Search This Blog

Friday, 29 November 2013

ஜனாதிபதி ஜோன் பெட்ஜிரால்ட் கென்னடியின் படுகொலையில் இருந்து ஓர் அரை-நூற்றாண்டு

இன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்நவம்பர் 22, 1963 அன்று அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியான ஜோன் பெட்ஜிரால்ட் கென்னடி,டெக்சாஸ் டல்லாஸில் உள்ள டெலே பிளாசா வழியாக அவரது மோட்டார் வாகனத்தில் பவனி வந்து கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.அமெரிக்க வரலாற்றைக் குறித்த ஏனைய பல தேய்ந்த சொல்வழக்குகள் போலில்லாமல்உண்மையாகவே ஓரளவு அரசியல்ரீதியான நனவைப் பெற போதுமான வயதில் இருந்திருக்கக் கூடிய எவரொருவருமே,அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் "டல்லாஸில் ஜனாதிபதி பவனியில் மூன்று குண்டுகள் சுடப்பட்டனஎன்ற செய்தி காட்டப்பட்ட போது அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதை ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்வெள்ளிக்கிழமை மதிய நேர அந்த அதிர்ச்சிகர சம்பவமும் அதை தொடர்ந்த நாட்களும்ஓர் அரை-நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட,எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களின் நனவில் தெளிவாகத் தங்கி உள்ளது.  
இந்த நினைவாண்டில் எழும் முதல் கேள்வி என்னவென்றால் ஓர் அரை-நூற்றாண்டு கடந்த பின்னரும் கூட அமெரிக்க மக்களின் நனவில் ஜோன் எப்.கென்னடியின் மரணம் ஏன் இந்தளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பது தான்அவர் படுகொலை செய்யப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி அல்லர்,நான்காவது அமெரிக்க ஜனாதிபதி ஆவார்ஏப்ரல் 1865இல் ஆப்ரகாம் லிங்கனின் படுகொலைஅண்ணளவாக அந்த சம்பவம் நடந்து150ஆண்டுகளுக்குப் பின்னரும்அமெரிக்க வரலாற்றில் மிக துயரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாகதேசிய நனவில் நிச்சயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது தான்ஆனால் அதைப் புரிந்து கொள்வது  கடினமல்லஅனைத்திற்கும் மேலாகலிங்கன் அமெரிக்காவின் தலைச்சிறந்த ஜனாதிபதியாக இருந்தார்அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஓர் உள்நாட்டு யுத்தத்திற்குள் அமெரிக்காவை இட்டுச் சென்ற அவர் உலக வரலாற்றில் சரியானரீதியில் அன்புக்குரிய தலைவராக விளங்குகிறார்.அந்நாட்டின் வரலாற்றில் லிங்களின் இடம் ஈடிணையற்றதுமேலும் அவரது படுகொலை அமெரிக்க அனுபவத்தின் ஒரு அத்தியாவசியமான தருணமாகத் திகழ்கிறது.   
படுகொலையின் பிடியில் இறந்த அடுத்த இரண்டு ஜனாதிபதிகள்—1881இல் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் 1901இல் வில்லியம் மெக்கின்லிஅவர்கள் காலத்தில் நினைவுகூரப்பட்டு விரைவிலேயே நினைவிலிருந்து மறைந்து போனார்கள். 1931இல் கார்பீல்ட்டின் படுகொலையின் மீதோ அல்லது 1951இல் மெக்கின்லி குறித்தோ நிச்சயமாக அங்கே எந்த முக்கிய நினைவுகூட்டங்களும் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லைஅப்படியானால்,கென்னடியின் படுகொலை மட்டும் தேசிய நனவிலிருந்து ஏன் மங்காமல் இருக்கிறதுஒரு வெளிப்படையான காரணம் என்னவென்றால் கென்னடியின் மரணம் தொலைக்காட்சி சகாப்தத்தில் நடந்ததுஅந்த படுகொலையே ஒளிப்படமாக பதிவாகி இருந்ததுஅந்த படுகொலையை செய்த கொலையாளிலீ ஹார்வே ஓஸ்வால்டு தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக காட்டப்பட்டார்மற்றும் அந்த ஜனாதிபதியின் இறுதி மரியாதை நிகழ்ச்சியைத் ஏறக்குறைய ஒட்டுமொத்த தேசமும் பார்த்ததுஒளிப்பதிவு செய்யப்பட்ட அந்த படங்கள்ஏறத்தாழ வரவிருக்கும் எல்லா காலத்திற்கும் அந்த நவம்பர் 1963 சம்பவங்களை எடுத்துக்காட்ட பங்களிப்பு செய்கின்றன.     
எவ்வாறிருந்த போதினும்கென்னடியின் மரணம் நீடித்த அரசியல் அதிர்வுகள் கொண்டிருப்பதற்கு கூடுதலான முக்கியக் காரணங்களும் உள்ளனமிகவும் வெளிப்படையானது என்னவென்றால் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையர் வாரன் அறிக்கையில் காட்டப்பட்ட படுகொலைக்கான உத்தியோகப்பூர்வ கருத்தைஅதாவதுஜனாதிபதியின் படுகொலை ஒரு துப்பாக்கி ஏந்திய தனிமனிதனின்லீ ஹார்வே ஓஸ்வால்டின்தனிப்பட்ட நடவடிக்கை என்பதையும்லீ ஒரு பரந்த அரசியல் சதியின் பாகமாக இருக்கவில்லை என்பதையும் ஒருபோதும் ஏற்கவில்லை.
"சதிக் கருத்தாக்கவாதிகள்" (conspiracy theorists) என்றரீதியில் வாரன் அறிக்கையின் மீதான விமர்சனங்களை மதிப்பிழக்க செய்ய ஊடகங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கு இடையிலும்அமெரிக்க மக்கள் அந்த விடயத்தின் மீது அவர்களின் தீர்ப்பை வழங்கி உள்ளனர்வாரன் அறிக்கைஏறத்தாழ 1964இல் அது பிரசுரிக்கப்பட்ட நாளில் இருந்தேஓர் அரசியல் மூடிமறைப்பாக பார்க்கப்பட்டுள்ளதுநிச்சயமாக அது அவ்வாறு தான் இருந்ததுசரியானரீதியில் சந்தேகம் கொண்டிருந்த மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தஜனாதிபதி லிண்டன் ஜோன்சனால் அந்த அறிக்கைக்கு கமிஷன் நியமிக்கப்பட்டு இருந்ததுஆனால் அவரது அரசியல் விசுவாசிகளிடம்கென்னடி ஒரு அரசியல் சதிக்கு பலியானார் என்பதை தாம் நம்புவதாக அவர் தெரிவித்திருந்தார்
வாரன் கமிஷனின் அந்த அறிக்கை படுகொலைக்குள் எந்தவித ஆழ்ந்த புலனாய்வையும் நடத்தவில்லை. Bay of Pigs அவமானத்திற்குப் பின்னர் கென்னடியால் நீக்கப்பட்டிருந்த முன்னாள் சிஐஏ இயக்குனர் ஆலன் துல்லஸ் மற்றும் துல்லஸின் ஒரு பழைய நண்பரும்இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவு கொள்கையை வழிநடத்திய "புத்திசாலிகளில்"மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரம் மிக்கவருமான ஜோன் ஜெ.மெக்கிளாய் போன்ற அரசு இரகசியங்களைக் காப்பாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அந்த கமிஷனில் உள்ளடங்கி இருந்தனர்துப்பாக்கி ஏந்திய ஒரு தனிமனிதனின் செயல் என்ற தத்துவத்தைச் சந்தேகித்த வாரன் கமிஷன் உறுப்பினர்களைஅவர்களின் எதிர்கருத்துக்களை அவர்களோடே வைத்திருக்கவும்லீ ஹார்வே ஓஸ்வால்டு மட்டுமே ஜனாதிபதியின் படுகொலையில் செயல்பட்டார் என்ற ஒருமனதான தீர்வோடு இணைந்து செல்லவும் அவர்களை இணங்குவிப்பதில் மெக்கிளாய் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.        
கமிஷன் உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹேல் போக்ஸ் (Hale Boggs) - பின்னாளில் சபையின் பெரும்பான்மை தலைவராக இவர் ஆகவிருந்தார் - இழிவார்ந்த ஒரே துப்பாக்கி குண்டு" (single bullet)தத்துவத்தை சந்தேகித்ததை பின்னர் ஒப்புக் கொண்டார். (அந்த தத்துவம் ஒரே குண்டு கென்னடி மற்றும் டெக்சாஸ் கவர்னர் ஜோன் கொன்னோல் இருவரையும் துளைத்ததாக வலியுறுத்தியது). போக்ஸ் அக்டோபர் 1972இல் அலாஸ்காவில்வெளிப்படையாக அவரது தனியார் விமானம் மோதிய விபத்தில் மரணமடைந்தார்அவரது உடலோ அல்லது விமானமோ இரண்டுமே இதுவரையில் மீட்கப்படவில்லை.
வாரன் கமிஷனின் பாதுகாவலர்கள் பல தசாப்தங்களாக "சதிக் கருத்தாக்கம்" (conspiracy theory) என்ற பதத்தைஓர் அமெரிக்க ஜனாதிபதியின் படுகொலைக்கான அரசியல் சூழலைக் காட்டும் அனைத்து ஆதாரங்களையும்,வாதங்களையும் மதிப்பிழக்க செய்ய ஒரு அடைமொழியாக பயன்படுத்தி உள்ளனர்அதைக்காட்டிலும்அந்த படுகொலை ஓர் மடத்தனமான,அர்த்தமற்றஅமெரிக்க சமூக மற்றும் அரசியல் நிலைமைகளோடு தொடர்பற்ற மற்றும் சம்பந்தமற்ற ஒரு சம்பவமாக பார்க்கப்பட்டு வந்தது.எந்த சூழலிலும் அந்த ஜனாதிபதியின் படுகொலைஅரசிற்குள் இருந்த முரண்பாடு மற்றும் நெருக்கடியின் இரத்தந்தோய்ந்த விளைபொருளாக,அமெரிக்க அரசின் தீய மற்றும் அழுகிய ஒரு விடயமாக பார்க்கப்படவில்லைஅது தான் அந்த உத்தியோகப்பூர்வ மூடிமறைப்பின் நோக்கமாக இருந்தது.  
அமெரிக்கா பல இருண்ட இரகசியங்களைக் கொண்ட ஒரு நாடாக உள்ளது.கென்னடியை யார் கொன்றார்கள் என்பது ஒருவேளை அமெரிக்க மக்களுக்கு ஒருபோதும் தெரியாமலே கூட போகலாம்ஆனால் அவர் மரணத்தின் ஆழமான காரணங்களை விளக்க முடியும்அமெரிக்காவின் துஷ்டமான உள்முக சமூக முரண்பாடுகளுக்கும் உலகின் பிரதான ஏகாதிபத்திய சக்தியாக இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய அதன் தீயதும் பிற்போக்குத்தனமானதுமான பாத்திரத்திற்கும் இடையிலான தொடர்புகளால் ஏற்பட்ட எதிர்பார்த்திராத வெடிப்பார்ந்த விளைவுகளோடு கென்னடியின் படுகொலை திடீரென்றுஒரு பயங்கரமான கணத்தில்அமெரிக்கர்களை எதிர்கொண்டது.   
ஜோன் எஃப்கென்னடி 1961 ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார்இரண்டாம் உலக யுத்தம் முடிந்து வெறும் 16 ஆண்டுகளே ஆகி இருந்தன. 1945 ஆகஸ்டில்ட்ரூமேன் நிர்வாகம்சோவியத் ஒன்றியத்துடன் வரவிருந்த போராட்டத்தை எதிர்நோக்கிஅமெரிக்காவின் எல்லையற்ற ஆற்றலை மற்றும் அசுரத்தனத்தைக் காட்டஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுகளை வீச இரத்தத்தை உறைய வைக்கும் முடிவை எடுத்ததுஅந்த அணுகுண்டு இராணுவ தேவையாக இருந்ததைவிட ஓர் அரசியல் கருவியாக இருந்தது.
அமெரிக்க வரலாற்றாளர் கேப்ரியல் ஜேக்சன் பின்னர் பின்வருமாறு எழுதினார்1945 ஆகஸ்டின் குறிப்பிட்ட சூழலில்மனநலரீதியில் ஆரோக்கியமான மற்றும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி ஓர் ஆயுதத்தை நாஜி சர்வாதிகாரி பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தக் கூடும் என்பதை அந்த அணுகுண்டு வீச்சு எடுத்துக்காட்டியதுஇவ்விதத்தில்அமெரிக்காபல்வேறு விதமான அரசாங்கங்களின் நடத்தையில் உள்ள அறநெறி வேறுபாடுகள் குறித்து சிந்திப்பவர்களைப் பொறுத்த வரையில்பாசிசத்திற்கும்ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை மங்கச் செய்தது." [Civilization and Barbarity in 20th-Century Europe (New York: Humanity Books, 1999), pp. 176-77]
அமெரிக்கா அந்த யுத்தத்திலிருந்து உலகின் முதலாளித்துவ ஆதிக்க சக்தியாக எழுச்சியுற்றதுஅந்த யுத்தத்தால் பிரிட்டன் திவாலாகி போனது,மேலும் அதன் முந்தைய ஏகாதிபத்திய பெருமைகளில் இருந்தான அதன் நெடிய மற்றும் அவமானகரமான பின்னடைவுதடுக்க முடியாததாகவும் இடைவிடாததாகவும் இருந்ததுபிரெஞ்சு முதலாளித்துவம் தனது சாம்ராஜ்யத்தை விடாது பிடித்துக் கொண்டிருக்கச் செய்த முயற்சி - முதலில் வியட்நாமிலும்சில காலத்திற்குப் பின்னர் அல்ஜீரியாவிலும் - பேரழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருந்ததுஅமெரிக்க ஆளும் வர்க்கம் தனது சரியான தருணம் வந்துவிட்டதாக நம்பியதுஎல்லையற்ற தொழில்துறை சக்திபுதிய சர்வதேச செலாவணி அமைப்புமுறையில் டாலரின் மேலாதிக்கப் பாத்திரம்மற்றும் அணுகுண்டைக் கொண்டிருக்கும் ஒரே உடைமையாளர் என்கிற நிலை ஆகியவை சேர்ந்து வரவிருக்கும் தசாப்தங்களில் உலகின் அதன் மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் வழங்குமென்று அது நம்பியது.கர்வத் துடிப்போடுஅது 1900களை "அமெரிக்காவின் நூற்றாண்டுஎன்றும் கூட பெயரிட்டது
ஆனால் கென்னடி பதவியேற்ற காலத்தில்யுத்தத்திற்குப் பிந்தைய வரலாற்றின் பாதை அமெரிக்க ஆளும் மேற்தட்டின் பிரமைகள்,தன்னம்பிக்கை இரண்டிற்கும் குழிபறித்து விட்டிருந்ததுமுந்தைய 15ஆண்டுகளில் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியின் அலை சீராக அதிகரித்துச் சென்றிருந்ததுசீனப் புரட்சிசியாங் கெய்-ஷேக்கின் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி வீசியிருந்ததுசீன அரசாங்கத்தைஏன் சோவியத் அரசாங்கத்தையும் கூட அமெரிக்கா இராணுவரீதியாக "திரும்பக் கொண்டு வர முடியும்என்ற ஜெனரல் மெக்ஆர்தராலும் மற்றும் பெண்டகன் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளது பித்தர்களாலும் தூபமிடப்பட்ட கனவுகள் எல்லாம் கொரிய யுத்தத்தின் பேரழிவோடு நொறுங்கிப் போனதுஆனால் "திரும்பக் கொண்டு வருதல்என்பதிலிருந்து "கட்டுப்படுத்தி வைத்தல்என்பதற்கு மாறியதானது அமெரிக்க ஏகாதிபத்தியதின் அடிப்படை எதிர்ப்புரட்சி முனைப்பை மாற்றி விடவில்லை.       
சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுடன் ஓர் இராணுவ மோதல் நெருங்கி வந்து கொண்டிருந்த நிலையில்கம்யூனிச-விரோத "கட்டுப்படுத்தி வைக்கும்"மூலோபாயமானதுவெறுக்கப்பட்ட அமெரிக்க-ஆதரவு கைப்பாவை ஆட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் நோக்கில் ஜனநாயக விரோத ஒடுக்குமுறை மற்றும் எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகளின் ஒரு முடிவில்லா தொடர்ச்சியில் அமெரிக்காவை ஈடுபடுத்தியதுஉலகில் எந்தவொரு அன்னிய அரசும்,சோசலிச அனுதாபங்கள் கூட வேண்டாம்ஏகாதிபத்திய எதிர்ப்பு அனுதாபங்களை விதைப்பதாக அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டால் கூட அந்நாடு ஸ்திரம் குலைக்கப்படுவதற்கு தகுதி உடையதாக ஆனது மற்றும் அதன் தலைவர்கள் படுகொலை இலக்கிற்கு ஆளானார்கள்.     
1947இல் ட்ரூமேன் நிர்வாகத்தால் ஸ்தாபிக்கப்பட்ட மத்திய உளவுத்துறை முகமை 1950களில் ஐசன்ஹோவரின் கீழ் அதன் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுஅந்த தசாப்தம் அமெரிக்கத் தூண்டுதலில் நடந்த ஆட்சிகவிழ்ப்புகளின்மிக கீழ்த்தரமாக குவாடிமாலா மற்றும் ஈரானில் நடந்தனமற்றும் அமெரிக்காவின் உலகளாவிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட அரசுகளுக்கு எதிரான முடிவில்லா சூழ்ச்சிகளின் தசாப்தமாக இருந்ததுசக்திவாய்ந்த பெருநிறுவன நலன்கள்ஒரு பாரிய இராணுவ அமைப்புமுறைமற்றும் உயர் இரகசிய உளவுத்துறை முகமைகளின் ஒரு கூட்டணியை அடித்தளமாகக் கொண்ட "தேசியப் பாதுகாப்பு அரசுஎன்று அழைக்கப்பட்டதான ஒன்று அமெரிக்காவிற்கு உள்ளே ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்களுக்கு இணக்கமற்ற பரிமாணங்களை ஏற்றதுஜனாதிபதி ஐசன்ஹோவர் பதவிலிருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்எந்த அரக்கனின் வளர்ச்சிக்கு அவர் துணைபோனாரோ அதே அரக்கனைக் கண்டு மிரட்சி கண்டிருந்தார்தொலைக்காட்சியில் "பிரிவு உரை" (Farewell Address)நிகழ்த்தினார்அதில் அவர் "இராணுவ-தொழில்துறை கூட்டுறவின்வளர்ச்சி அமெரிக்க ஜனநாயகத்தின் உயிர்வாழ்விற்கு ஓர் தீவிரமான ஆபத்தை முன்னிறுத்துவதாக அமெரிக்க மக்களை எச்சரித்தார்.
1961 ஜனவரி 20 அன்றான தனது பதவியேற்பு உரையில்கென்னடி ஓர் உறுதியான தீர்மானமான தொனியைக் காட்ட முயன்றார்மிக ஆரவாரமான அந்த உரையில்அவர் "ஒளிதீபம் அமெரிக்கர்களின் புதிய தலைமுறையிடம் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் அமெரிக்காவின் உலகளாவிய நலன்களைத் தூக்கிப் பிடிக்க "எந்த விலையையும் கொடுக்கஎவ்வித சுமையையும் தாங்க,எந்த கடினத்தையும் எதிர்கொள்ளஎந்தவொரு நண்பரையும் ஆதரிக்க,மற்றும் எந்தவொரு எதிரியையும் எதிர்க்கவிரும்புவார்கள் என்று அறிவித்தார்எவ்வாறிருந்த போதினும்அந்த முழு வாய்ஜால முழக்கத்தைப் பொறுத்த வரையில்கென்னடியின் உரை ஆளும் மேற்தட்டு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு வெளிப்பாட்டைக் கொடுத்ததுஒரு வெளிப்படையான கூற்றில்அவர்அமெரிக்காவால் "பல ஏழைகளுக்கு உதவ முடியாது என்றால்சில பணக்காரர்களையும் அதனால் காப்பாற்ற முடியாது,"என்று எச்சரித்தார்.
அமெரிக்காவின் ஜனநாயக வேடங்களை - அது ஏற்கனவே மெக்கார்தி சகாப்தத்தின் ஒடுக்குமுறையினாலும் மற்றும் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் அடிப்படை குடியுரிமைகள் மீது நடந்துவந்த காட்டுமிராண்டித்தன நிராகரிப்புகளாலும் உலகின் பார்வையில் மிக மோசமாக மதிப்பிழந்து போயிருந்தது – அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவிர்க்கவியலாத அவசியங்களாக தனது வாய்ஜாலத்தின் மூலம் நல்லிணக்கப்படுத்துவதற்கான முயற்சியாகவே கென்னடியின் உரை இருந்ததுஅதுபோன்ற வாய்ஜம்ப நடைமுறைகள் தான் கென்னடி நிர்வாகத்தின் பொது முகத்தை வரையறுப்பதாக அமையவிருந்தன.
ஆனால் இந்த மேற்தளத்திற்கு அடியில் ஓர் அவலட்சணமான எதார்த்தம் நிலவியதுபதவியேற்று மூன்றுக்கும் குறைந்த மாதங்களில்கென்னடிCIAஆல் உருவாக்கப்பட்ட ஒரு கேஸ்ட்ரோ எதிர்ப்பு இராணுவத்தைக் கொண்டு கியூபாவில் ஓர் எதிர்புரட்சிகர ஊடுருவலைத் தொடங்குவதற்கு இறுதி ஒப்புதலை வழங்கினார்ஆக்கிரமிப்பாளர்கள் கியூபாவில் தரையிறங்கியதும் விடுதலை வீரர்களாக வரவேற்கப்படுவார்கள் என்ற உத்தரவாதங்களை புதிய ஜனாதிபதி பெற்றார்அதுபோன்றவொரு சுதந்திரப் போராட்ட எழுச்சி  எதுவும் அங்கில்லை என்பது CIAக்கு தெரியும்ஆனால் தாக்குதல் தொடங்கியதும் கென்னடிஅமெரிக்க ஆதரவுடனான ஒரு நடவடிக்கையின் தோல்வியைத் தவிர்க்க அமெரிக்க துருப்புகளை உறுதியளிக்க நிர்ப்பந்திக்கப்படுவார் என்று அது ஊகித்ததுஆனால் கென்னடிபேர்லினில் சோவியத்தின் பதிலடி குறித்து அஞ்சிகாஸ்ட்ரோ விரோத கூலிப்படைகளை ஆதரிப்பதில் தலையீடு செய்ய மறுத்தார்அந்த ஊடுருவல் 72 மணி நேரத்திற்கும் குறைந்த காலத்தில் தோற்கடிக்கப்பட்டதோடு, 1,000த்திற்கும் மேற்பட்ட கூலிப்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர்இந்த"காட்டிக்கொடுப்புக்காகசிஐஏ கென்னடியை ஒருபோதும் மன்னிக்கவில்லை.
கென்னடி ஒருவேளை Bay of Pigs பெருநாசத்தால் மாறி இருக்கலாம் என்ற போதினும்சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்ட பொய் உத்தரவாதங்கள் மீது அவர் கோபம் கொண்டிருந்த விடயம் ஒரு இரகசியம் அல்ல—1961 ஏப்ரல்  தோல்வியானது எதிர்க்கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு கென்னடி ஏற்றிருந்த பொறுப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடவில்லைபடுகொலை சூழ்ச்சிகள் மீதுகுறிப்பாக கேஸ்ட்ரோவிற்கு எதிராகஅவருக்கிருந்தமற்றும் அவரது சகோதரர் ரோபர்ட்டின்ஆர்வம் போதியளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதுமுடிவாகஇத்தகைய சூழ்ச்சிகளுக்கு மாஃபியா கும்பல்களை நியமிக்க அவசியம் ஏற்பட்டதுஅது கென்னடி நிர்வாகத்தை கிரிமினல் நிழலுலகத்துடன் சுய-அழிவுகரமான தொடர்புகளுக்குள் இழுத்து சென்றது.
1960களின் இறுதியில் வெடிக்க இருந்த சமூக பதட்டங்கள்,அமெரிக்காவிற்குள்ஏற்கனவே கென்னடியின் நிர்வாகத்தின் போது வெளிப்படையாக இருந்தனஆப்ரிக்க-அமெரிக்கர்கள் தமது குடியுரிமைகளை உபயோகிப்பதன் மீது கொண்டிருந்த தீர்மானகரமான உறுதி மாநில அரசுகளால்உச்சநீதிமன்றத்தின் 1954 Brown vs. Board கல்வித்துறை தீர்ப்பை மீறிய வகையில்வன்முறை கொண்டு எதிர்கொள்ளப்பட்டனமேலும்அரசு மற்றும் ஊடகங்களின் இடைவிடாத கம்யூனிச-எதிர்ப்பு பிரச்சாரங்கள் இருந்தபோதினும்அவற்றிற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நேசத்தோடு உடந்தையாய் இருந்தபோதினும்தொழிலாள வர்க்கம் வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக நலன்களில் முக்கிய முன்னேற்றங்களைப் பெற அழுத்தம் அளிப்பதைத் தொடர்ந்தனபுதிய உடன்பாடு சீர்திருத்தவாத மரபின் ஒரு பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொண்ட கென்னடி முன்னெடுத்த ஒரு சட்ட நிரல்அவரது படுகொலைக்குப் பின்னர்மருத்துவ பராமரிப்பு திட்டத்தை(Medicare) ஸ்தாபித்த சட்டம் நிறைவேற இட்டுச் சென்றது.
அவரது பதவிகாலத்தின் இறுதி ஆண்டில்முக்கிய சர்வதேச கொள்கை பிரச்சினைகள் மீது ஆளும் வர்க்கத்திற்குள் இருந்த அரசியல் பிளவுகள் மிகவும் ஆழமடைந்திருந்தன. 1962 அக்டோபர் ஏவுகணை நெருக்கடியில் கியூபா ஊடுருவலைத் தவிர்க்க கென்னடி எடுத்த முடிவுஇராணுவ இணை தளபதிகளால் எதிர்க்கப்பட்டதுஅமெரிக்காவையும் சோவியத் ஒன்றியத்தையும் அணுசக்தி யுத்தத்தின் விளிம்பில் கொண்டு வந்த அந்த அபாயகரமான நெருக்கடி தீர்ந்ததைத் தொடர்ந்துகென்னடி அணுசக்தி சோதனைத் தடை உடன்படிக்கை நிறைவேற்றப்பட முன்னெடுப்புகளை மேற்கொண்டு அது நிறைவேற்றப் பெற்றார்
இத்தகைய நடவடிக்கைகள் கென்னடி ஒரு பனிப்போர் நிகழ்ச்சிநிரலை கைவிட்டிருந்தார் என்பதைக் குறிக்கவில்லைஉண்மையில்அவரது பதவிக்காலத்தின் கடைசி மூன்று மாதங்கள் வியட்நாமில் ஆழமடைந்துவந்த நெருக்கடியால் சிந்தனை ஆக்கிரமிக்கப்பட்டதாக இருந்ததுகென்னடி உயிரோடு இருந்திருந்தால் வியட்நாமில் என்ன போக்கை தேர்ந்தெடுத்திருப்பார் என்று தீர்மானிப்பது சாத்தியமில்லை என்றாலும்அவர் அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற ஆதரித்திருப்பார் என்ற வாதங்களுக்கு ஆதரவாக வரலாற்று பதிவேடு இல்லைகென்னடி தென் வியட்நாமிய ஜனாதிபதி தியம் (Diem) ஐத் தூக்கியெறிய ஒப்புதல் வழங்கினார்அது பின்னர்1963 நவம்பர் 1 இல் தியமின் படுகொலையில் போய் முடிந்ததுதேசிய விடுதலை முன்னணிக்கு எதிராக தியமை விட திறமையோடு ஒரு யுத்தத்தைத் தொடுக்கும் ஒரு புதிய கம்யூனிச-விரோத ஆட்சியை ஸ்தாபிப்பதே அந்த ஆட்சிக்கவிழ்ப்பின் நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதி கென்னடியின் படுகொலை அமெரிக்க நவீனகால வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. 1913இல்கென்னடி இறப்பதற்கு ஓர் அரை-நூற்றாண்டிற்கு முன்னர்உட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28வது ஜனாதிபதியாக பதவியேற்றார்அமெரிக்கா அவரது நிர்வாகத்தின் போது தான், 1917இல்உலகை ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக மாற்றுவோம்என்று உறுதியளித்துமுதல் உலக யுத்தத்தில் நுழைந்ததுஉலகளாவிய ஜனநாயகத்திற்கு வில்சனின் போலி அழைப்பு பதாகையின்கீழ் தான் அமெரிக்காமுதன்முதலில்பிரதான ஏகாதிபத்திய சக்தியாக எழுந்ததுஅந்த இடம் பிரான்க்ளின் டிரூஸ்வெல்ட்டின் பதவிகாலத்தில் (1933-45)வலுப்படுத்தப்பட்டதுஅவர் புதிய சமூக சீர்திருத்த உடன்படிக்கைகள் மூலமாக அமெரிக்காவிற்குள் முதலாளித்துவத்திற்கு ஒரு பரந்த அடித்தளத்தைப் பேண விரும்பினார்இத்தகைய சீர்திருத்தங்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் அதன் தலையீட்டைபாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கான போராட்டம் என்றரீதியில் சித்தரிக்க ரூஸ்வெல்டு நிர்வாகத்திற்கு உதவின.
கென்னடி நிர்வாகம் அந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.குறிப்பிடத்தக்க விதத்தில்அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலை தேய்வதற்கான முதல் முக்கிய அறிகுறிகளை பொருளியல் நிபுணர்கள் குறிப்பெடுக்க ஆரம்பித்த போது தான்கென்னடி நிர்வாகம் சரியாக காரியாலயத்திற்கு வந்திருந்ததுமுதலில் ஐரோப்பிய முதலாளித்துவமும்,பின்னர் ஜப்பானிய முதலாளித்துவமும் இரண்டாம் உலக யுத்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த நிலையில்அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் கேள்விக்குள் இழுக்கப்பட்டதுகென்னடி படுகொலையின் வெறும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்சர்வதேச வர்த்தக மற்றும் கொடுக்கல்-வாங்கல் சமநிலையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் டாலர்-தங்கம் பரிவர்த்தனையின் பிரெட்டன் உட்ஸ் முறையின் பொறிவைக் கொண்டு வந்ததுஅமெரிக்கா திட்டவட்டமாக நீண்டகால வீழ்ச்சிக்கான ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்திருந்தது.
பொதுமக்களின் மனதில் ஜோன் எஃப்கென்னடி தனது நிர்வாகத்தை அமெரிக்க ஜனநாயக பாரம்பரியங்களோடு இணைத்த கடைசி ஜனாதிபதியாக இருந்தார்ஆனால் அவரது ஜனாதிபதிப் பதவியின் அரசியல் மற்றும் அறநெறி அடித்தளங்கள் அதற்கு முன்னரே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரிணாமத்தால் படுமோசமாக அரிக்கப்பட்டு விட்டிருந்ததுபெருந்திரளான மக்களின் ஜனநாயக சிந்தனைகளும்அபிலாசைகளும் எத்தகைய நேர்மையானவையாக இருந்தபோதினும்அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நலன்களைப் பாதுகாக்கவே இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா நுழைந்திருந்ததுயுத்தத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில்,அதன் கொள்கைகள் இன்னும் கூடுதலான குற்றவியல் குணாம்சத்தை ஏற்றதுவசீகரமான ஜனநாயக வாய்ஜாலங்களுக்கும்அமெரிக்க கொள்கைகளின் காட்டுமிராண்டித்தன எதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் பெரும்பிளவு சர்வதேச அளவிலும் சரி அல்லது அமெரிக்காவிற்குள்ளும் சரி மூடிமறைப்பது சாத்தியமில்லாமல் போனதுகென்னடி பற்றாளர்கள்,குறிப்பாக அந்த ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னர்அவரது நிர்வாகத்தை"காமிலெட்" (Camelot) என்பதாய்க் குறிப்பிட்டனர்அதை "ஓர் ஒளிரும் பிரகாசமான பொய்என்பதே மேம்பட்ட விவரிப்பாக இருக்கும்.
David North
22 November 2013

Wednesday, 27 November 2013

பொதுநலவாய மாநாடு இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான மேற்கத்தைய சக்திகளின் அழுத்தத்தை உக்கிரமாக்கியுள்ளது

கொழும்பில் நவம்பர் 15 முதல் 17 வரை நடந்த பொதுநலவாய அரசுகளின் தலைவர்களின் மாநாடு, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது மேற்கத்தைய சக்திகள் திணிக்கும் அழுத்தத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது. 2009ல் அரசாங்கம் தமிழ் பொது மக்களை கொன்றமை மற்றும் தற்போதைய அடிப்படை ஜனநயாக உரிமை மீறல்கள் தொடர்பாகவே வெளிப்படையாக இந்த அழுத்தங்கள் திணிக்கப்படுகின்றன.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது, அது நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட சீனாவிடம் இருந்து தானாகவே தூர விலகுமாறு வலியுறுத்துவதன் பேரில், மனித உரிமை மீறல் விவகாரத்தை சுரண்டிக்கொள்வதற்காக வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் அதேபோல் இந்தியாவும் முன்னெடுக்கும் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்காக பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள இராஜபக்ஷ விரும்பினார்.
மாநாட்டின் போது எந்தவொரு எதிர்ப்பையும் தவிர்க்கும் முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கம் சகல அரசாங்க-விரோத ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்தது. யுத்தத்தில் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்குக்கு செல்வதற்கு பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் முயற்சித்தபோது, அரசாங்க சார்பு குண்டர்கள் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் வைத்து ரயிலை மறித்ததோடு ரயில் கிளிநொச்சிவரை செல்லாமல் தடுத்தனர்.
எவ்வாறெனினும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் மாநாட்டை பகிஷ்கரித்தமை இராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு ஒரு பெரும் அடியாகும். மொரிஸியஸ் பிரதமர் நவின் ராம்கூலாம் இந்த பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டமை இதை இன்னும் பலமாக்கியது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் மாநாட்டுக்கு வந்தபோதும், தனது பங்குபற்றலை அவர் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்ற விவகாரங்களை எழுப்புவதற்காக பயன்படுத்திக்கொண்டார்.
ஹார்ப்பர், ராம்கூலாம் ஆகிய இருவரும், தமது பகிஷ்கரிப்புகளுக்கான காரணமாக, குறிப்பாக தமிழர்கள் தொடர்பான இராஜபக்ஷ அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை மேற்கோள் காட்டினார். இராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதிய சிங், தாம் குறிப்பாக சுட்டிக் காட்டமுடியாத “பல்வேறு காரணங்களால்” தன்னால் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற முடியாமையை பற்றி வருத்தம் தெரிவித்தார். எனினும், இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளையும் மற்றும் தனது சொந்த காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்களையும் சாந்தப்படுத்துவதற்கே அவர் இந்த தீர்மானத்தை எடுத்தார். கொழும்பின் யுத்தக் குற்றங்களையும் மற்றும் இலங்கையின் வடக்கில் தமிழ் தட்டுக்களுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள அது தவறியமையையும் சுட்டிக் காட்டிய தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்ட கட்சிகள், இந்தியா பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கோரின.
பிராந்தியத்திலும் சர்வதேச ரீதியிலும் தனது தோற்றத்தை ஊதிப் பெரிதாக்குவதன் பேரில், பிராதன பிராந்திய சக்தியின் தலைவர் என்றவகையில் சிங்கின் பங்குபற்றலுக்காக இராஜபக்ஷ அரசாங்கம் ஏங்கியது. தமிழர்களை அது நடத்திய முறை தொடர்பான மேற்கத்தைய விமர்சனங்களை எதிர்ப்பதற்கு சிங்கின் வருகை உதவும் என அரசாங்கம் கணக்கிட்டது.
சிங், ஹார்ப்பர், ராம்கூலாம் மற்றும் கமெரோனின் நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை எதிர்ப்பதற்காக இந்து-பசுபிக்கிற்கு “மீண்டும் திரும்பும்” ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையின் பாகமாக, இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மனித உரிமைகள் விவகாரத்தை சுரண்டிக்கொள்ளும் அமெரிக்காவுடன் அணிசேர்வதற்கு ஹார்ப்பர் தீர்மானித்தார். கனடாவில் உள்ள பிரமாண்டமான புலம்பெயர் தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் தனது அரசாங்கத்துக்கு தேர்தல் ஆதரவை பெரிதாக்கிக்கொள்ள ஹார்ப்பர் எதிர்பார்கின்றார்.
இதே போன்ற அமெரிக்க-சார்பு மூலோபாய அக்கறையினால் உந்தப்பெற்ற கமெரோனின் தலையீடு, கொழும்பு அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினைகளை எற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வை அடுத்து, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தின் தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு கமெரோன் பயணித்தார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட சுமார் 250 தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை அதிகாரிகளால் தமது உறவுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில், கமெரோன் தமிழ் நாளிதழான உதயனின்அலுவலகத்துக்துச் சென்றார். உதயன், அரசாங்க-சார்பு குண்டர்களால் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அலுவலகத்துக்கு தீ மூட்டப்பட்டதும் ஊழியர்கள் கொல்லப்பட்டதும் அடங்கும். பின்னர் அவர், பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார். கமெரோன் சனல் 4, பிபிசி மற்றும் ஐடீவி உட்பட பிரித்தானிய ஊடகங்களின் நிருபர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவங்கள் இழைத்த யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தி சனல் 4 ஊடகம் மூன்று விவரணத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நெருங்கிய போது, இந்த தொலைக் காட்சி அதன் கடைசி திரைப்படத்தை வெளியிட்டிருந்தது. 40,000 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறும் அது, புலிகளின் தொலைக் காட்சி சேவையின் ஒரு உயர்மட்ட பெண் அறிவிப்பாளரான இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபாவை இராணுவம் கொன்றதாக விவரிதித்துள்ளது. அவர் உடற் காயங்கள் இன்றி உயிருடன் பிடிக்கப்படுவதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
பாதுகாப்பு வலயம் என்ற விவரணம், “நடுங்கச் செய்கின்றது” என கமெரோன் குறிப்பிட்டார். மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் கட்டளையின் கீழ் இயங்கிய இலங்கை இராணுவம் நடத்திய “தாக்குதலின்” போது, புலிகளின் 31 தலைவர்களுடன் ஷோபாவும் கொல்லப்பட்டார் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் கூறப்பட்டிருப்பதும் பொய் என்பதை அது அம்பலப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நிருபர்கள் மாநாட்டில் உரையாற்றிய கமெரோன், “[யுத்தக் குற்றங்களை] குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நம்பகமான முறைமை வேண்டும்” எனக் கோரியதோடு, அடுத்த மார்ச் மாதமளவில் இலங்கை பதலிறுக்காவிட்டால், “ஒரு சர்வதேச விசாரணையை” முன்னெடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தனது அதிகாரத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் எச்சரித்தார். “குறித்த இந்த விவகாரம் தூர விலகும் என நான் நினைக்கவில்லை, அது இப்போது சர்வதேச விடயங்களில் உள்ளது” என தான் இராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த இராஜபக்ஷ, முடிவில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியதாவது: “தான் விரும்பிய எதையும் அவர் கூறலாம். கண்ணாடி பெட்டிக்குள் இருப்பவர்கள் மற்றவர் மீது கல் எறியக் கூடாது.” கமெரோன் இலங்கை மீது அழுத்தங்களை திணிக்கின்றார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜபக்ஷ பிரகடனப்படுத்தியதாவது: “அழுத்தங்கள் எதையும் செய்யப்போவதில்லை... கோரிக்கை அல்லது கட்டளைகளை விடுப்பதை விட காத்திருப்பது மிகவும் சிறந்தது.”
உண்மையான ஆதரங்கள் நேர்மாறாக இருந்தபோதிலும், யுத்தத்தின்போது எந்தவொரு பொது மகனும் கொல்லப்படவில்லை என கொழும்பு அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருவதோடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்றழைக்கப்படுவதன் கீழ் தனது சொந்த வெட்கங்கெட்ட விசாரணையை நடத்தியது.
கொழும்பின் நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பகிரங்கமாக ஆதரித்தார். அவர் தனது மாநாட்டு உரையில் இராஜபக்ஷ அரசாங்கத்தை பாராட்டி கூறியதாவது: “இலங்கை இந்த பொதுநலவாய மாநாட்டை நடத்த விரும்பியமை, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக பன்மைத்துவம் மற்றும் சுதந்திரத்துக்கான அதன் அர்ப்பணிப்பை காட்டுவதோடு, நேற்றை விட இன்றும் மற்றும் இன்றைவிட நாளையும் சிறப்பாக இருக்கும் என அதன் சகல பிரஜைகளுக்கும் உறுதியளிக்கும் முயற்சியையும் காட்டுகின்றது.”
இலங்கை பாதுகாப்பு படையினரின் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த அபோட், சித்திரவதைகளை முழுமையாக அலட்சியம் செய்ததோடு, தனது அரசாங்கம் “சித்திரவதைகளைப் பயன்படுத்துவதை கண்டனம் செய்யும்போது, சில சமயம் கடினமான சூழ்நிலைகளில் கடினமான விடயங்கள் நடப்பதுண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்” என நிருபர்களிடம் அவர் கூறினார். தனது கடைசி ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜபக்ஷ அபோட்டின் ஆதரவுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அபோட்டின் பாராட்டுக்கள், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். படகுகளில் ஆஸ்திரேலியாவை சென்றடைய முயற்சிக்கும் இலங்கை புகலிடம் கோருவோரை நிறுத்துவதற்கு கன்பரா இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றது. தான் “சிறந்த மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை” பலப்படுத்த விரும்பவதாக அபோட் தெரிவித்தார். மாநாட்டின் கடைசி நாளில், ஆஸ்திரேலியா இலங்கைக்கு இரு கடப்படை ரோந்துப்படகுகளை வழங்குவதாகவும் “ஆள் கடத்தல்களை” தடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னைய ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கத்தினால் செய்துகொள்ளப்பட்ட இதேபோன்ற உடன்படிக்கையை அடுத்து வந்துள்ள இந்த நகர்வு, இராஜபக்ஷ அராங்கத்தின் அச்சுறுத்தல் மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிச் செல்ல முயலும் தமிழர்கள் மற்றும் ஏனைய இலங்கையர்களை கைது செய்வதற்கு மேலும் உதவி செய்வதையே குறிக்கின்றது.
இதேபோல், மாநாட்டில் பங்குபற்றிய நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் மௌரி மெக்குளி, தனது நாட்டின் பால் தொழிற்துறையின் நலன்களை முன்வைத்தார். யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஒரு சுயாதீன விசாரணைக்கு நியூசிலாந்து ஆதரவளிக்காது என அவர் கூறினார். தீவின் வடக்குக்கு விஜயம் செய்தபோது, அவர் முல்லைத் தீவில் பால் குளிரூட்டும் நிலையமொன்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 2 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஒரு பால் உற்பத்தி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டார்.
இரு அமெரிக்க பங்காளிகளின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைத்தாலும், அதன் போலிஸ்-அரச முறையிலான அரசியல் மற்றும் ஊடக அடக்குமுறை, அதேபோல் யுத்தக் குற்றங்கள் பற்றிய அதன் திட்டமிட்ட மூடி மறைப்புக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய பொதுநலவாய மாநாடு, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சறுக்கலாகும்.
By Deepal Jayasekera
18 November 2013

Tuesday, 26 November 2013

அமெரிக்க இராணுவமும், பிலிப்பைன்ஸூம்


பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஹெயன் சூறாவளியின் பாதிப்பு குறித்த கடந்த வார ஒரு சிறிய அறிக்கையில்
ஜனாதிபதி பராக் ஒபாமா "வாழ்க்கை எந்தளவிற்கு அழியக் கூடியதென்பதற்கு அதுவொரு இதயத்தை உடைக்கும் நினைவூட்டல்என்றார்.
ஈராக்ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து லிபியாயேமன் மற்றும் சிரியா வரையில் வறிய மக்களின் மரணத்தையும்பேரழிவுகளையும் பார்த்திருக்கும் ஓர் அரசின் தலைவராக, அமெரிக்க ஜனாதிபதிக்கு அத்தகைய ஒரு நினைவூட்டலுக்காக பிலிப்பைன்ஸ் மக்களைத் தாக்கிய இயற்கை சீற்றத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
இந்த படுகொலைகளை நடத்திய பிரதான கருவியான அமெரிக்க இராணுவம்,பிலிப்பைன்ஸில் இப்போது கைம்மாறு கருதாத உதவியாளர் என்றரீதியல் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறதுகடந்த டஜன் கணக்கான ஆண்டுகளில் வாஷிங்டனால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஹெயன் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 100 மடங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 50 அமெரிக்க யுத்தகப்பல்களும்இராணுவ விமானங்களும் மற்றும் அமெரிக்க மாலுமிகள்விமான மற்றும் கப்பற்படையைச் சேர்ந்த 13,000பேரும்மூன்றாவது விரைவு கப்பற்படையோடு சேர்த்துஅணுஆயுதமேந்த கூடிய அதிநவீன கப்பல், USS ஜோர்ஜ் வாஷிங்டனின் கப்பல்படை யுத்த குழுவின் தலைமையில்அங்கே மீட்பு நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் தளபதிகடற்படை லெப்டினென்ட் ஜெனரல் ஜோன் வெஸ்லெர் திங்களன்று கூறுகையில், “எங்களுடைய தேவை இருக்கும் வரையில் நாங்கள் இருப்போம்தேவைக்கு மீறி இருக்க மாட்டோம்," என்றார்.
இதுபோன்ற வாக்குறுதிகளை அதீத ஐயுறவோடு பார்க்கபிலிப்பைன்ஸின் பரிதாபகரமான வரலாறு மற்றும் அது அமைந்திருக்கும் புவி-மூலோபாய அமைவிடம் ஆகிய இரண்டின் அடிப்படையில்பிலிப்பைன்ஸ் மக்களுக்கு போதுமான அளவிற்கு காரணங்கள் உள்ளன.
அமெரிக்க இராணுவம் அது உள்ளே நுழையும் போது கூறுவதைவிடஅதிககாலம் தங்கி இருந்ததற்கு ஒருவேளை பிலிப்பைன்ஸை விட அதிக மோசமான எடுத்துக்காட்டு வேறெதுவும் இருக்க முடியாது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்அங்கே தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையின் துணையோடு ஒரு காலனித்துவ சக்தியாக மாறி முதன்முதலாக அதன் கோரப்பற்களை கடித்தது.
செவ்வாயன்று அமெரிக்க செனட்டின் முன்னால் பிலிப்பைன்ஸில் செய்யப்படும் மீட்பு நடவடிக்கைகளை மெய்பித்து காட்டுவதில்ஓர் அரசுத்துறை அதிகாரி அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான "நெருக்கமான வரலாற்று உறவுகளைமேற்கோளிட்டு காட்டினார்எவ்வாறிருந்த போதினும்,ஒரு வரலாற்று குற்றத்தை அம்பலப்படுத்த மட்டுமே உதவும் என்ற வெளிப்படையான காரணத்தால்அரசு அதிகாரிகளோ அல்லது ஊடகமோ இத்தகைய "உறவுகளைவிரிவாக ஆராய எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவத்தின் முதல் வரவுகடற்படை தளபதிஜோர்ஜ் டுவேயின் தலைமையில் ஒரு கப்பற்படை பிரிவின் வடிவில் நுழைந்ததுஅவர் மே 1, 1898இல் மணிலா துறைமுகத்திற்குள் நுழைந்தார்.அதற்கு முந்தைய 300 ஆண்டுகள் ஒரு காலனியாதிக்க சக்தியாக அப்பிராந்தியத்தில் ஆட்சி செய்து வந்த ஸ்பெயினின் ஒட்டுமொத்த பசிபிக் பகுதியும்ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே வீழ்ச்சி கண்டன.
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த ஒரு தேசிய இயக்கத்தின் தலைவர் எமிலோ அகுவனால்டோவை டுவேயின் யுத்தக்கப்பல் தான் திரும்ப அழைத்து வந்ததுஅந்த தேசிய இயக்கம் அமெரிக்க போர் கப்பல்கள் அங்கே வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயினின் காலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர சண்டையிட்டு வந்தது.இத்தகைய சுதந்திர போராட்ட போராளிகளால் அந்த நிலம் சூழப்பட்டிருந்ததால் தான் அமெரிக்க துருப்புகளால் மணிலாவைக் கைப்பற்ற முடிந்ததுபிலிப்பைன்ஸின் கூட்டாளியாகவும்அந்நாட்டை விடுவித்தவர் என்றரீதியில் காட்டிக்கொண்ட வாஷிங்டன் அதை ஒரு சந்தையாக,மலிவுக்கூலி மற்றும் மூலப்பொருட்களுக்கு ஆதாரமாக மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் குறிப்பாக சீனாவே நோக்கி அமெரிக்க சக்தியை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு இராணுவ தளமாக போதுமான அளவிற்கு நீண்டகாலத்திற்கு அதன் மீது கட்டுப்பாட்டை பாதுகாத்து வைக்க விரும்பியது.
பின்னர் பிலிப்பீனியர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக திரும்பிய அதுஒரு நிலத்திற்காக ஸ்பெயினுக்கு $20 மில்லியன் அளித்து அந்நிலப்பகுதியின் மீது ஸ்பெயின் இனி கட்டுப்பாட்டை கொண்டிருக்கக் கூடாதுஎன்ற ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதுஒரு சுதந்திர குடியரசை(ஒரு காலனித்துவ எதிர்ப்பு கிளர்ச்சியின் விளைவாக ஆசியாவில் முதன்முறையாக உருவானதுபிரகடனப்படுத்திய பிலிப்பீனியர்கள் இத்தகைய பேரங்களில் சேர்க்கப்படவும் இல்லை.
அதற்குப்பின்னர் என்ன தொடர்ந்ததென்றால் அமெரிக்க காலனித்துவ ஆட்சி திணிக்கப்பட்டதுமேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரத்தந் தோய்ந்த எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தனஅதில் குறைந்தபட்சம் பல நூறு ஆயிரக் கணக்கான பிலிப்பீனியர்கள் உயிரிழந்தனர்மணிலாவையும் மற்றும் அந்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டதட்ட பாதியளவு மக்களையும் கொண்டிருந்த லூஜானில், 1901இல்அமெரிக்க படைகளுக்குத் தலைமையேற்றிருந்த ஜெனரல் பிரான்கிலின் பெல் நியூ யோர்க் டைம்ஸிடம்தெரிவிக்கையில்அங்கே மட்டும் சுமார் 600,000 பேர் இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக அல்லது நோயால் இறந்து போனதாக தெரிவித்தார்.
மற்றொரு அமெரிக்க ஜெனரல் கூறுகையில், “பாதி பிலிப்பீனியர்களைக் கொல்ல அவசியம் ஏற்படலாம்ஏனென்றால் இதனால் மீதியுள்ள பாதி மக்களை அவர்களின் தற்போதைய அரை-காட்டுமிராண்டித்தனத்திலிருந்து ஒருவேளை உயர்ந்த மட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல முடியும்," என்றார்.
பிலிப்பைன்ஸில் அமெரிக்க யுத்தத்திற்கு மிக முக்கிய மற்றும் தீவிர எதிர்ப்பாளராக இருந்த மார்க் டுவைன், “எங்கள் துருப்புகளை ஆதரியுங்கள்"என்ற அந்நாளின் கோஷத்தை எதிர்த்தார். “தனது இறந்து போன தாய்க்காக ஏங்கி அழும் ஒரு குழந்தையைக் கூடவிட்டுவைக்காமல் அமெரிக்க இராணுவம் படுகொலை செய்ததென்று குற்றஞ்சாட்டினார்அந்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் அமெரிக்க ஆக்கிரமிப்பு துருப்புகளை "கிறிஸ்துவ கசாப்புக்கடைகாரர்கள்என்றும் "சீருடை அணிந்த படுகொலையாளர்கள்"என்றும் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் தாக்குதல் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட முதல் எதிர்கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்ததுமேலும் அது படுகொலைகளில் இருந்துசித்திரவதை வரைமீண்டும் அமைக்கப்பட்ட புதியபடுகொலை" கூடங்கள் வரைஎல்லா அட்டூழியங்களையும் தொடங்கி வைத்ததுபின்னர் அவை அனைத்தும் வியட்நாமியர்கள்,ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் ஈராக்கியர்கள் மீது நடத்தப்பட்டதைப் பார்க்க முடிகிறது.
அமெரிக்க காலனித்துவ ஆட்சி இரண்டாம் உலக யுத்தம் முடியும் வரையில் நீடித்ததுஅதன் பின்னர் அந்நாட்டை இரண்டு தசாப்தங்கள் ஆட்சி செய்த பெர்டிணான்ட் மார்கோஸின் வெறுக்கப்பட்ட இராணுவ ஆட்சி உட்பட பல அரை-காலனித்துவ அரசுகளை வாஷிங்டன் ஆதரித்ததுபெண்டகன், 1991வரையில்கொரிய மற்றும் வியட்நாம் யுத்தங்கள் இரண்டிலும் முக்கிய பாத்திரம் வகித்தபரந்த சூபிக் வளைகுடா (Subic Bay) கடற்படை தளம் மற்றும் கிளார்க்சன் (Clarkson) விமானப்படை தளம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டை வைத்திருந்தது.
ஹெயன் சூறாவளியோடு சம்பந்தப்பட்ட பிலிப்பைன்ஸின் அவலநிலை என்று வரும்போதுஇது வெறுமனே பழங்கால வரலாறு என்றாகி விடாதுபரந்த வறுமைசமூக சமத்துவமின்மைபோதிய வீட்டுவசதியின்மை மற்றும் அரசாங்க ஊழல்கள் என காலனித்துவ மற்றும் நவ-காலனித்துவ ஒடுக்குமுறையின் பாரம்பரியங்களான இவை அனைத்தும்குறைந்தபட்சம் இந்தளவிற்கு மரணம் மற்றும் பேரழிவை சுமத்துவதில் குருட்டுத்தனமான இயற்கை சக்தியின் பாத்திரத்தை விட மிகப் முக்கிய பாத்திரம் வகித்தன.
பிலிப்பைன்ஸ் மீது அமெரிக்காவின் உள்நோக்கங்கள்முடிந்து போன சகாப்தத்தின் ஒரு விஷயமல்லராய்டர்ஸ் செய்தி நிறுவனம் புதனன்று குறிப்பிட்டது: “அமெரிக்க கப்பல்கள் உணவுகுடிநீர் மற்றும் மருந்துகளை விநியோகிக்கின்ற போதினும்அது தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய மூலோபாய நாடு ஒன்றில் அமெரிக்கா அதன் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய இராணுவ இருப்பை பலப்படுத்தவும் பாதையைத் திறந்துவிடும் என்ற எண்ணத்தையும் கொண்டு வருகிறது.”
வளர்ந்துவந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியின் கருவியாகஆசியாவில் அதற்கான புதிய சந்தைகளை காப்பாற்றி வைக்கஅமெரிக்க இராணுவம் முதன்முதலில் பிலிப்பைன்ஸிற்குள் வந்திருந்தாலும் கூடஇப்போது அது பிராந்திய மற்றும் உலகளாவிய போட்டியாளனாக வளர்ந்துவரும் சீனாவைச் சுற்றி வளைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தீர்மானத்துடன் நலிவுற்ற ஒருதாக்குமுகப்பாக திரும்பி வருகிறது.
ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பு"என்றழைக்கப்படும் நடவடிக்கைக்கு பிலிப்பைன்ஸ் மூலோபாயரீதியில் மிக முக்கியமாகும்பிலிப்பைன்ஸ் அரசு, 1992இல் பிரமாண்ட அமெரிக்க இராணுவ தளங்களை மூடிவிட்டிருந்தாலும்அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகளைப் பயிற்சிக்காகவும் மற்றும் கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்தவும் திரும்பி வர அனுமதித்ததுமேலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக 72 அமெரிக்க யுத்தக்கப்பல்கள் மற்றும் சுபிக் வளைகுடாவில் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை வந்து சென்றுள்ளன.இதற்கிடையில் கப்பல் தளங்கள்விமான தளங்கள்ஆயுத விநியோக மற்றும் துருப்புகளுக்கான தளங்களை அமைக்க அமெரிக்காவிற்கு உரிமைகள் வழங்குதன் மீது தொடர்ந்து பேரங்கள் நடந்து வருகின்றன.
ஓய்ஸ்டெர் வளைகுடாவில் (Oyster Bay) அமைந்துள்ள பலாவன் (Palawan) தீவு மாகாணத்தில் கப்பற்படை தளம் கட்டமைக்கப்பட்டு வருகிறதுஅதிகாரிகள் அந்த தளத்தை ஒரு "சிறிய சுபிக்என்று குறிப்பிடுகின்றனர்மேலும் அங்கே அமெரிக்க யுத்த கப்பல்கள் மற்றும் கடற்படை கப்பல்களை நிறுத்த திட்டமிருப்பதாக செய்திகள் குறிப்பிட்டனநாட்டின் மேற்கத்திய ஓரத்தில்,ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Spratly Islands) மிக நெருக்கத்தில் அமைந்துள்ள அந்த தீவுஅமெரிக்காவால் கருவுற்றிருக்கும் மணிலா-சீனாவிற்கு இடையிலான ஒரு பிராந்திய மோதலுக்கு தூண்டுபொருளாக உள்ளது.
இவ்வாறுபிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவத்தின் "மனிதாபிமான"நடவடிக்கைகள் பிரிக்க முடியாதபடிக்கு யுத்த திட்டங்களோடு பிணைந்துள்ளனஅது அந்நாட்டை ஓர் உலகளாவிய மோதலுக்குள் இழுத்துச் செல்லக்கூடும்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் கணக்குகளுக்கு அப்பால்,அமெரிக்க உழைக்கும் மக்களிடையே அங்கே உண்மையான அனுதாப உணர்வுகளும்பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுடனான ஐக்கிய உணர்வும் உள்ளதுஅந்த ஆழ்ந்த பிணைப்புகள்மதிப்பிடப்பட்ட அமெரிக்க வாழ் 4மில்லியன் பிலிப்போ-அமெரிக்கர்களின் இருப்பில் மிக உறுதியாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஹெயன் சூறாவளியால் உண்டாக்கப்பட்ட பேரழிவானதுஇரண்டு நாடுகளிலும் உள்ள வறுமை மற்றும் சமத்துவமின்மை நிலைமைகளையும்அவற்றை உண்டாக்கிய முதலாளித்துவ இலாப அமைப்புமுறையோடு சேர்த்து துடைத்தெறிய ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அவசியத்தை அடிக்கோடிடுகிறது.
Bill Van Auken
21 November 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts