க மாட்டார்கள்என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
ஈராக் யுத்த குற்றங்களில் எந்தவொரு உண்மையான கணக்கெடுப்பிலும் பெண்டகனின் பிரச்சார எந்திரத்திற்கு உத்வேகத்தோடு சேவை செய்த கோஹென்பிரெட்மேன்கெல்லர் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் ஆக்ரோஷ யுத்தத்தின் குற்ற ஊக்குவிப்புக்காக அதேபோன்று இணைக்கப்பட வேண்டும்.
முதல் தர இராணுவ சிப்பாய் மேனிங்கின் சமீபத்திய பங்களிப்பானது, 2003மார்ச்சில் தொடங்கப்பட்ட யுத்தத்திற்கு வெகு முன்பிருந்தே ஈராக்கிய யுத்த குற்றங்கள் குறித்தும் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் பாத்திரம் குறித்தும்உலக சோசலிச வலைத் தளம் எழுதிய ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்துகிறதுயுத்த ஊக்குவிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் அதை கொண்டு செயல்படுத்தப்பட்ட குற்றத்தன்மையிலான முறைகளை அம்பலப்படுத்த தொடக்கத்திலிருந்தே WSWS முனைந்திருந்தது.
பூமி எங்கிலும் இன்னும் அதிகமான கொடூர யுத்தங்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்ற அதேவேளையில்ஈராக்கில் ஒரு புதிய இராணுவ தலையீட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ்இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஊடகங்களின் பொய்களுக்கு எதிரான சளைக்காத போராட்டம் அனைத்திற்கும் மேலான அவசரமாக ஆகியுள்ளதுஇதற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தியும்மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அதை படிப்பதும் விஸ்தரிப்பதும் அவசியமானதாகும்.
Bill Van Auken
17 June 2014
http://www.wsws.org/tamil/articles/2014/june/140618_theus.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts