Search This Blog

Tuesday, 29 October 2013

பேர்லினில் புலம்பெயர்ந்தோர் உண்ணாவிரதத்தை கைவிடுகின்றனர்

கிட்டத்தட்ட இரண்டு டஜன் புலம் பெயர்ந்தோர் மனிதத் தன்மையற்ற வாழ்நிலைமைகளுக்கு எதிராக பேர்லினின் மத்திய பிரண்டன்பேரக் நுழைவாயிலின் அருகே 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கடந்த ஐந்து நாட்களாக அவர்கள் நீரும் குடிப்பதில்லைபின் சனிக்கிழமை மாலை அவர்கள் மத்திய அரசாங்கத்திடமோ அல்லது பேர்லின் மாநில செனட் இடமோ இருந்து எந்தச் சலுகைகளையும் பெறாமல் தற்காலிகமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அகதிகள் நிறுத்தி வைத்துள்ளனர்முன்னதாக அவர்கள பேர்லின் செனட்டில் ஒன்றிணைப்பிற்கான செனட்டர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) உறுப்பினருமான டீலெட் கோலாட் உடனும்மத்திய பாராளுமன்றத்தில் ஒன்றிணைப்பிற்கான சமூக ஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மத்திய அரசின் குடியேற்றஅகதிகள் குழுவின் பேச்சாளருமான றூடிகர் வெட் உடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
அரசியல்வாதிகள் அகதிகளுடன் பேசுவதற்கு கடைசிநேரம் வரை காத்திருந்தனர்உண்ணாவிரத போராட்டக்காரர்களில் பலர் நினைவிழந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்அங்கும் அவர்கள் எதையும் திரவ ஆகாரங்களை குடிக்கவோ அல்லது உணவு உட்கொள்ளவோ மறுத்துள்ளனர்பொலிசார் அவர்களை கூடாரம்,தார்ப்பாய் மற்றும் பாய்களைப் பயன்படுத்துவதை தடைக்குட்படுத்தியுள்ளதால்அகதிகள் சிறிய பொலிஸ்தரீன் மட்டைகளால் மூடியிருந்ததுடன்குடைகளை மட்டுமே பெரும் மழையிலிருந்து பாதுகாக பயன்படுத்தினர்சில நேரத்திற்குப் பின்னர்தான் போர்வைகளும் படுக்கைப்பைகளும் அனுமதிக்கப்பட்டன.
பேர்லின் செனட் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அகதிகளுக்கு எந்தவிதச் சலுகைகளும் கொடுக்க மறுத்துவிட்டனர்.அவர்களின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படும் என்று மட்டும் கூறினர்கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடனான ஒரு புதிய அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகளில் அகதிகள் பிரச்சினை எழுப்படும் என்று SPD உறுதியளித்தது.
அனைவரும் காலவரையற்று ஜேர்மனியில் இருப்பதற்கு உரிமை வேண்டும் என்று அகதிகள் குரல் கொடுத்தனர்அதேபோல் தஞ்சம் நாடுவோருக்கான இருப்பிட கட்டுப்பாடு அகற்றப்பட வேண்டும் என்றனர்.இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே அவர்கள் செல்வதையும் அவர்களின் வாழ்க்கை நிலைமையில் முன்னேற்றத்தையும் மறுக்கிறதுஉண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு சில மணி நேரம் முன்பு WSWS நிருபர்கள் அவர்களுடன் உரையாடினர்.
நாங்களும் மனிதர்கள்தான்ஆனால் மனிதர்கள்போல் வாழ அனுமதிக்கப்படவில்லை என்றார் ஈரானைச் சேர்ந்த ஜாலிலியன் முகம்மது,நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்னும் அச்சத்தில் நாங்கள் உள்ளோம்வேலை செய்யவசிக்க உரிமை இல்லைஉணவுப் பொட்டலங்களை உட்கொள்கிறோம்வீடுகளுக்கு உள்ளேயே இருக்கின்றோம்வீடுகளில் இருப்பது சித்திரவதைதான்.தெருக்களில் உண்ணாவிரதமிருப்பதற்கான காரணம் நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். என்றார்.
34 வயதுக்காரரான இவர் இரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்ஆனால் தன் எதிர்ப்பைத் தொடர்ந்தார்என் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டனஇன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவேன்எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று அஞ்சுகிறேன்நான்கு மாதக்காலத்திற்கு ஜேர்மனிய மொழி படித்தேன்அடிப்படைத் தேர்வில் தேறிவிட்டேன்ஆனால் அடுத்த ஒரு வகுப்பில் படிக்க முடியவில்லை,ஏனெனில் இங்கு தற்காலிகமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளேன்.என்றார் அவர்.
இதே கதைதான் எங்கள் அனைவருடையதும் என்றார் 28 வயது எல்சா.இவர் அரசியல் துன்புறுத்தலால் இளம் வயதில் எதியோப்பியாவை விட்டு வெளியேறினார்இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிக்கு வந்தேன்.முதலில் பாசோ நகருக்கு அருகே ஒரு அகதி முகாமில் இருந்தேன்அது கொடூரமானதுஓர் அறையில் குறைந்தப்பட்சம் நான்கு பேர் தூங்க வேண்டும்வேலைசெய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லைநாங்கள் ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தோம்தஞ்சம் கோரும் எனது மனுவிற்கு பதில் ஏதும் நான் பெறவில்லை.


எதியோப்பியாவில் இருந்து வந்த எல்சா
எல்சா உண்ணாவிரத்ததில் தான் பங்கேற்பதற்குக் காரணம்ஒரு மனிதப்பிறவி என்று தான் ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்நாங்கள் மொழியைக்கற்று வேலை செய்ய விரும்புகிறோம்.மரணம் என்னும் ஆபத்தில் எங்களை நிறுத்தியுள்ளோம்ஏனெனில் அகதிகள் முகாமிலும் மனதளவில் இறக்கின்றோம்ஏனெனில் எங்களால் எதுவும் செய்யமுடியாது.
கிரேக்கத்தில் எல்சா ஆறு ஆண்டுகள் உணவு விடுதியில் பரிமாறுபவராகவும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுபவருமாக வேலை பார்த்தார்ஆனால் பொருளாதார நெருக்கடி தொடங்கியவுடன் வேலைக்கான வாய்ப்புக்கள் மறைந்துவிட்டனஎனவே அவர் ஜேர்மனிக்கு பயணித்தார்இப்பொழுது நாடு கடத்தலை எதிர்கொள்கிறார்.


பாக்கிஸ்தானில் இருந்து வந்த ஹுசைன்
பாக்கிஸ்தானை சேர்ந்த 35 வயதான ஹுசைன்முதலில் கிரேக்கத்தில் அகதியாக இருந்தார்அவர் அரசியல் துன்புறுத்தல் காரணமாக பாக்கிஸ்தானில் இருந்து தப்பிதெற்கு ஐரோப்பாவில் 10 ஆண்டுகள் வசித்தார் அவர் கிரேக்க மொழியை நன்றாகப் பேசுகிறார்அங்கு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கினார்ஆனால் பொலிஸ் மற்றும் தீவிர வலதுசாரிகள் குடியேறுவோரை தாக்குவது அதிகரித்துவிட்டது.
நான் கிரேக்கத்தை விட்டு நீங்கியதற்குக் காரணம் பொலிஸ் மற்றும் கோல்டன் டோனின் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டனமூன்று முறை நான் தாக்கப்பட்டேன்இல்லத்தை விட்டு நகரவே நாங்கள் பயந்தோம்,கடைக்குக்கூட பாதுகாப்புடன் சென்றுவர முடியவில்லை என்றார் ஹுசைன்.
ஐரோப்பிய ஒன்றியம்கிரேக்கத்திற்கு அது குடியேறுவோரை வேட்டையாடுவதில் ஆதரவைக் கொடுக்கிறதுசட்டவிரோத அகதிகள் மீது இன்னும் வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கூறுகிறதுஜினியோஸ் ஜீயோஸ் நடவடிக்கையின் கட்டமைப்பிற்குள் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் போல் தெரிந்த மக்கள் கிரேக்க தெருக்களில் கைது செய்யப்பட்டுசோதனையிடப்பட்டு பின்னர் நாடுகடத்தும் முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டனர்இச்செயற்பாடுகளுக்கு பாசிச அதிர்ச்சித் துருப்புக்களுடைய ஆதரவும் கிடைத்தது.
ஜேர்மனியில் பல புலம் பெயர்ந்தோர்களை போல் ஹுசைன் இதே அனுபவங்களைத்தான் கண்டார்செல்வம் படைத்தோர் எப்பிரச்சினையும் இல்லாமல் பயணிக்கலாம்எல்லா இடங்களிலும் நட்பான முறையில் வரவேற்கப்படுகின்றனர். என்றார்ஆனால் நீங்கள் ஏழையென்றால்,நீங்கள் ஒரு மனிதனைப்போல் நடத்தப்படுவதில்லை.
நேட்டோப் போரினால் லிபிய நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படல்.
பிரண்டென்பேர்க் நுழைவாயிலில் போராட்டம் முடிந்து விட்டபோதிலும்கூடஇன்னும் டஜன் கணக்கான அகதிகள் பேர்லின் நகரின் Oranienplatz தற்காலிக முகாம்களில் உள்ளனர்முகாம்களில் ஓராண்டிற்கும் மேல் இருந்தபின்இந்த அகதிகள் இப்பொழுது இருப்பிடம் கொடுக்கப்படுகின்றனர்இது CDU, SPD உள்ள மாநில நிர்வாகத்தினதும் அதேபோல் உள்ளூர் நகரசபை தலைவரான பசுமைக் கட்சியின் மொனிக்கா ஹேர்மானின் அறிவிப்பிலும் உள்ளதுஎவ்வாறாயினும் தக்க இருப்பிடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
WSWS நிருபர்கள் நைஜீரியாவில் இருந்து வந்துள்ள ஒரு இளம் மின்சார தொழிலாளி அஹ்மத் சலிக்கு உடன் பேசினர்இவர் கூடார முகாமில் வசிக்கிறார்இவர் தன் தாய்நாட்டை விட்டு 2009ல் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து வெளியேறினார்அந்த மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போயினர்.


அஹ்மத் சலிகு
லிபியாவிற்குச் சென்றிருந்த அஹ்மத் பல முக்கிய கட்டுமான  திட்டங்களை செயல்படுத்திய காமாவில் (ஒரு பெரும் துருக்கியக் கட்டிட நிறுவனம்வேலையைப் பெற்றார்அங்கு அவர் தேர்ந்தெடுத்த வேலையில் 2010ல் எட்டு மாத காலம் இருந்தார்லிபியா இவருக்கு இரண்டாம் வீடு போல் ஆயிற்று.
ஆனால் உள்நாட்டுப்போர் ஆரம்பித்துஅதன்பின் 2011 முன்பகுதியில் நேட்டோ தாக்குதலும் வந்தபின் இது முடிந்துவிட்டதுவெளிட்டினரைப் பொறுத்தவரைநாங்கள் கிளர்ச்சியாளர்களால் அச்சறுத்தப்பட்டோம்,ஆபத்தில் இருந்தோம் என்றார் அஹ்மத்கிளர்ச்சியாளர்கள் கைகளில் சிக்கிய எவரும் அவரது உயிருக்குப் பயப்பட வேண்டியதாயிற்று.இராணுவம் ஒரு இராணுவ முகாமிற்கு எங்களை இட்டுச் சென்றதுநான் அங்கு ஒரு வாரம் இருந்தேன்லிபிய இராணுவத்துடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட வேண்டும் இல்லாவிடின் நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்று கூறப்பட்டோம்.
அஹ்மத் நாட்டை விட்டு நீங்க முடிவெடுத்து 800 அகதிகள் நிறைந்த நெரிசல் மிகுந்த கப்பல் ஒன்றில் ஏறியிருந்தார்அது மத்தியதரைக் கடலில் இரு நாட்கள் பயணித்தபின் இத்தாலியத் தீவான லம்பேடுசாவிற்கு வந்ததுலம்பேடுசா மக்கள் அவர்களுக்கு பெரும் உதவி செய்ய முயன்றனர்ஆனால் உணவு அளித்ததைவிட வேறு எந்த வாய்ப்புக்களும் இல்லைஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின்படி அந்நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டாலும்வேலை செய்வதற்கு சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை.
அஹ்மத் கருத்துப்படி பெர்லுஸ்கோனி அரசாங்கம் அவருக்கும் சில மற்றவர்களுக்கும் 500 யூரோக்களைக் கொடுத்ததுஅவர்கள் நாட்டை விட்டு வெளியேற கூறப்பட்டனர்அவர் எங்களுக்கு பணம் வாங்கியதற்கு எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டினார்இங்கு உள்ள அனைவருமே இதைப் போன்ற காகிதத்தை வைத்துள்ளனர். என்றார் அவர்அகதிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளை வந்து சேர்ந்தனர்ஆனால் இப்பொழுது அவர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை.
அந்த நேரத்தில் பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி மற்றும் பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் வலியுறுத்தலின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவில் பல தலைமுறையினரின் வேலையை அழித்துவிட்டது என்றார் அஹ்மத்அது லிபியாவை மட்டும் பாதிக்காமல்அங்கு உழைத்து வந்த ஆயிரக்கணக்கான ஆபிரிக்கர்களையும் பாதித்ததுஐரோப்பாதான் இந்த நிலைமைக்கு பொறுப்புஅவர்கள் போரைத் தொடங்கி எங்கள் வீடுகளை அழித்தனர்.இப்பொழுது மாற்றீடு எதையும் கொடுக்கவில்லைஆபிரிக்க மக்கள் பலருக்கு லிபியா புகலிடமாக இருந்தது என்றார் அவர்.
லிபியாவில் இருந்து வந்த ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரின் தலைவிதி அனைத்து ஜேர்மனிய அரசியல் கட்சிகள் மீதும் பேரழிவுதரும் குற்றச்சாட்டு ஆகும்ஜேர்மனி தந்திரோபாயக் காரணங்களுக்காக லிபியப் போரில் பங்கு பெறவில்லை என்றாலும், CDU வில் இருந்து SPD வரை,பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியும் விதிவிலக்கு இல்லாமல் அனைத்துக் கட்சிகளும்ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு மேலதிகமான ஆக்கிரோஷப் போக்கிற்கு ஆதரவு கொடுக்கின்றனஅவை புதிய காலனித்துவப் போர்களில் இருந்து வரும் ஆதாயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்போது தனிமைப்பட்டு நிற்கவிரும்பவில்லை.
By WSWS correspondents 
24 October 2013

Monday, 28 October 2013

ஏகாதிபத்திய ஆயுதமாக சினிமா: ஹாலிவுட்டும், முதலாம் உலக யுத்தமும்

Cinema as an imperialist weapon: Hollywood and World War I

ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களின் உதவியுடன், அமெரிக்க ஆளும் மேற்தட்டால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலினால் வெடித்த ஒரு யுத்தமே - முதலாம் உலக யுத்தம் (1914-1918). அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆற்றல்மிக்க விரிவாக்கத்தாலும், உலகளாவிய பொருளாதாரத்தை அது அதிகப்படியாக சார்ந்திருந்ததன்மையாலும் உந்தப்பட்டிருந்ததால், ஏப்ரல் 1917இல், அந்நாடு தாமதமாக தான் அந்த இரத்த ஆற்றிற்குள் களமிறங்கியது.
ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ஒட்டோமன் பேரரசு ஆகியவற்றை ஒருபுறத்திலும், ஏனைய நேச நாடுகளை (இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா) மற்றொருபுறத்திலும் கொண்டிருந்த முதலாம் உலக யுத்தத்தில், அந்த பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்களை அமெரிக்கா விலகியிருந்து பார்க்க விரும்பவில்லை.

Woodrow Wilson
தன்னுடைய ஏகாதிபத்திய திட்டத்தைப் பொதுமக்களிடம் விற்பது தான் உட்ரோவ் வில்சனின் நிர்வாகம் முகங்கொடுத்திருந்த சவாலாக இருந்தது. இராணுவ நடவடிக்கைக்கு இருந்த பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு, அமெரிக்காவில் இருந்த சோசலிச இயக்கத்தின் இடதுசாரி கூறுகளுக்கு ஒருசிலசமயங்களில் ஆதாயமாக இருந்தது என்று வரலாற்றாளர் ஹோவர்ட் ஷின் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான மக்களைக் கொண்ட யுத்த-எதிர்ப்பு பேரணிகள் நடத்திய அவை, அவற்றின் எதிர்ப்பின் விளைவாக முனிசிப்பல் தேர்தல்களில் சில வெற்றிகளைப் பெற்றன. ஆனால் இறுதியில் யுத்தம், ஐரோப்பிய சோசலிசவாதிகளைச் செய்தது போலவே அமெரிக்க சோசலிசவாதிகளையும் பிரித்தது. எடுத்துக்காட்டாக, டைஸ் குழுவிற்கான (Dies Committee)—பின்னர் இது House Committee on Un-American Activities என்று மாறியது—தம்முடைய 1938 உறுதிமொழி பத்திரத்தில் சோசலிச எழுத்தாளர் உப்டொன் சின்கிளெயர் (Upton Sinclair), முதலாம் உலக யுத்தத்தில் அரசாங்கத்தின் நுழைவிற்கு தம்முடைய ஆதரவை அறிவிப்பதற்காக 1917'இல் சோசலிச கட்சியிலிருந்து தாம் விலகிவிட்டதாக குறிப்பிட்டார். [1]
அதன் இராணுவ தலையீட்டிற்கான மிகவும் மதிப்பார்ந்த மற்றும் ஜனநாயக உந்துதல்களை ஸ்திரப்படுத்துவது மட்டும் தான், மக்களின் யுத்த-ஆதரவை திரட்டுவதற்கான ஒரே வழியாக அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிந்தது. அமெரிக்க முதலாளித்துவத்திடம் அப்போதிருந்த மிதமிஞ்சிய செல்வவளம், ஆதாரவளம் மற்றும் பொருளாதார ஆற்றல் தான், வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி பெருந்தன்மையை போதிக்க, வில்சனின் ஜனநாயக நிர்வாகத்திற்கு சாத்தியக்கூறை ஏற்படுத்தி இருந்தது. வில்சனுக்கு மிக வசதியாக, அந்நாடு ஏற்கனவே ஒரு பிரச்சார இயந்திரத்தை அதனிடத்தில் கொண்டிருந்தது: அதாவது, அமெரிக்க திரைப்படத்துறையைக் கொண்டிருந்தது. 1917-1918'இன் போது என்ன நிகழ்ந்ததென்றால், ஒரு தீவிர யுத்த-ஆதரவும், இப்போதுவரை கொண்டு செல்லப்பட்டு கொண்டிருப்பதைப் போன்றே, திரைப்படங்கள் மூலமான மக்கள்தொடர்பு பிரச்சாரங்களும் இருந்தன. இறுதி விளைவாக அமெரிக்க (ஹாலிவுட்) முதலாளித்துவத்திற்கு வெற்றியும், மனிதயினத்திற்கு ஒரு துக்ககரமான நிகழ்வும் நிகழ்ந்தது. உலகமெங்கும் செத்துமடிந்து கொண்டிருந்த மில்லியன்கணக்கானவர்களோடு, காயமடைந்த 320,000 அமெரிக்கர்களும் சேர்ந்தார்கள்.

D.W. Griffith
முதலாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா நுழைந்த அந்த காலக்கட்டத்தில், பாராமவுண்ட், ஃபாக்ஸ், யூனிவர்சல், விடாகிராஃப் (இது தான் வார்னர் பிரதர்ஸின் அடித்தளம்), ஸ்டூடியோ ஆஃப் மெட்ரோ மற்றும் கோல்ட்வென் (இது MGMஇன் மையக்கரு) ஆகியவை ஏற்கனவே முழுவீச்சில் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றோ அல்லது அதற்குமேற்பட்ட தயாரிப்பு அரங்கங்களையோ கொண்டிருந்தன; அவை பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் கால்ஷீட்டையும் பெற்றிருந்தன; படைப்புத்திறன்மிக்க நபர்கள் பரந்த விளம்பரம்/பிரச்சாரம்/வினியோக கருவிகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இத்தகைய நிலைமைகளின்கீழ் கலைத்துவ வெளிப்பாடுகள் மறைக்கப்பட்டு இருக்கவில்லை. உண்மையில், 1910'களின் போது துடிப்புமிக்க, உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகள் நிறைய வெளியாகின. இது D.W. Griffithஇன்Intolerance மற்றும் லூயிஸ் வெப்பரின் The Hypocrites ஆகியவற்றின் (இரண்டுமே 1916'இல் வெளியானவை) சகாப்தமாக இருந்தது. 1917'இன் Easy Street மற்றும் The Immigrant ஆகியவற்றில் தம்முடைய சிறப்பான நகைச்சுவை காட்சிகளினால் வறுமையையும், வர்க்க அமைப்புமுறையையும் வெளிப்படுத்தி இருந்த நடிகரும், இயக்குனருமான சார்லின் சாப்ளினின் சகாப்தமாக அது இருந்தது. ஜோன் ஃபோர்டு, பிரான்க் போர்ஜாஜ் மற்றும் ரவுல் வால்ஷ் போன்றவர்களின் குறிப்பிடத்தக்க தொழில்வாழ்க்கையை அறிமுகப்படுத்திய தசாப்தமாக அது இருந்தது. 1910'களில் கூட, மக்கள்தொடர்புதுறையின் பெரும் குறுக்கீடுகள் இல்லாமலேயே, அரங்க திரைப்படத்தை உருவாக்குவது அப்போது சாத்தியமாக இருந்தது.

Hearts of the World (D.W. Griffith)
யுத்த-எதிர்ப்பாளரான Intolerance படத்தின் இயக்குனர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் யுத்த ஆதரவு படமான Hearts of the World ஐ உருவாக்கும் நிலைக்குத் திரும்பினார் என்பது அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்களும், 1916க்கு பிந்தைய அவர்களின் பெருநிறுவன முதலீட்டாளர்களும் அரசியல், பொருளாதார அழுத்தங்களை முகங்கொடுத்திருந்தார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. முதல் உலக யுத்தத்தின் முதல் மூன்று ஆண்டுகளின் போது, சில குறிப்பிட்ட ஐரோப்பிய மாகாணங்கள் படப்பிடிப்பிற்குத் திறந்துவிடப்படாததாலும், யுத்த இழப்புகளாலும், புதிய நெறிமுறைகளாலும் மற்றும் யுத்தம் சார்ந்த பேரழிவுகளாலும் அமெரிக்க திரைப்படத்துறை இழப்புகளைச் சந்தித்தது. தந்திரம்மிக்க ஸ்டூடியோ உரிமையாளர்கள் யுத்தத்தின் நீண்டகால மதிப்பை புரிந்து கொண்டார்கள். ஐரோப்பிய திரைப்பட நிறுவனங்களைப் போலில்லாமல், அமெரிக்க ஸ்டூடியோக்கள் ஒரு சிதைவுறாத உள்நாட்டு சந்தையை அனுபவித்ததுடன், யுத்தத்தின் விளைவாக வெளிநாட்டு திரைப்படங்களின் வருகையும் குறையும் என்பதைக் கணித்தார்கள். ஜேர்மன், இத்தாலிய மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்புகள் சரிவடைந்த நிலையில், முதன்முறையாக ஹாலிவுட் அதன் சொந்த சர்வதேச சந்தையைக் கண்டது. [2]

916 publicity photo for the takeover of Paramount Pictures. (L to R) Jesse L. Lasky, Adolph Zukor, Samuel Goldwyn, Cecil B. DeMille, Al Kaufman
1916 ஜனவரி 27'இல், சுமார் 1,000 மக்கள் கூடியிருந்த திரைப்பட வர்த்தக ஆணையத்தின் (Motion Picture Board of Trade) விருந்தில் ஜனாதிபதி வில்சன் அதை புகழ்ந்த போது தான், அமெரிக்க திரைப்படத் தொழிலுக்கும், வாஷிங்டன் D.C.க்கும் இடையிலான முக்கியத்துவமிக்க முதல் கூட்டணி ஏற்பட்டது. கோடக்கின் ஜோர்ஜ் ஈஸ்ட்மென், பாராமவுண்ட்டின் அடோல்ப் ஜூகூர் மற்றும் சாமுவேல் கோல்ஃப்ஷ் (பின்னர் இவர் கோல்ட்வென் என்று பெயர் மாற்றிக்கொண்டார்) போன்ற தொழில்துறை பிரபலங்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளடங்கி இருந்தார்கள். அமெரிக்க மாகாணங்களைப் பாதுகாக்க இராணுவ தயாரிப்பின் தேவை குறித்து வரவேற்புரை வழங்கி விட்டாகிராஃபின் J. Stuart Blackton பேசினார். அத்துடன், “So fire your forges and dam the bills/For the wings of peace must have iron quills” என்ற வரிகளில் முடியும் யுத்தத்திற்கு ஆதரவான ஒரு கவிதையும் அவர் மேற்கோளிட்டுக் காட்டினார். அந்த இரவு கூட்டத்தினரை நோக்கி வில்சன் பேசும் போது, திரைப்படங்களில் உண்மைக் கதைகளைக் கையாள்வதில் இருந்த தெளிவற்ற கருத்துக்களின் மீது அவர் அவருடைய குறிப்புகளை மிக குறைவாகவே வெளியிட்டார். எந்த நிகழ்விலும், தொழில்துறை தலைவர்களுக்கும், அவர்களின் தலைமை நிர்வாகிகளுக்கும் இடையிலான சந்திப்பானது, துடிப்பார்ந்த அமெரிக்க திரைப்பட வர்த்தகத்திற்குத் தேவையான சட்டமுறைமைகளை (legitimacy) வழங்கியது. [3]

Carl Laemmle
உண்மையில், பல ஸ்டூடியோ நிர்வாகிகள் புலம்பெயர்ந்திருந்தார்கள் என்பதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள். யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் (பின்னர் இது யூனிவர்சல் பிக்சர்ஸ் என்று மாறியது) தலைவர் ஜேர்மன் கார்ல் லெம்லைப் (German Carl Laemmle) பொறுத்தவரையில், பல்வேறு பிரிட்டிஷ் செய்திதாள்கள் 'ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஜேர்மன் மூலதனம் பாய்கிறது' என்று குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து 1915'இன் இலையுதிர்காலத்தில் இத்தகைய அச்சங்கள் நியாயமாகவே தெரிந்தன. தம்முடைய கருத்தை வில்சன் நிர்வாகத்திடமிருந்து பெற்ற லெம்ல், விரைவாக அனைத்து ஜேர்மன் கூட்டணிகளிலிருந்தும் அவரைஅவரே விலக்கிக் கொண்டார். 1914'இன் இலையுதிர்காலத்தில் வில்சனின் நிலைப்பாடு நடுநிலையாக (neutrality) இருந்த போது, யூனிவர்சல் இரண்டு ரீல் கொண்ட Be Neutral என்பதை வெளியிட்டது. வில்சன் தயார்நிலையை (preparedness) வலியுறுத்திய போது, யூனிவர்சல் 40 ரீல் நீளமுடைய அசாதாரண பயம் (Xenophobic) சம்பந்தபட்ட தொடரான Liberty என்பதை வெளியிட்டது. 1916 ஜூனில், ஒரு தயார்நிலை அணிவகுப்பைச் செய்து காட்டிய அந்த ஸ்டூடியோ, அதே ஆண்டு செப்டம்பரில் Lon Chaney-Dorothy Phillipsஇன் யுத்தத் திரைப்படமான If My Country Should Call என்பதை வினியோகித்தது. [4]
1917 ஏப்ரல் 6இல், ஜேர்மனியின்மீது ஜனாதிபதி வில்சன் யுத்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, யூனிவர்சலின் தயார்நிலை தயாரிப்புகளை (Preparedness Productions) யூனிவர்சல் அறிவித்தது. அதில் Uncle Sam at Work, The War Waif, The Birth of Patriotism மற்றும்Uncle Sam’s Gun Shops போன்ற தலைப்புகளுடன் நெடுந்தொடர்களும், குறுந்தொடர்களும், திரைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ரூபெர்ட் ஜூலியனின் The Kaiser, The Beast of Berlin (1918) மற்றும் ஒரு நையாண்டி படமான The Geezer of Berlin (1918) ஆகியவற்றை வெளியிட்டதன் மூலமாக கூடுதல் பிரச்சார புள்ளிகளையும் அந்த ஸ்டூடியோ சேர்த்துக்கொண்டது. Kaiserக்கு எதிரான பிரச்சாரம் அதன் வேலையை வெளிப்படையாகவே சிறப்பாக செய்தது. லோவாவின் டேவன்போர்ட்டில் The Beast of Berlin திரையிடப்பட்ட ஓரிடத்தில், ஒருவர் ஒரு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு உரத்த கூச்சலுடன், திரையரங்கத்தின் நடுபாதையில் ஓடிவந்து திரையை நோக்கி இருமுறை சுடத்தொடங்கிவிட்டார்; இதனால் அந்த காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. [5]
1917'இன் இலையுதிர்காலத்தில், யூனிவர்சல் உத்தியோகப்பூர்வ அரசு திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அதன் முதல் அரசாங்க ஒப்பந்தத்தை அமெரிக்க வேளாண்துறையிடமிருந்து பெற்றது. 1918'இன் கோடைகாலத்தின் போது, லெம்லியின் ஸ்டூடியோ The Wonders of Our War Work என்பதன் மீது தொடர்ச்சியாக ஒரு ரீல் திரைப்படங்களைத் தயாரித்தது. அவை ஒவ்வொன்றும் "பொதுமக்கள் செய்திதொடர்பு ஆணையத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதலையும், அங்கீகாரத்தையும்" பெற்றிருந்தன. 'யுத்த காலக்கட்டத்தின் போது திரைப்பட வியாபாரத்தில் யூனிவர்சல் மட்டும் விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற "தவறான தண்டோரா முழக்கங்களைச்" சரிகட்ட, திரைப்படத்துறையின் யுத்த நடவடிக்கைகளுக்கு சார்பாக செய்தித்தாள்களின் ஆதரவையும் அது திரட்டி வைத்திருந்தது.
பிரபலமான ஹென்றி எர்விங் டோட்ஜின் கதையான The Yellow Dogஐ படமாக்கியதன் மூலமாகவும், வர்த்தக கழகங்கள் மற்றும் பல்வேறு தேசியவாத அமைப்புகளுடன் சேர்ந்து “win the war" படத்தை வெளியிட்டதன் மூலமாகவும், நாட்டுப்பற்று மிகுந்திருந்த அப்போதைய சூழலில் அவை 'யூனிவர்சலின் முத்தான தயாரிப்புகள்' என்ற முத்திரையைப் பெற்றன. இந்த படங்கள் மட்டுமே கூட அமெரிக்க அரசாங்கத்திற்குப் போதியதாக இல்லை. 1918'இன் இலையுதிர்காலத்தில், பிரேசிலிய கிளை மேலாளரை "ஜேர்மானிய ஆதரவாளர்" என்று குற்றஞ்சாட்டி, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்து, யூனிவர்சலின் திரைப்படங்களை நீதித்துறை பிரேசிலுக்கு கப்பலேற்ற உத்தரவிட்டது. (ஆனால் இதற்கு யூனிவர்சல் கீழ்படிந்ததா என்பது அறியப்படவில்லை.) [6] இவை அனைத்தையும் மனதில் கொண்டு தான், லிவீஸ் மைல்ஸ்டோனின் சிறந்த யுத்த எதிர்ப்பு படைப்பான All Quiet on the Western Front படத்திற்கு (1930இல் இப்படம் யூனிவர்சினால் வெளியிடப்பட்டது) லெம்ல் வெளிப்படையாகவே ஆதரவளித்தார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுவொன்றும் அவருடைய ஸ்டூடியோவினால் கையாளப்பட்டு வந்த முதலாம் உலக யுத்த நடவடிக்கைகளில் சிலவற்றைக் குறைப்பதற்கான ஒரு நனவுபூர்வமற்ற முயற்சியல்ல.
அரசாங்கத்தைக் கைக்குள் வைத்திருந்த பல சீமான்களில் லெம்லியும் ஒருவராக இருந்தார். 1917இன் தொடக்கத்தில், விடாகிராஃப்பின் நிர்வாகிகளும், இத்துறையில் முக்கிய பங்கு வகித்து வந்த லாஸ்கி (அப்போது இதுதான் பாராமவுண்டின் உத்தியோகப்பூர்வ பெயராக இருந்தது), மியூச்சுவல், ஃபாக்ஸ் மற்றும் பல்வேறு வர்த்தக இதழ்களும், “நம்முடைய நாட்டையும், அதன் நலன்களையும் பாதுகாப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்த ஆதரவை" வலியுறுத்தி ஜனாதிபதி வில்சனுக்கு ஒரு தந்தி அனுப்புவதில் யூனிவர்சலுடன் கைகோர்த்தன. 12 மில்லியன் அன்றாட பார்வையாளர்கள் மீதிருக்கும் ஹாலிவுட்டின் தாக்கம் குறித்து வில்சனுக்குச் சுட்டிக்காட்டவும், “திரைப்படத்துறையை மிகவும் புத்திசாலித்தனமாகவும், பயனுள்ள வகையிலும் அவரின் சேவையில் கொண்டு வருவதற்கான ஓர் அமைப்பை உருவாக்கவும் அவர்கள் கையெழுத்திட்டார்கள். அந்த ஆண்டின் ஜூலையில், அரசாங்கத்தின் மக்கள்தொடர்பு குழுவோடு இணைந்த ஓர் அமைப்பான திரைப்படத்துறைக்கான தேசிய ஆணையத்தைத் (National Association of the Motion Picture Industry-NAMPI) தலைமையேற்று நடத்த சர்வதேச திரைப்படத்துறைச் சேர்ந்த William A. Brady'ஐ வில்சன் நியமித்தார். "அமெரிக்காவின் ஒட்டுமொத்த திரைப்படத்துறையும் ஒற்றுமையுடன் பெரும் முயற்சிகளையும், தேசப்பற்றுடன் கூடிய ஆதரவையும் அளிக்கும்; நான் உங்களின் பணிவுள்ள சேவகனாக இருப்பேன்," என்று Brady வில்சனுக்கு உறுதியளித்தார்.
அந்த பணிவார்ந்த Brady'யும், அவருடைய ஸ்டூடியோவும் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபட்டிருந்த இறுதிவரையில் கூட்டாளிகளாக இருந்தார்கள். விரைவிலேயே "பிரச்சாரம்" தொழில்துறையின் தொடர்ச்சியான கூச்சலாக மாறியது. அமெரிக்கா யுத்த திட்டங்களை வகுத்த போது, “யுத்தத்திற்கான அங்கிள் சாமின் தயாரிப்புகளோடு ஒட்டுமொத்தமாக தொடர்புபட்டிருந்த திரைப்பட நிறுவனங்கள்", அரசாங்கம் தரைப்படை மற்றும் கப்பற்படையில் ஆட்சேர்ப்பதற்கு திரைப்படங்களையே "பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த" திட்டமிட்டு கொண்டிருந்தது என்ற உண்மையில் உற்சாகமாக இருந்தன என்பதை Variety அறிவிக்கப்பட்டது.
NAMPIஇன் புதிய இங்கிலாந்து (New England) யுத்த பிரச்சாரத்திற்கு முழு பொறுப்பேற்றிருந்த வினியோகஸ்தர் லூயிஸ் பி. மேயர் (பின்னர் இவர் MGMஇன் தலைவரானார்), "திரைப்படங்கள் பொதுமக்களுக்கும், வாஷிங்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகச்சிறந்த பாலமாக இருக்கின்றன," என்று போஸ்டன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவித்தார். பரந்த திரைப்பட கண்காட்சிகள், “அரசாங்கத்திற்கும் அதன் பல்வேறு பிரச்சாரங்களுக்கும் மதிப்பிட முடியாத உதவியைச் செய்திருந்ததாக" மேயர் குறிப்பிட்டார். 1918 மே மாதம், லோஸ் ஏஞ்சல்ஸில் நடந்த Motion Picture War Relief Associationஇன் முதல் கூட்டத்தில், 2,000 பேர் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, பாராமவுண்ட்/லாஸ்கி இயக்குனர் சிசெல் பி. டெ மில்லெ குறிப்பிட்டதாவது: “மிக சக்திவாய்ந்த பிரச்சாரக்கருவியாக இருக்கும் திரைப்படங்கள், கேமரா மூலமாக செய்திகளை அனுப்புகின்றன; அவற்றை எப்படிப்பட்ட திறமையான இராஜாங்க அதிகாரிகளாலும் மாற்ற முடியாது." [8] (புரட்சிக்குப் பிந்தைய சோவியத் அரசாங்கம் தான் திரைப்பட பிரச்சாரத்தைக் கொண்டு வந்தது என்ற வாதத்தை இதுபோன்ற கருத்துக்கள் பொய்மைபடுத்தி காட்டுகின்றன என்பதை போகிறபோக்கில் குறிப்பிட்டாக வேண்டும்)
1917 ஆகஸ்டில், பிரபலமான திரைப்படத்துறையினரை NAMPI அரசாங்க கிளைகளில் நியமித்தது. திரைப்பட நட்சத்திரங்களான மேரி பிக்போர்டு மற்றும் அனிதா ஸ்டீவர்டு இருவரும் பெண்கள் பாதுகாப்பு குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அலோஃப் ஜூகூரும், செல்வாக்குமிக்க மார்கஸ் லொவ்வும் கருவூலத்துறைக்கு அனுப்பப்பட்டார்கள். கண்காட்சி ஏற்பாட்டாளர் Samuel (“Roxy”) Rothapfel மற்றும் மெட்ரோ பிக்சர்ஸின் தலைவர் இருவரும் உள்துறைக்கு (Department of the Interior) அனுப்பப்பட்டார்கள். William Fox, Jesse Lasky, Edwin S. Porter (1903இல் The Great Train Robbery படத்தை இயக்கியவர்) மற்றும் இலஸ்கியின் நட்சத்திரமான Douglas Fairbanks ஆகியோர் அமெரிக்க செஞ்சிலுவையின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை கிளைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டார்கள்.
யுத்தத்தை ஊக்குவிப்பதில் நட்சத்திரங்கள் நேரடியாக காட்சி தருவதும் முக்கியமாக இருந்தது. 1917 டிசம்பரில், கனடாவில் பிறந்தவரான பிக்போர்டு, கடற்படை வீரர்களின் வாத்தியக்குழுவை சந்தைத்தெரு வழியாக இட்டு செல்வதற்காக, "கடற்படை வீரர்களின் உடுப்பைப் போன்றதொரு ஆடை அணிந்து கொண்டு”, சான்பிரான்ஸிற்கோவில் நடந்துவந்த Amarillo of Clothesline Alley படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே சென்றார். 1918 ஜூலையில், லோஸ் ஏஞ்சல்ஸில் Motion Picture War Relief Association ஓர் அணிவகுப்பை நடத்தியது. அதற்கு Fairbacks தலைமை தளபதியாக இருந்து, தேவையான 200 உதவிகளை முன்னெடுத்து சென்றார். சர்வதேச இயக்குனரான லூயிஸ் வெப்பர் (ஜனரஞ்சரீதியில் அப்போது இவர் Griffithக்கு இணையாக இருந்தார்) அந்த அணிவகுப்பின் பெண்கள் பிரிவிற்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான அணிவகுப்பு ஆண்களும், 47 வாத்தியக்குழுவும் இடம்பெற்றிருந்தனர். சுதந்திர யுத்த பத்திரங்களை (Liberty war bonds) விற்க மன்ஹட்டனில் கூடிய கூட்டத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் பிக்போர்டு, சாப்ளின் மற்றும் Fairbacks ஆகியோர் ஒரேமேடையில் உரையாற்றினார்கள். அத்துடன் அதைத்தொடர்ந்து தனித்தனியாகவும் அவர்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். 1918 அக்டோபர் 12 அன்று நியூயோர்க்கில் "சுதந்திர தினத்திற்காக", ஜூகோர் அவருடைய மன்ஹட்டன், போர்ட்லீ, நியூஜெர்ஸி திரைப்பட ஸ்டூடியோக்களிலிருந்து "கவர்ச்சிகரமான பத்திர விற்பனையாளர்களின் நிகழ்வு" என்ற பெயரில் யுத்த பத்திரங்களை விற்பனை செய்ய முக்கிய தெருமுனைகளில் ஒரு நடமாடும் திரையரங்கத்தை ஏற்பாடு செய்தார். [10]
நேரடியான களத்தில் தோன்றியமை ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் யுத்த பத்திரங்களைத் திரைப்படத்துறையைத் வேறெதுவும் அந்தளவிற்கு விளம்பரப்படுத்தவில்லை. “Liberty Loans" என்றழைக்கப்பட்டதைக் கொண்டு செல்வதற்கான பிரச்சார குறும்படங்களைத் தயாரிக்க பிரசித்திபெற்ற ஸ்டூடியோக்களை NAMPI ஏற்பாடு செய்தது. 1917இன் இலையுதிர் காலத்தில் இரண்டாவது Liberty Loan உந்துதலானது, நாடக மற்றும் திரைக்கலைஞர்களையும், முன்னனி நட்சத்திரங்களையும் கொண்ட ஐந்தி திரைப்படங்களால் முன்னுக்குத் தள்ளப்பட்டது. மூன்றாவது Liberty Loan பிரச்சாரத்திற்காக, Swat the kaiser எனும் குறும்படத்தில் Douglas Fairbanks நடித்தார். நான்காவது Liberty Loan பிரச்சாரத்திற்காக, 37 நட்சத்திரங்களுடன் 12 திரைப்பட நிறுவனங்களிடமிருந்து 40 Liberty Loan சிறப்புப்படங்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்ததன் மூலமாக NAMPI தலைவர் ஜூகோர் கருவூலத்துறையைச் சமாதானப்படுத்தினார். மேரி பிக்போர்டு நடித்த 100% American, Fairbanks நடித்த Sic ‘Em, Sam, Mae Murray நடித்த The Taming of the Kaiser Bull, மற்றும் சார்லின் சாப்ளின் நடித்த The Bond ஆகியவை அவற்றில் சில படங்களாகும். நடிகை லில்லியன் கிஷ் (ஜேர்மானியர்களை ஆக்கிரமிப்பு செய்வது போல கனவுகாணும் படம்) மற்றும் நகைச்சுவை நடிகர் Roscoe Arbuckle (பேர்லினில் கெய்சரை எதிர்ப்பது போன்றிருந்த படம்) ஆகியோரிடமிருந்து கடுமையான தோல்வியைத் தழுவியவையும் வெளியாயின. இத்தகைய ஹாலிவுட் பிரசார நடவடிக்கைகளால் போதியளவிற்கு ஈர்க்கப்பட்டிருந்த ஜனாதிபதி வில்சன், வாஷிங்டனில் நடந்த தேசிய பத்திரிக்கையாளர் கழகத்தில் திரைப்படத்துறைக்குப் பாராட்டுகீதம் பாடினார். பல்வேறு Liberty Loan திரைப்படங்கள், அமெரிக்க செனட்டர் சபையின் வளாகத்திலும், அவர்களின் வாழ்க்கை துணைவியருக்கும் மற்றும் செனட் பணியாளர்களுக்கும் காட்டப்பட்டன. [11]
அந்த காலக்கட்டத்தில் அரசியல் திரைப்படங்கள் முழுவீச்சில் தணிக்கை செய்யப்பட்டன. ஜேர்மன்-அமெரிக்க மக்கள் அதிகமிருந்த நகரங்களில், யுத்தத்திற்கு ஆதரவான திரைப்படங்கள் கூட இலக்காக்கப்பட்டன. பிக்போர்டு நடித்த De Milleஇன் The Little American படத்தில் ஜேர்மன் படைவீரர்களைக் குறித்த தவறான ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததற்காக அது ஆரம்பத்தில் சிக்காக்கோவில் தடை செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும், படங்கள் உத்தியோகப்பூர்வ அரசாங்க போக்கிற்கு அடியில் வராத போது தான் பெரும்பாலான தணிக்கை நிகழ்ந்தது. இராணுவ பயிற்சியை அபாயத்திற்குள்ளாக்க கூடிய காட்சிகளைக் கொண்ட சினிமாக்களின் உரிமம் இரத்துசெய்யப்படும் என்று பென்சில்வேனியாவில், அரசு தலைமை நீதிபதி அறுச்சுறுத்தினார். இதேபோன்ற முறைமைகள் நியூயோர்க் அரசினாலும் விவாதிக்கப்பட்டது. சிறியளவில் யுத்த எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருந்த அல்லது யுத்தகள படுகொலைகளின் அதிர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டிருந்த ஒப்புதல்பெற்ற முந்தைய திரைப்படங்களையும் கூட திருப்பிப்பார்க்க செய்ய மேரிலாந்தின் ஆளுநர் அரசு தணிக்கை ஆணையத்தோடு இணைந்து ஏற்பாடு செய்தார். பால்டிமோரின் The Evening Sun செய்தியிதழ், யுத்தம் குறித்த அருவருப்பான யுத்த-எதிர்ப்பு படங்கள் மற்றும் மேலதிகமாக எடுத்துக்காட்டும் படங்கள் ஆகியவற்றிற்கு தடை விதித்த" நடவடிக்கைகளைப் பாராட்டியது. ஒரு முக்கிய செய்தி அறிவிப்பில் அந்த பத்திரிகை, “இப்போதைய நிலையில் அரசாங்கத்திற்குக் குழிபறிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் எவ்வித முயற்சிகளும், திரையில் ஏதோசில பெண்கள் அரைகுறை ஆடையுடன் துள்ளுவதைப் பார்த்து கொண்டிருப்பதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றன,” என்று எழுதும் அளவிற்குச் சென்றது.
1917 ஜூனில் எஸ்பியோனேஜ் சட்டத்தில் (Espionage Act) வில்சன் கையெழுத்திட்டதன் மூலமாக கடுமையான தணிக்கை சூழல் உருவாக்கப்பட்டது. எஸ்பியோனேஜ் சட்டம், யுத்தத்தை விமர்சிக்கும் வகையிலான எவ்வித பேச்சுவடிவத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற நிலைமைகளின்கீழ், பல திரைப்பட பிரபலங்கள் கைது செய்யப்பட்டார்கள். Varietyஇன் கருத்துப்படி, “ஜேர்மானிய இராணுவவாதத்தை உயர்மதிப்புடைய ஒன்றாக எடுத்துக்காட்டிய" “ஜேர்மனுக்கு ஆதரவு காட்டிய" திரைப்படங்களைக் காட்டியமைக்காக பிரெஞ்சு குடிமகனான Frank J. Godsell, அமெரிக்க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். ஜேர்மன் பிரச்சாரத்தைக் குறைத்துக்காட்ட அதன் நிஜமான பதிப்பின் உள்வசனங்களை Godsell மாற்றியிருந்த போதினும் கூட; அவருடைய படம் வாஷிங்டனில் தேசிய பத்திரிக்கையாளர்கள் கழகத்தில் திரையிடப்பட்டிருந்த போதினும், நியூயோர்க்கின் தலைமை நீதிமன்ற அலுவலகம் அந்த படத்தைக் கைப்பற்றியது.
சுயாதீனமான புரட்சிகர யுத்த படமான The Spirit of ’76 தடைசெய்யப்பட்டதே, முதலாம் உலக யுத்தத்தை எடுத்துரைத்த மிகவும் பிரசித்திப்பெறாத ஒரு திரைப்படத்தின் தணிக்கை விஷயமாக இருந்தது. ரோபர்ட் கோல்ட்ஸ்டெயினால் (Griffithஇன் அடிமைமுறைக்கு ஆதரவான வெற்றிப்படமான The Birth of a Nation படத்திற்கு, நிஜமாக முதலீடு செய்தவர் இவர் தான்) தயாரிக்கப்பட்ட அந்த படம், 1917 மே மாதம், எஸ்பியோனேஜ் சட்டம் கையெழுத்தாவதற்கு வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர், சிக்காக்கோ தணிக்கைகளால் ஒடுக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் மையமாக ஆனது. லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படத்தின் மீதான கட்டுப்பாட்டை கோல்ட்வென் மீண்டும் பெற்றார் என்ற போதினும், Spirit of ’76 படம் நீதித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் தயாரிப்பாளர்மீதும் எஸ்பியோனேஜ் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க ஆதரவிலான துடிப்புமிக்க நாட்டுப்பற்று செய்திகளுக்கு இடையிலும், புரட்சிகர யுத்தத்தின் போது இங்கிலாந்தின் விரோத வெளிப்பாடுகளின் காரணமாக, அந்த படம் இங்கிலாந்து யுத்தத்திற்கு ஓர் அச்சுறுத்தலுக்கு நிகராக இருந்தது. மே 1918இல், அதிர்ச்சிகரமாக கோல்ட்வெனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது (ஆனால் இறுதியில் அவர் முன்னதாகவே விடுதலை பெற்றார்).
"ஜேர்மன் ஆதரவிலான" எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்திய தனிநபர்களையும், வியாபாரங்களையும் கவனத்தில் கொண்டிருந்த நிலைமை, வில்சன் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட மனநிலையின் ஒரு பகுதியாகவும், தொகுப்பாகவும் இருந்தது. 1917இன் இறுதியில், Associated Motion Picture Advertisersஇன் ஒரு நிர்வாகி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது ஜேர்மனிக்கு ஆதரவான பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில் திரைப்பட நிறுவனங்களை அதைரியப்படுத்தியது. அரை ஆண்டுக்குப் பின்னர், Fox Film பெருநிறுவனத்தின் ஹங்கேரிய திரைப்பட சீமான் வில்லியம் ஃபாக்ஸ், “100 சதவீதம் அமெரிக்கர்களாக" அல்லாத எந்த ஃபார்க்ஸ் தொழிலாளியும் வேலையை விட்டு நீக்கப்படுவார் என்று அச்சுறுத்தினார். "உண்மையான அமெரிக்கர்களாக இல்லை என்று எவரையும் சந்தேகித்தாலும் கூட அவர்களைக் குறித்து" இரகசியமாக தகவல்களை அளிக்கும்படி கிளை மேலாளர்களுக்குத் குறிப்புகள் அனுப்பப்பட்டிருந்ததாக ஒரு வர்த்தக வட்டாரம் குறிப்பிட்டது. “இந்த தகவல்கள், முழுவதுமாக ஆராயப்படும்; பின்னர் ஃபாக்ஸின் படையில் இருக்கும் யாரேனும், சிறிதளவிற்கு ஜேர்மன் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்பட்டாலும்கூட, அவர் வேலையை விட்டு நீக்கப்படுவார்," என்று திரு. ஃபாக்ஸ் அறிவித்தார். [15]
1940கள் மற்றும் 1950களின் பிற்பகுதியில், HUAC ஹாலிவுட் மீதான பனிப்போரை நடத்திய போது, இடதுசாரி மற்றும் தாராளவாத திரைப்பட தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டு, நீக்கப்பட்டதற்கு நிச்சயாமாக இதுபோன்ற நடவடிக்கைகள் அறிகுறிகளாக இருக்கின்றன.

Henry Ford
அமெரிக்க அரசாங்கம் சினிமா திரைகளில் ஒருவிதமான அரசியல் முரண்பாடுகள் வெளிப்படுவதற்கும் அனுமதித்தது. கடுமையான செமிட்டிக் இன எதிர்ப்பாளரும், தலையிடா கொள்கையாளருமான வாகனத்துறை சீமான் ஹென்றி ஃபோர்டு, யுத்தம் ஏற்படுத்திய சேதங்களுக்காக அதன் விளைவை எதிர்த்தார். அது அவருடைய வியாபார செயல்பாடுகளுக்கு உதவும் என்று அவர் கருதினார் (ஆனால் இவரே பின்னர் அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு தீவிர ஆதரவாளர் ஆனார்). அப்போது வரையில் அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக யுத்தத்தை அறிவித்து வந்தது. அப்போதும் கூட, யூனிவர்சல் ஒளிப்பதிவாளர்களுக்கு ஃபோர்டின் ஐரோப்பாவிற்கான "அமைதி யாத்ரீகர்களில்" உள்ளடங்க சாத்தியமாக தான் இருந்தது. 1916 உதித்த போது, பிரெஞ்சுக்கு சொந்தமான Pathé Exchange, மூன்று ரீல் யுத்த-எதிர்ப்பு படமான The Horrors of War என்பதை வினியோகித்தது. அப்படம் யுத்தத்தில் இலாபமடையும் ஃபோர்டை வெளிப்படையாக குறிப்பிட்டுக் காட்டி இருந்தது. மிகவும் குறுகிய மற்றும் முக்கியத்துவம்மிக்க ஒரு ஆண்டுக்குப் பின்னர், இதுபோன்ற ஒரு படத்தை அரசியல் ஒடுக்குமுறை க்கு அஞ்சி தியேட்டர்களில் காட்டாமல் இருக்க எந்தவொரு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரும் பயப்படவில்லை. யுத்தத்திற்கு ஆதரவான ஸ்டூடியோ-வினியோகித்த நியூஸ் ரீல்களும், அரசாங்க திரைப்படங்களுக்கு மாற்றாக விரைவிலேயே, “யுத்த பயங்கரங்கள்" குறித்த ஆவணப்படங்கள் இடம் பிடித்தன. [16]
இதுபோன்றதொரு மாறுபட்ட சூழலில், Liberty Loan பொதுவெளியீடுகளும், திரைப்படத்தின் வருகையும் சார்ளின் சாப்ளினை அவருடைய Shoulder Arms செய்வதிலிருந்து மனதை மாற்றிவிடவில்லை. இப்படம் 1918இல் போர் முடிவிற்கு வந்த குறுகிய காலத்திற்குப் பின்னர் வெளியானது. அதிகளவில் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டிருந்த "சிவப்பு-எதிர்ப்பு" (“anti-red”) பிரமை நிலவிய சூழலும் கூட, The Answer (1918) என்றழைக்கப்பட்ட சோசலிசத்திற்கான ஓர் அனுதாப படத்தை அளிப்பதிலிருந்து Triangle Film Corp.இன் முடிவை மாற்றிவிடவில்லை. இந்த படம் ரஷ்ய புரட்சி நிகழ்ந்த ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வெளியானது. எவ்வாறிருப்பினும், ஓர் ஆழமான பிற்போக்குத்தன சூழலிலும் விதிவிலக்காக இருந்தவை.
முதலாம் உலக யுத்தத்தின் அழுத்தத்திலிருந்த மக்களை நீண்ட காலத்திற்கு முட்டாள்களாக ஆக்க முடியவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே, யுத்த-ஆதரவு பற்றீடுபாடு பொறிந்தது. பேரழிவுமிக்க யுத்தத்தின் விளைவுகளால் சமஅளவிற்கு கதிகலங்கி போயிருந்த ஹாலிவுட் எழுத்தாளர்களும், இயக்குனர்களும் கலைத்துவ வெறிப்புடன் தங்களின் பிரதிபலிப்பைக் காட்டினார்கள். யுத்தம் முடிந்த வெறும் 27 மாதங்களுக்குப் பின்னர், Rex Ingramஇன் தலைச்சிறந்த ஆழமான படைப்பான he Four Horsemen of the Apocalypse (1921) படத்தை மெட்ரோ பிக்சர்ஸ் வெளியிட்டது. இதுபோன்றதொரு யுத்த-எதிர்ப்பு படம் ஒரு பெறும் வெற்றியைப் பெறக்கூடும் என்பதே அரசாங்கத்தின் 1917-1918 பிரச்சாய இயக்கத்திற்கு எதிரான வெளிப்படையான பின்னடைவுக்கு ஓர் ஆதாரமாக இருக்கிறது. பெருமந்த நிலைமை ஆண்டுகள் முழுவதும் யுத்தம் மீதான விரோதம் தொடர்ந்திருந்தது. மேலும் King Vidor’இன் The Big Parade (MGM 1925) மற்றும் Milestone’இன் All Quiet on the Western Front போன்ற குறிப்பிடத்தக்க யுத்த-எதிர்ப்பு படங்களுடன் ஸ்டூடியோக்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தின.
ஏகாதிபத்திய யுத்தகளத்தின் மீது வெளிப்பட்ட மனிதநேய பிரதிபலிப்பின் மிக சுருக்கமான காலக்கட்டமான இவை அனைத்தும், ஹாலிவுட்டின் அரசியல் தலையங்கத்தின் மிக ஆழமான சுற்றுக்களுக்கு வருந்தத்தக்க வகையில் வழிவிட்டன. இதுபோன்ற தலையங்கத்திற்கு உயர்ந்த விலை கொடுக்க வேண்டி இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகளுக்கு திரைப்படத்துறையின் ஆதரவு, 1917 மற்றும் 1918'இன் போது ஹாலிவுட் செய்த அனைத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. 1945'இல் அந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் ஸ்டூடியோக்களின் ஒத்துழைப்புடன் "கம்யூனிச-எதிரான" துப்புரவாக்கலை நடத்தியன் மூலமாக அதன் நன்றியுணர்ச்சியைக் காட்டியது. இதிலிருந்து தான் அமெரிக்க திரைப்பட தயாரிப்புகள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
திரைப்படம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். ஆனால் அமெரிக்காவில் இருப்பது போல அது தனிநபரின் வர்த்தக நலன்களின் உடைமையாக இந்தளவிற்கு உலகின் வேறெங்கும் இருக்க முடியாது. சமூக நெருக்கடி அபிவிருத்தி அடைந்து தொழிலாளர் வர்க்கம் முன்னுக்கு வருகையில், இந்த நலன்கள் மீண்டுமொருமுறை அவற்றின் சமூக முன்னுரிமைகளுடனும், முறையீடுகளுடனும் மூர்க்கத்தனமான முயற்சியில் ஈடுபடும். இரண்டு உலக யுத்தங்களிலேயும், பெருமந்தநிலையிலும் மற்றும் மாய-வேட்டை சகாப்தத்திலும், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஸ்டூடியோ தலைமைகள் அவற்றின் அர்பணிப்பை எடுத்துக்காட்டி இருந்தன.
அதேநேரத்தில், எண்ணிலடங்கா எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கூட அமெரிக்க சமூகத்தை விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும், அதை எதிர்ப்பதில் அவர்கள் வெல்வார்கள் என்பதும் உண்மை தான். இந்த வரலாறைக் குறித்த அறிவு அவர்களுக்கும் முக்கியமானதாக இருக்கிறது.
Notes:
[1] Zinn, Howard, A People’s History of the United States (Harper & Row, 1980), pp. 355-56. Bentley, Eric, editor, Thirty Years of Treason: Excerpts from Hearings Before the House Committee on Un-American Activities, 1938-1968 (New York: Thunder’s Mouth Press/Nation Books, 1971, 2002), p. 48.
[2] “The War’s Effect on the Movies,” The Billboard (19 December 1914), p. 153.
[3] Bush, W. Stephen, “Motion Picture Men Greet President,” Moving Picture World (12 February 1916), pps. 923+. “First Board of Trade Banquet, Attended by President Wilson, Marks New Era in Industry,” Motion Picture News (12 February 1916), pp. 817-18.
[4] Variety (20 August 1915), p. 17. “Universal Backs Wilson on Neutrality”, Motion Picture News(19 September 1914), p. 57. The Billboard (19 September 1914), p. 46. Moving Picture World (22 July 1916), p. 644. Motion Picture News (12 August 1916), p. 927. Universal advertisement, ibid, pp. 928-29. Moving Picture World (9 September 1916), p. 1629.
[5] Universal advertisement, Moving Picture World (5 May 1917), p. 706. Ibid, p. 810. Universal advertisement, ibid, p. 820. Moving Picture World (3 August 1918), p. 703. “Shot ‘Beast of Berlin,’”Variety (12 April 1918), p. 47.
[6] “Universal Gets Government Contract,” Moving Picture World (15 September 1917), p. 1774. “Universal Puts Out Stirring Training Film,” Moving Picture World (4 May 1918). “Universal to Make Films for Government,” Moving Picture World (22 June 1918), p. 1724. “Universal Appeals to Newspapers,” Moving Picture World (29 June 1918), p. 1850. “Roosevelt Backs Anti-Yellow Dogism,”Moving Picture World (17 August 1918), p. 992. “Jewel’s Anti-Yellow Dog Campaign Is Spreading Fast,” Moving Picture World (24 August 1918), p. 1137. Variety (13 September 1918), p. 49.Variety (20 September 1918), p. 49.
[7] “President Wilson Offered Aid of Film Men,” Motion Picture News (24 February 1917), p. 1197. “President Wilson Calls Upon Film Industry,” Moving Picture World (14 July 1917), p. 217.
[8] “Gov’t to Look at Films,” Variety (4 May 1917), p. 16. “War Work Under Way in Boston,”Moving Picture World (1 September 1917), p. 1350. “Industry in West to Black the Government,”Moving Picture World (15 June 1918), pp. 1549-50.
[9] “Motion Pictures Mobilized for War,” Moving Picture World (11 August 1917), p. 918.
[10] “Mary Pickford Leads Parade,” Moving Picture World (5 January 1918), p. 127.
Variety (16 August 1918), p. 40. “Industry in West to Black the Government,” Moving Picture World (15 June 1918), pp. 1549-50. “Industry to Back Liberty Loan,” Moving Picture World (9 June 1917), p. 1617. “Industry’s Drive Under Full Speed,” Moving Picture World (19 October 1918), p. 352. “Motion Picture Industry Boosting Bond Sale,” Moving Picture World (4 May 1918), pp. 672-74. “Public Responds to Players’ Appeals,” Moving Picture World (18 May 1918), p. 972.
[11] NAMPI advertisement, Variety (12 October 1917), pps. 36-37. “Five Hundred Prints for Liberty Film,” Moving Picture World (13 October 1917), p. 209. “Zukor Committee Announces Plan for Loan Drive,” Moving Picture World (3 August 1918), p. 665. “Liberty Loan Distribution Arranged for Special Films,” Variety (30 August 1918), p. 41. “Synopses of Liberty Loan Specials,” Moving Picture World (5 October 1918), p. 122. “Great Array of Star Films to Boom Liberty Loan Drive,”Variety (20 September 1918), p. 49. “Fifty Stars Contribute to Loan,” Moving Picture World (7 September 1918), p. 1407. “Industry’s Drive Under Full Speed,” Moving Picture World (19 October 1918), pp. 351-52. NAMPI advertisement, Variety (27 September 1918), pp. 44-45.
[12] “That Chicago Censor,” Variety (6 July 1917), p. 17. “Bans All Films That Discourage Enlisting,” Moving Picture World (5 May 1917), p. 832. “Shall Horrors of War in Film be Banned?”Moving Picture World (5 May 1917), p. 834. “Maryland Censors Recall Certain War Films,” Moving Picture World (12 May 1917), p. 997.
[13] “Juggling Propaganda,” Variety (22 March 1918), p. 57.
[14] AFI Catalogue of Motion Pictures Produced in the United States; Feature Films, 1911-1920(Berkeley/Los Angeles/London: University of California Press, 1988), p. 875.
[15] “Pro-German Papers Cut Off,” Variety (2 November 1917), p. 53. “William Fox Will Dismiss Pro-Germans,” Moving Picture World (29 June 1918), p. 1859. “What William Fox Is Doing to Help Win the War,” Moving Picture World (21 September 1918), p. 1745. “How Fox Organized the War Drive,” Moving Picture World (30 November 1918), pp. 923-24.
[16] Moving Picture World (26 February 1916), p. 1273. Pathé advertisement, Moving Picture World(8 January 1916), pps. 192-193, quoting Ford in 3 December 1915 New York Journal. “Patriotism Pervades Hearst-Pathe News,” Moving Picture World (17 April 1917), p. 2921. “Triangle to Distribute ‘Booster’ Picture,” Moving Picture World 27 (October 1917), p. 509.
By Max Alvarez
5 August 2010

Sunday, 27 October 2013

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளும் பழைமைவாதிகளும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படுகின்றனர்

கடந்த வாரம் ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் மூன்றாம் சுற்றுக்குப்பின்,சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் (CDU/CSU) ஒரு பெரும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உடன்பட்டன. CDU இன் உயர்நிர்வாகப்பிரிவு இதை வெள்ளியன்று உறுதி செய்தது. SPDஞாயிறன்று கட்சி மாநாடு ஒன்றை நடத்தியதுஇதில் பெரும்பான்மையானோர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்பேச்சுவார்தைகள் மீண்டும் புதன் அன்று ஆரம்பமாகும்.
அங்கேலா மேர்க்கெல் (CDU), சிக்மார் காப்ரியேல் (SPD) மற்றும் ஹோர்ஸ்ட் ஸீகோவர் (CSU) ஆகிய மூன்று கட்சித் தலைவர்களுடைய கூட்டம்கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இருந்த கடைசித் தடைகளையும் நீக்கியதுஆரம்ப பேச்சுவார்த்தைகளின்போது மத்திய அரசமைப்பு முறையை சீர்திருத்தம் செய்வது பற்றிய பிரச்சினைகள் இருந்தனஅதேபோல் ஜேர்மனியின் மாநிலங்களுக்கு இடையே நிதியச் சமப்படுத்தல் முறை காலாவதியாவது குறித்த பிரச்சினையும் இருந்தது.இறுதியில் இரு குழுக்களும் ஒருமனதாக கூட்டரசு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்த ஒப்புக் கொண்டன.
இதுவரை குறைந்தபட்ச தகவல்கள்தான் பேச்சுவார்தைகளைப் பற்றி வெளிவந்துள்ளது. SPD மாநாடுசெல்வந்தர்களுக்கு வரி அதிகரிப்பிற்கான எவ்விதமான கோரிக்கையும் கைவிடப்பட வேண்டும் என்னும் தீர்மானம் ஒன்றை இயற்றியது. CDU தேர்தலில் பலத்தை பெற்றுள்ளதால் சமூக ஜனநாயகக் கொள்கைகளை செயல்படுத்துவது கடினம் என்றார் காப்ரியேல்இது நிலைமையை மிகவும் கடினமாக்கியுள்ளது என்ற உண்மையை நான் மறைக்கமாட்டேன் என்று SPD தலைவர் சுரங்க,இரசாயன மற்றும் எரிசக்தி துறைகளின் IG BCE தொழிற்சங்க மாநாட்டில் கூறினார்.
SPD இத்தகைய கருத்துக்களை தன் சொந்த சமூக எதிர்ப்பு வேலைத்திட்டத்தை மூடிமறைக்க பயன்படுத்துகிறதுஇதன் தேர்தல் பிரச்சாரக் கோரிக்கைகள் வெற்றுச் சொற்றொடர்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லைஅதன் செயற்பட்டியல் 2010 இன் மூலம் அரசாங்கத்தில் இருந்தபோது சமூகநலன்கள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள்மீது தாக்குதலை நடத்தியபின், SPD இரண்டாம் உலகப் போருக்குப்பின் மிக அதிகமான சமூகநல வெட்டுக்களுக்குப் பொறுப்பாகின்றதுசெய்தி ஊடகத் தகவல்கள்படி, SPD நிதி மற்றும் தொழிலாளர்துறை அமைச்சரகங்களுக்கு தலைமை தாங்கும்.இப்பகுதிகளில் புதிய வெட்டுக்களை நடாத்துவதில் அவை முக்கிய பங்கை வகிக்கும்.
CSU இன் பொதுச் செயலாளர் அலெக்சாந்தர் டொப்ரின்ட் இத்நிலைப்பாட்டை வலியுறுத்தினார்அபிவிருத்திநிதிய உறுதித்தன்மை மற்றும் வேலைகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கப் பணியின் இதயத்தானத்தில் இருக்கும் என்றார் அவர்இப்பெரும் பிரச்சினைகளுக்கு கூட்டணி அரசாங்கத்தில் பொதுத் தீர்வுகளை காணமுடியும் என்ற உணர்வு எங்களிடம் உள்ளதுஇது ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு அலங்காரச் சொற்றொடர் ஆகும்.இந்த வேலைத்திட்டத்தைத்தான் பெரும் கூட்டணி செயல்படுத்தும்.
அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பு இன்படி2016ல் இருந்து மத்திய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்0.35%க்கு மேல் அதன் அப்பொழுதைய வரவு-செலவுத் திட்டத்தில் புதிய கடன்களை வாங்கக் கூடாது. 2020ல் இருந்து மத்திய அரசு மாநிலங்கள் எந்த நிகரக் கடன் வாங்குவதும் தடுக்கப்பட்டுள்ளதுஏற்கனவே பல ஜேர்மனிய மாநிலங்கள் திவால்தன்மையை எதிர்நோக்குகின்றன.
நகரசபைகளும் குறிப்பிடத்தக்க வகையில் சமூகநல வெட்டுக்களால் மத்திய அரச மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனமேலும் அவை வணிக வரிகளின் மீதான வெட்டுக்களினால் வருமானத்தை இழந்துள்ளன. 2007முதல் 2011 வரைநகரசபைக்கடன்கள் 111ல் இருந்து 130 பில்லியன் யூரோக்களாக உயர்ந்தனகிட்டத்தட்ட 48 பில்லியன் யூரோக்கள் இவற்றில் ரொக்க முற்கடன் என அழைக்கப்படுகின்றனஇவை குறுகிய கால நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக வாங்கப்பட்டன.இதனால் குறிப்பிடத்தக்க வகையில் அதிக வட்டிக்கு வாங்கப்பட்டவை.
இந்த இறுக்கமான வரவு-செலவுத் திட்ட நிலைமையில்வங்கி பிணையெடுப்புக்கள் மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் புதிய ஓட்டைகளை உருவாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. 2008, 2009இல் ஜேர்மன் வங்கிகளுக்கு மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்ட 290 பில்லியன் யூரோக்களில் 15%தான் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒரு சமீபத்திய சர்வதேச நாணய நிதிய அறிக்கை கூறுகிறது.
இதைத்தவிர குறைந்தப்பட்சம் 300 முதல் 400 பில்லியன் யூரோக்கள் வரை யூரோ மீட்பிற்கான உத்திரவாதமாக வழங்கப்பட்டதும் விரைவில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியுள்ளதுகடந்த வாரம் பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினின் வேண்டுகோளில்இத்தாலிய அரசாங்கம் ஒரு மிருகத்தனமான வரவு-செலவுத் திட்ட வெட்டிற்கு ஒப்புதல் கொடுத்தது.அது நாட்டில் ஏற்கனவே அனுபவிக்கப்படும் இரண்டு ஆண்டு மந்த நிலையை ஆழப்படுத்தும்கிரேக்கத்தை பொறுத்தவரைவல்லுனர்கள் நீண்டகாலமாகவே ஒரு கடன் சலுகைகளை செய்யவேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர்இதற்கு மற்ற அவசரகாலக் கடன்களும் தேசிய திவாலை தவிர்க்க தேவைப்படும்அது ஜேர்மன் வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் 10 பில்லியன் யூரோக்கள் வரை நேரடியாகப் பாதிக்கும்.
இந்த நிலைமையின் கீழ் ஒரு பெரும் கூட்டணிபில்லியன் கணக்கில் மக்களிடம் இருந்து எடுத்து ஜேர்மனியிலும் கிரேக்கச் சூழ்நிலையைதோற்றுவிக்கும் பணியில் ஈடுபடும்கூட்டணிப் பேச்சுக்களில் முக்கியமான பிரச்சினை எப்படி இச்செயற்பட்டியலை மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்பட முடியும் என்பதுதான்.
இத்திட்டத்தின் மத்திய அச்சு ஒரு குறைந்தப்பட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துவதாக இருக்கும். SPD தன் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு மணிக்கு 8.50 யூரோ குறைந்தப்பட்சம் எனக் கோரியது. CDU நாடுதழுவிய குறைந்தப்பட்ச ஊதியம் என்பதை நிராகரித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் பல ஒன்றியக் கட்சி அரசியல்வாதிகள் (CDU/CSU)ஏற்கனவே இப்பிரச்சினையில் உடன்பாட்டிற்கு அடையாளம் காட்டியுள்ளனர். Süddeutsche Zeitung பத்திரிகையிடம் ஸீஹோவர் தான் SPDபுதிய கடன் வாங்குவதையும்வரி அதிகரிப்பிற்கு வலியுறுத்தவில்லை என்றால்குறைந்தப்பட்ச 8.50 யூரோ ஊதியத்தை ஏற்க இருப்பதாகத் தெரிவித்தார்ஹெஸ்ஸ மாநில பிரதமர் வோக்கர் போஃபியரும் (CDU)குறைந்தப்பட்ச ஊதியத்திற்கு உடன்பட்டுள்ளார்இது தொழிற்துறை மந்திரி ஊர்சுலா வான் டெர் லையெனுக்கும் (CDU) பொருந்தும்அவர் IG BCDமாநாட்டில் நாடு தழுவிய குறைந்தப்பட்ச ஊதியத்திற்கு சாதகமாக பேசினார்.
வியாழன் பேச்சுவார்த்தைகளை அடுத்து காப்ரியேல் பின்வருமாறு கூறினார்நாடுதழுவிய ஒரு குறைந்தப்பட்ச ஊதியமான 8.50 யூரோக்கள் என்பது ஒரு மத்திய பிரச்சினை என்பது ஒன்றிய கட்சிகளுக்கு தெரியும்.இது இல்லாவிடின் SPD இன் பார்வையில் ஒரு கூட்டணி என்பது அர்த்தமற்றது.
இத்தகைய ஒரு குறைந்தப்பட்ச ஊதியம் என்பது ஏற்கனவே குறைந்த ஊதியம் பெறும் பெரும்பாலான தொழிலாளர்களின் வருமானங்களை அதிகரிக்காதுஅவர்களில் பலர் அரசாங்க உதவிகளைத்தான் நம்பியுள்ளனர்தொழில்வழங்கு அமைப்புக்கூட 8.5 யூரோக்களை குறைந்தப்பட்ச ஊதியம் என்றுதான் கருதுகிறது.
எனவேதான் SPD உடைய திட்டங்கள்பெரும்பாலான ஜேர்மன் நிறுவனங்களின் ஆதரவைக் கொண்டுள்ளனகருத்துக்கணிப்பு அமைப்பு போர்சா ஜேர்மனிய நிர்வாகிகளிடையே ஜூலை மாதம் நடாத்திய மதிப்பீடுகளில் 57% நிர்வாகிகள் குறைந்தப்பட்ச சட்டபூர்வ ஊதியத்திற்கு ஆதரவு கொடுத்தனர் என்று காட்டுகிறதுசராசரியாக அவர்கள் 8.88யூரோக்கள் வேண்டும் என வாதிடுகின்றனர்.
வறுமையை ஒழிப்பதற்கு போராடுவது என்பதற்கு முற்றிலும் மாறாக அத்தகைய குறைந்தப்பட்ச ஊதியம் என்பது எதிர்வரவிருக்கும் சமூகத் தாக்குதல்களை செயல்படுத்துவதற்குத்தான் உதவும்அது வழமையான ஊதிய மட்டமாக்கப்பட்டு பொது ஊதியத் தரம் ஒரு மந்தநிலைக்குப் போகும்இது ஒரு பரந்த சமூக வெட்டுக்களை தோற்றுவிக்கும் ஒரு அரசியல் வழிமுறையாகச் செயற்படும்இவ்விதத்தில்இது தொழிற்சங்கங்களுக்கும்இடது கட்சி மற்றும் அதன் போலி இடது ஆதரவாளர்களுக்கும் அவை அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுப்பதை எளிதாக்கும்.
இடது கட்சி ஏற்கனவே அத்தகைய திட்டத்திற்கு அதன் ஆதரவை குறிப்பிட்டுஅது முன்புகோரியபடி ஒரு குறைந்தபட்ச ஊதியமான 10யூரோக்களுக்கு குறைந்த ஒரு அளவிற்கும் வாக்களிக்கும் என்று அறிவித்ததுமேர்க்கெலின் அழைப்போடுகாப்ரியேல் மற்றும் வான் டெர் லையென் தொழிற்சங்க கூட்டத்தில் பங்கு பெற்றனர். IG BCE அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பாக பெரும் கூட்டணிக்கு அமைப்பதற்கான ஆதரவிற்கு சைகை காட்டியுள்ளது.
பசுமைவாதிகளும் இக்கொள்கைக்கு ஆதரவு கொடுக்கத்தயாராக உள்ளனர்.கடந்த வாரம் ஆரம்ப பேச்சுவார்த்தை கூட்டத்தை CDU உடன் முறித்துக் கொண்டபின்அவர்கள் ஒருவேளை CDU-SPD பேச்சுக்கள் தோல்வி அடைந்தால் CDU/CSU-பசுமைக் கட்சிக் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு திறந்து வைக்க விரும்புகின்றர்அடுத்த வார பசுமைக் கட்சி மாநாட்டில் முக்கிய தீர்மானம் இந்த தேர்வை வேண்டுமேன்றே முடிவெடுக்காது திறந்து வைத்திருக்கிறது.
ஆனால் ஒரு பெரும் கூட்டணி ஏற்படவில்லை என்றால்பசுமை வாதிகளும் இடது கட்சியும் விசுவாசமான எதிர்ப்புக் கட்சிகள் என்ற விதத்தில் முக்கிய பங்கை வகிக்கும். SPD, CDU இரண்டும் பாராளுமன்ற கீழ்ப் பிரிவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றாலும் ஹெஸ்ஸ மாநில சட்டமன்றத்தில் பெரும் கூட்டணி என்ற நிலை வந்தால் அவற்றிற்கு மேல் மன்றத்தில் (Bundesrat) பெரும்பான்மை இல்லை. CDU மற்றும் SPD இதன்பின் குறைந்தப்பட்சம் மேல் மன்றத்தில் உள்ள ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவை நம்பியிருக்க வேண்டும்.
By Christoph Dreier 
21 October 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts