Search This Blog

Tuesday, 18 February 2014

அமெரிக்காவில் பாரியளவிலான வேலைவாய்ப்பின்மை

Mass unemployment in America

உணவு மானிய கூப்பன் திட்டத்திலிருந்து 8.7 பில்லியன் டாலர் வெட்டும் ஒரு சட்டமசோதாவில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக வெள்ளியன்று பேசுகையில் ஜனாதிபதி பராக் ஒபாமா அன்றைய நாள் காலையில் வெளியான சலிப்பூட்டும் ஜனவரி மாத வேலைகள் அறிக்கையைப் புகழ்ந்துரைத்தார். டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியை 160 புள்ளிகள் அளவிற்கு உயர்த்தி, வோல் ஸ்ட்ரீட்டும் உற்சாகத்தோடு எதிர்வினை காட்டியது.
வெள்ளிக்கிழமை அறிக்கையின்படி, ஜனவரியில் அமெரிக்க பொருளாதாரம்,பொருளியல் வல்லுனர்கள் அனுமானித்திருந்த 189,000 வேலைகளை விட வெகு குறைவாக 113,000 வேலைகளையே உருவாக்கியது. இது வேலைகளின் மந்தமான உயர்வைக் கொண்ட தொடர்ச்சியான இரண்டாவது மாதமாக இருந்தது, முன்னதாக டிசம்பரில் 75,000 வேலைகள் உயர்ந்திருந்தன.
நீண்டகால பொருளாதார மந்தநிலை மற்றும் காலவரையற்ற வேலைவாய்ப்பின்மை உயர்வை அமெரிக்கா எதிர்கொண்டிருப்பதாக அங்கே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கைகள் இருந்து வருகின்றன. அமெரிக்க பொருளாதாரம் நீண்டகால ஓட்டத்தில் மெதுவாக ஓடக்கூடும்" என்ற தலைப்பில் அசோசியேடெட் பிரஸ் ஞாயிறன்று ஒரு செய்தி வெளியிட்டது.கடந்த மாதம் முன்னாள் கருவூல செயலர் லாரென்ஸ் சம்மர்ஸ் "நீடித்த மந்தநிலையைக்" குறித்து எச்சரித்தார்.
பாரிய வேலைவாய்ப்பின்மையானது அமெரிக்காவிலும் மற்றும் உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களிலும் வாழ்வின் நிரந்தர உண்மையாக மாறி உள்ளன.
  • உத்தியோகபூர்வமாக, அமெரிக்காவில் அங்கே பத்து மில்லியன் வேலைவாய்ப்பற்றோர் உள்ளனர், 2007இன் 6.8 மில்லியனில் இருந்து இது உயர்ந்துள்ளது.
  • உத்தியோகபூர்வ வேலையின்மை புள்ளி விபரங்களின்படி, மொத்தமாக 3.6மில்லியன் மக்கள் 27 வாரங்களுக்கு அல்லது அதற்கு மேற்கொண்டும் வேலைவாய்ப்பற்று இருந்துள்ளனர். இது 2006இல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும், அப்போது அங்கே 1.1 மில்லியன் நீண்டகால வேலையின்மை இருந்தது.
  • சுமார் 36 சதவீத வேலையற்றோர் 27 வாரங்களுக்கு அதிகமாக வேலையிலிருந்து வெளியே இருந்துள்ளனர். இது 1948 மற்றும் 2008க்கு இடையிலான சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.வேலைவாய்ப்பின்மையின் கால அளவு தற்போது 35.4 வாரங்களாக உள்ளது,இது 2006இல் இருந்த 16.9 வாரங்கள் என்பதில் இருந்து உயர்ந்துள்ளது.
செயலூக்கத்தோடு வேலை தேடுவோரை மட்டுமே இந்த புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுத்திருப்பதால், இவை விடயத்தின் வெறும் ஒரு பகுதியை மட்டுமே கூறுகின்றன. பொருளியல் கொள்கை பயிலகத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மேலதிகமாக "காணாமல் போயுள்ள 5.73 மில்லியன் தொழிலாளர்கள்" (missing workers) கடந்த ஐந்து ஆண்டுகளில் புள்ளிவிவரம்சார்ந்ததல்லாத காரணங்களுக்காக தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காணாமல் போயுள்ள தொழிலாளர்களையும் வேலையில் இல்லாதோர் என கணக்கிட்டிருந்தால், வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.9 சதவீதமாக இருந்திருக்கும்.
வேலை செய்யும் வயதுடைய மக்கள் 10 மில்லியனாக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க பொருளாதாரம் ஜனவரி 2008இல் இருந்ததைவிட கடந்த மாதம் வெகு குறைவாக 866,000 வேலைகளையே கொண்டிருந்தது என்ற உண்மையால் வேலை பற்றாக்குறையின் உண்மையான அளவு எடுத்துக்காட்டப்படுகிறது.
இந்த சூழலில் தான் ஒபாமா, உணவு மானிய தேவையைச் சார்ந்துள்ள சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கு ஏறக்குறைய மாதத்திற்கு 100 டாலர் என்றளவிற்கு அதில் வெட்டுக்களைச் சுமத்தும் ஒரு முறைமையில் கையெழுத்திட ஆயத்தமாகி இருந்த நிலையில், அவர் அவரது பொருளாதார கொள்கையின் வெற்றியைக் குறித்து பெருமையடித்தார். ஒபாமா மற்றும் ஜனநாயக கட்சியினர், சமூக உதவிகளைச் சிதைப்பதில் மற்றும் பரந்த மக்கள் அடுக்கை முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வறுமைக்குள் தள்ளுவதில் குடியரசு கட்சியினரோடு சேர்ந்துள்ள நிலையில், அவர்கள் பொருத்தமற்ற முறையில் சமத்துவமின்மையின் எதிர்ப்பாளர்களாக மற்றும் ஏழைகளின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கின்றனர்.
நீண்டகால வேலையின்மையில் இருக்கும் 1.4 மில்லியன் தொழிலாளர்களுக்கான வேலையற்றோர் உதவிகள் காலவதியாக்கியது மற்றும் அடுத்த தசாப்தம் முழுவதிலும் அனைத்து துறைகளிலும் "ஒதுக்கீடு"குறைப்புகள் மூலமாக 1 ட்ரில்லியன் டாலர் வெட்டும் இருகட்சி ஒப்புதல் உடனான வரவுசெலவு கணக்கு நிறைவேற்றப்பட்டமை ஆகியவற்றிற்கு கூடுதலாக, இந்த உணவு மானிய உதவிகளில் செய்யப்படவிருக்கின்ற வெட்டுக்கள் வருகின்றன.
டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு அவரது ஆதரவை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டும் விதமாக, வெள்ளியன்று அவரது உரையை அடுத்து, ஒபாமா டெட்ராய்ட் மேயர் மைக் டக்கனைச் சந்தித்தார். அந்த டெட்ராய்ட் திவால்நிலைமையானது, நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை தொழிலாளர்கள் மீது அதேபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரியை அமைக்கும் விதத்தில், நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்குக் குழிபறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக திட்டங்களில் அதிகளவிலான குறைப்புகள், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் ஊதிய-வெட்டுக்கள் ஆகியவற்றோடு இணைந்த விதத்தில் பணக்காரர்களுக்கு கட்டுப்பாடில்லாமல் பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை, சமூக சமத்துவமின்மை உயர காரணமாகி உள்ளது.சராசரி மற்றும் நடுத்தர வருவாய்களின் ஒப்பீட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிப்பதென்னவென்றால், புஷ் ஆட்சியின் கீழ் அதிகரித்ததை விட சமூக சமத்துவமின்மை ஒபாமாவின் கீழ் நான்கு மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளமை கடந்த ஆண்டு 1.2 ட்ரில்லியன் டாலரை எட்டியது. இது 2009இல் இருந்ததை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். அதேவேளையில் தொழிலாளர்களின் ஊதியங்கள் மந்தமடைந்துள்ளன அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளன. 2007 மற்றும் 2012க்கு இடையில், அமெரிக்காவில் நடுத்தர குடும்பங்களின் வருவாய் 8.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
வேலைகள் அறிக்கைக்கு ஒபாமாவின் விடையிறுப்பானது, அதிகரித்துவரும் சமூக வேதனைகள் மற்றும் அவலங்களுக்கு அவரின் இரக்கமற்ற அலட்சியத்தை மற்றும் ஒட்டுமொத்த அரசியலமைப்பிற்கும் மற்றும் மக்களின் கவலைகள் மற்றும் தேவைகளுக்கும் இடையில் நிலவும் இடைவெளியை பிரதிபலிக்கிறது. அது, வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகளின் உயர்வால் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அவரது மைய சமூக தொகுதியின்அதாவது, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள்கண்ணோட்டங்களை எடுத்துக்காட்டுகிறது.
பொருளாதார வல்லுனர் ரோபர்ட் ரீச் ஞாயிறன்று ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டதைப் போல, வேலைவாய்ப்பின்மை அறிக்கை அனுமானிக்கப்பட்டதை விட மோசமாக இருந்தமைக்கு வோல் ஸ்ட்ரீட் நேர்முகமாக எதிர்வினை காட்டியமை நிச்சயமாக பொருள்சார் காரணங்களுக்காகவே ஆகும். வேலைகளின் மந்தமான வளர்ச்சி,காலவரையற்ற காலத்திற்கு பெடரல் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மையில் வைத்திருக்கும் சாத்தியக்கூறை அதிகரிக்கிறது மற்றும் மத்திய வங்கி அதன் பத்திரங்கள் வாங்கும் நடவடிக்கையைக் "குறைப்பதை"மந்தப்படுத்தும் வாய்ப்புகளை உயர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் தான் பங்கு சந்தையை சாதனையளவிலான உயரங்களுக்கு தள்ளிச் சென்றதோடு,நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியது.
இது, பணத்தை மலிவாக வாங்குவதையும் மற்றும் அவற்றின் சொந்த பங்குகளையே வாங்கி வாங்கி விற்பதையும் தொடர அவற்றிற்கு உதவும்.இது பங்குகளின் விலையை இன்னும் மேலதிகமாக உயர்த்துவதோடு,ஊகவணிகர்களுக்கு சாதனையளவிலான இலாபங்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கு சாதனையளவிலான சம்பள தொகுப்புகளுக்கும் உத்தரவாதமளிக்கிறது.
அனைத்திற்கும் மேலாக தொடரும் பாரிய வேலைவாய்ப்பின்மை,தொழிலாளர்களின் ஊதியங்களை மேலும் கூடுதலாக கீழ்நோக்கி தள்ளும்.
இதற்கிடையில், பணக்குவியலைத் தொடர்ந்து பெருமளவில் பெருவியாபாரங்களால் குவிக்க முடியும் என்பதோடு, இது ஏற்கனவே 1.5ட்ரில்லியன் டாலராக உள்ள நிலையில், அதை ஊக வணிகத்திற்குள் பயன்படுத்துவதைத் தொடரவும் முடியும். உற்பத்தி மற்றும் தயாரிப்புகளில்,நாட்டின் உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில், மற்றும் வேலையற்றோரை வேலையில் நியமிப்பதில் முதலீடு செய்வதற்கு பதிலாக அவை பணத்தை பெரிய பெரிய மாளிகைகள் மற்றும் உல்லாச கப்பல்களை வாங்குவதில் முதலீடு செய்கின்றன.
இவை தான் பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் அரசியல் கருவியான ஒபாமா நிர்வாகம் இரண்டினதும் கொள்கைகளுக்குப் பின்னால் இருக்கும் நிஜமான நோக்கமாகும்.
வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு ஐந்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர்,நீடித்த பாரியளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது நிதியியல் நிலைகுலைவு ஒரு திட்டமிட்ட நெருக்கடியின் வெளிப்பாடாகும் என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. அது முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவு மற்றும் தோல்வியைக் குறித்தது.
வங்கிகளின் குற்றஞ்சார்ந்த நடைமுறைகளால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடி,தொழிலாளர்களால் ஒரு நூற்றாண்டு போக்கினூடான போராட்டத்தில் வென்ற ஆதாயங்கள் அனைத்தையும் திருப்பியெடுக்க ஒரு சமூக எதிர்புரட்சியைத் தொடங்க ஆளும் வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது. திரும்பி போராடுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு முயற்சியையும் முடக்குவதிலும், அடிபணிய செய்வதிலும் தொழிற்சங்கங்கள் ஓர் இன்றியமையா பாத்திரம் வகித்துள்ளன.
தியாகம் மற்றும் விட்டுகொடுப்புகளுக்கான அனைத்து முறையீடுகளையும் உழைக்கும் மக்கள் நிராகரிக்க வேண்டும். அத்தகைய முறையீடுகள் கண்மூடித்தனமான மேலதிக தாக்குதல்களுக்கு மட்டுமே பாதை அமைக்கும்.மாறாக, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பானது ஒபாமா மற்றும் இரண்டு பெரு வியாபார கட்சிகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் மற்றும் ஒரு பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் மேலதிக வெறுப்பூட்டும் செல்வசெழிப்பிற்கு அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஒன்றுதிரப்பட வேண்டும்.
Andre Damon
11 February 2014
 http://www.wsws.org/tamil/articles/2014/fer/130213_mass.shtml

Sunday, 16 February 2014

சர்வதேசஅளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய கார் தொழிற்சாலை மூடல்: சர்வதேசஅளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை
2017 இறுதி வாக்கில் உற்பத்தியை நிறுத்த உள்ள போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஹோல்டென் ஆகியவற்றோடு சேர விரும்புவதாக பெப்ரவரி10 இல் டொயோட்டா வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த கார் தொழில்துறையும் சீரழிக்கப்பட உள்ளன. ஐந்து தயாரிப்பு மற்றும் என்ஜின் ஆலைகளில் குறைந்தபட்சம் 7,000தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழப்பார்கள். வாகன பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் துணை வியாபாரங்களால் நியமிக்கப்பட்ட 44,000தொழிலாளர்களில் பலரும் கூட நீக்கப்படுவார்கள். பொருளாதாரத்தில் உணரப்படும் தாக்கத்தினால், 150,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரை வேலையின்மைக்குள் வீசப்படுவார்கள். ஒருகாலத்தில் அமெரிக்க வாகன தொழில்துறையின் மையமாக விளங்கிய டெட்ராய்ட் போன்ற அமெரிக்க நகரங்களில் நிலவும் வறுமை மற்றும் தொழில்துறை-தகர்ப்பு(deindustrialisation) ஆகியவற்றிற்குள் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் தொழிலாள வர்க்கம் வாழும் புறநகர்கள் கொண்டு செல்லப்படும்.
வாகன நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஒவ்வொரு மறுசீரமைப்போடும் மூன்று தசாப்தங்களாக உடந்தையாய் இருந்துள்ள, முற்றிலுமாக பெருநிறுவனமயப்பட்ட தொழிற்சங்கங்கள், ஆலைகளை "முறையாக மூடுவதை" நடைமுறைப்படுத்த தொழில்துறை பொலிஸ் படையைப் போன்று பயன்படுத்தப்படும். டொயோட்டாவின் அறிவிப்பு தொழிலாளர்களுக்கு "ஒருவித ஆறுதலை" அளிக்கும், ஏனென்றால் அவர்களுக்கு இப்போது "உறுதியான தகவல்" கிடைத்துவிட்டது என ஆஸ்திரேலிய உற்பத்தித்துறை தொழிலாளர் சங்க தேசிய செயலர் டேவ் ஸ்மித் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,தொழிற்சாலைக்கான இந்த மரண வாசகம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமெனும் ஒரு நிச்சயிக்கப்பட்ட தீர்மானமாக உள்ளது.
கார் ஆலை மூடல்கள் உட்பட பெரும் வேலை வெட்டுக்களுக்கு, முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் தலைமை ஏற்றிருந்த நிலையில்,தொழிற்சங்கங்களும் எதிர்கட்சியான தொழிற்கட்சியும் இரண்டுமே,ஆலைமூடல்கள் மீதான தொழிலாளர்களின் கோபத்தை பிரதம மந்திரி டோனி அபோட்டின் கூட்டணி அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதன் திசையில் திருப்பிவிட முயன்று வருகின்றன.
எவ்வாறிருந்த போதினும் அச்சுறுத்தும் சமூக சீரழிவின் நிஜமான காரணம், 2008க்குப் பின்னர் உலகளாவிய முதலாளித்துவ உடைவைத் தொடர்ந்து உலகெங்கிலும் வாகனத்துறை தொழிலாளர்களின் நிலைமைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். சந்தைகளுக்கு இடையே இருந்த ஆக்ரோஷமான போட்டிகளுக்கு இடையே, தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து இரக்கமற்ற செலவுக் குறைப்புகள் மூலமாக, எல்லா வாகனத்துறை பெருமுதலாளிகளும் பெரும் இலாபங்களை அடைந்துள்ளனர்.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) ஆதரவோடு, போர்ட்,ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லெர் ஆகியவை அமெரிக்காவில் ஆலைகளை மூடின; பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கின; ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களை குறைத்ததோடு ஒரு இரட்டை-அடுக்கு ஊதிய முறையை திணித்தனர்,அதன்படி புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு வெறுமனே மணிக்கு15 டாலர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கடுந்தாக்குதல் ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 2012இல் இருந்து போர்ட் நிறுவனம் 5,700 வேலைகளை அழித்து, ஐரோப்பாவில் மூன்று ஆலைகளை மூடி உள்ளது. இந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸின் ஓப்பல் துணை நிறுவனம், ஜேர்மன் தொழிற்சங்கங்களின் பின்புலத்தோடு, 3,500 வேலைகளை வெட்டி, போஹும் நகரத்தில் உள்ள பிரதான ஆலையை மூட விரும்புகிறது.தெற்கு கொரியாவில், ஜெனரல் மோட்டார்ஸ் 1,100 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க தயாரிப்பு செய்து வருகிறது.
டொயோட்டாவின் உலகளாவிய மறுசீரமைப்பு அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டதைப் போல அதேயளவிற்கு கொடூரமானதாக உள்ளது. ஜப்பானில், அந்நிறுவனம் அதன் வினியோகிப்பாளர்களிடம் 30 முதல் 40 சதவீதம் வரை செலவுகளை வெட்ட கோரியது, அது "வழக்கமான நியமன முறைகளில் அல்லாதவர்கள்" (non-regular) என்றழைக்கப்படும் தொழிலாளர்களின் பாரியளவிலான அதிகரிப்பிற்கு இட்டு சென்றது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில் வெறும் பாதி விகிதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பதோடு ஓர் உடனடி அறிவிப்போடு அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் முடியும். டொயோட்டாவின் ஜப்பானிய ஆலைகளில் ஆறு ஆண்டுகளாக ஊதியங்கள் உறைந்து போயுள்ளன;உற்பத்தி குறைக்கப்பட்டு அமெரிக்காவின் தெற்கு, சீனா மற்றும் தாய்லாந்தில் உள்ள அந்நிறுவனத்தின் மலிவூதிய-தொழிலாளர் ஆலைகளுக்கு உற்பத்தி மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிறுவனத்தின் இலாபங்கள் உயர்ந்துள்ளதோடு, அதன் ரொக்க கையிருப்புகள் 4 ட்ரில்லியன் யென்னுக்கு (39 பில்லியன் அமெரிக்க டாலர்)உயர்ந்துள்ளது.
உலகளாவிய செலவு-வெட்டுக்களில் இருந்து ஆஸ்திரேலிய தொழிலாளர்களும் விதிவிலக்காக விடப்படவில்லை. போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா ஆலைகளில் 2008 மற்றும் 2012க்கு இடையே 2,500க்கு அதிகமான வேலைகள் அழிக்கப்பட்டன. இருந்தபோதினும்,டெட்ராய்ட் மற்றும் டோக்கியோவின் கார்பரேட் தலைமையிடங்களில் அங்குள்ள ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் நிலைமைகள் ஆசியா மற்றும் அமெரிக்காவில் நிலவும் நிலைமைகளோடு ஒப்பிடுகையில்"போட்டித்தன்மைக்கு உகந்ததாக இல்லை" என குற்றஞ்சாட்டப்பட்டன.தற்போது மூவரும் சேர்ந்து ஒன்று நிரந்தர செலவு-வெட்டுக்களை ஏற்க வேண்டும் அல்லது அதே தலைவிதியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை அனுப்பும் விதத்தில் ஒட்டுமொத்தமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
அந்த முடிவானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் இரக்கமற்றதன்மை,பகுத்தறிவற்றதன்மை மற்றும் சமூகரீதியிலான பேரழிவுமிக்க குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. 1980களில் இருந்து, தொழில்நுட்பம், போக்குவரத்து,தகவல்தொடர்புகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகர முன்னேற்றங்கள் மேலாதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்களால், உலகளாவிய உற்பத்தி வலையமைப்புகளை, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு,ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த உலகையும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் ஒரே பொருளாதார அமைப்பாக அபிவிருத்தி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.இருந்த போதினும், முதலாளித்துவத்தின் கீழ், இத்தகைய பரந்த உற்பத்தி திறன் நிதியியல் பிரபுத்துவத்திற்கு இலாபங்களையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு சமூக சீரழிவுகளையும் உருவாக்கி உள்ளது.
முதலாளித்துவத்தை தேசிய-அரசுக்குள் நெறிப்படுத்த முடியுமென்றும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பை வழங்க முடியுமென்றும் முறையிடும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களினது போன்ற, அனைத்து தேசிய அரசியல் வேலைத்திட்டங்களின் ஒரு நாசகரமான வரலாற்று நிரூபணமாக ஆஸ்திரேலியாவில் கார் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமை உள்ளது. ஆஸ்திரேலிய பிரத்யேகவாதத்தால் (exceptionalism) மிக கவனமாக விளைவிக்கப்பட்ட மாயை தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமாக நிரூபணமாகி உள்ளது.
ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட எதுவொன்றும், அதன் பரந்த இயற்கை வளங்களோ அல்லது புவியியல்ரீதியில் தொலைவில் இருப்பதோ, பூகோளரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்தின் கட்டளைகளில் இருந்து அந்த தொழிலாள வர்க்கத்தை காப்பாற்றி விட முடியாது. தொழில்துறை உற்பத்திக்கான ஒரு தளமாக இருப்பதற்கு எந்தவொரு பிராந்தியத்திற்குமான முன்நிபந்தனை என்னவென்றால், வறுமை-மட்டத்திற்கு ஊதியங்களை திணிப்பது மற்றும் தொழிலாளர்களை கட்டுப்பாடில்லாமல் சுரண்டுவது என்பதாக உள்ளன. ஆஸ்திரேலியாவில் இது வேலைகளை பாதுகாக்கும்,உற்பத்தியை நிலைக்க வைக்கும் என்பது போன்ற பொய் வாக்குறுதிகளின் மீது ஒன்று மாற்றி ஒன்றாக செலவு-வெட்டு சுற்றுக்களை ஏற்குமாறு செய்ய தொழிலாளர்களுக்கு அழுத்தம் அளிப்பதே தொழிற்சங்கங்களின் பாத்திரமாக இருந்துள்ளது.
மூன்று தசாப்தங்களாக, முதலாளித்துவத்தின் கீழ் பூகோளமயமாக்கல் நிகழ்முறையில், உற்பத்தி மற்றும் ஏனைய துணை தொழில்துறைகளை சேர்ந்த வேலைகள் ஒன்று மாற்றி ஒன்றாக முறைப்படி அழிக்கப்பட்டுள்ளன.முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அது ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கமாகட்டும் அல்லது சர்வதேச ரீதியில் இருப்பதாகட்டும், அந்நாடு பிராந்திய வணிக அலுவலகங்களுக்கான ஒரு தளமாக, ஒரு மலிவு மூலப்பொருட்கள் வழங்குநராக மற்றும் ஒரு சூதாட்ட மற்றும் சுற்றுலா மைதானமாக மட்டுமே பயன்படுகிறது.
ஆஸ்திரேலிய கார் தொழில்துறையை அழிக்கும் நகர்வுகள் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக உள்ளன.ஆஸ்திரேலியாவிற்குள், கார் உற்பத்தித்துறை தொழிலாளர்களின் கதி,ஏற்கனவே அபராத விகிதங்கள் போன்ற "பண்டைய" நிபந்தனைகளை முடிவுக்குக் கொண்டு வர மற்றும் ஊதியங்கள், நிலைமைகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேசரீதியில்,அது தொழிலாளர்களுக்கு எதிராக செய்யப்பட உள்ள செலவு-வெட்டுக்களுக்கான அடுத்த கோரிக்கைகளுக்கு வாகனத்துறை தொழிலாளர்களை அடிபணியச் செய்ய அச்சுறுத்தவும் மற்றும் கட்டாயப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
தொழிலாளர்கள் இந்த நிலைமைகளை கணக்கெடுக்க வேண்டும். பன்னாட்டு நிதியியல் மற்றும் பெருநிறுவனங்களின் உலகளாவிய மூலோபாயங்கள்,சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை எடுத்துக்காட்டும் பூகோள அரசியல் மூலோபாயத்தால், அதாவது உலக சோசலிசத்தால் மட்டுமே தோற்கடிக்கப்பட முடியும்.

முதலாளித்துவ ஆளும் மேற்தட்டுக்களின் கரங்களில் இருந்து உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாட்டை விடுவித்து, பகுத்தறிவான சோசலிச திட்டமிடலின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறுஒழுங்கமைப்பு செய்ய மற்றும் தனியார் இலாபங்களை பின்தொடர்வதற்காக பொருளாதார வாழ்வு மண்டியிட செய்யப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வர, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமே ஒரு வரலாற்று ரீதியில் அவசியமான ஓர் அரசியல் போராட்டத்தின் அடித்தளமாக உள்ளது. வாகனத்துறை பெருமுதலாளிகளுக்கு எதிரான, அவர்களுக்கு சேவை செய்யும் அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள கார் தொழிலாளர்கள் இந்த முன்னோக்கின் அடிப்படையில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்வது அவசியமாகும்.
James Cogan
13 February 2014


http://www.wsws.org/tamil/articles/2014/fer/140215_aus.shtml

சமூக சமத்துவமின்மையும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான யுத்தமும்

துணை ஊட்டச்சத்து உதவித்திட்டம் (Supplemental Nutrition Assistance Program - SNAP) அல்லது உணவு மானிய முத்திரைத் திட்டம் என்று அறியப்படுவதில் இருந்து 8.7 பில்லியன் டாலர்களை வெட்டும் ஒரு மசோதாவில் ஜனாதிபதி ஒபாமா இன்று கையெழுத்திடுவார்இது சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கான உதவிகளில் மாதந்தோறும் ஏறக்குறைய 100 டாலரைக் குறைக்கும்.
இந்த ஆண்டின் இடைக்கால தேர்தல்களுக்கான ஓட்டத்தில் ஒபாமாவும் ஜனநாயக கட்சியினரும் தங்களைத் தாங்களே சமூக சமத்துவமின்மையின் எதிர்ப்பாளர்களாகஏழைகள் மற்றும் வேலையற்றோரின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கின்ற அதேவேளையில்உணவு மானிய முத்திரைகள் மீதான இந்த தாக்குதல் வருகிறதுஜனநாயகக் கட்சியினர் என்ன சொல்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு இடையில் உள்ள வெளிப்படையான முரண்பாடு ஊடக ஸ்தாபகங்கள் எதிலுமே விவாதத்திற்கு கூட வரவில்லை.
ஒபாமாவின் உணவு மானிய கூப்பன்கள் மீதான நடவடிக்கை,அமெரிக்காவில் அரசியலின் நிலை மற்றும் சமூக வாழ்வின் எதார்த்தத்திற்கு அறிகுறியாக உள்ளதுஇது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு குறைந்தபட்ச உதவி வழங்கும் ஒரு திட்டத்தில் மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது வெட்டாகும்நிதியியல் மேற்தட்டின் செல்வசெழிப்பில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு உயர்வு இருப்பதை புதிய செய்திகள் ஆவணப்படுத்துகின்ற போதும் கூடஅடிப்படை சமூக திட்டங்களுக்கு அங்கே பணமில்லை என்ற பொய் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகத்தின் ஒரு சிறிய அடுக்கால் திரட்டப்பட்ட செல்வவளத்தின் அளவு ஏறத்தாழ ஆழங்காண முடியாதளவிற்கு உள்ளதுஉலகின் 300 பணக்காரர்கள் (உலக மக்கள்தொகையில் 0.000004 சதவீதத்தினர்), ஒரே ஆண்டில் 524 பில்லியன் டாலர் (13 சதவீதம்உயர்வுடன், 2013 இல் $3.7 ட்ரில்லியன் நிகர செல்வத்தைக் கொண்டிருந்ததாக புளூம்பேர்க்கின் ஒரு அறிக்கை கடந்த மாதம் கண்டறிந்தது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் செல்வம் கடந்த ஆண்டு$15.8 பில்லியனில் இருந்து $78.5 பில்லியனாக உயர்ந்தது. 2011இல் ஜனாதிபதி ஒபாமாவால் ஜனாதிபதியின் சுதந்திர விருது பெற்ற வாரன் பஃபெட்டின் செல்வம், 2012இல் 12.7 பில்லியன் டாலரில் இருந்து $60 பில்லியனாக உயர்ந்ததுபேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் ஜூகெர்பேர்க்கின் செல்வம் இரண்டு மடங்கிற்கு நெருக்கமாக $11.3 பில்லியனில் இருந்து $23பில்லியனாக உயர்ந்தது.
இந்த பெரும் பணக்காரர்களின் செல்வச்செழிப்பின் திகிலூட்டும் வளர்ச்சியானதுநேரடியான மற்றும் திட்டமிட்ட அரசாங்க கொள்கையின் விளைவால் ஏற்பட்ட ஒரு சாதனையளவிலான பங்கு சந்தை உயர்வோடு பிணைந்துள்ளதுஅமெரிக்காவில்பெடரல் ரிசர்வ் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டிவிகிதங்களைக் கொண்டிருப்பதோடுஒவ்வொரு மாதமும் நிதியியல் அமைப்பிற்குள் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சுகிறது.இதே கொள்கையை ஐரோப்பா மற்றும் ஜப்பான் மத்திய வங்கிகளும் நகலெடுத்தாற் போல் செய்கின்றன.
செல்வவளத்தின் பாரிய மறுபங்கீட்டை நடத்த பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டு அரசியல் அமைப்புமுறையின் மீதிருக்கும் அதன் கட்டுப்பாட்டை பயன்படுத்துகிறதுவங்கிகளுக்கும் மற்றும் பெருநிறுவனங்களுக்கும் கட்டுப்பாடில்லாமல் நிதிகள் கிடைக்க செய்யப்படுகின்றன அதேவேளையில்,அரசாங்கங்கள் சமூக திட்டங்களை வெட்டுவதோடு உழைக்கும் மக்களின் வேலைகள்ஊதியங்கள்ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வளைத்து இறுக்குகின்றன.
என்ன நடக்கிறதோ அதுவொரு சமூக எதிர்புரட்சி என்பதை தாக்குதலின் வீச்செல்லை தெளிவாக்குகிறதுபரந்த மக்களின் சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பாதிக்கப்பட்டுள்ளது:
வேலைகள் மற்றும் ஊதியங்கள்
நிரந்தர பாரிய வேலைவாய்ப்பின்மையானது பெருநிறுவன மேற்தட்டின் தயவுதாட்சண்யமற்ற குறைத்தல் மற்றும் செலவின-வெட்டு ஆகியவற்றின் விளைவாகும்இந்த தாக்குதல் அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவிற்கு ஈவிரக்கமற்று இருக்கவில்லைஇந்த வாரம் டெல்,இன்டர்நேஷனல் பேப்பர்டிஸ்னிடைம்ஸ் இன்க்மற்றும் யூனெடெட் ஏர்லைன்ஸ்அத்தோடு அமெரிக்காவிற்கு வெளியில் அமைந்திருக்கும் பல பெருநிறுவனங்களிலும் பாரிய வேலைநீக்கங்கள் அறிவிக்கப்பட்டன. 2009இல் இருந்துஒபாமா நிர்வாகம் எதை மறுசீரமைப்பிற்காக தாக்குதல்களை மேற்கொண்டாரோஅந்த வாகனத்துறை ஊதியங்கள் சராசரியாக 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளனஅதேவேளையில் உற்பத்தித்துறை ஊதியங்கள் ஒட்டுமொத்தமாக 2.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் பெயரளவிற்கு ஏற்பட்ட குறைவு முக்கியமாக மில்லியன் கணக்கான ஊக்கங்குறைந்த வேலைகோருவோர்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து விலகுவதால் ஏற்படுவதாகும்.பெரும்பான்மையான புதிய வேலைகள் வறிய ஊதியத்திற்கு நெருக்கமான தொகையை வழங்குகின்றன என்பதோடு சலுகைகளை வெகு குறைவாக வழங்குகின்றன அல்லது சலுகைகளே வழங்காமல் விடுகின்றன.
வேலைவாய்ப்பின்மை உதவிகள்உணவு மானிய முத்திரைகள்சமூக நல திட்டங்கள்
உணவு மானிய முத்திரைகளில் செய்யப்படும் வெட்டுக்கள் சமூக திட்டங்கள் மீதான ஒரு பரந்த தாக்குதலின் பாகமாகும்அவை அமெரிக்காவில் நீண்டகாலம் வேலைவாய்ப்பற்ற 1.3 மில்லியன் தொழிலாளர்களின் வேலையின்மைக்கான கூடுதல் உதவிகள் காலாவதியானதைத் தொடர்கின்றனநீண்டகால வேலைவாய்ப்பின்மையிற்காக பண உதவி பெற்றுவந்தவர்களின் சதவீதம் 2010இல் மூன்றில் இரண்டு மடங்கு என்பதில் இருந்து இன்று மூன்றில் ஒரு மடங்கு என்று வீழ்ச்சி அடைந்துள்ளது.இரண்டு கட்சிகளின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்ட புதிய வரவு-செலவுத் திட்டம் அடுத்த தசாப்தத்தில் எல்லா அரசு துறைகளிலும் 1 ட்ரில்லியன் டாலர் "ஒதுக்கீடுவெட்டுக்களை நிலைநிறுத்தி உள்ளதுஒபாமா நிர்வாகம் உள்நாட்டு விருப்புடை செலவுகளை (domestic discretionary spending) 1950களுக்குப் பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் மிகக் குறைந்தபட்ச அளவிற்கு குறைத்துள்ளது.
ஓய்வூதியங்கள்
1980களில்அமெரிக்காவில் 25 முதல் 64 வரை வயதுடைய முழுநேர தனியார்துறை தொழிலாளர்களில் 60 சதவீதத்தினர் வரையறுக்கப்பட்ட ஓய்வுகால உதவி திட்டத்தைக் (defined-benefit retirement plan) கொண்டிருந்தனர்.தற்போதுஅந்த எண்ணிக்கை சுமார் 10 சதவீதமாக வீழ்ந்துள்ளது.கடைசியாக நகரசபை பணியாளர் விடுபட்டிருந்தனர்தற்போது நகரசபை திவால்நிலைமைகளின் ஒரு அலையால் அவர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை முகங்கொடுத்துள்ளனர்ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவோடுடெட்ராய்டில் உள்ள ஒரு திவால்நிலைமைக்கான நீதிமன்ற நீதிபதி மாநில அரசியலமைப்பு பாதுகாப்புகளை நீக்க மற்றும் நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளார்.
மருத்துவ காப்பீடு
தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் கட்டுபடியாகக்கூடிய மருத்துவ காப்பீட்டு சட்டத்தின் (Affordable Care Act) அறிமுகத்தோடு இணைந்துள்ளதுஇந்த "சீர்திருத்தம்தொழில்வழங்குனர்களால் வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு முறையை முறித்துதொழிலாளர்களை தனியார் சந்தையில் தனித்தனியாக மருத்துவ காப்பீட்டைப் பெற தள்ளும் நோக்கத்தைக் கொண்டுள்ளதுஇந்த திட்டம் பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் மருத்துவ காப்பீட்டு செலவுகளைக் குறைத்துகாப்பீட்டு மற்றும் மருத்துவத்துறை நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்கும்அது காப்பீட்டு திட்டத்தின் பலன்களைக் குறைக்கும் அதேவேளையில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் கைகளில் இருந்து செலவுகளை அதிகரிக்கின்றது.
தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில்,பெருநிறுவனங்கள் மீதான நெறிமுறைகளைத் தளர்த்துதல்சிறப்பு வரிச்சலுகைகள் வழங்குதல் மற்றும் பெருவியாபாரங்களுக்கான அரசின் உதவிதொகைகள் ஆகியவை கட்டுப்பாடில்லாமல் தொடர்கின்றன.
உழைக்கும் மக்கள் மீதான சமீபத்திய சுற்று தாக்குதல்கள்பல தசாப்தங்களாக நடந்துவந்த அத்துமீறலின் ஒரு தொடர்ச்சியாகும்.உலகளாவிய பொருளாதார அந்தஸ்த்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்குஆளும் வர்க்கம் தொழிற்சாலைகளை மூடுதல்நிதியியல் ஊக வணிகம் மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வத்தை மறுபங்கீடு செய்தல் என்ற ஒரு கொள்கையோடு விடையிறுப்பு காட்டியது.இது சோவியத் ஒன்றிய பொறிவைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.சோவியத் ஒன்றிய பொறிவைபெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டுக்கள் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு மற்றும் வெளிநாட்டில் ஏகாதிபத்திய தாக்குதலுக்குமான ஒரு முக்கிய தடை நீங்குவதாக பார்த்தது.
2008 நிதியியல் பொறிவும் அதையடுத்து வந்த மந்தநிலைமையும் மேலதிகமாக வர்க்க உறவுகளை மறுகட்டமைக்க கைப்பற்றப்பட்டதுஅதன் விளைவு: 1930களின் பெருமந்தநிலைமைக்கு பிந்தைய ஆண்டுகளில் இருந்து பார்த்திராத சமூக சமத்துவமின்மையின் அளவுகளாகும்.
பூமியில் நூறுக்கும் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள்அடியில் உள்ள 3.5பில்லியன் மக்களைவிட அதிகமான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள் என்ற அளவிற்கு சமூக சமத்துவமின்மையின் மலைக்க வைக்கும் அதிகரிப்புஜனநாயகத்திற்கான அனைத்துவித சமூக அடித்தளத்தையும் அழித்துவிட்டுள்ளதுஅது பாரிய உளவுவேலைகள் குறித்த எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகளால் அம்பலப்படுத்தப்பட்டதைப் போல பொலிஸ் அரசு வடிவிலான ஆட்சிக்காக அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் செய்யப்படும் தயாரிப்புகளை அடிக்கோடிடுகிறது.
இந்த நெருக்கடி மற்றும் முதலாளித்துவத்தின் சீரழிவிலிருந்து என்ன எழுகிறதென்றால்பிரபுத்துவ சிறப்பந்தஸ்தின் ஒரு புதிய வடிவமும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனமுமாகும்சோசலிசம் மட்டுமே ஒரே மாற்றீடாக உள்ளது — அதாவதுஆளும் வர்க்கத்தின் செல்வத்தைப் பறிமுதல் செய்வது,பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பொதுமக்களுக்கு சொந்தமாக மற்றும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளாக மாற்றுவது,மற்றும் சமூகத்தை தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்வது.
Andre Damon
7 February 2014
http://www.wsws.org/tamil/articles/2014/fer/130208_soc.shtml

Saturday, 15 February 2014

சீனக் கடற்படை கிழக்கு இந்திய பெருங்கடலில் பயிற்சிகளை நடத்துகிறது


இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள கடலில் சீனா நடத்திய கடற்படைப் பயிற்சி ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் கூடுதல் இராணுவ ஒத்துழைப்பிற்கு அழைப்புக்களை கொடுத்து, ஒரு அறிக்கை விளக்கியபடி, “பெய்ஜிங்கின் பெருகிய தைரியமான கடல்வழித் தோற்றம் இந்திய-பசிபிக்கில்” எதிர்கொள்ளப்பட வேண்டும் என கூறத் தூண்டியுள்ளது.
இத்தகைய பிரதிபலிப்பு ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” தோற்றுவித்துள்ள பெருகிய அழுத்தங்களின் மற்றொரு அடையாளமாகும்; இதில் அமெரிக்க உடன்பாடுகள் மற்றும் இராணுவ சக்திகள் சீனாவைச் சுற்றி பிராந்தியம் முழுவதும் இருப்பதை வலுப்படுத்தும்இதுஅமெரிக்கா ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் மூலோபாயப்பங்காளி இந்தியா ஆகியவற்றை நெருக்கமான இராணுவப் பிணைப்புக்களை வளர்க்க ஊக்கம் கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் தூண்டுதல் பேரில், ஆஸ்திரேலிய விமானப் படை, ஒரு P-3 ஓரியன் கண்காணிப்பு விமானத்தை அப்பகுதிக்கு அனுப்பி சீனப் பயிற்சியை கண்காணிக்க வைத்தது. சீன அரசு செய்தி ஊடகத்தின்படி, இண்டு அழிக்கும் போர்கப்பல்கள் மற்றும் தரையிலும் நீரிலும் செல்லும் கப்பல் சங்பைஷன் இந்தோனேசியாவின் சுந்தா நீர்ச்சந்தியை ஜனவரி 29ல் கடந்து இந்தோனேசிய தீவான ஜாவா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. மூன்று கப்பல்களும் அருகில் உள்ள லோம்போக் நீர்சந்தி மூலம் வடக்கிற்கு செல்லுமுன் தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டன.
ஆஸ்திரேலியனில் ஒரு கட்டுரை “சீன அதிகாரத்தில் பெரும் மாற்றம்” என்ற தலைப்பில், எச்சரிக்கை மணியை ஆஸ்திரேலிய பாதுகாப்பு வட்டங்களுக்கு கொடுத்தது. அது இப்பயிற்சி “சீனாவின் நீண்ட கால நோக்கமான இந்தியப் பெருங்கடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தை சந்தேகித்தவர்களுக்கு ஒரு விழிப்பு அழைப்பாகும்” என்று கூறியுள்ளது.
இக்கடல் பயிற்சி, கிழக்கு இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு முதல் தடவையாகும், மேலும் முதல் தடவையாக சீன செயற்படை இந்தோனேசியாவின் சுந்தா, லோம்போக் நீர்ச்சந்திகளை இந்தியப் பெருங்கடலுக்குள் உட்புக அல்லது வெளியேற பயன்படுத்தியதும் ஆகும்.
அமெரிக்க மூலோபாயத்தினர் நீண்ட காலமாக இச்சந்திகளை, அமெரிக்க சீன மோதல் ஏற்பட்டால் சீனா மீது பொருளாதாரத் தடையை சுமத்தப் பயன்படும் என்றும், அத்துடன் மாலாக்கா நீர்ச்சந்தியையும் முக்கிய “தடுப்பு புள்ளிகள்” ஆக அடையாளம் கண்டுள்ளனர். சீனா மிக அதிக அளவில் எரிசக்தி மற்றும் மூலப் பொருள்கள் என மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்துகப்பல் பாதைகள் வழியாக இச்சந்திகள் வழியே கடப்பதைத்தான் நம்பியுள்ளது.
ஆஸ்திரேலியனின் கருத்துக்கள் இரண்டு சிந்தனைக்குழு பகுப்பாய்வாளர்களால் எழுதப்பட்டவை – Lowy Institute இன் Rory Medcalf மற்றும் இந்தியாவின் Observer Research Foundation இன் சி. ராஜ்மோகன். இருவருமே வலுவான ஆஸ்திரேலிய-இந்திய உறவுகளுக்கு வாதிடுபவர்கள், ஆஸ்திரேலிய-இந்திய வட்டமேசைக்கு இணைத் தலைவர்கள். சீனாவின் அதன் முக்கிய கடல் வழி பாதைகளை பாதுகாக்கும் உரிமையை நிராகரிக்காமல், இவர்கள் சீனா “ஒரு சட்டங்கள் அடிப்படையிலானமுறையில்” இணைக்கப்பட வேண்டும், “அது இந்தியாவின் வளர்ந்து வரும்பசிபிக் கடல் ணைப்புக்களையும் ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.
ஒரு சட்டங்கள் அடிப்படையிலான முறை” என்னும் சொற்றொடர் எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டனால் –அமெரிக்க நிர்ணயிக்கும் ஒரு உலக விதிகளுக்கு பெய்ஜிங் தாழ்ந்து நடக்க வேண்டும் என வலியுறுத்த பயன்படுத்தப்படுகிறது. அதன் “கிழக்கைப் பார்” மூலோபாயத்தின் ஒரு பகுதியாகதன் கடற்படையை பெருக்கும் இந்தியா, கிழக்கு ஆசியாவில் நெருக்கமான பொருளாதார, அரசியல் பிணைப்புக்களை கொண்டுவருகிறது. ஏற்கனவே இது சீனாவுடன்இந்திய-வியட்நாமிய எரிபொருள் ஆராய்ச்சி தென் சீனக்கடலில் சில பகுதிகளில் நடத்தப்படுவது குறித்த மோதலில் உள்ளது; அவை பெய்ஜிங், ஹனோய் இரண்டினாலும் உரிமை கோரப்படுகின்றன.
ஒரு தனிப்பட்ட வலைப்பதிவில் Medcalf சமீபத்திய சீன கடற்படைபயிற்சியில் “சட்டவிரோதமானதோ அல்லது அடிப்படையில் விரோதம் என ஒன்றும் இல்லை”, இது சர்வதேச நீர்நிலையில் நடைபெற்றது என்றார். ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகம் கருத்துக் கூறவில்லை. ஆயினும்கூட பரந்த ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் இது குறித்து தகவல்கள் கொடுத்திருப்பதுஇது விரும்பத்தகாத ஊடுருவல் எனக் கருதப்படுவதை தெளிவுபடுத்துகிறது.
மெட்காபும் மோகனும் “புதிய கடற்பகுதி பாதுகாப்பு உரையாடல், நடைமுறைக் கண்காணிப்பு ஒத்துழைப்புபிராந்தியத்தின் கடற்படை உடைய ஜனநாயகங்களிடையே தேவை” என அழைப்பு விடுத்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா ஆகியவை அடங்கும்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் பரந்த கண்காணிப்புப் பகுதிகளை கண்டத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் கொண்டுள்ளது; குறிப்பாக அதன் பிற்போக்குத்தன “எல்லைப் பாதுகாப்பு” குடியேறுவோர் எதிர்ப்புக் கொள்கையின் பகுதியாக – இது கூட்டணி அரசாங்கம், எதிர்க்கட்சி இரண்டின் ஆதரவையும் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் வாடிக்கையாக பகுதிகளை ரோந்து வந்து இந்தோனேசியாவிற்கு தெற்கே தஞ்சம் கோருவோர் படகுகள் ஆஸ்திரேலியாவிற்கு வருவதை தடுக்கின்றன. பல சந்தர்ப்பங்களில்,ஆஸ்திரேலிய போர்க்கப்பல்கள் இந்தோனேசிய பகுதி நீர்களில் ஊடுருவி ஜாகர்த்தாவில் இருந்து எதிர்ப்புக்களை தூண்டியுள்ளன.
வாஷிங்டன்ஆஸ்திரேலியாவை அதன் “முன்னிலைக்கு” மையமாகக் கருதுகிறது. ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்க மரைன்களுக்கு வடக்கு நகரமான டார்வினில் தள ஏற்பாட்டைக் கொண்டு, அமெரிக்கப்போர்க் கப்பல்களுக்கு, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மற்றும் இராணுவ விமானங்களுக்கு கூடுதல் அணுகுதலை முயற்சிக்கின்றது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க தளம் கொண்ட Centre for Strategy and the Future of Australia-US Alliance அறிக்கை ஒன்றை “Gateway to the Indo-Pacific: Australian Defense Strategy and the Future of the Australia-US Alliance”  என்ற தலைப்பில் வெளியிட்டு, சீனாவுடன் எத்தகைய போருக்கும் ஆஸ்திரேலிய தளங்களின் முக்கியத்துவத்தை விவரித்துள்ளது. இதில் மலாக்கா, சுந்தா, லோம்போக் நீர்ச்சந்திகளை கைப்பற்றுவதும் அடங்கும். (See: US think tank report: Australia central to American war plans against China)
இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளைஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுடன் ஊக்குவித்து வருகிறது. சீனக் கடற்படைப் பயிற்சி நடந்த சில நாட்களுக்குள் இந்திய, இந்தோனேசிய கடற்படைகள் அவற்றின் ஈராண்டுக்கு ஒருமுறை ரோந்தை கூட்டுப்பயிற்சியாக உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டன. Diplomat இல்  குறிப்பிட்டுள்ளபடி இந்தோனேசிய லெப்டினன்ட் கேர்னல் அம்ரின் ரோசிஹன் ஒரு கூட்டுப்பயிற்சியில் அதிக கப்பல்கள் ஈடுபடும், அது “கடற்படைகளுக்கு இடையே உள்ள உறவுகளை வளர்க்கும்” என்றார்.
சமீபத்தில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபே, இந்தியாவின் குடியரசுத் தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதை தொடர்ந்துஇந்தியா ஜப்பானுடனும் நெருக்க உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் மேற்கு பசிப்பிக்கில் 2014ல் கூட்டு கடற்படைப் பயிற்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளன; புது டெல்லி ஜப்பானிய கடற்படையை இந்திய பெருங்கடலில் நடக்கும் மலபார் பன்முகப் பயிற்சிகளில் பங்கேற்கஅழைத்துள்ளது.
இப்பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளுடன் அமெரிக்கா கூட்டுப்பயிற்சிகளை நடத்தியுள்ளது. அது ஏற்கனவே ஜப்பான், தென் கொரியா, குவாம், டியாகோ கார்சியா மற்றும் சிங்கப்பூரில் இராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது. மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இராணுவ தளங்களை கொண்டுள்ளது, இப்பொழுது பிலிப்பைன்சுடன் புதிய தளங்களுக்கான ஏற்பாடுகளுக்கு முயற்சிக்கின்றது. அமெரிக்க கடற்படை வாடிக்கையாக சீன நிலப்பகுதியை ஒட்டிச் செல்வதால், அனைத்து சீன கடற்படைப் பயிற்சிகளையும் கண்காணிக்கிறது. டிசம்பர் மாதம் அமெரிக்க ஏவுகணை க்ரூசர்சீன கடற்படைக் கப்பல்களை தென்சீனக் கடலில் நெருக்கமாக பின்பற்றியதுஒரு மோதல் குறுகிய இடைவெளியில் தவிர்க்கப்பட்டது.
ஒப்புமையில்மூன்று சீன போர்க் கப்பல்கள் இந்தோனேசியாவிற்கு தெற்கே நீர்நிலையில் பயிற்சியை மேற்கொள்வது ஒரு சிறிய செயற்பாடாகும். ஆயினும்கூட, ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், எத்தகைய சீன நடவடிக்கையும் “சீனாவின் அச்சுறுத்தல்” என போலிக்காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுமோதலுக்கான அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தயாரிப்புக்களை நியாயப்படுத்துவதற்கு பற்றிக்கொள்ளப்படும்.
By Peter Symonds 
14 February 2014
http://www.wsws.org/tamil/articles/2014/fer/140215_chine.shtml

1984 அமிர்தசரஸ் படுகொலையில் பிரிட்டனின் பாத்திரம்

British role in 1984 Amritsar massacreஜூன் 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் (சீக்கிய மதத்தினரின் புனித ஆலயம்இருந்த சீக்கிய போராளிகளை பலவந்தமாக வெளியேற்றுவதில் திட்டமிடபிரதம மந்திரி மார்கரெட் தாட்சரிடம் இருந்து வந்த உத்தரவுகளின் பேரில் பிரிட்டனின் சிறப்பு விமானப்படை சேவை (Special Air Service – SAS)இந்திய அரசிற்கு உதவியதாக சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைஒரு படுகொலையில் போய் முடிந்தது.இந்திய சீக்கிய சிறுபான்மையினரை அதிர்ச்சியூட்டிய மற்றும் ஆத்திரமூட்டிய அந்த சம்பவம் ஒரு வகுப்புவாத பிரிவினை கிளர்ச்சிக்கு எரியூட்டியதோடு,இறுதியில் இந்திய அரசின் பெரும் வன்முறையோடு ஒடுக்கப்பட்டது.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue Star) நடவடிக்கையில் பிரிட்டன் உடந்தையாய் இருந்தமை குறித்த வெளியீடு பிரிட்டிஷ் அரசை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளதுபழமைவாத கட்சியின் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஓர் "அவசர விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளார்அந்த ஆவணங்களில் ஏன் உணர்வுப்பூர்வமானவை என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும்முப்பது ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் 1984 ஆவணங்கள் வெளியிடப்பட்ட போது ஏன் இவை நிறுத்தி வைக்கப்பட்டன என்பதையும் கண்டறியஅந்த விசாரணையில் கேபினெட் செயலர் சர் ஜெரிம் ஹெவுட் பணிக்கப்பட உள்ளார்.
ஆழ்ந்த வடுக்களைஏற்படுத்திய மற்றும் "இன்றும் கூட கண்ணுக்குப் புலனாகாத பலமான உணர்வுகளைவிட்டு சென்றிருக்கின்ற அந்த இராணுவ நடவடிக்கையில்பிரிட்டன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அந்த ஆவணங்களில் இல்லை என்று கடந்த மாதம் கேமரூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவொரு பொருத்தமற்ற பொய்யாகும்ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பொற்கோயில் மீது ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடுவதில் உதவுவதற்கு சிறப்பு விமானப்படை சேவையின் ஒரு அதிகாரி டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்தார் என்பதை ஒரு சுயாதீன இதழாளரான பில் மில்லரால் வெளியிடப்பட்ட வொயிட்ஹால் கடிதங்கள் ஸ்தாபிக்கின்றன.
பொற்கோயிலில் இருந்து ஆயுதமேந்திய சீக்கிய போராளிகளை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையில் பிரிட்டனின் ஆலோசனையைக் கோரிய இந்திய அரசின் ஒரு முறையீட்டிற்கு "அணுசரணையாக", வெளியுறவுத்துறை செயலர் சர் ஜியோபெரி ஹோவ் விடையிறுத்திருந்ததாக பெப்ரவரி 23, 1984தேதியிட்ட ஓர் உயர்மட்ட இரகசிய கடிதம் விவரிக்கிறதுபிரதம மந்திரியின் உடன்பாட்டோடுஒரு SAS அதிகாரி இந்தியாவிற்கு ஏற்கனவே விஜயம் செய்திருந்தார் மற்றும் "ஒரு திட்டம் வகுத்திருந்தார்அத்திட்டத்திற்கு திருமதிஇந்திரா காந்தியால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுஅந்த கடிதம் இதையும் கூறுகிறதுஅந்த திட்டத்தை இந்திய அரசு வெகு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருமென்று வெளியுறவு செயலர் நம்புகிறார்.
இலங்கையில் SAS சம்பந்தப்பட்டிருந்ததன் மீதான தகவல்களைச் சேகரிக்க முயன்றபோதுஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டன் சம்பந்தப்பட்டிருந்ததை கண்டறிந்த மில்லர்மார்ச் 1984இல் அந்நடவடிக்கைக்கான பிரிட்டனின் உதவிகள் சம்பந்தமான ஆவணங்களின் ஒரு தடத்தைப் பின்தொடர முடிந்தது. (அவர் கண்டறிந்த ஆவணங்கள் Stop Deportations வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன). ஆனால் பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு உடனடியாக இழுத்துச் சென்ற சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட "அந்த தொகுப்புகளின் அடுத்த பகுதியைஅவரால் அணுக முடியவில்லை.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்
இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உத்தரவுகளின்பேரில்பஞ்சாப் அமிர்தசரஸின் ஹர்மந்திர் சாஹிப் (சீக்கிய பொற்கோயில்உள்ளிருந்து ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலே மற்றும் அவரின் ஆயுதமேந்திய சீடர்களை வெளியேற்ற இந்திய இராணுவம் ஜூன் 3-8, 1984இல் ஒரு தாக்குதல் நடத்தியது.
ஒரு பெரிய ஆயுதமேந்திய கிளர்ச்சியை தொடங்குவதற்காக அந்த புனித தலத்தில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததாக பிந்த்ராவாலே மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுஅந்த வாதங்களுக்கு அப்போதிருந்து பல பகுப்பாய்வாளர்களால் எதிர்வாதம் வைக்கப்பட்டுள்ளன.
பொற்கோயில் வளாகம் மீதான தாக்குதலுக்கு கூடுதலாகசந்தேகத்திற்குரிய சக-சூழ்ச்சியாளர்களைப் பிடிக்க பஞ்சாபின் கிராமபுறமெங்கிலும் சோதனை நடவடிக்கைகளும் அந்த ஆப்ரேஷனில் சேர்ந்திருந்தனஅதற்கடுத்ததாக உடனடியாக ஆப்ரேஷன் உட்ரோஸ் என்பது தொடங்கப்பட்டது.மாதக்கணக்கில் நீண்டிருந்த இந்த நடவடிக்கையின் கீழ் அகாலி தள தலைவர்களும் மற்றும் பத்து ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்அவர்களில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்ஒரு சீக்கிய வகுப்புவாத கட்சியான அகாலி தளம்பிந்த்ராவாலேயின் ஆதரவோடு சீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு அதிக சுயாட்சி மற்றும் அதிகாரம் கோரி வந்ததுஇந்த நடவடிக்கைகளில்டாங்கிகள்சிறிய பீரங்கிகள்ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களோடு பெரும் எண்ணிக்கையிலான இந்திய இராணுவ துருப்புகளும் பயன்படுத்தப்பட்டன.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில்ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் 492 பயங்கரவாதிகளோடுசேர்த்து 83 இந்திய இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்மொத்த ஏறத்தாழ 3,000 உயிரிழப்புகள் என்ற எண்ணிக்கையோடுபக்தர்களும் மற்றும் இதர பொதுஜனங்களும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர் என்பதை சுயாதீனமான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
சீக்கிய ஆதார நூலகங்களில் இருந்த வரலாற்று தொல்பொருட்களும்,கையெழுப்புப்படிகளும் அரசால் கைப்பற்றப்பட்டுபின்னர் அவை எரிக்கப்பட்டன.
அந்த இராணுவ நடவடிக்கை இந்தியா முழுவதிலும் அதிகளவிலான வகுப்புவாத பதட்டங்களுக்கு மற்றும் சீக்கியர் மீதான தாக்குதல்களுக்கு இட்டு சென்றதுஇந்திய இராணுவத்தில் இருந்த சில சீக்கிய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்அதேவேளையில் ஏனையவர்கள் இராணுவத்தில் இருந்தும் மற்றும் அரசு நிர்வாக அலுவலகங்களில் இருந்தும் இராஜினாமா செய்தனர் அல்லது இந்திய அரசிடம் இருந்து பெற்ற விருதுகள் மற்றும் மரியாதைகளை மறுத்தளித்தனர்.
அக்டோபர் 31இல்இந்திரா காந்தி அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்சீக்கியர்-விரோத படுகொலைகளை அடுத்து,காங்கிரஸ் கட்சி தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட பொலிஸ் உடனான மோதலில், 3,000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
பொற்கோயில் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து சமூகரீதியில் பதட்டமாக இருந்த சூழ்நிலையில்அந்த ஆப்ரேஷனால் ஒரு தனி சீக்கிய அரசின் உடனடி பிரகடனம் முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும்பஞ்சாபின் இந்திய தரப்பு எல்லையைப் பாகிஸ்தான் துருப்புகள் கடந்து வரவிருந்த ஆபத்தும் கூட முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும் முன்னணி இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
அங்கே அதிருப்தி அடைந்த வேலையற்ற சீக்கிய இளைஞர்களும் மற்றும் தகுதிக்கேற்ற வேலையில் இருத்தப்படாத சீக்கிய இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்த நிலைமைகளின் கீழ்காங்கிரஸ் அரசாங்கமும் பஞ்சாபின் பெரும்பாலான சீக்கிய அரசியல் மற்றும் வியாபார மேற்தட்டுக்களும் பல ஆண்டுகளுக்கு அதிகளவில் கசப்பான மோதலில் ஈடுபட்டு வந்தன. (இந்திரா காந்தி ஒரு மதசார்பற்ற தேசியவாதி என்று சித்தரிக்கப்பட்ட போதினும்இந்த மோதலில் இருதரப்பும் அதிகளவில் ஆக்ரோஷமான வகுப்புவாத முறையீடுகளில் தங்கி இருந்தனஅது பஞ்சாபில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையில் அதிகளவிலான சச்சரவை ஏற்படுத்தி வந்தது.
பஞ்சாபில் ஜூன் 1984இல் சமூக பதட்டங்களின் ஒரு வெடிப்பு மீது இந்திய மேற்தட்டிற்குள் பீதி நிலவியது நிஜமாகும்ஆனால் அவரது சீக்கிய பிரிவுகளுக்கு வெளியே பரந்த அடித்தளத்திலான ஆதரவைப் பெற்றிராத பிந்த்ராவாலே மீது அங்கே சர்ச்சைகள் இருக்கவில்லை.
பிந்த்ராவாலே
ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தேசியளவிலான சமூக அமைதியின்மைக்கு இடையில்தேர்தல்கள் மற்றும் உள்நாட்டு சுதந்திரங்களை இரத்து செய்தும்ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தலைவர்களை சிறையில் அடைத்தும்,ஜூன் 1975இல் இந்தியா காந்தி நெருக்கடிகால அவசர நிலையை அறிவித்திருந்தார்அது மார்ச் 1977 வரை நீக்கப்படாமல் இருந்தது.
1977 தேர்தல்களில்அதில் காந்தி பதவியை இழந்தார் என்பதோடுசீக்கிய வகுப்புவாத அகாலி தளம் தலைமையிலான ஒரு கூட்டணி பஞ்சாபில் அதிகாரத்திற்கு வந்ததுஅகாலி தளத்தை உடைத்து சீக்கியர்கள் மத்தியில் மக்கள் ஆதரவை பெறும் முயற்சியில்காந்தியின் காங்கிரஸ் கட்சி வைதீக மத போதகர் ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலேயை பஞ்சாப் அரசியலில் முன்னிலைக்கு கொண்டு வந்ததுபிந்த்ராவாலேயின் தம்தாமி தக்சால்(Damdami Taksal) அமைப்பு மற்றொரு மதவாத குழுவோடு வன்முறை சச்சரவுகளில் சிக்கிய நிலையில்அவர் விரைவிலேயே தீமைபயக்கும் விதத்தில் மாறினார்.
அவர் காங்கிரஸ் தலைவர் ஜகத் நாராயணனின் படுகொலைக்கு தூண்டியமைக்காக செப்டம்பர் 1981இல் கைது செய்யப்பட்டார்ஆனால் சாட்சிகள் கோரி விரைவிலேயே விடுவிக்கப்பட்டார்அதன்பின்னர் காங்கிரஸில் இருந்து தம்மைத்தாமே பிரித்து கொண்ட பிந்த்ராவாலே அகாலி தளத்துடனான சக்திகளுடன் இணைந்தார்.
ஜூலை 1982இல்அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்அந்த தீர்மானம்கோதுமை மற்றும் ஏனைய வேளாண் பொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டுமென்பது உட்படசீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு கூடுதல் சுய-அதிகாரம் வழங்க கோரியதோடு, 1966இல் எந்த உடன்படிக்கையின் கீழ் பஞ்சாப் மூன்று மாநிலங்களாக (ஹரியானா,ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பெரும்பான்மையினர் பஞ்சாபி பேசும் மற்றும் சீக்கியர்களைக் கொண்ட பஞ்சாப்பிரிக்கப்பட்டதோ அந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யவும் கோரியது.
பிந்த்ராவாலேயின் சீடர்களில் சிலர் உட்பட சீக்கியர்களில் ஒரு சிறிய பிரிவு,துணைகண்டத்தின் 1947 பிரிவினையின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத தர்க்கத்தை வைத்துக் கொண்டுஒரு தனி சீக்கிய அரசை உருவாக்கும் நோக்கங்கொண்ட காலிஸ்தான் இயக்கத்தின் போராளிகள் பிரிவுக்கு திரும்பியது.
பிந்த்ராவாலே பகிரங்கமாக அவரை காலிஸ்தான் இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளவில்லைஆனால் மீண்டும் மீண்டும் சீக்கியர்களை ஒரு "தேசம்ஆக குறிப்பிட்டு வந்தார்.
ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை அடுத்து வந்த தசாப்தத்தில் பஞ்சாப் மீது கடிவாளமில்லா இந்திய அரசின் பிடியை மீண்டும் நிலைநிறுத்த,ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகள்வழக்கின்றி நீண்டகாலம் சிறையில் அடைப்பதுசித்திரவதைமாயமாக்கிவிடுவது மற்றும் பொதுமக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய போராளிகளைக் கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு கொல்வது உட்பட பரந்த மனித உரிமைமீறல்களில் இந்திய அரசு படைகள் தங்கியிருந்தனஅரசாங்க-விரோத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள்அவர்கள் பங்கிற்குகண்மூடித்தனமான தாக்குதல்களில் இந்துக்களைக் குறிவைத்தும் மற்றும் அவர்களின் வகுப்புவாத-பிரிவினைவாத அரசியலை நிராகரித்த சீக்கியர்களைப் படுகொலை செய்தும்அட்டூழியங்கள் நடத்தினர்ஜூன் 1985இல்,காலிஸ்தான் இயக்கத்தினர் மாண்ட்ரீல்-இலண்டன்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தைக் குண்டு வைத்து தகர்த்த போது 329 மக்கள் கொல்லப்பட்டனர்.
அண்மையில் திறக்கப்பட்ட வைட்ஹால் கோப்பில் உள்ள ஏனைய ஆவணங்கள்ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவில் இந்தியாவிற்கு ஆதாயமளிக்கும் ஆயுத விற்பனை உட்பட வெளிப்படையான பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டிருந்ததை வெளிக்காட்டுகின்றனஇந்தியாவில் பிரிட்டிஷ் "வியாபார நலன்கள்மிகவும் கணிசமாள அளவிற்குஇருந்தன என்பதை ஜூன் 22, 1984 தேதியிட்ட ஒரு இரகசிய வெளியுறவுத்துறை அதிகாரியின் குறிப்புரை வலியுறுத்தியதுஅந்த ஆவணம் தொடர்ந்திருந்ததுவியாபாரம் மற்றும் இராணுவ விற்பனை இரண்டிற்கும் அது ஒரு மிகப்பெரிய மற்றும் விரிவடைந்துவரும் சந்தையாகும். 1983இல் பிரிட்டனின் ஏற்றுமதி 800 மில்லியன் பவுண்டைக் கடந்திருந்தது. 1975க்கு பின்னர் இருந்துஇந்தியா 1.25 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான பிரிட்டனின் இராணுவ உபகரணங்களை வாங்கி உள்ளது.
இந்திய அரசு 65 மில்லியன் பவுண்ட் உடன்படிக்கையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு உடன்பட்டதற்கு பிரதி உபகாரமாக பொற்கோயில் மீதான தாக்குதலில் பிரிட்டிஷ் அரசு ஒரு பங்கு வகித்திருக்கக்கூடும் என்று தொழிற்கட்சியின் முன்னாள் துணை சேர்மேன் டோம் வாட்சன் கூறினார்அவர் கேமரூனிடம்உங்களின் அமிர்தசரஸ் விசாரணையில்அரசு பணியாளர்களை விசாரிக்க உத்தரவிடுவதற்கு மாறாகநீங்கள் ஏன் ஜாப்ரி ஹோவ் பிரபு மற்றும் லியோன் பிரெட்டென் பிரபுவிடம் அவர்கள் மார்கரெட் தாட்சரிடம் என்ன ஒப்புக்கொண்டார்கள் என்பதையும்அப்போதைய வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் உடன்படிக்கையோடு அதற்கு ஏதேனும் தொடர்பு உண்டா என்பதையும் கேட்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
கமெரூன் இயல்பாகவே சதி குறித்த எந்தவொரு கருத்துக்களையும் நிராகரித்தார்.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் மூன்று நாள் விஜயத்தில் கமெரூன் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வெளிநாட்டிற்கான பெரிய வியாபார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி சென்று வந்து வெறும் ஒரு ஆண்டிற்குப் பின்னர்இது நடந்துள்ளதுஇந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் நம்பிக்கையில்இந்தியா மற்றும் பிரிட்டன் ஒரு "சிறப்பு உறவைகொண்டுள்ளன என்று தெரிவித்த கேமரூன்ஆதாரத்திற்காக 1.5மில்லியன் இந்திய "வம்சாவழியினர் பிரிட்டனில் உள்ளனர்என்பது உட்பட அவ்விரு நாடுகளும் "மொழிகலாச்சாரம்உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனஎன்று மேற்கோள் காட்டி இருந்தார்.
அவரது விஜயத்தின் போது கமெரூன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கும் விஜயம் செய்திருந்தார் மற்றும் ஏப்ரல் 13, 1919இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூறுக்கணக்கான நிராயுதபாணியான மக்களைமுக்கியமாக சீக்கியர்களை,பிரிட்டிஷ் இந்திய இராணுவம் இழிவுகரமாக படுகொலை செய்திருந்த ஜாலியன்வாலா பாத்திற்கும் அஞ்சலி செலுத்த (ஆனால் அவர் மன்னிப்பு கோரவில்லைவிஜயம் செய்திருந்தார்.
By Harvey Thompson 
4 February 2014
http://www.wsws.org/tamil/articles/2014/fer/140208_brit.shtml

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts