Search This Blog

Monday, 28 April 2014

ஆசியாவில் போர் அபாயம்

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் மோதல்களால் ஐரோப்பாவில் போர் ஆபத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ஜனாதிபதி ஒபாமா ஆசியாவில் இருக்கும் அமெரிக்க கூட்டாளி நாடுகளுக்கு விஜயம் செய்து, அங்கு பிராந்திய பதட்டப்பகுதிகளில் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார், அமெரிக்க இராணுவத்தின் சீனச் சுற்றிவளைப்புக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கிறார், அத்துடன் பசிபிக் பிராந்தியத்தில் மோதலுக்கும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒபாமாவின் பயணத்தில் மையமான நிகழ்ச்சிநிரலாக இந்த வாரத்தில் ஜப்பானுக்கு அவர் மேற்கொண்ட அரச பயணம் அமைந்திருந்தது. அங்கு அவர்ஆசிய-பசிபிக்கில் அமெரிக்க தலைமைக்கு புத்துயிரூட்டுவதற்குதான் தீர்மானத்துடன் இருப்பதை மீண்டும் உறுதி செய்தார். சீனாவைக் கீழ்ப்படியச் செய்யும் நோக்கம் கொண்ட இராஜதந்திரரீதியான தாக்குதல் மற்றும் இராணுவப் பெருக்க நடவடிக்கையான அமெரிக்காவின்ஆசியாவை நோக்கித் திரும்புதல்நிறுத்தப்பட்டு விட்டிருப்பதாக வந்த ஊகங்களுக்கு திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கத்துடன் இந்த கூற்று அமைந்திருந்தது
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒபாமாவின்திரும்புதலானதுஇந்தோ-பசிபிக் பகுதியை புவியரசியல் போட்டிகள் மற்றும் பதட்டங்களின் ஒரு வெடிக்கிடங்காக மாற்றி விட்டிருக்கிறது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்க கூட்டாளிகள் கிழக்கு சீனா மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் சீனாவுடனான அந்நாடுகளின் பிராந்திய மோதல்களை மூர்க்கமாக முன்னெடுக்க ஊக்குவிக்கப்பட்டன. ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே உடன் கூட்டாகப் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒபாமா, “ஜப்பானின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவிருக்கும் கடப்பாடுசர்ச்சைக்குரிய சென்காகு/டையாயு தீவுகள் உள்ளிடமுழுமையானதுஎன்று உறுதிப்பட கூறி எரியும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றினார்.
கிழக்கு சீனக் கடலில் இருக்கும் சிறிய, மக்கள் வசிக்காத, பாறைகள் நிறைந்த முகட்டுப் பகுதிகள் தொடர்பாக சீனாவுக்கு எதிரான ஒரு போரில் ஜப்பானுடன் இணைந்து கொள்ள ஒபாமா விருப்பம் காட்டுவதென்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அப்பட்டமான பொறுப்பற்ற தன்மையையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட அதிகம் அறியப்படாத ஒரு சிறு சர்ச்சையாக இருந்த ஒரு விடயம் இராணுவ மோதலுக்கான ஒரு ஆபத்தான வெடிப்புப்புள்ளியாக உருமாற்றப்பட்டிருக்கிறது. ஜப்பானுக்கு அமெரிக்காவின்முழுமையானஇராணுவ ஆதரவை அறிவித்திருப்பதன் மூலமாக, சீனாவுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சமிக்கையை அபேவுக்கு ஒபாமா வழங்கியிருக்கிறார்.
உக்ரேனில் அமெரிக்கா பகிரங்கமாக பாசிச அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையவற்றில் மிகவும் வலது-சாரியான அரசாங்கத்துடன் ஒபாமா அணிசேர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்திற்குள்ளாக, அபே தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவச் செலவினங்களை அதிகரித்திருக்கிறார், ஜப்பானிய இராணுவப் படைகளுக்கு அரசியல்சட்டரீதியாக இருக்கும் வரம்புகளை முடிவுக்குக் கொண்டுவர முனைகிறார், அத்துடன் அமெரிக்க பாணியிலான தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றையும் ஸ்தாபித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு சீனா உரிமை கோருவதை ஒப்புக் கொள்ளவும் கூட அவர் மறுக்கிறார்.
1937 நான்ஜிங் படுகொலையை (இதன்போது ஏகாதிபத்திய துருப்புகள் நூறாயிரக்கணக்கில் சீன அப்பாவி மக்களையும் படைவீரர்களையும் கொன்று குவித்தன) ஒத்த அட்டூழியங்களுக்கு பொறுப்பாக இருந்த ஜப்பானிய இராணுவவாதத்தின் முறையற்ற வழக்கங்களுக்கு அபே திட்டமிட்டு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். போரில் இறந்த ஜப்பானியர்களுக்கான படுபயங்கரமான யாசுகுனி திருவிடத்திற்கு (இவ்விடத்தில் 14 முதல் வகுப்பு (Class A )போர் குற்றவாளிகள் புனிதமாக்கப்பட்டுள்ளனர்)சென்ற டிசம்பரில் அவர் விஜயம் செய்ததானது, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை பூசிமெழுகுவதற்கான ஒரு பிரச்சாரத்திற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமைந்திருந்தது.
ஜப்பானிய இராணுவவாதம் இவ்வாறாய் புத்துயிரூட்டப்படுவதற்கு ஒபாமா நிர்வாகமே நேரடிப் பொறுப்பாகும். ஜப்பான் பிரதமராக இருந்த யுகியோ ஹடோயோமோ சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கும் ஒகினாவாவில் இருந்த அமெரிக்க இராணுவத் தளங்களை அகற்றுவதற்கும் திட்டமிட்டதானது  “திரும்புதலுக்கானதயாரிப்புகளுடன் மோதலுற்றதால் 2010 ஜூனில் அவர் இராஜினாமா செய்வதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து நிர்ப்பந்தம் பெற்றார். சென்காகு/டையாயு தீவுகள் தொடர்பான மோதல் பற்றியெரிந்த சமயத்தில், சீனாவுடன் ஜப்பான் போரிட்டால் ஜப்பானுக்கே ஆதரவு என பகிரங்கப்படுத்தி அமெரிக்கா பதட்டங்களை மேலும் மூட்டியது. அபேயும் அவரது வலது-சாரி தாராளவாத ஜனநாயகக் கட்சியும் 2012 தேசியத் தேர்தலில் வெற்றி பெற இந்த அச்ச சூழலை சுரண்டிக் கொண்டன.
இந்த வாரத்தின் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், “அபே எங்களது கூட்டணிக்கு காட்டியிருக்கும் அசாதாரணமான உறுதிப்பாடுக்காக அவருக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்த ஒபாமா ஜப்பானின் மறுஇராணுவமயமாக்கத்திற்கு தனது ஒப்புதல் முத்திரையையும் வழங்கினார். “எங்களது ஆழம்பெறுகின்ற பாதுகாப்பு ஒத்துழைப்புமற்றும்பிராந்தியத்தில் எங்களது படைகளை மறுஒழுங்கு செய்வதில் முன்னேற்றம்ஆகியவற்றைப் பாராட்டிய ஒபாமா ஜப்பானில் இருக்கும் அமெரிக்கப் படைகளில்எங்களது மிக முன்னேறிய இராணுவத் திறன்கள் இடம்பெற்றிருக்கும்என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
உக்ரேன் விடயத்தில் ஒபாமாவின் ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களும், சீனாவை நோக்கமாகக் கொண்ட அவரதுஆசியாவை நோக்கிய திரும்பலும்ஈரோஆசிய(Eurasian)நிலப்பரப்பை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படியச் செய்யும் நோக்குடனான ஒரு விரிந்த மூலோபாயத்தின் இரண்டு முனைகளாகும். அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கு ஈரோ-ஆசியாவின் மையமான முக்கியத்துவம் குறித்து, 1997 இல், சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவை ஒட்டி, அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். Foreign Affairs கட்டுரையில் அவர் அறிவித்தார்: “ஈரோ-ஆசியா இப்போது தீர்மானகரமான புவியரசியல் சதுரங்கப்பலகையாக சேவை செய்து கொண்டிருக்கும் நிலையில், இனியும் ஐரோப்பாவுக்கென ஒரு கொள்கையையும் ஆசியாவிற்கென இன்னொரு கொள்கையையும் வகுப்பது மட்டுமே போதுமானதல்ல. ஈரோ-ஆசிய நிலப்பரப்பில் அதிகாரப் பகிர்வு விடயத்தில் என்ன நடக்கிறது என்பது அமெரிக்காவின் உலகளாவிய முக்கியத்துவத்திற்கும் அதன் வரலாற்றுவழி மரபிற்கும் தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாக ஆகவிருக்கிறது.”
ஈரோ-ஆசியாவில் அமெரிக்க லட்சியங்களுக்கான முதன்மையான முட்டுக்கட்டைகளாக இருப்பது சீனாவும் ரஷ்யக் கூட்டமைப்பும் ஆகும். ஒபாமாவைப் பொறுத்தவரையில் இந்த இரு நாடுகளும் ஏற்கனவே மத்திய கிழக்கில், குறிப்பாக சிரியாவில் இராணுவத் தலையீடு விடயத்தில், அமெரிக்கத் திட்டங்களை விரக்தியடையச் செய்திருக்கின்றன. ரஷ்யாவுடனான ஒரு மோதலைத் திட்டமிட்டுத் தூண்டியிருக்கின்ற உக்ரேனிலான அமெரிக்க சூழ்ச்சிகள், ஒரு அணு வல்லமை பெற்ற எதிரியுடன் போர் ஆபத்தில் குதிக்கவும் கூட ஒபாமா விருப்பம் கொண்டிருப்பதை விளங்கப்படுத்துகின்றன. சென்ற நவம்பரில் சீனா வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் ஒன்றை அறிவித்ததை சவால் செய்வதற்கு அணுத் திறன் படைத்த B-52 குண்டுவீச்சு விமானங்களுக்கு உத்தரவிட்ட போதே ஒபாமா சீனாவுடனான மோதல் என்ற ஆபத்தான விளையாட்டை ஏற்கனவே ஆடியிருந்தார். வாஷிங்டனின் நோக்கம் வெறுமனே ரஷ்யா மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அவற்றை முழுமையாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காய் கீழ்ப்படியச் செய்ய வேண்டும், அதற்கு அவசியமென்றால் அவை உடைவதாலும் பிரிவதாலுமேனும் இது நடந்தாக வேண்டும் என்பதே அதன் நோக்கம் ஆகும்.
சர்வதேச தொழிலாள வர்க்கம் பெரும் அபாயங்களுக்கு முகம்கொடுக்கிறது. முதலாம் உலகப் போர் வெடித்த நூறு ஆண்டுகளுக்கும் பின்னரும், முதலாளித்துவமானது, 20 ஆம் நூற்றாண்டில் உலகத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் இருமுறை தள்ளிய அதே அடிப்படை முரண்பாடுகளால் உலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் போருக்குச் செய்யும் முனைப்புடன் கைகோர்த்து தாயகத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான ஒரு ஆழமடைகின்ற வர்க்கப் போரும் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும், ஜப்பானிலும், மற்றும் ஐரோப்பாவிலும் இராணுவவாதம் மற்றும் போரின் ஊக்குவிப்பானது முற்றிய நிலையில் இருக்கும் உள்முகமான சமூகப் பதட்டங்களை வெளிப்புறமாக வெளியிலிருக்கும் ஒரு எதிரியை நோக்கித் திசைமாற்றி விடுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக இருக்கிறது.  
காலாவதியாகிப்போன இலாப அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு அரசியல் போராட்டம் இல்லாமல், போரை நோக்கிய சரிவு என்பது தவிர்க்கமுடியாததாகும். உலகெங்கும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு தொடக்கமளிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் மே 4 அன்று இணையவழி சர்வதேச மே தினப் பேரணி ஒன்றை நடத்துகின்றன. இந்தப் போராட்டத்திற்கு உயிரூட்டக் கூடிய சர்வதேசப் புரட்சிகர சோசலிச முன்னோக்கு குறித்த இந்த பொதுவான களம் மற்றும் விவாதத்தில் இணைந்துகொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். internationalmayday.org அல்லது http://www.wsws.org/tamil/category/mayday-2014.html இன்றே முகவரியில் பதிவு செய்யுங்கள்.
Peter Symonds
26 April 2014
http://www.wsws.org/tamil/articles/2014/apr/140426_thed.shtml

Thursday, 24 April 2014

பாபர் மசூதி இடிக்கப்பட்டத்தில் பிஜேபி பாத்திரம் மற்றும் காங்கிரஸ் உடந்தையாய் இருந்தமைக்கு புதிய ஆதாரங்கள்


1992இல் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூத்த தலைவர்களுக்குத் தெரிந்தே, அவர்களின் ஒப்புதலோடு, இந்து மேலாதிக்கவாத அமைப்புகளால் மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டும் புதிய ஆதாரங்களை, ஓர் இந்திய புலனாய்வு செய்தித்தளமும், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமுமான கோப்ராபோஸ்ட் (Cobrapost), வழங்கி உள்ளது.

இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் கட்சி பிரதம மந்திரி பி. வி. நரசிம்ம ராவ், பாபர் மசூதி இடிக்கப்பட இருந்த சதி குறித்து அறிந்திருந்தும், அதை நடக்க அனுமதித்ததாக கோப்ராபோஸ்ட்டின் விரிவான சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. பதினாறாம் நூற்றாண்டு மசூதியான அது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியாவில் அமைந்துள்ளது.

நூலாய்வு ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொள்ளும் கோப்ராபோஸ்டின் இணை பதிப்பாசிரியர் கே. ஆஷிஷ், பாபர் மசூதியை இடித்து விட்டு அவ்விடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்கு ஓர் இந்து கோயில் கட்டும் இந்து வகுப்புவாத பிரச்சார இயக்கமான, ராம் ஜன்மபூமி (இராமர் பிறப்பிட) இயக்கத்தின் 23 இடைநிலை தலைவர்களை மற்றும் உள்ளூர் தலைவர்களை நேர்காணல் செய்து, டிசம்பர் 6, 1992இல் மசூதி இடிக்கப்பட்டதைக் குறித்த அவர்களின் கருத்துக்களை இரகசியமாக பதிவு செய்தார். ஆஷிஷ் நேர்காணல் செய்தவர்களில் பலர், அந்த இடிப்பு சம்பவத்தில் பங்காற்றியமைக்காக நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆவர் அல்லது பொலிஸ் அறிக்கைகளில் அதை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் ஆவர்.

பாபர் மசூதியை இடிக்க முன்கூட்டியே மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாக ஆஷிஷ்ஷால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் விவரித்தனர், அத்தோடு இந்தியாவின் பிரதான இந்து மேலாதிக்கவாத வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் அந்த சதியில் பங்கு வகித்திருந்ததாகவும் தெரிவித்தனர். சித்தாந்தரீதியில் BJPக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான, துணை-இராணுவ பாணியிலான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (RSS); விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில் - VHP): அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள்; மஹாராஷ்டிராவை மையமாக கொண்ட ஒரு பாசிச அமைப்பான ஷிவ் சேனா; மற்றும் முடிவுறவுள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான BJP ஆகியவை உடந்தையாய் இருந்தவர்களில் உள்ளடங்கி உள்ளன. பிஜேபி தலைவர்கள் எல். கே. அத்வானி, உமா பாரதி, மற்றும் கல்யாண் சிங் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பலர் இந்திய முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றனர்.

முழு கோப்ராபோஸ்ட் அறிக்கையை இங்கே காணலாம்.

அந்த சம்பவத்தை நடத்த ஓய்வூபெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் ஆயிரக்கணக்கான இந்து வகுப்புவாத நடவடிக்கையாளர்களுக்கு இராணுவ பாணியிலான பயிற்சி அளித்ததாக அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. மசூதியை இடிக்க கொண்டு வரப்பட்ட பிக்காசி, மண்வெட்டிகள், உளிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் "அந்த வேலையை முடிக்க" போதுமானவையாக இல்லாததால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் டைனமைட்டுகள் மற்றும் இதர வெடிபொருட்களைப் பயன்படுத்த "பிளான் B" திட்டத்தோடு வந்திருந்தனர்.

அந்த துணைக் கண்டத்தை பிரதானமாக இந்துக்களின் இந்தியாவாக, மற்றும் வெளிவேஷத்திற்கு "மதச்சார்பற்ற" இந்தியாவாக, மற்றும் ஒரு "முஸ்லீம்" பாகிஸ்தானாக பிரித்த 1947 வகுப்புவாத பிளவுக்கு பின்னர் நடந்திருந்த, ஐயத்திற்கிடமின்றி, தெற்காசியாவின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாக அந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்திருந்தது. பல மாதங்களாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை அதிர வைத்த கலகங்களோடு ஏற்பட்டிருந்த பிரிவினைக்குப் பின்னர், இந்த இடிப்பு சம்பவமே இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாத இரத்த ஆறை ஏற்படுத்தி இருந்தது. 3000 க்கும் மேலான மக்கள், அதில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள், அந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தனர்.

இந்து வகுப்புவாதிகள் கூறுவதைப் போல பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஒரு "திடீர்" வன்முறை நடவடிக்கை என்பதொரு பொய் என்பது எப்போதுமே தெளிவாக உள்ளது. அதை தகர்த்த ஆயிரக் கணக்கானவர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர். அனைத்திற்கும் மேலாக, அந்த சம்பவம் நண்பகலில் நடந்தேறியதோடு, அது படம் பிடிக்கப்பட்டது, ஆயிரக் கணக்கான பாதுகாவலர்களின் கண்களுக்கு முன்னாலேயே அது கட்டவிழ்த்துவிடப்பட்டது, உத்தரபிரதேச மாநில பிஜேபி அரசாங்கமும் சரி, காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் சரி அந்த பாதுகாவலர்களைத் தலையீடு செய்ய உத்தரவிடவில்லை.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மீதான உத்தியோகபூர்வ அரசு விசாரணை, அதாவது லிபெர்ஹன் கமிஷன் (Liberhan Commission), மிகக் கால தாமதமாக அதன் இறுதி அறிக்கையை 2009இல் சமர்ப்பித்த போது, அந்த அறிக்கை, “அந்நடவடிக்கை பெரும் கடினமான தயாரிப்போடும், முன்கூட்டிய திட்டமிடலோடும் நடத்தப்பட்டிருந்தன எனும் முடிவுக்கு இட்டு செல்லும் வகையில் ஆதாரங்கள் ஆணித்தரமாக உள்ளன," என்று முடித்திருந்தது.

இருந்தபோதினும், கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தியிருப்பது இன்னும் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பாத்திரம் குறித்த விபரங்கள் அளித்தமை உட்பட, அந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததை அதில் பங்குபற்றிய இத்தனை முக்கிய நபர்கள் இதற்கு முன்னர் இவ்விதத்தில் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. மேலும் வெவ்வேறு இந்து வகுப்புவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள், அது பாபர் மசூதி மீது தாக்குதல் நடத்துவதை நேரடியாக ஒழுங்கமைத்தவர்களாகட்டும், அல்லது தூண்டிவிட்டவர்கள் மற்றும் உடந்தையாய் இருந்தவர்களாகட்டும், அவர்கள் வகித்த பாத்திரங்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யவும் அவர்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்தியாவின் பொலிஸ், நீதித்துறை மற்றும் அரசாங்க அணுகுமுறையோ பாபர் மசூதி இடிப்பை கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாண்டு வந்ததோடு, அந்த அமைப்புகள், கோப்ராபோஸ்ட் அறிக்கையை முன்னுக்குப் பின் முரணானதென்று உதறித் தள்ளியுள்ளன. லிபெர்ஹன் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திராத காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA கூட்டணி அரசாங்கம், சமீபத்திய வெளியீடுகளை ஒரு மரணகதியிலான மவுனத்தோடு வரவேற்றது, அதேவேளையில் இந்தியாவின் முதன்மை அரசு புலனாய்வு முகமையான CBI (மத்திய புலனாய்வு அமைப்பு), அதில் "எந்தவொரு ஆதாரபூர்வ மதிப்பும்" இல்லை என கூறி உடனடியாக உதறித் தள்ளியது.

வகுப்புவாத மற்றும் மூடநம்பிக்கைத்தனமான ராம் ஜன்மபூமி இயக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த BJPக்கு இது தெய்வாதீனமாக இருக்கும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை நிறைந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஜூன் 1991இல் முதல்முறையாக பதவிக்கு வர அந்த இயக்கத்தை BJP பயன்படுத்தியது. அதற்கு முந்தைய ஆண்டு, பிஜேபி தேசிய தலைவர் எல். கே. அத்வானி, ராம் ஜன்மபூமி இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, இந்தியாவின் இந்து குணாம்சத்தை எடுத்துக்காட்ட முன்னோடியான பிரச்சாரமென்று கூறி, இந்தியா முழுவதிலும் ஒரு வாரகால ரத யாத்திரை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோப்ராபோஸ்ட் செய்தியின்படி, அந்த மசூதி இடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே VHP மற்றும் சிவசேனாவினால் இரகசியமாக அந்த இடிப்பு குழுக்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நடவடிக்கை நடந்தேறுவதற்கு சற்று முன்னதாக, அயோத்தியாவில் அத்வானி மற்றும் ஏனைய மூத்த பிஜேபி தலைவர்கள் பங்குபெற்ற ஒரு பெரிய கூட்டத்திலேயே அந்த விபரங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.

இந்த இடிப்பு சம்பவத்தை நடத்திய கரசேவகர்களுக்கு (சுய ஆர்வலர்கள்) பயிற்சியளிப்பதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும் ஏனைய பிஜேபி குத்தகைதாரர்கள் நேரடியாக பங்குபெறவில்லை என்றபோதினும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுவதில் பங்கெடுக்க பல கரசேவகர்கள் ஒரு மதவாத உறுதிமொழி எடுத்தபோது அவர்கள் அங்கே இருந்தனர்.

பாபர் மசூதியை இடிப்பதற்கான முடிவு பல்வேறு உயர்மட்ட இரகசிய கூட்டங்களினூடாக எடுக்கப்பட்டிருந்தது. VHP தலைவர் அசோக் சிங்ஹாலும், மற்றொரு RSS தலைவரும் மற்றும் அத்வானி, உமா பாரதி மற்றும் வினேய் கதியார் உட்பட மூத்த பிஜேபி தலைவர்களும் உட்பட RSS, VHP மற்றும் பஜ்ரங் தளம் தலைவர்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்.

சிவ சேனா நவம்பர் 1992இல் வடக்கு ஆவென்யூவில் அதன் சொந்த இரகசிய கூட்டத்தை நடத்தியது, அதில் ஜய் பகவான் கோயல் மற்றும் மொரேஷ்வர் சேவ் உட்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவ சேனாவின் உயர் தலைவரான மறைந்த பால் தாக்கரே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றபோதினும், இடிப்பதற்கான திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் விவகாரங்களை அவர் மிக நெருக்கமாக மேற்பார்வையிட்டு வந்தார்.

உத்தர பிரதேச பிஜேபி முதல் மந்திரி கல்யாண் சிங்கும், காங்கிரஸ் பிரதம மந்திரி ராவும் பாபர் மசூதி மீதான தாக்குதல் குறித்து முன்கூட்டிய அறிந்திருந்தார்கள் என்பதோடு அது நிகழ அவர்கள் அனுமதித்தார்கள் என்ற உண்மையின் மீது கூடுதல் ஆதாரங்களையும் கோப்ராபோஸ்ட் நேர்காணல்கள் வழங்குகின்றன. உத்தர பிரதேச மாநில அரசாங்கம் பாபர் மசூதியைப் பாதுகாக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறும் விதத்தில், கல்யாண் சிங் மாநில பாதுகாப்பு படைகளை ஒதுங்கி இருக்க உத்தரவிட்டார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் தலையீடு செய்ய போதுமான காரணங்கள் இருந்தும், இந்து மேலாதிக்கவாதிகள் அவர்களின் இடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதித்தது.

மதசார்பற்ற இந்தியாவின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் காங்கிரஸ் காட்டிக் கொள்கின்ற அதேவேளையில், இந்து வகுப்புவாதத்தை முற்றிலுமாக ஊக்குவிப்பதிலும் மற்றும் அதற்கு உடந்தையாய் இருப்பதிலும், 1947இல் துணைகண்டத்தின் இரத்தந்தோய்ந்த வகுப்புவாத பிரிவினையில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளோடு ஒத்துழைத்ததில் அது வகித்த பாத்திரம் முதற்கொண்டு, உண்மையில் அது ஒரு நீண்டகால வரலாறைக் கொண்டுள்ளது.

1980களில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இந்து வலதிற்கு விட்டுக்கொடுப்புகளை அளித்தது, அதுவரையில் அவை ஒரு வரம்பிற்குட்பட்ட சக்தியாகவே இருந்தன. 1949இல் இந்து மேலாதிக்கவாதிகள் மசூதிக்குள் திருட்டத்தனமாக கொண்டு போய் வைக்கப்பட்டிருந்த இந்து கடவுளான இராமரின் சிலையை இந்து அடிப்படைவாதிகள் வணங்க மற்றும் அந்த கோயிலுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்கும் வகையில், 1985இல் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பாபர் மசூதிக்கு இடப்பட்டிருந்த பூட்டுக்களை நீக்குமாறு உத்தரவிட்டதும் இதில் உள்ளடங்கும்.

குறிப்பாக தேசிய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார சமயத்தில் கோப்ராபோஸ்டின் வெளியீடுகள் வந்திருப்பதால், அவை BJPஐ ஆத்திரமூட்டி உள்ளன.

மூத்த பிஜேபி தலைவர் ரவி சங்கர் பிரஷாத், “அது கோப்ராபோஸ்ட் அல்ல, அது காங்கிரஸ் போஸ்ட்," என்றார். தேர்தல் விரோதிகளால் தேர்தல் ஆதாயங்களுக்காக "ஊக்குவிக்கப்பட்ட" நயவஞ்சக நடவடிக்கை என்று அவர் அதை குற்றஞ்சாட்டினார்.

பிஜேபி அதன் தேர்தல் அறிக்கையில், “அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவும் வகையில் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் அனைத்து வாய்ப்புகளையும் காண" வாக்குறுதி அளித்ததன் மூலமாக, இராமர் கோயில் கட்டும் அக்கட்சியின் வகுப்புவாத பிரச்சாரத்தை அது மீண்டும் முன் கொண்டு வந்துள்ளது.

BJP'இன் தேர்தல் பிரச்சாரம் குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான "இந்துவாத இரும்புமனிதரும்", கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளருமான நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளைத் தூண்டிய முக்கிய தூண்டுதாரியான மோடி போன்ற ஒரு முரட்டு இந்து வகுப்புவாதி, இந்திய அரசியலின் மகுடத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய மற்றும் மேற்கத்திய மேற்தட்டு எதை "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று துதிபாடுகிறதோ அங்கே நிலவும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் உண்மையான நிலையை அடுக்கடுக்காக பேசுகிறது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:


By Deepal Jayasekera 
18 April 2014

Tuesday, 22 April 2014

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்

Sri Lanka: Journalist brutally attacked at Jaffna
இலங்கையின் வடக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல்வலம்புரி மற்றும் வீரகேசரி நாளிதழ்களின் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன், கடந்த 14ம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் வடக்கில் பத்திரிகையாளர்கள் மற்றும்பத்திரிகை நிறுவனங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் அண்மையதாகும்.
தமிழ்-சிங்கள புதுவருட தினமான அன்று, செல்வதீபன் மோட்டார் சைக்கிளில்தனது தாயாரின் வீட்டிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள மனைவியின் வீட்டிற்குசென்று கொண்டிருக்கும்போது, வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகாமையில், மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாதஇரண்டு நபர்களால் இரவு 08.30 மணியளவில் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல்காரர்கள்நீ ஊடகவியலாளரா?” எனகேட்டுக்கொண்டே இரும்புக் கம்பியால் தலையின் பின்பகுதியில் தாக்கியுள்ளனர், தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அடுத்த அடிகள் நாரிப்பகுதியில் விழுந்த நிலையில், அவர் கீழே விழுந்தார்.
உயிர் தப்புவதற்காக அருகில் இருந்த பற்றையை நோக்கி ஓடிய செல்வதீபனை பின்னால் விரட்டிய, தாக்குதல்தாரர்கள், கையில் வைத்திருந்தகம்பிகளை அவர் மீது வீசியெறிந்து தாக்கினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை அடித்து நொருக்கினர். இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1கிலோமீட்டர் தொலைவில் இராணுவ முகாம் ஒன்றும் உள்ளது.
நீண்ட நேரத்தின் பின் செல்வதீபன் தொலைபேசியில் உறவினரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார், பின்னர் அவ்வழியாக வந்த பேரூந்தின் சாரதி,நடத்துனர் மற்றும் பயணிகளுமாக சேர்ந்து அவரை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தெளிவு. சம்பவம்நடப்பதற்கு முன் சில நாட்களாக இனந்தெரியாத சிலர் தன்னை பின்தொடர்வதை செல்வதீபன் அவதானித்திருந்தார். தான் பணி புரியும்பத்திரிகைகளின் ஆசிரிர்களிடம் தனக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியப்படுத்தியதோடு இதனடிப்படையில் நெல்லியடி பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. “முறைப்பாட்டை பதிவு செய்தால்மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்று பொலிசார் கூறியதால்நான் அடுத்த நாள் முறைப்பாடு பதிவு செய்ய இருந்த வேளையிலேயே தாக்கப்பட்டேன்”, என செல்வதீபன் கூறினார்.
தாக்குதல் நடந்த பின்னர் நெல்லியடி பொலிசார் அன்று இரவேசெல்வதீபனிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவுசெய்ததுடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தனர். கடந்த காலத்தில்ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சம்மந்தப்பட்டவர்களோ அல்லது சந்தேகநபர்களோ இன்றுவரை பொலிசாரினால் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. இந்த முறைப்பாட்டின் தலைவிதியும் வேறுவிதமாக இருக்க முடியாது.
இந்த தாக்குதல், கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அரசாங்கம் வடக்கில் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாரிய இராணுவ ஒடுக்குமுறைகளின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது. 2009 மே மாதம் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிமாதங்களில் நடந்த அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக, கடந்தமாதம் .நா மனித உரிமைகள் பேரவையில் (யூஎன்எச்ஆர்சி) அமெரிக்க அனுசரணையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலிறுப்பாக, ஜனாதிபதிமஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் மீண்டும்புலி பயங்கரவாதம்” தலைநீட்டியிருப்பதாக ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 12ம் திகதி, கோபி என்றழைக்கப்படுபவரின் தலைமையில் புலிகள் மீண்டும் வடக்கில் செயற்படுவதாகவும், கோபிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் ஜெயகுமாரி என்பவரையும் அவரது மகளையும் கைது செய்த பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவு, அதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக சுமார் 60பேரை கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்துவைத்தது. அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று விசாரிப்பது, கிராமங்களை சுற்றிவளைத்து இளைஞர்களை கைது செய்து விசாரிப்பது மற்றும் வீதிச்சோதனைகளை புதுப்பிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். செல்வதீபன்இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் தொடர்பான செய்திகளைத் திரட்டி வெளியிட்டிருந்தார்.
கடந்த மாதம் யூஎன்எச்ஆர்சியில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அனுசரணையிலான தீர்மானம், இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய மீறல்கள் தொடர்பாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில்தம்மால் இழைக்கப்பட்ட குற்றங்களை மூடி மறைப்பதற்காக, மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகங்கங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் மௌனிகளாக்குவதற்கு அரசாங்கம் இந்த அச்சுறுத்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
தர்மபுரத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயகுமாரி, போரின் கடைசி நாட்களில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனைப் பற்றி தகவல் தறுமாறுகோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரத்தில்முன்னணியில் நின்றவராவார். இவரின் கைதை தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைது செய்துபின்னர் விடுதலை செய்துள்ளது.
தனது சகோதரனும் 2008 ஆகஸ்ட் மாதம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுகொண்டு செல்லப்பட்டதாக செல்வதீபன் தெரிவித்தார், “மனித உரிமைகள்ஆணைக்குழுவில் நாம் அறிவித்ததை தொடர்ந்து, பொலிசார் தாம் அவரைவிடுதலை செய்து விட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குபதிலளித்தனர். காணாமல் போகும்போது அவருக்கு வயது 26. ஆறு வருடங்கள்ஆகியும் அவர் சம்பந்தமான எந்த விதமான தகவல்களும் அரசாங்கத்தரப்பால் தரப்படவில்லை,” என அவர் கூறினார்.
தான் தாக்குதலுக்கு உள்ளானது இது முதற் தடவை அல்ல என்றும், தன்னைஇதற்கு முன்னர் அரசாங்கத்துடன் செயற்படும் தமிழ் துணைப்படைக்குழுவொன்றும் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக செல்வதீபன்தெரிவித்தார். “கடந்த 2007ம் ஆண்டு எனது சகோதரனைப் பார்க்கச் சென்றவேளையில் மொனராகல மாவட்டம் வெல்லாவய என்னும் இடத்தில்வைத்து, இந்தக் குழு என்னையும் எனது மாமாவையும் கடத்திச் சென்றது,என்னை விடுதலைப் புலிகள் சந்தேக நபராகவும், மாமா வர்த்தகர் என்பதனால்அவரிடம் கப்பம் வாங்குவதற்காகவும் வெலிகந்த காட்டில் மூன்று மாதங்கள்வைத்திருந்து சித்திரவதைகள் செய்தார்கள். விசாரணை என்ற பெயரில் 10நாட்களுக்கு ஒரு முறை கடுமையாக சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்தோம். துப்பாக்கிப் பிடி மற்றும் மரக்கட்டைகளாலும் கைகள் மற்றும்சப்பாத்துக் கால்களாலும் கடுமையாக தாக்கப்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையிலும், ஊடகத்துறைமூலம் மக்களுக்கு உண்மையான பிரச்சனைகளை வெளிப்படுத்தவே இதைதேர்ந்தெடுத்தேன். என் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பந்தமாக நான்யாரையும் வெளிப்படையாக குற்றம் கூறமுடியாது, ஆனால் இப்படியானதாக்குதல்கள் எவர்களால் இவ்வளவு துணிச்சலாகவும் மிலேச்சத்தனமாகவும் மேற்கொள்ள முடியும் என்பதனை கடந்த கால சம்பவங்களை அவதானித்திருக்கும் ஒருவரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்எனஅவர் மேலும் கூறினார்.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதும், இராணுவம்வடக்கில் ரோந்து நடவடிக்கைகளையும் சோதனை நடவடிக்கைகளையும்புதுப்பித்துள்ள நிலையில், தாக்குதல்காரர்கள் தடங்கல் இன்றி தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். கடந்த ஆண்டும் இதே காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன்புகுந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தி அலுவலகத்துக்குத் தீ மூட்டிவிட்டுத்தப்பிச் சென்றிருந்தனர். இந்தப் பெரும் தாக்குதலின் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
அண்மையில் ஊடகவியாலளர்களை பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படாமல் இருக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக வரிசைப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்குவந்த பின்னர், கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த ஒன்பது ஊடகவியலாளர்களின் கொலை சம்பந்தமாக பொறுப்பாளிகள் கண்டுபிடிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லையென குற்றஞ்சாட்டும்அந்த அறிக்கை, இந்தக் கொலைகளில் பலவற்றின் பின்னணியில் அரசாங்கமும் இராணுவ அலுவலர்களும் சந்தேக நபர்களாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

Vimal Rasenthiran
21 April 2014
http://www.wsws.org/tamil/articles/2014/apr/140422_sril.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts