Search This Blog

Tuesday, 31 December 2013

2013 முடிவடைய இருக்கின்ற நிலையில், முதலாளித்துவ நிலைமுறிவு தீவிரமடைகிறது

1930'க்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் இந்த மிக ஆழமான நிதியியல் நெருக்கடி ஐந்திற்கும் மேலான ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும்,உலகப் பொருளாதாரத்தில் ஒரு சமயத்தில் எது "வழமையான"பொருளாதார வளர்ச்சியென கருதப்பட்டதோ அதற்கு அருகாமையில் கூட திரும்புவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே இந்த ஆண்டு முடிவடைந்துள்ளதுஒரு மேல் நோக்கிய திருப்பம் எடுப்பதற்கு மாறாக தொடர்ச்சியான வளர்ச்சிக் குறைவுவீழ்ச்சி அடைந்துவரும் முதலீடு,ஒருபோதும் இல்லாத குறைந்த நிஜஊதியம் (real wage) மற்றும் நிலைத்து நிற்கின்ற உயர்ந்த வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் குணாதிசயப்படுத்தப்பட்ட —“நீடித்த மந்தநிலைக்கானஎச்சரிக்கைகளே உயர்ந்துள்ளன.
கடந்த 12 மாதங்களில் ஒரு தொடர் முன்னொருபோதும் இல்லாத பல நாணய நெறிமுறை கொள்கைகள் கொண்டு வரப்பட்டனஅவற்றில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஜப்பான் வங்கி இரண்டினதும் பணத்தை அச்சடித்து "புழக்கத்தில் விடும் திட்டங்கள்" (quantitative easing -QE)மிகவும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளனஅவற்றின் மூலமாக ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பிரதான வங்கிகளுக்கும் நிதியியல் அமைப்புகளுக்கும் தோற்றப்பாட்டளவில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  
பெடரல் மட்டுமே அதன் சொத்து கையிருப்புகளை 2008 நிதியியல் நெருக்கடி தொடங்கிய போது இருந்ததை விட நான்கு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்திஇந்த ஆண்டு 1 ட்ரில்லியன் டாலரை விட அதிகமாக அதன் இருப்புநிலை அறிக்கையை விரிவாக்கி உள்ளதுஉலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரத்தின் நாணய கொள்கைக்கு பொறுப்பான ஜப்பான் வங்கி அந்நாட்டில் பணப் புழக்கத்தை இரட்டிப்பாக்க பொறுப்பேற்று உள்ளது.
இத்தகைய இரண்டு திட்டங்களுமேபொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செய்யப்படுவதாக கூறி நடைமுறைப்படுத்தப்பட்டனஆனால் பிரதான வங்கிகளும் மற்றும் நிதியியல் ஊக வணிகர்களும் மட்டுமே இதனால் ஆதாயமடைந்தவர்கள்இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏனைய வளர்ச்சிகளின் முதல் நான்காண்டுகளுக்கான 4.1 சதவீத சராசரியோடு ஒப்பிட்டால் ஜூன் 2009இல் உத்தியோகபூர்வ மந்தநிலைமை முடிந்ததில் இருந்து அமெரிக்க பொருளாதாரம் வெறும் 2.3 சதவீத சராசரி விகிதத்தோடு வளர்ந்துள்ளதுஅதேவேளையில் பங்குச் சந்தையானது சாதனை உயரத்திற்கு அல்லது அதற்கு அருகாமையை எட்டி உள்ளது.நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் இந்த வளர்ச்சியானது, 2009இல் இருந்து உலகின் உலகளாவிய பில்லியனர்களின் செல்வ வளத்தின் இரட்டிப்பு பெருக்கத்தில் பிரதிபலிக்கின்றது.
பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக நிதியியல் சந்தைகளுக்குள் வெள்ளமென பாய்ச்சப்பட்டு வரும் பணம், 2008 நிதியியல் பொறிவை விட இன்னும் அதிக தீவிரமான மற்றொரு நிதியியல் முறிவிற்கான அடித்தளத்தை அமைத்து வருகின்றதுசான்றாக, 2008இல் 593 பில்லியன் டாலர் மட்டத்தை எட்டிய அபாயகரமான மதிப்பற்றவை ஒதுக்கப்பட்டகடன்களின் அளவு அந்த அளவையும் கடந்துஇந்த ஆண்டு 693பில்லியன் டாலரைபுதிய உயரத்தைஎட்டிவிட்டதாக புளூம்பேர்க் அறிவித்துள்ளது.
2014இல் அமெரிக்க பொருளாதாரம் ஒரு "மேல் நோக்கிய திருப்பத்தை"எட்டுமென கணிப்பவர்கள்சந்தேகத்திற்கு இடமின்றி உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்களும் சமீபத்திய காலத்தில் குறைந்து வருவதாக குறிப்பிடுவர்இத்தகைய கணிப்புகளானவைபெரும்பாலான புதிய வேலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்த கூலி விகிதங்களில் உள்ளன என்ற உண்மையை புறக்கணிக்கின்றன.ஒபாமா நிர்வாகத்தின் 2009மறுகட்டமைப்பு திட்டத்தின் கீழ் வாகனத்துறை ஆலைகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் கூலிகள் பாதியாக குறைக்கப்பட்டமை இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணத்தை காட்டி உள்ளது.மேலும்புள்ளிவிபரங்களில்வேலைசெய்யக்கூடிய மக்கள் அதிகளவு கைவிடப்பட்டதாலேயே சில “வளர்ச்சிஏற்பட்டுள்ளதுகடந்த 3மாதங்களில்அமெரிக்க உழைப்புச்சந்தைக்குள் உள்ளே வந்தவர்களை விட அதிலிருந்து நிறைய பேர் வெளியேறி உள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அபே அரசாங்கம் மற்றும் ஜப்பான் வங்கியால் தொடங்கப்பட்ட "பணத்தைப் புழக்கத்தில் விடும்திட்டம் ஆரம்பத்தில் ஜப்பானிய பொருளாதாரத்திற்கு உந்துதலைக் கொடுத்தது,ஆனால் அந்த விளைவுகள் கழன்று போகத் தொடங்கி உள்ளனஅடுத்த மார்ச்சில் தொடங்கும் நிதிய ஆண்டிற்கான நிஜமான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 சதவீதம் மட்டுமே இருக்குமென கடந்த வாரம் அரசு முன்கணிப்பு குறிப்பிட்டதுஇது நடப்பு ஆண்டிற்கான 2.6 சதவீத மதிப்பீட்டையும் விட குறைவாகும்.
தொடர்ச்சியாக 17 மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வந்த பின்னர்கடந்த மாதம் நிஜஊதியங்களில் வீழ்ச்சி இல்லை என்று அறிவித்த ஓர் அறிக்கை"நல்ல செய்தியாகபார்க்கப்பட்டதுஇது ஜப்பானிய பொருளாதாரத்தின் அடிதளத்தில் இருக்கும் மந்தநிலையின் ஒரு அளவீடாகும்.
நிஜமான பொருளாதார விரிவாக்கத்தின் மைய உந்து சக்தியாக விளங்கும் இலாபங்களின் திரட்சிக்கும் மற்றும் முதலீடு செய்யப்படும் அளவுகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளியானதுஉலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நிலைமுறிவின் அடித்தளத்திலிருக்கும் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.
உலகளாவிய பெருநிறுவனங்கள் ஏறத்தாழ 4 ட்ரில்லியன் டாலர் ரொக்க கையிருப்புகளை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுஅதில் பாதி அமெரிக்காவில் உள்ளது. இது ஏனென்றால் புதிய முதலீட்டினால் இலாபம் பெறக்கூடிய வழிமுறைகள் அங்கே வெகு குறைவாகவே உள்ளன.உற்பத்தியில் நிதியை அதிகரித்து இலாபங்களைப் பெறுவதற்கு மாறாக,நிறுவனங்கள் பங்குபத்திர மதிப்புகளை உயர்த்துவதற்காக பங்குகளை திருப்பி திருப்பி வாங்குவதில்அதிகளவிலான அவற்றின் ரொக்க கையிருப்புகளை பயன்படுத்துகின்றனஇதன் மூலமாக பெரிய பெருநிறுவனங்களில் பிரதான பங்குதாரர்களாக உள்ள தனியார் நிதியங்கள்வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் நிதியியல் இலாபங்களைப் பெறுகின்றனஇது உலகளாவிய வாகனத்துறையில் செய்யப்பட்டதை போலஒரு பிரதான "மறுகட்டமைப்பையும்"உட்கொண்டிருக்கிறதுஅது ஆலைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளை மூடுவதற்கு இட்டு சென்றுள்ளதுஅவற்றில் சில1950'களின் தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வந்தவை ஆகும்.
மறுகட்டமைப்பின்சமூக விளைவுகள் யூரோ மண்டலத்தில் மிக தெளிவாக எடுத்திக்காட்டப்பட்டுள்ளன. அங்கே முதலீடு அளவுகள் 2008க்கு முந்தைய அளவுகளை விட ஏறத்தாழ 30 சதவீதம் குறைந்துள்ளதுவங்கிகளின் ஆணைக்கிணங்க அனைத்து அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிக்கன திட்டங்களின் விளைவோடு சேர்ந்துஇந்த மறுகட்டமைப்பு நடவடிக்கை சமூக பேரழிவைக் கொண்டு வந்துள்ளது.
சிக்கன நிகழ்ச்சிநிரலின் விளைவாக வறுமைபாரிய வேலைவாய்ப்பின்மைசமூக தனிமைப்படல்அதிகளவிலான சமத்துவமின்மை மற்றும் மக்களிடையே கூட்டுஅவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு நீடித்த காலக்கட்டத்திற்குள் ஐரோப்பா மூழ்கி வருவதாக அக்டோபரில் பிரசுரிக்கப்பட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஓர் ஆய்வு குறிப்பிட்டது. “இந்த நெருக்கடியின் நீண்டகால விளைவுகள் இன்னும் மேற்புறத்திற்கு வரவில்லை,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “பொருளாதாரம் மிக நெருக்கமான எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்குத் திரும்பினாலும் கூடஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினைகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும்” என்று அது குறிப்பிட்டது.
உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்த பின்னர்சீனாவும்அத்தோடு ஏனைய "எழுச்சிபெற்றுவரும் சந்தைகளும்பிரதான நாடுகளில் இருந்து பிரிந்து உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்குமென்று கூறப்பட்டது.
அந்த வலியுறுத்தலும் கடந்த 12 மாதங்களில் முற்றிலுமாக மற்றும் மெய்யாகவே சிதைக்கப்பட்டுள்ளதுஉலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கீழ்நோக்கிய அழுத்தத்தை முகங்கொடுத்து வருவதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன அதிகாரிகளால் கூட்டப்பட்ட ஒரு பொருளாதார மாநாடு எச்சரித்ததுமிதமிஞ்சிய உற்பத்திபெரும் கடன்களையும் முகங்கொடுத்திருந்த சீனத் தொழிற்துறைகுறிப்பாக உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வந்தவைநிதியியல் ஸ்திரப்பாட்டை அச்சுறுத்தி வருவதாக அந்த மாநாடு முடிவு செய்தது.  
பெடரலின் QE திட்டத்தில் ஒரு "குறைப்புசெய்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு 2013'இன் மத்தியில் வெளியான பிரதிபலிப்புகள், “எழுச்சியடைந்துவரும் சந்தைகள்இப்போக்கிலிருந்து பிரிந்து இருப்பதற்குப் பதிலாகஅவை பெருமளவில் நிலையற்ற மூலதன அசைவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்பதை அடிகோடிட்டு காட்டினசில முக்கிய நாடுகளைப் பெயரிட்டு காட்டுவதானால்துருக்கி,இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை அமெரிக்க வட்டிவிகித உயர்விற்கு வெளியான பிரதிபலிப்பாக பெரும் நிதிய வெளிப்பாய்ச்சலை அனுபவித்தன. அது மீண்டுமொரு 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடிக்கான ஆபத்துக்களைக் கொண்டு வந்ததுஇந்த முறை அது ஒரு பரந்த மட்டத்தில்ஒட்டுமொத்தமாக உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் ஸ்திரத்தன்மைக்கான நீண்டகால பாதிப்புகளோடு இருந்தது
உலகளாவிய பொருளாதாரத்தில் எவ்வித மீட்சிக்கான சாத்தியக்கூறையும் இல்லாம் செய்துஇந்த போக்குகள் அனைத்தும் 2014இல் ஆழமடைய உள்ளனதொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளுவது மற்றும் இன்னும் கூடுதலாக ஒடுக்குமுறையை செலுத்துவதைத் தவிர ஆளும் வர்க்கத்திடம் இந்த நெருக்கடிக்கு எவ்வித தீர்வும் இல்லைஉலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இந்த சூழ்நிலையைக் கணக்கெடுக்க வேண்டும் மற்றும் நிகழ்ந்துவரும் முதலாளித்துவ நிலைமுறிவை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த அரசியல் முனைவுகளை அபிவிருத்தி செய்யஎதிர்வரும் ஆண்டை பயன்படுத்த வேண்டும்.
மேலதிக வாசிப்புகளுக்கு

பெடரல் தீர்மானம் உலகளாவிய நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை தூண்டிவிடுகிறது

Nick Beams
30 December 2013

Saturday, 21 December 2013

உத்தர பிரதேச அரசாங்கம் முஸ்லீம் கிராமவாசிகளின் பாரிய வெளியேற்றத்திற்கு அனுமதி வழங்குகிறது

மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்து வகுப்புவாதிகளால் தாக்கப்பட்ட மற்றும் அவர்களின் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட பத்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்அவர்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாதபடிக்குஇந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் (SP - சோசலிச கட்சிசட்டவிரோதமாக தடுக்கப்பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களுக்கு ஒருபோதும் திரும்ப முடியாதபடிக்குஉடைமைகளைப் பறிகொடுத்துள்ள அந்த முஸ்லீம்களிடமிருந்து கட்டாய வாக்குறுதிகளைப் பெற சமாஜ்வாதி கட்சி அரசாங்கம்தங்களின் வீடுகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள அந்த மக்களின் இயலாமையைச் சுரண்ட,துன்பியலான விதத்தில் போதுமானதாக இல்லாத ஒரு நஷ்டஈடு பேரத்தைப் பயன்படுத்துகிறதுஇது முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசின் ஆதரவு என்பதல்லாமல் வேறொன்றுமில்லைஇது (அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டுஉத்தர பிரதேசத்தின் முஸ்லீம்கள் இந்து குடியானவர்களுக்கு சமாந்தரமாக உள்ளனர் என்ற போதினும்)அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மற்றும் இன சுத்திகரிப்பு செய்வதற்கான அதன் தீர்மானம் இரண்டு விஷயத்திலுமே வெளிப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்என்று கருதப்படும் ஒரு நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை மதத்தினரின் அங்கத்தவர்களைப் பாதிக்கச் செய்யும் இந்த அப்பட்டமான பிரத்யேகவாத (exclusivist) மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கையைத் தடுக்க இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ (UPA)அல்லது இந்தியாவின் உச்சநீதிமன்றமோ தலையிடவில்லை.
தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்ப தடுக்கப்பட்டுள்ளபெருமளவிலான ஏழைகள்அரசியல் ஆதரவில்லாமல்உள்நாட்டிற்கு உள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டுள்ள அந்த முஜாபர்நகர் முஸ்லீம்கள் இழிவார்ந்த முறையில் வெறும் பலவீனமான பிளாஸ்டிக் கூடாரங்களைக் கொண்ட அகதிகள் முகாம்களில் வாடும் நிலைக்கு விடப்பட்டுள்ளனர்உத்தர பிரதேச மாநில மற்றும் இந்திய அரசாங்கங்களால் கைவிடப்பட்டிருக்கும்ஏறத்தாழ வெறும் உடுத்திய உடையோடு வெளியேறிய இந்த பாதிக்கப்பட்ட கிராமவாசிகள்தன்னார்வ அமைப்புகள் வழங்கும் உதவிகள் மற்றும் சமாஜ்வாதி அரசாங்கத்தால் வழங்கப்படும் அற்பமான அவசரகால உதவிகளில் உயிர்வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்மிகக் குறைந்த உணவு,குடிநீர்மருத்துவ பராமரிப்போடு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லாமல்கடுங்குளிரில் இருத்தப்பட்டுள்ளதால்அந்த நிவாரண முகாம்கள் வியாதிகளை அடைகாக்கும் இடமாக மாறி வருகிறது.முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததால்குறைந்தபட்சம் 50குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலர் படுமோசமான நிலைமையில் உள்ளனர்வேறு வார்த்தைகளில் கூறுவதானால்அந்த அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்குமுஜாபர்நகரில் அவர்களின் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்த அந்த வகுப்புவாத கலவரத்தை விட இன்னும் அதிக மரணகரமாக மாறி உள்ளனஜாட் மஹாபஞ்சாயத்தின் பிற்போக்கு தலைவர்கள்ஜாட் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு ஜாதிய அமைப்புவரலாற்றுரீதியில் நிலவுடைமை கொண்ட ஒரு விவசாய குழுஜாட் சமூகத்தின் இரண்டு இந்து இளைஞர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று யாரை பொறுப்பாக்கினார்களோ அந்த "முஸ்லீம்களைதாக்க ஆக்ரோஷமான குண்டர்களை திரட்டிய போதுசெப்டம்பரின் தொடக்கத்தில் முதன்முதலில் பெரியளவிலான தாக்குதல்கள் நிகழ்ந்தனஇந்த குண்டர்கள் மூர்க்கத்தனமாக வன்முறையில் இறங்கிஎல்லா முஸ்லீம்களையும் அல்லது பெருமளவிலான முஸ்லீம்களை பல கிராமங்களை விட்டு விரட்டி அடித்தனர்குறைந்தபட்சம் 48 பேர் கொல்லப்பட்டனர்அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்அதனோடு பல முஸ்லீம் பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டனர்இத்தகைய தாக்குதல்கள் 50,000த்திற்கும் மேலானவர்களைபெரும்பாலான முஸ்லீம்களைவீடற்றவர்களாக ஆக்கியது.
இந்து மேலாதிக்க அமைப்புகளின்பிஜேபி (பாரதீய ஜனதா கட்சிமற்றும் அதன் "பங்காளிகளானஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்,அல்லது தேசிய தன்னார்வ அமைப்பு), மற்றும் விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில்ஆகியவற்றின்காரியாளர்கள் முஜாபர்நகரின் முஸ்லீம் கிராமவாசிகளுக்கு எதிராக பாரிய வன்முறையைத் தூண்ட உதவியமைக்கான நிறைய ஆதாரங்கள் அங்கே உள்ளனசான்றாகபுது டெல்லியை ஆதாரமாக கொண்ட கொள்கை பகுப்பாய்வு மையம் (Center for Policy Analysis) பிஜேபி மற்றும் அதன் கூட்டாளிகளின் பாத்திரம் குறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளதுஇத்தகைய அமைப்புகள் வகுப்புவாத ஆதிக்கத்தைத் தூண்டிவிடுவதில் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன.
இந்த கொள்கை பகுப்பாய்வு மையமும் மற்றும் ஏனைய நம்பத்தகுந்த ஆதாரங்களும்முஜாபர்நகரில் வகுப்புவாத குழப்பம் வெடித்த போது சமாஜ்வாதி அரசாங்கம் பொலிஸ் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுத்து வைத்தது அதாவது முஸ்லீம்கள் மீது வகுப்புவாத தாக்குதல்கள் தொடர திட்டமிட்டு அனுமதித்தன என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்களையும் வழங்குகின்றன.
முஸ்லீம்கள் அவர்களின் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்னர்அக்டோபர் 28இல்முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசாங்கம் தங்களின் வீடுகளையும்வாழ்வாதாரத்தையும் இழந்தமைக்காக அவர்களுக்கு "நஷ்ட ஈடாகஇடம்பெயர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 500,000 (அண்ணளவாக 8000 அமெரிக்க டாலர்வழங்கும் என்று அறிவித்தது.
அரசாங்க தகவல்களின்படிஇந்த நஷ்டஈடு 1,600 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
எவ்வாறிருந்த போதினும்இந்த சொற்ப தொகையைப் பெறபாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம்கள் தங்களின் கிராமங்களுக்கும்வீடுகளுக்கும் அவர்கள் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.
அந்த உறுதிமொழி பத்திரம் பின்வருமாறு அறிவிக்கிறது: “எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் எங்களின் வீடுகளையும்,கிராமத்தையும் விட்டு வெளியேறி உள்ள நானும் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த சூழ்நிலையிலும் இப்போது முதல் எங்களின் சொந்த கிராமத்திற்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்.”
அவர்களின் கிராமத்தில் உள்ள சொத்துக்களுக்குஅல்லது வேறு ஏதேனும் கூடுதல் நகரா சொத்துக்களுக்குவேறெந்த அரசாங்கம் வழங்கும் மானியங்களுக்காக முன்செல்வதிலும் கையெழுத்திட்டவர்களின் மீது உ.பி.அரசாங்கத்தின் இழப்பீடு நிபந்தனை விதிக்கிறது.
முஜாபர்நகர் முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்குகின்றஉண்மையில்நிர்பந்திக்கின்ற அதேவேளையில்அவர்கள் பெயரில் இருக்கும் எந்தவொரு சொத்தும் அவர்கள் பெயரிலேயே இருக்குமென்றும்அதை விற்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தடையேதுமில்லை என்றும் அரசாங்கம் எரிச்சலூட்டும் விதமாக வாதிடுகிறதுஆனால் இதுபோன்ற நுட்பமான சட்ட குறிப்புகளுக்கு நடைமுறையில் அர்த்தமே இல்லைஅந்த கிராமவாசிகள் தங்களின் கிராமங்களுக்குள் காலடி எடுத்து வைக்கவும் கூட முற்றிலும் அஞ்சுகின்றனர்வியாபார பரிவர்த்தனைகளுக்காக அவர்கள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே வீடுகளுக்குத் திரும்பினால் கூடமாநில அரசாங்கம் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்அதனால் இப்போதைக்கு அவ்வாறு செய்வது ஆபத்தாகும் என்பதால் அரசாங்கம் வழங்கும் சிறிய இழப்பீடு அவர்களைக் கவர்ந்திழுக்கிறது.
ஸ்ராலினிச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்இந்த பிற்போக்குத்தனமானஜாதிய அடிப்படையிலான கட்சியை ஒரு முற்போக்கான அரசியல் சக்தியாக மற்றும் மதசார்பின்மையின் வல்லமை பொருந்திய பாதுகாவலனாக ஊக்குவித்துக் கொண்டுநீண்டகாலமாக சமாஜ்வாதி கட்சியுடன் நெருங்கிய அரசியல் உறவுகளைத் தக்க வைத்துள்ளதுசமாஜ்வாதி கட்சி UPA அரசாங்கத்தை "வெளியிலிருந்து"ஆதரித்து வருகின்ற நிலையில்வாஷிங்டனுடன் காங்கிரஸ் அதன் நெருக்கமான உறவுகளைத் தொடர அது சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியுடன் அதன் கூட்டணியை உடைத்துக் கொண்டபோது,முக்கியமான தருணத்தில் ஜூலை 2008 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அது உயிர்பிழைக்க சமாஜ்வாதி கட்சி அதற்கு அவசியமான வாக்குகளை வழங்கியதுஸ்ராலினிஸ்டுகள் தற்போது அக்கட்சியை ஊக்குவித்து வருகின்றனர்அவர்களின் நம்பிக்கை என்னவென்றால் அடுத்த வசந்தகால பொதுத் தேர்தலில் ஒரு (காங்கிரஸ் மற்றும் பிஜேபி எதிர்ப்புமூன்றாவது முன்னணி கூட்டணியில் SP சேரும் என்பதாகும்இந்த இலக்கை அடைவதற்குஅக்டோபர் 30 “மதசார்பின்மை மாநாட்டில்பங்கெடுக்க சிபிஎம் சமாஜ்வாதி கட்சியை அழைத்திருந்ததுமேலும் முஸ்லீம்களுக்கு எதிரான மத-சுத்திகரிப்பிற்கு அது ஒப்புதல் வழங்கியதன் மீதும் ஒரு குற்றந்தோய்ந்த விதத்தில் மவுனமாக இருந்தது. (பார்க்கவும்: "இந்திய ஸ்ராலினிஸ்டுகள் இந்து-வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டுகின்றனர்)
இதற்கிடையில்சமாஜ்வாதி கட்சியின் மாநில அரசாங்கம் இடம்பெயர்த்தப்பட்ட கிராமவாசிகளை மனித குப்பைகளையும் விட ஒருபடி மேலாக கருதுகின்ற நிலையில்அது அகதிகள் முகாம்களை மூடவும் முயன்று வருகிறதுஇதுவே SP அரசாங்கத்தின் முழு நோக்கமாக உள்ளதென்பதை நிவாரண முகாம்கள் ஒன்றில் ஒரு சுய ஆர்வலரால் கண்டறியப்பட்டதுஅவர் பத்திரிகைக்கு கூறுகையில், “மக்கள் தாசில் அலுவலகத்திற்கு (உள்ளூர் அரசு அலுவலகம்அழைக்கப்பட்டு இந்த காகிதங்களில் கையெழுத்திட செய்யப்படுகின்றனர்அவர்களில் பல பேர் சுமார் ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் (1 மில்லியன் ரூபாய்ஏறத்தாழ 16,000அமெரிக்க டாலர்நிரந்தரமாக இழந்துள்ளனர்ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான தொகையில் கணக்குவழக்கு முடிக்கப்படுகிறது.அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பது நிர்வாகத்திற்கு தர்ம சங்கடமாக இருப்பதால் அது அவர்களை அங்கிருந்து வெளியேற நிர்பந்தித்து வருகிறது.”
முஸ்லீம் அல்லாத குடும்பங்களின் ஒரு சிறிய பிரிவும் அவர்களின் வீடுகளை இழந்திருந்தனர் என்ற உண்மைக்கு இடையில்சமாஜ்வாதி அரசாங்கம் அதன் அசல் அறிக்கையில்அந்த இழப்பீடு "பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்குமட்டுமே என்று குறிப்பிட்டு இருந்தது.
சில ஜாட் குடும்பத்தினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சட்ட புகாரிற்கு விடையிறுப்பாகஇந்தியாவின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 22இல்,மதரீதியில் சம்பந்தப்படுத்தாமல்அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்பட்டஇடம் பெயர்த்தப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் இழப்பீட்டை வழங்க வேண்டுமென்பதை வரையறுத்து அறிக்கையை மீண்டும் வெளியிடுமாறு SP அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
இதற்கு விடையிறுப்பாகசமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் வழக்கறிஞர் முஸ்லீம்களின் வெளியேற்றத்தைஅதாவது "மத சுத்திகரிப்பை"—தானாக முன்வந்து இடம்பெயரும் ஒரு திட்டமாகவும் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலும் ஆதரவும் இருப்பதாகவும் காண்பித்தார்அரசு வழக்கறிஞர் கூறுகையில், “நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட குழுமுஸ்லீம்கள் மட்டுமே வேறு இடத்திற்கு செல்ல விரும்பினார்கள் என்று கருதியது.தற்போது அதுயாரெல்லாம் இடம்பெயர விரும்புகிறார்களோ,அனைவருக்கும் விரிவாக்கப்படும்,” என்றார். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]
வெளிப்பார்வைக்கு இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கும்நீதிமன்றமானதுவகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ்அரசாங்க-நிர்பந்த வெளியேற்றத்திற்கு அது இழப்பீடு வழங்குகிறது என்ற உண்மையை அப்பட்டமாக புறக்கணிக்கிறதுஅது வெறுமனேஇந்த குற்றத்தை தெளிவாக முஸ்லீம்களோடு மட்டுப்படுத்தி விடாமல் ஒரு "மதசார்பற்ற"வேஷத்தை வழங்குவதை உறுதிப்படுத்த விரும்பியது.
By Kranti Kumara
14 December 2013

Friday, 20 December 2013

வங்கிகளுக்கு டாலர் வழங்குவதை பெடரல் திரும்பப் பெறக்கூடிய சாத்தியக்கூறால் உலகளாவிய சந்தைகள் அதிர்கின்றன

புதனன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் செலாவணி கொள்கையை அறிவிக்கின்ற போது, "பணத்தைப் புழக்கத்தில் விடும்திட்டத்தை (QE - Quantitative easing) அது "குறைக்கமுடிவெடுக்குமா என்பதைக் காண அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்செப்டம்பர் 2008இல் உலக நிதியியல் நெருக்கடி வெடித்ததில் இருந்து அந்த திட்டம் தான் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.
இந்த வாரம் QE திட்டத்தின் ஐந்தாவது ஆண்டுநிறைவைக் குறிக்கிறது.பெருமளவில் அமெரிக்க கரூவூல பத்திரங்களை மற்றும் அடமான அடிப்படையில் கடன் பத்திரங்களை வாங்குவதோடு சம்பந்தப்பட்ட அத்திட்டம் தற்போது மாதத்திற்கு 85 பில்லியன் டாலர் அல்லது ஆண்டுக்குட்ரில்லியனோடு ஓடிக் கொண்டிருக்கிறதுஇதனோடு வங்கிகளுக்கு பெடரல் வழங்கும் பணத்திற்கான உத்தியோகபூர்வ வட்டி விகிதத்தின் பூஜ்ஜிய அளவிலான குறைப்பும் சேர்ந்துள்ளது.
யாருடைய குற்றஞ்சார்ந்த நடவடிக்கைகளால் நிதியியல் நெருக்கடி தூண்டிவிடப்பட்டதோ அதே வங்கிகள்ஹெட்ஜ் நிதியங்கள் மற்றும் ஏனைய நிதியியல் பார்வையாளர்களுக்கு எந்தளவிற்கு கையளிப்பு வழங்கப்பட்டதென்பதுகடந்த ஐந்து ஆண்டுகளில் பெடரலின் சொத்து கையிருப்பு விரிவடைந்திருப்பதில் வெளிப்படுகிறது. 2008இல் சுமார் 870பில்லியன் டாலராக இருந்த பெடரல் கையிருப்புவரவிருக்கின்ற சில நாட்களில் ட்ரில்லியன் டாலரை எட்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பங்களும்குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்,அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மைகூலி வெட்டுக்கள் மற்றும் சமூக சேவைகளின் வெட்டுக்களை அனுபவித்துள்ள நிலையில்நிதியியல் ஊக வணிகர்களோ செல்வச் செழிப்பை அனுபவித்துள்ளனர்.
டோச் வங்கி (Deutsche Bank) அதன் சமீபத்திய அறிக்கையில் ஒப்புக் கொண்டதாவது: “அமெரிக்காவிலும் தோற்றப்பாட்டளவில் அனைத்து அபிவிருத்தி அடைந்த சந்தைகளிலும் இதுவரையிலான பொருளாதார மீட்சிகளில் மிகவும் பலவீனமான ஒன்றாக இது இருக்கின்ற போதினும்,எல்லா சொத்துக்களுக்கும் பெடரல் தோற்றப்பாட்டளவில் ஒரு பிரமாண்டமான மதிப்பை உருவாக்கி உள்ளதென்பதைக் நேர்மையாக கூற வேண்டி உள்ளது.”
QE நிகழ்முறையின் மையத்தில் இருக்கும் ஒட்டுண்ணித்தனம் குறிப்பாக ஐரோப்பாவில் வெளிப்படுகிறதுஜேர்மனியைத் தவிரஅங்கே ஒவ்வொரு நாட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007இல் எட்டிய அளவுகளை விட குறைவாக உள்ளதுஐரோப்பாவின் உயர்-ஆதாயஅல்லது "அனாவசிய" (junk), பத்திரங்கள் மொத்தம் 150 சதவீத வருவாய்களை உருவாக்கி உள்ளன.ஒவ்வொரு தனிப்பட்ட ஊக வணிகர்களுக்கும் கிடைத்த நிஜமான வருவாய் கூட இந்த புள்ளிவிபரங்கள் காட்டுவதை விட அதிகமாக உள்ளன,ஏனென்றால் அவர்கள் விலைக்கு வாங்கும் சொத்துக்களின் மதிப்பை அவர்களால் "அதிகரித்து வைக்கமுடிகிறதுஅதாவதுமிக மிக குறைவாக,மலிவாக வாங்கிய பணத்தை அவர்களின் நடவடிக்கைக்கு நிதியாக பயன்படுத்துகின்றன.
அமெரிக்காவில், 2007க்கு முந்தைய போக்கை விட கணிசமான அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்தும் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நீண்டகால வேலைவாய்ப்பின்மையை அனுபவித்தும் வருகின்ற நிலையில், “மீட்சிஎன்ற வாதங்களுக்கு இடையில், 2009 வசந்த காலத்தில் 666 குறியீட்டை எட்டிய ஸ்டாண்டர்ட் புவர்ஸ் 500பங்குச்சந்தை குறியீடு அதற்குப் பின்னரில் இருந்து ஏறத்தாழ அதன் மதிப்பில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
QEஇன் ஒரு விளைவாக நிதியியல் சொத்துக்கள் மதிப்பின் இந்த பெருக்கம்,உலகின் பில்லியனர்கள் அவர்களின் செல்வ வளத்தை கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்க உதவி உள்ளது.
நிதியியல் மூலதனத்திற்கு கணக்கிலடங்கா செல்வ வளத்தை வழங்கிய அதேவேளையில், QE திட்டம் ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் எழுச்சிக்குரிய நிலைமைகளை உருவாக்கி உள்ளதுபணம் பாய்ச்சுவதைக்"குறைப்பதோ" (tapering) அல்லது அமெரிக்க வட்டி விகிதங்களில் அதிகரிப்போ "வளர்ந்துவரும் சந்தைகள்என்றழைக்கப்படுபவைகளுக்கு பணம் பாய்வதைக் குறைக்கும் என்பது பிரதான கவலைகளில் ஒன்றாக உள்ளதுநிறைய நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் கொண்டுள்ள மற்றும் மூலதன வரவால் நிதியைப் பெறுகின்ற பிரேசில்இந்தியாதுருக்கி,இந்தோனேஷியாதென் ஆபிரிக்கா போன்றவை உடனடியான ஆபத்தில் இருக்கும் நாடுகளில் உள்ளன.
இத்தகைய சந்தைகளில் இருந்து வெளியேறுவதற்கான அவசரம் 1997-98இன் ஆசிய நிதிய நெருக்கடியை விட பரந்தளவிலான ஒரு உலகளாவிய நிதியியல் நெருக்கடியை உண்டாக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.அந்த 1997-98 நெருக்கடி தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் மந்தநிலைமை மாதிரியிலான கீழ்நோக்கிய திருப்பத்தை உருவாக்கி இருந்ததுஎன்ன நடக்கக்கூடும் என்பதற்கான ஒரு முன்னோட்டம் தான் கடந்த வசந்த காலத்திலும்கோடையிலும் ஏற்பட்டதுஅப்போது பெடரலின்"பணப்புழக்க குறைப்புமீதான பேச்சுக்கள்அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர இட்டு சென்றதோடுபணத்தை இன்னும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்கான அவசர பாய்ச்சலையும் உருவாக்கியது.
அதுபோன்றவொரு இயக்கம் ஒரு நிதியியல் நெருக்கடிக்குக் களம் அமைத்தால்அது 2008-2009இன் நிதிய உருகுதலை விட இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் போன்றில்லாமல்உலகின் பிரதான மத்திய வங்கிகள்அனைத்திற்கும் மேலாக பெடரல்மிக பலமாக தற்போது நிதியியல் சந்தைகளில் ஈடுபட்டுள்ளனஅவற்றின் கையிருப்புகளில் அவை குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
உலக பொருளாதாரமானது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துவரும் நிதியியல் செல்வ வளம் சுருங்கிவரும் நிஜமான பொருளாதாரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டுஉலக பொருளாதாரத்தை அதிகளவில் ஒரு தலைகீழ் பிரமீடு போன்று மாற்றி வருகிறது.
நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு மாநாட்டிற்கு வழங்கிய ஓர் உரையில்முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் லோரன்ஸ் சம்மர்ஸ்,உலக பொருளாதாரத்தில் "நீடித்த தேக்கநிலை"—அதாவது காலவரையின்றி தேவை பலவீனமாக இருக்கும் மற்றும் வளர்ச்சி குறைவோ அல்லது சுணக்கமோ கொண்ட ஒரு காலகட்டம்ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறு குறித்து எச்சரித்தார்பைனான்சியல் டைம்ஸின் பொருளாதார பிரிவு செய்தியாளர் மார்ட்டீன் வோல்ப் கூறுகையில்சம்மர்ஸின் குறிப்புகள்"நம்பிக்கையான பார்வையோடு யாராவது எஞ்சி இருந்தால் அவர்களையும் நடுங்க செய்தது," என்றார்.
நவம்பர் 25இன் பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், HSBC வங்கியின் தலைமை உலகளாவிய பொருளியல்வாதி ஸ்டீபன் கிங், “வளர்ந்த நாடுகள் முழுவதிலும் பொருளாதார நடவடிக்கையின் அளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாககுறிப்பிட்டார்அவர் தொடர்ந்து எழுதி இருந்தார்: “மந்தநிலைமை மற்றும் மீட்சி போன்ற வார்த்தைகள் இனியும் பொருத்தமாக இருக்காதுமாறாகநாம் நிரந்தர பொருளாதார மந்தநிலைமையை முகங்கொடுத்துள்ளோம்ஜப்பானிய பாணியிலான 'இழந்த தசாப்தத்திற்குள்' (lost decade) மேற்கு அபாயகரமாக நுழைகிறதோ என்று ஆச்சரியப்படுபவர்கள் விஷயங்கள் தெரியாமல் உள்ளனர்ஏற்கனவே நமது பொருளாதாரங்களைத் திணறடித்துக் கொண்டிருக்கும் அந்த இழந்த தசாப்தத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது," என்றார்.
அவர் குறிப்பிட்டார்கூலிகள் மந்தமாக உள்ளனவட்டி விகிதங்கள் அடிமட்டத்திற்கு உள்ளனஅரசு கடன் "நம்ப முடியாத அளவிற்கு பெருகி"உள்ளது மற்றும் உயர்ந்து வருகிறதுஅதேவேளையில் நிறுவனங்கள் முதலீடு செய்வதை விட பணத்தைக் குவித்து வைப்பதையே விரும்புகின்றன. 2008 பொறிவு ஏற்பட்ட போது கொள்கை வகுப்பாளர்கள் ஒருவேளை ஒரு பெருமந்தநிலையை வேண்டுமானால் தவிர்த்திருக்கலாம்,ஆனால் அவர்கள் "பெரும் தேக்கத்தைத்தடுத்திருக்கவில்லை.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் "வழக்கமானநடைமுறையாக ஒருகாலத்தில் எது கருதப்பட்டதோ அந்த நிலைமுறிவுமுதலீட்டு புள்ளிவிபரங்களில் காணக் கிடைக்கிறதுகடந்த காலத்தில்இலாபங்களும் முதலீடுகளும் பரந்தளவில் ஒன்றையொன்று பின்தொடர்ந்தன, 1980களின் இறுதியில் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் சதவீதத்தில் ஓடிக் கொண்டிருந்ததுசொத்து மேலாண்மை நிர்வாகி GMOஆல் வழங்கப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படிஅந்த காலக்கட்டத்தில் இருந்து, 2009க்குப் பின்னர் முதலீட்டிற்கும் இலாபத்திற்கும் இடையிலான உறவுகளில் இருந்த "தாறுமாறான ஓட்டத்தோடுசேர்ந்துஅங்கே அதிகளவிலான மாற்று போக்கு இருந்துள்ளதுஅமெரிக்காவில் வரிக்கு முந்தைய பெருநிறுவன இலாபங்கள் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 12 சதவீதத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றனஆனால் நிகர முதலீடு சதவீதமாக மட்டுமே உள்ளது.
ஏனைய புள்ளிவிபரங்களும் அதேபோன்ற போக்கையே குறிப்பிட்டு காட்டுகின்றனபிரிட்டனில் உள்ள Socialist Economic Bulletin ல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வின்படிஅமெரிக்க பெருநிறுவனங்களின் முதலீட்டிற்கும் மொத்த செயல்பாட்டு உபரிக்குமான விகிதம் (இலாபங்களின் ஒரு பரந்த முறைமை) 2008இல் 56 சதவீதமாக இருந்ததுஅது 1979இல் உச்சபட்சமாக இருந்த 69சதவீதத்தில் இருந்து மிகவும் கீழிறங்கி இருந்தது. 2012இல்அது வெறும் 46சதவீதமாகும். 1979இன் அளவுகளுக்கு அது திரும்ப வேண்டுமானால்,முதலீடு 1.5 ட்ரில்லியன் டாலராகமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.
இதே போக்கை யூரோ பகுதிகளிலும் காண முடிகிறதுஅங்கே மிக சமீபமாக 2008இல் 53.2 சதவீதத்தில் இருந்த முதலீட்டு விகிதம் கடந்த ஆண்டில் வெறும் 47.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதுபிரிட்டனில், 1975இல் அதன் வரலாற்றின் உச்சத்தில் 76 சதவீதமாக இருந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சி அடைந்து, 2008இல் 53 சதவீதமாக இருந்த அந்த விகிதம்தற்போது வெறும் 42.9 சதவீதமாக உள்ளது.
பிரதான பெருநிறுவனங்கள் ஆலைகளை மூடி வருகின்ற நிலையில்,சந்தைகளுக்காக மற்றும் இலாபங்களுக்காக இன்னும் தீவிரமான மோதல்களில் உலகளாவிய "மறுசீரமைப்புசெய்யப்பட்டு வருகின்ற நிலையில்தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் வறுமையே இத்தகைய புள்ளிவிபரங்களுக்குப் பின்னால் இருக்கும் சமூக எதார்த்தமாக உள்ளது.
சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தீர்மானங்களை வரையறுத்து அவற்றின் மீது செயல்பட வேண்டும்உலக முதலாளித்துவ பொருளாதாரம்"மீட்சிபெற போவதில்லைஅது முறிந்து போயுள்ளதுஇந்த இலாப அமைப்புமுறை பில்லியன் கணக்கான மக்களை ஆழமடைந்துவரும் வறுமைக்குள் தள்ளிவிட்டு முன்னொருபோதும் இல்லாத பெரும் ஒட்டுண்ணித்தனத்தின் மற்றும் சீரழிவின் ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளதுவங்கிகள் மற்றும் பிரதான பன்னாட்டு பெருநிறுவனங்களை பறிமுதல் செய்வதில் தொடங்கிஒரு திட்டமிட்ட சர்வதேச சோசலிச பொருளாதாரத்தைக் கொண்டு அது அகற்றப்பட்டுமாற்றீடு செய்யப்பட வேண்டும்.
Nick Beams
17 December 2013

Wednesday, 18 December 2013

மண்டேலாவும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும்

நெல்சன் மண்டேலாவின் மரணம் குறித்து வாரம் முழுவதிலும் பக்கத்திற்குப் பக்கம் செய்திகள் வெளியிட்ட பெருநிறுவனக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் இந்த முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதியின் மறைவை ஒட்டி வெளிவந்திருந்த ஒரேயொரு செய்தியை மட்டும் ஏறக்குறைய ஒட்டுமொத்தமான மவுனத்துடன் கடந்து சென்றிருக்கின்றன.
ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் வார்த்தைகளில் சொல்வதானால், மண்டேலா “தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார், அதில் அவர் மத்திய குழுவில் பணியாற்றியிருக்கிறார்” என்பதை ஒப்புக் கொள்கின்ற சுருக்கமான அறிக்கைகளை ஒரு காலத்தில் அவர் தலைமை தாங்கிய ஆளும் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC) மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஆகிய இரண்டு கட்சிகளுமே வெளியிட்டுள்ளன.
இதில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சற்றுக் கூடுதலாகவே தனது உணர்ச்சிகளைக் காட்டியிருந்தது. அது தனது டிசம்பர் 5 அறிக்கையில் அறிவித்தது: “1962 ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்ட போது நெல்சன் மண்டேலா அப்பொழுது தலைமறைவாக இயங்கிய தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்பதோடு, கட்சியின் மத்திய குழுவிலும் உறுப்பினராக இருந்தார். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட்டுகளாகிய எங்களைப் பொறுத்தவரை தோழர் மண்டேலா நம் விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பங்களிப்பிற்கான அடையாளமாக எப்போதும் இருப்பார். தென்னாபிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுக்களின் பங்களிப்புக்கு இணையாக நம் நாட்டு வரலாற்றில் வெகு சில விடயங்களைத்தான் கூறமுடியும். 1990ல் சிறையில் இருந்து விடுதலையான பின் தோழர் மண்டேலா அவருடைய இறுதி நாட்கள் வரை கம்யூனிஸ்ட்டுக்களின் மிகப்பெரும், நெருக்கமான நண்பராக இருந்தார்.”
மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக  இருந்ததை முதலாவதாக 1964 வழக்கு விசாரணையிலும் – அதன் காரணங்கள் புரிந்து கொள்ளத்தக்கவை -  அதன்பின் நிறவெறி ஆட்சி முடிந்து தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வ அமைப்பான பின்னரும் மறுத்துள்ளார்.
அமெரிக்காவில், பெரும் இணையங்களும், மற்றும் அச்சு ஊடகங்களும் மண்டேலாவை கடவுள்நிலைக்கு உயர்த்திக் காட்டவும் அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு உறுதிபூண்ட தென்னாபிரிக்க அன்னை தெரசாவாக அவரைச் சித்திரிக்கவும் தம்மால் இயன்ற அனைத்தையும் முயற்சிசெய்த நிலையில், அங்கு இந்த தகவல் குறித்த மவுனம் நிலவியது புரிந்து கொள்ளக்கூடியதே.  ஏனென்றால் மண்டேலாவின் உண்மையான அரசியல் குறித்த கவனமான ஆய்வு எதுவொன்றும் இந்தப் பிரச்சார முயற்சிகளை, அதிலும் ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னை மண்டேலாவின் அங்கிக்குள்ளாக பொருத்திக் கொள்ள செய்கின்ற முயற்சிகளை சொல்லவும் தேவையில்லை, சீர்குலைத்து விடும்.
தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் மண்டேலா கொண்டிருந்த உறவை தங்கள் சொந்த பிற்போக்குத்தன நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முனைந்த வலதுசாரி வருணனையாளர்களும் மற்றும் வலைத்தளங்களும், அத்துடன் நியூயோர்க் டைம்ஸ் சண்டே வீக் பத்திரிகையின் திறனாய்வுப் பகுதியில் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரான பில் கெல்லர் எழுதி வெளிவந்திருக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான பத்தியும் மட்டுமே இதற்கு விதிவிலக்குகளாக இருந்தன. அதற்கு பின்னர் வருவோம்.  
உண்மையில் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்கும் மற்றும் ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள உறவை ஆராய்வதென்பது தென்னாபிரிக்க வரலாற்றைப் புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமல்லாமல் நிறப்பிரிவினைக்கு  எதிரான போராட்டத்தின் கதியையும் மற்றும் இன்று தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படை அரசியல் சவால்களையும்  புரிந்து கொள்வதிலும் கூட தவிர்க்க முடியாதது ஆகும்.
மண்டேலாவின் அரசியல் மரபியத்தையோ அல்லது இன்றைய தென்னாபிரிக்காவில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பரந்த காட்சியையோ  தென்னாபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் மீது ஸ்ராலினிசம் சுமத்திய பாரிய ஊறுபாட்டிற்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது.
மண்டேலா எப்படி ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசிற்கும் தலைமை தாங்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும் பணியாற்றியிருக்க  முடியும் என்பதற்கான விடை ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சி கருத்தியலில்  காணத்தக்கது ஆகும். சோவியத் ஒன்றியத்தின் முதல் வெற்றிகரமான தொழிலாளர் புரட்சி அதிகாரத்துவ சீரழிவிற்கு ஆட்பட்டிருந்த நிலையிலும் மற்றும், இறுதியில் அப்புரட்சிக்குத் தலைமை கொடுத்திருந்த கிட்டத்தட்ட அனைத்து காரியாளர்களுமே உருரீதியாக அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் உருவாகியிருந்த அழுத்தத்தின் கீழ்  கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்பட்ட மற்றும் காலனித்துவநாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது “இரண்டு கட்டப் புரட்சித் தத்துவத்தை” திணித்தது.
இக்கோட்பாடு 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சி அடித்தளமாகக் கொண்டிருந்த முன்னோக்கின் வெளிப்படையான மறுதலிப்பாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மற்றும் காலனித்துவ நாடுகளின் தொழிலாள வர்க்கம் ரஷ்யத் தொழிலாளர்கள் அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதைப் பின்பற்றி விஞ்ச முடியாது என்றும், மாறாக முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்கு பின்னர் வரைக்குமாய் சோசலிசப் புரட்சி காலவரையின்றி தள்ளிப்போடப்படுகின்ற நிலையில், அதுவரை அது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை ஆதரிக்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளது என்றும் இக்கோட்பாடு கூறியது.
1905 புரட்சிக்குப்பின் ட்ரொட்ஸ்கியால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு  1917 அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்பின்போது லெனினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை ஸ்ராலினிசம் கடுமையாக எதிர்த்தது. ஒரு சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளின்  தலைமையை வென்றெடுப்பதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தில் இருந்து அரசியல்  சுயாதீனம் பெறுவதை இந்த மார்க்சிச வேலைத்திட்டம் வலியுறுத்தியது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தென்னாப்பிரிக்கா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளில் வெகுஜன மக்கள் முகம் கொடுக்கும் ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகள் சோசலிசப் புரட்சியின் மூலமாகவும் ஒரு தொழிலாளர்’ அரசு ஸ்தாபிக்கப்படுவதன் மூலமாகவும் அத்துடன் அந்தப் புரட்சி சர்வதேச அளவில் பரவுவதன் மூலமாகவும் மட்டுமே எட்டப்பட முடியும் என்று அது ஸ்தாபித்தது.
1935ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் உள்ள ஆதரவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரொட்ஸ்கி அந்நாட்டிற்கு இம்முன்னோக்கு எத்தனை முக்கியமானது என்பதை விளக்கியதோடு, புரட்சி ஒரு “கறுப்புக் குடியரசை” தோற்றுவித்தாக வேண்டும், அப்போதுதான் “ தேசியப் பிரச்சினைகளை பாட்டாளி வர்க்க கட்சி தன் சொந்த வழிமுறைகளில் தீர்க்க முடியும், தீர்த்தாக வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“[ஆபிரிக்க தேசிய] காங்கிரஸ் அதன் மூடத்தனமான நல்லிணக்கக் கொள்கையின் காரணத்தால், அதன் சொந்தக் கோரிக்கைகளைக் கூட பூர்த்தி செய்வதற்கு இலாயக்கற்று இருப்பதை நாட்டின் சொந்த வெகுஜன மக்களிடையே போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் தோலுரித்துக் காட்ட வேண்டும். காங்கிரசுக்கு நேரெதிரான தனித்துவப்பட்ட வகையில், ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கான வேலைத்திட்டத்தை போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்கிற முன்னோக்கை அவர் முன்வைத்தார்.
இதற்கு முற்றிலும் நேரெதிர் போக்கைக் கடைப்பிடித்த தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ANC ஐ ஒரு புரட்சிகரக் கட்சியாக விளம்பரப்படுத்தியதோடு 1955 சுதந்திர சாசனம் [Freedom Charter of 1955] என்கிற அதன் வேலைத்திட்டத்தையும் கூட வரைவு செய்து தந்தது.  இந்த சீர்திருத்தவாத ஆவணம் “பல-இனப் பார்வை” என்ற பெயரில் முதலாளித்துவ சொத்துடமை உறவுகளையும், முதலாளித்துவ அரசின் அடிப்படை ஸ்தாபனங்களையும் பாதுகாத்தது.
மண்டேலாவும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கித் திரும்பினர் என்றால் அதன் காரணம் SACP இன் வேலைத்திட்டம் முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து பிரித்தறிய முடியாததாக இருந்தது என்பதும், தொழிலாள வர்க்கத்தை ஆபிரிக்க தேசிய காங்கிரசின் வேலைத்திட்டத்திற்கு  அடிபணியச்செய்வதற்கும் இயக்கத்திற்கு வரம்புபட்ட ஆதரவை அளித்த மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு அனுகூலமாகச் செயல்படுவதற்கும் ஒரு பயனுள்ள சாதனத்தை SACP வழங்கியது என்பதுமே ஆகும்.
மண்டேலா சிறையில் இருந்து விடுவிக்கப்படவும் நிறப்பிரிவினை உத்தியோகப்பூர்வமாக முடிவிற்கு கொண்டுவரப்படுவதற்கும் இட்டுச் சென்ற தென்னாபிரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மிக வலதுசாரி சமரச நிலைப்பாட்டை ஏற்றது. அதன் தலைவர் ஜோ ஸ்லோவோ “சூரிய அஸ்தமன ஷரத்துகளை” ஏற்க அழுத்தம் கொடுத்தார். இந்த ஷரத்துகள் நிறப்பிரிவினை ஆட்சியின் தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் -  அத்துடன் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு துணை ஜனாதிபதிப் பதவியும் – அளிக்க உத்தரவாதம் அளித்ததுடன் சுரங்கங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதையும் தடைசெய்தன.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் “தேசிய ஜனநாயகப் புரட்சி” எனச் சித்தரித்த இக்கொள்கையின் விளைவுகள் தெளிவாகி இருக்கின்றன. இன்று தென்னாபிரிக்கா உலகில் மிக சமூக சமத்துவமற்ற நாடாக இருக்கிறது. தேசிய வருமானத்தில் 60% மேல்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினருக்குச் செல்கிறது. அதேநேரத்தில் கீழிருக்கும் 50% வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கறுப்பினத்தவருக்கு பொருளாதார வல்லமை அளித்தல் (Black Economic Empowerment) போன்ற திட்டங்கள் முன்னாள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுக்கள், அத்துடன்  அரசியல் தொடர்புடைய கறுப்பின வணிகர்கள் ஆகியோர் கொண்டதொரு அடுக்கினை  மில்லியனர்களாக மாற்றியிருக்கின்றன. இந்த அடுக்கினை ஆகச்சிறந்த வகையில் பிரதிநிதித்துவம் செய்பவர் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிரில் ரமபோசா ஆவார். பன்னாட்டு சுரங்க நிறுவனங்களுக்கு மலிவு உழைப்பை ஒப்பந்த முறையில் அளிப்பது உள்ளிட்டவற்றில் இருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் சொத்தை இவர் சேர்த்துள்ளார்.
தற்போதைய தென்னாபிரிக்க அரசாங்கம் சுமார் இரு தசாப்தங்களாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட “முக்கட்சி கூட்டணி”யாகவே உத்தியோகப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சங்கக் கூட்டமைப்பும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு போலிஸ் படைபோன்றும் அரசாங்கம் மற்றும் பெருநிறுவன நிர்வாகப் பதவிகளுக்கு கூறுகளைத் தயார் செய்யும் வழியாகவும் செயல்படுகின்றன.
இந்த பாத்திரமானது சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மரிக்கானாவில் 34 லோன்மின் பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு SACP அளித்த பதிலிறுப்பில் மிகவும் கண்கூடாய் வெளிப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஆளுமைகள் வேலைநிறுத்தம் செய்த சுரங்கத் தொழிலாளர்களை “எதிர்ப்புரட்சியினர்” என்று கண்டித்து, போலிஸ் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தனர்.
“இது ஒரு படுகொலை அல்ல. இது ஒரு யுத்தம்” என்று தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியான டொமினிக் ட்வீடி தெரிவித்ததாக கூறப்பட்டது. “பொலிசார் தமது ஆயுதங்களை உரிய முறையில் சரியாகவே பயன்படுத்தியுள்ளனர். அதற்காகத்தான் அவர்களுக்கு அந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களால் சுடப்பட்டது தொழிலாளர்களாக எனக்குத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். பொலிசார் பாராட்டப்பட வேண்டும்.” என்றார்.
தொழிலாள வர்க்கம் சுரங்க நிறுவனங்களுக்கும் அவற்றின் முதலாளித்துவ உரிமையாளர்களுக்கும் எதிராக மட்டுமன்றி இந்த நலனகளைப் பாதுகாத்து நிற்கும் ANC மற்றும் தொழிற்சங்க எந்திரத்துக்கு எதிராகவும் கூட மோதலுக்கு வந்து கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், இத்தகைய நச்சுத்தனமான தாக்குதல்கள் ANC ஐயும் மற்றும் SACP மற்றும் COSATU இல் இருக்கும் அதன் கூட்டாளிகளையும் பீடித்திருக்கும் நெருக்கடியின் ஒரு அளவுகோலாக அமைந்திருக்கின்றன.
தனக்குள் நிதியை சுருட்டிக்கொள்ளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உருவகமாய்த் திகழ்பவரும் ஏராளமான ஊழல் மோசடிகளில் சம்பந்தப்படுத்தப்படுபவருமான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகப் சூமா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உணர்ச்சிப்பூர்வ ஆதரவுடன் பதவிக்கு வந்தவராவார். அக்கட்சி இவரை “மக்களின் மனிதர்” எனச் சித்தரிக்க முயன்றது.
ஊழல் ஜனாதிபதிக்கான முக்கிய ஆதரவுத் தளமாக கட்சி தொடர்ந்து சேவை செய்து வருவது செவ்வாயன்று ஜோகன்னஸ்பேர்க்கில் நடந்த பாரிய மண்டேலா நினைவஞ்சலி கூட்டத்திற்குப்பின் தெளிவாயிற்று. அங்கு கூட்டத்தில் கணிசமான பிரிவினர் சூமாவை பலமுறை கூக்குரலிட்டு நகையாடினர்.
நிகழ்விற்கு மறுநாள் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டதொரு அறிக்கை முந்தைய சகாப்தத்தின் ஸ்ராலினிச ஆட்சிகளது மொழியை எதிரொலித்தது. கூட்டத்தில் எழுந்த நகையாடலை “எதிர்ப்புரட்சிகரமானது” என்று கண்டித்த அந்த அறிக்கை  “இந்த இழிந்த நடத்தைக்குப் பின்னால் யார் இருக்கக் கூடும் என்பது குறித்த எந்தத் தகவல் கிடைத்தாலும் அதைக் கட்சியிடம் அளிக்கும்படியும்” அத்துடன் “இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் ஆட்டுவிப்பாளர்கள் யார் என்பது குறித்த தகவல் நமக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும்படியும்” தனது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு தெளிவு. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு எதிராய் முதலாளித்துவ ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆட்சி மற்றும் முதலாளித்துவத்தின் பாதுகாவலராக அது இருக்கிறது. பெரும்பாலும் பெருவணிகச் செய்தி ஊடகங்கள் இந்த இழிந்த உறவை ஆராய எந்த விருப்பமும் காட்டவில்லை என்கிற அதேநேரத்தில், டைம்ஸின் கெல்லர், மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த செய்தி குறித்த, அதாவது “பதிவுகளின் செய்தித்தாளது” செய்திப் பக்கங்களில் கூட இடம் பிடிக்காத ஒரு செய்தி குறித்த, ஒரு சிடுமூஞ்சித்தனமானதும் பிற்போக்குத்தனமானதுமான பகுப்பாய்வை வழங்கினார்.     
டைம்ஸிற்கு “கோர்பச்ஷேவின் ரஷ்யா, உருமாற்றமடையும் தென்னாபிரிக்கா”  இரண்டில் இருந்தும் செய்தி வழங்கியது குறித்து சுட்டிக்காட்டும் கெல்லர் முற்றிலும் கம்யூனிச விரோதியும் அமெரிக்கப் பெருநிறுவன நலன்களின் பாதுகாவலரும் ஆவார்.. ஆயினும்கூட அவர் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு பற்றிப் புகழ்கிறார்.
மண்டேலாவின் “நடைமுறைவாதம்” தான் அவர் SACP உடன் கூட்டணி வைத்ததன் காரணம் என்று கூறும் கெல்லர், அதேநேரத்தில் மண்டேலாவின் “பல-இனப் பார்வை”யை வளர்த்தெடுத்ததற்காவும் 1992 இல் நிறப்பிரிவினை ஆட்சியுடன் ஒரு இடைமருவல் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் “தேசியமயமாக்குபவர்களையும் பழி தீர்ப்பவர்களையும்” எதிர்த்ததற்காகவும் SACP க்கு அவர் பெருமை சூடுகிறார்.   
ஆயினும் “பெரும் அடிமட்ட வர்க்கத்தின் வாழ்க்கைகளை மேம்படுத்துவது, ஊழலை வேரறுப்பது மற்றும் அடங்க மறுக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவது ஆகிய விடயங்களில் தென்னாப்பிரிக்கா ஏன் பெரும் முன்னேற்றம் காண முடியவில்லை என்பதை SACP-ANC கூட்டணி விளக்குகிறது” என்றும் கெல்லர் சேர்த்துக் கொள்கிறார். “விடுதலை இயக்கத்தில் இருந்து அரசாங்கத்தை விடுங்கள், அரசியல் கட்சியாக மாறுவதையும் கூட” ANC நிறைவு செய்யத் தவறி விட்டது என்பது அவர் தரும் விளக்கம். ”சதிமுறை போற்றுதல், தமக்கு எதிரான கருத்தை ஏற்காமை, வழிமுறைகளைத் தாண்டி முடிவுகளையே மதிப்பிடுவது” போன்றவற்றில் விடுதலை இயக்கங்களின் :”கலாச்சாரத்தை”யே அது பராமரித்ததாகவும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். 
நிறப்பிரிவினை ஆட்சியின் கீழ் நிலவிய முதலாளித்துவ சுரண்டல் உறவுகளையும் மற்றும் செல்வத்தின் ஏகபோகத்தையும் ANC அரசாங்கம் இருந்தபடியே விட்டுவிட்டதால் தான் வறுமைப்பட்ட பரந்த மக்களின் நிலைமைகளை அடிப்படையாக முன்னேற்றுவதில் அது தோற்றது என்பது தான் ஒரு எளிமையான விளக்கமாக இருக்க முடியும். அரசியல் தொடர்பு கொண்ட கறுப்பினத்தவரின் ஒரு சிறிய அடுக்கினை மட்டும் செல்வந்தர்களாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாக, நாட்டின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுடனான அதன் ஒட்டுமொத்த உறவுமே ஊழலடைந்ததாக இருந்ததால் தான் அதனால் ”ஊழலை ஒழிக்க முடியவில்லை”.
மேலும் கெல்லர் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுக்கும் விவரிப்பை அப்படியே அமெரிக்காவின் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் ஒருவர் பொருத்திப் பார்க்க முடியும் தானே. பொய்களை அடிப்படையாகக் கொண்டு போர்களை நடத்துவதற்கு – இப்பொய்களை இந்த முன்னாள் டைம்ஸ் ஆசிரியர் தொடர்ந்து பாதுகாத்துப் பேசிவந்திருக்கிறார் – அவை சதி செய்திருக்கின்றன; அதிருப்தியை நோக்கிய அவற்றின் மனப்போக்கு எட்வார்ட் ஸ்னோவ்டென், ஜூலியன் அசான்ஞ் மற்றும் பிராட்லி மானிங் தண்டிக்கப்பட்ட விதத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.
இறுதியாக கெல்லர், ஸ்ராலினிசம் “வீழ்ச்சியடைந்து” மண்டேலாவிற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கும் மிகப் பெரிய சேவையைச் செய்தளித்துள்ளது என்னும் கருத்தையும் முன்வைத்திருக்கிறார். சோவியத் தொகுப்பின் முடிவானது தென்னாபிரிக்காவின் நிறப்பிரிவினை ஆட்சியாளர்களை “இனியும் பனிப் போரின் சரியான பக்கத்திற்கு அவசியமான கூட்டாளிகள் எனக் காட்டிக் கொள்ள முடியாதபடி செய்து விட்டிருந்தது. ஆட்டம் முடிந்து விட்டிருந்தது” என்று அவர் உறுதிபடத் தெரிவிக்கிறார்.
இது வரலாற்றை திட்டமிட்டுத் திரிக்கும் செயல் ஆகும். நிறப்பிரிவினையை உத்தியோகப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருகின்ற அதேநேரத்தில் முதலாளித்துவ நலன்களைக் பாதுகாக்கின்றதாக இருக்கும் ஒரு அரசியலமைப்பு உடன்பாட்டிற்கு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தைகள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வெகு முன்னரே தொடங்கி விட்டன. 1985ல் ஆங்கில-அமெரிக்க சுரங்கப் பெருமுதலாளி காவின் றெல்லி ஒலிவர் டாம்போ மற்றும் பிற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் பேச வெள்ளை தென்னாபிரிக்க வணிகத் தலைவர்களை சாம்பியாவில் உள்ள லூசாகாவிற்கு வழிநடத்திச் சென்றிருந்தார்.
“விளையாட்டு முடிந்துவிட்டது” என்பதை நிறப்பிரிவினை முதலாளித்துவத்தின் தலைவர்கள்  அறிந்திருந்தனர்; ஏனெனில் கறுப்பினத்தவரின் நகரங்களில் ANC இல் இருந்து சுயாதீனப்பட்டு முன்கண்டிராத புரட்சிகர எழுச்சி எழுந்திருந்ததை அவர்கள் எதிர்கொண்டனர். நாடு முழுவதும் அவசரநிலையைத் திணிக்கும்  கட்டாயத்திற்கு ஆட்சி உள்ளாகியிருந்தது. இந்த எழுச்சியைத் தணித்து தங்கள் சொத்துக்கள் மற்றும் செல்வத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு உடன்பாட்டை நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மிகவும் விரக்தியுடன் எதிர்நோக்கி நின்றது.   
கெல்லர் எழுதுகின்ற ஒவ்வொன்றையும் போலவே அவரது ஆய்வும் அமெரிக்க அரசாங்கத்தின் நலன்களுக்கு அளவெடுத்துத் தைத்தது போல் எழுதப்பட்டிருக்கிறது. நிறப்பிரிவினைக்கு அமெரிக்கா பல தசாப்தங்களாக ஆதரவு கொடுத்து வந்திருந்ததை நியாயப்படுத்த ”பனிப் போரின் சரியான பக்கத்திற்கு அவசியமான கூட்டாளிகளாக” தென்னாபிரிக்க ஆட்சியாளர்கள் சேவை செய்தனர் என்று இந்த ஆய்வு காரணம் கற்பிக்கிறது.
ExxonMobil, General Motors, IBM, Hewlett-Packard, Bank of America, General Electric, BP, Citigroup, Goodyear, United Technologies, Ford போன்ற பெருநிறுவனங்கள் அனைத்தும் தென்னாபிரிக்காவில் விரிவான செயற்பாடுகளைக் கொண்டிருந்ததோடு நிறப்பிரிவினையின்கீழ் கறுப்பின தொழிலாளிகளை சுரண்டிப் பெரும் இலாபங்களைக் குவித்தன. 1985 இல் அமெரிக்கா தென்னாபிரிக்காவின் மிகப் பெரும் வணிகக் கூட்டாளியாகவும் அதன் இரண்டாவது  மிகப்பெரிய அந்நிய முதலீட்டாளராகவும் ஆகியிருந்தது, கிட்டத்தட்ட தென்னாபிரிக்க எண்ணெய்த் துறையில் பாதியையும், கணினித் துறையில் 75 சதவீதத்தையும், வாகனத் தயாரிப்புத் தொழிலில் 23 சதவீதத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் பனிப்போர் அரசியலால் செலுத்தப்பட்டவை அல்ல, மாறாக முதலாளித்துவ இலாப நலன்களினால் செலுத்தப்பட்டவை ஆகும்.  
நிறப்பிரிவினையின் கீழ் வெடித்த புரட்சிகரப் போராட்டங்களை கருக்கலைப்பதில் ஸ்ராலினிசமும் ANCயும் ஆற்றிய பாத்திரத்தில் இருந்து தென்னாபிரிக்கத் தொழிலாளர்கள் கடுமையான படிப்பினைகளைத் தேற்றம் செய்து கொள்வது அவசியமாக இருக்கிறது என்பதையே மண்டேலாவின் மரணமும் அதனையடுத்து ஊடகங்கள் மேற்கொண்ட அரசியல் புனைகதைகள் மற்றும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களின் பிரச்சாரமும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தப் படிப்பினைகளின் மீதும் உண்மையான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் சோசலிசத்தை எட்டுவதற்கான போராட்டத்தை நடத்தி முடிப்பதற்கான ஒரு சர்வதேசிய மற்றும் சோசலிச முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டும் ஒரு புதிய புரட்சிகரத் தலைமை கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தென்னாபிரிக்கப்  பிரிவு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதாகும்.
By Bill Van Auken 
12 December 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts